வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
620 topics in this forum
-
ஒரு ரூபாய் இட்லிப்பாட்டி கமலாத்தாள் - "சாகும்வரை ஒரு ரூபாய்க்குதான் இட்லி விற்பேன்" இது 2019ஆம் ஆண்டு. ஒரு ரூபாய்க்கு என்ன கிடைக்கும்? ஒரு ரூபாயை வைத்து என்ன செய்துவிட முடியும்? நாம் யாரிடமாவது ஒரு ரூபாய் கொடுத்தால், நம்மை அவர்கள் ஏளனமாகக்கூட பார்க்கக்கூடும். ஆனால், ஒரு ரூபாய்க்கு ஒருவரின் பசியை போக்குகிறார் இந்த கமலாத்தாள் பாட்டி. கோவை மாவட்டம், வடிவேலம்பாளையம் கிராமத்தில் இன்றும் ஒரு ரூபாய்க்கு சுடச்சுட இட்லி சுட்டு கொடுக்கிறார் இந்தப் பாட்டி. இவருக்கு வயது 80. இந்தத் தள்ளாத வயதிலும், ஆட்டுக்கல்லில் மாவரைத்து, அம்மிக் கல்லில் சட்னி அரைக்கிறார். Image caption ஆட்டுக் கல்லில் மாவறைக்கும் கமலாத்தாள் பாட்டி "காலை 5:30 மணிக…
-
- 7 replies
- 1.2k views
-
-
கூகுள் நிறுவனத்தினை தாய் நிறுவனமான ஆல்பாபட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார். அமெரிக்காவை சேர்ந்த, 'கூகுள்' நிறுவனம், தேடுதல் இணையதளம் தொடர்பான சேவையில், உலகளவில் முன்னணியில் உள்ளது. தேடுபொறி, சர்வர் தொழில்நுட்பம், மென்பொருள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை, கூகுள் அளித்து வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் இந்த 'கூகுள்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக, தமிழகத்தின், சென்னையைச் சேர்ந்த, சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். https://www.dinamalar.com/news_detail.asp?id=2425849 இந்நிலையில் கூகுள் நிறுவனத்தை நிறுவியவர்களான லாரி பேஜ், மற்றும் செர்ஜி பிரைன் இருவ…
-
- 6 replies
- 1.1k views
- 1 follower
-
-
சிறுகைத்தொழில்களும் தமிழர் வாழ்வியலும் : பூநகரியில் உள்ள தேங்காய எண்ணெய் சிறு தொழிலகம். சிறுகைத்தொழில்களும் தமிழர் வாழ்வியலும் : அச்சுவேலியில் உள்ள பதநீர் வடிசாலை
-
- 14 replies
- 1.1k views
- 1 follower
-
-
கடந்த சில வருடங்களாக உலகை, மெய்நிகர் நாணயங்கள் (Crypto Currencies) ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கின்றன. மெய்நிகர் நாணயங்களின் வரலாறானது, Bitcoin எனப்படும் முதல் மெய்நிகர் நாணயத்தின் அறிமுகத்துடனேயே ஆரம்பிக்கின்றது. Bitcoin, உண்மையில் ஒரு தொழில்நுட்பமாகப் பார்க்கப்படவேண்டிய போதிலும் எந்தவொரு தங்குதடையுமின்றி, எந்தவோர் அரசாங்கத்தின் அழுத்தங்களுமின்றி, பணப் பரிவர்த்தனையை, மிகப் பாதுகாப்பாக, மிக விரைவாக, சந்தையின் கேள்வி-நிரம்பல் ஆகியவற்றின் அடிப்படையில் இலகுபடுத்தும் தொழில்நுட்பமாக அமைந்ததன் விளைவாக, Bitcoin, தற்போது நடைமுறையிலுள்ள பணக் கொடுக்கல் வாங்கல்களுக்கு மாற்றீடாகப் பார்க்கப்படுகிறது. இந்த வரிசையின் அடிப்படையில், பல்வேறு மெய்நிகர் நாணயங்கள், சந்தையில் அறிமுக…
-
- 3 replies
- 1.1k views
-
-
பொதுவாக பாடசாலைகளில் கற்றுத்தராத ஒன்றாகவும் வாழ்க்கையில் மனா உளைச்சலை தரும் ஒன்றாகவும் உள்ளது வரவு - செலவை திட்டமிடல். இன்றை சர்வதேச உலக வலைப்பின்னல், சமூக வலைத்தளங்கள் என்பன உலகில் எனக்கும் ஒரு செல்வந்தரை போல வாழ்ந்து காட்ட வேண்டும் என எதிர்பார்ப்பும் உறவினர்களால் மற்றும் நண்பர்களால் தரப்படும் அழுத்தமும் எம்மில் பலரையும் எமது எல்லைக்கு அப்பால் சென்று கடனாளிகளாக மாற்றி நிம்மதியற்ற பிரச்சனையான வாழ்க்கைக்கு வழி சமைத்து விடுகின்றது. எளிமையான சூத்திரம் 50-25-25 50% உழைப்பதில் ஐம்பது வீதத்தை அத்தியாவசிய தேவைகளுக்கு செலவழிப்பது ( உணவு, உடை, உறையுள், மருத்துவ காப்புறுதி, கல்வி .... ) 25% உழைப்பதில் இருபத்தி ஐந்து வீதத்தை விரும்பும் தேவைகளுக்கு செலவழிப்பது …
