Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நினைவு

மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.

  1. படைத்துறை வரைபடத் தளபதி பிரிகேடியர் சசிக்குமார்! பன்னாட்டு சதிகளும் – சிறிலங்கா இராணுவமும் இணைந்து மேற்கொண்ட தமிழின அழிப்பிற்கு எதிராக களமாடி நின்றவேளை…., சிறிலங்க இரானுவத்தின் எறிகணைத் தாக்குதலில் விழுப்புண்ணடைந்தும், முறியடிப்புத் தாக்குதல் சம்பவத்திலும் 15.05.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் படைத்துறை வரைபடத் தளபதி பிரிகேடியர் சசிக்குமார் ஆகிய மாவீரரின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவராக விளங்கிய சசிக்குமார் “சசி மாஸ்டர் “என்று அழைக்கப்படும் பிரிகேடியர் சசிக்குமார் அவர்கள், 15.05.2009 …

  2. மேஜர் கலாநிதி ஆழியவளையிலிருந்து எழுந்த அலைமகள் கடற்புலி மேஜர் கலாநிதி; ஒரு போராளியின் புனிதப் பயணம். இமயம் முதல் குமரி வரையும், கங்கை தொடக்கம் கடாரம் வரையும் எட்டுத் திக்குகளிலும் வெற்றிக்கொடியைப் பரப்பி விட்டவன் தமிழன். ஆட்சியுரிமையோடு ஆசியாவில் வாழ்ந்து இந்துமாகடலின் ஆளுகையை தனது முழுக்கட்டுப்பாட்டில் வைத்து அதற்கு சொந்தம் கொண்டாடியவன் எமது முப்பாட்டன் சோழன். இதனால் உலகில் முதல் கப்பல் படையை நிறுவி கடலில் படை நடத்தியவனும் தமிழன் என்பது உண்மை வரலாறாகும். இவ்வாறு பெருமைகொண்ட தமிழினம் சொந்த நாடின்றி, சொந்த கடல்வளமின்றி, இருப்புக்கு இடமின்றி, நாதியற்று, நாடு நாடாக அலையும் நிலையில், தன்மானமிழந்து பணலாபம் கொண்டு வக்கற்ற வாழ்வில், திக்கற்ற இலக்கில் இன…

  3. பிரபாகரன் வழங்கிய ஆவணங்களுடன் மகனைத் தேடிய தாய்: முன்னாள் போராளிகள் ஆறுதல்! தமிழீழ விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்ட முக்கிய ஆவணங்களுடன் தனது மகனது புகைப்படத்தினைத் தாயொருவர் தேடியலைந்த சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வீரச்சாவடைந்த மாவீரர்களின் உருவப் படங்களை அவர்களது பெற்றோருக்கு வழங்கி கௌரவிக்கும் நிகழ்வொன்று நேற்று (சனிக்கிழமை) ஜனநாயகப் போராளிகள் கட்சியினால் மட்டக்களப்பு வெல்லாவெளியில் நடத்தப்பட்டது. இதனையறிந்த மாவீரரின் தாயொருவர் வீரச்சாவடைந்த தனது மகனது பிரபாகரன் வழங்கிய முக்கிய ஆவணங்களுடன் மகனின் புகைப்படத்தைக் காண குறித்த நிகழ்விற்கு ஓடிவந்தார் அந்த வயது முதிர்ந்த தாய். இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்கா…

  4. அமரர் துரைரத்தினம்- இவரின் வாழ்க்கையை நீங்கள் அறிந்ததுண்டா? சொத்து சுகபோக வாழ்க்கை என அலையும் தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் சொத்து என்று எதையும் சேர்க்காது தனது மிகப்பெரும் சொத்தாக இருந்த இரு பிள்ளைகளை விடுதலைப்போராட்டத்திற்கு கொடுத்து விட்டு இறுதிக்காலத்தில் ஆச்சிரமத்தில் இருந்து காலமானவர்தான் பருத்தித்துறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரத்தினம். தமிழ் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கல்வி கற்கிறார்கள் என பரவலான குற்றச்சாட்டு காணப்படுகிறது. இந்த காலத்தில் சொத்து சேர்க்காத அரசியல்…

