தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
வீரமும் ஈரமும் - சுப. சோமசுந்தரம் தமிழரின் சங்க கால வாழ்வியலில் காதலும் வீரமும் தலையாயவை என்பதை மன்பதை அறியும். காதல் ஒரு மென்மையான உணர்வு என்பது வையத்தார்க்கு யாரும் சொல்லாமலே தெரிவது. சிலரே அதனை முழுமையாய் உணர்வர் என்பது தனிக் கதை. அக்கதை "மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார்" (குறள் 1289) எனும் வள்ளுவத்தால் உணரற்பாலது. தொடக்கம் முதலே மென்மையானதாய்க் காதலை வகைப்படுத்தலாம். கடமை, கொள்கை உறுதிப்பாடு போன்றவற்றால் வீரமானது முதலில் சற்றே கடுமையாய்த் தோன்றினாலும், தமிழர் தம் வாழ்வியல் நெறியில் அதுவும் மென்மையாய்…
-
- 0 replies
- 1.3k views
- 1 follower
-
-
கள்வன் மகனும் உள்ளம்கவர் கள்வனும் பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி தமிழ்த் திரைப்படங்களில் காதல் வயப்பட்ட ஆணின் செயல்களை நாம் நடைமுறையில் காணாத மிகைக் காட்சிகளாகக் காட்டுவர்; இப்படியும்கூட ஒருவனால் செய்யமுடியுமா என்று பலவேளைகளில் விவாதங்கள் வந்துபோவதுண்டு. காட்டாக, மணிரத்னத்தின் மௌனராகம்(1986) திரைப்படத்தில், கதாநாயகி ரேவதியை அருகில் வைத்துக்கொண்டே ரேவதியின் அப்பாவை, "மிஸ்டர் சந்திரமௌலி", என்று அட்டகாசமாக அழைப்பார் கதாநாயகன் கார்த்திக். அமர்க்களம்(1999) திரைப்படத்தில் "உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு! என் உள்நெஞ்சு சொல்கின்றது!" பாடல் காட்சியில், பரபரப்பானதொரு காலைவேளையில், ஷாலினியின் அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி உள்ளிட்டோர…
-
- 0 replies
- 2.6k views
-
-
தற்கால தரைப்படையில் உள்ள ஒவ்வொரு பிரிவுகளுக்குமான தமிழ் சொற்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன...படித்து மகிழுங்கள்! இச்சொற்கள் எல்லாம் சங்க இலக்கியங்களில் இருந்து எடுக்கப்பட்டவை ஆகும். பிரிவு :- Unit துணைப்பிரிவு - Sub-Unit சூட்டணி/ சூடு & தடூக அணி:- fireteam/ fire and maneuver team = 2–4 சதளம் :- squad /crew = 8–12 பகுதி/ சுற்றுக்காவல் :- section / patrol = 8–24 நாரி/ படையினர் :- platoon/ troop = 26–55 குவவு - staffel/ echelon = 50- 90 குழாம்/ சேணேவித் தொகுதி :- Company /Artillery battery = 80–250 சமரணி :- battalion /cohort = 300–1000 படையணி :- regiment/ group= 1,000– 3000 படைத்தொகுதி/அதிகம் :-…
-
- 0 replies
- 1.1k views
-
-
"கடலில் விடம்என அமுதுஎன மதனவேள் கருதி வழிபடு படையோடு கருதுவோர் உடலின் உயிரையும் உணர்வையும் நடுவு போய் உருவும் மதர்விழி உடையவர்! திறமினோ! " - கலிங்கத்துப் பரணி பாற்கடலின் நஞ்சு போலவும் அமுதுபோலவும் இருக்கின்றன மங்கையின் விழிப் பார்வைகள். காமனின் கணைகள் நினைப்பவரின் உயிரையும் உணர்வையும் ஊடுருவி அழிக்கும். அதுபோல பார்ப்போரின் உயிரையும், உணர்வையும் உருவிச் செல்லும் செருக்குடைய விழிப் பார்வைகளைக் கொண்டவர்களே கதவை திறவுங்கள்!! ஒரு பார்வை நோய் செய்கின்றது அக்கணமே மற்றொரு பார்வை மருந்தாக அமைகிறது.. கண நேரத்தில் வீசப்பட்ட ஓர் விழி வீச்சில் சாய்க்கப்பட்ட கோட்டைகள் எத்தனையோ??!!
