செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7093 topics in this forum
-
படத்தின் காப்புரிமை Getty Images கலகலப்பு திரைப்படத்தில் சந்தானம் உள்ளாட்சித் தேர்தலில் வெல்வதற்காகக் குழாய் மூலமாக சாராயம் வழங்குவது போல ஒரு காட்சி வரும். இப்போது அந்தக் காட்சி கேரளாவில் நிஜமாகி உள்ளது. தேர்தல் வெற்றிக்காகவெல்லாம் மதுபானம் வழங்கப்படவில்லை, அரசு அதிகாரிகளின் அஜாக்கிரதையால் வீட்டுக் குழாய்களில் மதுபானம் வந்திருக்கிறது. என்ன நடந்தது? கடத்தப்பட்ட அல்லது பதுக்கப்பட்ட மதுபான பாட்டில்களை கலால்துறை கைபற்றி வைத்திருக்கும் அல்லவா? அது போல திருச்சூர் மாவட்டம் சாலக்குடி அருகே உள்ள மதுபான விடுதியில் கைப்பற்றப்பட்ட மதுபானங்களை அப்புறப்படுத்த முடிவு செய்திருக்கிறார்கள். ஏறத்தாழ 6000 லிட்டர் பியர், பிராந்தி மற்றும் ரம் ஆகியவற்றை அப்புற…
-
- 0 replies
- 560 views
-
-
டேவிற் கமரனின் பாதுகாவலர் விமானக் கழிப்பறையில் துப்பாக்கியைத் தவறவிட்டார் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிற் கமரனின் பாதுகாவலர் ஒருவர் தனது துப்பாக்கியை ஜெட் விமானத்தின் கழிப்பறையில் தவறவிட்டதாகக் கூறப்படுகிறது. நியூயோர்க்கின் ஜே.எஃப்.கே விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட பிரிட்ரிஷ் எயார்வேய்ஸ் விமானத்திலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. விமானத்தின் கழிப்பறைக்குச் சென்ற பயணி ஒருவர் அங்கிருந்த துப்பாக்கியைக் கண்டெடுத்து விமான ஊழியர்களிடம் கொடுத்ததாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் டேவிற் கமரனுக்கு மெற்றோ பொலிற்ரன் பொலிஸார் தொடர்ந்தும் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். துப்பாக்கியைத் தவறவிட்ட அதிகாரி உடனடியாகக் …
-
- 0 replies
- 226 views
-
-
தென்னாப்பிரிக்காவில் தாயில்லாத சிங்கக்குட்டியை பபூன் இன ஆண் குரங்கு ஒன்று தனது குழந்தையாக கருதி பராமரிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. குருகர் தேசிய வனவிலங்கு பூங்காவில் தாயில்லாமல் சுற்றித் திரிந்த சிங்கக்குட்டியை பபூன் குரங்கு ஒன்று தூக்கிச் சென்று பராமரித்து வருகிறது. மரத்தில் ஏறி உச்சிக்கு செல்லும்போதும், மரம்விட்டு மரம் தாவும்போதும் சிங்கக்குட்டியை தன்னுடனேயே தூக்கிச் சென்று பத்திரமாக வைத்து கொள்கிறது. ஹர்ட் ஸ்கல்ட்ஸ் (Kurt Schultz) என்பவரால் கடந்த 1ம் தேதி இக்காட்சி வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. அக்காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. https://www.polimernews.com/dnews/99303/தாயில்லாத-சிங்கக்குட்டியைதனது-குழந்தையாக-பாவித…
-
- 0 replies
- 602 views
-
-
