பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1543 topics in this forum
-
மாமனிதனின் வரலாறு - ஜீவானந்தம் எல்லோரும் சமம்; எல்லோரும் நிகர்; எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்று கருதுகிற துடிப்புமிக்க சிறுவன் அவன். எதற்கும் அஞ்சாதவன். நாகர்கோயிலில் உள்ள கோட்டாறு உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயம், தன்னுடன் பயிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவன் மாணிக்கத்துடன் மிகுந்த நட்பு கொண்டிருந்தான். அது தீண்டாமை சகதி ஊறியிருந்த காலம் என்பதால், ஆலயப் பிரவேச உரிமை தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு மறுக்கப்பட்டு இருந்தது. இதை உணர்ந்திருந்த சிறுவன், தன் நண்பனை தீண்டாமை தாண்டவமாடிய உயர் சாதியினர் வசிக்கும் தெரு வழியாக அங்குள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்றான். இதை அறிந்த ஆதிக்க சாதியினர் சிறுவனை அழைத்து…
-
- 0 replies
- 3.5k views
-
-
அகத்தைத் தேடி: தொண்டு செய்து கனிந்த வீரமாமுனி தஞ்சாவூர்க்கவிராயர் இந்தியாவுக்கு மறை பரப்பும் பணியில் ஈடுபட வந்த ஜோசப் கான்ஸ்டன்டைன் பெஸ்கி, இத்தாலியைச் சேர்ந்தவர். 1710-ம் ஆண்டு கோவா துறைமுகம் வந்து இறங்கினார். 1716-ம் ஆண்டு ஏலாக்குறிச்சிக்கு வந்து சேர்ந்தார். முதலில் தன் பெயரைத் தமிழில் தைரியநாதர் என்றுதான் மாற்றிக்கொண்டார். பின்னர் தூய தமிழில் வீரமாமுனிவர் என்று பெயர் சூட்டிக்கொண்டார். தமிழனாக வாழ வேண்டும் 1716-ம் ஆண்டுவாக்கில் வீரமாமுனிவர், இயேசு கிறிஸ்துவின் செய்தியைத் தமிழர்கள் அறிய வேண்டுமானால் அவர்களோடு தமிழிலேயே உரையாட வேண்டுமென்பதை உணர்ந்தார். படிப்படியாகத் தமிழின் மீது காதல் அதிகரித்து பழம்பெரும் இலக்கண இலக்கியங்களைப் பயி…
-
- 0 replies
- 766 views
-
-
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குனராக சந்திரசேகரன் நியமனம் ரமேஷ் பொக்கிரியால்- கோப்புப் படம் புதுடெல்லி செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதலாவது இயக்குனராக ஆர். சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளா். 273 people are talking about this இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‘‘ஆர். சந்திரசேகரன் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன…
-
- 0 replies
- 497 views
-
-
பழந்தமிழ் மக்களின் மனைகளும் அவற்றின் வடிவமைப்பும் .. 'மனை’ என்று இலக்கியங்களில் குறிப்பிடப்படும் குடியிருப்புகள் திண்ணை, தூண், அட்டில், முற்றம், படிக்கட்டு, சாளரம், வாயில், மாடம் என்ற அமைப்பு களுடன் வடிவமைக்கப்பட்டிருந்தன. இவ்வமைப்புகள் குடியிருப்புக் கட்டமைப்பின் வளர்ச்சிக் காலங்களில் இடம் பெற்றிருந்தன. இவை பொருளாதாரத்தில் சற்று உயர்ந்த நிலையில் உள்ளவர்களின் குடியிருப்புக் கட்டமைப்புகளாக இருந்திருக்கக்கூடும் எனக் கருத முடிகிறது. மனை விளக்கம் ‘மனை’ என்ற சொல்லிற்குக் குடியிருப்புடைய வீடு, குடும்பம், இல், சிற்றில், பேரில், நற்றாய், பசுதொழுவம், சூதாடு பலகையின் அறை, நிலஅளவு வகை, மனைவி, வாழ்க்கை, வெற்றிடம், 2400 சதுரடி அல்லது குழி, நிலப்பகுதிகள் எனப் பல ப…