-
- 0 replies
- 870 views
-
-
நெஞ்சை அள்ளும் சிலம்பு - வைகோ உரை 26:30 ல் இருந்து கல்கியின் பொன்னியின் செல்வன் கம்பனில் பண்பாடு எனும் தலைப்பில் பிரான்சு கம்பன் கழகம் நடத்திய 10 ஆம் ஆண்டு விழாவில் 12.11.2011 சனிக்கிழமை அன்று ஐயா தமிழருவி மணியம் ஆற்றிய உரை.
-
- 0 replies
- 851 views
-
-
தொல் தமிழர் கொடையும் மடமும்.. செவ்விலக்கியங்களில் பல வள்ளல்கள் பற்றிய குறிப்புகள் பரந்த அளவில் இடம் பெற்றுள்ளன. அவர்கள் வாழ்ந்த காலத்தைக் கணக்கில் கொண்டு வள்ளல்கள் முதலேழு, இடையேழு, கடையேழு என்று பகுத்துள்ளனர். ஆனால் முதலேழு மற்றும் இடையேழு வள்ளல்களுடைய பெயர்கள் அவ்வளவு எளிதாக யாருக்கும் தெரிந்திருப்பதில்லை, கர்ணனை தவிர்த்து. அவர்களைப் பற்றியத் தரவுகள் கூட மிகவும் அரிதாக இருக்கின்றன. பழங்காலத்தில் ஈகையையும் கொடையையும் ஒன்றாகப் பார்த்தனர். உண்டாட்டுக் கொடையென (தொல். பொ 58). இல்லான் கொடையே கொடைப்பயன் (நாலடி,65). என்கிறது பாடல். நுணுகிப் பார்க்கும்போது பொதுவாக ஈகையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது கொடையாகும். கொடை விளக்கம் கொடை என்ற சொல்லிற்குத் தியாகம், பு…
-
- 0 replies
- 3.1k views
-
-
ஒருவனுக்கு பசி தோன்றிய போது அவனிடத்தில் உள்ள சிறந்த குணங்கள் அனைத்தும் போய்விடும். இதை தான் "பசி வந்தால் பத்தும் பறக்கும்" என்பார்கள். அவை மானம், குலப்பெருமை, கல்வி, வலிமை, அறிவு, பிறருக்கு கொடுக்கும் குணம், தவம், பெருந்தன்மை, தளராத முயற்சி, தேன் போல் பேசும் மங்கையர் மேல் உள்ள ஆசை ஆகிய பத்தும் பறந்து போகும்.
-
- 0 replies
- 942 views
-
-
திராவிடத் திரிபுவாதம் சங்க இலக்கியத்தில் மொகஞ்சொதாரோ – அரப்பா இருக்கிறதா? எதிர்வினை: ‘திராவிடமும் இந்தியமும் உடன் கட்டை ஏறவேண்டும்’ என்றும், ‘சங்க இலக்கியத்தில், காப்பிய இலக்கியத்தில் பக்தி இலக்கியங்களில் திராவிடர் என்ற சொல் இல்லை’ என்றும் பெ.மணியரசன் பேசியதைத் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டத்தில் (ஏப்ரல் 16‡30,2012) வெளியிட்டிருந்தீர்கள். ‘திராவிடம்’ என்ற சொல் தமிழனை, தமிழை, தமிழ் இனத்தைக் குறிக்கத் திரித்துச் சொல்லப்பட்ட சொல்தான். திரிந்த தமிழ்ச் சொல்லே தவிர வடசொல் அல்ல. தமிழன் என்று சொன்னால் தமிழனை மட்டும் குறிக்கும். திராவிடன் என்று சொன்னால் தமிழனையும் குறிக்கும், மொழியால் தெலுங்கராக, கன்னடராக, மலையாளியாக, துளுவராகத் திரிந்துபோனவர்களைய…
-
- 0 replies
- 1.8k views
-
-
புனைவு என்னும் புதிர்: ஷோபா சக்தி - வெள்ளிக்கிழமையின் விசேஷம் ஷோபாசக்தி கலையின் முக்கியமான அம்சம், வெளிப்பாடுதான்; கருத்தன்று. அதி அற்புதமான கருத்துகளை அரிய கண்டுபிடிப்பு போல் அநேக மேதைகள் என்றைக்கோ எழுதிவைத்துச் சென்றுவிட்டனர். ஆனால் அவற்றைக் கலையாக வெளிப்படுத்தும் விதத்தில் கிறங்கடிக்கிறான் கலைஞன். இனி பிறக்கப்போகும் எவருக்கும் அகண்டாகாரமாய்த் திறந்து கிடக்கும் வெளி அது. ஷோபாசக்தி, தமது கதைகளில் அரசியல்தான் பேசுகிறார். அவர் பேசும் அரசியலைக் கடுமையாக மறுப்போர்கூட அவர் கதைகளின் கலைத் தரத்தை மறுக்க சிரமப்படுவார்கள். வாசகனின் பார்வைத் திறனுக்கேற்ப, பல அடுக்குகளைக் கொண்ட கதைகளே, பெரிய எழுத்து என இலக்கியவாதிகளால் கொண்டாடப்படுகி…
