செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
யாழ்ப்பாணம் - இளவாலைப் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் இன்று (06) வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தனது வீட்டில் வைத்து சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இளவாலைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இப்பெண்ணிடம் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அவர் நாளை (07) சனிக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார் என இளவாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://newyarl.lk/comments_news.php?pid=724
-
- 0 replies
- 426 views
-
-
யாழ். சிறுவர் நீதிமன்றத்திற்கு.. முன்னால் உள்ள வீட்டில், சமையல் எரிவாயு திருட்டு! யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்திற்கு முன்னால் உள்ள வீட்டில் சமையல் எரிவாயு திருடப்பட்டுள்ளது. நீதிமன்ற காவலர்கள் கடமையில் உள்ள போது இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த விடையம் தொடர்பில் வீட்டு உரிமையாளரிடம் வினவியபோது இரண்டாவது தடவையும் எரிவாயு சிலிண்டர் திருடப்பட்டதாகவும் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றதை தொடர்ந்து தாம் எரிவாயு சிலிண்டரை வீட்டின் வெளியே பொருந்தியிருந்த நிலையிலேயே இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து நீதிமன்ற காவலில் இருந்த பொலிஸாரிடம் வினவியபோது தமது கடமை நீதிமன்ற எல்லைக்குட்பட்டதாக தெரிவித்தனர் என…
-
- 5 replies
- 366 views
-
-
திருடப்பட்ட பொருட்களுடன் அயலவர் சிக்கினார் – யாழில் சம்பவம் யாழ். சுண்டுக்குளி பகுதியில் அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்றவர்களின் குடும்பங்களின் இருவேறு வீடுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருள்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக அப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் குறித்த வீடுகளில் திருடப்பட்ட 9 லட்சத்து 45 ஆயிரம் பெறுமதியான பொருள்களும் சந்தேக நபரின் வீட்டிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு பின்புறமாக உள்ள வீதியில் இரண்டு வீடுகள் கனடா மற்றும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களுக்கு சொந்தமானது. அவர்கள் ஆண்டு தோறும் வருகை தந்த அந்த வீடுகளில் தங்கியிருந்துவிட்டு குடியு…
-
- 0 replies
- 248 views
-
-
யாழ். துணைவி... பகுதியில், 11 வாள்களுடன் இளைஞர் கைது! வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துணைவி பகுதியில் 11 வாள்களுடன் விசேட அதிரடிப்படையினரால் 22வயதான இளைஞர் கைது. வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட் துணவி பகுதியிலேயே நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8.00 மணியளவில் இக் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது வட்டுக்கோட்டை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட துணவி பகுதியில் வாள்களை பயன்படுத்தி கட்டுச் சொல்லும் கோவிலொன்றில் வாள்களை உடமையில் வைத்திருப்பதாக யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ப தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதி…
-
- 15 replies
- 1.2k views
- 1 follower
-
-
யாழ். தெரிவத்தாட்சி அலுவலகத்தில் உத்தியோகஸ்தர் மீது வாள்வெட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உள்ள யாழ்.தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் (மாவட்ட செயலகம்) முன்பாக, இனம் தெரியாத நபர்களினால் உத்தியோகஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் மல்லாகத்தை சேர்ந்த பொன்னம்பலம் பிரகாஸ் எனும் சுற்றுச்சூழல் அதிகார சபை பிரிவில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் அவரது மோட்டர் சைக்கிளும் சேதமாக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தியோகஸ்தர் வழமை போன்று இன்றைய தினம் (08) காலை கடமைக்காக வந்த போது, அவரை பின் தொடர்ந்து இரண்டு மோட்டார் சைக்கிள் வந்த நால்வர், மாவட்ட செயலக வாயிலுக்கு அருகில் வழி மறித்து அவர் …