-
- 6 replies
- 1.1k views
-
-
சீனாவுக்கு அளிக்கும் கடன் உதவியை மேலும் குறைக்க உள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது. வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகள் ஆகியவற்றுக்கு உலக வங்கியால் பல திட்டங்களுக்கு கடன் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சீனாவுக்கும் வளரும் நாடு என்ற முறையில் உலக வங்கி கடன் அளித்து வருகிறது. இதனிடையே ஐந்தாண்டுக்கான குறைந்த வட்டியில் கடன் திட்டத்துடன் சீனாவிற்கு நிதி வழங்க உலக வங்கி சமீபத்தில் ஒப்புக் கொண்டது. இதனைத் தொடர்ந்து உலக வங்கியை ட்ரம்ப் விமர்சித்துள்ளார். அண்மையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில்; அமெரிக்க வரி பணத்தை பயன்படுத்தி, மனித உரிமைகள் மீறல் மற்றும் பலவீனமான நாடுகளில் ராணுவ ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் பணக்கார …
-
- 3 replies
- 1k views
-
-
பசுஞ்சாண விறகு தயாரித்து லாபம் ஈட்டலாம்- அருமையான தொழில்வாய்ப்பு லாபகரமான சுயத்தொழிலைத் தொடங்கி வெற்றிரகமாக நடத்துவது என்பது அனைவருடைய விருப்பமாக இருக்கும். அதேநேரத்தில் குறைந்த முதலீட்டில், நல்ல லாபம் ஈட்டும் தொழிலைத் தேர்வு செய்வது என்பது மிகவும் சவாலான ஒரு விஷயம். இத்தகைய சிந்தனையில் இருப்பவர்களா நீங்கள்? அப்படியானால் இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் மட்டும் போதும். கிராமப்புற மக்களுக்கு, மிகச் சுலபமானதாகக் கருதப்படும் இந்த தொழில் தொடங்க, குறைந்த முதலீடு போதும். முதல் மாதத்திலேயே 10 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்ட முடியும், ஆறு மாதங்கள் கடந்துவிட்டால், மாதத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதி…
-
- 2 replies
- 1k views
-
-
அண்மைய காலத்தில், இலங்கையில் வளர்ச்சியடைந்து வரும் புத்தம்புதிய வணிகமாக, இலத்திரனியல் வணிகங்கள் மாறியுள்ளது. பாரம்பரிய வணிகங்கள் கூட, தமது வணிகச் செயற்பாடுகளுடன் இலத்திரனியல் முறை வணிகச் செயற்பாடுகளை ஒருங்கிணைத்து செல்லவேண்டிய தேவையை, இந்த அபரீதமான இலத்திரனியல் துறையிலான வளர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, புத்தாக்க முயற்சியாளர்களின் அதீத வரவுக்கும் அவர்களது வெற்றிக்கும், இந்த இலத்திரனியல் வணிக முறைமை இன்றியமையாதவொன்றாக மாறியுள்ளது. அதுமட்டுமல்லாது, நிதியியல் ரீதியான பெரும்பாலான வணிகச் செலவீனங்களை, இந்த இலத்திரனியல் வணிகம் குறைத்துள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கும் வணிகர்களுக்குமிடையிலான இடைத்தரகர்களைக் குறைப்பதிலும், இந்த இலத்திரனியல் வணிகம் பெரும்பங்காற்றி வருகின…
-
- 0 replies
- 1k views
-
-
கொரோனா வைரஸின் பொருளாதார தாக்கங்கள் அனுதினன் சுதந்திரநாதன் / 2020 ஏப்ரல் 01 கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கமானது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளாவிய ரீதியில், ஒட்டுமொத்த செயற்பாடுகளுமே முடங்கிப் போயிருக்கின்றன. இந்த நோயின் தாக்கமானது, பாரபட்சமின்றி, இராஜ குடும்பங்கள் முதல், அடிமட்ட சாமானியர்கள் வரை, மிக விரைவாகப் பரவிக்கொண்டிருக்கிறது. ஏனைய உலகநாடுகளுடன் ஒப்பிடுமிடத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று நிலையானது மிகச்சிறப்பாகக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், இன்றிலிருந்து எதிர்வரும் இரண்டு வாரங்கள், இலங்கைக்கு மிகமிக முக்கியமான வாரங்கள் என, வைத்தியர்கள் சங்கம் அறிவித்திருக்கிறது. எனவே, இந்த அறிவிப்புக்குப் பின்னால், இன்னும் சில காலம், இலங்கை இவ்வாறே முடங்கிக…