-
- 0 replies
- 985 views
-
-
-
- 0 replies
- 813 views
-
-
தமிழின் 247 எழுத்துக்களில் பயன் படாத எழுத்துக்கள் உள்ளனவா? எனக்கு தமிழ் மொழி குறித்து நீண்ட நாட்களாக இருந்து வரும் சில ஐயப்பாடுகளுக்கு விடைத் தேடும் வகையில் தமிழறிஞர் ஒருவரிடம் ஒரு வினாவினை தொடுத்தேன்.... அய்யா... தமிழில் *உயிர் எழுத்துகள் 12 *மெய் எழுத்துகள் 18 *உயிர்மெய் எழுத்துகள் 216 *ஆய்த எழுத்து 1 என மொத்தம் 247 எழுத்துகள் உள்ளன. இந்த 247 எழுத்துகளில் பல எழுத்துகள் பயன்பாடற்ற எழுத்துகளாகவே உள்ளனவே ... குறிப்பாக *உயிர்மெய் எழுத்துகளில் உள்ள "ங"கர வரிசை எழுத்துகளில் ,"ங" என்ற எழுத்து மட்டுமே அதிக அளவில் பயன்படுகிறது! மற்றுமுள்ள 17 ஙகர வரிசை எழுத்துகள் பயனற்றே உள்ளன.! அதேபோன்று *ஞ கர வரிசை எழுத்துகளிலும் *ஞ -ஞா ஆகிய இரண்டு எழுத…
-
- 0 replies
- 1.4k views
-
-
விழிபட்ட இடம் இன்று உளிபட்ட சிலையாக இது தானோ காதல் என்றறிந்தேனடி புது பார்வை நீ பார்த்து புது வார்த்தை நீ பேசி இதயத்தை இடம் மாற செய்தாயடி!! மெல்லிடை கொண்டு நடைகள் போடும் அழகான பெண்ணே முப்படை கொண்டு என்னை சுற்றி வளைத்தாயடி!! என் உறக்கத்தை திருடி சென்று உறவாடும் பூவே உன் சிரிப்புக்குள் சிறை வைக்கிறாய்... இசையோடு சேர்ந்த இந்தப் பாடல் வரிகள் என் இதய வார்ப்புகளை எப்பொழுதும் கீறிச் செல்லும். காதலிப்பதை விட நாம் காதலிக்கப்படுகிறோம் என்பதை உணரும் தருணம் இருக்கிறதே.....!! உணர்வற்ற உடலாய் உயிரற்ற சடமாய் ஏகாந்த வெளிகளில் சஞ்சரிக்கும் அந்த போதையை என்னவென்று சொல்வது !! எழுத்துக்களில் அடக்க முடியாத உயிரை அறுக்கும் உணர்வுகளின் தொகுப்பு அது.. ஐந்திணை…
-
- 0 replies
- 893 views
-
-
மாமலையும் ஓர் கடுகாம் ! கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம் என்பார் கவிஞர் பாரதிதாசன். மாமலைகூட ஓர் கடுகாகத் தெரியும் இந்தக் காதலர்களுக்கு, பெற்றோரிடம் அனுமதி பெறுவது என்பது மாமலையைத் தூக்குவது போல கடினமாகத் தெரிவதுதான் காதலின் விந்தை! தன் காதலைப் பெற்றோருக்குப் புரியவைத்து அவர்களின் அனுமதியோடு திருமணம் செய்துகொள்பவர்களுக்கு தம் வாழ்வில் எதிர்கொள்ளும் மலையளவு துன்பங்கள் கூட கடுகளவாகத் தெரியும்! வாழ்க்கையிலிருந்து வந்ததுதான் இலக்கியம் என்றாலும் இலக்கியத்துக்கும் வாழ்க்கைக்குமான இடைவெளி மிகவும் பெரிது. இலக்கியத்தையும் - வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த உண்மை புலப்படும். ஒரு காதலர் புலம…
-
- 0 replies
- 4.7k views
-
-
