Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழும் நயமும்

இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஒரு மொழியின் தொன்மை எவ்வளவு பெருமைக்குரியதோ அதே அளவுக்கு அதன் இளமையும் பெருமைக்குரியது. மொழியில் இளமை என்பது சமகாலத்துடன் அதற்கு இருக்கும் உயிரோட்டமுள்ள உறவைக் குறிப்பது. தொன்மைச் சிறப்பு மிக்க தமிழ் மொழி எந்த அளவுக்கு இளமையாக இருக்கிறது? இன்றைய சூழலில் தமிழை எப்படி அணுகுவது? மாறிவரும் காலத்தின் தேவைகளுக்கேற்பத் தமிழை எப்படிப் பயன்படுத்துவது? உலகின் எல்லா அறிவுத் துறைகளும் தமிழில் வருவதற்கான முயற்சிகள் நடக்கின்றனவா? அன்றாட வாழ்வில் தமிழின் இடம் என்ன? உலக நடப்புகளைப் புரிந்துகொள்வதில் தமிழின் திறன் என்ன? அந்த விஷயத்தில் ஆங்கிலத்துடன் ஒப்பிடுகையில் தமிழ் எங்கே இருக்கிறது? உதாரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டன் முடிவெடுத்ததை ஒட்டி ஆங்கில ஊடகங்களில் ‘…

    • 0 replies
    • 692 views
  2. பொள்ளாச்சி டாக்டர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மைய’த்தின் மூலம் ஆண்டுதோறும் நூறு அயல்மொழி நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படவுள்ளது பற்றிய செய்தியை ‘தி இந்து’ செப்டம்பர் 26 இதழில் கண்டேன். மிகவும் வரவேற்கத்தக்க பணி. பாரதி தொடங்கி வைத்த இந்தப் பணியை க.நா.சு. தீவிரப்படுத்தினார். நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் செய்ய வேண்டிய அந்தப் பணியை க.நா.சு. ஒருவரே நின்று ஆயுள் பூராவும் செய்தார். அவர் செய்ததைத் தொடர்ந்து இன்று பல மொழிபெயர்ப்பாளர்கள் ஆங்கிலத்திலிருந்து ஏராளமான அளவில் தமிழில் மொழிபெயர்த்துக்கொண்டிருப்பதையும் நாம் அறிவோம். உலக அளவில் பிரபலமான எந்த எழுத்தாளராக இருந்தாலும் அல்லது, பிரபலம் ஆகாத தாஹர் பென் ஜெலோன் (மொராக்கோ) போன்றவர்களாக இருந்தாலும் அவர்களின் படைப்புகள் தமிழ் ம…

  3. விடுபூக்கள் : கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள் கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள் கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள் போன்றவர்களின் ஆதரவுடன் 2001-ம் ஆண்டு டொராண்டோவில் கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம் ஓர் அறக்கட்டளையாகத் தொடங்கப்பட்டது. ஆண்டுதோறும் வாழ்நாள் சாதனையாளர் விருது (இயல் விருது) உள்ளிட்ட பல விருதுகளை கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கிவருகிறது. 2015-ம் ஆண்டுக்கான, 17-வது இயல் விருது, தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையதளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தைத் தொடங்கி வெற்றிகரமாக இயக்கிவரும் இ.மயூரநாதனுக்கு வழங்கப்படுகிறது. சுந்தர ராமசாமி, அம்பை, நாஞ்சில் நாடன், தியடோர் பாஸ்கரன் உள்ளிட்ட ப…

