மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
18.10.2000 அன்று ஓயாத அலைகள் 4 படை நடவடிக்கையில் நாகர்கோவில் களமுனையில் விழுப்புண்ணடைந்து 23.10.2000 அன்று வீரச்சாவை அணைத்துக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் அவர்களினதும், இதே நாள் திருகோணமலைத் துறைமுகத்தில் வைத்து சிறிலங்கா கடற்படையின் மூன்று கடற்கலங்களை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் ரெஜி, மேஜர்கள் திருமாறன், மயூரன், நித்தி, நிதர்சன், றோஸ்மன் ஆகியோரின் 10ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீர மறவர்களிற்கும், இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.
-
- 11 replies
- 2.4k views
-
-
30.10.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துன்கிந்த என்ற எரிபொருள் வழங்கல் கப்பலை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் கடலரசன், மேஜர் கஸ்தூரி, கப்டன் கனியின்பன், கப்டன் அன்புமலர் ஆகியோரின் 9ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தாயக விடுதலைக்காய் தம்மை ஆகுதியாக்கிய இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.
-
- 11 replies
- 1.9k views
-
-
05.11.1999 அன்று ஓயாத அலைகள் – 3 படை நடவடிக்கையில் மணலாற்றில் அமைந்திருந்த பராக்கிரமபுர படைத்தளத்தினைத் தாக்கியழிப்பதற்காக நகர்ந்து கொண்டிருந்தவேளை நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலிகள் மேஜர் அருளன், மேஜர் சசி ஆகியோரின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். http://meenakam.com/...ews/2011/11/05/ இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய இவ் வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.
-
- 11 replies
- 1.6k views
-
-
சமர்கள நாயகனுக்கு வீர வணக்கம் 🙏/ ஆனையிறவில் வீசும் காற்றும் சொல்லும் பால்ராஜ் அண்ணாவின் வீரத்தை 💪/ என்றும் உங்கள் நினைவுடன் எங்கள் தமிழீழ பயணம் தொடர்கிறது 🙏
-
-
- 10 replies
- 1.1k views
- 1 follower
-
-
நாங்கள் எமது மண்ணில் வாழவேண்டும் என்பதற்காக தங்களையே அர்ப்பணித்தவர்கள். இவர்களிற்காக நாம் என்ன செய்யப்போகிறோம்? ம்ம்ம்... : / காலங்கள் மாறலாம்... ஏன் எண்ணங்கள் கூட மாறலாம், ஆனால் எமது இலட்சியம் மாறலாமா? தேசம் விட்டு தேசம் தாண்டிப் போனாலும், இறுதி உயிர்மூச்சு உள்ளவரை ஈழமே எமது குறிக்கோளாக இதையத்தில் பதிந்திருக்க வேண்டும்! http://youtu.be/wxMW1ZRPL98
-
- 10 replies
- 2.7k views
-
-
பூநகரிப் படையணி சிறப்புத் தளபதி ஈழப்பிரியன் வீரவணக்கம் மெய்ப்பாதுகாவலனாக…. தனிப்பட்ட உதவியாளனாக.. கிலோ வண் முகாம் பொறுப்பாளனாக… அரசியல் துறைக்கு ஆயுத அறிக்கை பரிசோதனாக, பயிற்சியாளனாக, துப்பாக்கி சூட்டு பயிற்சியாளனாக.. வினியோக அணி பொறுப்பாளனாக.. முகாம்கள் கட்டுமான பணிப்பாளனாக… இறுதியாக படையணிப்பொறுப்பாளனாக….. ஆரம்பத்தில் இருந்தே.. அரசியல் துறைப்பொறுப்பாள்ர் பிரிகேடியர் சு.ப. தமிழ் செல்வன் அவர்களின் வளர்ப்பில் வளர்ந்தவன். தமிழ்ச்செல்வண்ணரால் குந்தி இருந்து டொய்லட் போகமுடியாது.. (விழுப்புண் காரணமாக மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையின் பின்னர்) ஆகவே கொமட் தேவை. ஆனால் வெளியே செல்லும் போது கொமட் இருக்காது அதனால் எப்போதும் ஓர் உள்ளூரில் வடிவமைக்கப்ப…
-
- 10 replies
- 1.5k views
-
-
