தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
செம்மொழியாம் எங்கள் தமிழ்மொழி =============================== "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" உலகப்பொதுமறை என வள்ளுவப் பெருந்தகையனார் அமிழ்தினும் இனிதான தமிழ் மொழியினில் அருளிச் சென்ற 1330 குறள்களுள் முதற்குறள். எவ்வாறு உலக எழுத்துக்களுக்கெல்லாம் 'அ'கரம் முதலாவதாக இருக்கின்றதோ அதேப் போல் இந்த உலகத்திற்கு இறைவன் முதல்வனாக இருக்கின்றான் என்ற மாபெரும் கருத்தை எளிமையாக எடுத்துக் கூறிக் கொண்டு இருக்கின்றது. சரி...!!! ஆனால் உண்மையிலேயே உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் அகரமே முதல் எழுத்தாக உள்ளதா என்ற கேள்வி என்னுள் ஒருநாள் எழுந்தது. அதற்குரிய விடையினை அறிந்துக் கொள்ளப் பல மொழிகளின் எழுத்துக்களைப் பற்றித் தேடிய பொழுது அந்தக் கருத்து உண்மைதான் என அறிந்து…
-
- 0 replies
- 1.2k views
-
-
https://scontent-b-lhr.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/10438251_583098455170259_8427344783465854430_n.jpg?oh=aa7316d3c7dece79718f8050414d2a6a&oe=550A56A1 ஙப் போல வருமா ? ”ஙப் போல் வளை” என்றால் ஙே என்று முழிப்பது ஏன்? தொப்புல் கொடியில் இருந்து விடுபட்ட குழந்தை, இவ்வுலகுடன் ஏற்படுத்தும் முதல் ஒலி தொடர்பு ”ங்கா..”. தமிழின் சிறப்பெழுத்து "ழ” வைப்போல இன்னொரு எழுத்து “ங” இந்த எழுத்தை கூர்ந்து கவனித்தால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல இருப்பதை காணலாம். சிறுவர்கள் இளம் பருவத்தில் எளிமையாக தமிழை பாடம் செய்ய ஒளவையால் எழுதப்பட்டது ஆத்திசூடி. இவர் வாழ்ந்த காலம் 12ஆம் நூற்றாண்டு. ”ங போல் வளை “ 'ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழ…
-
- 5 replies
- 12.6k views
-
-
தமிழர்கள் எதையும் காரண காரியத்தோடு செய்தவர்கள். இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தவர்கள் தமிழர்கள். அப்படியானால் அவர்களின் புத்தாண்டில் ஏன் குழப்பம்? “தை” யா “சித்திரையா” – தெளிவாக நாம் அறிய வேண்டியது அவசியமாகிறது. தமிழக அரசும், கட்சிகளும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் தமிழ் அறிஞர்கள் எவரும் இதுவரை எது தமிழ் புத்தாண்டு என்பதை துல்லியமாக அறிவிக்க அஞ்சுகிறார்களா? அல்லது அவர்களுக்கும் தெரியாதா? ஆண்டிற்கு 12 முழுநிலவும் (பவுர்ணமி) 12 நிலவில்லா (அமாவாசை) நாட்களும் உண்டு. குறைந்தாலும் கூடினாலும் தவறுதான். தினமும் சூரியன் கிழக்கே தோன்றி மேற்கே மறைகிறான். அத்தோடு சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக வடக்கும் தெற்கும் சென்று வருகிறான். வடக்கே சென்று வடக்கிலிருந்து தெற்கே திரும்புவது – வடசெலவு எ…
-
- 12 replies
- 5.1k views
-
-
திருக்குறளும் திருக்குர்ஆனும் திருக்குறளுக்கும் திருக்குர்ஆனுக்கும் அப்படியொரு பெயரொற்றுமை வரக் காரணமென்னவென்று சிந்திக்க வேண்டியிருக்கிறது. இது ஒரு தற்செயல் நிகழ்வா அல்லது திருக்குர்ஆனுக்குப் போட்டியாக எழுதப்பட்டதனாலா? என்ற சந்தேகம் எழுகிறது. திருக்குறள் எழுதப்பட்ட காலப்பகுதிபற்றிச் சரியான தெளிவில்லை. அக்காலம் இந்தியாவிற்குள் இஸ்லாம் நுழைவதற்கு முன்னரா அதன் பின்னரா என்பது புரியவில்லை. திருக்குறள் பழைய ஏற்பாட்டிற்கு முற்பட்டது அல்லது கிறிஸ்துவுக்கு முற்பட்டது என்றெல்லாம் கூறி நாம் தமிழருக்கெனத் திருக்குறளைப் பின்பற்றி ஆண்டுக்கணக்கொன்றை வேறு வைத்திருக்கிறோம். இது எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கது? திருக்குறளிலிருந்து காமத்துப்பாலை நீக்கிவிட்டாலும் அது உ…
-
- 6 replies
- 3k views
-
-
நெஞ்சை அள்ளும் சிலம்பு - வைகோ உரை 26:30 ல் இருந்து கல்கியின் பொன்னியின் செல்வன் கம்பனில் பண்பாடு எனும் தலைப்பில் பிரான்சு கம்பன் கழகம் நடத்திய 10 ஆம் ஆண்டு விழாவில் 12.11.2011 சனிக்கிழமை அன்று ஐயா தமிழருவி மணியம் ஆற்றிய உரை.
