தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
தமிழ் நூல்களுக்கு உயிர் கொடுக்கும் முதியவர் ..! கோவையில் தமிழ் மொழிகளுக்கு உயிர் கொடுக்கும் வகையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான தமிழ் நூல்களை ஒருங்கிணைக்கும் ஓய்வுப்பெற்ற அரசு அலுவலர் தமிழப்பன். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன். சுப்ரமணியன் என்ற பெயரை "ஈழம் தமிழப்பன் " என்று மாற்றிக்கொண்ட இவர், தற்போது கோவை சின்னியம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். பள்ளி படிப்பை முடித்தவுடன் சென்னையில் வருவாய் அலுவலராக பணியில் சேர்ந்தவர், தமிழ் மொழி மேல் கொண்ட ஈர்ப்பால் புத்தகங்களையும், நூல்களையும் படிக்க துவக்கியுள்ளார். தொடர்ந்து தமிழ்மொழியில், இளநிலை முதல் முனைவர் பட்டம் வரை பெற்றவர், புத்தகம் எழுத துவங்கியுதுடன், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தமி…
-
- 1 reply
- 1.7k views
-
-
ஆகொள்ளை விரும்பேல்த்திச்சூடி நீதிகதைஆத்திச்சூடி நீதிகதைகள்க (பதவுரை) கொள்ளை-(பிறருடைய பொருளைக்) கொள்ளையிடுதற்கு, விரும்பேல்-ஆசைப்படாதே. (பொழிப்புரை) பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பாதே கள்ளாமை - பிறர் பொருள் விரும்பாமை குறள்:281 எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு. குறள் விளக்கம்: பிறரால் இகழப்படாமல் இருக்க ஒருவன் விரும்புவானாயின் பிறருடைய சிறிய பொருளாயினும், அவரை வஞ்சித்துக் கொள்ளக் கருதாதபடி, தன் நெஞ்சினைக் காத்துக் கொள்ளுதல் வேண்டும். ஏலாதி மேற்கோள் குறுகான் சிறியாரைக் கொள்ளான்புலால்பொய் மறுகான் பிறர்பொருள் வெளவான் - இறுகானாய் ஈடற்ற வர்க்கீவான் ஆயின் நெறிந…
-
- 0 replies
- 1.3k views
-
-
நந்திக்கலம்பகத்தில் தோழியின் நிலைப்பாடு முன்னுரை. தமிழ் இலக்கிய மரபுகளுக்கெல்லாம் தனி சிறப்பாக இருப்பது அக மரபே ஆகும். அகத்திணையில் தோழிப்பாடல்களே அதிகம். சங்க காலம் கடந்து பிற்காலத்தில் தோன்றிய நந்திக்கலம்பகத்தில் தோழியின் நிலையை அறிவதே இக் கட்டுரையாகும். தோழி தோழி என்ற சொல்லை தோழூூ இ எனப் பிரித்தால் ‘இ’ என்பது பெண்பால் விகுதியைக் குறிக்கின்றது. தோளோடு தோள் நின்று உழைத்தல், தோள் கொடுத்தல் என்பன உதவுதல் என்ற பொருளில் இருந்தே தோழி என்ற சொல்லானது தோன்றியது. இகுனை, பாங்கி, சிலதி, இணங்கி, துணைவி, சேடி, சகி போன்ற சிறப்பு பெயர்களால் தோழியினை அழைக்கின்றனர். தோழி இல்லையேல் காதல் இல்லை, அகப்பொருளும் இல்லை என்று சுட்டும் அளவிற்கு சிறப்பைப் பெற்ற…
-
- 0 replies
- 3.3k views
-
-