96 வகை சிற்றிலக்கியங்கள் 1. சாதகம் 2. பிள்ளைக்கவி 3. பரணி 4. கலம்பகம் 5. அகப்பொருட்கோவை 6. ஐந்திணைச்செய்யுள் 7. வருக்கக் கோவை 8. மும்மணிக்கோவை 9. அங்கமாலை 10. அட்டமங்கலம் 11. அனுராகமாலை 12. இரட்டைமணிமாலை 13. இணைமணி மாலை 14. நவமணிமாலை 15. நான்மணிமாலை 16. நாமமாலை 17. பல்சந்தமாலை 18. பன்மணிமாலை 19. மணிமாலை 20. புகழ்ச்சி மாலை 21. பெரு மகிழ்ச்சிமாலை 22. வருக்கமாலை 23. மெய்க்கீர்த்திமாலை 24. காப்புமாலை 25. வேனின்மாலை 26. வசந்தமாலை 27. தாரகைமாலை 28. உற்பவமாலை 29. தானைமாலை …
-
- 0 replies
- 830 views
-
-
-
- 0 replies
- 628 views
-
-
மரபிலக்கணப் பார்வையில் இடைச்சொல் (அமெரிக்க வாழ் நட்பினர் திருமதி வைதேகி அவர்கள் தாமே தமிழ் இலக்கியங்களைக் கற்று, இணையத்தில் தமிழ்ப்பணி செய்து வருபவர். அவர் இடைச்சொல் பற்றிக் கட்டுரை ஒன்று எழுதுமாறு வேண்டினார். பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் அதனைத் தம் வலைப்பூவில் வெளியிடுவதாகக் கூறினார். அதன்படி எழுதப்பட்ட இக்கட்டுரை இங்கும் தரப்படுகின்றது. பயன்கொள்க). மரபிலக்கணப் பார்வையில் இடைச்சொல் முனைவர் ஆ. மணி, …
-
- 0 replies
- 5.9k views
-
-
ஆய்வு: நற்றிணையில் கடற்பெயர்கள் முன்னுரை - ம.பிரசன்னா, தமிழ் உதவிப்பேராசிரியர், கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கிருஷ்ணன்கோவில் -கடல் என்னும் நீர்நிலையானது, நீர் நிலைகளில் தனித்துவமான ஒன்றாகும். வருடம் முழுவதும் நீரினைக் கொண்டதாகக் கடல் திகழ்கின்றது. அதன் பிரம்மாண்ட அளவும், அது கொண்ட நிறமும், அதன் செயல்பாடும் கொண்டு கடலை பல்வேறு பெயர்களில் நற்றிணைப் புலவர்கள் பதிவு செய்துள்ளனா். ஆசிரியப்பா என்னும் இலக்கண வடிவத்தில் கவிபுனைந்த புலவர்கள், கடற் பெயர்களை அவரவர் புலமை அனுபவத்தில் செம்மையான சொற்செட்டுமானத்துடன் படைத்திருப்பதை நற்றிணைப் பாடல்களின் வழி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். கடலும் அதன் குடிவழிகளும் தமிழன் பயன்படுத்திய நீர்நிலைகளி…
-
- 0 replies
- 1.8k views
-
-
1. மதுரை சிவப்பெருமானின் 64 திருவிளையாடல்களை பற்றி சொல்லும் திருவிளையாடற் புராணத்தை வௌ;வேறு கால கட்டத்தில் இருவர் பாடியுள்ளனர். முதலில் பாடியவர் பெரும் பற்றப் புலியூர் நம்பி என்பவர் ஆவார். அடுத்து பரஞ்சோதியார் என்பவரும் பாடியுள்ளார். 2. 63 நாயன்மார்களில் ஒருவரான சேரமான் பெருமாள் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளுரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சேரமன்னர். இவர் சிதம்பரத்தில் பொன் வண்ணத்தந்தாதி எனும் நூலை பாடி, அரங்கேற்றியுள்ளார். மேலும் திருவாரூர் மும்முணிக்கோவை, ஆதியுலா (திருக்கயிலாய ஞான உலா) ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார். 3. பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 847 முதல் 872 வரை) சிறப்புகளை கூறும் நூல் நந்திக்கலம்பகம். எருகை முத்திரை சின்னமாக உடைய இந்த மன்னனிடம் …
-
- 0 replies
- 620 views
-
-