-
- 0 replies
- 851 views
-
-
அனல் மேலே பனித்துளி அலைபாயும் ஒரு கிளி மரம் தேடும் மழைத்துளி இவை தானே இவள் இனி இமை இரண்டும் தனித்தனி உறக்கங்கள் உறைபனி…. எந்த காற்றின் அலாவலில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ ..... ஒரு சிறு வலி இருந்ததவே இதயத்திலே உனதிருவிழி தடவியதால் அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே உதிரட்டுமே உடலின் திரை… எல்லா மொட்டிதழல்களும் மலர்வதற்குதான் குவிந்து காத்திருக்கிறது... எந்தக் காற்று அலாவுமோ என்ற ஏக்கத்தில்!. காற்றுகளுக்கு அலாவுதலின் அளவைச் சொல்லிக் கொடுப்பார் யாருமில்லை. இருந்தாலும் தொடர்ந்து சுழன்று கொண்டிருக்கும்போது ஏதேனும் ஒரு மொட்டு மலர்ந்து விடும் என்ற நம்பிக்கையில் இசைக்காகவும், இன்குரலுக்காகவும் இந்தப் பாடலின் இனிமையில் இளைப்பாறிச் செல்பவர்கள் அநேகம்....! ஆனால்…
-
- 0 replies
- 2.2k views
-
-
மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளுடன் தமிழுக்கு இருந்த உறவு அரசியல் காரணங்களால் நலிவடைந்தது. திராவிட மொழிகளுள் மூத்த மொழியான தமிழ், இந்திய விடுதலைக்கு முன்புகூட தன் சக மொழிகளுடன் நல்லுறவு கொண்டிருந்தது. மொழிவாரி மாநிலம் உருவான பிறகு ஏற்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி, மொழி மீதான அரசியல்வாதிகளின் நிதானமற்ற ஆவேசம் இரண்டும் ஒரு குடும்ப மொழிகளுக்குள்ளே மாறுபாட்டை உருவாக்கிவிட்டன. கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளுக்கும் தமிழுக்குமான உறவில் சில அரசியல் காரணங்களால் இடைவெளி வந்துவிட்டது. என்றாலும், விதிவிலக்காகப் பண்பாட்டு ஆய்வாளர் சிலர் இனத்துக்கும் மொழிக்குமான பழைய உறவைச் சரியாகவே பதிவுசெய்துள்ளார்கள். ஷெட்டரின் ஆராய்ச்சி சங்க இலக்கியங்களின் கன்னட மொழி பேசிய பகுதியின் வரலாற்றை நே…
-
- 0 replies
- 700 views
-
-
தமிழரின் தலையாய சொத்து தொல்காப்பியம். மொழியியல் அறிஞர்கள் அதன் எழுத்து, சொல் இலக்கணங்களைப் பார்த்து, படித்து வியக்கின்றனர். பொருள் இலக்கணம் அவற்றினும் மேலானதாகப் போற்றப்படுகிறது. தொல்காப்பியர் தமிழரின் அக வாழ்க்கையை பொருள் இலக்கணத்தில் கூறியுள்ளார். அதில் அறிவியல் நுட்பங்கள் பலவற்றை அவர் பதிவு செய்துள்ளார். கற்பு வாழ்க்கை மேற்கொண்ட (குடும்ப வாழ்க்கை) தலைவன்-தலைவி இருவரும் குழந்தைப்பேறு பெறுதலுக்கான சூழ்நிலையை இன்றைய மருத்துவத்துறை வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிற அதே நேரத்தில், "உண்மைதான்' என்று சொல்கிற செய்தியைத் தொல்காப்பியம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பறைசாற்றியுள்ளது வியப்புக்குரியது! உதாரணத்துக்கு ஒன்றை மட்டும் காண்போம். ""பூப்பின் புறப்பா டீரறு நாளும் நீத்தகன் று…
-