'தனித்தமிழ்ப்பற்று' பிறமொழி வெறுப்பைக் குறிக்கிறதா? செம்மொழிப் புதையல்-2 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் சமற்கிருதமோ, ஆங்கிலமோ கலக்காமல் தனித்தமிழில் பேசிப்பாருங்கள்! நம்மவர் பலரும் உங்களைத் தீவிரவாதியைப் பார்ப்பதுபோலக் கலவரத்துடன் பார்ப்பார்கள். அத்தகைய பார்வையில் ஏதேனும் உண்மை உள்ளதா என்று சற்றே சிந்திக்கலாம். கவிதையின் கருதான் முக்கியமேதவிர, மொழி ஒரு பொருட்டல்ல. கவிதைக்கான உயர்ந்த கருப்பொருள் கவிஞனின் உள்ளத்தில் மேலோங்கிவிட்டால், கலப்புமொழியிலும் அக்கவிதை அற்புதமாக வெளிப்படும் என்று பேசும் படைப்பாளிகள் தற்காலத…
-
- 0 replies
- 1.1k views
-
-
திராவிடத் திரிபுவாதம் சங்க இலக்கியத்தில் மொகஞ்சொதாரோ – அரப்பா இருக்கிறதா? எதிர்வினை: ‘திராவிடமும் இந்தியமும் உடன் கட்டை ஏறவேண்டும்’ என்றும், ‘சங்க இலக்கியத்தில், காப்பிய இலக்கியத்தில் பக்தி இலக்கியங்களில் திராவிடர் என்ற சொல் இல்லை’ என்றும் பெ.மணியரசன் பேசியதைத் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டத்தில் (ஏப்ரல் 16‡30,2012) வெளியிட்டிருந்தீர்கள். ‘திராவிடம்’ என்ற சொல் தமிழனை, தமிழை, தமிழ் இனத்தைக் குறிக்கத் திரித்துச் சொல்லப்பட்ட சொல்தான். திரிந்த தமிழ்ச் சொல்லே தவிர வடசொல் அல்ல. தமிழன் என்று சொன்னால் தமிழனை மட்டும் குறிக்கும். திராவிடன் என்று சொன்னால் தமிழனையும் குறிக்கும், மொழியால் தெலுங்கராக, கன்னடராக, மலையாளியாக, துளுவராகத் திரிந்துபோனவர்களைய…
-
- 0 replies
- 1.8k views
-
-
அங்கணாக்குழியும் எழுத்தாளர் நாறும்பூநாதனும்! - செம்மொழிப் புதையல்-1 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் புகழ்பெற்றத் தமிழ் எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்களின் எழுத்துக்கள் பெரும்பாலும் "மக்கள் வாசிப்பு" சார்ந்தவை. தமிழ் எழுத்துலகின் படைப்பாளிகளைக் குறித்து நாம் அறிந்திராத அரிய செய்திகளை, 'இவர்' 'அவர்'களை 'வாசித்ததன்' பின்புலத்தில் மண்ணின் மணம் கமழ, சுவையுடன் படைப்பது இவரின் தனித்துவம். விளையும் பயிர்! மாணவப்பருவத்திலேயே தம் படைப்புகளைத் தொடங்கிவிட்ட "எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்களை"ப் உயர்நிலைப்பள்ளி நாட்கள் தொட்டு வாசித்…
-
- 0 replies
- 1.9k views
-
-
"கல்லும் கதை சொல்லும்" என்ற முற்றிலும் வித்தியாசமானதொரு தலைப்பில் ஈரோடு புத்தகத் திருவிழாவில் தா.பாண்டியன் அவர்கள் நிகழ்த்திய அழகிய சிற்பம்போல் செதுக்கப்பட்ட நேர்த்தியான உரை.
-
- 1 reply
- 1.2k views
-
-
-
- 0 replies
- 628 views
-
-
ஏழு நிமிடம்தான் இன்தமிழை இரு கரத்தில் ஏந்தி பருகிடலாம். நன்றி தாயே......!
