மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
956 topics in this forum
-
தலைநகர் ஊற்றெடுத்த உப்பாற்றிலே 1971.02.05 அன்று உப்பாற்று மண்ணின் விடிவிற்காக மட்டுமல்லாமல் தமிழீழ மண்ணின் விடிவிற்காகவும் ஆண் மகன் ஒருவனை ஈன்றெடுத்தாள் அன்னை இராசமணி. தாய் தந்தையருக்கு மூன்றாவது இளம்பிறையாக தோன்றியவனுக்கு வசந்தன் என்று செல்லப் பெயரிட்டார்கள். ஆனால் தன் சமுதாயம் அடக்கி ஒழிக்கப்படுவதைக் கண்ட கண்களும் உடலும் தீப்பிழம்புகள் போல சீறிப்பாய்ந்தன. என் இனிய உள்ளங்களுக்கா இந்த நிலை? இதை மாற்றியமைப்பேன் என்று தன்னுள் ஆணையிட்டான். தன் வீட்டைகாப்பது மட்டுமல்லாமல் தன் இனத்தையும் காக்கப் புறப்பட்டான். எவன் எதிரியோ அவனை கொன்று குவிப்பதுவே அவன் செயல். தனக்கு வேண்டிய பயிற்சிகளை மிக வேகமாக கற்றுத் தேர்ந்தான். தோற்றம் சிறிதாக இருந்தாலும் அவனின் குணவியல்வுகளும் …
-
- 5 replies
- 1k views
-
-
11.12.2001 அன்று திருகோணமலை மாவட்டம் பாலத்தோப்பூர் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் மனோஜ் உட்பட்ட நான்கு மாவீரர்களினதும் வாழைச்சேனை செற்றடி காவல்துறை நிலையம் மற்றும் படை முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 10 மாவீரர்களினதும் 10ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். பாலத்தோப்பூர் சிறிலங்கா படை முகாம் தாக்குதலில் லெப்.கேணல் மனோஜ் (பாலசிங்கம் வந்தகுமார் - உவர்மலை. திருகோணமலை), மேஜர் குமாரவேல் (செல்வராசா ஆனந்தன் - மாமாங்கம், மட்டக்களப்பு), லெப். கலைமதி (செல்வநாயகம் தர்சினி - மூதூர், திருகோணமலை). 2ம் லெப்.தேவன் (கென்றி செபஸ்ரியான் - மூதூர், திருகோணமலை) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவ…
-
- 1 reply
- 1k views
-
-
08.12.1999 அன்று முல்லைக் கடற்பரப்பினூடாக கடற்புலிகள் வழங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகினை இடைமறித்து மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் லெப்.கேணல் கார்வண்ணன், மேஜர் யாழ்வேந்தன், மேஜர் இசைக்கோன் மற்றும் கப்டன் கானவன் ஆகியோரின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். இக்கரும்புலி வீரர்களின் தாக்குதலில் சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகு கடுமையாக சேதமடைந்ததுடன் அதிலிருந்த கடற்படையினர் நால்வர் கொல்லப்பட்டும் மேலும் பலர் காயமடைந்திருந்தனர். விடுதலைப் போருக்கு வலுச்சேர்க்க கொண்டுவரப்பட்ட பொறுமதி வாய்ந்த போர்க் கருவிகள் மற்றும் வெட…
-
- 11 replies
- 1.6k views
-
-
தளபதி லெப்.கேணல் ஜீவன் 10ம் ஆண்டு நினைவு நாள் Tuesday, December 6, 2011, 0:29 06.12.2001 அன்று மட்டக்களப்பு, வாகனேரிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மட்டு. அம்பாறை மாவட்ட இணைத் தளபதி லெப்.கேணல் எழிலவன் (ஜீவன்) அவர்களின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். இந்த மாவீரரின் வீரவரலாற்றில் ஒரு பகுதி கையெட்டும் தூரமே கண்ணுக்குத் துலங்காத மைசொட்டும் இரவு. உடலெங்கும் உரிமையோடு கை போட்டிருக்கும் முள் செடிகள். கொழும்பு ரோட் (மட்டு. – கொழும்பு நெடுஞ்சால…
-
- 17 replies
- 1.7k views
-
-
03.12.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் வரதன் (றொனி/சாமி) அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் தன்னை ஆகுதியாக்கிய இந்த வீரமறவனுக்கு எமது வீரவணக்கங்கள் http://meenakam.com/...ical/2011/12/03 தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்துக்காக தம்மை இந்நாளில் ஆகுதியாக்கிய வீரமறவர்களுக்கு வீரவணக்கம் .