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் செயற்கை தலைமுடிகளை திருடியவருக்கு சிறைத்தண்டனை வன்கூவரில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் குழந்தைகளின் செயற்கை தலைமுடிகளை திருடியவருக்கு, மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈவா அன்ட் கோ. விக்ஸ் நிறுவனத்தில், கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், தலா 2,500 டொலர்கள் மதிப்புள்ள 150 செயற்கை தலைமுடிகளை 53 வயதான மார்ட்டின் வைகெல்ட் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் 2019ஆம் ஆண்டு தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் குறித்த நபருக்கு வன்கூவரில் உள்ள டவுன் ரவுன் சமூக நீதிமன்றம் மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. முடி உதிர்தல், புற்றுநோய் அல்லது அலோபீசியா போன்ற நிலைமைக…
-
- 0 replies
- 315 views
-
-
நபர் ஒருவர் நடு வீதியில் மகிழுந்தை நிறுத்திவிட்டு தூங்கியுள்ளார். அவருக்கு €4,500 தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. Sables-d'Olonne, (Vendée) நகரில் இந்த சுவாரஷ்யமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி அளவில் இங்குள்ள வீதி ஒன்றுக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். நபர் ஒருவர் நடு வீதியில் மகிழுந்தை நிறுத்திவிட்டு தூங்கிக்கொண்டிருந்துள்ளார். அவர் தவிர மேல ஒருவரும் மகிழுந்துக்குள் உறங்கிக்கொண்டிருந்துள்ளார். இருவரையும் தட்டி எழுப்பிய காவல்துறையினர் நடந்த சம்பவங்களை கேட்டறிந்துள்ளனர். அதன்பின்னர் காவல்துறையினர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், குறித்த இருவரில் சாரதி மது அருந்திவிட்டு மகிழுந்தை ஓட்டியதாகவும், சமிக்ஞை விளக்கிற்…
-
- 0 replies
- 333 views
-
-
99 ஸ்மார்ட் போன்களில் ஒரே நேரத்தில் கூகுள் மேப் செயலியை ஓப்பன் செய்த ஜெர்மானியர் ஒருவர், எல்லா போன்களையும் ஒரு தள்ளு வண்டியில் ஒன்றாக போட்டு பெர்லின் நகர வீதிகளில் அதை இழுத்துச் செல்ல ஒருவரை ஏற்பாடு செய்தார். இந்த கண்கட்டு வித்தையின் காரணமாக ஒரே நேரத்தில் 99 வாகனங்கள் வீதியில் செல்வதாக நினைத்து, நிஜத்தில் காலியாக கிடந்த பெர்லின் வீதிகள் அனைத்திலும் டிராபிக் நெரிசலைக் குறிக்கும் சிவப்பு வரிகள் கூகுள் மேப்பில் தோன்றின. பச்சை நிறத்தில் காணப்பட்ட பெர்லின் சாலைகள் எல்லாம் சிவப்பாக மாறியதால் கூகுள் மேப் உபயோகிப்பாளர்கள் திகைத்தனர். சைமன் வெக்கெர்ட் (Simon Weckert) என்ற இந்த ஜெர்மன் ஓவியர் எதற்காக கூகுள் மேப்பை ஏமாற்றி இந்த விளையாட்டை நடத்தினார் என்பது தெரியவ…
-
- 3 replies
- 1k views
-
-
கொஞ்சும் புறாவே 25,000 குற்ற்றப்பணம் செலுத்த வேண்டும் இல்லை என்றால் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்”. இந்த முடிவு நீதிமன்றத்தால்அறிவிக்கப் பட்டதில் இருந்து Inge Euler (74) நிலை குலைந்து போயிருக்கிறார். இப்படி ஒரு தண்டனை கிடைப்பதற்கு Inge Euler அப்படி பாரிய ஒரு குற்றமும் செய்துவிடவில்லை. கருணையை வெளிப்படுத்தப் போய் அவர் சிக்கலில் மாட்டிக் கொண்டார். அவர் செய்தது புறாக்களுக்கு தீனி போட்டது மட்டுந்தான். அதனால் வந்த வினையே இது. 1989 இல் Ingeயின் பக்கத்து வீட்டில் இருந்தவர் தகவல்களைப் பரிமாறும் புறாக்களை (அஞ்சல் புறாக்கள்) வளர்த்துக் கொண்டிருந்தார். அவற்றின் மேல் பரிவும் விருப்பமும் கொண்டதால் Inge அவற்றை அவரிடம் இருந்து பெற்று தனது பல்கணியில் கூடு அ…
