பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
மொஹஞ்சதாரோ (ஆவணப்படம்) சிந்துசமவெளியின் முத்திரைகளைத் தொடர்ந்து ஆராய்ந்து அடையாளம் கண்டதில் அவை ஒன்றுக்கொன்று தொடர்புடைய, திராவிட மொழியின் துவக்க காலசொற்குறியீடுகள் என்கிற முடிவுக்கு தாம் வந்திருப்பதாக கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அறிவித்துள்ளார். இது தொடர்பான தமது சுமார் 50 ஆண்டுகால ஆய்வின் முடிவுகளைத் தொகுத்து அவர் ஒரு ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டுள்ளார். ரிக் வேத வழியிலான சிந்து சமவெளியின் திராவிட தொடர்புக்கான ஆதாரம் (Dravidian Proof of the Indus Script via Rig Veda) என்கிற தலைப்பிலான அவரது ஆய்வுக்கட்டுரையில் சிந்துசமவெளிக் குறியீடுகள் தொல் திராவிட எழுத்துரு வடிவங்கள் என்பது உறுதியாகத் தெரியவந்திருப்பதாக அறிவித்திருக்கிறார். சிந்து சமவெளி முத்திரைகள் சொல்ல…
-
- 2 replies
- 975 views
-
-
-
திருக்குறளின் சிறப்பை விளக்கி இளைஞர்கள் திருக்குறள் மாநாட்டில் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்றும், திருக்குறளை இளைஞர்கள் தங்கள் முன்னேற்றத்திற்கு ஒரு வாழ்வியல் நெறியாக கொள்ள வேண்டும் என்றும் அழைக்கிறார் சத்யராஜ் ஆகஸ்ட் 12, திங்கள் காலை 10 மணி முதல் இரவு வரை. காமராசர் அரங்கம், தேனாம்பேட்டை. - பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு! திருக்குறள் மாநாட்டில் பங்கேற்க திரள்வோம்: வைகோ அறிக்கை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை :பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஆகஸ்ட் 12ம் தேதி சென்னை காமராசர் அரங்கத்தில் நடத்த இருக்கும் திருக்குறள் மாநாடு இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத மாநாடு ஆகும். செத்துப்போன வடமொழியை புத்துயிர் கொடுத்து…
-
- 1 reply
- 972 views
-
-
"தாய்லாந்தில் தமிழ்" கீழ்க்காணும் படம் ;- தாய்லாந்தில் கண்டெடுக்கப்பட்ட கி.பி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த, தமிழ்எழுத்து படிந்த மட்பாண்டம். தாய்லாந்து(தாய்) மொழியில் தமிழ் சொற்களின் வேர்கள்.. தாய்லாந்து நம் தமிழ் மன்னர்களால் ஆளப்பட்டது, அக்காலத்தில் தமிழ் மொழியில் இருந்து பலச் சொற்கள் தாய்லாந்து மொழிக்குத் தருவிக்கப்பட்டன. தாய்லாந்து மொழி தமிழ் மொழியின் துணையோடு தான் வளர்ச்சிக் கண்டிருக்கக் கூடும். அதில் சிலச் சொற்கள் பின்வருமாறு, ------------------------------------------------- 1. தங்கம் -> தொங்கம் 2. கப்பல் -> கம்பன் 3. மாலை -> மாலே 4. கிராம்பு -> கிலாம்பு 5. கிண்டி -> கெண்டி 6. அப்பா -&g…
-
- 0 replies
- 969 views
-
-
அமெரிக்காவிலுள்ள மிசிகன் இன்ஜினியரிங் கல்லூரி விஞ்ஞானிகள் பறக்கும் ரோபோ வவ்வால்களை தயார் செய்துள்ளனர். பறவையை பார்த்து விமானம் படைத்ததுடன் நிற்கவில்லை. இயற்கையைப் பார்த்து விஞ்ஞானிகள் இன்றும் கற்றுக் கொள்வது ஏராளம். வண்டுகளின் கால் அமைப்பு, பறந்து கொண்டே ஓரிடத்தில் நிலையாக நிற்கும் மீன் கொத்திகள் என்று விலங்கினங்களில் உள்ள விஷயங்களை நம் வாழ்க்கைக்கு பயன்படும் கருவிகளில் புகுத்த முயற்சிக் கின்றனர். ஒலி அலைகளை அனுப்பி, அது எதிரொலிப்பதன் மூலம் எதிரில் உள்ள பொருட்களையோ உயிரினங்களையோ அறிந்து வவ்வால்கள் பறக்கின்றன. இந்த ஒலியை நம்மால் கேட்க முடியாது. ஒருவேளை அவற்றை நம்மால் கேட்க முடியும் என்றால் அது ஒரு விமானம் தரை இறங்கும் போது ஏற்படுமே அவ்வளவு சத்தத்தை ஏற்படுத்தும் என்…