-
- 7 replies
- 1.2k views
-
-
தமிழீழ தாயக விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கிய வீரவேங்கைகளில் 17 ஆயிரம் வரையான மாவீரர்களின் பெயர் விபரங்கள், மற்றும் ஒளிப்படங்கள், வீரவரலாறுகள் உட்பட்ட பல்வேறு விடயங்களுடன் வீரவேங்கைகள் இணையம் இன்று முதல் இணைய வலையில் கால் பதிக்கிறது. www.veeravengaikal.com
-
- 6 replies
- 10.2k views
-
-
-
By eelapirean at 2011-11-13
-
-
- 10 replies
- 1.7k views
-
-
1982 முதல் 1987 வரை வீரச்சாவை எய்திய மாவீரர்கள் விம்பகம்
-
-
- 7 replies
- 1.4k views
-
-
18.11.1997 அன்று வவுனியா மதியாமடுப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் யோகரஞ்சன் அவர்களின் 13ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவனுக்கு எமது வீரவணக்கங்கள்.
-
- 14 replies
- 1.6k views
-
-
15.11.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் விடுதலை அவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்று. தமிழீழ தாயக விடுதலைக்காய் தன்னை ஈகம் செய்த இந்த வீரமகளிற்கு எமது வீரவணக்கங்கள். இன்றையநாளில் களமாடி வீழ்ந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.
-
- 10 replies
- 1.4k views
-
-
17.11.1994 அன்று நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடத்திய தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் மல்லி(அமுதன்) அவர்களின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்காவில் சந்திரிகா தலைமையில் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி தமிழீழ விடுதலைப் புலிகள் நல்லெண்ண நடவடிக்கையாக அறிவித்த தன்னிச்சையான போர்நிறுத்த காலப்பகுதியிலேயே சிறிலங்கா படையினரால் லெப்.கேணல் மல்லி மீதான தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. http://meenakam.com/...ical/2011/11/17 தமிழீழ தாயக விடியலுக்காய் உழைத்து வீரச்சாவை அணைத்துக் கொண்ட இந்த வீரமறவனுக்கு எனது வீரவணக்கங்கள்.
-
- 8 replies
- 1.3k views
-
-
அரசியற்பணிக்காக படையினரின் வல்வளைப்பிலுள்ள அக்கரைப்பற்றிற்கு சென்றவேளை ஒட்டுக்குழுவினரால் நடத்தப்பட்ட தாக்குதலின் போது வீரச்சாவடைந்திருந்தார். இம் மாவீரரிற்கு எமது வீரவணக்கங்கள். http://www.eeladhesam.com/index.php?option இன்றையநாளில் களமாடி வீழ்ந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.
-
- 5 replies
- 988 views
-
-
பூநகரி நாயகர்களின் நினைவு நாள் இன்று! பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது மேற்கொள்ளப்பட்ட தவளை படை நடவடிக்கையில் வீரச்சாவை அணைத்து கொண்ட வேங்கைளின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 11.11.1993 தொடங்கப்பட்ட படை நடவடிக்கையில் பூநகரி படைத்தளத்தின் பெரும் பகுதி விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டு தகர்த்து அழிக்கப்பட்டதுடன் பெருந்தொகையான போராயுதங்களும் வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டன. இந்த வெற்றிகர சமரில் லெப்.கேணல் குணா, லெப்.கேணல் நவநீதன், லெப்.கேணல் அருணன்(சூட்), லெப்.கேணல் அன்பு, லெப்.கேணல் பாமா, கடற்கரும்புலிகள் மேஜர் கணேஸ்(குயிலன்), மேஜர் கோபி(குமணன்) உட்பட 460 வரையான போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். பலாலி படைத்தளத்திலி…
-
-
- 13 replies
- 1.8k views
-
-
பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது மேற்கொள்ளப்பட்ட தவளை படைநடவடிக்கையில் வீரச்சாவை அணைத்து கொண்ட வேங்கைளின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 11.11.1993 தொடங்கப்பட்ட படைநடவடிக்கையில் பூநகரி படைத்தளத்தின் பெரும் பகுதி விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டு தகர்த்து அழிக்கப்பட்டதுடன் பெருந்தொகையான போராயுதங்களும் வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டன. இந்த வெற்றிகர சமரில் லெப்.கேணல் குணா, லெப்.கேணல் நவநீதன், லெப்.கேணல் அருணன்(சூட்), லெப்.கேணல் அன்பு, லெப்.கேணல் பாமா, கடற்கரும்புலிகள் மேஜர் கணேஸ்(குயிலன்), மேஜர் கோபி(குமணன்) உட்பட 460 வரையான போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். பலாலி படைத்தளத்திலிருந்து பூநகரியில் தாக்குதலுக்கு இலக்காகும் படையிருக்கான உதவி…
-
- 17 replies
- 3.7k views
-
-
05.11.1999 அன்று ஓயாத அலைகள் – 3 படை நடவடிக்கையில் மணலாற்றில் அமைந்திருந்த பராக்கிரமபுர படைத்தளத்தினைத் தாக்கியழிப்பதற்காக நகர்ந்து கொண்டிருந்தவேளை நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலிகள் மேஜர் அருளன், மேஜர் சசி ஆகியோரின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். http://meenakam.com/...ews/2011/11/05/ இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய இவ் வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.