    • 2 replies
    • 1.6k views
  5. கார்த்திகை 27 - மாவீரர் நாள் பிள்ளைகள் துயிலும் கல்லறைகளுக்கு நெய்விளக்கேற்றும் திருநாள். உள்ளே உடல் வியர்த்துக் கிடப்பவரை மனதால் வெளியே தூக்கி மெய் கழுவி வாசம் பூசி முத்தம் பொழிந்து மீண்டும் குழிவைப்பதான பாவனையில் சுற்றம் சூழும் பெருநாள். தெய்வங்களுக்குப் படைப்பதில்லையே தவிர வரம் கேட்டு வணங்கும் நாள். நீண்ட விதைவயலின் வரிசையில் கூடி நிற்கும் சுற்றத்துக்கு அவர்கள் குரல்கேட்கும் தினம். பத்துமாதம் சுமந்து பகலிரவாய்க் கண்விழித்து அமுத முலைகொடுத்து தூக்கிச் சுமந்தவர் முன்னே அவர்கள் விழிதிறக்கும் நாள். பெற்றவளின் முன்னே பெரிதாய் நெடிதுயர்ந்து அம்மா என அழைப்பார்கள். அந்த ஒற்றைச்சொல் போதுமே சுமந்தவள் மெழுகாய் உருக. விதைத்த…

  6. போராட்ட வரலாற்றில் என்றும் எங்களுடன் சாள்ஸ்! 2008 ஆம் ஆண்டின் முதல் வார நாட்கள். தீவிர மோதல்களால் மன்னார் களமுனை அதிர்ந்துகொண்டிருந்த காலம். தளபதி பாணு அவர்களைச் சந்திக்க விரும்பியிருந்தேன். மன்னாரில் எமது வழமையான பணிகளுடன், போகுமிடத்தில் பாணுவையும், களநிலவரத்தையும் கண்டு வரலாம் என்ற விருப்புடனான பயணம். பயணத்திட்டத்தை முறைப்படி தலைவருக்கு முன்வைக்கும் சந்திப்பு. தலைவரின் புருவம் உயர்கின்றது. ~இப்ப மன்னாருக்கு ஏன் போகவேண்டும்? ” நீ இப்போது அங்கு போய் என்ன செய்யப்போகின்றாய்?” தனது வழமையான கேள்விகளுக்கான பதில்களுடன் எமது தயார் நிலையைக் கண்ணுற்ற தலைவர் கூறுகின்றார். மன்னார் களமுனையின் பின்னணியில் எதிரியின் சிறப்பு அணிகள் நிலையெடுத்துள்ளன. பிரதான வீதிகளினூடான பயணம…

  7. லெப். கேணல் சந்திரன் வன்னியின் முழுநிலவு” வன்னிப் பிராந்திய அரசியல்த்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் சந்திரன். சந்தின், உன்னை நாங்கள் மறந்து விட்டோமா? இல்லை. அது எங்களால் முடியாது.உன்னை மட்டுமல்ல, உன்னைமாதிரி இந்த மண்ணை நேசித்து, இந்த் மண்ணுக்கு உயிர் தந்த எவரையுமே எங்களால் மறக்க முடியாது. சந்திரன், உன்னை – உனது உணர்வுகளை மறக்கமுடியாமல் நாங்கள் மட்டுமா தவிக்கிறோம்? இல்லை. புதரிகுடாவில் காற்சட்டை இல்லாமல் உன்னைக் கண்டதாகவும் சிறுசுகளும், பொன் நகரிலும் முள்ளியவளையிலும் உரலுக்குள் பாக்கிடித்தபடியே விழிகளால் உன்னைத் தேடும் கிழவிகளும், களைத்து விழுந்துவரும் உன்னைத் தடவி உற்சாகமாக வழியனுப்பும் நிழல்மரங்களும் உன்னைக் காணாமல், உன்னை விழ…

