- Open Club
- 57 members
- Rules
ரசித்தவை

72 topics in this forum
-
பெண்டாட்டி வீட்டில் இல்லையெனில் ஆண்களுக்கு சில நாட்கள் கொண்டாட்டம்தான்.. அப்புறம் சலித்து, வெறுமையாகி மனம் ஏங்க ஆரம்பித்துவிடும்.. இந்த உணர்வுகள் எல்லோருக்கும் இருப்பதுதான்.. இந்தக் காணொளியும் அதையே பிரதிபலிக்கிறது..
-
- 3 replies
- 2.5k views
- 1 follower
-
-
முகத்தை சவரம் செய்ய சலூன் அல்லது பிளேடு கிடைக்காமல் குஷ்டம் வந்தது போல 'ட்ரிம்' செய்த தாடியுடன் அல்லது பரட்டை தலையில் 'கோடு போட்டு' திரிப்பவர்களை கண்டால் காத தூரம் விலகி நடப்பதுண்டு. அதில் இக்கால புள்ளீங்களும் அடக்கம்..! இவ்வகை 'புள்ளீங்களுக்கு' செமத்தியாக 'வச்சு செய்த' சிதம்பரம் நகர காவல் துறையினருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்..! 😛
-
-
- 5 replies
- 782 views
-
-
இன்று(02-04-2023) "விடுதலை - பாகம் 1" படம் பார்த்து முடிந்து வெளியே வந்தவுடன் காதில் ரீங்காரமிடும் பாடல்கள்.. பல நாட்கள் கழித்து இளையராசாவின் இசையில் பிடித்த பாடல்கள்..
-
-
- 2 replies
- 904 views
-
-
“சார் ! இந்த ரோடு தாம்பரம் போகுங்களா ?" வார்த்தை பாதியும், வறுமை மீதியுமாய் வந்து சேர்ந்த வார்த்தைகள் சட்டென என்னை திரும்பி பார்க்க வைத்தது, கெச்சலான தேகம், உழைத்து உழைத்தே உள்ளே போன கண்கள், அடி பைப்புகளில் துவைத்து கட்டியே அழுக்கேறிய வேட்டி சட்டை, கையில் ஒரு பிளாஸ்டிக் பை சகிதம் ஒரு பெரியவர் நின்றிருந்தார். மறுபடியும் ஒரு முறை கேட்டார், "தம்பி இந்த ரோடு தாம்பரம் போவுமுங்களா ?” “ஐயா, இது கோயம்பேடு ரோடு, ரைட் சைடு போகுது பாருங்க, அதான் கிண்டி, தாம்பரம் ரோடு, எதித்தாப்ல போய் நில்லுங்க, தாம்பரம் பஸ் வரும் ! " சரி என தலையாட்டிவிட்டு, எதிர்புற ரோட்டில் நுழைந்து, பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் கிண்டியை நோக்கி விறு விறு வென நடக்க துவங்கினார், "அய்யா ! அடுத்த பஸ்ஸ்டாப் ர…
-
- 0 replies
- 659 views
-
-
மனைவியை சமாளிப்பது எப்படி..?
-
-
- 2 replies
- 1.1k views
- 1 follower
-
-
-
- 4 replies
- 791 views
-
-
யாரு பார்த்த வேலையப்பு..? நகல் இருக்கலாம், ஆனால் நகலுக்கும் அசலுக்கும் வித்தியாசமே இல்லாமல் நடிப்பது சாதாரண காரியம் அல்ல.. நம்ப முடியவில்லை..!
-
- 5 replies
- 2.2k views
-
-
மறுநாள் (இன்று) வார விடுமுறை.. நள்ளிரவு தூங்கும் வரை வழக்கமாக பழைய பாடல்களை கேட்கும் எனக்கு, இந்தப்பாடல் வரிகள் கவர்ந்தன.. யூடுயூபில் தேடி படத்தை பார்த்தேன். பாடல்கள் அத்தனையும் அருமை.. படமும் பரவாயில்லை.. அசிரத்தையான ஆணின் கவனத்தை ஈர்க்க, "எனக்கென்ன குறை..? ஏன் இந்த பாராமுகம்..?" என பெண் பாடுவதாக கண்ணதாசன் வரிகளில், எம்.எஸ்.வி இசையில் மனம் கவர்ந்த பாடல்..! ஊகிக்க முடிகிறதா..?
