Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. வட்டுக்கோட்டையில் வீடு உடைத்து கவரிங் நகைகளை திருடிய திருடர்கள்! யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீடொன்றினை உடைத்து உட்புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த கவரிங் நகைகளை களவாடி சென்றுள்ளனர். வீட்டில் வசிக்கும் கணவனும் மனைவியும் தமது தொழில் நிமிர்த்தம் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற சமயம் வீட்டின் கதவினை உடைத்து உட்புகுந்த திருடர்கள் வீட்டில் சல்லடை போட்டு தேடி வீட்டில் இருந்த ஒரு தொகை கவரிங் நகைகளை திருடி சென்றுள்ளனர். தமது வேலை முடிந்து வீடு திரும்பியவர்கள் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தமையை அவதனித்து உள்ளே சென்று பார்த்த போது , தமது கவரிங் நகைகள் அனைத்தும் திருட்டு போயுள்ளமையை அறிந்துள்ளனர். வீடு உடைக்…

  2. வட்டுக்கோட்டையில்... அம்பியூலன்ஸ் சாரதியை தாக்கிய, குற்றத்தில்... கைதானவருக்கு விளக்கமறியல் ! அம்பியூலன்ஸ் வண்டி சாரதியை தாக்கியவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் திடீரென சுகவீனமுற்ற நிலையில் அம்பியூலன்ஸ் வண்டி மூலம் வைத்திய சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார். அதன் போது வீதியில் அம்பியூலன்ஸ் வண்டியை இடைமறித்த அதே பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் சாரதியை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்று இருந்தார். சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதன் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இளைஞன் ஒருவரை…

  3. வட்டுக்கோட்டையில்... பசுவின் காலை துண்டாடிய, விஷமிகள். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேய்ச்சலுக்கு கட்டப்பட்டு இருந்த பசு மாடொன்றின் கால் ஒன்றினை விஷமிகள் துண்டாடியதுடன், மற்றுமொரு காலிலும் காயத்தை ஏற்படுத்தியுள்ளனர். மூளாய் , முன்கோடை பகுதியில் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தனது வாழ்வாதாரத்திற்காக பசு மாடுகளை வளர்த்து வருகின்றார். அந்நிலையில் வழமை போன்று தனது பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் பசுவை மேய்ச்சலுக்காக கட்டியுள்ளார். மாடுகளை அவிழ்க்க சென்ற போது பசுவின் கால் ஒன்று துண்டாடப்பட்ட நிலையில் மற்றுமொரு காலில் காயம் ஏற்படும் வகையில் த…

  4. வட்டுக்கோட்டையில்... வயோதிபப் பெண்ணை, வன்புணர முற்பட்ட... சிறுவன் கைது! யாழ. வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வயோதிப பெண்ணை வன்புணர முற்பட்ட குற்றத்தில் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். பொன்னாலை பகுதியை சேர்ந்த 63 வயதுடைய வயோதிப பெண்ணை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி சைக்கிளில் ஏற்றி சென்ற அப்பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் பொன்னாலை காட்டு பகுதிக்குள் குறித்த வயோதிப பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று, வன்புணர முற்பட்டுள்ளான். அதனை அடுத்து குறித்த பெண் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்ற நிலையில், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் அது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் ச…

  5. வட்டுவாகலில் தாயின் மூன்றாவது கணவரால் சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகம்! October 16, 2021 முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் உள்ள குடும்பம் ஒன்றில், தாயின் மூன்றாவது கணவரால் இரண்டு சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இச்சம்பவம் குறித்து வெளியாகிய தகவலில், வட்டுவாகல் கிராமத்தில் தாயின் மூன்றாவது கணவரால் மகள்கள் தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்துள்ளமை தொடர்பில் கிராமத்தவர்களால் சிறுவர் துஸ்பிரயோக தடுப்பு பிரிவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் காவற்துறையினர் தாயினையும் தாயின் மூன்றாவது கணவரையும் கைது செய்துள்ளார்கள். ஏற்கனவே இரண்டு கணவர்களுக்கு பிறந்த இரண்டு …

