மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
தாயக விடுதலைக்காக தம்மை உவப்பீகை செய்த மாவீரர்களின் விபரங்களை தனித்தனியாக இணைக்கத் தொடங்கியுள்ளோம். முதற்கட்டமாக 1982 முதல் 1986 வரை வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களின் விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. விபரங்களைப் பார்க்க http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist
-
- 19 replies
- 2.7k views
-
-
லெப். கேணல் ஜோய் நவம்பர் 30, 2020/தேசக்காற்று/வீரத் தளபதிகள்/0 கருத்து மட்டக்களப்பு – அம்பாறை பிராந்தியத் தளபதி லெப். கேணல் ஜோய் / விசாலகன் கணபதிப்பிள்ளை ரகுநாதன் செங்கலடி, மட்டக்களப்பு பிறப்பு:- 20.05.1956 வீரச்சாவு:- 30.11.1991 முடுகு… முடுகு… ஆ… ஆ… கிறுகு… கிறுகு… மெல்லிய உயரமாக இருந்த ஒருவனைப் பார்த்து கமல் கத்திக் கொண்டிருந்தான். ‘ஏன்டா, கமல் இப்படிக் கத்துது’ நான் சதீசைக் கேட்கிறேன். சத்தம் கேட்டுத் திரும்பிய கமல் “அண்ணை இவங்கள் தான் மறுகா கோஸ்டி” என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறான். இது என்ன புது கோஸ்டி. வியப்பாக இருந்தது. அதில் உயரமாக மெல்லியவனாக இருந்தவனைப் பார்க்கிறேன். “அப்பன…
-
- 3 replies
- 1.6k views
-
-
அகிம்சை வழியில் போராடி... உயிர் நீத்த, தியாக தீபம் திலீபனின் நினைவுநாள் இன்று இந்திய அமைதி காக்கும் படையினருக்கு எதிராக உணவு ஒறுப்பப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நாள் இன்றாகும். ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 1987 செப்டெம்பர் 15 ஆம் திகதி உணவு ஒறுப்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10.48 மணிக்கு அவர் உயிர்நீத்தார். இந்நிலையில் அவரது நினைவு தினம் வருடா வருடம் நினைவேந்தல் வாரமாக தமிழர் பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. எனினும், அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் ம…
-
- 5 replies
- 515 views
- 1 follower
-
-
கலைஞனுக்கும் போராளிக்குமுரிய அடிப்படைத் தகுதியான மென்மையான மனமுடையவர் சிங்கோ மாஸ்ரர். வீரவேங்கை சிங்கோ மாஸ்ரர் கந்தையா பகத்சிங் வந்தாறுமூலை, மட்டக்களப்பு. வீரப்பிறப்பு:-29.03.1945 வீரச்சாவு:-15.05.1986 நிகழ்வு:-மட்டக்களப்பு மட்டக்களப்பில் சிறிலங்கா அதிரடிப்படையால் கைதாகி முறக்கொட்டாஞ்சேனை முகாமில் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதையின் போது வீரச்சாவு சிறந்த ஓவியக் கலைஞன் - இந்தியாவில் திரைப் படங்கள் தயாரிக்கும் ஏ.வி.எம் ஸ்ரூடியோ , யாழ்ப் பாணத்தில் செல்லம்ஸ் ஸ்ரூடியோ ஆகியவற்றில் பணிபுரிந்தவர்; மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள பல ஆலயங்களில் ஓவியங்கள் வரைந்தவர். மின் இணைப்பு வேலைகள் செய்பவர். இசைத்துறையில் நாட்டமுள்ளவர். யாழ்நகர் கண்ணன்…
-
- 0 replies
- 433 views
-
-
எண்பதுகளின் நடுப்பகுதியை, எங்களின் வாழ்க்கையின் கனாக் காலம் என்றே குறிப்பிடலாம். யாழ்ப்பாண தீபகற்பகத்தை சுற்றிவளைத்து இருந்த இலங்கை இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி, யாழ்ப்பாணத்தை போராளிகள் தங்கள் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கோலோச்திய கனாக் காலம் அது. தொள தொள trousersகளில் shirtஐ வெளியே விட்டுக் கொண்டு, இடுப்பில் மறைவான பிஸ்டலோடு, யாழ்ப்பாண வீதிகளில் மிடுக்காக வலம் வந்த அண்ணாமாரை ஆவென்று பார்த்து பிரமித்த கனாக் காலங்களை எப்பவும் மறக்க முடியாது. 1987 ஒக்டோபரில் இந்திய இராணுவத்துடனான சண்டையுடன் இயக்கம் வன்னிக் காடுகளிற்குள் தனது தளத்தை மாற்றிக் கொண்டது. “காட்டுக்குள் போன இயக்கம் வேற, காட்டுக்கால திரும்பி வந்த இயக்கம் வேற” என்பார்கள் இயக்கத்தின் வர…