திருக்குறளில் மரம் முன்னுரை: வாயுறை வாழ்த்து எனப் போற்றப்படும் திருக்குறளில் பல இடங்களில் மரம் என்ற சொல் பயின்று வந்துள்ளது. நுண்மாண் நுழைபுலம் மிக்க தெய்வப் புலவராம் வள்ளுவர் மரத்தின் தன்மைகளைப் பற்றியோ நன்மைகளைப் பற்றியோ அறியாதவரல்லர். 'மருந்தாகித் தப்பா மரத்தற்றால்', 'உள்ளூர்ப் பயன் மரம் பழுத்தற்றால்' என்று மரத்தின் நன்மைகளைக் கூறி அவற்றைப் போற்றிய வள்ளுவர் 'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்', 'மண்ணோடியைந்த மரத்தனையர்', ' மரமக்கள் ஆதலே வேறு' என சில இடங்களில் மரத்தின் சிறப்பைக் குறைத்துக் கூறியிருப்பதாக இன்றைய உரைநூல்கள் கூறுகின்றன. வள்ளுவர் உண்மையில் அவ்வாறு கூறியிருப்பாரா?. மரத்தைப் பொறுத்தமட்டில் வள்ளுவரின் உண்மையான நிலைப்பாடு என்ன? என்பதை ஆய்வின் ம…
-
- 0 replies
- 18.9k views
-
-
மயங்கொலிச் சொற்கள் ----------------------------------------- (மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில் கிட்டத்தட்ட ஒரே வடிவிலான எழுத்துருக்களை கொண்டவைகளாகவும், முற்றிலும் வேறுபட்ட பொருள் கொண்டவைகளாகவும் காணப்படும். இவ்வாறான சொற்கள் ஒலிப்பின் போது நுண்ணிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருப்பதால் எது சரி, எது தவறு என மயங்க வைப்பவைகளாக இருக்கும். அதனாலேயே இவற்றை மயங்கொலிச் சொற்கள் என்றழைக்கப்படுகின்றன.) தமிழில் உள்ள மயங்கொலிச் சொற்கள் ---------------------------------------------------------------------- ண, ன பொருள் வேறுபாடு ல, ழ, ள பொருள் வேறுபாடு ர, ற பொருள் வேறுபாடு ண, ன பொருள் வேறுபாடு ------------------------------------------------ அணல் - தாடி, கழுத்து அனல் - நெருப்பு அணி - அழகு அன…
-
- 0 replies
- 4.4k views
-
-
தமிழின் இலக்கண, ஒலிப்பியல், மரபு முறைகளுக்கு அமைய அமைந்த பெயர் தமிழ்ப் பெயர் ஆகும். ஒரு நபரின் பெயர் அவரின் பின்புலத்தை எடுத்துக்காட்டுவதாக அமையும். ஒரு அடிமைக்கு அவரின் ஆண்டையே பெயர் வைக்கும் உரிமையைப் பெறுகிறான். அதனால் அடிமைப் பெயர்களை (Slave names) பல கறுப்பின மக்களும், காலனித்துவ அரசால் வேற்று நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட தென்னிந்திய மக்களும் தாங்க வேணியதாகிற்று. அதே போல் அண்மைக்காலம் வரை தமிழ்ச் சூழலில் பல பெயர்கள் சாதி href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF">சாதியையும்'>http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF">சாதியையும் சேர்த்துக் குறித்து நின்றன. பிள்ளை, ஐயர், படையாச்சி போன்ற பெயர் இணைப்புகள…
-
- 0 replies
- 2.1k views
-
-
முத்தொள்ளாயிரம் ஒரு பார்வை கனிமொழி உலா இலக்கியங்களுக்கு முன்னோடி முத்தொள்ளாயிரம் எனும்நூல். இது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இப்பாடல்கள் பெரும்பாலும் சேரன், சோழன், பாண்டியன் ஆகிய மூவேந்தர்களைப் பற்றியது. இந்நூல் பெயர்க்காரணம் மூன்று வேந்தர்களைப் பற்றிய 900 பாடல்கள் என்றும், மூவேந்தருள் ஒவ்வொருவருக்கும் 900 பாடல்கள் என்ற இரு வேறு கருத்துகள் உண்டு. ஆக இந்த நூலின் மொத்த பாடல்கள் 2700 ஆக இருந்திருக்க வேண்டும், ஆனால் நமக்கு 108 பாடல்களே கிடைத்துள்ளன. புறத்திரட்டு என்பதில் இருந்துதான் இந்த 108 செய்யுள்களையும் தொகுத்துள்ளனர். இந்த பாடல்கள் பெரும்பாலும் கைக்கிளையில் அதாவது ஒருதலைக்காதல் கொண்டு பாடப்பட்டது. மூவேந…
