Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. மனிதனின் குடலுக்குள் உயிருடன் குடித்தனம் நடத்திய மீன். அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்! பிரேசிலியா: பிரேசிலில் ஒருவரின் குடலில் உயிரோடு துடித்துக் கொண்டிருந்த 2 அடி நீளமுள்ள மீன் ஒன்று அறுவை சிகிச்சை மூலமாக வெளியேற்றப்பட்டுள்ளது. பிரேசிலின் லான்ரினா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் உடலை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவர்கள் ஸ்கேன் செய்தனர். அப்போது அவரது குடல் பகுதியில் நன்கு வளர்ச்சியடைந்த மீன் இருந்தது தெரியவந்தது. அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு. அந்த நபரின் உடலில் துளையிட்டு மீன் உள்ளே சென்றிருக்கலாம் எனக் கருதிய மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். உயிரோடு வெளியேற்றப்பட்ட மீன். அறுவை சிகிச்சையின்போது அந்த நபரின் உடலில் இருந்து ந…

  2. ஆந்திராவில், 'கட்டிப்பிடி முத்த' சாமியார் கைது! மனநல மையத்தில் சேர்க்க கோர்ட் உத்தரவு! கடப்பா: ஆந்திராவில் பெண்களைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அருள்வாக்கு கூறிவந்த டுபாக்கூர் சாமியாரை போலீசார் கைது செய்தனர். அவரை மனநிலை மையத்தில் சேர்க்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கமலாபுரம் என்ற ஊரில் இளைஞர் ஒருவர் காவி உடை அணிந்து தன்னை சாமியார் என்று கூறிக்கொண்டு உலா வந்தார். தங்கள் குடும்ப பிரச்சனை, மனக்குறைகள் போன்றவற்றை சாமியாரிடம் கூறி நிவாரணம் கேட்ட பெண்களைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து "அருள்வாக்கு" கூறி வந்திருக்கிறார். இந்த போலி சாமியார் பற்றி போலீசுக்கு ஏராளமான புகார்கள் சென்றன. சாமியார் பெண்களை கட்டிப்பிடித்து முத்தம் …

  3. பிரித்தானியாவை தளமாகக் கொண்ட உலகத் தமிழர் பேரவை (GTF) மற்றும் அமரபுர நிகாயவின் பௌத்த தேரர்கள் குழுவால் தொகுக்கப்பட்ட “இமயமலை பிரகடனத்திற்கு”க்கு சுவிட்ஸ்ர்லாந்து அரசாங்கம் நிதியளித்தமை தெரியவந்துள்ளது. இலங்கையில் வெளியாகும் பிரதான ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு எழுதிய பத்தியில் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளரும், சட்டத்தரணி ஒருவர், இந்த முயற்சி ஏற்றுக்கொள்ளப்படுவதற்குப் பதிலாக விமர்சிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். உலகத் தமிழர் பேரவை மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்கம் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் சங்கத்தின் தலையீட்டுனான இந்த முயற்சிக்கு சுவிட்ஸர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியானது உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தமிழ் சமூகத்தை ஆத்திரப்படுத்தியுள்ளது." …

  4. மது குடிக்கும் பழக்கமுள்ள கணவரைப் பொது இடத்தில் அடிக்கும் பெண்களுக்கு 10 ஆயிரம் ருபா வரை ரொக்கப்பரிசு - அமைச்சர் அறிவிப்பு. [sunday, 2011-09-25 08:48:22] 'மது குடிக்கும் பழக்கம் உள்ள கணவரை, பொதுக் கூட்டங்களுக்கு அழைத்து வந்து, அவரை அவமானப்படுத்தும் விதத்தில் அடிக்கும் பெண்களுக்கு, ஒரு அடிக்கு ஆயிரம் ரூபாய் வீதம், 10 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும்' என, ஆந்திர நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.ஜி.வெங்கடேஷ் தெரிவித்தார். ஆந்திரா கர்னூல் நகரில், நேற்று முன்தினம் (வெள்ளியன்று) நடந்த விவசாயப் பெண்கள் கருத்தரங்கில், கலந்து கொண்டு பேசிய அவர் கூறியதாவது: பெண்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தை, மது குடிக்கும் பழக்கமுள்ள, அவர்கள் கணவர்கள் வீணாகச் செலவிடுகின்றன…