-
- 0 replies
- 380 views
-
-
கடற்கரும்புலிகள் ஜெயந்தனும், சிதம்பரமும் கடலில் 04.05.1991 அன்று! AdminMay 4, 2019 கடற்கரும்புலி சிதம்பரம நிறையப் படிக்க வேண்டும் என்று அவன் சின்னவனாக இருக்கும் போது ஆசைபடுவான். ஆனால், குடும்பத்தின் நிலை அவனது கனவுகளைச் சிதைத்தது, நான்காம் வகுப்பிற்குப் பிறகு அவன் புத்தகங்களைத் தூக்கியதில்லை. அவர்கள் குடியிருந்த வீட்டில்தான் ஏழ்மையும் குடியிருந்தது. வீட்டில் அம்மாவும் அக்காமாரும் செய்கின்ற எள்ளுப்பாகுவையும், பலகாரங்களையும் தோளில் வைத்துக்கொண்டு அவன் தெருவில் இறங்குவான். திரும்பி வந்த பிறகுதான் அவர்களின் வீட்டில் அடுப்பெரியும். வளர்ந்தபின் ‘றோலரில்’ கடலில் மீன் பிடிக்கச் செல்வான். மீன் கிடைக்காது போனால், வாட்டத்தோடு திரும்பிவருவான். முற்றத்தில் நிற்கு…
-
- 0 replies
- 622 views
-
-
"சங்ககால மாவீரர்கள், நடுகல் & அன்னி மிஞிலி" ஒருவனோடு ஒருவன் போரிடுதலும் ஒருவனை ஒருவன் அழித்தலும் ஒருவனிடம் ஒருவன் தோற்பதும் புதியது அன்று; அது இவ்வுலகத்து இயற்கை என்கின்றது புறநானூறு. இவ்வாறு போர் என்பது மன்னர்களுக்கிடையில் மிக இயல்பாக நடைபெறும் நிகழ்வாக இருந்தது என்னும் உண்மையை, "ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவதன்று இவ்வுலகத்து இயற்கை" என புறநானுறு 70 கூறும். மேலும் சங்ககால வீரர்கள் என்றும் போர் வேட்கை உடையவர்களாய் இருந்தனர் என, "போரெனிற் புகலும் புனைகழல் மறவர்" என்று புறநானுறு 31 உணர்த்துகின்றது. போரிடுதலே புதல்வன் கடமை என்பதை, வாளைக் கையிலேந்திச் சென்று தடுத்தற்கரிய போரைச் ச…
-
-
- 1 reply
- 449 views
-
-
கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் காலவிதை: கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன். வீட்டிற்குமுன் வாகனம் வந்து நின்ற போது செங்கதிர்வாணன் தான் வருகின்றான் என்று நினைத்துக் கொண்டாள் தண்ணீரூற்று அம்மா. அவனின் அம்மா திருமலையில் என்பதால் இப்போது உறவுகள் எல்லாம் அந்த வீடுதான். அம்மா தலையை இழுத்து முடிந்தபடி விளக்கையும் எடுத்துக் கொண்டு வாசலுக்கு ஓடிவந்தாள். அக்கம் பக்கத்து வீட்டுச்சிறுமிகள் எல்லாம் “குட்டான் மாமா வந்திட்டார்” என்ற மகிழ்ச்சியுடன் பாடப்புத்தகங்களை மூடிவிட்டு ஆரவாரித்து நின்றனர். அவர்களுக்கு ஒருபுறம் அச்சமும் இருந்தது. பாடப்புத்தகத்தில் கேள்வி கேட்பார். தேர்வு அறிக்கை பார்ப்பார். என்றாலும் குட்டான் மாமா எவ்வளவு நல்லவர். சிறுமிகளு…
-
- 3 replies
- 608 views
-
-
லெப்டினன்ட் ஜோன்சன் நவம்பர் 30, 2020/தேசக்காற்று/அணையாத தீபங்கள்/0 கருத்து தமிழீழ விடுதலைப் போரில் கள பலியான இஸ்லாமியத் தமிழ் வீர மறவன் லெப்டினன்ட் ஜோன்சன். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள் ஆற்றிய பங்கு மிகவும் காத்திரமானது தென் தமிழீழத்தில் உருவாகிய இயக்கங்களுள் “தமிழீழ விடுதலை நாகங்கள்” (நாகபடை) சிலகாலம் பரபரப்பை உருவாக்கியது இதற்கு தலைமை தாங்கியவர் ஒட்டமாவடியை சேர்ந்த ஜுனைதீன். அரசுக்குத் துணைபோன பிரமுகர்கள் மீது மேற்கொண்ட சகல தாக்குதல் நடவடிக்கைகளிலும் பங்கு பற்றியவர் இவர் இக்குழுவுக்கு எதிராக பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக தொடர்ந்து இயங்க முடியாமல் போன நிலையில் தனது எதிர்கால பங்களிப்பைத் தமிழீழ விடுதலைப் புலிக…
