பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
-
- 8 replies
- 2.2k views
- 1 follower
-
-
திராவிடமும் தமிழ்தேசியமும் — திராவிட புரட்டு எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. - திருக்குறள் முதலில் திராவிடமென்றால் என்னவென்று தங்களை திராவிடர்கள் என்று சொல்லிகொள்பவரிடமே பெரும் குழப்பம் உள்ளது. திராவிடம் என்பது மொழிப்பெயரா ? அல்லது இனப்பெயரா? அல்லது இடப்பெயரா? மூன்றுமே ஒன்றுதான் என்பர் சிலர், மூன்றும் வெவ்வேறு என்பர் சிலர். வித்தியாசம் தெரியாமல் நாம் குழப்பிக்கொள்கிறோம் என சொல்பவரும் உண்டு. திராவிடம் என்றால் என்ன? இந்த திராவிட கட்சிகள் தங்கள் பெயரில் தாங்கி நிற்கும் திராவிடம் எதனைக் குறிப்பது? அதற்கான தேவையென்ன என ஆராய்ந்தால், சுழியத்தில் வந்தே முடியும். 1. திராவிட மொழிக் குடும்பம் ராபர்ட் கால்டுவ…
-
- 5 replies
- 1.7k views
- 1 follower
-
-
மொழித் தொல்லியல் (Linguistic Archeology) என்ற புதிய மொழியியல் துறையின்ஆய்வுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கிறபோது, உலகில் மொழி தோன்றியகாலத்திலேயே தோன்றிய மொழி தமிழ்மொழி என்பது இன்னும் தெளிவாகிறது. மொழிப் பதிவுகளில் முற்பட்டதாகக் கூறப்படும் பாறை ஓவியஎழுத்துகள், மட்பாண்டக் கிறுக்கல் எழுத்துகள் தமிழ்மொழி எழுத்துகளாகஅடையாளம் கண்டறியப்படுகின்றன. அவற்றிற்கு ஒலிப் பொருத்தம்(PhotonicValue) கொடுத்து மொழிப் பனுவலாக்கம் (Decipherment) செய்யப்படுகின்றன. சிந்துவெளி போன்ற புதையுண்ட நாகரிகங்களில் கிடைக்கும் மொழிசார் தொல்பொருள்களிலிருந்து மீட்டெடுக்கப்படும் சொற்களும்,தொடர்களும் தமிழ்மொழியில் ஒப்பீடு செய்து தமிழாகப் படிக்கப் பெறுகின்றன; அவை தமிழ்மொழிதான் என நிறுவப்படுகின்றன. அதேநேரத்தி…
-
- 2 replies
- 780 views
- 1 follower
-
-
உலகையே மிரண்டு போக வைத்த தமிழனின் புராதன கால விலங்கு..!! இன்று வரை எந்த ஆய்வாளர்களாலும் கண்டுபிடிக்க முடியாத மர்மம்..!! நம்மில் எத்தனைப் பேருக்கு யாளி என்றால் என்னவென்று தெரியும்.? யாளிகள் தென்னிந்தியாவில் உள்ள கோவில் சிற்பங்களில் மட்டுமே காணக் கிடைக்கும் ஒரு விசித்திரமான மிருகம். கோயில் கோபுரங்கள், மண்டப தூண்களில் மட்டுமே காணப்படும் ஒரு கற்பனைச் சிலை என்பது தான் பலரது எண்ணமும். அதன் தோற்றம் சிங்க முகமும் அதனுடன் யானையின் துதிக்கையும் சேர்ந்தார் போல் காட்சி தருவதைப் போன்று பல கோவில்களில் இவற்றின் சிலைகள் அமைக்கபெற்றுள்ளது. சிங்கத்தின் தலை கொண்டதை “சிம்ம யாளி” என்றும், ஆட்டுத்தலை கொண்டதை “மகர யாளி” என்றும், யானை முகத்தை “யானை யாளி” என்றும் அழைக்கிறார…
-
- 4 replies
- 2.1k views
-
-