-
- 0 replies
- 528 views
-
-
-
-
- 0 replies
- 558 views
- 1 follower
-
-
உலகையே மிரண்டு போக வைத்த தமிழனின் புராதன கால விலங்கு..!! இன்று வரை எந்த ஆய்வாளர்களாலும் கண்டுபிடிக்க முடியாத மர்மம்..!! நம்மில் எத்தனைப் பேருக்கு யாளி என்றால் என்னவென்று தெரியும்.? யாளிகள் தென்னிந்தியாவில் உள்ள கோவில் சிற்பங்களில் மட்டுமே காணக் கிடைக்கும் ஒரு விசித்திரமான மிருகம். கோயில் கோபுரங்கள், மண்டப தூண்களில் மட்டுமே காணப்படும் ஒரு கற்பனைச் சிலை என்பது தான் பலரது எண்ணமும். அதன் தோற்றம் சிங்க முகமும் அதனுடன் யானையின் துதிக்கையும் சேர்ந்தார் போல் காட்சி தருவதைப் போன்று பல கோவில்களில் இவற்றின் சிலைகள் அமைக்கபெற்றுள்ளது. சிங்கத்தின் தலை கொண்டதை “சிம்ம யாளி” என்றும், ஆட்டுத்தலை கொண்டதை “மகர யாளி” என்றும், யானை முகத்தை “யானை யாளி” என்றும் அழைக்கிறார…
-
- 4 replies
- 2.2k views
-
-
சுபவீர பாண்டியன் அன்றொருநாள் அருளிச் செய்த காணொளி ஆவணம் 😃
-
- 0 replies
- 1k views
-
-
அவள் பெயர் கண்ணகி... இன்று சித்திரை பௌர்ணமி. கண்ணகி நீதிக்காகப் போராடி இறுதியில் கணவனைக் காண விண்ணுலகம் சென்ற நாள். ஆம்..... ஏறக்குறைய ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தலைவிரிக் கோலத்துடன், ஒரு பக்கம் அறுக்கப்பட்ட மார்பகத்துடன் குருதி கொட்ட விண்ணுலகம் புகுந்தாள் தன் கணவனுடன் சேர. ஆயிரம் பேர் கூடியிருக்கின்ற அவையில் ஒரு அபலைப் பெண் மட்டும் வந்து நின்று மாட்சிமை பொருந்திய மன்னனை எதிர்த்து கேள்வி கேட்டால் என்ன நடக்கும்? சற்று சிந்தித்துப் பாருங்கள்... டெல்லிப் பேருந்தில் சீரழிக்கப்பட்ட நிர்பயாவின் நிலைதான் அவளுக்கும் நேர்ந்திருக்கும். தமிழகத்தின் முதல் பெண் புரட்சிக்காரி கண்ணகிதான் என்று பட்டிமன்றப் பேச்சுகளிலும் வாய்ப்பந்தல் இடுவர். உண்மையில் நடந்தத…
-
- 1 reply
- 2k views
-
-
-
- 0 replies
- 682 views
- 1 follower
-
-
-
- 3 replies
- 1.3k views
- 1 follower
-
-
-
- 2 replies
- 573 views
- 1 follower
-
-
கத்தரி வெயிலும் தமிழரின் வானியல் கணியமும்: மரு. கீதா மோகன் கத்தரி என்றால் தற்போதைக்கு இந்த வார்த்தை காயை குறிப்பிடக்கூடிய வார்த்தையாக தான் உள்ளது. இன்னொரு இடத்தில் கத்தரி என்ற வார்த்தை பயன்படுவதை காணலாம். இரண்டு சாணம் பிடிக்கப்பட்ட இரும்பு பட்டையை ஒரு முனையில் வைத்து அதை அளவு கோலாக ஒரு பொருளை துண்டிக்க பயன்படுத்தியிருக்கிறார்கள் அந்த பொருளின் பெயர் கத்தரிகோல். இதே போல தான் கத்தரி வெயிலின் முக்கியத்துவம் நிலப்பகுதிக்கு முக்கியம். கத்தரி இந்த வார்த்தையை மறந்து நம்மையறியமால் அக்னிநட்சத்திரம் என்ற பெயரை பெருமளவு உச்சரிக்க ஆரம்பித்து விட்டோம். இல்லை அந்த வார்த்தையை மறக்கடிக்க பட்டோமோ என தெரியவில்லை. அக்னி நட்சத்திரம் இந்த பெயரை நான…
-
- 1 reply
- 894 views
-
-
-
- 8 replies
- 2.2k views
- 1 follower
-
-
இவர் பேசும் வரலாறு வியப்பாக உள்ளது, யாழில் உள்ள கல்வியாளர்களின் கருத்துகளையும் வாசிக்க ஆவல். தமிழ் தேசியத்தை பற்றியும் உரையாடுகிறார்.