-
- 0 replies
- 509 views
-
-
ஈமத்தாழிகள் கண்டெடுக்கப்பட்ட பழம்பெருமை வாய்ந்த தமிழர்தம் பூநகரி மண்ணில் அவதரித்த லெப் கேணல் தமிழ்வாணன் படைத்துறைச் செயல்பாடுகளிலும் முத்திரை பதித்தவர் ஆவார். ஆரம்பத்தில் மன்னார் மாவட்டப் படையணியில் இயங்கியவர். இவரை புலியாகப் புடம்போட்ட பாசறை”மன்னார்- 14” ஆகும். கரும்புலி மேஜர் டாம்போ அவர்களிடம் போர்க்கலையை பயின்றதாக நண்பர்கள் கூறக் கேள்விப் பட்டதுண்டு.(உறுதி செய்யவும்) மன்னார் மாவட்ட மருத்துவப் பொறுப்பில் இருக்கும் போது பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் அரும்பணி ஆற்றிவர். இயக்கத்தில் மிகுந்த விசுவாசம் கொண்டவர். பிழைகள், தவறுகள் யார் இழைத்தாலும் தயங்காமல் தண்டனை கொடுப்பார். அல்லது தண்டனை பெற்றுக்கொடுப்பார். பூநகரி மண் மீட்புக்கான “தவளைப் பாய்ச்சல்”…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஒரு மறைமுகப் போராளியின், வீரப் பாதங்களின் சுவடு.! விடுதலைப்புலிகள் என்றால் யார்? அந்த வீரர்களின் மனத்துணிவு எத்தகையது? அவர்கள் தமது தேசத்தையும், மக்களையும், தமது சக போராளிகளை யும் (நண்பர்கள்) எவ்வளவு தூரம் நேசித்தார்கள்? இந்த கேள்விகளுக்கான விடையை, நீங்கள் ஒரு உண்மை சம்பவத்தின் ஊடாக அறிய முடியும் என்பதே எனது நம்பிக்கை.! இது போல பல தியாகங்களுக்கு கட்டியம் கூறி நிக்கும், பல நூறு சம்பவங்கள் எமது போராட்ட வரலாற்றில் உள்ளன. அதில் ஒன்றை இந்த கேள்விகளுக்கான விடையாகப் பதிவு செய்கின்றேன். நான் இதை பதிவு செய்வதற்கு காரணம், புலிகள் ஏதோ ஒரு ஆயுத குழுவோ, அல்லது கொடும் கோலர்களோ அல்ல. மாறாக தமது தேசத்தையும், மக்களையும் உளமார நேசித்து அதற்காகவே மடிந்த உன்னத வீர்கள். மடி ச…
-
- 0 replies
- 859 views
-
-
மேஜர் கணேஸ் நவம்பர் 5, 2020/தேசக்காற்று/விழுதின் வேர்கள்/0 கருத்து ஒரு மலையின் சரிவு! அவனுடைய சாவு ஓர் இலையின் உதிர்வு அல்ல ஒரு மலையின் சரிவு ஆகும். மேஜர் கணேஸ் தமிழ் ஈழ விடுதலைப் போர் வரலாற்றில் மேனி சிலிர்க்க வைக்கும் ஒரு அத்தியாயம் ஆகிவிட்டான். பெருத்த மீசை – தடித்த உதடுகள் – பருத்த மார்பு களத்தில் வெடித்த எரிமலையாய் உலா வந்தவன் கணேஸ். மூதூர் ஆறுகளால் துண்டுதுண்டாகி புவியியல் நிலையில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் நிலப்பரப்பு .கொலை வெறிச் சிங்களவரின் குடியேற்றப்பகுதி . இஸ்லாமியத் தமிழர்களுக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் அவர்கள் வாழ்வையே சூறையாடும் முஸ்லிம் ஊர்காவல் வெறிப்படையின் இருண்ட கூடாரம். 9 இராணுவ முகாம்களாலும்…
-
- 5 replies
- 1.3k views
- 1 follower
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வள்ளிபுனத்தில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் கரும்புலி போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். வள்ளிபுனம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.02.09) பகுதியில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சிறிலங்கா படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இத்தாக்குதலை மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கரும்புலி கப்டன் நெடுஞ்செழியன் நடத்தியுள்ளார். இம் மாவீரருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துள்ளனர்.