திருமலை மாவட்டத்தில் காவியமான கரும்புலி கப்டன் தமிழ்க்குமரன் உட்பட்ட ஆறு மாவீரர்களினதும், யாழ். மாவட்டத்தில் காவியமான லெப்.கேணல் சிவம் உட்பட்ட 21 மாவீரர்களினதும் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 10.09.2000 அன்று திருகோணமலை மாவட்டம் 13ம் கட்டைப்பகுதியில் சிறிலங்கா படையினர் சுற்றிவளைக்க முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில் கரும்புலி கப்டன் தமிழ்க்குமரன் (சின்னக்குட்டி சதீஸ்வரராஜா - யாழ்ப்பாணம்) தென்னமரவாடிப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் கப்டன் கலையரசன் (வேலாயுதம் பிரபாகர் - கிளிநொச்சி) புல்மோட்டைப் பகுதியில் பகுதியில் இடம்பெற்ற மோதலில் லெப்டினன்ட் அரவிந்தன் (கனகராசா விவேகா - யாழ்ப்பாணம்) மொறவேவ சிறிலங்கா படையினர் மற்றும் காவல்துறையினரின் கூட்டு ம…
-
- 10 replies
- 1.3k views
-
-
16.07.1990 அன்று மட்டக்களப்பு மாவட்டம் பலையடிவெட்டைப் பகுதியில் சிறலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிய மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப்.கேணல் றீகன் அவர்களின் 22ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் சிறிலங்கா, இந்தியப் படைகளிற்கு எதிராக பல்வேறு வெற்றிகரத் தாக்குதல்களை வழி நடாத்தியவர் தளபதி லெப்.கேணல் றீகன் அவர்கள். இவரின் தாக்குதல்களினால் பல நூறு சிறிலங்கா, இந்தியப் படையினர் உயிரிழந்தும், காயமடைந்தும் களமுனைகளிலிருந்து அகற்றப்பட்டிருந்தனர். தென் தமிழீழத்தின் புகழ் புத்த தளபதிகளான கேணல் ரமேஸ், கேணல் ரமணன், கேணல் ராம் ஆகியோர் லெப்.கேணல் றீகன் அவர்களின் படையணியில் இருந்து அவரினால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள் என்பது குற…
-
- 10 replies
- 1.7k views
-
-
26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் “ரணகோச” நடவடிக்கை மூலம் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முற்றுகைக்கு எதிரான முறியடிப்புச் சமரின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் ஐயன் மற்றும் லெப்.கேணல் தணிகைச்செல்வி உட்பட்ட 75 மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தம்மைச் சுற்றிவளைத்து சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த பாரிய முற்றுகை நடவடிக்கையை எதிர்த்து தீரமுடன் களமாடிய விடுதலைப் புலிகளின் படையணிகள் பல மணிநேரச் சமரின் பின் படை முற்றுகையை முறியடித்தனர். இதன்போது நூற்றுக்கும் மேற்பட்ட சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதுடன் பலநூறுபேர் படுகாயமடைந்தனர். சிறிலங்கா படையினரின் இந்த வல்வளைப்பு முயற்சிக்கு எதிராக தீரமுடன் களமாடி 75 போராளிகள் …
-
- 10 replies
- 1.2k views
-
-
26.06.2000 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா படையினரின் “உகண” ஆயுதக் கப்பலை மூழ்கடித்து காவியமான கடற்கரும்புலிகளின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ். குடாவில் நிலை கொண்டிருக்கும் படையினருக்குத் தேவையான ஆயுதங்கள் வெடிபொருட்களுடன் காங்கேசன்துறைத் துறைமுகம் நோக்கி டோறா பீரங்கிப் படகுகளின் வழித்துணையுடன் சென்ற “உகண” கப்பல் 26.06.2000ம் அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகளால் வழிமறிக்கப்பட்டு தாக்குதல் தொடுக்கப்பட்டது. சுமார் எட்டு மணிநேரம் இடம்பெற்ற கடும் சமரின் நடுவே தமது வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட படகுகளால் குறித்த கப்பலை கடற்கரும்புலிகள் தகர்த்து மூழ்கடித்தனர். இதன்போது சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகு ஒன்றும் கடு…
-
- 10 replies
- 1.3k views
- 1 follower
-
-