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்ட நாள் இன்று! பூமியின் வளர்ச்சியினை விஞ்ஞான ஆய்வுகளின் அடிப்படையில் எடுத்துப்பார்த்தால், மனிதர்கள் தோற்றம் பெறுவதற்கு முன்னரே பல உயிரினங்களும் இயற்கையின் பல விடயங்களும் தோற்றம் பெற்றிருக்கின்றன. சமய நூல்களும் இதனையே வலியுறுத்துகின்றன. எனினும் மனிதன் தோற்றம் பெற்று படிப்படியாக வளர்ச்சியடைய ஆரம்பித்த பின்னர் தனக்கு தேவையான பல விடயங்களை கண்டுபிடிக்கத்தொடங்கினான். அவ்வாறு கண்டுபிடித்த விடயங்களில் மிக முக்கியமானதும் முதன்மையானதுமான ஒன்றுதான் மொழி. ஒரு மனிதன் தனது தேவைகள் நிமித்தம் சக மனிதர்களுடன் தொடர்புகொள்வதற்கு பல வழிகளைக் கண்டுபிடித்தான். ஆரம்பத்தில் சைகைகள் வாயிலாக உரையாட, தனது எண்ணங்களை கடத்த முனைந்த மனிதன், ப…
-
- 0 replies
- 777 views
-
-
மாமனிதனின் வரலாறு - ஜீவானந்தம் எல்லோரும் சமம்; எல்லோரும் நிகர்; எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்று கருதுகிற துடிப்புமிக்க சிறுவன் அவன். எதற்கும் அஞ்சாதவன். நாகர்கோயிலில் உள்ள கோட்டாறு உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயம், தன்னுடன் பயிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவன் மாணிக்கத்துடன் மிகுந்த நட்பு கொண்டிருந்தான். அது தீண்டாமை சகதி ஊறியிருந்த காலம் என்பதால், ஆலயப் பிரவேச உரிமை தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு மறுக்கப்பட்டு இருந்தது. இதை உணர்ந்திருந்த சிறுவன், தன் நண்பனை தீண்டாமை தாண்டவமாடிய உயர் சாதியினர் வசிக்கும் தெரு வழியாக அங்குள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்றான். இதை அறிந்த ஆதிக்க சாதியினர் சிறுவனை அழைத்து…
-
- 0 replies
- 3.1k views
-
-
அகத்தைத் தேடி: தொண்டு செய்து கனிந்த வீரமாமுனி தஞ்சாவூர்க்கவிராயர் இந்தியாவுக்கு மறை பரப்பும் பணியில் ஈடுபட வந்த ஜோசப் கான்ஸ்டன்டைன் பெஸ்கி, இத்தாலியைச் சேர்ந்தவர். 1710-ம் ஆண்டு கோவா துறைமுகம் வந்து இறங்கினார். 1716-ம் ஆண்டு ஏலாக்குறிச்சிக்கு வந்து சேர்ந்தார். முதலில் தன் பெயரைத் தமிழில் தைரியநாதர் என்றுதான் மாற்றிக்கொண்டார். பின்னர் தூய தமிழில் வீரமாமுனிவர் என்று பெயர் சூட்டிக்கொண்டார். தமிழனாக வாழ வேண்டும் 1716-ம் ஆண்டுவாக்கில் வீரமாமுனிவர், இயேசு கிறிஸ்துவின் செய்தியைத் தமிழர்கள் அறிய வேண்டுமானால் அவர்களோடு தமிழிலேயே உரையாட வேண்டுமென்பதை உணர்ந்தார். படிப்படியாகத் தமிழின் மீது காதல் அதிகரித்து பழம்பெரும் இலக்கண இலக்கியங்களைப் பயி…
-
- 0 replies
- 751 views
-
-
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குனராக சந்திரசேகரன் நியமனம் ரமேஷ் பொக்கிரியால்- கோப்புப் படம் புதுடெல்லி செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதலாவது இயக்குனராக ஆர். சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளா். 273 people are talking about this இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‘‘ஆர். சந்திரசேகரன் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன…
-
- 0 replies
- 490 views
-
-