-
- 2 replies
- 820 views
- 1 follower
-
-
-
சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் 21 பிப்ரவரி 2020 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை Getty Images விக்கிமீடியா அறக்கட்டளையும், கூகுள் நிறுவனமும் இணைந்து நடத்திய இந்திய மொழிகளுக்கிடையிலான கட்டுரைகள் எழுதும் போட்டியில் தமிழ் மொழி முதல் இடத்தை பெற்றுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த வேங்கைத் திட்டம் 2.0 என்றழைக்கப்படும் இந்த போட்டியில் தமிழ், …
-
- 1 reply
- 821 views
-
-
மொழி அழிந்தால் இனம் அழியும்.! தீபச்செல்வன். மாசி 21, உலக தாய் மொழி தினம். தாய்மொழி மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வரும் ஈழத் தமிழர்களுக்கு இது மிக முக்கியமானதொரு நாளாகும். தாய் மொழி என்பது ஒவ்வொரு மனிதரதும் பிறப்புரிமை. அதனை அதனை மனிதர்கள் தம் தாய் வழி சமூகத்திடமிருந்து கற்றுக்கொள்ளுகின்றனர். மொழியற்று பிறக்கும் ஒரு குழந்தை தன் தாயிடமிருந்து மொழியை பெறுகிறது. தாய் மொழியின் ஊடாக தன்னுடைய பண்பாட்டை, வரலாற்றை, வாழ்வை கற்றுக்கொள்வது எளியது என்பதால் ஒவ்வொருவருக்கும் தாய்மொழி மிக முக்கியமாகிறது. தாய்மொழியை எவரும் இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த நாள் வருடம் தோறும் உலக மக்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. ஈழத்தில் தாய்மொழியை மறந்துபோனவர்கள் பலருண்டு. தம் த…
-
- 5 replies
- 1.4k views
-
-
சிந்துவெளி மக்களோடு கலந்த மரம், சோழர்களின் குல மரம்.. வன்னியின் சிறப்புகள் Feb 11, 2020 0 364 தமிழகத்தை கட்டி ஆண்ட மூவேந்தர்களுள் சோழர்களின் குல மரம், என்ற பெருமையை பெற்றுள்ளது வன்னி மரம். சிந்து சமவெளி நாகரிகத்தின் முக்கிய பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்று இம்மரம். முதன்மையான வன்னி மரம்.. வீரத்தின் அடையாளம், நெருப்பின் வடிவம், வெற்றி சின்னம் என பல்வேறு சிறப்புகளை கொண்டதாக வன்னி மரம் கருதப்படுகிறது. நம் தமிழர் பண்பாட்டில் வன்னி மரமும், வன்னி மரத்தின் மீது அம்பு தொடுக்கும் விழாவும் முதன்மையானவை ஆகும். சிறப்புகள்.. பனை மரம், நீலகிரி வரையாடு, மரகத புறா இவற்றின் வரிசையில் தமிழரின் வாழ்வியலோடு கலந்த ஒன்று, ஆன்மீகத்திலும், சித்த மருத்துவத்திலும் சிறப்பான இ…
-
- 1 reply
- 672 views
-
-