கற்பிட்டிக் கடற்பரப்பில் காவியமான லெப்.கேணல் நளாயினி உட்பட்ட கடற்கரும்புலிகளினதும் யாழ்ப்பாணத்தில் காவியமான கப்டன் மயூரனினதும் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 19.09.1994 அன்று கற்பிட்டிக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் “சகாரவர்த்தனா” போர்க்கப்பலை மூழ்கடித்து கடற்புலிகளின் மகளீர் படையணி சிறப்புத் தளபதி கடற்கரும்புலி லெப்.கேணல் நளாயினி (ஆறுமுகசாமி பத்மாவதி - ஊறணி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி மேஜர் மங்கை (கணபதிப்பிள்ளை புவனேஸ்வரி - முள்ளியான், யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி கப்டன் வாமன் (தூயமணி) (கந்தசாமி ரவிநாயகம் - கோயில்போரதீவு, மட்டக்களப்பு) கடற்கரும்புலி கப்டன் லக்ஸ்மன் (இசைவாணன்) (குகதாசன் பிரணவன் - நல்லூர…
-
- 10 replies
- 1.2k views
-
-
[size=4]தமிழீழக் கடற்பரப்பில் காவியமான லெப்.கேணல் சந்திரன் உட்பட்ட 10 மாவீரர்களினதும், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பில் காவியமான இரு மாவீரர்களினதும் 22ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 23.09.1990 அன்று தமிழீழக் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா கடற்படையுடன் ஏற்பட்ட மோதலின்போது கிளிநொச்சி மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் சந்திரன் (இராமலிங்கம் முத்துலிங்கம் - 4ம் வாய்க்கால், கிளிநொச்சி) மேஜர் வின்சன் (ஐயப்பன்) (நவரத்தினம் வசந்தன் - வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.) மேஜர் அரவிந்தன் (சிவலிங்கம் தவானந்தராசா - பொலிகண்டி, யாழ்ப்பாணம்.) கப்டன் நிவாஸ் (குமாரசாமி கணேஸ் - கொம்மர்துறை, மட்டக்களப்பு.) வீரவேங்கை நுட்வ…
-
- 10 replies
- 901 views
- 1 follower
-
-
திருகோணமலை துறைமுகக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகள் மேஜர் ஓசையினியவன் மற்றும் கப்டன் பொறையரசு ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 15.09.2001 அன்று திருகோணமலை துறைமுக வாயிலில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிக் கலம் மீதான தாக்குதலின்போது கடற்கரும்புலி மேஜர் ஓசையினியவன் இரத்தினம் ராஜ்குமார் அரியாலை, யாழ்ப்பாணம் கடற்கரும்புலி கப்டன் தமிழினியன் (பொறையரசு) செல்வரத்தினம் யோகேஸ்வரன் நெளுக்குளம், வவுனியா தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
-
- 10 replies
- 832 views
-
-
சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட யாழ்.தேவி படைநடவடிக்கையில் கிளாலி நோக்கிய முன்நகர்விற்கு எதிரான முறியடிப்புச் சமரில் 29.09.1993 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் நரேஸ்(நாயகம்) உட்பட்ட மாவீரர்களினது 17ம் ஆண்டு நினைவு நாளும் 29.09.2006 அன்று யாழ். தீவகக்கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் ரதன்(பொன்முடி) அவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். படங்களைப் பெரிதாய்ப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்.
-
- 10 replies
- 2.3k views
-
-
By eelapirean at 2011-11-13
-
-
- 10 replies
- 1.6k views
-
-
[size=4]ஜெயசிக்குறு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினருடனான மோதல் மற்றும் பிற நிகழ்வுகளில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் பிரதீபராஜ் உட்பட்ட 13 மாவீரர்களின் 14ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 03.10.1998 அன்று ஒலுமடு பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில் லெப்.கேணல் பிரதீபராஜ் (பூபாலப்பிள்ளை திரேஸ்காந் - மட்டக்களப்பு) லெப்டினன்ட் இதயக்கண்ணன் (சிவலிங்கம் சாந்தலிங்கம் - மட்டக்களப்பு) லெப்டினன்ட் புண்ணியசீலன் (அருணாசலம் ஜெயகுலம் - மட்டக்களப்பு) லெப்டினன்ட் பரிதரன் (பேரின்பம் அரசரத்தினம் - மட்டக்களப்பு) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இம் மாவீரர்களினதும் ஓயாத அலைகள் - 2 நடவடிக்கையின் போது விழுப்புண்ணடைந்து இதேநாளில…