  8. லெப். கேணல் தேவன்.! Last updated Mar 28, 2020 இரவின் இருள் சூழ்ந்த நேரம். படைக் காப்பரணில் வெளிச்சம் தெரிகின்றது. அணி நகர்ந்துகொண்டிருந்தது. அந்த அணிக்குள் தேவன் மட்டுமல்ல அவனது ஒன்றரை அகவை நிரம்பிய குழந்தை, அவனது மனைவியென அவனது குடும்பமே நகர்ந்துகொண்டிருந்தது. வவுனியா படை வல்வளைப்புப் பகுதியிலிருந்து படைக் காவலரணை ஊடறுத்து வன்னி நோக்கி இரகசியமாக அவர்கள் வந்துகொண்டிருந்தார்கள். படையினரின் காப்பரண் வரிசையைக் கடக்கும்போது சத்தமில்லாமல் கடக்கவேண்டும் அப்போது ஏதும் அறியாக் குழந்தை சத்தமிட்டால் நிலைமை விபரீதமாகிவிடும். அதனால் ஏற்கனவே குழந்தையை ஆழ்ந்து உறங்கச் செய்திருந்தார்கள். ஆனாலும் இராணுவ வேலியைக் கடக்கவிருந்த வேளையில் வெளிச்சத்தைக் கண்டவுடன் குழந்தை விழித்துக்கொள்க…

    • 2 replies
    • 1.1k views
  9. லெப். கேணல் பிறையாளன் அவன் ஒரு புதுமையான மனிதன் ‘லெப். கேணல் நவம் அறிவுக்கூட நிர்வாகப் பொறுப்பாளர்’ லெப். கேணல் பிறையாளன் / சுட்டா 24.09.2005 அன்றைய நாளின் காலைப்பொழுது. லெப்.கேணல் நவம் அறிவுக் கூடத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருந்தது. மனதில் தயக்கம் யாருக்கு என்ன நடந்தது? போராளிகளின் முகங்கள் இருண்டு கிடந்தன. சுட்டா அப்பா வீரச்சாவாம். அந்த வார்த்தைகள் உள்நுழையும் முன்னரே அடுத்து எதுவும் செய்யத் தோன்றவில்லை. அப்பாவைப் பிரிந்த பிள்ளைகளைப்போல எல்லோரும் தவித்துப்போனோம். ஏனென்றால் எங்களுக் கெல்லாம் அப்பாவாகவே அவன் இருந்தான். அந்த நினைவுகளைத்தான் இந்தக் குறிப்பு சொல்ல முனைகின்றது. சுட்டாவின் தொடக்ககால வாழ்க்கையே துயர…

  10. வெளியில் தெரியாத வேர் கேணல் மனோ மாஸ்டர் அவர்களின் வீரவணக்க நாள் April 29, 2021 கதிரவேல் சந்திரகாந்தன்-திருகோணமலை- கேணல் மனோமாஸ்டர் 1983 இல் தமிழீழ விடுதலைப் போரில் தன்னை இணைத்துக் கொண்டவர்.இந்திய மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சிபெற்ற அவர் அங்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறைச் செயலகத்தில் பணியாற்றினார்.இந்திய படையினரின் ஆக்கிரமிப்பு நாட்களில் மணலாற்றில் பயிற்றுவிப்பு செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.1989 இல் மட்டக்களப்பு அம்பாறை பிராந்தியங்களில் படைத்துறை பயிற்சி நடவடிக்கைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.போராளிகளை சிறந்த போரிடும் ஆற்றல் கொண்ட வீரர்களாக வளர்த்தெடுப்பதில் மட்டுமன்றி அவர்களை அறிவியல் ரீதியிலும் வளர்க்க வேண்டும் என்ப…

