துளித் துளியாய்
தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்
துளித் துளியாய் பகுதியில் தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தாயக மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல் வேண்டும்.
தொண்டு, பரோபகாரம் என்பவை பற்றிய பொதுவான செய்திகள், கட்டுரைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அவை சமூகச் சாளரம் பகுதியில் இணைக்கப்படலாம்.
350 topics in this forum
-
புங்குடுதீவு - மகாவித்தியாலத்துக்கான மழை நீர் சேகரிப்பு தாங்கி மற்றும் அதற்கான கூரை மீழ் புனரமைப்பு வேலைகள் ஆரம்பம் மகாவித்தியாலய மழைநீர் சேகரிப்பு தாங்கி மீழ்புனரமைப்பு வேலைகள் தொடங்கி நடைபெறுகின்றது. இதில் அதிபரின் மதிப்பீட்டின் படி 180 000 ரூபா கேட்கப்பட்டதற்கிணங்க France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் இப்பணம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இது எமது ஊரின் நெடுநாள் சிக்கலான தண்ணீர் பிரச்சினை சார்ந்ததால் France - புங்குடுதீவு மக்கள் ஒன்றிய நிர்வாகம் இதற்கு முன்னுரிமை கொடுப்பதென தீர்மானித்து பணத்தை உடனடியாகவே அனுப்பி வைத்தது இங்கு குறிப்பிடத்தக்கது. …
-
- 6 replies
- 1.1k views
-
-
இனிய வாழ்வு இல்லத்தில் சிறப்புற இடம்பெற்ற கலை விழா! முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் சிறப்புற இயங்கி வருகின்ற மாற்றுத்திறனாளி பிள்ளைகளின் காப்பகமாக இருக்கின்ற இனிய வாழ்வு இல்லத்தின் மாபெரும் கலை விழா நிகழ்வு நேற்று காலை முதல் மிகவும் சிறப்பாக இடம்பெற்று நிறைவு பெற்று உள்ளது. இனிய வாழ்வு இல்ல சிறார்களின் கலை அம்சங்களை வெளிக்கொணரும் முகமாக இனிய வாழ்வு இல்ல நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த இந்த மாபெரும் கலை விழாவில் கலை விழா பரிசளிப்பு விழா இனியவள் என்கின்ற மலர் வெளியீட்டு விழா என்பன இடம்பெற்றன. http://www.hirunews.lk/tamil/picture-story/443
-
- 0 replies
- 504 views
-
-
முன்பு கோரைக்கிழங்கு புடுங்கப்போதல் பற்றி ஒரு பதிவிட்டிருந்தேன் - பெரிதாக விமர்சனக் கருத்தாடல்கள் வரவில்லை ।। திண்ணைக்கு புதிதாக வந்த சிறுவனுக்கு என்ன துடுக்கு என பெரியவர்கள் எண்ணியிருக்கக் கூடும் . அது போக , இன்றைய தினம் புதுவருடத்தில் இருந்து ஒவ்வொரு கிழமையும் 10 வெள்ளி வீதம் காலியாகிப் போன நெஸ்கபே டின் இல் சேமித்து வருவது என புது வருட தீர்மானம் போட்டு நடைமுறைப்படுத்தி இருக்கிறேன். சேமிக்கும் பணம் யாழ் திண்ணையில் பிரேரிக்கப்படும் ஏதாவது பொது வேலைத்திட்டத்திற்கு கிடைக்கக் கூடியதாக இருக்கும் ( சப்ஜெக்ட் டு கண்டிஷன்ஸ் ப்ரபோஸ்ட் எர்லியர் ) ஆர்வமுள்ளவர்களை சேர்ந்து கொள்ள அழைக்கிறேன் …
-
- 1 reply
- 1.1k views
-
-