-
- 1 reply
- 914 views
- 1 follower
-
-
திரைப்படங்களில் சில சாதாரண, எளிமையான காட்சிகள். நம் மனதைவிட்டு அகலாமல் நிரந்தரமாக நின்றுவிடும்.. அவற்றில் சில காட்சிகள் கீழே.. சமீபத்தில் வெளியான 'வெற்றிவேல்' படத்திலிருந்து..
-
- 4 replies
- 535 views
- 1 follower
-
-
பின்னிரவில் ஏகாந்தமாய் அமரும் சந்தர்ப்பங்களில், மெல்லிய விளக்கொளியில் பழைய பாடல்களை கேட்பதுண்டு.. ! வார இறுதியான நேற்றிரவு, அப்படி கேட்ட பாடல்களில் கீழ்க்கண்ட பாடல்களை ரசிக்க முடிந்தது..! மிக்ககுறைந்த இசைக்கருவிகளோடு சிரத்தையாய் பழைய பாடல்களை இசைத்து, நம் மனக்கண் முன்னே ரசித்த அக்கால படத்தின் பிம்பங்களை நிழலாடவிட்டுள்ளனர் இந்த குழுவினர்.. ** பழைய பாடல்களை ரசிப்பவர்களுக்கு மட்டுமே இப்பதிவு, பொறுமையாக ரசிக்கவும்.. "தென்றல் உறங்கியபோதும் திங்கள் உறங்கியபோதும் கண்கள் உறங்கிடுமா..?" "எனை ஆளும் மேரி மாதா... துணை நீயே மேரி மாதா...!"
-
- 0 replies
- 439 views
-
-
வெகு எளிமையாக, அருமையாக இந்த விளம்பரத்தை உருவாக்கியுள்ளனர்.. அந்த வீடியோ கலைஞருக்கு ஒரு சபாஷ்!
-
- 0 replies
- 574 views
-
-
குக்கிராமத்தில் பிறந்து, பெரிய நகரங்களின் முகமறியாது வளர்ந்து, பதின்ம வயதில் 70 களில் சென்னைக்கு முதன் முறையாக தனியாக சென்று ஓரிரு நாட்கள் தங்க நேரிட்டது. சென்னையை பற்றி பலரும் சொன்னது, படங்களில், செய்திகளில் படித்தது என அனைத்தும் ஞாபகத்தில் வந்து மிகுந்த முன்னெச்சரிக்கையாக இருக்க மனம் தூண்டியது. ஆட்டோவில், மாநகரப் பேருந்துகளில் செல்லும்போது அடிக்கடி பர்ஸை தொட்டுப்பார்த்துக்கொள்வது வழக்கம்.. நகரப் பகுதிகளைப் பற்றி தெரியாததால் 6 மணிக்கெல்லாம் உறவினரின் வீட்டுக்கு திரும்பிவிடுவதும் வழக்கம். அதேமாதிரி இக்காணொளியில் வரும் பெண்ணின் சென்னையை பற்றிய மனநிலையை திரையில் பார்த்தவுடன், என் பழைய இளமைக்கால நினைவுகள்..புன்முறுவல்கள்.. ரொம்பவும் ரசிக்கும்படியாக திரைமயமாக…
-
- 0 replies
- 455 views
-
-
தகவல் தொழிற்நுட்பம் அதிவேகத்தில் முன்னேறியவுடன் பல விடயங்களை உடனுக்குடன் நேரலையாக கையடக்க கருவிகளில் பார்த்து அறியக்கூடியதாக உள்ளது. முன்பெல்லாம் எமக்கு ஈழத்து கலைஞர்கள் யாரென்றே தெரியாது. இலங்கை வானொலியில், அல்லது தமிழ் நாட்டில் வரும் ஊடக துணுக்குகளில் மட்டுமே அறியக்கூடியதாக இருந்த ஈழத்து கலைஞர்களின் முகம், தற்பொழுது பலரும் பார்த்து அறியக்கூடியதாக உள்ளது. அவ்வகையில் முன்பு காட்பெர்டில்(Hot Bird) வந்துகொண்டிருந்த "படலைக்கு படலை" காணொளியை சில வருடங்களுக்கு முன் பார்த்து வந்தேன். அத்தொடரில் கவர்ந்த கலைஞர்களான 'சிறீதரன் மாணிக்கம்' மற்றும் 'பாஸ்கி' ஆகியோரின் இயல்பான ஈழத்து தமிழில் நகைச்சுவை ரொம்ப பிடிக்கும். அந்த கலைஞரின் நேர்முக பேட்டியை இன்று ரசித்து பார்த்தே…
-
- 0 replies
- 361 views
-
-
காதல், காமம், தாபம் ஆகியவற்றை ஒருசேரக் குழைத்து, பெருவெள்ளமாக இசையில் கொடுத்த இளையராஜாவின் பாடலை, இரண்டே வயலின்களை வைத்துக் கொண்டு தத்ரூபமாக வாசித்திருப்பது மிக அருமை..! 😍 பாராட்டுக்கள்..!