    • 2 replies
    • 630 views
  6. சீனாவின் அதிகாரி ஒருவர் தனது வீட்டின் முன்னால் உள்ள புத்தர் சிலையில் ஆபாச திரைப்பட சீடிக்களையும், பணத்தையும் பதுக்கிவைத்துள்ளார். சீனாவின் பிரதமர் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் மீது கடுமையாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் சீனாவின் மங்கோலியா உள் பகுதியை சேர்ந்த அரசு அதிகாரி வு ஷிஷோங் (63)என்ற கம்யூனிஸ்டு தலைவருக்கு 34 சொசுகு பங்காளாக்கள் இருப்பதும், அதில் ஒன்று கனடாவில் வாங்கபட்டு உள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவரை கைது செய்த பொலிசார் நடத்திய விசாரணையில், இவர் தினமும் வீட்டின் முன் பிரார்த்தனை செய்யும் புத்தர் சிலையின் அடியில் ரகசிய அறை ஒன்று அமைத்துள்ளார் என்றும் அதில் தான் ஊழல் செய்து சேர்த்த 2,000 பணக்கட்டுகள், தங்க கட்டிகள்,…

  7. வந்தாரை வாழவைக்கும் தமிழகம் மண்ணின் மைந்தர்களை வாழவைப்பது எப்போது? தொல் தமிழர்களை தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என்ற கொடுமையின் தொடர்ச்சியாக ... ... இன்று தொல் தமிழர்கள் நகரத்திற்குள் வாழ்ந்தாலே தீட்டு என்ற புதிய தீண்டாமையை புகுத்துவதா? என்று கொதிக்கும் நெஞ்சோடு தமிழர் எழுச்சி இயக்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தியது. தொல் தமிழர்கள் மீதான புதிய தீண்டாமையை உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ் மக்களிடம் பரப்பி, ஒன்றுபட்ட தமிழர் போராட்டத்தை முன்னெடுக்க உருவானதுதான் எங்கள் மண் என்ற இந்த நாடக ஆவணப்படம். இப்படம் தமிழக வரலாற்றில் மக்கள் முதலீட்டில் மக்களே நடித்து வெளியிடும் முதல் படம் என்ற சிறப்புப் பெற்றுள்ளது. இப்படம் 15-04-…

  8. வனத்துறை அதிகாரிகளைப் புலிக் கூண்டில் அடைத்த கிராம மக்கள்! கர்நாடக மாநிலத்திலுள்ள சாமராஜநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து வனத்துறை அதிகாரிகளை புலி கூண்டில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியைச் ஒட்டிய விவசாய நிலங்களில் புலிகள் நடமாட்டம் உள்ளதாகவும், கால்நடைகளை கொன்று வருவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். ஆனால் வனத்துறையினர் புலியை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்காமல், பெயளரவுக்கு கூண்டு வைத்துவிட்டு மட்டும் சென்றுவிடுவதாக தெரிவித்தனர். இந்நிலையில் அங்கு ஆய்வுக்கு சென்ற வனத்துறையினரை, கிராம மக்கள் முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர். அப்போது முறையாக பதில் அளிக்கவில்லை என தெரிவித்து, வனத்துறை அதிகாரிகள்…