அன்பான France வாழ் புங்குடுதீவு மக்களே வணக்கம் அண்மையில் France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் காலத்தின் தேவை கருதி ஒரு அவசர வேண்டுகோளை France வாழ் புங்குடுதீவு மக்களை நோக்கி விடுத்திருந்தது. அவ்வேண்டுகோள் France வாழ் புங்குடுதீவு மக்களை சென்றடைய அவர்கள் சார்ந்த விழாக்கள் கொண்டாட்டங்கள் மற்றும் விளம்பரப்படுத்துதல் ஊடாக முயற்ச்சித்தது. அதனைத்தொடர்ந்து எம்மிடம் பதிவிலுள்ள 300 க்கு மேற்பட்ட அங்கத்தவர்களின் விலாசங்கள் மீண்டும் தொலைபேசி அழைப்பினுடாக சரி பார்க்கப்பட்டு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 27-01-2019 இல் ஒரு விசேச கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டு அதன் நிகழ்சி நிரலும் இதனுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் France வாழ் புங்குடுத…
-
- 6 replies
- 1.7k views
-
-
பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் வெள்ளநிவாரண உதவி வடக்கு மாகாணத்தில் தொடர்ந்த அதிகளவு மழைவீழ்சியினால் ஆயிரக்கணக்கான மக்கள் தமது வீடுவாசல்கள் பாதிப்படைந்த நிலையில் பொது இடங்களில் தங்கியுள்ளதினை நீங்கள் அறிவீர்கள். அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் களத்தில் நின்று உதவி வரும் IBC தமிழ் ஊடக நிலையத்தினூடாக ருபா மூன்று இலட்சம் (300000) பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் புலன் பெயர் தமிழ் மக்களின் அமைப்புக்கள் இப்பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டுகின்றோம். http://www.pungudutivu.fr/2018/12/blog-post.html?spref=fb&fbclid=IwAR2JEg54LdD5nPmN_…
-
- 5 replies
- 1.6k views
-
-
முன்னாள் போராளிக்கு புலம்பெயர் உறவுகளால் வாழ்வாதார உதவி! வடக்க மாகாணம் முழுவதும் மாவீரர் தினத்தையொட்டி முன்னாள் போராளிகளுக்கும், மாவீரர்களின் குடும்பங்களுக்கும் பல்வேறு உதவித் திட்டங்கள் மற்றும் வாழ்வாதார உதவிகள், சுய தொழில் உபகரணங்கள் என்பன பொது அமைப்புக்களாலும் புலம்பெயர் உறவுகளாலும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், நாச்சிக்குடா பிரதேசத்தைச் சேர்ந்த தனது இரண்டு கால்களையும் இழந்த முன்னாள் போராளிக்கு வாழ்வாதாரத்தை கொண்டுநடத்துவதற்கான படகு மற்றும் இயந்திரம் என்பன நேற்று (சனிக்கிழமை) மாலை வழங்கப்பட்டன. இறுதி யுத்தத்தின் பின்னர் தமது இரண்டு கால்களையும் இழந்த நிலையிலும் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக வேறு ஒருவருடன் கூலித் தொழிலாளியாக கடற்தொழிலில் ஈடு…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஏழை குடும்பத்திற்கு செல்வம் அடைக்கலநாதனால் வீடு வழங்கி வைப்பு வவுனியா ஆச்சிபுரத்தில் வசித்து வரும் ஏழை குடும்பத்திற்கு பாராளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனால் இன்று வீடு கையளிக்கப்பட்டது. முன்னர் வசித்து வந்த வீடு மண்ணினால் கட்டப்பட்ட மழைக்கு இடிந்து விழும் நிலையில் காணப்பட்டமையினால் அம்மா அறக்கட்டளை மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஜேர்மன் மகளீர் அமைப்பினரின் ஒரு இலட்சத்தி ஜம்பதாயிரம் ரூபா நிதியில் இவ் தற்காலிக வீடு அமைக்கப்பட்டது. குறித்த வீட்டினை பயனாளிக்கு கையளிக்கும் இந் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், வவுனியா தெற்கு பிரதேச சபையின் தலைவர் து. நடராஜசிங்கம் , முன்னாள் வடமா…
-
- 1 reply
- 788 views
-
-
