மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
30.10.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துன்கிந்த என்ற எரிபொருள் வழங்கல் கப்பலை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் கடலரசன், மேஜர் கஸ்தூரி, கப்டன் கனியின்பன், கப்டன் அன்புமலர் ஆகியோரின் 9ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தாயக விடுதலைக்காய் தம்மை ஆகுதியாக்கிய இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.
-
- 11 replies
- 1.9k views
-
-
14.10.1999 முல்லை மாவட்டம் கொக்குளாய்க் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட படகு விபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அருந்தவம், லெப்.கேணல் புவனேஸ் உட்பட்ட ஆறு கடற்கரும்புலி மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். கொக்குளாய் கடற்பரப்பில் கடற்படையினரின் டோறா கடற்கலங்கள் கடற்புலிகளால் வழி மறிக்கப்பட்டு தாக்கப்பட்டுக் கொண்டிருந்தவேளை டோறா கலங்களை இலக்கு வைத்து நகர்ந்து கொண்டிருந்த இரு கடற்கரும்புலிப் படகுகள் எதிர்பாராத விதமாக ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதினால் ஏற்பட்ட விபத்தில் லெப்.கேணல் அருந்தவம், லெப்.கேணல் புவனேஸ், மேஜர் கலைமகள், மேஜர் சூரியப்பிரபா, மேஜர் பரணி, கப்டன் சுதாகரன் ஆகிய கடற்க…
-
- 8 replies
- 1.9k views
-
-
கடற்கரும்புலிகள் மேஜர் இளமகன் , மேஜர் அன்பு , மேஜர் சந்திரா , மேஜர் வினோதா , மேஜர் வலம்புரி , கப்டன் சித்தா , கப்டன் அருளரசன் , கப்டன் சுதாகர் ஆகிய கடற்கரும்புலிகளின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று. மனமே !… மறந்து விடாதே…. 27.05.1997 அன்று முல்லை கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட படகு விபத்தின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்கள். தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள். ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “ http://thesakkaatu.com/doc7728.html தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீர…
-
- 10 replies
- 1.9k views
-
-
எல்லைக்கு வெளியேதான் இவனின் உறைவிடம் அதுவே மறைவிடமும்கூட எத்தனை எழுதினும் எழுத்திலோ பேச்சிலோ அடக்கிட முடியா உன்னத மனிதன் இவன். கற்பனை என்றொரு வார்ததை உண்டு தமிழில். அத்தனை கற்பனையும் கடந்த வீரம் இவனது. இவன் காற்றின் வீச்சில் கனல் எடுக்க தெரிந்த கந்தக வித்தை தெரிந்தவன். எத்தனை காலம் இவன். மூச்சை அடக்கி கொண்டே பேரினவாத மூளைக்குள். துளையிட்டு போய் அமர்ந்திருந்தவன். மன்னார் மாவட்டம் பள்ளமடுப்பகுதியில் சிறிலங்கா படைகளின் ஆழஊடுருவும் படைப்பிரிவு நடாத்திய கிளைமோர்த் தாக்குதலில் கேணல் சாள்ஸ் அவர்களுடன் லெப்டினன்ட் வீரமாறன் லெப்டினன்ட் காவலன் ஆகியோரும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுய…
-
- 13 replies
- 1.9k views
- 1 follower
-
-
முல்லைத்தீவு முள்ளியவளையினை சேர்ந்த வன்னிமாவட்ட முன்னாள் படைத்தளபதி நல்லய்யா அமிர்லிங்கம் என்று அழைக்கப்படும் மேஜர் பசீலனின் 23 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடக்ககாலத்தில் தன்னை இணைத்துக்கொண்ட பசீலன் தொடக்க பயிற்சியினை இந்தியாவில் பெற்று வன்னியில் ஒர் கெரில்லாபோராளியாக தன்னை மாற்றிக்கொண்டு வன்னியில் பல்வேறு தாக்குதல்களை எதிரிமீது தொடுத்து பலபோராளிகளை உருவாக்கி வன்னியில்சண்டைக்காறர்களில் சிறப்பானவன் எனபெயரெடுத்தான் மேஜர்பசீலனின் வன்னி தாக்குதல் அணியில் பிரிகேடியர் பால்றாஜ் அவர்கள் ஒரு போராளியாக இருந்தகாலகட்டங்களில் எல்லாம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்திய அமைதிப்படையினருக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை தொடுத்து பலதளபதிகளை …
-
-
- 19 replies
- 1.9k views
-
-
வவுனியாவை அதிர வைத்த புலிகளின் மும்முனைத் தாக்குதல் வவுனியாவை அதிர வைத்த புலிகளின் மும்முனைத் தாக்குதல் – (சிறிலங்கா இராணுவத்தின் வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதான கரும்புலிகள் தாக்குதல்) வான் புலிகள் மற்றும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணி ஆகியவற்றின் துணையுடன் 09.09.2008 அன்று இப்பத்து கரும்புலி வீரர்களும் வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்குள் ஊடுருவி சிறிலங்கா படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்திருந்தனர். வவுனியாவில் நகரின் தென்பகுதியில் வன்னிப் பிராந்திய இராணுவத் தலைமையகம், விமானப்படைத் தளம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்திருந்த ஜோசெவ் படைத்தளத்தின் மீது புலிகள் நடத்திய மூன்று முனைத் தாக்குதல் படைத் தரப்புக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. …
-
- 2 replies
- 1.9k views
-
-
23.09.1990 அன்று சிறிலங்கா கடற்படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கிளிநொச்சி மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் சந்திரன் அவர்களின் 20ம் ஆண்டு நினைவு நாளும், 23.09.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் குயில் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள். படங்களைப் பெரிதாய்ப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்.