-
- 0 replies
- 330 views
-
-
வாவ்.. 10 நாளில் 1000 படுக்கைகள்.. ஆஸ்பத்திரி.. கட்டி முடித்து சாதித்தது சீனா! சீனாவின் வுகான் நகரில் 10 நாளில் 1000 படுக்கைகள் கொண்ட பிரம்மாண்ட மருத்துவமனையை அந்நாட்டு அரசு கட்டியுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்வர்களுக்காக இந்த மருத்துவமனையை கட்டி முடித்துள்ளது சீனா. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 300 பேர் உயிரிழந்துள்ளனர். 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். சீனாவில் உள்ள வுகான் நகரம் மொத்தமும் மோசமான பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்காக போராடி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு இப்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. சீனாவைத்தாண்டி பிலிப்பைன்ஸில் முதல் உயிரிழப்பு ஏற்ப…
-
- 0 replies
- 536 views
-
-
திரைப்படங்களில் பார்த்த பின் தான் அமேசான் காடுகளில் மட்டுமே இருக்கும், அனகோண்டா பாம்புகளை பற்றி பலருக்கும் தெரியும். அனகோண்டா பாம்புகளின் உருவத்தை பார்த்து உலகின் மிக நீளமான பாம்பு இது தான் என நினைக்கலாம். ஆனால் நிஜத்தில் Reticulated Python எனப்படும் ராஜமலைப்பாம்பு தான் உலகிலேயே மிகவும் நீளமானது. இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் இந்த வகை ராஜமலைப்பாம்புகள் வசிக்கின்றன. பார்ப்பதற்கு பிரமாண்டமாக உள்ள அனகோண்டா பாம்புகளின் நீளம் 20 அடிக்கு மேல் இருப்பதில்லை. ஆனால் ராஜமலைப்பாம்புகளோ 20 அடிக்கும் மேல் நீளம் கொண்டவை. எடை அதிகபட்சம் 75 கிலோ வரை இருக்கின்றன இந்த ராஜமலைப்பாம்புகள். கருப்பு தோல் மீது மஞ்சள் கலந்த பழுப்பு நிற வட்ட வடிவ புள்ளிகளை கொண்டிருக்கின்றன இவ்…
-
- 2 replies
- 1.2k views
-
-
காட்டுவதால் அப்படி என்னதான் பெருமை? யூன் 2019இல் Madrid இல் FC Liverpool க்கும் Tottenhamக்கும் நடந்த உதைபந்தாட்ட இறுதிப் போட்டியின் 18வது நிமிடத்தில் அரைகுறை ஆடையுடன் மைதானத்தில் ஓடிப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த Kinsey Wolanski (23) இப்பொழுது நடந்த பனிச்சறுக்கும் உலகக் கிண்ண விளையாட்டுப் போட்டியிலும் (World Cup Skiing) மீண்டும் (29.01.2020) அதைச் செய்திருக்கிறார். இத்தாலிய விளையாட்டு வீரர் Alex Vinatzer, இரண்டாவது சுற்றில் எல்லைக் கோட்டைக் கடப்பதற்கு சிறிது முன்னர் Kinsey "RIP Kobe - Legend" என்னும் பதாதையை கையில் தூக்கிப் பிடித்த வண்ணம் அரை குறை ஆடையுடன் ஓடிவந்தார். சம்பவத்துக்குப் பின்னர் பத்திரிகையாளர்களின் கேள்வி பதிலின் போது, “எனது 30 வயதிற்குள்…
-
- 1 reply
- 886 views
-
-