-
- 0 replies
- 836 views
-
-
05.11.1999 அன்று ஓயாத அலைகள் - 3 படை நடவடிக்கையில் மணலாற்றில் அமைந்திருந்த பராக்கிரமபுர படைத்தளத்தினைத் தாக்கியழிப்பதற்காக நகர்ந்து கொண்டிருந்தவேளை நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலிகள் மேஜர் அருளன், மேஜர் சசி ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். படங்களைப் பெரிதாய் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் இக்கரும்புலிகள் பற்றிய குறிப்பு உயிராயுதங்களிலிருந்து...
-
- 9 replies
- 2.9k views
-
-
சாவகச்சேரிப் பகுதியை வல்வளைக்கும் நோக்குடன் முன்னகர்ந்த சிறிலங்கா படையினருக்கு எதிரான சமரில் காவியமான 55 மாவீரர்களினதும், மணலாறு மற்றும் பளைப் பகுதியில் வீரச்சாவைத் தழுவிய ஐந்து மாவீரர்களினதும் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 17.09.2000 அன்று சாவகச்சேரிப் பகுதிளை வல்வளைக்கும் நோக்குடன் மூன்று முனைகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய வல்வளைப்பு முயற்சிகெதிராக தீரமுடன் களமாடி 55 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். அவர்களின் விபரம் வருமாறு மேஜர் கயல்விழி (திருநாவுக்கரசு யோகேஸ்வரி _ கிளிநொச்சி) மேஜர் அற்புதம் (ஜேசுதாசன் சரோஜினி _ யாழ்ப்பாணம்) கப்டன் மிதுலன் (சிவபாதசுந்தரம் கோகுலன் _ திருகோணமலை) கப்டன் சுவர்ணா (தீப்பொழில்) (சிவராசா செல்வமதி _…
-
- 11 replies
- 1.5k views
-
-
கரும்புலி மேஜர் ஆதித்தன் டிசம்பர் 25, 2020/தேசக்காற்று/தேசத்தின் புயல்கள்/0 கருத்து நிதானித்துக் கொள்வதற்கிடையில் அந்த நிகழ்வு அவர்களை நிலைகுலையச் செய்துவிட்டது. கைகளால் தொடுகின்ற தூரத்திற்குள் கடுமையான துப்பாக்கிச் சூடுகளை எதிர்பார்த்தது தான்; என்றாலும் இவ்வளவு சீக்கிரத்தில் நடக்கும் என்று யாரும் நினைக்கவில்லை. இராணுவ முகாம் நோக்கி நகர்ந்துகொண்டிருந்த போது முகாமிற்கு அருகே பதுங்கியிருந்த இராணுவம் தான் தாக்குதலை ஆரம்பித்தது அந்தத் தாக்குதல். இமைப்பொழுதில் அவனோடு கூடவந்தவர்களைப் பிரித்துவிட அவன் தனித்தவனானான். எங்கும் கடும் இருட்டு, இருளிற்குள் இருந்து பெரிய உருவம் ஒன்று பாய்ந்து அவனைக் கட்டிப்பிடித்தது. அவனைவிட பெரிய உருவம் அது இரண்ட…
-
- 0 replies
- 539 views
-
-
இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வில் கலந்துகொள்ள வருமாறு அழைப்பு..!