-
- 11 replies
- 1.6k views
-
-
04.11.1999 அன்று ஓயாத அலைகள் 3 படைநடவடிக்கையில் ஒதியமலை பகுதி மீட்பின் போதான சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் மணிவண்ணனின் 11ம் ஆண்டு வீரவணக்க நாளும், கிளாலிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் நடைபெற்ற மோதல் ஒன்றில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் தர்சனின் 10ம் ஆண்டு நினைவு நாளும், 04.11.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அசோக்குமாரின் 3ம் ஆண்டு வீரவணக்க நாளும் இன்றாகும். ஓயாத அலைகள் – 3 படைநடவடிக்கையில் 04.11.1999 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி படையணியைச் சேர்ந்த மேஜர் இராசநாயம், லெப். ஆருரான், 2ம். லெப். திருக்குமரன் 2ம் லெப். வல்லவன், 2ம் லெப். சுபாசன், வீரவேங்கை தீபன் உட்…
-
- 15 replies
- 1.7k views
-
-
கடற்கரும்புலி மேஜர் முத்துமணி வீரவணக்க நாள் இன்றாகும் 03.11.1999 அன்று முல்லைக் கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட படகுவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் முத்துமணியின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். http://meenakam.com/...ews/2011/11/03 தமிழ் ஈழ விடுதலைக்காக தன் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரருக்கு வீரவணக்கம் மற்றும் இன் நாளில் வீரகாவியமான வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கம்.
-
- 12 replies
- 1.5k views
-
-
நாகர்கோவில் கடற்பரப்பில் கடற்படையின் கூகர், டோறா பீரங்கிப் படகு மூழ்கடிப்பில் ஏழு கடற்கரும்புலிகளின் வீரவணக்க நாள் இன்றாகும் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பரப்பில் 01-11-2008 அன்று சிறீலங்கா கடற்படையினருக்கும், கடற்புலிகளுக்கும் இடையோ ஏற்பட்ட கடற்சமரின் போது காலை 5.45 மணியளவில் நடைபெற்ற சமரின்போது கூகர் படகு ஒன்றும் டோறாப்படகு ஒன்றும் கடற்புலிகளின் கரம்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன் நீரூந்து விசைப்படகு ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளதோடு ,இருபது கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர் ‘ வடமராட்சி கிழக்கில் உள்ள மணற்காட்டுக்கு நேரான கடற்பரப்பில் 01-11-2008 சனிக்கிழமை அதிகாலை 4:00 மணியளவில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடற்புலிகள் அணியை ச…
-
- 7 replies
- 1.3k views
-
-
பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 6 போராளிகளின் வீரவணக்க நாள் கடந்த 02.11.2007 அன்று வீரச்சாவடைந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஏழு மாவீரர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று. சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் 2007 நவம்பர் 2 ஆம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரம் : * பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் என்று அழைக்கப்படும் பரமு தமிழ்ச்செல்வன். (சொந்த முகவரி: யாழ். மாவட்டம், தற்காலிக முகவரி: கிளிநொச்சி மாவட்டம்) * லெப். கேணல் அன்புமணி அல்லது அலெக்ஸ் என்று அழைக்கப்படும் முத்துக்குமாரு சௌந்தரகிருஸ்ணன் (சொந்த முகவரி யாழ். மாவட்டம்) * மேஜர் மிகுந்தன் என்று அழைக்கப்படுமம் தர்மராசா விஜயகுமார் (சொந்த முகவரி: யாழ். மாவட்டம்) * மேஜர் கலையரசன் அல்லது நேத…
-
- 13 replies
- 1.3k views
-
-
31.10.1987 அன்று இந்தியப் படையினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கப்டன் நிசாரின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தாயக விடுதலைக்காய் தனது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவனுக்கு எமது வீரவணக்கங்கள். http://meenakam.com/news/flashnews/2011/10/31 தாயக விடுதலைக்காய் தனது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவனுக்கு எனது வீரவணக்கங்கள்.
