செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
ஜேர்மனியில், பொருட்களேற்றும் கப்பல் ஒன்றை இயக்கிய பெண் ஒருவர் ஏற்படுத்திய விபத்தால் 1.5 மில்லியன் யூரோ அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் பேஸலிலிருந்து ஜேர்மனியிலுள்ள Karlsruhe என்னுமிடத்துக்கு, சரக்குக் கப்பல் ஒன்று ரைன் நதி வழியாக சென்றுகொண்டிருந்திருக்கிறது. அசாதாரண விபத்து இந்நிலையில் கப்பல் கேப்டனுக்கு பதிலாக துணை கேப்டனாக இருந்த பெண் ஒருவர் அந்த கப்பலை செலுத்திக்கொண்டிருந்திருக்கிறார். அவர் மது போதையில் இருந்ததால், Iffezheim என்னும் பகுதியில், நீர்மின் நிலையத்துக்காக அமைக்கப்பட்டிருந்த அமைப்பில் வேகமாக சென்று கப்பலை மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கப்பல் மோதிய வேகத்தில் நீர்மின் நிலையத்துக்காக தனிப்பட்ட முறையில் தயாரிக்கப்படும் தடுப்பு உ…
-
- 0 replies
- 136 views
-
-
கிரிக்கெட் மட்டையால் கணவனை தாக்கிய மனைவி : கணவன் பலி. திஸ்ஸமஹாராம, கவுந்திஸ்ஸபுர பிரதேசத்தில் மனைவி தாக்கியதில் கணவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண் கிரிக்கெட் மட்டையால் கணவனின் தலையில் தாக்கியதில், பலத்த காயமடைந்த அவர் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் 47 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 42 வயதுடைய மனைவி திஸ்ஸமஹாராம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2023/1359509
-
- 20 replies
- 1.2k views
- 1 follower
-
-
18 NOV, 2023 | 12:40 PM யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் தூக்கில் தொங்குவது போன்று மனைவிக்குப் பாசாங்கு செய்தவர் மரக்கிளை முறிந்தமையால் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரு பிள்ளைகளின் தந்தையான 26 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நெடுந்தீவுப் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மனைவியுடன் பேசியவாறு தான் தற்கொலை செய்வேன் என வேப்பமரத்தில் தூக்கிட்டு பாசாங்கு செய்துள்ளார். இதன் போது அந்தக் குடும்பஸ்தர் தூக்கை மாட்டியவாறு மரத்தில் இருந்து கீழே இறங்க முற்பட்ட வேளை வேப்ப மரக் கிளை முறிந்துள்ள நிலையில் தூக்கில் அகப்பட்டுள்ளார். இந்நிலையில், குடும்பஸ்தர் அந்த இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். …
-
- 3 replies
- 419 views
- 1 follower
-
-
85 வயதான் இந்த பாட்டி தட்டத்தனி ஆளாக 1999 இல் இருந்து முல்லைத்தீவு காட்டில் வாழ்கின்றாராம்..