பிறரிடம் கையேந்தும் நிலையில் உள்ள மாவீரர் குடும்பம்! போராடும் போது பலியாகிப்போன மகன். இறுதி யுத்தத்தில் எறிகணை வீச்சுக்கு மனைவியும் பலி. சுகமில்லாத மகன். 'பிறரிடம் கையேந்துவதைத் தவிர வேறு வழி இல்லை' என்று கூறி அழும் ஒரு மாவீரரின் தந்தையின் சோகத்தை பதிவிட்டுள்ளது ஐ.பீ.சி. தமிழின் இந்த 'உறவுப் பாலம்' நிகழ்ச்சி: எமது தாயகத்தில் அல்லல்படுகின்ற எமது உறவுகளின் வாழ்வில் ஐ.பீ.சி. தமிழுடன் இணைந்து ஒளியேற்ற விரும்புகின்றவர்கள் தொலைபேசி ஊடாக தொடர்புகொள்ளலாம். தொடர்பு இலக்கம் : 0094 21 203 0600
-
- 0 replies
- 794 views
-
-
புலம்பெயர் தமிழர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஒரு வீடியோ!! தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளின் அவலங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவது மாத்திரமல்லாமல், அந்த அவலங்களில் இருந்து அவர்களை மீட்கும் ஒரு நோக்கத்திற்காகவென்று ஐ.பீ.சி. தமிழ் தொலைக்காட்சியினால் உருவாக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சிதான் உறவுப் பாலம். புலம்பெயர் உறவுகளின் அமோக ஆதரவையும், அனுசரனையையும் பெற்றுள்ள இந்த நிகழ்ச்சி வாராவாரம் ஞாயிற்றுக் கிழமைகளில் பிரித்தானிய நேரம் இரவு 8.30 மணிக்கு ஐ.பீ.சி. தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றது. எமது தாயகத்தில் அல்லல்படுகின்ற எமது உறவுகளின் வாழ்வில் ஐ.பீ.சி. தமிழுடன் இணைந்து ஒளியேற்ற விரும்புகின்றவர்கள் இந்த தொலைபேசி இலக்கத்தை த…
-
- 1 reply
- 939 views
-
-
மாலதி படையணி போராளியின் இன்றைய அவல நிலை!! தூக்கிவிடுவார்களா புலம்பெயர் தமிழர்கள்?? 15 வருடங்களாக போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் போராளியின் இன்றைய வாழ்க்கை, அவளுக்கு மட்டுமல்ல அவளைப் பார்ப்போருக்கும் கண்களில் கண்ணீரை வரவளைக்கின்றது. புதுக்குடியிருப்பில் ஒரு ஓலைக்குடிசையில் வறுமையின் உச்சத்தில் வாழ்க்கை நடாத்திக்கொண்டிருக்கும் அந்தப் பெண்ணை சந்தித்தது ஐ.பீ.சி. தமிழின் உறவுப்பாலம் நிகழ்ச்சிக் குழு. இதய பலவீனம் உள்ளவர்கள் தயவுசெய்து இந்த ஒளியாவனத்தை பார்க்கவேண்டாம். இந்தப் பெண்ணுக்கு உதவ விரும்புகின்றவர்கள் பின்வரும் தொடர்பிலக்கத்தில் தொடர்புகொள்ளலாம்: 0094212030600 https://www.ibctamil.com/lifestyl…
-
- 0 replies
- 1k views
-
-
காடுமண்டிய ஓர் பின்தங்கிய கிராமத்தில்தான் அந்தக் காப்பகம்! உலகத் தமிழர்களின் கவனத்திற்கு!! ஐ.பி.சி தமிழ் மாதாந்தம் முன்னெடுக்கும் ’உயிர்ச் சுவடு’ எனும் அறப்பணிச் செயற்திட்டத்தின் மூன்றாம் பாகம் இன்றைய நாள் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வன்னேரிக்குளம் யோகர் சுவாமிகள் திருவடி நிலைய முதியோர் காப்பகத்தில் இடம்பெற்றது. இதன்படி ஐ.பி.சி தமிழின் தாயகக் கலையக பணியாளர்கள் குறித்த முதியோர் காப்பகம் சென்று அங்குள்ள முதியோருடன் மகிழ்ச்சிகரமான ஒரு ஊடாட்டத்தினை மேற்கொண்டனர். குறித்த காப்பகத்தில் சமையல் செய்து முதியவர்களுடன் பரிமாறி பல்வேறுபட்ட ஆற்றுப்படுத்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. கடந்த 1998 ஆம் ஆண்டிலிருந்து பராமரிக்கப்பட்டுவரும் க…
-
- 0 replies
- 865 views
-
-
-