வீதிகளில் ஒரு சதத்தைக் கண்டால் “ஆஹா அதிர்ஸ்ர சதம்” என்று அதை எடுத்து தங்கள் பணப் பைக்குள் போட்டு யேர்மனியர்கள் மகிழ்வார்கள். இது காலாகாலமாக அவர்களிடம் இருக்கும் ஒரு நம்பிக்கை. நம்பிக்கை ஒரு பக்கம் இருக்கட்டும். அந்த அதிர்ஸ்ரக் காசு சில சமயங்களில் எரிச்சலைத் தருவதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். சுப்பர் மாக்கெற்றில் பொருட்களை வாங்கி விட்டு பணத்தைச் செலுத்த வரிசையில் நிற்கும் போது முன்னால் நிற்கும் ஒருவர் தான் கொடுக்க வேண்டிய பணத்துக்கு தன்னிடம் இருக்கும் சில்லறைகளைக் கொட்டி ஒவ்வொன்றாக எண்ணிக் கொண்டிருக்கும் போது இந்த அதிர்ஸ்ர சதத்தை தரித்திரம் என்று ஏசச்சொல்லும். இந்தச் சில்லறைச் செப்புக் காசுகளான ஒன்று இரண்டு சதங்களை இல்லாது ஒழித்தால் என்ன என்று ஐரோப்பிய யூனியன…
-
- 0 replies
- 351 views
-
-
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த, மந்திரத்தை உச்சரியுங்கள் – தலாய் லாமா! கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ‘ஓம் தரே டுட்டாரி ட்டுரு சோஹா’ என்ற மந்திரத்தை உச்சரிக்குமாறு தலாய் லாமா தெரிவித்துள்ளார். சீனாவிலுள்ள புத்தமதத்தை பின்பற்றும் சிலர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அறிவுரை வழங்குமாறு தலாய் லாமாவிடம் முகநூல் மூலம் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து, கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மக்கள் ‘ஓம் தரே டுட்டாரி ட்டுரு சோஹா’ என்ற மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து மன அமைதி மற்றும் கவலையில் இருந்து விடுபடலாம். இந்த மந்திரத்தை உச்சரித்தால் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தி நன்மையை அளிக்கும் என தலாய் லாமா தெரிவித்துள்ளார். இதேவேளை, சீனாவில் உருவான கொரோனா வை…
-
- 4 replies
- 670 views
-
-
“வயது குறைந்த ஒரு பெண்ணை ஒரு ஆண் பாலியல் வன்புணர்வு செய்தால், அந்த ஆணே பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும். அப்படி அந்த ஆண் பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் அவருக்குத் தண்டனை வழங்கப்பட மாட்டாது. அத்துடன் இத்திருமணம் இருவரதும் ஒப்புதல்களுடனேயே நடைபெற வேண்டும்” எங்கே இது நடைமுறையில் இருக்கிறது என்று பார்க்கிறீர்களா? நிச்சயமாக இது ஒன்றும் எங்களுடைய நாட்டாமையின் தீர்ப்பு அல்ல. துருக்கி நாட்டில் இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டுவர விரும்புகிறார்கள். இந்தச் சட்ட வரைபுக்கான விவாதமும் வாக்கெடுப்பும் இந்த வாரம் துருக்கிப் பாராளுமன்றத்தில் நடைபெற இருக்கிறது. இப்படி ஒரு சட்டம் வந்தால் அது, சிறார்கள் மீதான சுரண்டல்களையும் அவர்கள் மீதான பாலி…
-
- 4 replies
- 917 views
-
-
மாத்தறையில் குழந்தை பிரசவித்த ஆண் தற்போது எடுத்துள்ள அதிரடி முடிவு..! .sl_box{ margin-bottom: 5px !important; } .sl_box3{ padding-top: 12px !important; } 27,132 Views மாத்தறை மருத்துவமனையில் ஆண் ஒருவர் பிரசவித்த குழந்தையை ஏற்றுக் கொள்ள அவரே மறுப்பு தெரிவித்துவருவதாக மாத்தறை மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கின்றது. தனக்கு குழந்தையை பராமறிக்க முடியாது என்றும், குழந்தையை எவறேனும் வளர்ப்பதற்கு இணங்குவார்களாயின் அவர்களுக்கு வழங்குமாறும் குழந்தையினை பெற்றெடுத்தவர் தெரிவித்துள்ளார். மேலும் ஆணாக வசித்த…