  4. நாட்டார் பாடல் வகைகளில் ஒன்றான தாலாட்டுப் பாடல்கள் வாய்மொழி இலக்கியங்களில் ஒன்றாகும். ‘தால்’ என்பது நாவைக் குறிக்கும். குழந்தையை உறங்க வைக்க நாவை ஆட்டி ‘ரா ரா ரா ரா, லு லு லு லு’ என்று ராகம் இசைப்பதால் தாலாட்டுதல் பின்னர் தாலாட்டு என மருவியது. தாலாட்டுப் பாடலின் தொடக்கத்தில் இடம்பெறும் ஒலிக்குறிப்புச் சொற்களை அடிப்படையாகக் கொண்டு ஆராட்டு, ரோராட்டு, ஓராட்டு, தாராட்டு, தொட்டிப் பாட்டு, தூரிப்பாட்டு என்று வகைப்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் தாலாட்டுப் பாடல்கள் அனைத்து சமயம், மதம், ஜாதி சார்ந்த மக்களிடம் வழக்கத்தில் உள்ளது என்பதே இப்பாடல் வடிவத்தின் சிறப்பாகும். தாலாட்டுப் பாடலை குழந்தையின் தாய் மட்டும் அல்லாமல் பாட்டி, அத்தை, மூத்த சகோதரி போன்ற உறவினர்களாலும் பாடப்…

    • 0 replies
    • 639 views
  5. அச்சம் என்பது பற்றியும் , பொச்சாப்பு என்றால் என்பது பற்றியும் விளக்கிய இந்த மாணவியின் உரை என்னை மிகவும் கவர்ந்தது! பரிமேலழகர் போன்றவர்களின் உரையை விஞ்சும் விதத்தில், கீதை, சிலப்பதிகாரம், மகாபாரதம் போன்றவற்றில் இருந்து உதாரணங்களை எடுத்துக்காட்டும் இவரது பேச்சின் வல்லமையை ரசித்தேன்! நேரமிருக்கும் போது நீங்களும் கேட்டு ரசிக்கலாம்! https://www.facebook.com/sathiyadevi.thayanandarajah/posts/1014346888654448?notif_t=close_friend_activity&notif_id=1461203685334953

    • 5 replies
    • 1.4k views
  6. நூலகம் பற்றி உங்களுக்குப் புதிதாக அறிமுகப் படுத்த வேண்டியதில்லை. www.noolaham.org இணைய நூலகத்தினையும் அதனுடனிணைந்த பல ஆவணப்படுத்தல் வேலைகளையும் செய்துவரும் நூலக நிறுவனம் எமது சமூகத்தின் நிதியுதவில் தங்கியிருக்கும் அமைப்பு என்பது நீங்கள் அறிந்ததே. அவ்வகையில் நீங்கள் தொடர்ச்சியாகப் பங்களிக்க வேண்டும் என்று கோரியே இந்த மடல்...... இலங்கைத் தமிழ்ச் சமூகங்கள் ஆவணப்படுத்தத் தவறியதால் இழந்த அறிவுச் செல்வங்கள் ஏராளம். எஞ்சியவற்றை ஆவணப்படுத்தவும் அனைவருக்கும் கிடைக்கச் செய்யவும் நூலக நிறுவனம் கடந்த 11 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. * நூலக வலைத்தளத்தில் இப்பொழுது 16,500 க்கும் அதிக ஆவணங்கள் உள்ளன. இவை சர்வதேச நியமங்களின் அடிப்படையில் ஸ்கான் செய்யப்பட்…

  7. சிவகுமாரின் மகாபாரதம் குமரி எஸ். நீலகண்டன் நடிகர் சிவகுமார் அவர்கள் ஈரோட்டில் பேசிய இரண்டு மணி நேர மகாபாரத சொற்பொழிவின் காட்சிப் பதிவினை சமீபத்தில் பார்த்தேன். என்னைப் பொறுத்தவரை எந்தக் குறிப்புமில்லாமல் மகாபாரதக் கதையை சொல்வதென்பது ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு கடலில் நீந்திக் கடப்பதற்கு ஒப்பானது. இன்னொரு உதாரணம் கூட சொல்லலாம். திசை தெரியாத அடர்ந்த வனத்திற்குள் நூறு கிலோ மீட்டர் தூரத்திலிருந்து தன்னந்தனியனாய் வெளியே வருவதற்கு ஒப்பானதாகும். மகாபாரதக் கதையை கையாளுவதென்பது மிகவும் கடினமானது. நிறைய குட்டிக் கதைகள்… நூற்றுக் கணக்கான கதாபாத்திரங்கள்… மிகச் சிக்கலான முடிச்சுகள் கொண்ட நூற்பந்து போல் உருவம் கொண்ட சிக்கலான மகா காவியம். அது ஒரு…