-
-
- 479 replies
- 91.5k views
- 2 followers
-
-
முத்தொள்ளாயிரம் ஒரு பார்வை கனிமொழி உலா இலக்கியங்களுக்கு முன்னோடி முத்தொள்ளாயிரம் எனும்நூல். இது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இப்பாடல்கள் பெரும்பாலும் சேரன், சோழன், பாண்டியன் ஆகிய மூவேந்தர்களைப் பற்றியது. இந்நூல் பெயர்க்காரணம் மூன்று வேந்தர்களைப் பற்றிய 900 பாடல்கள் என்றும், மூவேந்தருள் ஒவ்வொருவருக்கும் 900 பாடல்கள் என்ற இரு வேறு கருத்துகள் உண்டு. ஆக இந்த நூலின் மொத்த பாடல்கள் 2700 ஆக இருந்திருக்க வேண்டும், ஆனால் நமக்கு 108 பாடல்களே கிடைத்துள்ளன. புறத்திரட்டு என்பதில் இருந்துதான் இந்த 108 செய்யுள்களையும் தொகுத்துள்ளனர். இந்த பாடல்கள் பெரும்பாலும் கைக்கிளையில் அதாவது ஒருதலைக்காதல் கொண்டு பாடப்பட்டது. மூவேந…
-
- 0 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 800 views
-
-
தமிழின் சொல்வளமையும் செறிவான சொற்சிக்கனமும் பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி எந்த ஒரு மொழியின் செறிவான வளமை என்பது அம்மொழியின் "தனிச்சொற்கள் தொகுதி" எண்ணிக்கை அன்று. அம்மொழியின் செறிவான கருத்துக் குறியீட்டு வளமே உண்மையான வளம் ஆகும். தமிழ்மொழியின் சொல்வளமை! உயர்தனிச் செம்மொழியான தமிழ் செறிவான கருத்துக் குறியீட்டு வளத்தைத் தன்னகத்தே கொண்டு விளங்கி வருகின்றது. உதாரணமாக, தந்தையின் உடன்பிறந்தவர்கள் பெரியப்பா, சித்தப்பா என்றும், அன்னையின் உடன்பிறந்தவர் அம்மான்(தாய்மாமன்) என்றும் அவரவரின் தனிச்சிறப்புகளுடன் வழங்குகிறது தமிழ் மொழி; இச்சொல்லாற்றல்கள் தமிழ்மொழியின் இனச்செறிவைப் பறைசாற்றுகின்றன. ஆங்கிலமொழியின் சொல்வ…
-
- 1 reply
- 1.2k views
-
-
நீலிக்கண்ணீரின் தொல்கதை: சில இலக்கியப் பதிவுகள். சுயாந்தன் September 20, 2018 நீலிக்கண்ணீர் என்ற தொல்லெச்சம் எப்படி நமது அன்றாட வாழ்வில் உரையாடுகிறது என்பதற்கு நீண்டகால ஆதாரப் பதிவுகள் உள்ளன. எப்படி நற்றிணையில் இருந்த முலை அறுத்தெறியும் காதை கண்ணகி காதைக்கு இளங்கோவுக்கு பாடுபொருளானதோ, அதுபோல தமிழ் வாழ்வியல் வரலாற்றில் நீலி என்ற பெண் பாத்திரம் போலியின் ரூபமானது.அதாவது காஞ்சிபுரத்து வணிகன் தனது முதல் மனைவியை வஞ்சகமாகக் கொலை செய்துவிட்டு இரண்டாம் திருமணம் செய்கிறான். அவன் வணிக நோக்கமாக பழையனூர் வழியாகப் பயணமாகிறான். அப்போது அவனது முதல் மனைவி பேயாக மாறி அவனைப் பழிவாங்கத் துடித்து மனைவி போல உருமாற்றம் கொள்கிறாள். ஒரு தீய்ந்த கட்டையைப் பிள்ளையாக்கி இடுப்பில் வைத்து…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழை எதிர்ப்பவர்களுக்கு பயங்கர பதிலடி உலகநாயகி பழனி
-
- 0 replies
- 1k views
-
-
கந்தபுராணம் தெரிந்த தமிழனுக்கு கந்தப்பனை தெரியுமா? மணி ஸ்ரீகாந்தன். ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று ஆரம்பித்து ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் ‘திருக்குறள்’ என்னும் மாபெரும்; படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், அய்யன் திருவள்ளுவர். உலகத்தின் ஒட்டுமொத்த தத்துவத்தையும் ஒரே நூலில் முப்பாலாக பிரித்து உலக அரங்குகளில் தமிழனின் பெருமையை பறைசாற்றியவர் வள்ளுவர். “தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால்…” என்று குறளின் பெருமையை அக்கால புலவரான கபிலர் வியந்து பாடியிருக்கிறார். அதிகாலை நேரம், கபிலர் பசும் புல் ஒன்றைப் பார்க்கிறார்.தரையுடன் ஒட்டிக் கிடக்கும் அந்தச் சிறிய புல்லின் …