-
- 5 replies
- 1.9k views
-
-
ஓட்டுக்குழு கருணா சதிவலையில் சிக்குண்ட லெப். கேணல் நீலன் என்றும் அழியாத சுவடு மட்டு – அம்மாறை மாவட்ட புலனாய்வுத்துறை துணைப் பொறுப்பாளர் லெப். கேணல் நீலன் வீரவணக்க நாள் இன்றாகும். தென் தமிழீழத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒட்டுக்குழு கருணாவின் துரோகத்தனத்தால் துரோகிகள் மேற்கொண்ட தீய செயல்களால் 12.04.2004 அன்று துரோகி கருணாவால் சுட்டபட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட புலனாய்வுத்துறை துணைப் பொறுப்பாளர் லெப். கேணல் நீலன் உட்பட ஏனைய போராளிகளின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலை போராட்டத்தின் கறுப்பு பங்கங்களில் முதல் பக்கமாக பெயர் கூட குறிப்பிட முடியாத துரோகங்கள் சி…
-
-
- 7 replies
- 1.9k views
-
-
-
- 2 replies
- 1.9k views
-
-
தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவு தமிழீழ மக்கள், விடுதலைப்போராட்டபாதையில் இன்றும் நிரப்பமுடியாத இடமாக காணப்படுகின்றது, தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் ஆழமாக நேசித்த ஒரு விடுதலைவீரனாக அன்ரன் பாலசிங்கம் அவர்கள் காணப்பட்டார். தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடக்காலத்தில் இருந்து செயற்பட்ட பாலா அண்ணா விடுதலை இயக்கத்தின் பிதாவாக காணப்பட்டார். தமிழீழ தேசியத்தலைவர் அவர்களுக்கும் விடுதலைப் போராளிகளுக்கும் உலக போராட்ட வரலாறுகளை எடுத்துக் கூறி பல்வேறு நாடுகளின் அரசியலாளர்களின் தொடர்புகளை ஏற்படுத்தி அதனுடாக விடுதலைக்கான உழைப்பினை மேற்கொண்டதில் தேசத்தின்குரல் முதன்மையானவர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனது துணை…
-
- 8 replies
- 1.9k views
-
-
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாவு ஒறுப்பு அளிக்கப்பட்ட சாந்தன், முருகன் மற்றும் வேரறிவாளன் ஆகியோரின் உயிர்காக்க தன்னுயிரை ஈகம் செய்த “வீரத்தமிழிச்சி” செங்கொடியின் 1ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் சாவு ஒறுப்பை நிறைவேற்ற இந்திய அரசு முயன்றவேளை அம்மூவரையும் காப்பாற்றும் நோக்குடன் 28.08.2011 அன்று காஞ்சிபுரம் தாலுகா பணிமனையின் முன்பு தன்னுடலில் தீமூட்டி வீரத்தமிழிச்சி செங்கொடி ஈகைச்சாவடைந்தார். தன்இன உறவுகள் மூவரின் உயிர்காக்க தன்னுயிரை ஆகுதியாக்கிய இந்த வீரத்தமிழிச்சியை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
-
- 21 replies
- 1.9k views
- 1 follower
-
-
ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மாவீரர் மேஜர் சிட்டு. இன்று அவரின் நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது. தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் குரலிற் பாடி இசையுலகிற்குள் நுழைந்தார். அருமையான போராளிக்கலைஞனை இனங்காட்டியதும் தொடக்கி வைத்ததும் “கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்” என்ற அப்பாடலே. சிட்டண்ணனின் நுழைவின்போது இன்னோர் ஈழத்துப்பாடகர் சாந்தன் புகழ்பெற்றிருந்தார். பின்வந்த காலத்தில் கேணல் கிட்டு அவர்கள் நினைவாகப் பாடப்பட்ட பாடல்கள் வெளிவந்தபோ…
-
- 14 replies
- 1.9k views
- 1 follower
-
-
அமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள்- மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை இவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் லெப். கேணல் ஜொனி. கேணல் கிட்டுவையும் லெப். கேணல் ஜொனியையும் அக்கால நிகழ்ச்சிகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. கேணல் கிட்டு பல்துறை ஆற்றலாளராக திகழ்ந்ததில் பக்கத்துறையாக விளங்கியவர்களில் ஜொனி குறிப்பிடத்தக்கவர். பருத்தித்துறை புலோலியில் சாரையடி என்ற ஊரில் 21.5.1962 இல் பிறந்தார். அவரது இயற்பெயர் விக்கினேஸ்வரன் விஜயகுமார். பல்கலைக்கழகத்தின் விவசாயப்பீட மாணவராக இருந்தபோது 1983 ஆம் ஆண்டு போராட்டத்தில் இணைந்து கொண்டார். சிறுவனாக இருந்தபோதே போராட்டத்திலே இணைய முற்பட்டபோது அவரது பெற்றோர் விரும்பாததால் கொழும்பில் படிக்க வைக்கப்பட்டார். ஆனால் 1983 ஆம் ஆண்டில் …
-
- 12 replies
- 1.9k views
-
-
14.10.1999 முல்லை மாவட்டம் கொக்குளாய்க் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட படகு விபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அருந்தவம், லெப்.கேணல் புவனேஸ் உட்பட்ட ஆறு கடற்கரும்புலி மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். கொக்குளாய் கடற்பரப்பில் கடற்படையினரின் டோறா கடற்கலங்கள் கடற்புலிகளால் வழி மறிக்கப்பட்டு தாக்கப்பட்டுக் கொண்டிருந்தவேளை டோறா கலங்களை இலக்கு வைத்து நகர்ந்து கொண்டிருந்த இரு கடற்கரும்புலிப் படகுகள் எதிர்பாராத விதமாக ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதினால் ஏற்பட்ட விபத்தில் லெப்.கேணல் அருந்தவம், லெப்.கேணல் புவனேஸ், மேஜர் கலைமகள், மேஜர் சூரியப்பிரபா, மேஜர் பரணி, கப்டன் சுதாகரன் ஆகிய கடற்கரும்ப…
-
- 13 replies
- 1.9k views
-
-
போராட்ட வரலாற்றில் என்றும் எங்களுடன் சாள்ஸ்! 2008 ஆம் ஆண்டின் முதல் வார நாட்கள். தீவிர மோதல்களால் மன்னார் களமுனை அதிர்ந்துகொண்டிருந்த காலம். தளபதி பாணு அவர்களைச் சந்திக்க விரும்பியிருந்தேன். மன்னாரில் எமது வழமையான பணிகளுடன், போகுமிடத்தில் பாணுவையும், களநிலவரத்தையும் கண்டு வரலாம் என்ற விருப்புடனான பயணம். பயணத்திட்டத்தை முறைப்படி தலைவருக்கு முன்வைக்கும் சந்திப்பு. தலைவரின் புருவம் உயர்கின்றது. ~இப்ப மன்னாருக்கு ஏன் போகவேண்டும்? ” நீ இப்போது அங்கு போய் என்ன செய்யப்போகின்றாய்?” தனது வழமையான கேள்விகளுக்கான பதில்களுடன் எமது தயார் நிலையைக் கண்ணுற்ற தலைவர் கூறுகின்றார். மன்னார் களமுனையின் பின்னணியில் எதிரியின் சிறப்பு அணிகள் நிலையெடுத்துள்ளன. பிரதான வீதிகளினூடான பயணம…
-
- 2 replies
- 1.9k views
- 1 follower
-
-
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி மேஜர் கிண்ணி (அசோகன்) கந்தசாமித்துரை ரவீந்திரன் வேம்படி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் 25.07.1966 - 10.07.1992 கிளிநொச்சி இயக்கச்சியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு என்றென்றும் மறக்க முடியாத நண்பன், மாவீரன் கிண்ணிக்கு வீர வணக்கம்!💐🙏
-
-
- 7 replies
- 1.8k views
- 1 follower
-
-