-
- 10 replies
- 1.3k views
-
-
யாழ். வலிகாமம் பகுதியில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட சூரியக்கதிர் படைநடவடிக்கைக்கு எதிரான சமரில் 30.10.1995 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அகிலா, லெப்.கேணல் உருத்திரா(உருத்திரன்) ஆகியோரின் 15ம் ஆண்டு வீரவணக்க நாளும், 30.10.2006 அன்று மட்டு மாவட்டம் வாகரைப் பகுதியில் அரவம் தீண்டியதனால் சாவடைந்த லெப்.கேணல் வரதா(ஆதி) அவர்களின் 4ம் ஆண்டு வீரவணக்க நாளும் இன்றாகும். தாயக விடுதலைக்காய் தம்மை அர்ப்பணித்து வீரச்சாவைத் தழுவிய இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கம். http://meenakam.com/...ews/2011/10/30/ தமிழ் ஈழம் என்ற உயரிய இலட்சியத்துக்காக தம் இனிய உயிர்களை ஈகம் செய்த இந்த மாவீரர்களுக்கும், மற்றும் இன்றையநாளில் வீரசாவினைத்தளுவிய ஏனைய வீரமறவ…
-
- 10 replies
- 1.5k views
-
-
29.10.1999 அன்று முல்லை மாவட்டம் ஒட்டு சுட்டான் பகுதியில் சிறிலங்கா படையினர் மறைந்திருந்து நடத்திய தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் பௌத்திரன், மணலாற்றுப் பகுதியில் இதே நாள் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் ஆகியோரின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். http://meenakam.com/...ews/2011/10/29/ தமிழ் ஈழம் என்ற உயரிய இலட்சியத்துக்காக தம் இனிய உயிர்களை ஈகம் செய்த இந்த மாவீரர்களுக்கும், மற்றும் இன்றையநாளில் வீரசாவினைத்தளுவிய ஏனைய வீரமறவர்களுக்கும் எனது வீரவணக்கம்.
-
- 10 replies
- 1.5k views
-
-
29.10.1995 அன்று அளவெட்டியில் அமைந்திருந்த சிறிலங்கா படை நிலைகளிற்குள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 11 கரும்புலி வீரர்களின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் தாயக விடுதலைக்காய் தம்மை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். http://meenakam.com/historical/மாவீரர்கள்/2011/10/29 தமிழ் ஈழம் என்ற உயரிய இலட்சியத்துக்காக தம் இனிய உயிர்களை ஈகம் செய்த இந்த மாவீரர்களுக்கும், மற்றும் இன்றையநாளில் வீரசாவினைத்தளுவிய ஏனைய வீரமறவர்களுக்கும் எனது வீரவ…
-
- 13 replies
- 1.4k views
-
-
இன்று மேஜர் தில்லையன்,கப்டன் கலையரசன் அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவு நாள் திருகோணமலைத் துறைமுக வாயிலில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிக் கலத்தினை மூழ்கடித்து வீரச்சாவடைந்திருந்தனர். இவர்களுக்கு ஈழதேசம் தனது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது. http://www.eeladhesa...ndex.php?option தமிழ் ஈழத்தாயகத்தை மீட்க்கும் போராட்டத்தில் தம் இனிய உயிர்களை அர்ப்பணித்த இந்த வீரவேங்கைகளுக்கு வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.
-
- 13 replies
- 1.3k views
-