-
- 0 replies
- 2k views
-
-
வாழ்வியல் தடமாற்றமும் வள்ளு வரின் தடுமாற்றமும் மானுட வாழ்வியல் காட்டுமிராண்டி நிலையிலிருந்து கணினி, இணைய நிலையை வந்தடைந்திருக்கிறது. இதற்கிடைப்பட்ட பல்லாயிரமாண்டு காலப் பரிணாம வளர்ச்சியையும் பரிமாண நிலைகளையும் உள்ளடக்கிக் கொண்டு உயர்ந்துள்ளது. தனிமனித குடும்ப, சமூக, அரசு நிலைகளில் மானுட வாழ்வியல் தத்தமக்கென ஒழுகலாற்று நெறிகளை உருவாக்கிச் செம்மைப்படுத்திக் கொண்டே இயங்குகிறது. மரபுகள், விழுமியங்கள், அறநெறிகள் மனிதனின் இயல்புநிலைகளைச் செம்மைப்படுத்து கின்றன. தமிழர்களின் வாழ்வியலைச் சங்காலச் சமூக அகம், புறம் என்ற பாகுபாட்டுமுறை பல்வேறு இலக்கிய, இலக்கணங்களின்வழி உயிர்ப்புமிக்கதாக நிலவச்செய்யும் வல்லமையுடன் வாழ்கிறது. எனினும், காலந்தோறும் மானுட வாழ்வியல் தன் இயல்புக்கேற்ற …
-
- 0 replies
- 1k views
-
-
பாமரர் வழக்கே பாவலர் வழக்கு தேர்வு முடிவு வெளியானதும் மாணவன் ஒருவன் “அஞ்சும் (ஐந்தும்) பாஸ்” என மகிழ்ச்சியில் குதிக்கிறான். அவன் ஐந்தும் எனச் சொன்னதை வைத்து அவன் எழுதிய தேர்வுத் தாள்கள் மொத்தமே ஐந்து என்பது நமக்குப் புலனாகிறது. “இனைத்தென அறிந்த சினைமுதற் கிளவிக்கு வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும்” என நவில்வது தொல்காப்பியம். மேற்கூறிய எடுத்துக்காட்டில் மொத்தம் இவ்வளவுதான் என (இனைத்தென) அறிந்த சினை முதற்சொல் (ஐந்து) வினைச்சொல்லுடன் இணையும் இடத்தில் (‘பாஸ்’ செய்தல் என்ற வினைப்படு தொகுதியில்) “உம்” வேண்டும். “அஞ்சும் பாஸ்” எனச் சொன்னவன் தொல்காப்பியனை அறிந்திலன்; அதனைக் கேட்டு மொத்தம் ஐந்து தாள்கள் எனப் பு…
-
- 2 replies
- 945 views
- 1 follower
-
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
முன்னோர் மொழி பொன்னே போல் - சுப.சோமசுந்தரம் அறநெறிகளும் உவமைகளும் மீண்டும் மீண்டும் இலக்கியங்களில் மாறுதலின்றி கையாளப்படுவதும் எடுத்தாளப்படுவதும் தொன்று தொட்ட நிகழ்வே. இவற்றில் ஒருவரைப் பார்த்துதான் இன்னொருவர் எழுத வேண்டும் என்றில்லை. இடமும் காலமும் மாறுபடாத போது அறநெறிகள் மாறுபட வாய்ப்பில்லை. மங்கை நல்லாளின் ஒளிரும் முகம் மதிமுகமாய் பாமரனுக்கும் தோன்றும். அதனை முழுநிலவெனச் சொல்வதற்கு ஒரு புலவனிடம் இன்னொரு புலவன் கேட்க வேண்டியதில்லை. ஆனால் ஒரு புலவனின் ஒரு குறிப்பிட்ட வருணனையோ கூற்றோ அவனுக்கு முந்தையோரை நினைவு படுத்துதல் உண்டு. அவ்வாறான சில இடங்களில் அம்முந்தைய கூற்று கல்வி கேள்விகளிற் சிறந்த இப்புலவனுக்குத் தெரியாதிருக்க வாய்ப்பில்லை என்று அறுதியிட்டுச் சொல…
-
- 2 replies
- 2.1k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தின் பெருமை! '...ஏறி உயர்ந்த மலைகள் இல்லையாயினும் என்ன இருந்தன தோள்கள் என்று கூறி உழைத்து பின் ஆறி கலைகளில் ஊறிச் சிறந்தது யாழ்ப்பாணம்' -மகாகவி-
-
- 1 reply
- 785 views
-
-