  5. மரண தண்டனை அர்த்தமுள்ளதா? மரண தண்டனை விதிக்கப்பட்டு தூக்குக் கயிற்றை எதிர்நோக்கியிருக்கும் குற்றவாளிகளுக்கு கருணையின் அடிப்படையில் மன்னிப்பு அளிப்பது குறித்து ஒரு பொதுக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் கூறியுள்ளார்! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் உட்பட நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் உள்ள 20க்கும் அதிகமான மரண தண்டனை கைதிகள் அனுப்பியுள்ள கருணை மனுக்களை பெற்றுள்ள குடியரசுத் தலைவர் கலாம், அதன் மீது தனது முடிவை வெளியிடுவதற்கு முன்னர், கருணை மன்னிப்பு அளிப்பது பற்றி நாடாளுமன்றம் விவாதித்து ஒருமித்த கருத்தை காண வேண்டும் என்று கூறியிருப்பது சிந்திக்கத்தக்கது. நாகரீக சமூகத்தில் குற்றத்தி…

  6. சீனாவில் பிறந்த இரட்டை குழந்தைக்கு இரண்டு அப்பா!… எப்படி? Leftin March 28, 2019 சீனாவில் பிறந்த இரட்டை குழந்தைக்கு இரண்டு அப்பா!… எப்படி?2019-03-28T15:42:48+00:00உலகம் சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு பிறந்த இரட்டை குழைந்தைகளுக்கு இருவேறு தந்தை இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது! சீனாவின் Xiamen மாகாணத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கடந்த ஆண்டு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இரு வேறு ஜாடைகளில் பிறந்த குழந்தைகளில் ஒன்றை மட்டும் தந்தை வெறுத்து வந்துள்ளார். தனது ஜாடையில் இல்லை எனவும் மனைவியிடம் சண்டையிட்டு வந்துள்ளார். மேலும் அந்த குழந்தையை பார்த்த போது அவருக்கு இது தன்னுடைய குழந்தை இல்லை என்பது போல் நினைப்பு வந்துள்ளது…

  7. தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய வேண்டும், இணையாவிட்டால் ஜனாதிபதியின் வீட்டை சுற்றவளைப்போம்.- இராணுவ அமைப்பு எச்சரிக்கை சனிக்கிழமை, 18 யூலை 2015 பொது தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பச்சை நிற உடை அணிந்து ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய வேண்டும், அவ்வாறு இணையாவிட்டால் இராணுவத்தினர் மற்றும் பொது மக்களை இணைத்துக்கொண்டு ஜனாதிபதியின் வீட்டை சுற்றவளைப்போம் என தாய் நாட்டிற்கான இராணுவ அமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவ் அமைப்பின் ஏற்பாட்டாளர் தென் மாகாண சபை உறுப்பினர் மேஜர், அஜித் பிரசன்ன கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கூட்டணியினால் வெற்றி பெற முடியாதென ஜனாதிபதி …

    • 0 replies
    • 323 views
  8. மனைவி தனது கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டு சிகரெட்டினால் தனது உடலை எரித்ததாகவும் கத்தியால் தனது உறுப்புகளை வெட்ட முயன்றதாகவும் கணவர் குற்றம் சாட்டியுள்ளார்.கணவரின் புகாரின் பேரில் பொலிசார் அந்த பெண்ணை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.கடந்தவருடம் நவம்பர் திருமணம் நடந்ததாகவும் சில நாட்களுக்குப் பிறகு அவர் தனது மனைவி மது அருந்துவதையும் சிகரெட் புகைப்பதையும் கண்டுபிடித்தார். மனைவி அவரை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தத் தொடங்கினார். இதற்கு கணவர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனைவி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தன் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைப்பதாக மனைவி மிரட்டியதாக கணவர் சொல்லியுள்ளார். https://www.freepressjournal.in/india/up-shocker-bijnor-woman-to…