  9. கனடாவில் வனவிலங்கு உயிரினங்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் வருடாந்தம் நடைபெறும் CN Tower ஏறும் நிகழ்வில் ஆயிரக்கணக்கானவர்கள் இன்று பங்கெடுத்தார்கள்.உலக வனவிலங்கு நிதியத்தின் ஏற்பாட்டில் 25வது வருடமாக நடைபெற்ற நிகழ்வில், இன்று சுமார் 6000 பேர் கலந்துகொண்டார்கள். காலை ஆறு மணிக்கு சி.என்.டவரை படிகள் மூலம் ஏறும் இந்த விழிப்புணர்வு நிகழ்வு ஆரம்பமாகியது . சி.என்.டவரின் 1776 படிகளை இவர்கள் ஏறினார்கள்.இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் சேகரித்த நிதி, வனவிலங்குகளைப் பேணும் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் எனவும், சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்பும் ஒரு செயற்பாட்டிற்காக, இன்றைய நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் பங்களிப்பதாக, வனவிலங்கியல் நிதியத்தின் தலைவரும் டொரன்டோ நகரின் முன்னாள் ம…

    • 0 replies
    • 329 views
  10. மாதுரு ஓயா தேசிய பூங்காவில் மயில் ஒன்றை வேட்டையாடி கொன்று சமைத்து உணவாக உட்கொண்ட காட்சி சமூக ஊடகங்களில் ஒன்றான யூடியூப் தளத்தில் பகிரப்பட்ட காணொளி தொடர்பில் வெளிநாட்டு பிரஜை மற்றும் நான்கு வேடுவச் சமூகத்தினர் மீது வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த காணொளி ‘கோ வித் அலி’ (Go With Ali) என்ற யூடியூப் சேனலில் பகிரப்பட்டுள்ளது. அதில் தேசிய பூங்காவிற்குள் ஒரு குழுவினர் மயில் ஒன்றை வேட்டையாடி விறகு அடுப்பில் சமைத்து உட்கொள்ளும் காட்சி காணொளியாக படம்பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெளிநாட்டு பிரஜை மற்றும் நான்கு வேடுவச் சமூகத்தினர் அடங்கிய குழுவினர் தேசிய பூங்காவிற்குள் சட்டவிரோதமாக உட்பிரவேசித்தமை தொடர்பில் முதல்…

  11. யு.எஸ்.-மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும் அல்லது மலிவானதாக இருந்தாலும் ஒருவருக்கு பேக்கிங் பொருட்கள் மிகுந்த குடிபோதையை ஏற்படுத்தும் என்பதை நியு யோர்க்கை சேர்ந்த பெண் ஒருவர் தெளிவாக நிரூபித்துள்ளார். இந்த வார இறுதிநாட்களில் வனிலா சாறின் தாக்கத்துடன் வண்டியோட்டியதால் பொலிசாரால் இவர் கைது செய்யப்பட்டு இதனை நிரூபித்துள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு நியுயோர்க் பொலிசார் வால்மார்ட் வாகனம் நிறுத்தும் இடத்தில் ஒழுங்கற்ற முறையில் வாகனம் செலுத்திய பெண் ஒருவரை நிறுத்தியுள்ளனர். பெண் வண்டியை சாலை ஒரத்தில் நிறுத்தி விட்டு வீட்டிற்கு போகும் பாதையை தவறவிட்டு விட்டதாக தெரிவித்தார். ஆனால் அதிகாரி மூச்சில் மதுவின் அளவை சோதிக்கும் கருவியை கொடுத்து பரிசோதித்த போது இரத்தத்தி…

  12. வன்னிப் போரில் 146,679 தமிழர்கள் கொல்லப்பட்டு அல்லது காணாமல் போயிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. நான்காம் கட்ட ஈழப்போரில் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் நிமித்தம் செயலாளர் நாயகம் பான் கீ-மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட உள்ளக ஆய்வுக் குழுவால் புதன்கிழமை அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்தது. அவ்வறிக்கையின் இரண்டாவது பின்னிணைப்பில் (பக்கம் 38: சரத்து 5) வன்னிப் போரில் காணால்போன 146,679 தமிழர்களின் கதி குறித்து கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள், மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணையத்தின் முன் கிளிநொச்சி – முல்லைத்தீவு மாவட்ட செயலர்களால் சமர்ப்பிக்கப்பட்ட எழுத…