  11. பண்டாரவன்னியனின் பொற்கால்கள் களையாற நடந்த கரையோரம் பண்டாரவன்னியன் பொற்கால்கள் களையாற நடந்த கரையோரக் கடலில் கரும்புலித் தாக்குதல் 03.09.1995 கடற்கரும்புலிகள் மேஜர் நகுலன், மேஜர் கண்ணாளன் பண்டாரவன்னியனின் பொற்கால்கள் களையாற நடந்த கரையோரம். கடல் தரையோடு கைகோர்க்கும் ஒரு நெய்தற் கிராமம். புரட்டாசி 3ம் நாளின் கருக்கல் பொழுது. நிலவற்ற வான் எதுவும் மின்னுதலற்ற ‘றாடார்‘ திரை. அலைகடல் கடந்து அரசாட்சி படர்ந்த சோழப் பேரரசனின் கொள்ளுப் பேரர்கள் நீலவரிப் படகுகளை நீருக்குள் இறக்கினர். சுடுநீர்ச் சுரப்பிகளை முடியில் தரித்து தேசத்திற்கு மகிமையளிக்கும் தலைநகர் கடந்து….. மீன்பாடுகின்ற ஒரு கரையோரக் கிராமத்தில் தரையேறும் பயணம். ‘கண்ணாளனின்’ தோள்களில் தட்டி ‘நகுலன…

  12. உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கி அடி ஆழங்கொண்ட நீர்ப்பரப்பில் நிலைகொண்டிருந்த வடபகுதித் தலைமையகக் கப்பலை தகர்த்தெறிந்த முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 19 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் ( 16-08-2013கடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி . உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம். சாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருடன் ஓடிப்பிடித்து விளையாடத் தோன்றும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடவென கரைக்கு வந்த பெண் புலிகளின் மனம் ஏழைகளின் கண்ணீரில் இளகியது. அனுதாபத்துடன் அந்த மக்களின் நிலையைப் பற்றித் தமக்குள் பேசிக்கொண்…

  13. தலைவரின் திட்டத்தை, செவ்வனே செய்து முடித்த லெப் .கேணல் நிர்மா On Apr 28, 2020 “இந்தக் கோட்டையில் என்று புலிக்கொடி பறக்கின்றதோ அன்றுதான் எமக்கு விடிவு பிறக்கும்” லெப். கேணல் திலீபனின் உரையைச் சுமந்த காற்று கோட்டையிலே கம்பீரமாக பறந்து கொண்டிருந்த புலிக்கொடியைத் தழுவி வீசியது. மகிழ்ச்சி, பெருமிதம், இன்னும் இனம் புரியாத உணர்வுகள் எல்லாம் கலந்த ஒரு உணர்வில் தமிழர்கள் ஊறிப்போயினர். ‘ஜீவன்’ கானகப் பாசறை வெற்றியைக் கொண்டாடியது. லெப். கேணல் மாதவி (பின்நாட்களில் கடற்புலிகள் மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி) யிடம் படையியற் பயிற்சியைப் பெற்றுக் கொண்டிருந்த மகளிர் படையணியின் அந்த அணிக்கு, தாம் பயிற்சி முடித்துப் போய் அடித்துத்தான் கோட்டையைப் பிடிப்போம் என்று சொல்லிச் சொல்…

  14. லெப். கேணல் ஜீவன் டிசம்பர் 6, 2020/தேசக்காற்று/வீரத் தளபதிகள்/0 கருத்து ஜீவனுள்ள நினைவுகள்… “மட்டக்களப்பு – அம்மாறை மாவட்ட துணைத் தளபதி” தளபதி லெப். கேணல் ஜீவன். கையெட்டும் தூரமே கண்ணுக்குத் துலங்காத மைசொட்டும் இரவு. உடலெங்கும் உரிமையோடு கைபோட்டிருக்கும் முட்செடிகள். கொழும்பு ரோட் (மட்டு – கொழும்பு நெடுஞ்சாலை ) அண்மித்து விட்டதால் காலணிகள் கைக்கு ஏறுகின்றன. ரைபிள் சிலங்குகள் சலசலக்காது இறுக்கிப்பிடிக்கப்படுகின்றன. ஆபத்தை தவிர்க்கும் அளவிற்கு அவசியமான இடைவெளி விட்டு முன்னே செல்பவரின் சிறு அரவத்தைக் கொண்டு திசையறிந்து பின் செல்வதே ஒரு கலை. தென்ஈழக் காடுகளிலே இந்தக் கலைதான் அவசியமான அரிச்சுவடி. கத்திவெட்டுப் போல் ஒரு நகர்வு… …