-
- 1 reply
- 1.4k views
-
-
24.09.2006 அன்று சுகவீனம் காரணமாக சாவடைந்த நவம் அறிவுக்கூட நிர்வாகப் பொறுப்பாளர் லெப்.கேணல் பிறையாளன்(சுட்டா) மற்றும் அதே நாள் புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் செவ்வேள், லெப்.கேணல் சீராளன், லெப்.கேணல் புயலினி உட்பட்ட கடற்புலி மாவீரர்களின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள். படங்களைப் பெரிதாய் பார்க்க அவற்றின்மீது அழுத்தவும்
-
- 7 replies
- 2k views
-
-
கரும்புலிகள் ஒரு வரலாற்று அபூர்வம்! July 5, 2019 இன்று கரும்புலி நாள். எமது மக்களின் விடுதலைக்காகத் தமது உயிர்களையே ஆகுதியாக்கிய உன்னத மறவர்களை நினைவேந்தல் செய்யேண்டிய நாள். இன்றைய நாள்குறித்த சிறப்புக் கட்டுரையே இது. ஒருமுறை பொறுமையோடு இதனை நோக்குவோம்…! தத்துவங்கள் எல்லாம் தலைகீழாகி விட்டன. வீறு கொண்டெழுந்த விடுதலைப் போராட்டங்கள் பல இடையில் வெம்பிப் பழுத்தவை போலாகிவிட்டன. அமைதி என்ற மாயத்திரைக்குள் சமரசங்களும் இயலாமையும் தாண்டவமாடுகின்றன. இப்படியான இன்றைய உலகிலே பனிப்போர் கால கட்ட நெருக்கடிகளையும் தாண்டி புதிய உலக ஒழுங்கினுள்ளும் புகுந்து அதன் அழுத்தங்கட்கும் முகம் கொடுக்கத் தயாராகும் விடுதலைப்புலிகள்; இயக்கம் ” கரும்புலிகள் ” எனும் படையணியைப் போரா…
-
- 2 replies
- 909 views
-
-
பல வெற்றிக்கு வித்திட்ட வீரத்தளபதி லெப். கேணல் அமுதாப் ! Last updated Mar 31, 2020 சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி லெப்.கேணல் அமுதாப் அவர்களின்11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள். லெப். கேணல் அமுதாப் சிதம்பரப்பிள்ளை சிவநாயகம் பிறப்பு- 15.04.1976 வீ.சாவு-31.03.2009 சொந்த முகவரி- தவசியாகுளம்,சாஸ்திரிகூழாங்குழம்,வவுனியா 18 ஆம் ஆண்டில் காலடி வைக்கும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் கடந்த காலச் சாதனைகளை அப்படையணியின் துணைத் தளபதி அமுதாப் விபரித்துள்ளார். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி, 18 ஆம் ஆண்டில் கால் பதிப்பதனையிட்டு கடந்த வியாழக்கிழமை (10.04.08) நடைபெற்ற நிகழ்வில் அவர் பேசியதாவது: இன்று நெருக்கடியான கால கட்டத்தில், நெருக்கமான…
-
-
- 3 replies
- 1.3k views
- 1 follower
-
-
10.10.1987 ‘அன்று யாழ். கோப்பாய்ப் பகுதியில் இந்தியப் படையினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி அவர்கட்கும், அதே சம்பவத்தில் வீரச்சாவடைந்த 2ம் லெப். கஸ்தூரி, வீர வேங்கை ரஞ்சனி, வீரவேங்கை தயா ஆகியோருக்கும் எமது வீரவணக்கங்களைச் செலுத்துகின்றோம். [size=4]தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகி வீழ்ந்த விடுதலைச்சுடர்- 2ம் லெப் மாலதி எமது சமூகத்தில் வேரூன்றியிருந்த, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை – 2ஆம் லெப். மாலதி 22 ஆண்டுகளுக்கு முன் பொய்யாக்கினாள். பெண்ணினால் எல்லாம் முடியும் என்று செய்து கா…
-
- 19 replies
- 3.4k views
- 1 follower
-
-