  13. வன்னியில் உள்ள சின்னங்கள் தொடர்பில் தொல்பொருளியல் திணைக்களம் கருத்து வன்னி பெரு நிலப்பரப்பில் அமைந்துள்ள மாவட்டங்களான வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தொல்பொருளியல் திணைக்களத்தின் வசம் தற்போது 121 சின்னங்கள் உள்ளபோதிலும் 43 சின்னங்களிற்கு மட்டுமே அரச இதழ் உள்ளதாக குறித்த திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. தொல்பொருளியல் திணைக்களத்திற்கு தகவல் அறியும் சட்டத்தின் கீழ், விண்ணப்பித்த விண்ணப்பத்திற்கு அளித்த பதிலிலேயே மேற்படி தகவல் உறுதி செய்யப்பட்டபோதும், தமிழ் அல்லது ஆங்கில மொழியில் கோரிய விண்ணப்பத்திற்கும் சிங்கள மொழியில் மட்டும் பதிலளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட பதிலின் அடிப்படையில், வவுனியா மாவட்டத்தில் 43 இடங்களும் மன்னா…

  14. வன்னியில் இறுதி யுத்தத்தில் காவுகொள்ளப்பட்ட ஆண்களின் துணையில்லாத வீடுகளுள் அத்துமீறிப் நுழையும் இராணுவத்தினரின் தொல்லை அதிகரித்திருப்பதாக பிரதேச மக்கள் அச்சங்கொண்டுள்ளனர். நேற்றிரவும் அப்பகுதியில் இத்தகைய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாண்டியன்குளம்- நெட்டாங்கண்டல் பிரதேசங்களிலிருந்து சுமார் ஆறு கிலோமீற்றர் தூரம் காட்டுப்பகுதிக்கு அப்பாலுள்ள சறாட்டிகுளம் கிராமத்தில் சுமார் 70 குடும்பங்கள் மீள்குடியேறி வாழ்ந்து வருகின்றன. அடிப்படை வசதிகள் மற்றும் வெளித்தொடர்புகள் அதிகமில்லாத இந்தக் கிராமத்தில் அண்மைக்காலமாக படையினரின் அடாவடித்தனங்கள் அதிகமாக இடம்பெற்று வருவதாக விசம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கிராமத்திலுள்ள கணவனை இழந்த இளம் பெண்னொர…

  15. பிரித்தானியாவில் தனது 77 வயதுக் காதலரை அடித்துக் கொலை செய்த 29 வயதான பெண்ணுக்கு 40 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிறிஸ்டீனா பொங்கிராக்ஸ் என்ற அப்பெண் தனது காதலரான வில்லியம் ஹெர்கன்ரைடர் என்பவரை கடந்த வருடம் மே மாதம் அவரது இல்லத்தில் வைத்து வோக்கிங் ஸ்டிக்கினால் மோசமாக அடித்து காயப்படுத்தி இருந்தார். இதனைத்தொடர்ந்து சில வாரங்கள் வைத்தியசாலையில் இருந்த வில்லியம் பின்னர் உயிரிழந்தார். இச்சம்பவமானது பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பொலிஸார் கிறிஸ்டீனாவைக் கைது செய்ததுடன் அவர் மீது கொலைக்குற்றம் சுமத்தியுள்ளனர். தனது காதலர் தன்னை வீட்டை விட்டு த்துரத்த முற்பட்டமையினாலேயே கிறிஸ்டீனா வில்லியமை தாக்…