- 2 replies
- 2.6k views
-
-
1 தமிழ் - ஓர் உயர்தனிச் செம்மொழி. உயர்தனிச் செம்மொழி என்னும் தொடரில் மூன்று அடைமொழிகள் உள்ளன. உயர், தனி, ;செம் என்பனவே அந்த அடை ;மொழிகள். உயர்ந்தமொழி, தனித்த மொழி, செம்மையான மொழி எதுவோ அதுவே உயர்தனிச் செம்மொழியாகும். உயர்வுத் தன்மை, தனித்தன்மை, செம்மைத் தன்மை ஆகிய மூன்று தன்மைகளையும் கொண்ட மொழியாக நம் தாய்மொழி தமிழ் இருப்பதை இங்கே பார்ப்போம். சொல் வளம் - ஒரு மொழிக்கு உயர்வு அம்மொழியிலுள்ள சொல்வளத்தைப் பொறுத்தே அமையும். கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள உதவும் கருவியே மொழி. கருத்துகளைச் சொற்றொடர்கள் வழியாகவே உணர்த்துகிறோம். சொற்றொடர்களே சொற்களால்தான் உருவாகின்றன. எனவே மொழிக்கு அடிப்படையாக அமைவன சொற்களே. ஆ, ஈ, வா ,போ முதலிய ஒரெழுத்துச் சொற்கள் தமிழில் 50க்…
-
- 0 replies
- 4.4k views
-
-
சொல்லில் இருக்கிறது சூழ்ச்சுமம் - தமிழ்த் துளி
-
- 1 reply
- 928 views
-
-
Puradsifm பழந்தமிழரின் அளவை முறைகள்...! முகத்தல் அளவைகள் ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர். ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர். ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர். ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர். ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு. ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர். ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர். ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர். ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம். முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு. ஐந்து சோடு = ஒரு அழாக்கு. இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு. இரண்டு உழக்கு = ஒரு உரி. இரண்டு உரி = ஒரு நாழி. எட்டு நாழி = ஒரு குறுணி. இரண்டு குறுணி = ஒரு பதக்கு. இரண்டு பதக்கு = ஒரு தூணி. மூன்ற…
-
- 0 replies
- 2.6k views
-
-
ஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச் சாற்றினன்.. சிலம்பு - வரந்தரு காதை 32, 33. இந்தச் சிக்கலுக்கு இன்னது தீர்வு என்று எடுத்துக் கூறப்படும் செய்திக்குச் செம்மொழி என்று பெயர். நிறைமொழி, மறைமொழி, நன்மொழி என்ற வரிசையில் செம்மொழி என்பது தமிழின் ஒரு தனிப்பண்பு என்று தெரிகிறது. சிலப்பதிகாரத்தில் “செவ்வை நன்மொழி” என்ற குறிப்பு இடம் பெற்றுள்ளது. மறுக்கவில்லை. அவ்வை அம்மையாவது போல, கொவ்வை கொம்மையாவது போல செவ்வை நன்மொழி என்பது செம்மொழி ஆகிறது எனப் பழந்தமிழ் இலக்கியங்கள் பதிவு செய்திருக்கின்றன என்று கொள்ளலாம். அகநானூற்றுப் புலவர் மாமூலனார் குறிப்பிடும் செம்மொழியும், சிலம்பு குறிப்பிடும் செம்மொழி மாதவச்…