-
- 1 reply
- 948 views
-
-
"ஏன் வந்து மோதுனே" நடுரோட்டில் சண்டை.. பின்னாடியே வந்து மோதிய பஸ்.. புதுமாப்பிள்ளை உட்பட 4 பேர் பலி "ஏன் வண்டி மேல நீ மோதுனே.. நான் கிடையாது நீதான் வந்து மோதுனே.. நீ எடு வண்டியை" என்று 2 வாகனங்களில் வந்தவர்களும் நடுரோட்டில் சண்டை போட்டுக் கொண்டிருக்க.. 3-வதாக ஒரு வாகனம் வந்து மோதியதில்.. புதுமாப்பிள்ளை இறந்துவிட்டார். வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் ஐசக் அய்யா.. 54 வயதாகும் இவர் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவரது 24 வயது மகன் ராஜன் விண்ணரசு.. கல்வி நிறுவனங்களில் தந்தை உதவியாக இருந்து வந்தவர்.கடந்த திங்கட்கிழமை தூத்துக்குடியில் ராஜனுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்தம் முடித்துவிட்டு, 2 கார்களில் சொந்த ஊருக்கு கிளம்பினர். விடிகாலை…
-
- 0 replies
- 1.1k views
-
-
கடற்கரையில் அநாகரீகமான முறையில் நடந்து கொண்ட 38 இளைஞர் யுவதிகள் கைது! சிலாபம் கடற்கரையினை அண்மித்த பகுதிகளில் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 38 இளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலாபம் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் அதிகமானவர்கள் பாடசாலை செல்லும் மாணவ, மாணவிகள் என தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வதற்காக கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது. http://athavannews.com/கடற்கரையில்-அநாகரீகமான-ம/
-
- 0 replies
- 467 views
-
-
அவுஸ்ரேலியாவில் காட்டு தீயால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிதி சேகரிக்க வித்தியாசமான முறையில் முயன்று அதில் வெற்றியும் பெற்றுள்ளார் அமெரிக்க மொடல் அழகி கெய்லன் வாட் (Keylen Ward)என்ற 20 வயது மொடல் அழகி. ஐந்தே நாட்களுக்குள் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை பாதிக்கபட்ட மக்களுக்ககாக திரட்டி உள்ளார். உதவி நிறுவனத்திற்கு 10 டொலர்களுக்கு மேல் வழங்கும் நபருக்கு தனது நிர்வாண போட்டோவை அனுப்பி வைப்பதாக உறுதியளித்து ஐந்து நாட்களுக்குள் ஒரு மில்லியன் டொலரை அந்த நிறுவனத்திற்கு திரட்டி கொடுத்துள்ளதோடு தான் உறுதியளித்தபடி உதவி செய்த நபர்களுக்கு தனது நிர்வாண போட்டோவை அனுப்பி தனது உறுதி மொழியை காப்பாற்றியும் உள்ளார். https://www.20min.ch/people/international/story/Model-Ka…
-
- 1 reply
- 491 views
-
-