    • 1 reply
    • 967 views
  8. நானும் என் துணைவியும் சில காலம் சென்னையில் வாழும்படி நேர்ந்தது. நான் எனது தூய தமிழில் பேசுவதற்கு கொஞ்சம் தயங்கிய காலப்பகுதி அது. அதையும் மீறிச் சிலவேளை என் இயல்பு மொழியில் நான் பேசினால் “என்ன நீங்கள் மலையாளம் பேசுறிங்களா?” எனச் சிலரும் “நீங்கள் ரொம்ப அழகாய் சிங்களத் தமிழ் பேசுறிங்க” என வேறு சிலரும் பேசுவதைக் கேட்டு அவர்களுக்கு விளக்கம் சொல்லி அலுத்துப்போய் ஒருவாறாக சென்னைத் தமிழைப் பேசக் கற்றுக் கொண்டேன். சென்னைத் தமிழ் ரொம்ப அழகானதுதான் அதற்காக என் தாய்த்தமிழை ‘’சிங்களத் தமிழ்’’ என்று சொல்லும் அவர்களை என்னால் எப்படி ஏற்க முடியும்? இது நடந்து ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன, அமெரிக்காவுக்கு வந்ததற்கு பின் தமிழரைக் காணும்போதெல்லாம் என் தூய தமிழில் உரையாடுவதற்கு நா…

    • 0 replies
    • 783 views
  9. அதிகூடிய பல்லின மாணவரைக் கொண்ட கல்விச் சபைகளில் ஒன்றுமான ரொறன்ரோ கல்விச் சபையானது ஜனவரித் திங்களை தமிழ் மரபுத் திங்களாக பிரகடனம் செய்துள்ளது. இப்பிரகடனமானது ரொறன்ரோ கல்விச் சபையில் உள்ள பாடசாலைகளில் தமிழர் மரபு, பண்பாடு, மொழி, வரலாற்றைத் தமிழ் மாணவரோடு மட்டுமல்லாது வேற்றின மாணவருடனும் கொண்டாடும் வாய்ப்பை நல்கி உள்ளது. ரொறன்ரோ கல்விச் சபையானது ரொறன்ரோவின் பல்வேறு பாகங்களிலும் உள்ள 595 பாடசாலைகளில் கல்வி கற்கும் 246,000 மாணவர்களுக்கு தனது சேவைகளை வழங்குகிறது. இதில் 12,272 மாணவர்கள், அதாவது மொத்த மாணவர் தொகையில் ஏறத்தாழ 5.5% தமிழ் மாணவர்கள். தமிழ் மொழியானது ரொறன்ரோ கல்விச் சபையில் இரண்டாவது பெரும் மொழி குழுவாகவும், இரண்டாவது அதிகம் கற்பிக்கப்படும்…

  10. உலகின் மிகவும் பிரபலமான பல்கலைக்கழங்களில் ஒன்றான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தனியாகத் தமிழ்துறை ஒன்று தொடங்கப்படவுள்ளது. ஹார்வர்டில் தனித் தமிழ்துறை விரைவாக அமையவுள்ளது. ஆறு மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் இந்தத் துறை ஹார்வர்டில் ஆரம்பிக்கபடவுள்ளது என இந்த முன்னெடுப்பைச் செய்தவர்களில் ஒருவரான டாக்டர் விஜயராகவன் ஜானகிராமன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். அவரும் அவரது நண்பரும் சக மருத்துவருமான திருஞானசம்பந்தனும் ஆளுக்கு அரை மில்லியன் டாலர்களை இதற்காக அளித்துள்ளதாகவும், இதர ஐந்து மில்லியன் டாலர்களை வட அமெரிக்காவில் வாழும் தமிழர்களும், தமிழ்ச் சங்கங்களும் அளிக்க முன்வந்துள்ளதாகவும் அவர் கூறினார். இதற்கான கொள்கை அளவிலான ஒப்புதலை அப்பல்கலைக்கழகம் சில தினங்களுக்கு…