-
- 2 replies
- 480 views
-
-
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் பற்றைக்காடொன்றில் இருந்து சொகுசு கார் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. பற்றைக்காடு ஒன்றினுள் சொகுசு கார் ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் காரை மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர். பொலிஸ் நிலையத்தில் காரின் இலக்க தகட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , அது போலியானது என தெரிய வந்துள்ளது. அத்துடன் காரில் இருந்த ஆவணங்களும் போலியானவை என்பது தெரிய வந்துள்ளது. குற்றச்செயல்களுடன் தொடர்புடைய காராக இருக்காமல் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கார் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.v…
-
- 2 replies
- 533 views
- 1 follower
-
-
யாழ். பல்கலை கலைப்பீட மாணவர்கள் 18 பேருக்கு வகுப்புத் தடை! கதிர் July 27, 2022 0 யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் வருட மாணவர்கள் 18 பேருக்குத் தற்காலிக வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக புதுமுக மாணவர்களை ஒன்றுகூடல் எனக் காங்கேசன்துறைப் பகுதிக்கு அழைத்துப் பகிடிவதைக்கு உட்படுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டை அடுத்து, பல்கலைக்கழக உள்ளக விசாரணைகளைத் தடையின்றி மேற்கொள்ளவே 18 மாணவர்களுக்கும் தற்காலிக வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. https://newuthayan.com/528-2/
-
- 1 reply
- 279 views
-
-
யாழ். பல்கலை மாணவிகள், தங்கியிருந்த வீட்டின் மீது... தாக்குதல்! யாழ்ப்பாணம் கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த தாக்குதக் சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 4 மோட்டார் சைக்களில் வந்த குழு வீட்டுக்குள் புகுந்து ஐன்னல்கள், கதவுகளை சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை குறித்த வீட்டில் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவிகள் வாடகைக்கு தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2022/1282208
-
- 0 replies
- 168 views
-
-
யாழ். பல்கலைக்கழக பகிடிவதை குறித்து புலனாய்வுப் பிரிவு கண்காணிப்பு: அமைச்சர் ரம்புக்வெல பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பகிடிவதைகளை தடுப்பது தொடர்பில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் அது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். ஊடகவியலாளர் தமது கேள்வியின் போது, அரசாங்கம் தேர்தல் காலங்களில் நாட்டின் பல்கலைக் கழகங்களில் பகிடிவதையை முற்றாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களுக்கு த…
-
- 2 replies
- 383 views
-
-
யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர், மருமகனால் அடித்து கொலை! யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் அவரது மகளின் கணவரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. கணவன் மனைவி இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குறித்த விரிவுரையாளரான தனது தாயையும் தனது தங்கையையும், தங்கையின் கணவர் கடத்திச் சென்றதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் விரிவைரையாளரின் மகன் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இதுகுறித்து விசாரணைகள் செய்வதற்காக யாழ்ப்பாண பொலிசார் பாண்டியன்தாழ்வில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்றனர். அங்கே வீட்டின் ஓடு கழற்றப்பட்டு கயிறு மூலம் வெளியேறியதற்கான ஆதாரமும், அறுக்கப்பட்ட தலைமுடி ஆதாரமும் காணப…
-
-
- 2 replies
- 208 views
-
-
யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது , மருத்துவ பீடத்தில் இரண்டு மாதங்கள் கற்கையை தொடர்ந்த மாணவி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நவம்பர் மாதம் மருத்துவ பீட புதுமுக மாணவர்களுக்கான கற்கை நெறிகள் ஆரம்பமானது. அதன் போது கண்டியை சேர்ந்த பெரும்பான்மையின யுவதி ஒருவர் , புதுமுக மாணவர்களுடன் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் பதிவுகளை மேற்கொண்டு , விடுதியில் தங்கியிருந்து , மருத்துவபீட விரிவுரை மண்டபத்திற்கு விரிவுரைகளுக்கு கடந்த 2 மாத காலத்திற்கு மேலாக சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கற்கை செயற்பாட்டின் போது மாணவர்களை குழுக்களாக பிரித்துள்ளனர். அதன் போ…
-
-
- 19 replies
- 1.3k views
- 1 follower
-
-
யாழ். பல்கலையின் விரிவுரையாளர் குருபரன் இராஜினாமா செய்தாரா? July 17, 2020 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்ட முதுநிலை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் தமது பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரிக்கு, கலைப் பீடாதிபதி மற்றும் சட்டத்துறைத் தலைவர் ஊடாக அவர் இவ் இராஜினாமா கடிதத்தை இன்றையதினம் அனுப்பி வைத்துள்ளதாகப் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழக பேரவை அவரை சட்டத் தொழிலில் ஈடுபடுவதற்குத் தடை விதித்துள்ளமையை காரணமாகக் காட்டியே அவர் பதவி விலகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னால் உயர் நீதிமன்றில் தொடரப்பட்டிருக்கும் வழக்கு பல்வேறு காரணங்களுக்காக விவாதத்தி…
-
- 32 replies
- 3.6k views
-
-
யாழ். மதுபானசாலையில்... இரு குழுக்களுக்கு, இடையில் மோதல் – ஒருவர் உயிரிழப்பு! (காணொளி) மதுபானசாலையில் எழுந்த வாய்த்தர்க்கம் போத்தல் குத்தில் முடிவடைந்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் வல்லை வெளி பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலையில் நேற்று (திங்கட்கிழமை) மது அருந்திய இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. வாய்த்தர்க்கம் முற்றி இரு குழுவினரும் கைக்கலப்பில் ஈடுபட்டனர். அதன்போது ஒருவர் மதுபான போத்தல் ஒன்றினை உடைத்து இளைஞன் ஒருவரை குத்தியுள்ளார். அதனைத்தொடர்ந்து அக்குழு அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் அங்கிருந்தவர்கள் போத்தல் குத்துக்கு இலக்கான இளைஞனை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்த…
-
- 13 replies
- 940 views
-
-
Published By: DIGITAL DESK 3 27 DEC, 2023 | 05:08 PM வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்கரையில் இன்று புதன்கிழமை (27) கப்பல் போன்ற அலங்கரிக்கப்பட்ட உருவத்துடன் இரதம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இது மியன்மார் நாட்டில் திருவிழா நிகழ்வுகளில் பயன்படுத்துவதற்காக வடிவமைப்படும் இரதம் என கூறப்படுகிறது. இருப்பினும் இது எவ்வாறு வந்தது, இது உண்மையிலேயே என்ன என்ற விடயங்கள் இதுவரை வெளியாகவில்லை. https://www.virakesari.lk/article/172575
-
- 18 replies
- 1.3k views
- 1 follower
-
-
யாழ். வைத்தியசாலை காவலாளியை கடித்த குற்றத்தில் ஒருவர் கைது 20 Dec, 2024 | 10:46 AM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை காவலாளியை கடித்த குற்றச்சாட்டில் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார். போதனா வைத்தியசாலை பார்வையாளர் நேரம் முடிவடைந்த பின்னர், நோயாளர் விடுதிக்குள் செல்ல முற்பட்ட நபரை வைத்தியசாலை காவலாளிகள் தடுத்து நிறுத்திய போது, காவலாளிகளுடன் தர்க்கப்பட்டு, அவர்களில் ஒருவரை கடித்துள்ளார். அதனை அடுத்து ஏனைய காவலாளிகள் ஒன்றிணைத்து கடித்த நபரை மடக்கி பிடித்து யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைத்ததை அடுத்து, அவரை கைது செய்த பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து வி…
-
- 0 replies
- 155 views
-
-
