மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
07.10.1999 அன்று மன்னார் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்புலிகளின் துணைத் தளபதி லெப்.கேணல் நிரோஜன் உட்பட்ட கடற்புலிகள் 12ம் ஆண்டு நினைவு நாளும், வடபோர் முனையில் 07.10.2006 அன்று சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் அக்பர் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாளும், இந்து மாகடலில் 07.10.2007 அன்று சிறலங்கா கடற்படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கபிலன், லெப்.கேணல் அண்ணாமறவன் உட்பட்ட கடற்புலி மாவீரர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். கடற்புலிகளின் பல்வேறு வெற்றிகர தாக்குதல் நடவடிக்கைகளை வழிநடத்திய லெப்.கேணல் நிரோஜன் அவர…
-
- 8 replies
- 2.5k views
-
-
கண்டிவீதியைக் கைப்பற்றவென ‘வெற்றி நிச்சயம்” (ஜெயசிக்குறு) என்று பெயரிட்டுத் தொடங்கப்பட்ட படைநடவடிக்கைக்கு எதிராக புலிகளால் 10.06.1997 அன்று நடத்தப்பட்ட ஓர் அதிரடித் தாக்குதலே இது. 13.05.1997 அன்று சிறிலங்கா படைத்தரப்பால் இந்நடவடிக்கை தொடங்கப்பட்டது. படையினரின் கட்டுப்பாட்டிலிருக்கும் வவுனியாவிலிருந்து ஏற்கனவே அவர்களால் கைப்பற்றப்பட்ட கிளிநொச்சி வரையான வன்னி நெடுஞ்சாலையை (A-9)க் கைப்பற்றுவதே இந்நடவடிக்கையின் நோக்கம். படைத்தரப்பால் நடவடிக்கை தொடங்கப்பட்ட கையோடு தாண்டிக்குளம் என்ற புலிகளின் முன்னணி எல்லைப்பகுதி படையினரால் கைப்பற்றப்பட்டது. பின் சிலநாட்களில் அதற்கு அடுத்த பகுதியான ஓமந்தையும் படையிரால் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில் நடவடிக்கை தொடங்கிய ஒருமாத காலத்துள…
-
- 14 replies
- 2.7k views
- 1 follower
-
-
தாண்டிக்குளம் பகுதியில் அமைந்திருந்த விநியோக மையம் மீதான கரும்புலித் தாக்குதல் ஒரு பார்வை 10.06.1997 அன்று வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் அமைந்திருந்த ‘ஜெயசிக்குறு’ நடவடிக்கைப் படைகளின் விநியோக மையம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 25ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்…. கரும்புலி கப்டன் சாதுரியன் நடராசா அரசரட்ணம் மட்டக்களப்பு கரும்புலி மேஜர் யாழினி சிவசுப்ரமணியம் ராகினி யாழ்ப்பாணம் கரும்புலி மேஜர் நிதன் (பர்வதன்) மாணிக்கம் அருள்ராசா மட்டக்களப்பு தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர…
-
- 0 replies
- 594 views
-
-
புளியங்குளம் பற்றிய இராணுவ அபிலாசைகளுடன் படைத்தலைமை இருந்த வேளை , படையினருக்கு ஒரு பேரிடி தாண்டிக்குளத்தில் விழுந்தது. 10.06.1997 அன்று தாண்டிக்குளம், நொச்சிமோட்டைப் பகுதிகள் மீது உள்நுழைந்து தாக்கும் ஒரு அதிரடித்தாக்குதலை புலிவீரர்கள் நிகழ்த்தினர். ஆக்கிரமிக்கப்பட்ட பாதிப்பகுதி மீது புலிகள் தாக்குவர் என்பதை படையினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தாக்குதலுக்காக புலிகள் தெரு செய்த இடங்களை சிங்களத் தளபதிகள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஓமந்தையையும் அதற்க்கு வடக்காகவும் புலிகள் தாக்குதலை எதிர்பார்த்திருந்த படையினருக்கு வவுனியாவின் வாசலிலேயே அடி விழுந்தது அதிர்ச்சியூட்டும் தாக்குதலாய் அமைந்துவிட்டது. ஐயசிக்குறுய் படையின் கட்டளை தலைமையகம் தாண்டிக்குலத்திலேயே அமைந்திருந்த…
-
- 5 replies
- 2.4k views
-
-