-
- 1 reply
- 1k views
-
-
மின்சார கார் சந்தையில், அடியெடுத்து வைக்கும் புகழ்பெற்ற கார் நிறுவனம் – அதிர வைக்கும் அதிவேகம்! பெட்ரோல், டீசல் எரிபொருள்களின் பாற்றாக்குறை, எரிபொருள்களின் பயன்பாடுகள் அதிகரிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு பாதுகாப்பான எதிர்காலத்தினை உருவாக்க அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பெரிய நிறுவனங்கள் முன்னெடுத்து வருகின்றன. புகழ்பெற்ற போர்ஷே நிறுவனம் அடுத்த வருடத்தில் தன்னுடைய முதல் மின்சார காரை வெளியிடவுள்ளது. டெஸ்லா, லோட்டஸ் போன்ற ஜாம்பவான்களுக்கு சவால் விடும் வகையில் போர்ஷே நிறுவனம் தன்னுடைய முதல் மின்சார காரான டய்கனை (Taycan) வெளியிட உள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரின் அறிமுகவிழா செப்டம்பர் மாதம் 4ம் திகதி நடைபெற உ…
-
- 0 replies
- 1k views
-
-
-
- 5 replies
- 1k views
-
-
இரண்டு படங்களுக்கும் என்ன வித்தியாசம். முதல் படத்தில், யாழ் தின்ன வெளி சந்தைக் கடையில் வாழ்க்கையை ஓட்ட வாழைப்பழ வியாபாரம் செய்யும் ஒருவர். அடுத்த படம், $4.5 பில்லியன் பழ வியாபாரம் செய்யும் dole என்னும் கம்பெனி. 167 வருடங்களுக்கு முன்னர் 1861 ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட நிறுவனம் டோல். அமெரிக்காவின் கலிபோர்னியாவினை தளமாக கொண்டு செயல் படும் பெரு நிறுவனம். சாமுவேல் என்பவரால் ஆரம்பிக்கப் பட்டது. கரும்பினை விளையும் இடத்தில் கப்பலில் ஏத்தி, பயணத்தின் போதே கப்பலில் உள்ள பாக்டரி செட்டப்பில் சீனி பக்கட்டுகளாக சேருமிடத்தில் இறக்குமதி செய்யும் பெரு நிறுவனம். வாழைப்பழம், அன்னாசி, முந்திரிகை, கிவி, மாதுளை போன்ற பழங்களை விளைவித்து ஏற்றுமதி செய்கிறது. கீழே உ…
-
- 2 replies
- 1k views
-
-
உலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா-வின் தலைவர், ஜாக் மா சொல்கிறார் "ஒரு குழந்தைக்கு முன்னால் ஒரு ஐஸ்க்ரீமையும், 2000 ரூபாய் நோட்டையும் காட்டினால், அது ஐஸ்க்ரீமைத் தான் எடுத்துக் கொள்ளும். அந்தக் குழந்தைக்கு 2,000 ரூபாயில் எத்தனை ஐஸ்க்ரீம்களை வாங்க முடியும் எனத் தெரியாது". "அது போலவே, இன்றைய உலகில் இருக்கும் இளைஞர்களிடம் ஒரு நல்ல வேலைக்கான அப்பாயிண்ட்மென்ட் லெட்டர் அல்லது ஒரு நல்ல Business-க்கான ஐடியாவைக் கொடுத்தால், அவர்கள் நல்ல வேலையைத் தான் தேர்வு செய்கிறார்கள், அந்த பச்சைக் குழந்தயைப் போல" என்கிறார் ஜாக் மா. உண்மை தானே... பாதுகாப்பு, என்ன ஆனாலும் மாதம் பிறந்தால் சம்பளம் வந்து விடும் என்கிற ஒரு சின்ன செண்டிமெண்டில் லாக் ஆகிவிடுகிறோம் தானே. Business…
-
- 4 replies
- 1k views
-
-
சிறிலங்கா ரூபாவின் மதிப்பு மேலும் சரிந்தது அமெரிக்க டொருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் பெறுமதி, இரண்டு வாரங்களில் 0.82 வீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி நேற்று 162.50 ரூபாவாக இருந்தது. கடந்த இரண்டு வாரங்களாகவே அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு சரிந்து வந்தது. இது நேற்று புதிய உச்சத்தை தொட்டது. கடந்த 14 நாட்களில், டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 1.32 ரூபாவினால் (0.82 வீதம்) வீழ்ச்சியடைந்தது. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் டொலருக்கு எதிரான, சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 7.73 ரூபாவினால் (4.99 வீதம்) வீழ்ச்சியடைந்திருக்கிறது. http://www.puthinappalakai.net…