-
- 10 replies
- 867 views
-
-
கேணல் ரமணன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவில்... தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் ரமணன் அண்ணா வவுணதீவு போராளிகளின் காவலரணைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை எதிரியின் சதிச் சூட்டில் வீரச்சாவடைந்தார். இயற் பெயர் – கந்தையா உலகநாதன் இயக்கப் பெயர் – ரமணன் தாய் மடியில் – 14.10.1965 தாயக மடியில் – 21.05.2006 பாடசாலைக் கட்டிடத்திற்குள் இருந்த புழுக்கத்தை ஆற்றங்கரைக் காற்று கழுவிக் கொண்டிருந்தது. அது வகுப்புக்களுக்கான நேரம் அல்ல. வகுப்பறைகள் வெறிச்சோடிப் போய்க் கிடந்தன. காவலாளியும் காணப்படவில்லை. முற்றிலும் ஆளரவமற்றிருந்தது அந்தப் பாடசாலை, மதிலோரமும் தொருவோரக் கட்டிடத்திற்குள்ளும் பதுங்கியிருந்த சிலரைத் தவிர. பச்சைக்கரைப் பாவாடையைப்…
-
- 10 replies
- 1.3k views
- 1 follower
-
-
கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு - தமிழ்விக்கிபீடியா கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு கடற்புலிகளின் ஒரு சிறப்புப் படையணி. சிறப்பு உபகரணங்களின் உதவியுடன் கடலுக்கு அடியில் நீந்திச் சென்று கடல் கலங்களை அல்லது வேறு இலக்குகளைத் தாக்குவதே இந்த அணியின் செயற்பாடு. ஆங்கிலத்தில் இத்தகைய படையணியை Frogman என அழைப்பர். இவர்களைத் தமிழில் தவளைமனிதர் எனலாம். இந்தப் படையணி லெப். கேணல் கங்கை அமரனின் பெயரைத் தாங்கியது. இவரே கடற்புலிகளின் நீரடி நீச்சற்பிரிவினை வழிநடத்தியவர் [1]. கங்கை அமரன் 2001 ஆண்டு இலங்கைப் படையின் ஆழ ஊடுருவும் பிரிவால் கொல்லப்பட்டார்.[2] மே 09, 2008 அன்று கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு ஏ-520 துருப்புக்காவி-விநியோகக்கப்பலை மூழ்கடித்தது. இது இவர்களின் முக்கிய தா…
-
- 10 replies
- 1.2k views
-
-
04.11.1999 அன்று ஓயாத அலைகள் 3 படைநடவடிக்கையில் ஒதியமலை பகுதி மீட்பின் போதான சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் மணிவண்ணனின் 11ம் ஆண்டு நினைவு நாளும், கிளாலிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் நடைபெற்ற மோதல் ஒன்றில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் தர்சனின் 10ம் ஆண்டு நினைவு நாளும், 04.11.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அசோக்குமாரின் 3ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். ஓயாத அலைகள் - 3 படைநடவடிக்கையில் 04.11.1999 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி படையணியைச் சேர்ந்த மேஜர் இராசநாயம், லெப். ஆருரான், 2ம். லெப். திருக்குமரன் 2ம் லெப். வல்லவன், 2ம் லெப். சுபாசன், வீரவேங்கை தீபன் உட்…
-
- 10 replies
- 2.1k views
-
-
தமிழீழ விடுதலைப் போரில் ஓராண்டுக்குள் தம்மை ஆகுதியாக்கிய லெப்டினன்ட் இன்பமுதன், லெப்.கேணல் தேவநேயன், கப்டன் வளவன் ஆகிய உடன்பிறப்புக்களில் முதலாவதாக வீரச்சாவை அணைத்துக் கொண்ட லெப்டினன்ட் இன்பமுதனின் 14ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். [size=2][size=4]தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு மாவீரர்கள் கணிசமானோர் வீரச்சாவைத் தழுவியுள்ளனர். இரண்டிற்கும் மேற்பட்ட மாவீரர்களைக் கொண்ட குடும்பங்கள் மிகச் சிறிய எண்ணிக்கையே. இவர்களில் வடமராட்சி கிழக்கு, ஆழியவளைச் சேர்ந்த லெப்டினன்ட் இன்பமுதன், லெப்.கேணல் தர்சன் மற்றும் கப்டன் வளவன் ஆகியோரின் குடும்பமும் அடங்கும் இவ் உடன்பிறப்புக்கள் மூவரும் ஓராண்டிற்குள்ளாகவே தாயக விடுதலைக்கான கடமையின்போது தம்மை ஆகு…
-
- 10 replies
- 859 views
-
-