  9. ஆதாம் காலத்தில் ஆரம்பித்து ஐபேட் காலம்வரை நீடிக்கும் புதிர்களுள் ஒன்று பெண்களுக்கு ஆண்களிடம் என்ன பிடிக்கும், ஆண்களிடம் அவர்கள் எதையெல்லாம் கவனிப்பார்கள் என்பதுதான். இதில் பெரிய பெரிய ஆராய்ச்சியெல்லாம் செய்ய முயன்று தோற்றுப் போனவர்கள்தான் அதிகம். எது எப்படியோ ஆணுக்குப் பெண் புதிர்தான். அந்தப் புதிரைக் கொஞ்சம் தெளிவுபடுத்திக் கொள்ள உதவும் விதத்தில் சமீபத்தில் ‘sortedd.com’ என்ற இணையதளத்தில் ஒரு வீடியோ போட்டிருக்கிறார்கள். ஒரு ஆணை முதன்முதலில் பார்க்கும்போது அவரிடம் எதைக் கவனிப்பீர்கள், அவர் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்றெல்லாம் எதிர்பார்ப்பீர்கள் என்று நவநாகரிக மங்கையரிடம் கேட்டு அதை வீடியோ ஆக்கியிருக்கிறார்கள். அதற்கு அந்தப் பெண்கள் சொன்ன பதில்களைக் …

    • 0 replies
    • 758 views
  10. பெண்ணின் தலைக்குள் 77 ஊசி – மந்திரவாதி கைது. ஒடிசா மாநிலத்தின் போலாங்கிர் பகுதியை சேர்ந்தவர் ரெஷ்மா பெஹரா 19 வயதான பெண்ணின் தலையில் இருந்து 77 ஊசிகள் எடுக்கப்பட்டுள்ளன. சில காலங்களாக பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வந்த இவர் கடந்த 2021 ஆம் ஆண்டில் மந்திரவாதி ஒருவரை சந்தித்துள்ளார். அதன்பிறகு சில காலம் எந்த பிரச்சினையும் இல்லாமல் ரெஷ்மா வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், திடீரென தலையில் தாங்க முடியாத வலி ஏற்பட்டு மருத்துவமனையில் ரெஷ்மா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலை பகுதியில் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் ரெஷ்மா தலையில் ஊசிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட ரெஷ்மா தலையில் இருந்து முதற்கட்டமாக எட்டு ஊசிகள் …

  11. ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு அமெரிக்க நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு [ ஞாயிற்றுக்கிழமை, 06 செப்ரெம்பர் 2015, 01:34.50 AM GMT ] அமெரிக்காவிலுள்ள எட்டு ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களின் சொத்து விபரங்களை அந்நாட்டு நீதிமன்றம் கோரியுள்ளதாக தெரிய வருகிறது. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் “பொரின் பொலிஸ்” சஞ்சிகை இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. அமெரிக்க பிரஜைகளான பசில் ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, துமிந்த மனோஜ் ராஜபக்ச, புஷ்பா ராஜபக்ச, தேஜானி ராஜபக்ச, பிசல்கா ராஜபக்ச, டட்லி ராஜபக்ச, ஷசீந்திர ராஜபக்ச ஆகியோருக்கே இந்த நீதிமன்ற அறிவிப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் இலங்கையின் புகழை உயர்த்துவதற்காக இலங்கை மத்திய வங்கி 65 லட்சம் டொ…

  12. ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிராகத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதில் அமெரிக்கா உறுதியாகிவிட்டதாக கூறப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் பாரிய இன அழிப்பு முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகளை நெருங்குகின்ற நிலையில்தான், அமெரிக்கா இந்த முடிவுக்கு வந்திருக்கிறது. ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதற்கு முன்பாக, இப்படியான ஒரு நிலைமை ஏற்படும் என்பதனையும் அதனை தவிர்க்க சிறீலங்கா எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் அமெரிக்கா சிறீலங்காவிற்கு பலமுறை தெளிவு படுத்தியிருந்தது. அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலர் கிலாரி கிளிண்டன் முதல் சிறீலங்காவிற்கான அமெரிக்கத் தூதர் வரை அமெரிக்காவின் பல உயர்மட்டத் தலைவர்கள் பல தடவைகள் சிறீலங்காவின் தலைவர்களை நேரில் சந்…