    • 2 replies
    • 1.9k views
  11. மஞ்சை வசந்தன் Manjai Vasanthan Market என்பது தூய தமிழ்ச்சொல்.......... உலகிலுள்ள பலமொழிகளும் தமிழிலிருந்து வந்தவை என்ற உண்மையை உறுதிசெய்ய Market என்ற சொல் சரியான ஆதாரம். இதை கேட்கும்போது உங்களுக்கு நம்பமுடியாது. வியப்பு ஏற்படும். என்றாலும் அதுதான் உண்மை. “மாறுகடை” என்ற தூயதமிழ்ச் சொல்லே Market என்ற ஆங்கிலத்தில் ஆனது. மாறுதல் என்றால் விற்றல் வாங்குதல் என்று பொருள். ”கங்கை நதிப்புரத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு “மாறு” கொள்ளுவோம்” என்ற பாரதி பாடலில் மாறு என்ற சொல் விற்றல் வாங்கலைக் குறிக்கும். மாறுதல் (விற்றல் வாங்கல்) செய்யும் கடை என்பதால் “மாறுகடை” எனப்பட்டது. பேட்டை என்பது pet என்று ஆங்கிலத்தில் வழங்கப்படும். அதே போல் கடை என்பது Ket என்றாகி மாறுகடை என்பது…

    • 1 reply
    • 1.5k views
  12. தமிழ் மொழி கடல் கடந்தும் வாழும் என்ற நம்பிக்கையூட்டும் படியாக "ரஷ்யா நாடு தமிழைக் கொண்டாடுகிறது’’. தமிழன் தமிழில் எழுதினாலோ பேசினாலோ பாராட்டுவது நாமாகத்தான் இருப்போம். நம் மொழியை நாம் பேசவே பாராட்டுகிறோம். அந்த அளவு போய்விட்டது நம் மொழி. ஆனால், தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரஷிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது. அங்கிருக்கும் ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகுத் தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரஷிய மொழியிலும், இரண்டாவதாக அண்டை நாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள். தமிழைவிட எத்தனையோ உலக மொழிகள் பெரும்பாலான மக்களால் பேசப்படுகின்றன. ஆனால், அவற்றையெ…

  13. இரா.கிருஷ்ணமூர்த்திக்கு ‘கணித்தமிழ் விருதை’ கான்பூர் ஐஐடி தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் வழங்கி னார். கணித்தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது. கணினியில் தமிழ் எழுத்துருக் களை அழகாகவும், வெவ்வேறு வடிவிலும் உருவாக்குவதற்கான தேவையை உணரும் வகையிலும், அதற்கான விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கிலும் இக்கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கை ஒருங் கிணைத்த கணித்தமிழ்ச் சங்க தலைவர் சொ.ஆனந்தன் கூறும் போது, “கணினியில் ஆங்கில எழுத்துருக்கள் ஏராளமாக உள் ளன. தமிழில் அப்படியான அழகிய எழுத்துருக்களை உருவாக்கும் முயற்சிகளோ, அதற்கான தொழில்நுட்ப வளர்ச்சியோ இல்லை. ஆங்கிலத்துக்கு ஈடாக, தமிழிலும் எழுத் துருக்கள் வருவதற்கான விழிப்…