தாயக விடுதலைக்கு ஏற்பட்ட தடையை நீக்கி போராட்டத்தை அடுத்த கட்டத்திற்க்கு நகர்த்திய கடற்கரும்புலிகள். கடற்கரும்புலி லெப்கேணல் சிவரூபன் சிவநேசன் சிவபாக்கியநாதன். வீரச்சாவு ..08.12.1999 1995ம் ஆண்டு இராணுவத்தால் பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்ட நில ஆக்கிரமிப்பான முன்னேறிப்பாயச்சலும் அதனைத்தொடர்ந்து மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் அதிகமானோர் காயப்பட்டும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தும்.இருந்த சூழலில் இச்சம்பவங்களை நேரில் பார்த்த சிவரூபன் வீணாகச் சாவதைவிட இவ் ஆக்கிரமிப்புக்கெதிராக போராடுவதென முடிவெடுத்து . விடுதலைப் புலிகளில் தன்னை இணைத் கொண்டு தனது ஆரம்பப் பயிற்சியை முடித்து கடற்புலிகளி…
-
- 0 replies
- 340 views
-
-
தாயக விடுதலையென்ற உயரிய இலட்சியத்திற்காக அயராது உழைத்த இலட்சிய வீரர்கள் தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழம். 04.11.1996 பாரிஸ் நகரில் உள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அனைத்துலகத் தலைமைச் செயலகத்தில் முக்கிய பணியாளர்களாகப் பணிபுரிந்த திரு.கந்தையா பேரின்பநாதன் (நாதன்) திரு. கஜேந்திரன் (கஜன்) ஆகிய எமது உறுப்பினர்கள் இருவர் பகைவனின் சூழ்ச்சியால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வை அறிந்து நான் ஆழ்ந்த கவலையும் வேதனையும் அடைகின்றேன். திரு. நாதன் எமது விடுதலை இயக்கத்தின் ஒரு மூத்த உறுப்பினர் நேர்மையும் கண்ணியமும் மிக்கவர். விடுதலை இலட்சியத்தில் அசையாத உறுதி கொண்டவர். நீண்ட காலமாக சர்வதேச நிதி திரட்டும் பெரும் பொறுப்பைச் சுமந்து உலக…
-
- 1 reply
- 894 views
-
-
தாயகக் கனவுகளுடன் ....... [1] " நான் பெரிது,நீ பெரிது என்று வாழாமல், நாடு பெரிது என்று வாழுங்கள். நாடு பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே.எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரிது." ----- தேசியத்தலைவர் வே.பிரபாகரன் --------------------------------------------------------------------------------
-
-
- 32 replies
- 3.6k views
-
-
பிரபல தாயகப் பாடகர் இசைக் கலைமணி திரு. குலசிங்கம் அவர்கள் மறைவு (உலகத் தமிழினத்தின் ஒளிவிளக்கு, மலர்தூவ வாருங்கள் போன்ற பாடல்களைப் பாடியவர்) யாழ் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் என்னுடன் இசை பயின்ற நண்பன் திரு. குலசிங்கம் அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் கவலையும் அடைகிறேன். மிகவும் இனிய குரல்வளம் கொண்டவர்¸ பழகிட இனிமையான ஒரு கலைஞர். மறக்கமுடியாத சில தாயகப் பாடல்களின் குரலுக்கு சொந்தக்காரர். அவரது குரலின் இனிமையும் காத்திரமும் இன்றும், என்றும் தமிழரின் மனங்களில் நிறைந்திருக்கும். https://www.tamilarul.net/2019/11/Kulasingam.html
-
- 0 replies
- 288 views
-
-
விடுதலைக்கு உரம் சேர்த்த ஆயிரம் ஆயிரம் மான மாவீரர்களை எம் மண்ணின் மார்பைப் பிளந்து விதைக்கும் ஒவ்வொரு கணத்திலும் தமிழீழ மண், அப் பிள்ளைகளுக்காக விழிநீர் கசியத் தவறியதில்லை. இவ்வாறான காலம் ஒன்றில் தான் நாம் சிறுவர்களாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சுகத்தையும், சிங்களத்தின் இனவழிப்பு நடவடிக்கையின் துன்பியல் சம்பவங்களையும் தாங்கிக் கொண்டிருந்தோம். 1995 ம் வருடம் யாழ்ப்பாணத்தை முற்று முழுதாக கைப்பற்றி விடும் நோக்கோடு படையெடுத்து வந்த சிங்களதேசத்தின் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை எம்மை வன்னிப் பெருநிலப்பரப்பின் மல்லாவிக்கு இட்டுச் சென்ற போது, சொந்த நிலமிழந்து, உறவுகளை நாம் பிரிந்து புது தேசத்தில் எம் வாழ்வை நிலைநிறுத்தி நிமிர்ந்த போது மல்லாவியே எம் எல்லாமாகிப் போனது. 20…
-
- 0 replies
- 256 views
-
-