-
- 7 replies
- 1k views
-
-
கடன் சுமையில் சிக்கிக் கொள்ளாதீர்கள் அனுதினன் சுதந்திரநாதன் / 2020 ஜூலை 14 கொரோனா வைரஸ் காலத்தில், இலங்கை அரசாங்கம், தொடர்ச்சியாக நிதியியல் ரீதியான பல்வேறு சலுகை களைத் தனிநபர்க ளுக்கும் நிறுவனங் களுக்கும் வழங்கி வருகிறது. மறுபுறம், அந்தச் சலுகைகள், தகுதியான வர்களைப் போய் சேருகின்றதா என்கிற விவாதங்களும் நடந்த வண்ணம் இருக்கின்றன. இதற்கு நடுவே, நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்கள், நிதி ரீதியான சிக்கல்களிலும், நுண்கடன் ரீதியான பிரச்சினைகளிலும் சிக்கிக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. எனவே, இந்தக் காலப்பகுதியில் கடன் பெற்றுக்கொள்ளும் எண்ணம் இருப்பவர்கள், கடனொன்றைப் பெற்றுக்கொண்டு, அதை மீளச்செலுத்துவதில் பிரச்சினை இருப்பவர்களென, அனைவருமே இந…
-
- 1 reply
- 1k views
-
-
இணையத்தில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள் - பெரிய முதலீடின்றி சுயதொழில் தொடங்குவது எப்படி? செல்வமுரளி கணினித் தமிழ் ஆர்வலர், கிருஷ்ணகிரி மாவட்டம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் இரண்டாவது கட்டுரை இது.) செய்யும் வேலை பிடிக்கவில்லை; கையிலோ போதிய பணமில்லை; ஆனால், சுயதொழிலில் எனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. வழிதான்…
-
- 6 replies
- 996 views
- 1 follower
-
-
ஜிடிபி-யில் 20.4% சரிவு..மோசமான பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியது பிரிட்டன்..! கொரோனா தொற்று உலக நாடுகளின் பொருளாதாரத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு உள்ளதை நாம் கண்முன்னே பார்த்து வரும் நிலையில், வல்லரசு நாடுகளில் ஒன்றான பிரிட்டன் அதிகாரப்பூர்வமாகப் பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக அந்நாட்டுத் தேசிய புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது. உலக மக்களின் காவு வாங்கும் கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது என ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஒருபக்கம் மகிழ்ச்சியை அளித்தாலும், வல்லரசு நாடுகளின் பொருளாதாரச் சரிவும், வர்த்தக மந்த நிலையும் சாமானிய மக்களைப் பயமுறுத்தி வருகிறது. பிரிட்டனில் அப்படி என்ன நடந்தது..? எப்படி #Recession என அறிவிக்கப்…
-
- 2 replies
- 988 views
-
-
சீனப் பொருட்கள் புறக்கணிப்பு கோஷம் எந்த அளவுக்கு யதார்த்தத்தில் சாத்தியம்? இந்தியா-சீனாவுக்கு இடை யேயான எல்லைப் பிரச்சினையைத் தொடர்ந்து சீனப் பொருட்களைப் புறக்கணிப்போம் என்கிற கோஷம் உரக்க ஒலிக்கிறது. இந்தக் குரல் உச்சஸ்தாயி நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போதுதான், ‘ஒன்பிளஸ்’ என்கிற சீன செல்பேசி நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகம் இந்தியாவுக்குள் நுழைந்த சில மணி நேரங்களுக்கெல்லாம் விற்றுத் தீர்ந்திருக்கிறது. அதாவது, அரசியல் கோஷங்கள் ஒன்றாகவும், நடைமுறை அதற்கு நேர்மாறாகவும் இருக்கிறது. உண்மையிலேயே, இந்தியாவால் சீனாவின் தயவின்றிச் செயல்பட முடியுமா? முடியலாம்; ஆனால், அதற்குப் பயணிக்க வேண்டிய தொலைவு சாதாரணமானது அல்ல. உலகமயமாக்கல் கொள்கையை ஏற்று இந்தியாவும…