  15. தமிழீழ தாயக விடுதலைப் போரில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் வீரவணக்க திருவுருவப்படங்கள் அவர்கள் வீரச்சாவைத் தழுவிய நாட்களில் இப்பக்கத்தில் அவர்களின் பதிவு செய்யப்படும். (படங்களிற்கு கீழேயுள்ள இணைப்பில் சென்று அம் மாவீரர் தொடர்பான மேலதிக விபரங்களைப் பார்க்கலாம்) சனவரி 3ம் நாளில் மடிந்த மாவீரர்களின் ஒளிப்படங்கள் http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist?view=maaveerarlistdetails&Itemid=118&cid=14640 http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist?view=maaveerarlistdetails&Itemid=118&cid=14641 http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist?view=maaveerarlistdetails&Itemid=118&…

    • 2 replies
    • 7.2k views
  16. லெப். கேணல் பொன்னம்மான் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். லெப். கேணல் பொன்னம்மான் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். யாழ். மாவட்டம் கைதடிப் பகுதியில் எதிர்பாராமல் ஏற்பட்ட வெடிவிபத்தின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மூத்த தளபதி லெப். கேணல் பொன்னமான், தென்மராட்சி பொறுப்பாளர் மேஜர் கேடில்ஸ், விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு, லெப்.சித்தார்த்தன், 2ம் லெப். பரன், வீரவேங்கை ஜோகேஸ், வீரவேங்கை குமணன், வீரவேங்கை அக்பர், வீரவேங்கை கவர், வீரவேங்கை தேவன் ஆகிய மாவீரர்களின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். யாழ். மாவட்டம் நாவற்குழி படைமுகாம் மீதான தாக்குதலுக்கு 14.02.1987 அன்று வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தி ஒ…

  17. அன்னை பூபதி என்று அழைக்கப்படும் தாய் இந்தியப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நாள். யார் இந்த அன்னைபூபதியென்று சுருக்கமாகப் பார்க்கும் பதிவிது. இப்பதிவை எழுதுவதற்கு நட்சத்திரக் கிழமையில் எனக்கு வாய்ப்புக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி. சில சங்கடங்களைத் தாண்டி எழுதப்பட்டே ஆகவேண்டிய பதிவிது.பூபதியம்மாவின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை. பத்துப்பிள்ளைகளின் தாய். மட்டு – அம்பாறை அன்னையர் முன்னணியின் துடிப்புள்ள முன்னணிச் செயற்பாட்டாளர். புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்துகொண்டிருந்த காலம். இந்தியப்படை கிட்டத்தட்ட மக்கள் வாழிடங்கள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டிருந்த காலம். அந்த இடைபட்ட காலத்துள் நடந்த கொடுமைக…

    • 2 replies
    • 854 views
  18. 26-06-2008 அன்று வவுனிகுளம் பகுதியில் எதிரியின் சுற்றிவளைப்பை தகர்க்க மேற்கொண்ட கடுஞ்சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப். கேணல். வாணன் , மேஜர் ஜெயசீலன், மேஜர் தணிகைமாறன், கப்டன் உயிரவன் , கப்டன் கார்வண்ணன், கப்டன் அரசகீதன் , கப்டன் சீராளன் , கப்டன் பாமகன் , லெப். சின்னவன், லெப். மணிமாறன், லெப். அருண்மொழி, 2ம் லெப். இளங்கதிர் வீரவேங்கை வெள்ளைத்தேவன், வீரவேங்கை கலைச்செழியன், வீரவேங்கை அடலூரான், வீரவேங்கை கலைவடிவேல் , வீரவேங்கை ஆற்றலழகன் முதலான அனைத்து மாவீரர்களையும் நினைவு கூர்ந்து வீரவணக்கம் செலுத்துகின்றோம் . --> திருவுருவப்படங்கள் video: https://eelam.…