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் முதலாம் நாள்…! AdminSeptember 15, 2021 செப்.15 – 1987 🔴தியாக பயணத்தின் முதலாவது நாள்! காலை ஒன்பது மணியிருக்கும் பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனை சந்தித்து விடை பெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாக பேசுகிறார். வாக்கி டோக்கியில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற வாகனத்தை நோக்கி நடக்கிறார். எல்லோரும் பின் தொடர்ந்தோம். ஆம் அவரது தியாகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது. மிக மிடுக்காக நடந்து முன் ஆசனத்தில் போய் ஏறினார். அவரது பக்கத்தில் சொர்ணம், அன்ரன் மாஸ்ரர், முரளி. பின் ஆசனத்தில் காசி ஆனந்தன், ராஜன், நான் வேறும் சிலர்.வாகனம் நல்லூர் கந்தசாமி கோவிலை நோக…
-
- 1 reply
- 1.1k views
-
-
தியாகத்தின் மற்றுமொரு சிகரம் தொட்டவர் கேணல் சங்கர் அவர்கள். Canada, Montrealஇல் Air Canadaவுக்கான விமானப் பொறியியலாளராக உயர்வான பணி, பாதுகாப்பான நாடு ஒன்றில் வசதியான வாழ்க்கையைப் பெற்ற ஒருவர், அனைத்தையும் துறந்து, கரடு முரடான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். சரளமான ஆங்கிலத்தில் அவரது சிநேகமான பேச்சு மெய் சிலிர்க்க வைக்கிறது. விடுமுறைக்கு இலங்கைக்கு சென்ற அவர், 83 இனக்கலவரத்தை கொழும்பில் நேரில் காண நேர்ந்தது. எம்மக்களின் சுதந்திர வாழ்வின் அவசியத்தை உணர்ந்து போராட்டத்தில் தனது வாழ்வை இணைத்துக் கொண்டார். இவரது இரண்டு சகோதர்களும் கூட மாவீரர்களாவார்கள். சென்னையில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில், ஏரோநாட்டிக்ஸ் பிரிவில் பி.இ. படித்த தனது அறிவு மற்றும் அனு…
-
- 0 replies
- 630 views
-
-
தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 41ஆம் வீரவணக்க நாள் இன்றாகும் [Friday 2015-06-05 07:00] தமிழீழ விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த வேளை சிறிலங்கா காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்ட தருணத்தில் சயனைட் அருந்தி 05.06.1974ம் ஆண்டு அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட முதற் தற்கொடையாளர் தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 41ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். "தமிழீன ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்டு கல்வி தரப்படுத்தலை வீசியபொழுது அதை எதிர்த்து தமிழினப் புரட்சிக்கு வித்திட்டவர்" தியாகி பொன் சிவகுமாரன் மறைந்த நாளாகிய ஆனி 5ற்கு மறுநாள் ஆனி 6ஆம் நாள் தமிழீழ மாணவர் எழுச்சி நாளாக பிரகடனப்படுத்தி தாயகம் அடங்கலாக தமிழீழ மக்கள் வாழும் தேசங…
-
- 0 replies
- 2.1k views
-
-
அதிகாலை 5.00 மணிக்கே திலீபன் உறக்கத்தை விட்டு எழுந்து விட்டார். முகம் கழுவித் தலைவாரிக் கொண்டார். சிறுநீர் கழித்தார், ஆனால் மலம் இன்னும் போகவில்லை. அவர் முகம் சோர்வாகக் காணப்பட்டாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் எல்லோருடனும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். சகல தினசரிப் பத்திரிகைகளையும் ஒன்றுவிடாமல் படித்து முடித்தார். பத்து மணியளவில் பக்கத்து மேடையிலே நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. நிகழ்ச்சிகளுக்குத் “தேவர்” தலைமைதாங்கிக் கொண்டிருந்தார். கவிதைகளை படிப்பதற்காக இளம் சந்ததியினர் முண்டியடித்துத் தம் பெயர்களைப் பதிவு செய்து கொண்டிருந்தனர். “நிதர்சனம்” ஒளிபரப்பாளர்களின் வீடியோ கமெரா, நாலா பக்கங்களிலும் சுழன்று படம் பிடித்துக் கொண்டிருந்தது. மேடையில் கவிதைகள் முழங்கி கொண்டிருந்தப…
-
- 1 reply
- 822 views
-
-