-
- 1 reply
- 997 views
- 1 follower
-
-
இப்படியும் ஒரு நகைச்சுவை..!
-
-
- 4 replies
- 1.5k views
- 1 follower
-
-
கேலக்ஸி 9 'சாம்சுங் கேலக்ஸி S9' கைப்பேசியை சந்தையில் அறிமுகப்படுத்தும் உத்தியாக, உலகின் மிக உயரமான கட்டிடம் துபாயிலுள்ள 'புர்ஜ் கலீஃபா'வில் பதிக்கப்பட்டுள்ள வண்ண விளக்குகளால் ஒளிரப்பட்டது..! அதன் காணொளியை அவசியம் காணுங்கள்..
-
-
- 1 reply
- 771 views
-
-
இண்டிகோ - அடிங்கோ..! இண்டிகோ விமான ஊழியர்கள், அதில் பயணம் செய்த பயணியை அடித்து வீழ்த்தி கழுத்தை நெரித்த காணொளி இணையத்தில் வைரலாக உலா வரும் இவ்வேளையில், அந்நிறுவனத்தின் வியாபார சின்னத்தை(Logo) மாற்றியமைத்து நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.. 'இண்டிகோ' என்பது 'அடிங்கோ'வாக மாறியுள்ளது..! சின்னத்திலுள்ள விமான படத்தையும் எட்டி உதைக்கும் விதமாக மாற்றியுள்ளனர். சின்னத்தின் கீழே அருமையான வாசகத்தையும் பொறித்துள்ளனர்.. "நம்பி வாங்க.. அடி வாங்கிட்டுப் போங்க..!"
-
- 2 replies
- 567 views
-
-
டிஸ்கி: இன்று 2020 புது வருடத்தில் முதல் வாரத்தின் வெள்ளிக்கிழமை வார விடுமுறை நாள்..! பொழுது போகாமல் தொலைகாட்சியின் "டென்ட் கொட்டா" அப்.பில் உயர்தர HD ப்ரிண்டில் வெளிவந்துள்ள படங்களை அசிரத்தையாக முதல் சில காட்சிகளை மட்டும் ஓடவிட்டு ப்ரிவியூ பார்க்க ஆரம்பித்தேன். அதில் காளிதாஸ் என்ற இப்படத்தினை பார்க்க ஆரம்பிக்கையில், முதல் சில நிமிடங்களிலேயே ஒரு பெண்ணின் துர்மரணம்.. அதை விசாரிக்க வரும் காவல் அதிகாரி, சில கோணங்களில் விசாரணையை ஆரம்பிக்க, எனக்கும் 'இந்த மரணம் எப்படி நடந்திருக்கும்..?' என ஊகிக்க ஆரம்பித்து படத்தோடு ஒன்றி விட்டேன்..! சில 'லாகிக்' சறுக்கல்களை தவிர, கடைசி வரை விறுவிறுப்பாகவே படம் இருந்தது. இயக்குநருக்கு இதுதான் முதல் படம் என்பதை நம்ப மு…
-
- 2 replies
- 1.3k views
-
-
'நீட்'ட நான் வச்சுக்கிறேன்.. 'சீட்'ட நீ வச்சுக்கோ..!