  19. கேணல் கோபித் மறக்க முடியாத வீரத்தின் இருப்பிடம்! வைத்திலிங்கம் சந்திரபாலன் என்ற மல்லாவி பாடசாலை மாணவன் கோபித் என்கிற தமிழனாக தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டபோது அவனுக்கு வயது பதினான்கு ஆரம்ப கல்வி மட்டுமே அவன் பயின்று இருந்தாலும் அழகாக எழுதுவதிலும் படங்கள் கீறுவதிலும் அவன் வல்லவனாய் இருந்தான். இளம் மாணவனுக்குரிய குழப்படிகளும் விளையாட்டுக் குணங்களும் நிறைந்திருந்தன, அவனுடைய தந்தை யாலும் பாடசாலை ஆசிரியர்களாலும் கற்பிக்கப்பட்ட ஒழுக்கமும் பொறுப்புணர்வும் அவனுடைய செயல்களில் ஒரு நேர்த்தியை உருவாக்கி விட்டிருந்தன. வன்னிக்காடுகளிலும்,யாழ்குடா நாட்டிலும் இளம் போராளியாக தன் களப்பணியைத் துவங்கிய கோபித், தனது இய…

  20. லெப். கேணல் செந்தமிழ்ச்செல்வன் அவன் நிறைய சாதிக்க வேண்டியவன். யாழ்ப்பாணத்து மண்ணில் முருகைக் கற்களினும் ஊற்றெடுப்பது தண்ணீர் மட்டுமல்ல வீரமும் தான். இல்லாதுவிடின் வந்தேறி ஆக்கிரமிக்கும் அன்னியருக்கு தண்ணீர் பாய்ச்சி குளிரவைத்து குந்தியிருக்க இடம் கொடுத்திருக்கும் அல்லவா? இல்லையே? விதையை உடைத்து மண்ணைப் பிளந்து யாழ்மண்ணில் பலத்தையெல்லாம் திரட்டி காற்றைக் கிழித்து சூரியனைத் தொட்டுவிடத் துடிக்கும் பனைமரத்துடன் லெப். கேணல் செந்தமிழ்ச்செல்வனையும் பார்க்கிறேன். 1990 யாழ்ப்பாணம் இந்திய ஆக்கிரமிப்புப் படைகளிலிருந்து மீண்டும் தமிழர் படையாம் புலிகளின் கட்டுப்பாட்டினுள் வந்திருந்த நேரம். மாவட்ட புலனாய்வுப் பொறுப்பாளருக்கு முகவர்களாக …

  21. பண்பின் உறைவிடம் லெப் கேணல் கலையழகன்…..! Last updated Apr 18, 2020 கலையழகன் என நினைக்கும் போது, என்றும் மாறாத புன்னகை பூத்த முகமே எல்லோருக்கும் நினைவிற்கு வரும். கள்ளம் கபடமற்ற சிரிப்பும், எல்லோருடனும் அன்பாக, பண்பாக பழகும் தன்மையும், அனைவரையும் உபசரிக்கும் இயல்பும் அவனது இலட்சணங்கள். ஆனால் அவனுக்குள் இருந்த அற்புதமான திறமையும், ஆழமான ஆளுமையும், பன்முகத்தன்மையும் பலருக்குத் தெரியாது. குழந்தைத்தனமான முகத்திற்கு சொந்தக்காரன் பல்வேறு பொறுப்புக்களை தோளில் சுமந்து திரிந்த ஒரு அற்புதமான போராளி என்பது சிலருக்கும் மட்டும் தெரியும். தொடக்கப் பயிற்சியை முடித்துக்கொண்ட கலையழகன், 1994ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேசியத்தலைவர் அவர்களால் தொடங்கப்பட்ட கேணல் கிட்டு அரசறிவ…