பழந்தமிழ் மக்களின் மனைகளும் அவற்றின் வடிவமைப்பும் .. 'மனை’ என்று இலக்கியங்களில் குறிப்பிடப்படும் குடியிருப்புகள் திண்ணை, தூண், அட்டில், முற்றம், படிக்கட்டு, சாளரம், வாயில், மாடம் என்ற அமைப்பு களுடன் வடிவமைக்கப்பட்டிருந்தன. இவ்வமைப்புகள் குடியிருப்புக் கட்டமைப்பின் வளர்ச்சிக் காலங்களில் இடம் பெற்றிருந்தன. இவை பொருளாதாரத்தில் சற்று உயர்ந்த நிலையில் உள்ளவர்களின் குடியிருப்புக் கட்டமைப்புகளாக இருந்திருக்கக்கூடும் எனக் கருத முடிகிறது. மனை விளக்கம் ‘மனை’ என்ற சொல்லிற்குக் குடியிருப்புடைய வீடு, குடும்பம், இல், சிற்றில், பேரில், நற்றாய், பசுதொழுவம், சூதாடு பலகையின் அறை, நிலஅளவு வகை, மனைவி, வாழ்க்கை, வெற்றிடம், 2400 சதுரடி அல்லது குழி, நிலப்பகுதிகள் எனப் பல ப…
-
- 0 replies
- 514 views
-
-
திருக்குறள் நால்வருண சாதிமுறையைப் பின்பற்றிய நூலா? - குறள் ஆய்வு-4(பகுதி2). பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் காலத்தை வென்று நிற்கும் திருக்குறளின் பன்மைத்துவம் திருக்குறள் காலத்தை வென்று நிற்பதன் காரணமே அதன் பன்மைத்துவம்தான். அறவழி நிற்கும் சமயங்களைப் பின்பற்றும் சமயிகள் பலரும், குறிப்பாக,, சமணர், பௌத்தர், சிவனியம், திருமாலியம் உள்ளிட்ட சமயக்கணக்கர்கள் திருக்குறள் தத்தம் சமய அறங்களையே சொல்லுகின்றது என்று உரிமைகொள்ளும் நூற்கள் எழுதியுள்ளனர். அப்படி இருக்கும்போது, ஸ்மார்த்தரான திரு. நாகசாமியில் நூலில் என்ன பிழை கண்டீர் என்று …
-
- 1 reply
- 5k views
-
-
[size=3][size=4][/size][/size] அன்பான உறவுகளே.. [size=3][size=4]இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகைப்படும். 1. இடுகுறிப்பெயர் – இட்டுக் குறித்து வழங்குவது. (மரம் – எல்லா மரங்களுக்கும் பொதுவாக வருவது) 2. காரணப் பெயர் – பொருள் கருதி இடுவது. (காக்கை- கா கா என்று கரைவதால் காக்கை) சில ஊர்ப் பெயர்களின் உண்மையான பொருள். குளித்தலை – குளிர் தண்டலை (குளிர்ந்த சோலைகள்) காரைக்குடி – காரைச் செடிகள் அதிகம் கொண்ட ஊர். ஈரோடு – இரண்டு ஓடைகள் கொண்டமையால். சேலம் – சைலம், மலை ஆட்டையாம்பட்டி – ஆட்டு இடையன் பட்டி. இடைபாடி – இடையர்பாடி “தமிழகம் ஊரும் பேரும்“ …
-
- 2 replies
- 16.5k views
-
-
-
- 0 replies
- 546 views
- 1 follower
-
-
https://posernat.dot5hosting.com/store/catalog/images/zebra-cloth.jpg இந்த உடையை ஆண்கள் மட்டுமே இதை உள்ளாடையாக அணிகிறார்கள். கோவணத் துணி என்று தனியாக கடைகளில் விற்கப்படுவதில்லை. துண்டுகளோ பழைய வேட்டிகளில் இருந்து கிழிக்கப்பட்ட துண்டுத் துணிகளோ கோவணங்களாகப் பயன்படுகின்றன. கோவணத்தை இடையில் இறுக்கிக் கட்ட அரைஞாண் கயிறு உதவுகிறது. தற்போது உள்ள இளைய தலைமுறையில் கோவணம் அணியும் போக்கு மிகவும் குறைந்து வருகிறது. கடும் வெயில், வயலில் வேலை செய்வோர் வெறும் கோவணத்துடன் வேலை செய்வதுண்டு. எனினும், பொது அவையில் வெறும் கோவணத்துடன் தோன்றுவது கண்ணியமானதாகக் கருதப்படுவதில்லை. உள்ளாடையாக கோவணம் அணிவது தற்காலத்தில் நாகரிகமாகவும் கருதப்படுவதில்லை. ஆயத்த உள்ளாடைகள் வந்து விட்ட பிறகும்…