-
- 2 replies
- 983 views
-
-
தென்மராட்சியில் மாம்பழச் செய்கையை ஊக்குவிக்க சிறப்பு வேலைத்திட்டம் மாம்பழங்களை உற்பத்தி செய்து அவற்றை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சந்தைப்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் நோக்கில் தென்மராட்சியில் ஏற்றுமதிக்காக மாம்பழச் செய்கையை ஊக்குவிப்பதற்குச் சிறப்பான வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக தென்மராட்சியில் ஏற்றுமதிக்கான மாம்பழச் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்துக்காக பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்குத் தற்போது மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.இதற்காக மாம்பழ உற்பத்தியாளர் சங்கமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தச் சங்கத்தில் அங்கத்துவம் பெறுவதன் ஊடாக உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் வாய்ப்புக்களை ஏற்ப…
-
- 0 replies
- 974 views
-
-
2009ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலங்களில், முல்லைத்தீவு மாவட்டத் தமிழ் மீனவர்களது வாழ்வாதாரம் போர் நடவடிக்கைகள் காரணமாக முற்றிலும் முடங்கிக் காணப்பட்டன. ஆனால், போர் நிறைவடைந்த இ(அ)க்காலப் பகுதியில், முல்லை மாவட்ட தமிழ் மீனவர்கள், சற்றுத் தலை நிமிரலாம் என உள்ளூர எண்ணினர்; நிம்மதி மூச்சு விட்டார்கள். ஆனால், நாட்டின் பிற பாகங்களிலிருந்து, பிற மாவட்ட, பிற இனங்களைச் சேர்ந்த மீனவர்களது வருகை, சடுதியாக அதிகரித்தது. அவர்கள், குறித்த மாவட்டத்திலுள்ள நீரியல் வளத்திணைக்களத்தினதோ, உள்ளூர் மீனவ அமைப்புகளினதோ சிபாரிசுகள் இன்றி, கொழும்பில் இருந்து நேரடியாகக் கிடைக்கப் பெற்ற (அரசின் ஆசீர்வாத்தோடு) அனுமதிப் பத்திரங்களுடனேயே தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது கடற்றொழ…
-
- 4 replies
- 974 views
-
-
பங்குகளை விற்ற பெரும் முதலீட்டாளர் வாரன் பஃபெட் அமெரிக்காவின் மிகப்பெரிய செல்வந்தரும், முதலீட்டாளருமான வாரன் பஃபெட்டுக்கு சொந்தமான பெர்சைர் ஹாத்வே நிறுவனம், அமெரிக்காவின் நான்காவது பெரிய விமான நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த அனைத்து பங்குகளையும் விற்றுவிட்டது. கொரோனாவின் காரணமாக அமெரிக்க விமான போக்குவரத்து தள்ளாட்டத்தில் இருக்கும் போது இந்த முடிவினை வாரன் பஃபெட் எடுத்துள்ளார். விமான துறையில் முதலீடு செய்ததன் மூலம் தான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக பஃபெட் முன்பு தெரிவித்து இருந்தார். காணொளி மூலம் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், "நமக்கு பெரிய நஷ்டம்தான். இருந்தபோதிலும் விமான துறையில் முதலீடு செய்திருந்த அனைத்து பங்குகளையும் விற்றுவிட்டேன். எதிர்காலத்தில்…
-
- 1 reply
- 972 views
-
-
நாம் இன்றும் அன்றும் எமது தலைமுறையை, " விளையாடாமல் படி " என கூறி வருவத்துண்டு. ஆனால், இன்றைய உலகில் வீடியோ கேம்ஸ் பெரிதான ஒரு துறையாக வளர்ந்துள்ளது. குறிப்பாக ஆசிய மற்றும் மேற்குலக நாடுகளில் இளையவர்களை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் ஒரு போட்டி கடந்த வார இறுதியில் அமெரிக்காவில் நடந்தது, இதில் வென்றவர் 16 வயதுடைய அமெரிக்கர். பரிசுத்தொகை 3 மில்லியன்கள் அமெரிக்க டாலர்கள். இங்கே விளையாடப்பட்டது : போர்டனைட் Fortnite பல திரையரங்குகளும் இவ்வாறான விளையாட்டை காண்பிக்கின்றன. இதை பணம் கட்டி பார்ப்பவர்கள் மிக அதிகம்!