  14. இணையத்தில் தகவல்களைத் தேடும் எவரும் செய்யும் முதல் ‘க்ளிக்’ விக்கிப்பீடியாதான். அறிவுப் புரட்சியின் குறியீடாக அது மாறிவருகிறது. அது லாப நோக்கு இல்லாமல், பலரால் கூட்டாகத் தொகுக்கப்படும், பல மொழிகளில் உள்ள இணையக் கலைக்களஞ்சியம். வரும் காலங்களில் மாணவர்களையும், விக்கிப்பீடியாவையும் பிரிக்க முடியாது. அவர்களின் கல்விக்கும், அறிவுத் திறன்களின் தோழனாக அது மாறியுள்ளது. பள்ளிகளில் பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகளில் ஆரம்பித்து கல்லூரிகளில் செய்யும் புராஜெக்ட்கள் வரை மாணவர்கள் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துகிறார்கள். 2001 -முதல் செயல்படும் விக்கிப்பீடியா உலகம் முழுவதும் 280 மொழிகளில் இயங்குகிறது. இந்தியாவில் 22 மொழிகளில் விக்கிப்பீடியா இயங்குகிறது. 2003 முதல் செயல்படும் தமி…

  15. ஒருாவத வது இடத்தில் தமிழ் மொழி - தமிழன் என்று சொல்ல டா தலை நிமிர்ந்து நில்லடா [Friday 2015-08-14 07:00] உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது. உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள்TOP 10 Oldest Languages in the World - சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன. எங்களால் உருவாக்கப்பட்ட வரிசை இது. 10 வது இடத்தில் லத்தீன் மொழி (Lattin) ரோம சாம்ராஜ்ஜியத்தில், லத்தீன் மொழி பரவலாகப் பேசப்படதாகக் கருதப்படுகிறது. அது கி.மு.75 ஆண்டு அளவுகளில் …

    • 2 replies
    • 3.9k views
  16. DanDora - Hi5News # ‪# வட இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் சென்ற விஜயன் என்ற இளவரசன்தான், முதல் சிங்கள அரசை நிறுவியவன் என்று, சிங்களரின் வரலாற்று நூலான மகாவம்சம் கூறுகிறது. இந்தியாவின் இதிகாசங்களான “ராமாயணம்”, “மகாபாரதம்” போன்றது பாலி மொழியில் எழுதப்பட்ட “மகாவம்சம்” என்ற நூல். இதை தங்களின் வேத புத்தகம் போல சிங்களர்கள் மதிக்கிறார்கள். இதை தங்கள் “வரலாறு” என்று சிங்களர்கள் கூறினாலும், நம்ப முடியாத கட்டுக் கதைகளும் இதில் உண்டு. விஜயன் இலங்கையில் சிங்கள வம்சத்தை தோற்றுவித்தவன் – இலங்கையின் முதல் சிங்கள மன்னன் விஜயன் என்று மகாவம்சம் கூறுகிறது. விஜயன் பற்றி மகாவம்சத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:- “வட இந்தியாவில் உள்ள வங்காளம், ஒரிசா ஆகிய பகுதிகள் ஒரு காலத்தில் லால…

    • 1 reply
    • 2.2k views
  17. APPLE - குமளிப்பழம்,அரத்திப்பழம் APRICOT - சர்க்கரை பாதாமி AVOCADO - வெண்ணைப் பழம்,ஆணை கொய்யா BANANA - வாழைப்பழம் BELL FRUIT - பஞ்சலிப்பழம் BILBERRY - அவுரிநெல்லி BLACK CURRANT - கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி BLACKBERRY - நாகப்பழம் BLUEBERRY - அவுரிநெல்லி BITTER WATERMELON - கெச்சி BREADFRUIT - சீமைப்பலா, ஈரப்பலா CANTALOUPE - மஞ்சள் முலாம்பழம் CARAMBOLA - விளிம்பிப்பழம் CASHEWFRUIT - முந்திரிப்பழம் CHERRY - சேலா(ப்பழம்) CHICKOO - சீமையிலுப்பை CITRON - கடாரநாரத்தை CITRUS AURANTIFOLIA - நாரத்தை CITRUS AURANTIUM - கிச்சிலிப்பழம் CITRUS MEDICA - கடரநாரத்தை CITRUS RETICULATA - கமலாப்பழம் CITRUS SINENSIS - சாத்துக்கொடி CRANBERRY - குருதிநெல்லி CUCUMUS T…