வறிய மாணவர்கள் 80 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு…. ஜேர்மனியில் வாழும் புலம்பெயர் தமிழ் இளையோர் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக புலரும் பூபாளர் 2018 ஜேர்மனி என்னும் திட்டத்தின் மூலம் திட்டப்பட்ட நிதியிலிருந்து தாயகத்தில் வாழும் வறிய மாணவர்கள் 80 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஊடாக வழங்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால், கௌதாரிமுனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் மேற்படி உதவிகள் வழங்கப்பட்டது. http://globaltamilnews.net/2018/91478/
-
- 1 reply
- 829 views
-
-
சுவிஸ்வாழ் இலங்கையரின் மனிதாபிமான செயல்! சுவிஸில் இருக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வாமதேவன் தியாகேந்திரன் என்பவர் தனது சொந்த நிதியில் வடக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணியுடன் 1000 வீட்டுத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வடக்கில் எவருமே முன்னெடுக்காத காரியத்தை இவர் கையில் எடுத்துள்ளார். இதன் முதற்கட்டமாக 60 பயனாளிகளுக்கான வீட்டுத்திட்டத்திற்கான காணிகளை யாழ்.கோப்பாயில் வாங்கியுள்ளார். பயனாளிகளைத் தெரிவு செய்து விரைவில் 60 பேருக்கான வீட்டுத்திட்டத்தை வழங்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து ஏனைய இடங்களில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டத்தை வழங்குவதற்கான காணிகளை தெரிவுசெய்து வாங்கும் செயற்பாட்டில் இறங்கியு…
-
- 10 replies
- 1.4k views
-
-
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு புலம் பெயர் உறவுகளால் இதய நோய் சிகிச்சை கருவிகள் அன்பளிப்பு(படங்கள்) கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 8.6 மில்லியன் ரூபா பெறுமதியான இதயநோய் சிகிச்சை கருவிகள் புலம் பெயர் உறவுகளால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது. அதி நவீன எக்கோ இயந்திரம், இதய நோய் சிகிசை இயந்திரங்கள் என்பன அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது. லண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலய நிர்வாகத்தினரும், புலம்பெயர் உறவான வரதராஜன் என்பவரும் லண்டன் யுளளளைவ சுசு அமைப்பும் இணைந்து 8 மில்லியன் பெறுமதியான இவ் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளனர். இதில் வரதராஜன் என்பவரின் நிதி உதவியில் அதி நவீன எக்கோ இயந்திரத்தினை ஆறு மில்லியன் ரூபாவுக்கு வழங்கி…
-
- 3 replies
- 860 views
-
-
தமிழர் தாயகத்தின் முதலாவது கைத்தொழில் பேட்டை யாழ். கோப்பாயில் திறந்துவைப்பு ஐ.பி.சிதமிழின் அனுசரணையுடன் நிர்மாணிக்கப்பட்ட வட கிழக்கின் முதலாவது கைப்பணித் தொழிற்பேட்டைஇன்று ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்கோப்பாய் வடக்கு இலகடி என்ற பகுதியில் இந்த கைத்தொழில் பேட்டை, தாயக நேரப்படி இன்றுகாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இந்த கைத்தொழில் பேட்டையில் 30 பேர் தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுள்ளதுடன்,மூன்று மாதங்களில் 100 பேருக்கான வேலைவாய்ப்புக்கள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன. நவீனஇயந்திரங்களுடன் கூடிய இந்த கைத் தொழில் பேட்டையில் சித்திரம், தையல், புடைப்புச் சித்திரம்,கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படு…