-
- 0 replies
- 23.1k views
-
-
- ரிஷியா அவனைக் கண்ட அந்தநாள். விழிமொழியால் பேசிய நாள் அது. விழிவழியே வந்த காதல் இதயத்தில் நிறைந்தது. என்புவரை சென்று உயிரைத் தாக்கியது. எனக்கு மட்டுமா இந்த நிலை? அவனுக்கு? கண் வழியே நெருப்புப் பூக்கள் உடலெங்கும் மலர்ந்த தருணம் அது. விழிமொழியால் பேசப்படாத வார்த்தைகளை விரல்மொழியால்தானே பேச இயலும். விழிமொழிக்குக் காதல் என்று பெயரிட்டால், விரல்மொழிக்குக் காமம் என்று பெயரிடலாமே! விழியும் விரலும் பேசினால்தானே அன்பின் அத்தியாயங்கள் வாழ்க்கை என அரங்கேறும். இதை அவன் உணர்ந்தானா? உணரவில்லையே! அவனை விரும்பி, இணைந்து, பிணைந்து கொள்ள என் துயர் தீர்க்க அவன் வரவில்லை. என்னை ஊரறிய ஏற்றுக் கொள்ளவும் எந்த முனைப்பும் காட்டவில்லை. எனக்குள் மலர்ந்த அக்னிப்பூக்கள் அவனுக்குள் மலரவில்லையா…
-
- 2 replies
- 935 views
-
-
சிறந்த எழுத்துகள் பழந்தமிழில் மட்டும் இருந்தால், இன்றைய தமிழுக்குக் காலி பெருங்காய டப்பா என்ற பெயரே இருக்கும். ‘தமிழ் கூறு நல்லுலகு’ என்னும் தொடர் தமிழ் உலகத்தைக் குறிக்கிறது. தமிழ் உலகம் என்பது பூமியில் தமிழ் வழங்கும் பகுதி. இந்தப் பகுதி உலகம் முழுவதிலும் பரவியிருக்கிறது என்னும் பொருளில் ‘உலகளாவிய தமிழ்’ என்னும் தொடர் வழங்குகிறது. இதிலிருந்து பிறந்ததுதான் உலகத் தமிழ் என்று புதிதாக வழக்குக்கு வந்துள்ள தொகைச்சொல். தமிழ் உலகத்தை உலகத் தமிழ் என்று மாற்றிப் போட்ட சொல். தமிழர்கள் பிழைப்பைத் தேடி உலகம் முழுவதும் சென்று குடியேறியிருக்கிறார்கள் என்னும் நிதர்சனத்தைப் பிரகடனப்படுத்தும் சொல். தமிழர் வரலாற்றில் புலப் பெயர்வு புதிது அல்ல. ஆனால், பொருளாதாரத்தில் வளர்ந்துள்ள அம…
-
- 1 reply
- 1.8k views
-
-
சமீபத்தில் ஒரு கள உறவு ஓர் திரியில் "தாலி கட்டுதல்" தமிழர் முறையா என்று கேட்டிருந்தார். அதன் விளைவாக இந்தச் சிறிய கட்டுரை... பண்டைத் தமிழர் தன் வாழ்க்கையில் களவு, கற்பு ஆகிய இருவகை ஒழுக்கங்களை கொண்டிருந்தனர். தலைவனும் தலைவியும் உள்ளம் ஒன்றுபட்டு பிறர் அறியாதவாறு மறைவிடத்துக் கூடி மகிழ்வது களவு. அதாவது காதல் செய்து திருமணம் செய்வது. இப்படியும் கூறலாம்.. முதலில் பார்வையில் ஆரம்பித்து பின் பழகி அதற்குபின் கலவி கொண்டு இணைந்திருப்பது. தலைவனுடைய பெற்றோரும் தலைவியின் பெற்றோரும் முறைப்படி பேசி, பெற்றோரும் உற்றோரும் மற்றோரும் கொடுப்பக் கொண்டு இல்லறம் நடத்துதல் கற்பு. இப்படியொரு கால கட்டத்தில் களவு மனமே நிறைந்திருந்தது. இங்கு ஆண் கலவுப்புனர்ச்சியில் ஈடுபட்டு பின்…
-
- 0 replies
- 2.9k views
-
-