கரும்புலி கப்டன் நாகராணி டிசம்பர் 25, 2020/தேசக்காற்று/தேசத்தின் புயல்கள்/0 கருத்து கரும்புலி கப்டன் நாகராணி: “பாதுகாப்பு” அந்தக் காப்பரண் வரிசை மிகவும் விழிப்பாக இருந்தது. இராணுவம் எந்தக் கணத்திலும் முன்னேறக்கூடும். அப்படி ஒரு முன்னேற்றத்திற்கு அவர்கள் முற்பட்டால் அதை முன்னணியிலேயே வைத்து முடக்க வேண்டும். ஜெயசிக்குறு சண்டையின் புளியங்குளக் களமுனை அது. புளியங்குளமென்பது சாதாரண ஒரு குளத்தின் பெயராகவோ அன்றி, ஒரு ஊரின் பெயராகவோ இல்லாமல் சிங்களப்படைகளின் அடி நரம்புகளையே அதிரவைக்கும் களமாக மாறியிருந்தது. முன்னேறுவதற்காக புறப்படும் ஒவ்வொரு சிங்களச் சிப்பாயும் பயப்பீதியால் நடுங்கிய களமுனை அது. புளியங்குளமென்பது புலிகளின் புரட்சிக்…
-
- 0 replies
- 692 views
-
-
யார் இந்த ராதா? தமிழீழ போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்கட்கு ராதாவை தெரியாமல் இருக்க முடியாது. யாழ். இந்துக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே ஆற்றலும் ஆளுமையும் மிக்க இளைஞனாயிருந்த ஹரிச்சந்திரா தான் 1983ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டதும் தலைவரினால் ராதா எனப் பெயரிடப்பட்டு எமது விடுதலைப் பயணத்தில் தளபதி ராதா ஆகினார். கல்லூரியில் படிக்கும் காலத்திலும், பின்னரும் தான் ராதா எப்போதும் அழகான ஆடம்பரமற்ற உடைகளை உடுத்தும் பழக்கம் உடையவர். இதனால் யாழ். வீதிகளில் உந்துருளியில் உலா வந்த ராதாவைப் பார்ப்பவர்கட்கு அவர் ஓர் அரச மேலாளரைப் போலவோ அல்லது மருத்துவரைப் போலவோ தோன்றினாரே அன்றி வேறு வகையான பார்வையைக் கொடுக்கவில்லை. அமைதியும் கவர்ச்சியும் கொண்ட அவர…
-
-
- 15 replies
- 2.1k views
-
-
12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகி திலீபனின் நினைவுநாள்! இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து நீரும் அருந்தாமல் 12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகி திலீபனின் 32ஆவது நினைவுநாள் இன்றாகும். இவரின் மறைவு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட முறுகல் நிலைக்கும் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் வலுவான நிலையை அடைவதற்கும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. தியாகி திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு ஆதவனின் சிறப்பு தொகுப்பு காணொளியாக… http://athavannews.com/12-நாட்கள்-உண்ணாவிரதமிருந/
-
- 4 replies
- 817 views
-
-
செல்லப்பெருமாள்அருமைராசா கொக்குத்தொடுவாய்முல்லை 2.2.1961-15.5.1989 இராணுவப் பரிசோதனை ஒன்றின் போது கையை இழந்துஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றான். ஒரு போராளி.வருவோர் போவோர் எல்லாம் அவனுக்கு ஆறுதலும், அனுதாபமும் தெரிவிக்கின்றனர். அது அவனுக்கு சினத்தை மூட்டுகின்றது. இறுதியாக அவனது தாய் வருகின்றாள். நீபோராடியது போதும். இனி உனக்கு ஒரு கையில்லை வீட்டிலேயே இரு. பாசத்தின்மேலீட்டால் இப்படியோரு கோரிக்கை விடுகின்றாள் தாய். அது அவனது மனக்கொதிப்பைஅதிகரிக்கினறது. தனக்கு அனுதாபம் கூறவந்தவர்களுக்கு சொல்ல வேண்டியதைச்சொல்ல இதுதான் தருணம் எனத் தீர்மானிக்கின்றான். எனக்கு இன்னொரு கை இருக்கு. உறுதியுடன் தெளிவாக ஒலிக்கின்றது அவனதுவார்த்தைகள். அவனுக்கு ஆறுதல் கூற முனை…
-
- 11 replies
- 2k views
-