-
- 1 reply
- 571 views
-
-
எம்.றொசாந்த், நிதர்ஷன் வினோத் தனது கடையில் வேலை செய்யும் பெண்ணுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முற்பட்ட கடை உரிமையாளர் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவானின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் உள்ள குளிர்களி (ஐஸ் கிறீம்) விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த 19 வயது யுவதிக்கு கடை உரிமையாளர் தனது கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்களை காட்டுவது, அவற்றை யுவதியின் கையடக்க தொலைபேசிக்கு அனுப்புவது போன்ற பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அதனை அடுத்து பாதிக்கப்பட்ட யுவதியால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கடை உரிமையாளரை கைது செய்து மல்லாகம் நீதவான…
-
- 0 replies
- 303 views
-
-
Published By: DIGITAL DESK 3 17 NOV, 2023 | 12:27 PM யாழ்ப்பாணத்தில் பிட்டு சாப்பிடும்போது புரைக்கேறியதால் இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இராசரத்தினம் சுமணன் (வயது 21) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் வீட்டில் பிட்டு சாப்பிட்ட போது, அது புரைக்கேறி உள்ளது. அதனை தொடர்ந்து தனக்கு நெஞ்சு அடைப்பதாக கூறியபோது, வீட்டார் சுடுநீர் குடிக்க கொடுத்துள்ளனர். சில நிமிடங்களில் இளைஞன் மயங்கி விழுந்ததை அடுத்து, இளைஞனை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, இளைஞன் உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். அ…
-
- 6 replies
- 758 views
- 1 follower
-
-
உடல் நிறை அதிகரித்ததால் கொலைக் குற்றவாளி விடுதலை! உடல் நிறை அதிகரித்ததால் கொலைக் குற்றவாளி ஒருவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சம்பவம் இத்தாலியில் இடம்பெற்றுள்ளது. திமித்ரி ஃபிரிகேனோ என்பவரே கடந்த 2017 ஆம் ஆண்டு தனது காதலியை 57 முறைகள் கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறையில் இருந்தபோது அவரது உடல் எடை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்தவகையில் ஆரம்பத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு 120 கிலோவாக இருந்த திமித்ரியின் உடல் எடை கடந்த ஒரே ஆண்டில் 200 கிலோகிராமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் உடல் எடையை குறை…
-
- 1 reply
- 359 views
-
-
தற்போதைய காலக்கட்டத்தில் 90ஸ் கிட்ஸ்க்கு கல்யாணம் ஆவது பெரும் பாடாக உள்ளது. இந்தநிலையில், இந்தியா-கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் குண்டுலுபேட் கோடஹள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள், “நாங்கள் விவசாயம் செய்வதால் எங்களுக்கு பெண் கொடுக்க சிலர் தயக்கம் காட்டுகின்றனர். அதனால், இதுவரை திருமணம் ஆகாமல் உள்ளோம். இதனால் எங்கள் கிராமத்தில் உள்ள 50இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்து, சுமார் 160 கி.மீ தூரத்தில் உள்ள மாதேஸ்வரன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று, எங்களுக்கு மணப்பெண் கிடைக்கவும், நல்ல மழை பெய்ய வேண்டியும் வழிபட்டோம்” என தெரிவித்துள்ளனர் . மேலும் சில மாதங்களுக்கு முன்பு, மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த சில இளைஞர்கள், திருமணத்திற்கு மணப்பெண் கிடைக்க வேண…
-
- 9 replies
- 954 views
- 2 followers
-
-
உமாகரன் இராசையா, கவிதைகளால் புகழடைந்தவர். தீபாவளி பற்றிய கருத்து வைரலாகிறது. அந்நியரை ஆளவிட்டேன், அடியிலே தடியை விட்டான்..... சோழர்களின் காவேரி வெற்றியே ஜப்பசியில் கொண்டாடப்படுகிறது. அதனை ஆரியம் நரகாசுர வத வெற்றியாக மாற்றி விட்டது என்கிறாரோ?
-
- 13 replies
- 1.2k views
-
-
யாழில் 4,000 நாய்களுக்கு தடுப்பூசி! யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் சுமார் 4,000 நாய்களுக்கு விசர் நோய் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்னர். யாழ்.மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட 08 பொது சுகாதார பரிசோதகர் பிரிவிலும் உள்ள வளர்ப்பு நாய்கள் மற்றும் வீதியில் கட்டாக்காலி நாய்களாக திரிந்த நாய்கள் என 3, 983 நாய்களுக்கு ஏ.ஆர். வி தடுப்பூசி செலுத்துப்பட்டுள்ளது. அதேவேளை 290 பெண் நாய்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளதாக என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2023/1358479
-
- 0 replies
- 334 views
-
-
தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள்.