[size=4]03.11.2000 அன்று திருகோணைமலைத் துறைமுக வாயிலில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிக் கலத்தினைச் சேதமாக்கி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நரேஸ், மேஜர் சுடர்மணி(செங்கதிர்) ஆகியோரின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.[/size] கரும்புலிகள் உயிராயுதம்
-
- 6 replies
- 1.8k views
-
-
தமிழர் இதயங்களில் உறைந்திருக்கும் தமிழ்ச்செல்வன் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் இன்றும் தமிழ் மக்களின் மனங்களில் வீற்றிருக்கின்ற நித்தியப் புன்னகை அழகன். தமிழ்மக்களின் விடுதலைக் கனவைச் சுமந்து விடுதலைப் போரில் பயணித்த ஆயுத - அரசியல் போராளியான இவர் ஏழுவருட காலங்கள் வரையில் ஆயுதப் போராளியாகவும், இருபத்தியொரு வருட காலம் அரசியல் போராளியாகவும் உலகத் தமிழ்மக்கள் மத்தியில் வலம் வந்தவர். விடுதலைப் போராட்டத்தின் அரசியல் வெற்றிடத்தை நிரப்பி தனக்கிட்ட பொறுப்பைத் தமிழினத்தின் கட்டளையாக ஏற்று புயலாகச் செயற்பட்டதோர் இராஜதந்திரப் போராளியான தினேஷ் என்ற இயற்பெயர் கொண்ட தமிழ்ச்செல்வன் 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் திகதி அதிகாலைவேளைப் பொழுதில் விமானப் படையினரின் குண்டு வீச்சுத் தாக…
-
- 0 replies
- 1.8k views
-
-
நன்றி - யூரூப்
-
- 1 reply
- 1.8k views
-
-
28.06.1995 அன்று திருகோணமலை மாவட்டத்தில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் காந்தன்(கில்மன்) உட்பட்ட மூன்று மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். திருகோணமலை மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் ஆளுகையை வலுப்படுத்தும் நோக்கில் 1995ம் ஆண்டில் சாள்ஸ் அன்ரனி படையணி லெப்.கேணல் கில்மன் தலைமையில் தேசியத் தலைவர் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டது. பல்வேறு நெருக்கடிகளிற்கு மத்தியில் காட்டுப்பகுதிகளில் வலுவான தளங்களையமைத்துடன் சிறிலங்கா படையினர் மீதும் பல அதிடித் தாக்குதல்கள் நடாத்தப்பட்டு சிறிலங்கா படையினருக்கு பலத்த இழப்புக்கள் சாள்ஸ் அன்ரனி படையினரால் ஏற்படுத்தப்பட்டது. காட்ட…
-
- 13 replies
- 1.8k views
-
-
செயற்திறன் மிக்க தளபதி லெப் கேணல் விநாயகம் On Feb 4, 2020 இரண்டு தசாப்தகாலமாக தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் வெற்றிநடைபோட்டு விழிமூடிக்கொண்ட கடற்புலிகளின் துணைத் தளபதி லெப். கேணல் விநாயகம். நிலையுடன் பெயர்: லெப். கேணல் விநாயகம். சொந்தப்பெயர்: தங்கவேலு சுதரதன். சொந்த முகவரி: மருதங்கேணி வடக்கு தாளையடி. (யாழ் மாவட்டம்) வீரச்சாவுத்திகதி: 04.02.2009 வீரச்சாவுச் சம்பவம்: சுண்டிக்குளம், பேப்பாரைப்பிட்டிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட வழிமறிப்புத் தாக்குதலில். விநாயகம் அண்ண வீரச்சாவு என்ற செய்தி எனது காதுகளை எட்டியபோது ஒருமுறை எனது இதயம் உறைந்து போனது. விடுதலைப் போராட்டத்தில் இழப்புக்கள் ஒன்றும் புதியவை அல்ல. இழப்ப…
-
- 3 replies
- 1.8k views
-
-