சோழர் படை சோழர் படை என்பது இடைக்காலத்தில் சோழ நாட்டில் இருந்த சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட, திறமையான படையாகும். சோழப் பேரரசு தன் ஆதிக்கத்தை இந்தியாவிலும் அதற்கு வெளியிலும் நிலை நாட்ட இப்படையினை நம்பியிருந்தது. இதன் ஓர் பகுதியாக சோழர் கடற்படை காணப்பட்டது. அரசர் அல்லது பேரரசர் சோழர் படையின் தலைவராக இருந்தார். Chola territories during Rajendra Chola படை : கடற்படை, உள்நாட்டின் படை ஆகிய அனைத்திற்கும் அரசரே தலைவர் ஆவார். இப்படை பல பிரிவுகளாக அமைந்து ஒவ்வொரு பிரிவும் தனிப்பெயரால் அழைக்கப்பட்டது. இவை ஒன்றுபட்ட அமைப்பாகவே இயங்கின. தங்கள் பெயராலேயே கோயில்கள் அமைக்கவும் அவற்றிற்குத் தானங்கள் கொடுக்கவும் இப்பிரிவுகளுக்கு உரிமை இருந…
-
- 0 replies
- 1.4k views
-
-
இந்தோனேஷியாவில் சோழ வம்சம் வாழ்ந்ததற்கான சான்று.! எப்படி இந்த சிலைகள் இங்கு வந்தன? என்ற கேள்வி அனைவருக்கும் இருக ்கும், இந்தோனேஷியாவில் உள்ள ஒரு தோட்டத்தில் பள்ளம் தோண்டும் போது அங்கு அகத்தியர் சிலை மற்றும் நந்திதேவர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறித்த சிலைகள் எவ்வாறு இங்கு புதைக்கப்பட்டது என்று விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதற்கு முன்னரும் இந்தோனேஷியாவில் இவ்வாறு பல இடங்களில் இந்து கடவுள் சிலைகள் கிடைக்கப்பெற்றது எப்போதும் நாம் அனைவரும் அறிந்த வியமாகும்.குறித்த சிலைகள் இங்கு கிடைக்கபெற்றதால் இந்தோனேஷியாவில் சோழ வம்சம் ஆட்சி செய்த பகுதி என்பதற்கான மற்றொரு ஆதாரம் கிடைத்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை ப…
-
- 0 replies
- 781 views
-
-
தமிழனின் மறைக்கப்பட்ட உலக அதிசயம்! கம்போடியா - அங்கோர் வாட்
-
- 71 replies
- 9k views
-
-
கியூபெக் மாகாணத்தில் நடைபெற்ற தமிழ் மரபுத் திங்கள் 2020 நிகழ்வின் ஞாபகார்த்தமாக இந்த ஆண்டின் தமிழ் மரபுத் திங்கள் நினைவு முத்திரை வெளியிடப்பட்டது. இம் முத்திரை வடிவமைப்பு தமிழரின் பண்பாட்டிலும் பாரம்பரியத்திலும் மேலோங்கி தெரிகின்றது என்று எல்லோராலும் பேசப்படும் ஒன்றாகவும் மாறியிருக்கின்றது. மொழிகளுக் கெல்லாம் தாய் நமது தாய்மொழி ''தமிழ்'' எனும் கர்வத்துக்கு சொந்தக்காரர்கள் நாங்கள். நமது மருத்துவமும் விஞ்ஞானமும் கட்டிடக்கலையும் இன்றைக்கு உலகமே வியந்து பார்க்கின்ற ஒன்று "முன் தோன்றிய மூத்த குடிகள்" என்று சொல்லுமளவு நமது வரலாறு பழமையானது ஆயினும் அந்த அளவு அத்தகைய பெருமைக்குச் சொந்தக்காரர்களாகிய நாங்கள் அச் சிறப்புப்புக்களை புலம்பெயர் தேசங்களில் ஆவணப் படுத்தியிருக்கின்றோம…
-
- 1 reply
- 823 views
-
-
ஒருவர் பிரபாகரன்! இன்னொருவர் பெரியார்! வைரமுத்து அதிரடி பேச்சு | பெரியார் | தமிழாற்றுப்படை
-
- 0 replies
- 451 views
-
-