-
- 3 replies
- 859 views
- 2 followers
-
-
11 NOV, 2023 | 01:09 PM ஐஸ்லாந்தின் தென் மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் 14 மணி நேரத்தில் சுமார் 800 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் மிகப்பெரிய நிலநடுக்கமாக கிரைண்டா விக்குக்கு வடக்கே 5.2 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கங்கள் எரிமலை வெடிப்புக்கு முன்னோடியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதையடுத்து அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கங்கள் காரணமாக உலக புகழ்பெற்ற சுற்றுலா தரமான புளூ லகூன் மூடப்பட்டுள்ளது. நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு காரணமாக மக்கள் பாதுகாப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஐஸ்லாந்தில் 33 எரிமலைகள் உள்ள…
-
- 3 replies
- 531 views
- 1 follower
-
-
யாழில் வீதியில் நெல் விதைத்துப் போராட்டம்! வீதியில் நெல் விதைத்து யாழில் இன்று விநோத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.- மானிப்பாய் – காரைநகர் வீதியை புனரமைப்புச் செய்துதருமாறு கோரியே மூளாயில் மக்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது போராட்டக்காரர்கள் வீதியில் வெள்ளம் தேங்கி நிற்கும் பெரும் பள்ளங்களில் ஏர் பூட்டியும், உழவியந்திரங்களைக் கொண்டும் வயல் உழுவது போன்று பாசாங்கு செய்து நெல் விதைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் முன்பள்ளி மற்றும் பாடசாலை மாணவர்களும் மூளாய், பொன்னாலை பிரதேச மக்களும் அதிக அளவில் பங்குபற்றினர். https://athavannews.com/2023/1358212
-
- 4 replies
- 646 views
- 1 follower
-
-
சூனியம் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி பணமோசடி! யாழ் செல்வந்தர்களே உஷார்! யாழில். செல்வந்தர்களை இலக்கு வைத்து நபரொருவர் பணமோசடியில் ஈடுபட்டு வருவதாகப் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, நபரொருவர் யாழில் உள்ள செல்வந்தர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ”உங்களுக்கு செய்வினை வைக்கப்பட்டுள்ளது. உங்கள் வளர்ச்சியில் பொறாமை கொண்டவர்கள் உங்களுக்கு செய்வினை செய்து சூனியம் வைத்துள்ளார்கள். அந்த செய்வினையை உடனே அகற்ற வேண்டும். இதனை எனது ஞான திருஷ்டியால் அறிந்து கொண்டேன். நான் ஒரு மாந்திரீகவாதி என்னால் மட்டுமே அதனை அகற்ற முடியும்” எனக் கூறி அவர்களுக்கு நம்பிக்கை வரவைத்து பணமோசடியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகின்றது. …
-
- 4 replies
- 355 views
-
-
Published By: RAJEEBAN 09 NOV, 2023 | 06:02 AM யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தனது ஆளில்லா விமானமொன்றை சுட்டு வீழ்த்தியுள்ளனர் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் எம்கியு9 ரீப்பர் ஆளில்லா விமானத்தையே ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் சுட்டுவீழ்த்தியுள்ளனர். யேமனின் கரையோர பகுதியில் இந்த ஆளில்லா விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது. ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் சவுதிஅரேபிய ஆதரவு குழுவிற்கு எதிராக 2015 முதல் போராட்டத்தி;ல் ஈடுபட்டுள்ளனர் - ஈரான் இவர்களுக்கு ஆதரவு வழங்குகின்றது. https://www.virakesari.lk/article/168860
-
- 0 replies
- 153 views
- 1 follower
-
-