பருத்தித்துறைக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலி மேஜர் குமரவேல் மற்றும் பளையில் இடம்பெற்ற ஊர்தி விபத்தில் வீரச்சாவடைந்த வீரவேங்கை தணிகைமதி ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 01.09.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் நீரூந்து விசைப்படகு ஒன்றினைத் தாக்கியழிக்கும் முயற்சியின் போது கடற்கரும்புலி மேஜர் குமரவேல் (மதி) (கிருஸ்ணபிள்ளை சிவகுமார் - காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்) வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். தேசத்துரோகி ஒருவரின் காட்டிக்கொடுப்பினால் தாக்குதல் திட்டத்தினை ஊகித்துக் கொண்ட சிறிலங்கா கடற்படையினர் அப்பகுதியில் தொழிலில் ஈடுபட்ட மீனவர்களை தமது படகில் ஏற்றியிருப்பதை தெரிந்து கொண்ட கடற்கரும்புலி மேஜர் குமாரவேல்…
-
- 10 replies
- 1.2k views
-
-
புல்மோட்டைக் கடலில் காவியமான ஆறு கடற்கரும்புலிகள் உட்பட்ட ஏழு மாவீரர்களினதும், அம்பகாமத்தில் காவியமான 64 மாவீரர்களினதும், ஏனைய பகுதிகளில் காவியமான 4 மாவீரர்களினதும் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 14.10.1999 அன்று புல்மோட்டைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிக் படகுகள் கடற்புலிகளால் வழிமறிக்கப்பட்டு தாக்கப்பட்டுக் கொண்டிருந்தவேளை கடற்படைப் படகுகளை இலக்கு வைத்து நகர்ந்து கொண்டிருந்த கடற்கரும்புலிகளின் இரு படகுகள் எதிர்பாராதவிதமாக ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்தபோது ஆறு கடற்கரும்புலிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். கடற்கரும்புலி லெப்.கேணல் அருந்தவம் (கிருஸ்ணபிள்ளை உதயகுமார் - மட்டக்களப்பு) கடற்கரும்புலி லெப்.கேணல் பழனியப்பன் (…
-
- 10 replies
- 825 views
- 1 follower
-
-
29.10.1999 அன்று முல்லை மாவட்டம் ஒட்டு சுட்டான் பகுதியில் சிறிலங்கா படையினர் மறைந்திருந்து நடத்திய தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் பௌத்திரன், மணலாற்றுப் பகுதியில் இதே நாள் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் ஆகியோரின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். http://meenakam.com/...ews/2011/10/29/ தமிழ் ஈழம் என்ற உயரிய இலட்சியத்துக்காக தம் இனிய உயிர்களை ஈகம் செய்த இந்த மாவீரர்களுக்கும், மற்றும் இன்றையநாளில் வீரசாவினைத்தளுவிய ஏனைய வீரமறவர்களுக்கும் எனது வீரவணக்கம்.
-
- 10 replies
- 1.5k views
-
-
15.11.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் விடுதலை அவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்று. தமிழீழ தாயக விடுதலைக்காய் தன்னை ஈகம் செய்த இந்த வீரமகளிற்கு எமது வீரவணக்கங்கள். இன்றையநாளில் களமாடி வீழ்ந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.
-
- 10 replies
- 1.3k views
-
-
யாழ். வலிகாமம் பகுதியில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட சூரியக்கதிர் படைநடவடிக்கைக்கு எதிரான சமரில் 30.10.1995 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அகிலா, லெப்.கேணல் உருத்திரா(உருத்திரன்) ஆகியோரின் 15ம் ஆண்டு வீரவணக்க நாளும், 30.10.2006 அன்று மட்டு மாவட்டம் வாகரைப் பகுதியில் அரவம் தீண்டியதனால் சாவடைந்த லெப்.கேணல் வரதா(ஆதி) அவர்களின் 4ம் ஆண்டு வீரவணக்க நாளும் இன்றாகும். தாயக விடுதலைக்காய் தம்மை அர்ப்பணித்து வீரச்சாவைத் தழுவிய இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கம். http://meenakam.com/...ews/2011/10/30/ தமிழ் ஈழம் என்ற உயரிய இலட்சியத்துக்காக தம் இனிய உயிர்களை ஈகம் செய்த இந்த மாவீரர்களுக்கும், மற்றும் இன்றையநாளில் வீரசாவினைத்தளுவிய ஏனைய வீரமறவ…
-
- 10 replies
- 1.5k views
-