  16. உலகில் உள்ள 96 நாடுகளில் வாழும் முதியவர்களின் வாழ்க்கைத் தரத்தை சர்வதேச ஹெல்ப்ஏஜ் குளோபல் ஏஜ்வாட்ச் அமைப்பு கணிப்பீடு செய்துள்ளது. இந்த முடிவின்படி வயதானவர்கள் வாழ்வதற்கு சிறந்த இடம் என்ற பெருமையை நார்வே பெறுகின்றது. இவர்களின் சமூக மற்றும் பொருளாதார நலன்களின் அடிப்படையில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. முதியவர்களுக்கான ஐ.நா. சர்வதேச தினத்தன்று வெளியிடப்பட்டுள்ள இந்தக் கருத்துக் கணிப்புகள் ஆஸ்திரேலியா, மேற்கு ஐரோப்பா, வடக்கு அமெரிக்கா போன்ற இடங்களுக்கு உயர்ந்த தகுதிகளையும் ஆப்கானிஸ்தானிற்கு கடைசி இடத்தையும் வழங்குகின்றது. நார்வேக்குப் பிறகு ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, கனடா, ஜெர்மனி ஆகிய நாடுகள் சிறந்த இடங்கள் வரிசையைப் பெறுகின்றன. வருமான பாதுகாப்பு, சுகாதாரம…

  17. பேசுவதற்காக மட்டுமே கண்டறியப்பட்ட தொலைபேசி இன்று அலைபேசியாக உருமாறி நிற்கின்றன. இன்றைய அவசர யுகத்துக்கு அவை அவசியமும் கூட. ஆனால், இன்றும் தன் தாத்தா வாங்கிய தொலைபேசியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஜஸ்வந்த் சிங். பழைமையான தொலைபேசி பற்றி நம்மிடம் பேசிய ஜஸ்வந்த் சிங், ``இப்போது நானே ஐபோன் 10x மொபைல் வைத்திருக்கிறேன். ஆனால், இந்தத் தொலைபேசியைவிட மனமில்லை. இன்றைய தலைமுறைகளுக்கு இதன் அருமை தெரியாது. அந்தக் காலத்தில் தொலைபேசி இருக்கும் வீட்டுக்கு ராஜ மரியாதை இருக்கும். இப்போதிருக்கும் செல்போன் கதிர்வீச்சுகள் பிரச்னை அப்போது இல்லை. இந்த போனில் ஒரு முனையை மட்டும் காதில் வைத்து போன் பெட்டியில் உள்ள மைக்கில் பேச வேண்டும். எதிர்முனையில் மெல்…

  18. பாராமதி, மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில், 66 வயதுப் பெண் ஒருவர் சேலையுடன், மராத்தான் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டதை அனைவரும் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர். அந்தப் பாட்டியின் பெயர் லதா பகவான் கரே. இவர் பாராமதியில் நடந்த மராத்தான் போட்டியில் பங்கேற்றார். மூத்த குடிமக்களுக்கான 3 கிலோமீட்டர் மராத்தான் பிரிவில் கலந்து கொண்டு ஓடினார். அதை விட முக்கியமானது இவர் வெற்றி பெற்றதுதான். 66 வயதில் பலரும் வேகமாக நடக்கவே பயப்படுவார்கள். பொடி நடையாக வாக்கிங் மட்டுமே போவார்கள். ஆனால் இந்தப் பாட்டியோ மின்னல் வேகத்தில் புடவையுடன் ஓடியதைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டுப் போயினர். இவர் பிம்பிளி என்ற பகுதியைச் சேர்ந்தவர். கிட்டத்தட்ட இளைஞர்களுக்குப் போட்டியைக் கொடுக்கும் வகையில்…

  19. வயது என்பது வெறும் இலக்கம் மட்டுமே என்கிறார் இம்மாது

  20. 75 வயது மாது.. தனது கட்டுடலை.. இன்றும் பேணி வருகிறார்... அவர் சொல்கிறார்.. வயது.. என்று ஒன்றுமில்லை.. அது வெறும் இலக்கம்...! உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வயது.. ஒரு தடையே இல்லை. எங்க எங்க பாட்டிங்க.. சோத்து ஆன்ரிங்க.. 45 - 50 வயதிலையே.. ஓய்வுக்கு போயிடுறாங்க..! காண்க.. இந்தக் காணொளி.. http://www.bbc.co.uk...gazine-18346128