தமிழிலக்கிய அறிமுகம் பேராசிரியர். க.பூரணச்சந்திரன் கலம்பக இலக்கியம்: தமிழில் தலையாய இலக்கியம் சங்க இலக்கியம். அது தனிப்பாடல்களால் ஆனது. சங்க காலத்திற்குப் பிறகு தோன்றிய நூல்களில் முதன்மையானவை காப்பியங்கள். இவற்றைத் தவிர சிற்றிலக்கியங்கள் என்னும் நூல்களும் இடைக் காலத்தில் அவ்வப்போது எழுந்தன. காலப்போக்கில் நூல்வகையில் ஏற்படும் மாற்றங்களை விருந்து என ஏற்றுக் கொள்கிறது சங்ககால இலக்கண நூலாகிய தொல்காப்பியம். குறைந்த பாடல் எண்ணிக்கையைக் கொண்டவற்றைப் பிரபந்தங்கள் அல்லது சிற்றிலக்கியங்கள் என்று பிற்காலத்தினர் வழங்கத் தொடங்கினர் ஆகலாம். காப்பியங்கள் பேரிலக்கியங்கள் ஆதலின் இவற்றிலிருந்து வேறுபடுத்தச் சிறிய அளவில் எழுந்த நூல்களைச் சிற்றிலக்கியங்கள் என்றனர் போலும். அல்லது …
-
- 1 reply
- 1.8k views
-
-
ஜெயமோகன் - உலக இலக்கியம் ‘பாதேர் பாஞ்சாலி’யின் [ வங்கத்தில் பொதேர் பஞ்சாலி .பாதையின் குரல்கள்] ஆசிரியர்’ யார் என்று கேட்டால் கணிசமானோர் `சத்யஜித்ரே’ என்று கூறக்கூடும். அப்புகழ்பெற்ற திரைப்படத்தின் பாதிப்பு அத்தகையது. அந்த விரிவான பாதிப்பிற்கு படம் மட்டும் காரணமில்லை என்று எனக்குத் தோன்றுவதுண்டு. அது ஓர் அழகிய திரைப்படம்-அவ்வளவுதான், தீவிரமானதோ மகத்தானதோ அல்ல. அதன் காட்சிப்படிமங்களில் நம் ஆழ்மனத்துக்குள் செல்லும் மறைபிரதி இல்லை. எது காட்டப்படுகிறதொ அதுவே அப்படம். ஆனால் அப்படம் பலவகையிலும் முன்னோடியானது. மேற்கத்திய புது யதார்த்தபாணி திரைப்படங்களை அடியொற்றி இந்திய திரைப்படத்துறை தன் படிமமொழியை கண்டடைந்தது. அத்திரைப்படம் வழியாகத்தான். மிதமிஞ்சிய உற்சாகத்துடன் நாற்பது வர…
-
- 0 replies
- 550 views
-
-
கலை / இலக்கியம்! தேங்கோ நடனம் : காதலின் கலை வடிவம் - யமுனா ராஜேந்திரன் - 1 தகதகவெனக் கொழுந்துவிட்டு மூண்டெழுந்து நடனமிடும் நெருப்பு. ‘ஆரத்தழுவி எனக்குள் மூழ்கிக் கலந்து விடு’ என, ஆண்பெண் உடல்கள் எதிர்பாலிடம் விடுக்கும் விரகத்தின் அழைப்பு. அடர்ந்த இரத்தத்தின் அடையாளமாகி கிளர்ச்சியூட்டும் சிவப்பு நிறத்தின் தவிப்பு. ‘ஸல்சா’ முதல் ‘தேங்கோ’ வரையிலுமான இலத்தீனமெரிக்க நடனங்களை நினனைக்கும் தோறும், இந்த மூன்று பிம்பங்களும், இவைகளின் அப்படைகளையேனும் அறிந்தவர்ககு முன்வந்து, பரவசம் எமது நரம்புகளில் பரவுவதை அனுபவிக்க முடியும். ஸ்பானியத் திரைப்பட இயக்குனரான கார்லோஸ் ஸவ்ராவின் ‘இரத்தத் திருமணம்’( Blood wedding 1981) திரைப்படம…
-
- 4 replies
- 3k views
-
-