யாழ்.அரியாலையில் பிறந்த குழந்தையை புதைத்த பெண்! யாழ்ப்பாணம்- அரியாலை பகுதியிலுள்ள இளம் பெண்ணொருவர், குழந்தையை பிரசவித்து வீட்டு வளவினுள் புதைத்த நிலையில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அரியாலை பூங்கங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றின் வளவினுள் இருந்தே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் வசித்து வந்த திருமணமாகாத 24 வயதுடைய பெண், நேற்று (வியாழக்கிழமை) அதீத குருதிப்போக்கு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையின்போது, குறித்த பெண் குழந்தையை பிரசவித்தமை கண்டறியப்பட்டு, சட்ட மருத்துவ அதிகாரி அப்பெண்ணிடம் விசாரணைகளை முன்னெடுத்தார். அதன்போதே குழந்தை புதைக்கப்பட்ட விடயம் கண்டறியப்பட்டு, அது தொடர்பில் ப…
-
- 0 replies
- 615 views
-
-
யாழ்.குடாநாட்டில் மாணவர்களிடம் போதையூட்டப்பட்ட பாக்கு பாவனை அதிகரிப்பு! [ சனிக்கிழமை, 30 மே 2015, 03:44.08 PM GMT ] யாழ்.குடாநாட்டில் போதையூட்டப்பட் ட பாக்கு விற்பனை அதிகரித்திருக்கும் நிலையில். குறித்த பாக்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் அதிகம் பயன்படுத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். யாழ்.மாநகரசபை எல்லைக்குள் குறித்த பாக்கு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதும் மற்றைய இடங்களில் குறித்த பாக்கு விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகின்றது. ஒரு பொட்டலம் 50 ரூபா என்ற விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில் பாடசாலை மாணவர்களால் இந்த பாக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது. இந்த பாக்கு செய்வதற்காக சீவப்பட்ட பாக்கு சுண்ணாம்பில் ஊற வைக்கப்படுவதுடன்,…
-
- 0 replies
- 269 views
-
-
யாழ்.கைதடியில் கடத்தப்பட்ட வாகனம் மீசாலையில் கண்டுபிடிப்பு! யாழ்.கைதடியில் கடத்தப்பட்ட ஹயஸ் ரக வாகனம் மீசாலை வேம்பிராய் பொது மயானத்துக்கு அருகாமையில் நேற்று (திங்கட்கிழமை) அநாதரவான நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. யாழ்.கைதடி மேற்கில் விற்பனைக்காக விடப்பட்டிருந்த ஹயஸ் வாகனத்தை கடந்த (ஞாயிற்றுக்கிழமை) பார்வையிட வந்த நபர்கள் அதனை ஓடிப் பார்ப்பதாக கூறிக் கடத்திச் சென்றுள்ளனர். அதனை அடுத்து வாகன உரிமையாளரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த ஹயஸ் வாகனம் மீசாலை வேம்பிராய் பொது மயானத்திற்கு அருகாமையில் இலக்கத் தகடுகள் அகற்றப்பட்டு, அநாதரவாக காணப்பட்ட நிலையில் மீட்க்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 349 views
-
-
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு இன்று திங்கட்கிழமை கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விடுதியில் சோதனை நடாத்தி மூவர் கைது செய்துள்ளனர். குறித்த விடுதியில் சந்தேகத்திற்கு இடமானவர்களின் நடமாட்டங்கள் காணப்படுவதாகவும் , அதன் ஊடாக அங்கு கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன . அதன் அடிப்படையில் குறித்த விடுதியினை யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் முற்றுகையிட்டு சோதனையிட்ட போது, உரிய பதிவுகள் இன்றி விடுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தனி அறைகளில் தங்கி இருந்த தெகிவளை பகுதியை…
-
- 0 replies
- 322 views
-
-
யாழ்.நகர் மத்தியில் 10க்கும் மேற்பட்டவர்களை கடித்த நாய் : February 10, 2022 யாழ்.நகர் மத்தி பகுதியில் இன்றைய தினம் கட்டாக்காலி நாய் ஒன்று வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்களுக்கு கடித்துள்ளது. யாழ்.நகர் மத்தியில் கஸ்தூரியார் வீதி , மின்சார நிலைய வீதி என்பனவற்றில் இன்று வியாழக்கிழமை மதியம் முதல் மாலை வரையிலான நேரத்தினுள் 10க்கும் மேற்பட்டவர்களை நாய் கடித்துள்ளது. அதில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவருக்கு இரண்டு கால்களிலும் நாய் கடித்துள்ளது. அதேவேளை அப்பகுதிகளில் சுமார் 10க்கும் மேற்பட்டவர்களை குறித்த நாய் கடித்துள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபனுக்கு அறிவிக்…
-
- 3 replies
- 375 views