  21. புதுடெல்லி : பெண்களின் அழகு கிரீம்களை மறைந்து, ஒளிந்து ஆண்கள் பூசத் தொடங்கியது போய், வயதாவதை தடுக்கும் கிரீம்கள் மீது இப்போது அவர்கள் கவனம் திரும்பியுள்ளது. இதை நீல்சன் நிறுவன புள்ளிவிவரம் புட்டு வைக்கிறது. இதுபற்றி நீல்சன் நடத்திய ஆய்வு விவரம்: முகத்தில் எண்ணெய் பசை, கரும்புள்ளிகள், மேடு பள்ளங்களை சரி செய்து பொலிவுடன் காட்டும் ‘பேர்னஸ்’ கிரீம்களை பெண்கள்தான் முன்பு பயன்படுத்துவார்கள். கடையில் அவற்றை தனக்கென கேட்டு வாங்க முடியாத இளைஞர்கள், வீட்டில் சகோதரியின் கிரீமை ரகசியமாக எடுத்து மறைந்திருந்து பூசிக் கொள்ளத் தொடங்கினர். இதை வீட்டினர் கவனித்தார்களோ இல்லையோ, நிறுவனங்கள் கவனித்து விட்டன. இளைஞர்களின் கஷ்டத்தை போக்க, ஆண்களுக்கான கிரீம்களை மார்க்கெட்டில் இறக்…

  22. வயாகரா ஐஸ் கிரீம் தயாரிக்கும் இங்கிலாந்து நிறுவனம் - பணக்கார வாடிக்கையாளருக்கு மட்டுமே விற்குமாம்! [Thursday, 2014-04-17 10:50:06] ‘ஐஸ் கிரீம்’ என்ற பெயரைக் கேட்டாலே சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை நெஞ்சங்களில் ஒருவித ஆனந்த கிளுகிளுப்பு தோன்றுவது இயற்கையானது. அந்த ஐஸ் கிரீமில் ஆண்மை குறைப்பாட்டை சமன் செய்யும் ‘வயாகரா’வும் சேர்ந்தால்… இந்த நினைப்பே குடுகுடு கிழவரையும் கிளுகிளுப்புகுள்ளாக்கி விடுமல்லவா? இவ்வகையிலான இன்ப கிளுகிளுப்புக்கு ஆசைப்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த ஒரு செல்வந்தர், அந்நாட்டின் பிரபல உணவு நிபுணரான சார்லி ஹார்ரி பிரான்சிஸ் என்பவரை தொடர்பு கொண்டார். ’லிக் மி- ஐ ஆம் டெலிஷியஸ்’ என்ற பெயரில் இங்கிலாந்தில் மிகவும் பிரபலமான இருட்டில் கூட…

    • 5 replies
    • 440 views
  23. வயாகரா மாத்திரை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உலகெங்கும் சுமார் மூன்று கோடிபேருக்கும் அதிகமாக அந்த மாத்திரையைப் பயன்படுத்தியுள்ளனர் என புள்ளி விவரங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வந்திருக்கிறது அடுத்த அசத்தல் கண்டுபிடிப்பு. லிபிடோ இன்செக்ஷன் எனும் இந்த புதிய மருந்து வயாகராவைப் போல மேனியில் நேரடியாக மாற்றங்களை ஏற்படுத்தாமல் மூளையில் மாற்றத்தை ஏற்படுத்தி பாலியல் ஆர்வத்தையும், ஆரோக்கியத்தையும் தூண்டுகிறதாம். பாலியல் ஆர்வமின்மை இன்றைய அவசர யுகத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது. மூன்றில் ஒரு பங்கு பெண்களும், ஆறில் ஒரு பங்கு ஆண்களும் இந்த ஆர்வமின்மை கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான வரப்பிரசாதம் இது என்கின்றனர் இந்த புதிய அதிசய மருந்து தயாரிப்பாளர்கள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.