இலக்கணம் - யாப்பெருங்கலக் காரிகை யாப்பருங்கலக்காரிகை - ஒரு அறிமுகம் நெறிபடுத்தப்பட்ட மொழியாகிய தமிழில் இலக்கிய வளர்ச்சியுடன் இலக்கண வளர்ச்சியும் இணைந்தே நடந்து வந்திருக்கிறது. உலகின் தொன்மையான இலக்கண நூல்களில் தொல்காப்பியமும் ஒன்று. இதின் இலக்கண விதிகள் இன்றைக்கும் பொருந்திவருவது உலகில் வேறேந்த மொழிக்கும் இல்லாத சிறப்பாகும். இந்த நெடிய இலக்கண மரபில் முக்கிய இடம் வகிக்கும் ஆக்கம் யாப்பருங்கலக்காரிகை; இது செய்யுளுக்கு இலக்கணம் கூறுகின்றது. இந்நூல் உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் எனும் மூன்று பகுதிகளைக் கொண்டது. பாவின் அடிப்படை உறுப்புகளாகிய, எழுத்து, அசை, சீர், தளை முதலியனவற்றை முதல் பகுதியாகிய உறுப்பியல் விளக்குகின்றது. இது தொடர்ந்து செய்யுளியலில் பாவிற்குரிய…
-
- 0 replies
- 11.4k views
-
-
மக்களின் பேச்சுத் தமிழை, ‘நல்ல தமிழ்’ வாதத்தைக் கூறிப் புறக்கணித்துவிடக் கூடாது. தமிழ் மொழிக்கு அடைமொழிகள் தந்து பாராட்டுவது புலவர்களின் மரபு. மொழிக்கு மட்டுமல்லாமல், மனிதர்களுக்கும் மற்றவற்றுக்கும் அடை கொடுப்பது தமிழ்க் கலாச்சாரத்தின் ஓர் அம்சம் என்றுகூடச் சொல்லலாம். நல்ல என்ற சொல் தமிழுக்கு உள்ள பழமையான அடைகளில் ஒன்று. ‘நற்றமிழ்’ என்னும் வழக்கைப் புறநானூற்றில் காண்கிறோம். தமிழ் நல்ல மொழி என்பது இதன் பொருள். இந்த வழக்கு மற்ற மொழிகள் கெட்ட மொழிகள் என்று சொல்ல வரவில்லை. நமக்கு நம் பிள்ளை நல்ல பிள்ளை என்பது போல, நமக்குத் தமிழ் நல்ல மொழி என்கிறது. நல்ல என்ற சொல்லின் பொருள் நல்ல என்ற சொல்லுக்குத் தமிழில் பல பொருள்கள் உண்டு. அந்தப் பொருள்கள் தமிழரின் கலாச்சாரப் பா…
-
- 1 reply
- 1.2k views
-
-
கொஞ்சம் பெரிய கவிதை தான். ஆனாலும் இதை எழுதியவரின் திறமையும், தமிழின் இனிமையையும் மெச்சித்தான் ஆக வேண்டும்.. இன்பம் - ஐம்பது அன்பொடு இகத்தினில் வாழுதல் இன்பம்; அறிவொடு நிலத்தினில் ஆளுதல் இன்பம்; பண்புடை மாந்தராய்த் திகழுதல் இன்பம்; பணிவுடை மனிதரைப் புகழுதல் இன்பம்; தென்றலில் மழையினில் நனைதல் இன்பம்; சந்தனக் காற்றினில் தவழுதல் இன்பம்; வெண்மதி வானில் உலவுதல் இன்பம்; நிம்மதி நெஞ்சினில் நிலவுதல் இன்பம்; இரவினில் காதலில் கொஞ்சுதல் இன்பம்; உறவினில் களிப்பினில் கெஞ்சுதல் இன்பம்; அருகினில் சிறகினில் துஞ்சுதல் இன்பம்; அருமையில் பெருமையில் மிஞ்சுதல் இன்பம்; திரையினில் மறைவினில் அஞ்சுதல் இன்பம்; திறமையில் கடமையில் விஞ்சுதல் இன்ப…
-
- 4 replies
- 2k views
-
-
- ரிஷியா Source : http://www.varalaaru.com மீண்டும் வருவேன் என்கிற பாவனையில் பிரிந்து சென்றுவிட்டான். இன்றுவரை ஏனோ வரவில்லை. இன்று வருவானோ, என்று வருவானோ? காலமென்னும் மீளா நதியில் நாட்கள் மெல்ல மெல்ல நகர்கின்றன. சுவரில் கோடுகள் இழுத்து நாட்களைக் குறிக்கின்றேன். என் வீட்டுச் சுவர் முழுவதும் கரிக்கோடுகளின் ஓவியக்காட்சி. சுவர் போதவில்லை. மண்பானை நிறைய மஞ்சாடிக் குன்றிகளைப் போட ஆரம்பித்துள்ளேன். பானைகள் பல நிரம்பிவிட்டன. அவன் வரவில்லை. உடல் இங்கே, உயிரோ அங்கே அவனோடு. கூடு மட்டும் வாழ்ந்து என்ன பயன்? நீலத்தை இழந்த வானம், உலவ மறந்த தென்றல், வசந்தம் காணாத நந்தவனம். இவை ஒன்றெனும் சுகம் தருமா? அவன் பார்வையில் தொடங்கிய பொழுதுகள் எல்லாம் இப்பொழுது வெறுமையில் தொடங்கி முட…