    • 17 replies
    • 34k views
  18. Started by Kalamaran,

    எமது வாழ்வியலில் அம்மை அப்பனே வாழ்வின் முழு முதல் ஆரம்பம். ஆகவே தமிழ்த் தாய் ஒருவரின் வீரத்தினை எடுத்து இயம்பி நிற்கும் புற நானூற்றுப் பாடலைக் கொண்டு தமிழர் வீரத்தை நாமும் அறிந்து போற்றுவோமாக. "மீனுண் கொக்கின் தூவியன்ன, வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன், களிறெறிந்து பட்டனன் எனும் உவகை, ஈன்ற ஞான்றினும் பெரிதே" மூலம்: புற நானூறு பாடியவர்: பூங்கண் உத்தரையார் தூவி - இறகு, வால் - வெண்மை (நிறம்) களிறு - ஆண்யானை படுதல் - மாய்தல் (போரில் வீரமரணம்) உவகை - மகிழ்ச்சி சங்கத் தமிழ்த் தாயானவள், போர்க்களத்திலே தன் மகன் யானையைக் கொன்று இறந்தான் என்று மற்றோர் சொல்லக் கேட்ட செய்தியால், தான் அவனைப் (ஆண் மகவு) பெற்றெடுத்த கணத்தில் மகிழ…

    • 0 replies
    • 4.2k views
  19. தமிழ் மொழியைக் கொண்டாடும் ரஷ்யா தமிழ் மொழி கடல் கடந்தும் வாழும் என்ற நம்பிக்கையூட்டும் படியாக "ரஷ்யா நாடு தமிழைக் கொண்டாடுகிறது’’. தமிழன் தமிழில் எழுதினாலோ பேசினாலோ பாராட்டுவது நாமாகத்தான் இருப்போம். நம் மொழியை நாம் பேசவே பாராட்டுகிறோம். அந்த அளவு போய்விட்டது நம் மொழி. ஆனால், தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரஷிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது. அங்கிருக்கும் ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகுத் தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரஷிய மொழியிலும், இரண்டாவதாக அண்டை நாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள். தமிழைவிட எத்தனையோ உலக மொழிகள் பெரும்பாலான மக்களால்…

    • 3 replies
    • 1.9k views
  20. முன்பெல்லாம் எந்த சொல்லுக்காவது அர்த்தம் தெரியவில்லை என்றால் அகராதியைப் பார்த்துத் தெரிந்து கொள்வோம். இந்த இணைய உலகில் என்ன செய்வது என்று யோசிக்கத் தேவையில்லை. இருக்கவே இருக்கிறது விக்கிப்பீடியா. பெரும்பாலான சொற்களுக்கான அர்த்தத்தையும், வரலாற்றையும் தெரிந்துகொள்ள உதவுகிறது விக்கி. தமிழ்ச் சொற்கள், வாக்கியங்களுக்கான அர்த்தங்கள், தகவல்களை தெரிந்துகொள்ள தமிழ் விக்கிப்பீடியா உதவுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தன்னார்வலர்கள் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு தங்களால் ஆன பங்களிப்பைச் செய்து இணையத் தமிழை வளர்த்து வருகின்றனர். அவர்களின் மற்றொரு மைல்கல் விக்கி மாரத்தான். விக்கி மாரத்தான் என்பது ஒரு குறிப்பிட்ட நாள் முழுதும் அனைத்து விக்கி தன்னார்வலர்களும் ஒன்றுகூடி பல்வேறு …

    • 0 replies
    • 592 views
  21. சிறப்பான ஆய்வு. வாழ்த்துக்கள் ஏழாம் அறிவில் சொன்ன மாதிரி தமிழனுக்கு இதை விளங்கப்படுத்துவது கடினம். வேற்று மொழி ஆட்கள் இலகுவில் ஏற்றுக் கொள்வார்கள்.