-
- 1 reply
- 1.3k views
-
-
முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்திற்கான வேலை திட்டம் யாழில் விரைவில்! தமிழீழ விடுதலை புலிகள் இயக்க முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரம், பொருளாதாரம், வாழ்க்கை தரம், சுய தொழில் வாய்ப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துகின்ற பாரிய வேலை திட்டம் ஒன்றை யாழ்ப்பாண மாவட்டத்தை மையமாக கொண்டு விரைவில் ஆரம்பிக்க உள்ளதாக இலங்கை மக்கள் நலன்புரி ஸ்தாபனத்தின் தலைவி வதனி மோகனசங்கர் அம்மையார் தெரிவித்தார். வதனி மோகனசங்கர் தனது 24 ஆவது திருமண ஆண்டு நிறைவை ஒட்டி வறிய, போரால் பாதிக்கப்பட்ட, பெண் தலைமைத்துவ குடும்பங்களை சேர்ந்த 15 பயனாளிகளுக்கு சுய தொழில் மேம்பாடுக்காக நேற்றையதினம் (28-03-2018) தையல் இயந்திரங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் கலந்துக…
-
- 3 replies
- 1.2k views
-
-
கனடாவிலிருந்து யாழில் தொழிற்சாலை அமைத்த ஒருவர்
-
- 12 replies
- 1.5k views
-
-
இப்பணமானது யாழ் இணைய உறுப்பினர்கள் வாசகர்கள் மற்றும் யாழ் இணையத்தின் விளம்பரப் பணம் என அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு வாசம் உதவும் உறவுகள் மூலம் ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவில் கணவனை இழந்து குடும்ப சுமைகளை தாங்கிய தாய்மார்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக 20 குடும்பங்களுக்கு கோழிக் கூடும் நாட்டுக் கோழி குஞ்சுகளும் வழங்கப்பட்டு அதனை பராமரிக்கின்ற பயிற்சியும் மிருக வைத்தியர் ஊடாக ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளது
-
- 14 replies
- 4.7k views
-
-
வறுமையின் கோரப்பிடியில் சிக்கி மீள முடியாமல் தவிக்கும் குடும்பம்
-
- 0 replies
- 602 views
-
-
ஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்! இது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளியும் தற்போது பல்கலைக்கழக மாணவனாக கல்வி பயிலும் ஒருவரின் வீடு. எங்களுக்காக போராடிய ஒரு போராளியின் வீடு இது. அண்மையில் பூநகரி கறுக்காய் தீவு பகுதிக்குச் சென்றபோது இந்த முன்னாள் போராளி மாணவனை சந்திக்க முடிந்தது. சத்தமில்லாது, சாதனை பயின்ற இந்த சாதனையாளரின் முகத்தில் அப்பியிருந்த வேதனைதான் முகத்தில் அறைந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக இருந்த இவர், போரின் இறுதியில் இலங்கை அரச படைகளால் கைது செய்யப்பட்டு, தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார். தடுப்பு முகாமில் இருந்த காலத்தில் தனக்குக் கிடைத்த…
-
- 0 replies
- 928 views
-
-