“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ‘திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.” காலை 9.30 மணி! பாடசாலை பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனைச் சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாகப் பேசுகிறார். காலை 9.45 மணி ! “வோக்கிடோக்கி”யில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற “வானை” நோக்கி நடக்கிறார். எல்லோரும் பின் தொடர்கிறோம். ஆம். அவரி…
-
- 1 reply
- 1.2k views
-
-
"தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர். காலை 9.30 மணி! பாடசாலை பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனைச் சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாகப் பேசுகிறார். காலை 9.45 மணி ! "வோக்கிடோக்கி"யில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற "வானை" நோக்கி நடக்கிறார். எல்லோரும் பின் தொடர்கிறோம். ஆம். அவரின் தியாகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது. மிக மிடுக்காக நடந்து முன் ஆசனத்தில் ஏறுகிறார். அவரின் பக்கத்தில் சொர்ணம், அன்ரன் மாஸ்ரர், முரளி, பின் ஆசனத்தில் காசி ஆனந்தன், ராஐன், நான், மற்றும் சிலர். வான் நல்லூர் கந்தசாமி கோயிலை நோக்கி ஓடுகிறது. பாதையின் இரு பக்கத்திலும…
-
-
- 25 replies
- 5.9k views
- 2 followers
-
-
[size=4]திருகோணமலை துறைமுகத்தில் வைத்து மூன்று சிறிலங்கா கடற்படைக் கலங்களை மூழ்கடித்து காவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் ரெஜி உட்பட்ட ஆறு கடற்கரும்புலிகளின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 23.10.2000 அன்று திருகோணமலை துறைமுகத்தின் மீது கடற்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலில் சிறிலங்கா கடற்படை பாரிய அழிவுகளை எதிர்கொண்டது. மார்பிள் பீச் பகுதியிலிருந்து துறைமுகத்தினை நோக்கி கடுமையான மோட்டார் தாக்குதல் நடாத்தப்பட துறைமுகத்திற்குள் உள்நுழைந்த கடற்புலிகளும், கடற்கரும்புலிகளும் சிறிலங்கா கடற்படையுடன் கடுமையாகச் சமரிட்டு பாரிய அழிவுகளை ஏற்படுத்தினர். இதன்போது சிறிலங்கா கடற்படையின் தரையிறங்குகலம்(படைக்காவி), போர்ப்படகு உட்பட மூன்று கடற்படைக் கலங்கள் கடற்க…
-
- 8 replies
- 924 views
-
-
17.10.1995 அன்று திருகோணமலை கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துருப்புக்காவி கலத்தினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் சிவசுந்தர், கப்டன் ரூபன், கப்டன் சிவகாமி ஆகியோரின் 15ம் ஆண்டு வீரவணக்க இன்றாகும். தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம்மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள். http://meenakam.com/news/flashnews/2011/10/17/ தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம்மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.
-
- 15 replies
- 1.3k views
-
-
தமிழீழ போராட்ட வரலாற்றில் ஒருபுரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி தமிழீழ தேசிய ஆன்மாவை தட்டிஎழுப்பிய நிகழ்ச்சி பாரத நாட்டை தலைகுனிய வைத்த நிகழ்ச்சி உலகத்தின் மனட்சாட்சியை தீண்டிவிட்ட நிகழ்ச்சி என்று தீர்க்க தரிசனமாக தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் அன்று தெரிவித்துள்ளார். ஈகைச்சுடர் லெப்ரினன் கேணல் திலீபனின் 26ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் இந்திய அமைதிப்படைக்கு எதிராக ஜந்தம்ச கோரிக்கையினை முன்வைத்து சாகும்வரை உண்ணா நோன்பிருந்து காந்திதேசத்தின் முகத்தில் கரியை பூசிய இராசையா பார்த்தீபன் என்று அழைக்கப்படும் லெப்பரினன் கேணல் திலீபனின் 26ஆம் ஆண்டு நீங்கா நினைவுகளை எங்கள் மனதில் நிறுத்தி விடுதலை பயணத்தினை தொடர்வோம்.. அதேவேளை தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் வான்…