-
- 0 replies
- 397 views
-
-
"மேரா சபுநோ கி ராணி கப் ஆயா கீ தூ..?" - "என் கனவு ராணி எப்போது வருவாள்..?" என்னங்க, 'இந்த வயசுல இவருக்கு இளமை திரும்புகிறதா..' என்று நினைக்கிறீர்களா..? பரண் மீதிருக்கும் பழைய பஞ்சாங்கத்தை தேடலாமென ஏறிப் பார்த்தால், பழைய எல்பி ரெகார்ட் ஒன்றுதான் கிடைத்தது..! சுழலவிட்டேன்.. பாடலும் வந்தது.. அதோடு வீணை இசையும் புது வடிவில்..!! ரசிப்பீர்களென்ற நம்பிக்கையுள்ளது..! Start the music...
-
- 1 reply
- 638 views
- 1 follower
-
-
ஓய்வு நேரத்தில் IBC-யில் வரும் இந்த "Tea கடை" நிகழ்ச்சியை அடிக்கடி பார்ப்பதுண்டு..! இவ்வாரநிகழச்சியில் "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.." என்பதற்கு, பொன்னம்பலம் ஈஸ்வரன் (அம்மான்)சொல்லும் விளக்கம் ரசிக்கும்படி இருந்தது. டிஸ்கி: இம்மாதிரி சீரியல்களை நாங்கள் பார்க்க வெளிக்கிட்டமென்டால், நாங்களும் ஈழத்தமிழில் கதைச்சுடுவோமென்ட அச்சம் வருதுடாப்பா, கடவுளே..! 😝
-
-
- 5 replies
- 784 views
- 2 followers
-
-
-
-
- 3 replies
- 1.3k views
-
-
இசையின் ஒரு வடிவம் செல்வி செயலலிதா அம்மையார் மறைந்தபொழுது, செயா தொலைக்காட்சி, அவரின் காணொளிகளை நேரலையாக ஒளிபரப்பியபோது, அதன் பின்னணியில் ஒரு வயலின் இசை மட்டும் மெல்லிதாக ஒலித்துக்கொண்டே இருந்தது மனதை மிகவும் பாதித்தது. இசையின் மூலம் மனதை வருடி, சோகத்தையும் உணர்த்தலாம் என்பதை இவ்விசையை உணர்ந்தால் புரியும்.. யுடுயூபில் தேடியதில், அந்த இசையொலி கிடைத்தது.. உணர்ந்து ரசிப்பீர்களென்ற நம்பிக்கையுள்ளது..! முழு வடிவம்..
-
-
- 2 replies
- 1.5k views
- 1 follower
-
-
பல நாட்கள் கழித்து இளையராஜாவின் இசையில் இந்தப் பாடல் மிகவும் பிடித்தது..! இப்பாடலின் பின்னணியில் காட்சிகளின் வனப்பு மிக அருமை.. புல்வெளிக் குன்றுகளில் மின்விளக்குகளை அமைத்து ஒளிரவிட்டு, அருகில் சிறு குளத்தில் அன்னப் பறவைகளை நீந்தவிட்டுள்ள காட்சியமைப்புக் கலை, கண்கவரும் வண்ணம் அமைந்துள்ளது. கீழே இரண்டாவது காணொளியில் கிராபிக்ஸ் தொகுப்பு பாடல் வரிகளுடன் நம்மையும் கூடவே பாடத் தூண்டுகிறது..!
-
-
- 1 reply
- 655 views
- 1 follower
-
-
தமிழ்நாடு அரசின் நிதி அமைச்சர் திரு.பழனிவேல் தியாகராஜன் அவர்களின் இந்த பேட்டி, வட இந்திய அதிகார வர்க்கத்தை, பிராமணிய குழுவை அசைத்துப்பார்த்து எரிச்சலடைய வைத்துள்ளது. பேட்டி ஆங்கிலத்தில் இருந்தாலும், தமிழ் நாட்டின் சுயநிர்ணய, சுயமரியாதைக்கான தேவையை, விட்டுக்கொடுக்க முடியாது என்பதை நுணுக்கமாக எடுத்துரைத்துள்ளார். பொறுமையாக பார்த்தால், இக்காணொளியை நிச்சயம் ரசிக்கலாம். 👌 நேர்காணலின் முடிவில் 'பல்வேறு கலாச்சாரம், மொழிகள், இனங்கள் கொண்ட இந்தியா ஒரு நாடாக இருப்பது அதிசயம், அது இன்னும் 25 கழித்தும் அது தொடருமா? என்பதை காலம்தான் சொல்லும்' என முத்தாய்ப்பாக முடித்துள்ளது சிறப்பு..!
-
-
- 9 replies
- 992 views
- 2 followers
-