-
- 0 replies
- 1.4k views
-
-
மலைபடுகடாம் நூலின் பாட்டுடைத் தலைவன் நன்னனின் வரலாறு . பத்துப்பாட்டு நூலுள் நிறைவாக வைத்து எண்ணப்படும் நூல் மலைபடுகடாம் ஆகும். இதனை இயற்றியவர் இரணிய முட்டத்துப் பெங்குன்றூர் பெருங்கொளசிகனார் ஆவார். இந்நூலின் பாட்டுடைத் தலைவன் செங்கண்மாத்துவேள் நன்னன் சேய் நன்னன் எனும் அரசனாவான். இவன் கொண்கான நாட்டில் ஏழில் மலையையும், பாரம் என்ற நகரையும் ஆண்ட நன்னனின் மகன் என்பதை மலைபடுகடாம் நூலின்வழியும், நச்சர் உரை வழியும் பிற சங்கநூல் சான்றுகள் வழியும் உறுதிப்படுத்த முடிகிறது. கொண்கான நன்னன் பெண்கொலை புரிந்ததால் புலவர்கள் அவனையும் அவன் மரபினரையும் பாட விரும்பவில்லை என்பதைப் புறநானூறு வழி அறிய முடிகின்றது. அவ்வாறு எனில் நன்னன் வழியில் வந்த நன்னன் சேயைப் பெருங்கௌசிகனார…
-
- 0 replies
- 5.4k views
-
-
எல்லா(hello), வணக்கம் மக்களே... இங்கு உலகின் அனைத்துக் கப்பல்களுக்குமான சொற்களை உருவாக்கி பட்டியலிட்டிருக்கிறேன். அதில் என்னால் இயன்றளவு பழந்தமிழ்ச் சொற்களையும் கையாண்டிருக்கிறேன். ஒருசில இடங்களில் என் தமிழறிவிற்கு உட்பட்ட அளவில் ஒரு ஏரண முறையைப் பயன்படுத்தியிருக்கிறேன். அதாவது தமிழில் 'கடற்கலன், நு, நௌ, யானம்(மருஉ-ஆனம்)' என்ற நான்கு சொற்கள் கடலில் செலவாகும் வண்டிகளுக்கு பொதுச் சொல்லாக உண்டு. இவற்றை சரியான முறையில் கையாளும் பொருட்டு ஒரு தோரணியைப் பயன்படுத்தியிருக்கிறேன். எப்படியெனில் பலுக்கல் மற்றும் ஆங்கில ஈற்று எழுத்துக்களின் அடிப்படையிலே!.. அதாவது, er என்று முடியும் இடங்களில் நு அ நௌ ஆகிய சொற்களையும் vessel, craft என்று முடியும் இடங்களில் கடற்கலன் என…
-
- 0 replies
- 884 views
- 1 follower
-
-
நீங்கள் எந்த மதத்தை சார்ந்தவராக அல்லது எந்த நம்பிகை உடையவராக இருந்தாலும் சற்று அதில் இருந்து விலகி ஒரு தமிழனாக இருந்து இக்கட்டுரையை வாசிக்க உங்களை அழைக்கிறேன். தமிழ்மொழியின் வரலாற்று வீழ்ச்சியும் அதன் சீரழிவுகளும் "ஒரு நதி அழிந்தால் ஒரு நாகரிகம் அழிகின்றது என்று பொருள். ஒரு மொழி அழிந்தால் ஒரு இனம் அழிகின்றது என்று பொருள். ஆம். சிந்து நதிகரையில் நாம் வளர்த்த நாகரிகம் இந்த உலகிற்க்கு இன்று வரை வியப்பாக இருக்கிறது . சிந்து நதிகரையில் ஒப்பற்ற நாகரிகத்துடன் வாழ்ந்த திராவிட இனம் மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஆரியர்களின் வருகையால் சிதறி ஒடி பாரத்தின் தென்பகுதிக்கும், காடுகளுக்கும், மலைகளுக்கும் சென்றது. சிறிது, சிறிதாக ஆரியர்கள் பாரத்தின் வடபகுதி எங்கும் வி…
-
- 0 replies
- 1.1k views
-