-
- 0 replies
- 969 views
-
-
தமிழில்லாமல் ஆங்கிலமில்லை!- சில சொற்களும் விளக்கமும்.. http://youtu.be/Z9Ws-DG_HgA
-
- 0 replies
- 969 views
-
-
அச்சுக்கலையின் அறிமுகம் தமிழ் இலக்கிய வரலாற்றில் அறிவியல் தொழில்நுட்ப பயன்பாட்டால் இலக்கியப் பரப்பும், வாசகர் பரப்பும் விரிவானது. படிப்பறிவு உடைய யாவர்க்கும் படைப்புலகம் பொதுவாயிற்று. படைப்பின் எண்ணிக்கையிலும், வாசர்களின் எண்ணிக்கையிலும் ,மிகுந்ததாகக் கருதும் அளவிற்கு படைப்புலகம் வளர்ச்சி கண்டது. படைப்பால் படைப்பாளனும் படைப்பாளனால் படைப்பும் பேசப்படும் காலச்சூழல் உருவாகிவிட்டது. படைப்புகளின் உலக வாசக எல்லை ஒரு புள்ளியாகச் சுருங்கிவிட்டதோ என எண்ணத்தோன்றும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுவிட்டது. காரணம் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் பரிமாற்றத்தின் அசுர வளர்ச்சி; உலகத்தைக் கிராமமாக்கி ஒவ்வொரு மனிதனின் கைகளிலும் தந்திருக்கும் அறிவியலின் உன்னதக் கண்டுபிடிப்பான கணினி இதற்கு வகை…
-
- 0 replies
- 969 views
-
-
வாரமொரு சிந்தனைத் தொடர் இல. 241 May 30, 2008 சிங்களவரும் போற்றும் சிறுத்தை பிரிகேடியர் பால்ராஜ் ! பிரிகேடியர் பால்ராஜ் என்றும் வீர வேங்கை காற்றோடு காற்றாகி ஒரு வாரம் ஓடிவிட்டது. நேற்றிருந்தார் இன்றில்லை என்னும் பெருமை மிக்கது என்று போற்றப்படும் உலகு அந்த வீரனின் நினைவுகளை தன் உடலில் பச்சை குத்திக்கொண்டு மாற்றமின்றிச் சுழன்று கொண்டிருக்கிறது. அத்தோடு மனிதர்கள் வடித்த கண்ணீர், கவலை, கவிதை, வீர அஞ்சலிகள் என்று பெற வேண்டிய மரியாதைகள் யாவும் பெற்று அந்த வீரன் போகாமல் போனதையும் நாம் பார்த்துவிட்டோம். இப்போது மனதில் மலையாக உயர்வு பெற்று நிற்கும் வீரன் பிரிகேடியர் பால்ராஜ் நினைவலைகள் மனத்திரையில் ஓடை நீராய் சலசலத்து ஓடுகிறது. ஒவ்வொரு விடுதலைப் புலி வீ…
-
- 0 replies
- 968 views
-
-
-
- 1 reply
- 967 views
-
-
யாழ்ப்பாண வரலாற்று ஆய்வாளர்கள் அனைவரும், அதனையாண்ட அரசர்கள் பட்டியலுக்கு, யாழ்ப்பாண வைபவமாலையையே முக்கிய ஆதாரமாகக் கொண்டுள்ளனர். எனினும் யாழ்ப்பாண வைபவமாலை தரும் அவர்களது காலம் பற்றிய தகவல்கள், கிடைக்கக் கூடிய ஏனைய தகவல்களுடன் பொருந்தி வராமையினால், வெவ்வேறு ஆய்வாளர்களுடைய முடிவுகளுக்கிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன. கீழேயுள்ள பட்டியல் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் (ஞான) எழுதி 1928ல் வெளியிடப்பட்ட யாழ்ப்பாண வைபவ விமர்சனம், மற்றும் 1926ல் வெளிவந்த, முதலியார் செ. இராசநாயகம் (இராச) அவர்களுடைய பழங்கால யாழ்ப்பாணம் (Ancient Jaffna) என்ற ஆங்கில நூல் ஆகியவற்றில் காணப்படும் காலக்கணிப்பைத் தருகிறது. அரசர் பெயர் ஞான இராச கூழங்கை ஆரியச்சக்கரவர்த்தி அல்லது காலிங்க ஆரியச்சக்கர…
-
- 0 replies
- 967 views
-
-
பழனி அருகே ஆண்டிபட்டி மலைப்பகுதியில் 3000 ஆண்டு பழமையான சங்ககால குகை ஓவியங்கள், வாழ்வியல் தடங்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டன. பழனி அருகே ஆண்டிபட்டி மலைப்பகுதியின் மேற்கே உள்ள ஒரு குகையில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, முனைவர் கன்னிமுத்து, ஆர்வலர்கள் பழனிச்சாமி, ராஜா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டபோது சுமார் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்ககால ஓவியங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது: 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளாக ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. சுண்ணாம்பு, மூலிகை மற்றும் மரப்பிசின் கொண்டு வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ள இந்த ஓவியங்களில் பல நிறம் மங்கியுள்ளது. காதலையும், வீரத்தையும் இரு கண்களாக கொண்டு வாழ்ந்த சங்ககாலத் தமிழ் மக்கள…