-
- 0 replies
- 786 views
-
-
இன்று செப்டம்பர் 26. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய போராளிகளில் ஒருவரான தியாகி திலீபனின் நினைவுநாள். ஒவ்வொரு ஆண்டும் திலீபன் தியாகச் சாவடைந்த நாளை நினைவுகூர்ந்து கொண்டே இருக்கிறேன். சின்ன வயதில் இடம்பெயர்ந்து வீடுகளே இல்லாத நாட்களில்கூட திலீபனின் தியாகத்தை நினைவுகூர்ந்தோம். 1995இற்கு முன்பாக ஒரு வருடத்தில், அதுவும் ஒரு நாவற்பழக்காலம் வீட்டின் முன்பாக உள்ள நாவல் மரத்தின் கீழ் எங்கேயோ வாங்கி வந்த திலீபனின் படத்தை கொண்டு வந்து தீபம் ஏற்றிய நினைவு இப்பொழுதும் அந்த நாவல்மரத்தின் கீழிருக்கிறது. இடம்பெயர்ந்து ஸ்கந்தபுரத்தில் இருந்த பொழுது எங்களுக்கு வசிக்க வீடே இருக்கவில்லை. ஒரு மர நிழலில் வாழ்ந்துகொண்டிருந்தோம். அப்பொழுதும் திலீபனின் நினைவுநாள் வந்தது. ஒரு துணியால் ச…
-
- 0 replies
- 774 views
-
-
-
-
- 14 replies
- 4k views
-
-
தீரமுடன் போராடிய எல்லைப்படை மாவீரர்கள் நினைவில்.... எல்லைப்படை மாவீரர்கள் எல்லைத் திசையெங்கும் நிலையாகினர்- எங்கள் உரிமைக்கு பலம் தேடி வித்தாகினீர் மகிழ்வோடு ஈழம் காணப் படையது சேர்ந்தீர்- வேங்கை வீரரென விடுதலைக்கு உயிர் கொடுத்தீர் -அன்பரசு ஒரு விடுதலைப் போராட்டம் வெற்றி பெற வேண்டுமானால் அது மக்கள் இயக்கமாக இடம் பெற வேண்டும். போராடுவோர் வேறாகவும் மக்கள் வேறாகவும் பிரிந்து நிற்கும் போது வெற்றி வாய்ப்புக்கள் அரிதாகக் கிடைக்கின்றன. உலக விடுதலை வரலாற்றில் மக்கள் பங்களிப்பின் சிறப்பை எம்மால் உணர முடியும். மக்களும் போராடுவோரும் ஒரேயணியாக நிற்கும் போது எந்த சக…
-
- 0 replies
- 699 views
-
-
எமக்காக தனது உடலை உருக்கி எம் ஈழ விடுதலைக்கு உரம் தந்த தியாக தீபம் லெப். கேணல் தீலிபன் அண்ணாவிற்கு இசையால் வணங்கி பாமாலை சூட்டுகிறோம் . [இந்த இசைப்பாவை பல பழுக்கள் மத்தியில் ஈழப்பிரியனின் வேண்டுதலுக்கு அமைய ஒரு மணித்தியாலத்தில் இசை வடிவம் செய்தோம் .இசை குரலில் தவறுகள் இருந்தால் பொறுத்தருள்க .] https://www.facebook.com/video.php?v=1497927537128752&set=vb.100007345609043&type=2&theater
-
- 1 reply
- 1.4k views
-
-
30.10.2001 அன்று யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையின் எரிபொருள் வழங்கற் கப்பல்மீதான (துன்கிந்த) தாக்குதல் . ஐனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில் 22.04.2000 ஆம் ஆண்டு ஆனையிறவுப் படைத்தளம் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்ட பிற்பாடு மாவீரர்களின் தியாகத்தால் சிங்களப்படைகளால் கைப்பற்றப்பட்ட பெருமளவு தமிழர்களின் பாரம்பரிய நிலப்பரப்புக்கள் மீட்க்ப்பட்டன .(சுமார் இருபது கடல்மைல் கரையோரப் பிரதேசங்களும் உள்ளடக்கம். ) அந்தவகையில் விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் ராடர் நிலையமும் யாழ் குடாரப்புக்கரையோரத்தில் அமைக்கப்பட்டு கடற்கண்கானிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாமல் கடற்புலிகளும் யாழ்குடாவில் நிலைகொண்டிருந்த சிங்களப்டைகளுக்காக திருகோணம…
-
- 0 replies
- 95 views
-
-
30.10.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துன்கிந்த என்ற எரிபொருள் வழங்கல் கப்பலை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் கடலரசன், மேஜர் கஸ்தூரி, கப்டன் கனியின்பன், கப்டன் அன்புமலர் ஆகியோரின் 9ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தாயக விடுதலைக்காய் தம்மை ஆகுதியாக்கிய இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.
-
- 11 replies
- 1.9k views
-
-
-
- 9 replies
- 1.4k views
-