காதலினால் தும்மல் செய்வீர் உலகத்தீரே ! பொதுவாக தும்மல் நுரையீரலில் நேர்ந்த சிறிய / பெரிய அசௌகரியத்துக்கான அடையாளமே. எனவே நான் தொடர்ச்சியாய் தும்மும் போது என் ஆச்சி ('பாட்டி'க்கான என் வட்டார வழக்கு; வட்டார வழக்கு அவரவர்க்குரிய பெருமையான அடையாளம்தானே!), அம்மா, அத்தை போன்ற மூத்தோர் நூறு, இருநூறு......என வாழ்த்துவர். அதற்குப் பொருள் 'குறையொன்றுமில்லை. நீ நூறு வருடங்கள் வாழ்வாய்! இருநூறு வருடங்கள் வாழ்வாய்!....' என்பதாம். எனது ஒவ்வாமை காரணமாய் நான் இவர்களிடம் இரண்டாயிரத்து ஐநூறு வருடங்கள் ஆயுள் பெற்றுள்ளேன் என்பது ஒரு புறம் இருக்கட்டும். தும்மல் தொடர்பாக வேறொரு நம்பிக்கையும் உண்டு. அது 'யாரோ உன்னை நினைக்கிறார்' என்பது. அது இலக்கிய மரபாகக் கூட தோன்றியிருக்கலாம். எவ்வாற…
-
- 2 replies
- 1.1k views
- 1 follower
-
-
ஆரியப் புரட்டும் அயிரமீனும் பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி சமஸ்கிருதத்திலிருந்தே பல தமிழ்ச் சொற்கள் உருவாயின என்று ஆரியர்கள் காலம் காலமாகப் புளுகி வருகின்றனர். அதற்கு எடுத்துக்காட்டாக அவர்கள் பயன்படுத்தும் சொற்களில் மிகவும் முக்கியமான சொல் தமிழில் நாம் புழங்கிவரும் "ஆயிரம்" என்னும் சொல்லாகும். ஆயிரம் என்னும் சொல் 'ஸகஸ்ர' என்னும் வடசொல்லில் இருந்தே பெறப்பட்டதாகக் காட்டுவர் ஆரியர்கள். தரம் உயர்ந்த வைரம், தரம் குறைந்த வைரம் என்று வைரக்கற்களின் தரத்தைச் சோதித்து அறிய சாமானியனால் இயலாது; ஆனால், 'மணிநோட்டகன்' எனப்படும் வைரப் பரிசோதகன் எளிதில் கண்டுபிடித்துவிடுவான். அதுபோல், சொற்களின் வேர், சொற்பொருள் காரணம் போன்றவை மொழிநூல் இலக்கணம்…
-
- 1 reply
- 2.1k views
-
-
கள்வன் மகனும் உள்ளம்கவர் கள்வனும் பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி தமிழ்த் திரைப்படங்களில் காதல் வயப்பட்ட ஆணின் செயல்களை நாம் நடைமுறையில் காணாத மிகைக் காட்சிகளாகக் காட்டுவர்; இப்படியும்கூட ஒருவனால் செய்யமுடியுமா என்று பலவேளைகளில் விவாதங்கள் வந்துபோவதுண்டு. காட்டாக, மணிரத்னத்தின் மௌனராகம்(1986) திரைப்படத்தில், கதாநாயகி ரேவதியை அருகில் வைத்துக்கொண்டே ரேவதியின் அப்பாவை, "மிஸ்டர் சந்திரமௌலி", என்று அட்டகாசமாக அழைப்பார் கதாநாயகன் கார்த்திக். அமர்க்களம்(1999) திரைப்படத்தில் "உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு! என் உள்நெஞ்சு சொல்கின்றது!" பாடல் காட்சியில், பரபரப்பானதொரு காலைவேளையில், ஷாலினியின் அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி உள்ளிட்டோர…
-
- 0 replies
- 2.6k views
-
-
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்! பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி அன்பர்களே! இலக்கிய நயம் உணர்ந்து ரசிக்கவும், ருசிக்கவும், இலக்கியத் தமிழ் நயத்தில் நனைந்து தமிழுணர்வில் திளைக்கவும் யாழ் இனிய அற்புதக்களம் அமைத்துள்ளது என்றால் மிகையன்று. உலகெங்கும் வாழும் தமிழர்களின் இணைய-யுக தமிழ்ச்சங்கம் யாழ். 'தி இந்து' தமிழ் இதழில் வந்த எனது திருவாசகக் கட்டுரைகளின் தொகுப்பை யாழ் இணையத்தில் தற்செயலாகக் கண்டபின்னர் 'யாழ்' முத்தமிழ் கண்டேன். அறிவார்ந்த தமிழர்களின் யாழ் சங்கமத்தில் பதிவிடுவதும், அவர்தம்மோடு கூடிக் கலப்பதுவும் ஈடு இணையற்ற உயிர்ப்பு. சில நாட்களுக்கு முன் எழுத்தாளர் ஷங்கர்பாபு அவர்களிடமிருந்து "ஒரு சந்தேகம். . . என்று குறிப…
-
- 0 replies
- 6.3k views
-