-
- 1 reply
- 964 views
-
-
மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும்.தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா… ! தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன் 30ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்! 01.அரிகரன் – இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா! 02.வல்வெட்டித்து…
-
- 1 reply
- 964 views
-
-
ரஷியநாடு தமிழைக் கொண்டாடுகிறது :அந்நிய மண்ணில் அன்னைத் தமிழுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ! தமிழன் தமிழில் எழுதினாலோ பேசினாலோ பாராட்டுவது நாமாக த்தான் இருப்போம். நம் மொழி யை நாம் பேசவே பாராட்டுகி றோம். அந்தளவு போய்விட்ட து நம் மொழி. ஆனால், தமிழு க்குத் தொடர்பே இல்லாத ரஷிய நாடு தமிழைக் கொண் டாடுகிறது. அங்கிருக்கும் ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகுத் தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய் மொழியான ரஷிய மொழியிலும், இரண்டா வதாக அண்டை நாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்பு மொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதி யிருக்கிறார்கள். தமிழைவிட எத்தனையோ உலக மொழிகள் பெரும்பாலான மக்க ளால் பேசப்படுகின்றன. ஆனால், அவற்றை…
-
- 1 reply
- 963 views
-
-
-
- 1 reply
- 962 views
-
-
தமிழரின் தொன்மையும் மேன்மையையும் அறிவது தமிழர்க்கு மட்டுமன்று, எல்லா மனிதருக்கும் ஒரு கண்ணோட்டக் கண்ணாடியாக விளங்கும் - உதவும். மொழியும் இனமும் இணைந்ததொரு பரிணாமபடப்பிடிப்பு, காலத்திரையில் தமிழனின் கால்பதிப்பு, தமிழன் விழுந்ததும் எழுந்ததும், இணைந்ததும் பிரிந்ததும், வாழ்ந்ததுமான வரலாற்றின் பகுப்புத் தொகுப்பு. தமிழர் வரலாறு - கி.மு 14 பில்.- கி. மு. 776 கி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது. கி.மு. 470000 இக்கால இந்தியாவின் …
-
- 0 replies
- 961 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன். க பதவி,பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் சோழ சாம்ரஜ்ஜியத்தின் புகழை உச்சத்திற்கு கொண்டு சென்ற மன்னர்களில் ராஜராஜ சோழன் மிக முக்கியமானவர். அவருடைய பிறப்பும், பதவி ஏற்பும், இறப்பும் இன்றளவிலும் பேசு பொருளாகவே இருந்து வருகிறது. அவரது தாய், அவரது பூர்வீக ஊர், ஆகிய விஷயங்களைப் பற்றிய முழு தகவல்களை அறிந்துகொள்ள, அக்காலத்தில் மலையமானாடு என்று அழைக்கப்பட்ட நடுநாட்டின் தலைநகரான திருக்கோவிலூருக்கு பயணித்தோம். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் இறங்கி தென்பெண்ணை ஆற்றை நோக்கி நடந்தோம். மிகப் பரந்த மணல் பரப்பை கொண்ட தென்பெண்ணை ஆற்றின் கரை …
-
- 1 reply
- 961 views
- 1 follower
-
-
தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்த கணிதமேதை ராமானுஜத்தின் 125 வது பிறந்த நாள் இன்று தேசிய கணித தினமாக பல்வேறு கல்விநிறுவனங்களில் கொண்டாடப்பட்டது. கணித மேதை சீனிவாச ராமானுஜன் 1887 ம் ஆண்டு டிசம்பர்.22ம் நாள் ஈரோட்டில் பிறந்தார். இவரின் கணித அறிவை மக்கள் அறிந்து கொள்ளவும், இளைஞர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கவும், இவரது பிறந்த தினம், தேசிய கணித தினமாக கடைபிடிக்கப்படும் என சென்ற ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். உலகின் ஆரம்ப கால கணித வளர்ச்சிக்கு இந்தியா, பல்வேறு பங்களிப்பை செய்துள்ளது. பூஜ்யத்தை உலகுக்கு அறிமுகம் செய்தது இந்தியா தான். ஆரியபட்டாவுக்கு பின், 16ம் நூற்றாண்டில் கணிதத் துறையில் இந்தியா பின்தங்கியது. ராமானுஜன் மூலம் 20ம் நூற்றாண்டில் இந்தியா மீண்டும…
-
- 1 reply
- 960 views
-
-
தலைக்கு ஊத்தல்! சாவகாசமாக ஒரு எண்ணெய்க் குளியல். புதிதாகப் பிறந்த குழந்தைக்கு அன்பும், நலமும் வேண்டி செய்யப்படும் ஒரு சடங்கு... விழாக்காலங்களின் தொடக்க நிகழ்வாக... கோடையின் வெப்பத்தை எதிர்கொள்ள உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் ஒரு வழக்கம்...! தமிழ்நாட்டின் விருதுநகர் பகுதியிலோ இது மெதுவாக நடைபெறும் ஒரு கொலை. வறுமையின் கொடுமை தாங்காமல் வயதான தாயை பெற்ற மகனே கொலை செய்யும் கொடூரத்தின் அடையாளம்! தமிழ்நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் வயதான முதியவர்களை பராமரிக்க இயலாமல் அவர்கள் வீட்டு இளைய தலைமுறையே இவ்வாறு செய்யும் நிலைக்கு தள்ளப் படுகின்றனர். 65 வயதான மாரியம்மாவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனக்கும் இது நடக்கலாம் என சந்தேகம் எழுந்தது. அவர் மக…
-
- 0 replies
- 960 views
-
-
http://tamilvaasi.blogspot.com/2011/08/blog-post_01.html
-
- 0 replies
- 959 views
-
-
எமக்குத் தொழில் கவிதை' என்பார் பாரதி. புதுக்கோட்டையைச் சேர்ந்த இளம் பெண் பேச்சாளர் பாரதி கூறுகிறார் "எமக்குத் தொழில் பேச்சு' என்று. பேச்சுக்கலையில் இப்போது பிரபலம், பட்டிமன்றம், வழக்காடு மன்றம்தான். அதிலும் குறிப்பாக, அந்தக் குழுவில் ஒரு பெண் இருப்பது அவசியமான ஒன்று என்பது மாறி, முற்றிலும் பெண் பேச்சாளர்களைக் கொண்டே ஒரு நிகழ்ச்சியை வடிவமைப்பது இப்போதைய புதிய பாணி. அப்படித்தான் நிகழ்ச்சி நடத்துகிறார் இந்தப் பாரதி. 30 வயது நிரம்பிய இவர் எம்சிஏ (கணினியியலில் முதுநிலைப் பட்டம்!) முடித்துள்ளார். தந்தை சந்திரசேகரன்தான் இவருக்கு குரு. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான சந்திரசேகரன், இப்போது தனியார் கல்லூரி ஒன்றின் முதல்வர். தாய் ஜெயலட்சுமி, தங்கை ஸ்ரீவித்யா. கணவர் பாபு. பேச்ச…
-
- 0 replies
- 958 views
-
-
மாவீரன் பண்டாரவன்னியன் குறும்படம்- “மாவீரன் பண்டாரவன்னியன்” - வரலாற்றுக்காவியம். Tamil Historical Epic- Short Film -With English Subtitle - *Maaveeran Pandaara Vanniyan*-The Last King of Vanni - Presented by- ICreations , Directed and Acted by - Subramaniam Srikanthalingam (Solicitor England & Wales), Scripted by - Sahithyaratna Mullaimani Late Dr. V.Subramaniam & Produced by - Inuvaioor Appa kuddy Foundation.- Film released on 30/04/2017 in London. Cast- Pandara Vanniyan- Maavaioor Subramainam Srikanthalingam English Colonel Jovel– Thellippalaioor Dr.Visuvalingam Ananthasayanan English Captain Von Driberg- Sriluxman Srikanthal…
-
- 0 replies
- 958 views
-
-