-
- 9 replies
- 10.5k views
-
-
இன்று தாய்த்தமிழகம் தொடக்கம் உலகம் முழுவதும் தமிழனுக்கு என ஒரு நாடு இல்லாத நிலையில் தமிழ் மொழியை நாம் திணிப்பதில் தான் நாம் வெற்றிபெற முடியும். இதில் தமிழ் இசையமைப்பாளர்கள் பங்கு, திரைப்படம் மற்றும் அதன் தொன்மை பற்றை நாம் அனைவரும் பேச வேண்டிய தேவை முக்கிய பங்கு வகிக்கின்றது. #1 : இந்தி சுத்தமான மொழி, தேசிய மொழி என்று சொல்பவர்களுக்கு இந்தி நடிகர் ஒருவர் அதிரடியாக பதில் கொடுத்துள்ளார். தமிழ்தான் உலகிலேயே மிகவும் பழமையான செம்மொழி. எனவே இந்தி குறித்து பெருமை அடித்துக் கொள்வோர் தமிழைத்தான் கற்க வேண்டும். ஒரு இந்தி விரும்பியான நானே இதை மனதார சொல்கிறேன். இந்தி நாடு முழுவதும் பாப்புலராக இல்லாத நிலையில் அதை திணிக்க முயல்வது தவறானதாகும். இதை உணர வேண்டும். உல…
-
- 49 replies
- 6k views
-
-
சுபவீர பாண்டியன் அன்றொருநாள் அருளிச் செய்த காணொளி ஆவணம் 😃
-
- 0 replies
- 980 views
-
-
அவள் பெயர் கண்ணகி... இன்று சித்திரை பௌர்ணமி. கண்ணகி நீதிக்காகப் போராடி இறுதியில் கணவனைக் காண விண்ணுலகம் சென்ற நாள். ஆம்..... ஏறக்குறைய ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தலைவிரிக் கோலத்துடன், ஒரு பக்கம் அறுக்கப்பட்ட மார்பகத்துடன் குருதி கொட்ட விண்ணுலகம் புகுந்தாள் தன் கணவனுடன் சேர. ஆயிரம் பேர் கூடியிருக்கின்ற அவையில் ஒரு அபலைப் பெண் மட்டும் வந்து நின்று மாட்சிமை பொருந்திய மன்னனை எதிர்த்து கேள்வி கேட்டால் என்ன நடக்கும்? சற்று சிந்தித்துப் பாருங்கள்... டெல்லிப் பேருந்தில் சீரழிக்கப்பட்ட நிர்பயாவின் நிலைதான் அவளுக்கும் நேர்ந்திருக்கும். தமிழகத்தின் முதல் பெண் புரட்சிக்காரி கண்ணகிதான் என்று பட்டிமன்றப் பேச்சுகளிலும் வாய்ப்பந்தல் இடுவர். உண்மையில் நடந்தத…
-
- 1 reply
- 1.9k views
-
-
-
- 0 replies
- 677 views
- 1 follower
-
-
-
- 3 replies
- 1.3k views
- 1 follower
-
-
-
- 2 replies
- 566 views
- 1 follower
-
-
கத்தரி வெயிலும் தமிழரின் வானியல் கணியமும்: மரு. கீதா மோகன் கத்தரி என்றால் தற்போதைக்கு இந்த வார்த்தை காயை குறிப்பிடக்கூடிய வார்த்தையாக தான் உள்ளது. இன்னொரு இடத்தில் கத்தரி என்ற வார்த்தை பயன்படுவதை காணலாம். இரண்டு சாணம் பிடிக்கப்பட்ட இரும்பு பட்டையை ஒரு முனையில் வைத்து அதை அளவு கோலாக ஒரு பொருளை துண்டிக்க பயன்படுத்தியிருக்கிறார்கள் அந்த பொருளின் பெயர் கத்தரிகோல். இதே போல தான் கத்தரி வெயிலின் முக்கியத்துவம் நிலப்பகுதிக்கு முக்கியம். கத்தரி இந்த வார்த்தையை மறந்து நம்மையறியமால் அக்னிநட்சத்திரம் என்ற பெயரை பெருமளவு உச்சரிக்க ஆரம்பித்து விட்டோம். இல்லை அந்த வார்த்தையை மறக்கடிக்க பட்டோமோ என தெரியவில்லை. அக்னி நட்சத்திரம் இந்த பெயரை நான…
-
- 1 reply
- 885 views
-
-
இவர் பேசும் வரலாறு வியப்பாக உள்ளது, யாழில் உள்ள கல்வியாளர்களின் கருத்துகளையும் வாசிக்க ஆவல். தமிழ் தேசியத்தை பற்றியும் உரையாடுகிறார்.