    • 3 replies
    • 1.2k views
  22. உலகில் தொன்மையான மொழிகளுள் சிறப்பான முதல்மொழி நம் தமிழ்மொழி. ஆதிகாலத்து மூத்த குடிமக்களால் மொழி உருவாக்கம் மற்றும் எழுத்து வடிவம் பெற்று இலக்கணம் படைக்கப்பட்டது. செய்யுள், இறையருட்பாக்கள், காப்பியம், இலக்கியம், நாடகம், கதை, கட்டுரை, செய்திகள், திரைப்படங்கள், நவீன காலப்படைப்புகள் என பல்லாயிரம் ஆண்டுகளாக நம் வாழ்வாக, வழியாக, ஒளியாக, மதியாக நம் தீந்தமிழ்மொழி திகழ்கிறது.தமிழ் எனும் சர்க்கரை தென்னிந்திய மொழிகளின் தாய்மொழியாகவும், பல்வேறு மொழிகளில் உள்ள பல்வேறு வார்த்தைகளுக்கு வேர்ச்சொல்லாகவும், தமிழ் மொழி இருக்கிறது. 'சர்க்கரை' என்னும் தமிழ் வார்த்தை 'ஷக்கர்' (இந்தி), 'சுகர்' (ஆங்கிலம்), 'சுக்காரியா' (கிரீஸ்), 'சுக்காரோ' (இத்தாலி), 'சூக்கர்' (பிரெஞ்சு), 'அசுக்கர்' (ஸ்பானிஷ்), …

  23. எஸ்.ஈஸ்வரன் மக்கள் மத்தியில் தமிழ் ஆர்வத்தைத் தூண்டவும் இளம் குழந்தைகள் தமிழை எளிதாக புரிந்துகொள்ளவும் ‘அரும்பு’ என்ற பெயரில் செல்போன் செயலியை (ஆப்) சிங்கப்பூர் அரசு அறிமுகம் செய்துள்ளது. சிங்கப்பூரில் 14-வது தமிழ் இணையதள மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தமிழ் பேசக்கூடிய சிங்கப்பூரைச் சேர்ந்த 150 பேரும் 10 நாடுகளிலிருந்து வந்த 200 பேரும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் அரும்பு என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் அந்நாட்டு பிரதமர் அலுவலக அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் பேசியதாவது: சிங்கப்பூரின் 4 அலுவல் மொழி களில் ஒன்றாக திகழ்கிறது தமிழ். இந்த மொழியைப் பரப்பு வதற்காக தொழில் நுட்பத்தைப் பயன் படுத்தும் நடவடிக்கையை சிங்கப்பூர் அரசு எப்போத…

  24. பேராசிரியர் தெய்வசுந்தரம் தமிழைப் பிழை இல்லாமலும், மொழிக் கலப்பு இல்லாமலும் எழுதக்கூடிய சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்கியுள்ளார் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம். இதைக் கொண்டு கோடிக்கணக் கான தமிழ் சொற்களின் பிழை களைத் திருத்த முடியும். இந்த மென்பொருளைச் சிறப் பாக வடிவமைத்த தெய்வசுந்த ரம், ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’ பெற முதன்முறை யாகத் தமிழக அரசால் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார். ஒரு லட்சம் ரூபாய், ஒரு பவுன் தங்கம், பாராட்டுப் பத்திரம் கொண்ட விருது விரைவில் அவருக்கு வழங்கப்படவுள்ளது. இந்த மென்பொருளை கம்ப் யூட்டர், லேப்டாப் போன்றவற்றில் பதிவேற்றிவிட்டால், தமிழ் வார்த் தைகளில் உள்ள தவறை எளி தாகக் கண்டுபிடித்து ஒரு வினாடி யிலேயே திருத்த முடியும். வார்த்தை யில் ஒ…

    • 0 replies
    • 974 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.