-
- 1 reply
- 968 views
-
-
உங்கள் வணிகம் எப்படி அமைய போகின்றது? - செங்கல் அல்லது கிளிக் - Bricks or Clicks வாணிப உலகம் தலைகீழாக மாறி வெகுகாலம். நவீன தொழில் நுட்பம் இதனை சாத்தியமாகி உள்ளது. ஒரு சிறு அறையினுள் உள்ள கட்டிலில் இருந்து கொண்டே, பெரும் கார்பொரேட் நிறுவனத்தினையே ஆட்டம் காணவைக்கும் வகையில் தனி மனிதருக்கு தொழில் நுட்பம் கை கொடுக்கிறது. யானை போன்ற பெரும், பெரும் நிறுவனங்கள் எல்லாமே சிறு பூச்சி போன்ற, ஒரு மனிதரும், அவரது கணணியும் காதுக்குள் குடையும் வேலையால் அல்லாடிக் கொண்டு இருக்கின்றன. மறுபுறம் சட்டமும் தடுமாறுகின்றது. பிரிட்டனில் இருக்கும் நான், அமெரிக்காவில் ஒரு சாப்ட்வேர் தொடர்பில் அவசர வேலை செய்வதனால், இமிகிரேஷன், விசா, காலதாமதம்.... ஆனால் அதே வேலையினை ஒன்லைன் வ…
-
- 6 replies
- 960 views
-
-
10ஆவது யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி நிறைவு Editorial / 2019 ஜனவரி 29 செவ்வாய்க்கிழமை, பி.ப. 04:05 Comments - 0 வடக்குக்கான நுழைவாயிலாக, யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி, தொடர்ச்சியாக 10ஆவது வருடமாகவும் ஜனவரி 25ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை, யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் நடைபெற்றது. தொழில் வழிகாட்டல் சேவைகள், விசேட உணவு வகைகள், குடிபானங்கள், வீட்டுக்குத் தேவையான அனைத்து உபகரணங்கள், கட்டட நிர்மாண பொருட்கள், சாதனங்கள், அழகுச் சாதன, அழகுக்கலை சேவைகள், சிறுவர்களுக்கான விசேட நிகழ்வுகள், கல்வி ஆலோசனைகள், மருத்துவப் பரிசோதனைகள் என்பன இக்கண்காட்சியில் இடம்பெற்றன. பல்வேறு உற்பத்திகளை கொண்டிருந்த இந்நிகழ்வு, வட பகுதிக்கு தமது வ…
-
- 0 replies
- 949 views
-
-
ஊரடங்கு குறித்த அச்சமும் கவலையும் எல்லோரையும் தொற்றிக்கொண்டிருக்கின்றன. பல லட்சம் மக்கள் தங்கள் வேலையையும் வாழ்வாதாரத்தையும் இழந்திருக்கின்றனர். எல்லோராலும் இந்த நாட்களை இயல்பாகக் கடத்த முடிகிறதா? அவசியமான பொருட்களெல்லாம் தங்குதடையின்றிக் கிடைக்கின்றனவா? வேலை இல்லாத இந்தச் சூழலில் அதை வாங்குவதற்குக் குறைந்தபட்சக் கையிருப்பு இருக்கிறதா? இப்படியே தொடருமானால் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்? இப்படி ஓராயிரம் கேள்விகள் இருக்கின்றன. இப்படியான நெருக்கடியான சூழலுக்கு மத்தியில்தான் ஆச்சரிய மனிதராகத் தெரிகிறார் வேணுகுமார். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நமக்கு ஒரு முக்கியமான செய்தி இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தையைச் சேர்ந்தவர் வேணுகுமார். நாகர்கோவிலில் உள்ள தெ.தி.இந்த…
-
- 2 replies
- 947 views
-