உலகின் அதி குள்ள மனிதர் காலமானார்! உஅலகிலேயே அதிகம் குள்ளமான நேபாளத்தைச் சேர்ந்த ககேந்திரா உலகின் உயரத்தில் மிகவும் குள்ளமானவர் என ‘கின்னஸ்’ சாதனையில் இடம்பெற்றவரான நேபாளத்தைச் சேர்ந்த ககேந்திரா தாபா மகர் சுகவீனம் காரணமாக இன்று மரணமாநதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். ககேந்திரா 67.08 செ.மீ. (2′ 2.41″) உயரமும், 6 கி.கி. எடையுமுள்ள இவர் சளி சுரம் காரணமாக, அவர் வாழ்ந்து வந்த பொக்காரா என்னுமிடத்தில், மருத்துவமனையில் காலமானார். இறக்கும்போது இவருக்கு 27 வயது. இவரது மரணம் குறித்து கின்னஸ் உலக சாதனை நிறுவனம் அனுதாபம் தெரிவித்துள்ளது. ககேந்திராவுக்குப் 18 வயது ஆகும்போது, 2010 ம் ஆண்டு,…
-
- 0 replies
- 733 views
-
-
படத்தின் காப்புரிமை kovai police கோயம்புத்தூரில் ஒரு வாலிபர் பல்வேறு வீடுகளின் சுவர் ஏறி குதித்து படுக்கை அறையை எட்டிப்பார்ப்பதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. கோவை கவுண்டம்பாளையம் அருகே ஒரு வீட்டின் உரிமையாளர் தனது வீட்டின் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்த்துள்ளார். அதில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இரவு 10.30 மணிக்கு வந்து, வீட்டின் சுற்றுச்சுவரை ஏறி குதித்து படுக்கை அறை ஜன்னல் அருகே சென்று துணியை விலக்கி படுக்கை அறைக்குள் எட்டிப்பார்க்கும் வீடியோ காட்சி பதிவாகியிருந்தது. இதனால் அதி…
-
- 0 replies
- 495 views
-
-
கல்யாணமாகி ஒரு முத்தம் கூட இல்லை.. பக்கத்திலும் வரமுடியலை.. கடைசியில் பார்த்தால்.. அதிர்ச்சி ஆன முதும்பா! கம்பாலா: சில நேரங்களில் எப்படியெல்லாம் ஏமாற்றுக்காரர்கள் மோசடி செய்வார்கள் என்பதை கண்டுபிடிப்பதே கஷ்டமாக இருக்கும். எதிர்பார்த்திருக்கவே மாட்டோம்.. அப்படி ஒரு சம்பவம் உகாண்டா நாட்டில் நடந்திருக்கிறது.. அந்த சம்பவம் தந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் ஷாக்கில் இருக்கிறாராம் இந்த ஸ்டோரியின் நாயகன்! உகாண்டா நாட்டைச் சேர்ந்தவர் ஷேக் முகம்மது முதும்பா.. இவருக்கு 27 வயதாகிறது. இவர் ஒரு இமாம் ஆவார். இவருக்கு வீட்டில் பெண் பார்த்து கல்யாணம் …
-
- 4 replies
- 2.1k views
-
-
சிறுவர்கள், தலையினால் பந்தை அடிப்பதற்கு ஸ்கொட்லாந்தில் தடை கால்பந்து விளையாட்டில் ஈடுபடும் சிறுவர்கள் தலையினால் பந்தை அடிப்பதற்கு ஸ்கொட்லாந்து அரசாங்கம் தடை விதிக்கவுள்ளது. கால்பந்து விளையாட்டுக்கும் முதுமை மறதிக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த அச்சம் காரணமாகவே இந்தத் தடை நடைமுறைக்கு வரவுள்ளது. முன்னாள் கால்பந்து வீரர்கள் மூளைச்சிதைவு நோயால் இறக்கும் அபாயம் அதிகம் இருப்பதாகக் கண்டறிந்த அறிக்கை ஒன்று கடந்த ஒக்ரோபரில் வெளியானதையடுத்து சிறுவர்கள் தலையினால் பந்தை அடிப்பதற்கு தடை விதிக்கப்படவுள்ளது இந்த மாத இறுதியில் கால்பந்து பயிற்சியில் ஈடுபடவுள்ள 12 வயதுக்குட்பட்டவர்களுக்குத் தலையினால் பந்தை அடிப்பதற்கு தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. …
-
- 1 reply
- 520 views
-
-