-
- 2 replies
- 806 views
- 1 follower
-
-
-
சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் 21 பிப்ரவரி 2020 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை Getty Images விக்கிமீடியா அறக்கட்டளையும், கூகுள் நிறுவனமும் இணைந்து நடத்திய இந்திய மொழிகளுக்கிடையிலான கட்டுரைகள் எழுதும் போட்டியில் தமிழ் மொழி முதல் இடத்தை பெற்றுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த வேங்கைத் திட்டம் 2.0 என்றழைக்கப்படும் இந்த போட்டியில் தமிழ், …
-
- 1 reply
- 813 views
-
-
மொழி அழிந்தால் இனம் அழியும்.! தீபச்செல்வன். மாசி 21, உலக தாய் மொழி தினம். தாய்மொழி மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வரும் ஈழத் தமிழர்களுக்கு இது மிக முக்கியமானதொரு நாளாகும். தாய் மொழி என்பது ஒவ்வொரு மனிதரதும் பிறப்புரிமை. அதனை அதனை மனிதர்கள் தம் தாய் வழி சமூகத்திடமிருந்து கற்றுக்கொள்ளுகின்றனர். மொழியற்று பிறக்கும் ஒரு குழந்தை தன் தாயிடமிருந்து மொழியை பெறுகிறது. தாய் மொழியின் ஊடாக தன்னுடைய பண்பாட்டை, வரலாற்றை, வாழ்வை கற்றுக்கொள்வது எளியது என்பதால் ஒவ்வொருவருக்கும் தாய்மொழி மிக முக்கியமாகிறது. தாய்மொழியை எவரும் இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த நாள் வருடம் தோறும் உலக மக்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. ஈழத்தில் தாய்மொழியை மறந்துபோனவர்கள் பலருண்டு. தம் த…
-
- 5 replies
- 1.3k views
-
-
இக்கட்டுரையின் நோக்கம் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் கடற்கோள்கள், அவை நடந்ததாக சொல்லப்படும் காலம் ஆகியவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்வதே. அங்கு சொல்லப்பட்டிருக்கும் இடம், ஆறுகள் மற்றும் மன்னர்கள் ஆகியவற்றை ஒதுக்கி விடுவோம். தற்பொழுது ஏற்பட்டிருக்கும் அறிவியல் வளர்ச்சி, தமிழ் நிலத்தை அதன் மொழியை பற்றி கிடைத்திருக்கும் புதிய தடயங்கள் ஆகியவற்றைக் கொண்டு கடந்த கால வரலாறை யூகிக்க முயன்றிருக்கிறேன். சங்க இலக்கியங்களில் வரும் இக்கடற்கோள்கள் பற்றி எழுதும் பலர், இக்கூற்றுக்கு ஆதாரம் ஏதும் இல்லை இது அதீத கற்பனை என்று ஒதுக்கி விடுகின்றனர். நம்முடைய இன்றைய ஆராய்ச்சிகள் எல்லாம் நிலத்திற்குள்ளேயே தான் நடக்கின்றன. எதுவும் கடலுக்குள் நடப்பதில்லை. ஆதாரம் உங்கள் கண்ணுக்கு முன்னே இல்…
-
- 4 replies
- 1.3k views
-