-
- 0 replies
- 712 views
-
-
- ரிஷியா Source : http://www.varalaaru.com கா... கா... கா... என்று கரைந்தது மரத்தின் மீது அமர்ந்திருந்த கரியகாகம். அவன் இன்றும் வரவில்லையே என்று பிரிவுத் துயரால் முற்றத்தில் இருந்த தலைவி வெளியே ஓடி வந்தாள். காக்கை கரைகிறதே, இது ஒரு நல்ல நிமித்தமே, பரவசப்பட்டாள். காக்கை கரைந்தால் விருந்து வருமே. மனம் குதூகலிக்க வீட்டிற்குள் ஒடினாள். ஒருவேளை அவன் வருவானோ... அவன் இன்று வருவானா? என் கண்ணீர் துடைப்பானா? என் சோகம் இன்று தீருமா? எல்லாம் கேள்விக் குறிகள். கா.... க்கா....... அந்த கரிய காகம் எதற்காய் இப்படிக் கரைகிறது? வாசலுக்கும் முற்றத்திற்குமாய் நடையாய் நடந்தாள். தூரத்தில் குதிரைக் குளம்பொலி கேட்டது. பழகிய அந்த ஒலி அவளுக்கு எல்லையில்லா மகிழ்வைக் கொடுத்தது. அவனேத…
-
- 2 replies
- 804 views
-
-
முல்லை மகளே!! வாள் மங்கையே!! மழை மேகப்புறாக்கள் வானவெளியில் குப்பலாய் ஓன்று கூடின. மெல்ல மெல்ல வானம் வெண்மழை பொழிய ஆயத்தமாகிக் கொண்டிருந்த ஆவணித் திங்களின் கார்காலை அது. வைகறை எழுந்து நீராடிய ஆயர்பாடி மங்கையர், தம் இல்லத்துக் கொட்டிலில் மூங்கில்கழியோடு பிணைக்கப்பட்டிருந்த ஆநிரைகளுக்கு நறுமண தூபப்புகை காட்டினர். குளிருக்கு ஓடுங்கிய இளங்கன்றுகளுக்கு இதமாய் இருக்கட்டுமென்று பெரிய மண்சட்டிகளில் காய்ந்த வரட்டிகளோடு, உலர்ந்த சருகுகளைப் போட்டு எரியூட்டினர். ஆயர்குலச் சிறுவர்கள் தம்வீட்டுத் திண்ணையில் அமர்ந்து புல்லாங்குழலை எடுத்துக் காற்றை உள்ளிழுத்துப் பண் இசைக்கத் தொடங்கினர். காலையை வந்தனம் கூறி வரவேற்பதாய் இருந்தது அவர்கள் இசைத்த பூபாளம். சிறுமியர்கள் கொல்லையில் வளர்ந்து நில…
-
- 0 replies
- 1.1k views
-
-
உலகின் தற்போதைய மக்கள் தொகை 724 கோடி. உலகின் மக்கள் தொகை வேகமாகப் பெருகிவருகிறது. ஆனால், உலக மக்களின் பல மொழிகள் அதைவிட வேகமாக அருகி மறைந்து வருகின்றன. சொந்த மக்களால் கைவிடப்படுதல், ஆதிக்க மொழிகளால் கழுத்து நெறிக்கப்படுதல், பயன்படுத்தாமல் ஒதுக்கிவைத்தல், தங்களது தாய்மொழியை மதிப்பு குறைந்ததாக நினைத்தல் எனும் முதன்மையான நான்கு காரணங்களால் மொழிகள் மரணமடைகின்றன. உலக அளவில் இப்போதைக்கு 7,105 மொழிகளும், அதில் இந்தியாவில் மட்டும் சுமார் 880 மொழிகளும் பயன்பாட்டில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலக அளவில் 1,000 க்கும் குறைவான மக்கள் தொகையினரால் சுமார் 2,000 மொழிகள் பேசப்படுவதாகவும், இந்திய அளவில் கடந்த 50 ஆண்டுகளில் 220 மொழிகள் அழிந்துவிட்டதாகவும் மேலும் ஓர் ஆய்வு தெரிவிக…
-
- 1 reply
- 4.2k views
-