மரபு வழித் தமிழ்த் தேசிய தக்கார் அவையம்-2015 நாள்: 01.09.2015 பதினோராம் பதிவு பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி இவ்வாண்டின் 8-வது மற்றும் 9-வது முழு நிலவுகள் முறையே ஒவ்வொரு நாள் முந்தி 29 நாள் முறைக்குச் சுருங்கி விட்டன. எட்டாவது நிலவு 31.07.2015 அன்றும் 9-வது நிலவு 29.08.2015 அன்றும் தோன்றின. எந்த ஐயப்பாட்டுக்கும் இடமின்றி உரிய வேளையில் நள்ளிரவைக் கடந்ததுடன் தமது ஆடுதலைப் போக்கையும் திருப்பிக் கொண்டன. 8, 9 தோல்வியுற்ற நிலையில் 7வது நிலவையும் தோல்விக் கணக்கில் வைப்பது என்ற நிலைப் பாட்டில் இப்போது முடிவு எடுக்க இயலவில்லை. இன்னும் மிச்சமுள்ள 10, 11, 12 வது நிலவுகளின் செயல்பாட்டில் இடைநாட்களைக் கணக்கிட்டு 12-வது முழு நிலவு நாளினை…
-
- 0 replies
- 956 views
-
-
விஷ்ணுப்ரியா ராஜசேகர் பிபிசி தமிழ் தமிழகர்களின் பாரம்பரிய மருத்துவ முறை என கருதப்படும் சித்த மருத்துவ முறை பல பெருந்தொற்று காலங்களை கடந்து இன்று கொரோனா பெருந்தொற்று காலத்திலும் தனது பங்கை ஆற்றி வருகிறது. ஏன் எல்லை கடந்து பயணிக்கவில்லை? சித்தர்களால் பழங்காலத்தில் எழுதி வைக்கப்பட்ட ஓலைச்சுவடிகளில் உள்ள மருத்துவ குறிப்புகளின்படி வைத்தியம் பார்ப்பது அல்லது மூலிகை தயாரிப்பது, சித்த மருத்துவமுறை என கருதப்படுகிறது. இந்த சித்த மருத்துவம் தமிழர்களின் பாரம்பரிய மருத்துவமுறையாக கருதப்பட்டாலும், ஆங்கில மருந்துகளை போன்று மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டு நவீன அறிவியல் மொழியில் அதனை இயற்றாமல் போன காரணத்தால் இந்த மருத்துவ…
-
- 0 replies
- 954 views
-
-
[size=4]மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் பரிந்துரை மீது 1956 மார்ச்சில் மெட்ராஸ் மாகாண சட்டமன்றத்தில் நிகழ்ந்த விவாதத்தில், மெட்ராஸ் மாகாணத்தின் பெயர் 'தமிழ்நாடு' என் மாற்றபட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மெட்ராஸ் மாகாணத்துக்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டக் கோரி உண்ணா விரதமிருந்து உயிர் நீத்தவர். க.பெ. சங்கரலிங்கனார். 1956 செம்டம்பரில் பாராளுமன்றத்தில் மாநில மறுசீரமைப்பு மசோதா (அரசியல் அசட்டத்தின் ஏழாம் திருத்தம்) மீதான விவாதம் நடைபெற்றது. இதையடுத்து 1956 - செப்டம்பர் ஆறாம் தேதி இந்த மசோதா பாராளுமன்றத்தில் சட்டமானது. 1956 நவம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து இது அமலுக்கு வரும் என அறிவிக்கபட்டது. நாஞ்சில் நாடான கன்னியாகுமரி மாவட்டமும், செங்கோட்டையும் திரு…
-
- 0 replies
- 951 views
-
-
ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்! சிங்களப் படைகள் யாழ் நகரைக் கைப்பற்றிய நாளை நாம் கொண்டாடுவோமா? நிச்சயமாகக் கொண்டாடுவோம், சிங்களம் தமிழினத்தை முழுமையாக வெற்றி கொண்டால். அப்பொழுது எங்களின் விடுதலைப் போரளிகளுக்கும் கொம்புகளும், கோரமான பற்களும் முளைக்கும். வெற்றி பெற்றவன் திணிப்பதே வரலாறு என்று ஆகின்றது. தோற்று போனவனின் வரலாறு அவனுடனேயே புதைகுழிக்குள் புதைக்கப்படுகிறது. எமது தமிழ் மன்னர்கள் அன்று தோற்றுப் போனார்கள். அதனால் அரக்கர்கள் ஆகி விட்டார்கள். ...........தீபாவளி கொண்டாடப்படுவதன் பின்னணி.......... இங்கே நராகசுரன் என்று உருவகப்படுத்தப்படுபவன் யார்? புராணங்களில் அசுரர்கள் என்று சொல்லப்படுபவர்கள் யார்? இதற்கு பதில் தெரிந்தவர்கள் தீபாவளியை கொண்டாட மாட்டார்கள். தெரிந்…
-
- 1 reply
- 949 views
-