மணலாற்றில் காவியமான சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின் உட்பட்ட ஆறு மாவீரர்களினதும், வவுனியாவில் காவியமான வீரவேங்கை கபில்ராஜ் என்ற மாவீரினதும் 21ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். மணலாற்றில் சிறிலங்கா படைகளால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட “மின்னல்” படை நடவடிக்கைக்கு எதிராக 17.09.1991 அன்று மேற்கொள்ளப்பட்ட முறியடிப்புச் சமரில் ஆறு போராளிகள் வீரச்சாவைத் தழுவினர். அவர்களின் விபரம் வருமாறு சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின் (பொன்னுச்சாமி பாஸ்கரன் - தையிட்டி, யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் மில்ராஜ் (வைரமுத்து விஜேந்திரன் - கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை) வீரவேங்கை அறிவழகன் (சுப்பிரமணியம் வேலாயு…
-
- 14 replies
- 1.8k views
- 1 follower
-
-
களுவாஞ்சிக்குடி சிறிலங்கா காவல்துறை நிலையத் தாக்குதலில் காவியமான லெப்.பரமதேவா, வீரவேங்கை ரவி ஆகியோரின் 28ம் ஆண்டு நினைவு நாளும், முல்லைக் கடலில் காவியமான லெப்.கேணல் அருணனின் 14ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். 22.09.1984 அன்று மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடிப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா காவல்துறை நிலையம் மீதான தாக்குதலின்போது மட்டக்களப்பு மாவட்ட தாக்குதல் படைத் தளபதி லெப்டினன்ட் ராஜா (இராமலிங்கம் பரமதேவா - மட்டக்களப்பு) வீரவேங்கை ரவி (தம்பையா வாமதேவன் - மகிழடித்தீவு, மட்டக்களப்பு) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவினர். 22.09.1998 அன்று முல்லைத்தீவுக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் இடம்பெற்ற மோதலில் லெப்.கேணல் அருணன் …
-
- 12 replies
- 1.8k views
-
-
பிரிகேடியர் சொர்ணம் சொர்ணம் வாழ்வு ஓர் வரலாறு தமிழீழத் தலைநகர் திருகோணமலை தந்த எங்கள் தானைத் தளபதி. தமிழ்த் தாயின் தமிழ்ப் பாலைப் பருகியவன். தமிழர்கள் உயிர்களுக்காக உள்ளம் துடித்தவன். தாய்மண்ணின் விடுதலைக் காற்றை மட் டுமே சுவாசிக்க நேசித்தவன். தமிழர்கள் படும் வதைகளில் விதையாகி வெடித்து வெளிவந்த வேங்கை. எங்கள் விலங்குகளைச் சிதறடிக்க விடுதலைப் புலியாகியவன். எங்கள் அன்னை பூமிக்காக அனைத்தையும் துறந்தவன். நெஞ்சில் விடுதலையெனும் நெருப்பேந்தியவன். அவன் வாழ்வில் அவன் உதடுகள் அண்ணன் என்ற சொல்லைத்தான் அதிகபங்கு உச்சரித்தது. தலைவனைத் தன் கண்ணுள் வைத்ததால் அவன் தலைவனின் கண்ணாகியவன். தானைத் தலைவனின் எண்ணக் கருவுக்கு உருவமைத்தவன். அவன்தான் புலிகளின் மூத்த தளபதி புகழ் பூத்த தளபதி…
-
- 7 replies
- 1.8k views
-
-
மட்டு அம்பாறை மாவட்ட துணைத் தளபதி லெப். கேணல் ஜீவன்...! ஜீவனுள்ள நினைவுகள்….. கையெட்டும் தூரமே கண்ணுக்குத் துலங்காத மைசொட்டும் இரவு. உடலெங்கும் உரிமையோடு கை போட்டிருக்கும் முள் செடிகள். கொழும்பு ரோட் (மட்டு. – கொழும்பு நெடுஞ்சாலை) அண்மித்து விட்டதால் காலணிகள் கைக்கு ஏறுகின்றன. ரைபிள் சிலிங்குகள் சலசலக்காது இறுக்கிப் பிடிக்கப்படுகின்றன. ஆபத்தைத் தவிர்க்கும் அளவிற்கு தேவையான இடைவெளி விட்டு முன்னே செல்பவரின் சிறு அரவத்தைக் கொண்டு திசையறிந்து செல்வதே ஒரு கலை. தென் ஈழக் காடுகளிலே இந்தக் காலைதான் தேவையான அரிச்சுவடி. கத்தி வெட்டுப் போல் ஒரு நகர்வு… கை வீசும் தென்றல் போல் ஒரு நகர்வு… இப்படி புத்தியையும் பலத்தையும் எடைபோட்டு நடந்ததாலேயே அங்கு போராட்டம் தாக்குப்பிடித்த…
-
-
- 3 replies
- 1.8k views
-