  13. டேட்டிங் தோல்வியில் முடிந்ததால் கோப்பி வாங்குவதற்கு செலவிட்ட பணத்தை திருப்பித் தருமாறு கோரிய இளைஞன் தன்­னுடன் டேட்­டிங்­கிற்கு வந்த யுவ­தி­யு­ட­னான உறவு முறிந்­ததால் அவ­ருக்கு கோப்பி வாங்கிக் கொடுப்­ப­தற்கு செல­விட்ட பணத்தை திருப்­பிக்­கொ­டுக்­கு­மாறு நபர் ஒருவர் கோரி­யுள்ளார். லண்­டனைச் சேர்ந்த லொரின் குரொச் எனும் யுவ­தி­யி­டமே இந்த விசித்­திர கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. லண்டன் ஐலிங்டன் பகு­தியைச் சேர்ந்த 28 வய­தான லொரின் குரொச், தன்­னுடன் டேட்டிங் வந்த இளை­ஞரின் கோரிக்கை அடங்­கிய எழுத்­து­மூல உரை­யா­டல்­களை இணை­யத்தில் வெளி­யிட்­டுள்ளார். உள்ளூர் ரயில் நிலை­ய­மொன்­றுக்கு …

  14. பொலியாவில் கரடு முரடான மலைப் பாதையில் நடந்த சைக்கிள் பந்தயத்தில் 70 வயது மூதாட்டி பங்கேற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். 11 ஆயிரம் அடி உயரம் கொண்ட ஆண்டஸ்(Andes) மலைத்தொடரில் வளைவு நெளிவான பாதையில் 60 கிலோ மீட்டர் தூரத்துக்கு சைக்கிள் பந்தயம் நடைபெற்றது. மழை, மூடுபனி, கரடு முரடான பாறைகளுக்கு இடையே நடந்த இந்த மலையேற்ற சைக்கிள் பந்தயத்தில் 70 வயது மூதாட்டி மிர்தா முனோஸ் பங்கேற்றார். தனது மகன் திடீரென மரணமடைந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து வெளியே வருவதற்காக சைக்கிள் பந்தயங்களில் ஈடுபட தொடங்கியதாக குறிப்பிட்டுள்ள மிர்தா முனோஸ், தனது 6 பேரக்குழந்தைகளுடன் சைக்கிள் பந்தயம் மேற்கொள்ள வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் தெரிவித்துள்ளார். https://w…

    • 0 replies
    • 315 views
  15. 31 நாய்களை பாலத்தில் இருந்து கீழே வீசிய கொடூரம். தெலுங்கானாவில் 31 நாய்களை மர்ம நபர்கள் பாலத்தில் இருந்து கீழே வீசிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் பாலத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டதில் 20 நாய்கள் இறந்ததாகவும், 11 நாய்கள் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். எட்டுமைலாரம் கிராமம் அருகே உள்ள பாலத்தில் இருந்து நாய்கள் வீசப்பட்டதாக விலங்குகள் நல அமைப்பினர் முறைப்பாடளித்ததை தொடர்ந்தே இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறித்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக இந்திரகரன் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாய்கள் வேறு எங்காவது கொன்று பாலத்தி…

  16. அமெரிக்க அதிபர் மாளிகை எதிரே வைக்கப்பட்டுள்ள 60 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்துக்கு ஒளியூட்டப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, 1964ம் ஆண்டு முதல் இங்கு செயற்கையான மரம் வைக்கப்பட்டு ஒளியூட்டப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் அமெரிக்க நாடாளுமன்ற கீழவை சபாநாயகர் நான்சி பெலோசி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மரத்துக்கு ஒளியூட்டப்பட்டது. இதேபோல், நியூயார்க் நகரில் புகழ்பெற்ற ராக்கிபெல்லர் மையத்தில் (Rockefeller tree) உள்ள 77 அடி உயர கிறிஸ்துமஸ் மரமும் ஒளியூட்டப்பட்டது. https://www.polimernews.com/dnews/91502/50-ஆயிரம்-வண்ண-விளக்குகளால்ஜொலிக்கும்-கிறிஸ்துமஸ்மரம்