-
-
யாழ்.பல்கலை மாணவர்கள் மீது மது போதையில் வந்த கும்பல் தாக்குதல்! யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மீது மது போதையில் வந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளது. பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள வீதி வழியாக நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்த நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டி ஒன்றில் மது போதையில் வந்த நான்கு பேர் கொண்ட குழுவே மாணவர்களை வழி மறித்து தாக்கி விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த இரு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின…
-
- 1 reply
- 478 views
-
-
யாழ்.பல்கலை விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் தொடரும் மோதல் – இருவர் காயம் – ஒருவர் கைது January 12, 2022 யாழ்ப்பாணம் விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கி இருந்து கல்வி கற்று வரும் விஞ்ஞான பீடம் மூன்றாம் வருடத்தை சேர்ந்த மாணவர்களின் வீட்டிற்குள் புகுந்த நான்காம் வருட மாணவர் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவத்தில் காயமடைந்த மூன்றாம் வருடத்தினை சேர்ந்த இரு மாணவர்கள் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனும…
-
- 6 replies
- 557 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 26 MAY, 2025 | 11:04 AM யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே சூழில் 5 குழந்தைகளை தாயார் ஒருவர் பிரசவித்த சம்பவம் பதிவாகி இருக்கின்றது. சனிக்கிழமை (24) யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே சூழில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன. யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையை சேர்ந்த தம்பதியினருக்கே ஒரே சூழில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளன. 3 ஆண்குழந்தைகளையும் 2 பெண் குழந்தைகளையும் குறித்த தாயார் பிரசவித்துள்ளார். தாயும் ஐந்து குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளார்களென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/215702
-
- 2 replies
- 245 views
- 1 follower
-
-
யாழ்.போதனாவில்... சிகிச்சை பெற்று வந்த, கொரோனா நோயாளியை காணவில்லை! யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தொற்றாளர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம், மீசாலை வடக்கு பகுதியை சேர்ந்த 45 வயதான நபரே இவ்வாறு காணாமல்போயுள்ளார். காய்ச்சல் காரணமாக கடந்த 16ஆம் திகதி சாவகச்சோரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபருக்கு அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நோய் தீவிரமடைந்ததால் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். மறுநாள் 17ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அவரது மனைவி சென்று பார்த்தபோது கணவனை அங்கு காணவில்லை. இதனையடுத்து சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத…
-
- 0 replies
- 299 views
-
-
யாழ்.மணியந்தோட்டம் இளைஞனின் வங்கி கணக்கிற்கு கனடாவிருந்து வைப்பிலிடப்பட்ட நூறு கோடி ரூபாய் பணம்..! அதிர்ச்சியில் மத்தியவங்கி.! யாழ்.மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த இளைஞனின் வங்கி கணக்கில் சுமார் பல நூறு கோடி ருபாய் பணம் கனடாவில் இருந்து வைப்பிலிடப்பட்டுள்ள நிலையில் குறித்த இளைஞனுக்கு தெரிந்த யாரேனும் ஒருவர் இணைய வங்கி ஊடாக சுருட்டிய பணம் இவ்வாறு வைப்பிலிடப்பட்டிருக்கும் என்ற கோணத்தில் புலனாய்வு பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளது. சுமார் 490 கோடி கனேடியன் டொலர் என்ற அடிப்படையில் 4 தடவைகளுக்கு குறையாமல் வைப்பிலிடப்பட்டுள்ளது. இந்த பணம் இலங்கைக்குள் அனுமதிக்கப்பட்டால் இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடையும் என கூறப்படுகிறது. மே…
-
- 11 replies
- 1k views
- 1 follower
-