என்னை உரையாற்ற அழைக்கும் போது ‘கலாநிதி’ என்ற எனது கல்வித்தகுதி பட்டத்தை கூறியே அழைக்க வேண்டும். இதனை நான் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளேன்” என சபைக்கு தலைமைதாங்கிய எம்.பி.க்கு உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் அறிவுறுத்தினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) நீதிமன்றம். நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டமூலத்தை இரண்டாம் வாசிப்பின்போதே அவர் இவ்வாறு அறிவுறுத்தினார். இந்த விவாத்தில் முக்கிய மக்கள் சக்தி எம்.பி. யான ஹேசான் விதானகே உரையாற்றி பின்னர் சபைக்கு தலைமை தாங்கிக்கொண்டிருந்த அரச தரப்பு எம்.பி.யான சமன் பிரிய ஹேரத், ‘அடுத்ததாக உரையாற்ற கௌரவ சுரேன் ராகவனை அழைக்கின்றேன்’’ என்றார். இதனையடுத்து, எழுந்த உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ரா…
-
- 0 replies
- 309 views
-
-
விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் மிக கொடூரமாக திட்டமிட்ட முறையில் கலை, கலாச்சார, சமூகவிழுமியங்கள் அழித்தொழிக்கப்பட்டு வருகின்றன. காணி ஆக்கிரமிப்பு மட்டுமல்லாது சமூக, கலாச்சார சீர்கேடுகளும் மிக மோசமான கட்டத்தை அடைந்துள்ளது. இளைஞர், யுவதிகள் திட்டமிட்டு சீர்கேடான பாதைக்கு தள்ளப்பட்டு வருகின்றார்கள். யாழ்.நகர் பகுதியில் அமைந்துள்ள ரில்கோ ஹோட்டலில் கடந்த 4ஆம் திகதி இரவு “DJ night” எனும் பெயரில் போதை விருந்து கொண்டாட்டம் ஒன்று இடம்பெற்ற விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொழும்பை சேர்ந்த Eventsby ShuttleVibe எனும் நிறுவனத்தின் பெயரில் சிலர் , சமூக வலைத்தளங்களின் ஊடாக பார்ட்டிக்கு அழைப்பு விடுத்து இருந்தனர். …
-
- 23 replies
- 1.8k views
-
-
இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த ஞாயிற்று கிழமை நடந்தது. அப்போது, விராட் கோலியின் 35-வது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. திடீரென பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டதும், கொல்கத்தா பொலிஸ் துறையை சேர்ந்த குதிரை ஒன்று மிரண்டு போனது. அது பந்தய குதிரை வகையை சேர்ந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொல்கத்தா பொலிஸ் துறையில் சேர்க்கப்பட்டது. 5 வயது கொண்ட அந்த குதிரை, அதிர்ச்சியில் முழு வேகத்தில் பிளாசி சாலையில் ஓடியுள்ளது. வழியில் 2 அல்லது 3 வாகனங்கள் மீது மோதியுள்ளது என கூறப்படுகிறது. இதன்பின் சாலையில் சரிந்து விழுந்தது. எனினும், மாரடைப…
-
- 0 replies
- 302 views
- 1 follower
-
-
யாழில். காவற்துறையினரிடம் இருந்து தப்பிக்க மணலை கொட்டிய கடத்தல்காரர்கள்! adminNovember 6, 2023 டிப்பரில் மணலை கடத்தியவர்கள் காவற்துறையினரை கண்டுவிட்டு தப்பித்தோடியபோது வீதியிலேயே மணலை கொட்டி விட்டு சென்றதால் வீதியோரமாக இருந்த தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதமடைந்ததுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில், சிறுப்பிட்டி பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை (06.11.23) அதிகாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அச்சுவேலி காவற்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் டிப்பர் வாகனத்தில் மணல் கடத்தி செல்லப்பட்ட போது, வீதி சோதனையில் ஈடுபட்டிருந்த காவற்துறையினர் வாகனத்தை மறித்துள்ளனர். அதன் போது, மணலை கடத்தி…
-
- 0 replies
- 187 views
-
-
ஆணைத்தலை பெற முன்னர் இருந்த மனித தலையுடன் பிள்ளையாருக்கு ஒரே ஒரு கோவில் ஆதி விநாயகர் ஆலயம், தமிழகத்தில் உள்ளது. இவ்வாலயத்தில்எழுந்தருளியுள்ள விநாயகர், நரமுக விநாயகர் என அழைக்கப்படுகிறார். நரன் என்றான் மனிதன்!