    • 0 replies
    • 477 views
  17. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவன், குரோஷியா - செர்பியா நாடுகளுக்கிடையே வெர்டிஸ் என்ற சிறிய நாட்டை உருவாக்கியுள்ளதாக தி நியூயார்க் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த இளைஞன், குரோஷியாவிற்கும், செர்பியாவிற்கும் இடையிலான, டானூப் ஆற்றின் குறுக்கே 125 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள, உரிமை கோரப்படாத நிலத்தை, வெர்டிஸ் குடியரசு நாடாக அறிவித்து, அதன் ஜனாதிபதி நான் தான் என, தனக்கு தானே அறிவித்துள்ளார். அதிகார பூர்வ மொழிகளாக அதன் கொடி, அமைச்சரவை, நாணயம் மற்றும் 400 குடிமக்களைக் கொண்டுள்ள இந்த சிறிய நாடு, இப்போது இத்தாலியில் உள்ள வாடிகன் நகரத்திற்குப் பின், உலகின் இரண்டாவது சிறிய நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் அதிகார பூர்வ மொழிகளாக ஆங்கிலம், கு…

  18. யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டில் நகை திருடிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த யுவதி ஒருவர் சாவகச்சேரி குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரியை சேர்ந்த இளைஞனும் கிளிநொச்சியைச் சேர்ந்த யுவதியும் காதலித்து வந்துள்ளதுடன் இருவருக்கும் திருமணத்திற்கான நாள் நிச்சயிக்கப்படடிருந்த நிலையில் காதலி சில நாட்களாக காதலனின் வீட்டில் தங்கியுள்ளார். இந்த நிலையில் காதலனின் வீட்டில் தாய் வைத்த தாலிக்கொடி உட்பட 8 பவுன் தங்க நகைகள் காணாமல் போயுள்ளதாக காதலனின் தாயாரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கமைய சாவகச்சேரி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கி…

  19. டாக்டரின் விரலைப் பிடித்துக் கொண்டு அம்மாவின் வயிற்றிலிருந்து வெளியே வந்த சிசு! கிளான்டெல், அமெரிக்கா: தனது மனைவியின் பிரசவத்தின்போது எடுக்ப்பட்ட படம் ஒன்றை அவரது கணவர் வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அவரது மகள் பிறந்தபோது, பிரசவம் பார்த்த டாக்டரின் விரலை இறுகப் பற்றியபடி வெளியே வந்ததே இந்த ஆச்சரியத்திற்குக் காரணம். இந்தப் புகைப்படம் இப்போது இன்டர்நெட்டில் படு வேகமாகப் பரவி வருகிறதாம். அமெரிக்காவின் அரிசோனா, கிளான்டெல் பகுதியைச் சேர்ந்தவர் அலிசியா அட்கின்ஸ். இவருக்கு கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி பிரசவம் நடந்தது. அழகிய மகளைப் பெற்றெடுத்தார். அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை டாக்டர்கள் வெளியே எடுத்தனர். நெவியா என்று குழந்தைக்குப் பெயரிட்டனர். ப…

  20. கனடா முழுவதும்.. முகக்கவச, எதிர்ப்புப் பேரணிகள்! கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதில் முகக்கவசங்களின் செயற்திறனைப் பற்றி கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், கட்டாய முகக்கவசக் கொள்கைகளை தீர்மானிக்கும் பேரணிகள் பல கனேடிய நகரங்களில் நடைபெற்றன. வன்கூவர், கல்கரி, சாஸ்கடூன், வின்னிபெக் மற்றும் ஒட்டாவா உள்ளிட்ட நகரங்களில் கூடியிருந்த இந்த பேரணிகள் நடைபெற்றன. பல மாகாணங்களில் கொவிட்-19 தொற்றுகள் மீண்டும் அதிகரிக்க கூடுமென்ற அச்சம் எழுந்துள்ள போதும், எதிர்ப்பாளர்கள் இதற்கு அழைப்பு விடுத்தனர். முகக்கவசம் அணியாமைக்கான பேரணி ‘மார்ச் டு அன்மாஸ்க்’ இயக்கத்திற்கு ஆதரவாக, பொது இடங்களில் முகக்கவசங்களை அணிவது தன்னார்வமாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்தால் கட்டாய…