பாலுணர்வு மிகுந்த 100 வயது ஆமை டீகோ: இனத்தை வளர்க்கும் பணி முடித்து காடு திரும்புகிறது 7 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைEPA Image captionநூற்றுக் கணக்கில் வாரிசுகளை ஈன்று நூறுவயது டீகோ. அதீத பாலுணர்வு மிக்க டீகோ என்ற ஆண் ஆமை, தன் இனத்தை அழியாமல் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு சுமார் 800 குஞ்சுகள…
-
- 21 replies
- 2.7k views
- 1 follower
-
-
டுபாயில் பணிபுரிய சென்ற இலங்கை இளைஞன், வீட்டு உரிமையாளரான 60 வயது பெண்மணியை காதல் வலையில் வீழ்த்தி, பெருந்தொகை நகைகளை சுருட்டிக் கொண்டு இலங்கை தப்பி வந்துள்ளார். குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதான அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீர்கொழும்ப பகுதியை சேர்ந்த 30 வயதான திருமணமாகாத இளைஞன் ஒருவர் டுபாய்க்கு பணிபுரிய சென்றுள்ளார். அங்கு, வீட்டு உரிமையாளரான 60 வயது மூதாட்டியுடன் காதல் வயப்பட்டுள்ளார். அந்த மூதாட்டி ஏற்கனவே திருமணமானவர். இருவரும் நெருங்கிப்பழகியுள்ளனர். மூதாட்டிக்கு தெரியாமல் அவரது மூன்றரைக் கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள், வெளிநாட்டு நாணயங்களை திருடிக் கொண்டு, இளைஞன் இலங்கை திரும்பியுள்ளார். இது தொடர்பான முறைப்…
-
- 0 replies
- 589 views
-
-
சீனாவில் தாழிறங்கிய வீதி: பிளவுக்குள் சிக்கிய பேருந்தில் இருந்த 6 பேர் உயிரிழப்பு! சீனாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தொன்று திடீரென வீதி தாழிறங்கியமையால் ஏற்பட்ட விபத்தில், 6 பேர் உயிரிழந்துள்ளதோடு 16பேர் காயமடைந்துள்ளனர். வடமேற்கு சீனாவின் கிங்காய் மாகாணத்தில் உள்ள ஜைனிங் நகரில் நேற்று (திங்கள்கிழமை) பிற்பகல் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நிறுத்தப்பட்டிருந்த பொதுப் பேருந்து, திடீரென ஒரு இடைவெளியில் குறித்த பேருந்து கவிழ்ந்து வெடித்தது. இதன்போது பேருந்தில் இருந்தவர்கள் குறித்த பிளவுக்குள் சிக்கிக்கொண்டனர். அருகிலிருந்தவர்கள் உயிருக்கு அஞ்சி தப்பியோடினர். இதுதொடர்பான காணொளி தற்போது வைரலாக பரவி வருகின்றது. எனினும், தீடிரென இந்த பிளவு ஏற்பட்டது …
-
- 0 replies
- 346 views
-
-
நிலவுக்கு செல்ல வாழ்க்கைத் துணை வேண்டும்: ஜப்பான் தொழிலதிபரின் வினோத அறிவிப்பு.! எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், நிலவுக்கு மனிதர்களை சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை வரும் 2023ஆம் ஆண்டு செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தில் முதன்முதலாக நிலவுக்குச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஜப்பானைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான யசுகு மசாவா. 44 வயதாகும் இவர் சமீபத்தில் தனது காதலியான அயமே கொரிக்கி என்பவரை பிரிந்தார். இதனைத் தொடர்ந்து, புதிய துணையை தேர்ந்தெடுக்க சுயம்வரம் ஒன்றை நடத்த உள்ளதாகவும், அதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தனது இணையதளத்தில் பதிவிட்டிருந்தார். “ தனிமை மற்றும் வெறுமை என்னை மெல்ல ஆட்கொண்டு வருகிறது.“ என அந்த…
-
- 0 replies
- 522 views
-