-
- 0 replies
- 767 views
-
-
2023ஆம் ஆண்டின் ’மறைவுக்குப் பின்னரும் வருமானம் குவிக்கும் பிரபலங்களின் ஃபோர்ப்ஸ் பட்டியலில்’ பொப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன் முதலிடம் பிடித்துள்ளார். சர்வதேசப் பிரபலங்கள் பலரும் தங்கள் படைப்புகள் மூலம், மறைவுக்குப் பின்னரும் அதிக வருமானம் குவித்து வருகின்றனர். அப்படியானவர்களை ஆண்டுதோறும் ஃபோர்ப்ஸ் இதழ் பட்டியலிட்டு வருகிறது. நடப்பாண்டின் பட்டியல் இந்த வாரம் வெளியானது. இந்தப் பட்டியலில் பொப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் மைக்கேல் ஜாக்சன் முதலிடம் பிடிப்பது இதுவே முதல்முறை என்றும் ஃபோர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது. 115 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்துடன் மைக்கேல் ஜாக்சன், இந்தப் பட்டியலில் முதலிடம் பி…
-
- 0 replies
- 320 views
- 1 follower
-
-
அஜர்பைஜானைச் சேர்ந்த 36 வயதான ரஷ்ய பேச்சாளர் ஒருவர் லிஸ்பனில் உள்ள ஒரு உணவகத்துக்குச் சென்றார். அங்கு மாதுளம் பழச்சாறு ஒடர் செய்ய முயன்றார். மாதுளை என்ற வார்த்தையை போர்ச்சுக்கீசிய மொழியில் கூறுவதற்காக அவர் மொழி பயன்பாட்டை பயன்படுத்தினார். ஆனால் அது அவருக்கு தவறான மொழிபெயர்ப்பை வழங்கி உள்ளது. அதாவது மாதுளம் பழச்சாறு என்பதற்கு பதிலாக, கையெறி குண்டு என வந்துள்ளது. இதை அறியாத அவர் ஒடர் செய்ததும் உணவக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நபர் கையெறி குண்டுகளைக் காட்டி மிரட்டுவதாக கருதிய உணவக ஊழியர்கள் காவல் துறையினரிடம் புகார் செய்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்து சென்றனர். அவர்கள் மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்ட சுற்றுலா பயணியை பிடித்து கைது செய்…
-
- 4 replies
- 323 views
- 1 follower
-
-
இலங்கையில் முதலீடு செய்வதற்கு புலம்பெயர் மக்கள் ஆர்வம் காட்டினாலும் பாதுகாப்பற்ற நிலையினால் அவர்களினால் முதலீடு செய்ய முடியவில்லை என புலம்பெயர் தமிழ் தொழிலதிபரான கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார். தென்னிலங்கையின் தொலைக்காட்சியொன்றின் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று வழங்கிய செவ்வியிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். நாட்டில் தமிழ் பெரும்பான்மை இன மக்களுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்று எட்டப்பட்டால் நிச்சயமாக பாரியளவிலான முதலீடுகள் இலங்கையில் மேற்கொள்ளப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பெரும்பான்மை இனத்தவரின் வீடுகளை சுற்றி இராணுவ முகாம்கள் இருந்தால் அதனை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? யாழ்ப்பாணத்தை சுற்ற…
-
- 0 replies
- 821 views
-
-
பார்வைக் குறைபாடுடைய பொலிஸாருக்கு நற்செய்தி! யாழ் மாவட்டத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களில் பார்வை குறைபாடுடைய பொலிஸாருக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு நாளை மறுதினம் காலை 9மணிக்கு யாழ்ப்பாண பொலிஸ் நிலைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. லயன்ஸ் கிளப்பின் அனுசரணையில் யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் 400 க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கண்ணாடி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1356940
-
- 0 replies
- 150 views
-
-
02 NOV, 2023 | 03:32 PM தனது கணவரான இராணுவ சிப்பாயின் ஆணுறுப்பை பாக்குவெட்டியால் வெட்டி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மனைவியை இரண்டு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்குமாறு அனுராதபுரம் பிரதான நீதிவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் அனுராதபுரம் யஹலேகம பிரதேசத்தை சேர்ந்த பெண்ணாவார். இவர் பகலில் தனது கணவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது பாக்குவெட்டி ஒன்றினால் கணவரின் ஆணுறுப்பை வெட்டி காயப்படுத்தியுள்ளார். காயமடைந்தவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை பொது …
-
- 21 replies
- 1.4k views
- 3 followers
-