  21. கியூபாவில் விபச்சார தொழிலில் ஈடுபட்டு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருவதற்கு கனடிய செக்ஸ் பிரியர்களின் செயல்பாடே காரணம் என கியூபா அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. கியூபாவிற்கு சுற்றுலா நிமித்தம் வரும் கனடியர்கள் குறிப்பாக ஐம்பது வயதுக்கு மேற்பட்டோர்கள் கியூபா நாட்டின் சிறுவயது குழந்தைகளை தங்களது கம்பெனியாக அனுப்பும்படி நிர்ப்பந்திருக்கின்றார்களாம். பண விஷயத்தில் தாராளம் காட்டுவதால், இந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் 4 வயது முதல் 13 வயது வரை உள்ள சிறுமிகளை இவர்களுடன் அனுப்பி வைக்கின்றனர். சுற்றுலாவில் ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் தங்கும் கனடியர்கள் அந்த சிறுமிகளை பயன்படுத்திவிட்டு, போகுபோது ஒரு மிகப்பெரிய தொகையை கொடுத்துவிட்டு செல்வதால், …

  22. ஆசிரியர் விடுத்த மிரட்டல்! நடந்தது என்ன? வெளியான தகவல்! எழுச்சி பெறும் மாணவ சமூகம்! மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல ஆண்கள் பாடசாலையின் ஆசியை ஒருவர் மாணவனுக்கு தொலைபேசியூடாக கடுமையான மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை எற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பில் இயங்கும் பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் இரசாயனவியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் அதே பாடசாலையில் கற்கும் மாணவனுக்கு தொலைபேசியூடாக மிரட்டல் விடுத்துள்ளார். குறித்த மாணவன் ஆசிரியையின் மகனுடன் சண்டை போட்டதாகத் தெரிவித்தே இவ்வாறு மிரட்டல் விடுத்துள்ளார். எனினும் முன்னரும் பலதடவைகள் தனது மகனுடன் தகாத வார…

  23. 2073 நவம்பர் 27: " அமெரிக்கா ஒதுங்கிக்கொள்ளாவிட்டால் தமது கப்பல்களை மறந்துவிடவேண்டியதுதான்" தமிழ்க் குடியரசின் முப்படைத்தலைவர் திரு.செழியன் அகமது அலி பதிலடி. தமிழ் மக்களால் 'நாட்டுத் தந்தை' நாளாக கடைபிடிக்கப்படும் அந்நாட்டின் விடுதலை இயக்கத் தலைவர் திரு.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளான நேற்று 'தமிழ்க்குடியரசு வானிலை ஆய்வு மையம்' புதிய தலைமைச்செயலகக் கட்டிடத்தைத் திறந்துவைத்துப் பேசிய முப்படைத்தலைவர் திரு.செழியன் அகமது அலி, அமெரிக்க அதிபரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் பேசினார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று அனைத்துலகக் கடல் எல்லையில் தமிழ்க்குடியரசுக்குச் சொந்தமான ஒரு கப்பல் அமெரிக்கக் கப்பற்படையால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்திருந…

  24. உலகிலேயே மிகவும் குள்ளமான பசு ; ஊரடங்கை பொருட்படுத்தாமல் காண கூடும் மக்கள் வங்காள தேசத்தில், 51 செ.மீ., உயரமுள்ள உலகின் குள்ளமான பசுவை ஆயிரக்கணக்கானோர் ஊரடங்கை பொருட்படுத்தாமல் காண வருகின்றனர். பதிவு: ஜூலை 08, 2021 12:19 PM டாக்கா: வங்காள தேச தலைநகர் டாக்காவுக்கு அருகே 30 கிலோமீட்டர் தொலைவில் சாரிகிராமில் உள்ள ஷிகோர் என்பவர் வேளாண் பண்ணையில் ஒரு பசு உள்ளது. அதனை பார்க்க சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் திரண்டு வருகின்றனர். ராணி என பெயரிடப்பட்டு உள்ள அந்த பசு 51 சென்டிமீட்டர்நீளம் மற்றும் 26 கிலோகிராம் (57 பவுண்டுகள்) மட்டுமே எடையுள்ளது. இந்தப் பசுதான் உலகிலேயே குள்ளமான பசு என, கூறப்படுகிறது.கின்னஸ் உலக சாதனைகளில் மிகச்சிறிய பசுவை விட இது 10 சென்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.