தாயக உறவுகளுக்கு உதவும் பிரென்சு மனிதநேய அமைப்பு ! தாயக உறவுகளுக்கு உதவும் பிரென்சு மனிதநேய அமைப்பு ! பிரான்சை தளமாக கொண்டு இயங்கும் அதிசயம் Chiromission அமைப்பு தாயகத்தில் மனிதநேயப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது தமிழர் தாயகத்தில் முகாமிட்டுள்ள இந்த அமைப்பினர், நரம்பு மற்றும் தசை பிரச்சனைகளுக்கு உள்ளாகியுள்ள உறவுகளுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர். தாயகத்தின் வேலணை, உரும்பிராய், கைதடி, முல்லைத்தீவு, வல்லிபுரம் ஆகிய பகுதிகளில் நடமாடும் சேவையினை இந்த அமைப்பினர் சமீபத்தில் நடாத்தியிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது. https://news.ibctamil.com/ta/internal-affai…
-
- 0 replies
- 763 views
-
-
கிளிநொச்சி பாரதி புரத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உறவுகளை இழந்த பிள்ளைகளின் கல்வியினை மேம்படுத்தும் நோக்கில் எஸ்.கே.அறிவுச்சோலை SKT உரிமையாளரால் இன்று வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. 1991ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பாதுகாப்பிற்காக இயங்கிய அறிவுச்சோலை இல்லம் யுத்தம் காரணமாக முழுமையாக அழிவடைந்தது. மேற்படி இல்லத்தை மீளவும் இயக்குவதற்கு நீண்ட காலமாக பலரும் முயற்சிகள் மேற்கொண்டனர். இதன் பயனாக இன்று முதல் மீண்டும் கிளிநொச்சியில் எஸ்.கே.அறிவுச்சோலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று ஒன்பது மணியளவில் ஆரம்பமாகிய இந்த நிகழ்வில் பாராளுமன்ற உ…
-
- 3 replies
- 1.8k views
-
-
ஜேர்மன் ’உதயம்’ தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வாழ்வாதார உதவி! ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த வாழ்வாதார உதவிக்கான பொருட்கள் மற்றும் ஆடு வளர்ப்பிற்கான ஆடுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் வாகரை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கதிரவெளி புச்சாக்கேணி பிரதேசத்தில் அந்நிறுவனத்தின் கிழக்கு மாகாண செயற்பாட்டாளர் எம்.டிலான் தலைமையில் நடைபெற்றது. இதன் போது புச்சாக்கேணி பிரதேசத்தில் கடந்த கால போரினால் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டின் வாழ்கின்ற தெரிவு செய்யப்பட்ட குடும்பத்தின் வாழ்வாதார மேம்பாடுக்கான 50 ஆயிரம் ரூபா செலவிலான கடை அபிவிருத்திக்கான பொருட்களும் ஆடு வளர்ப்பிற்காக 50 ஆயிரம் ரூபா செலவில் நான்கு ஆடுகளும் வழங்கி வ…
-
- 0 replies
- 549 views
-
-
பிரிட்டன் தொண்டு நிறுவனத்தால் 543 பேருக்கு சைக்கிள் அன்பளிப்பு லண்டன் – இலங்கை மீள்குடியேற்றம் மற்றும் மறுமலர்ச்சி நிதியத்தின் ஏற்பாட்டில் லண்டனைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்தால் யாழ்ப்பாணத்தில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களுக்கு 543 சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன. இந்தத் திட்டத்தில் முதற்கட்டமாக 143 சைக்கிள்கள் இன்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலரிடம் கையளிக்கப்பட்டன. “பிரிட்டன் மக்களால் பாவிக்காது கைவிடப்பட்ட சைக்கிள்கள் சேகரிக்கப்படுகின்றன. அவை பிரிட்டன் சிறைகளில் இருக்கும் தொழில்திறன் கொண்ட கைதிகளிடம் வழங்கப்பட்டு சீரமைக்கப்படுகின்றன. அந்தச் சைக்கிள்களே யாழ்ப்பாணத்தில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படுக…
-
- 0 replies
- 395 views
-