  22. எங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன் லெப். கேணல் மல்லி.! எங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன் மல்லி.! லெப். கேணல் மல்லி, விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவன். இவன் விடுதலைப்போராட்ட காலத்தில் பல களங்களில் தன் முத்திரையைப் பதித்தவன்.இரு தேசங்களின் ஆக்கிரமிப்பு இராணுவங்களுடன் இவன் போராடினான். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு என்னும் இடத்தில் பிறந்தான். நீண்ட போராட்ட வாழ்வில் ஒயாது கடுமையாக உழைத்தவன். தனைவருத்தி தன்னொளி பார்த்தவன். அமைதிப் போர்வையுடன் வந்த இந்தியப் படைகள் முள்ளியவளையில் முகாம் இட்டிருந்தன. 1990ம் ஆண்டில் இம்முகாம் மீதான தாக்குதலில் பங்கேற்று நின்றான். இந்தக் காலப்பகுதியிலேயே அவர்களோடு கூட்டாக நின்ற கும்பல்கள், கிளிநொச்சி 18ம் போர் எனும் இடத்…

  23. கப்டன் லோலோ டிசம்பர் 31, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள்/0 கருத்து கப்டன் லோலா ஈரநினைவாய்…..! நெடிய தோற்றம். தேவையின்றிக் கதைக்காத சுபாவம். ஆனால் விழிகள் எப்போதும் ஆக்கிரமிப்பாளனின் நடமாட்டத்தை அவதானித்தபடியிருக்கும்.கழுத்தில் சயனைட்டோடு ஒரு சிலுவை அவன் கழுத்தில் எப்போதுமே இருந்தது. குப்பிளான் கேணியடியிலிருக்கும் எங்கள் கடைக்கு அடிக்கடி வருவான். தன் தோழர்களுக்கு உணவுப்பொருட்கள் வாங்குவான். வசாவிளானில் சென்றியிருக்கும் போராளிகளுக்கு அம்மாவிடம் பாணும் சம்பலும் வாங்கிக் கொண்டு போவான். சிலசமயம் ஏதாவது கிறுக்கு வேலை செய்து அம்மாவிடம் பேச்சும் வாங்குவான். என்னுடன் ஏதாவது கொழுவுவான். வைரமுத்து வளவுப்பனங்கள்ளை அடித்தபடி இஞ்சை வாடாப்பா …

  24. "முல்லை மாவட்டம் ஆனந்தபுரம் பகுதியில் வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள படைகள் வீசிய இரசாயன நச்சுக்குண்டுத் தாக்குதலில் 04.04.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் ஆதவன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா, கேணல் நாகேஸ், கேணல் தமிழ்ச்செல்வி, கேணல் அமுதா உட்பட ஆனந்தபுரத்தில் உயிர்நீத்த 700 மாவீரர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் ,04.04.2020" முல்லை மாவட்டம் ஆனந்தபுரம் பகுதியில் வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள படைகள் வீசிய இரசாயன நச்சுக்குண்டுத் தாக்குதலில் 04.04.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் மணி…

  25. வித்தாக வீழ்ந்த கிரான் மண்ணின் வீரமறவன் கப்டன் ஜிம்கலி On Jun 27, 2020 விடுதலைக்கான வீரமிகு போராட்டம். விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் போராடி, இழந்த தமது தாய் நாட்டை மீட்டெடுத்து தம்மைத்தாமே ஆட்சி செய்த வெற்றிமிகு போராட்டம் ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக் கொண்டிருக்கின்ற எமது மக்கள் விடுதலை பெற வேண்டும் என்ற உயரிய குறிக்கோள் ஒன்றைத்தவிர வேறு எவ்விதமான ஆசையும் எமது மாவீரர்களுக்கு இருந்ததில்லை. இவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கத்தையும் நாம் படிக்க வேண்டும் அதனுடாக விடுதலைப் பயணத்தில் எம்மையும் இணைத்துக் கொள்ள வேண்டும். என்பதுதான் பற்றோடு வாழ்கின்ற அனைத்து தமிழர்களின் பெரு விருப்பாகும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.