சுற்றமும் சூழலும்
சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்
சுற்றமும் சூழலும் பகுதியில் சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
517 topics in this forum
-
விக்டோரியா கில் பிபிசி அறிவியல் செய்தியாளர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ALVARO DEL CAMPO அமேசான் மழைக்காடு தொடர்பான வரலாற்றைக் குறித்த ஆய்வில், அங்கு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த மக்கள் அப்பகுதிக்கு எந்த வித சேதங்களையோ, அங்கு வாழ்ந்த உயிரினங்களுக்கு எந்த வித இழப்பையோ ஏற்படுத்தவில்லை என கண்டறியப்பட்டு இருக்கிறது. பெருவில் பணிபுரியும் விஞ்ஞானிகள் மனித தாக்கத்தின் நுணுக்கமான புதைபடிம ஆதாரங்களுக்காக மண்ணின் அடுக்குகளைத் தேடினர். “காடுகள் அழிக்கப்படவில்லை, விவசாயம் மேற்கொள்ளப்படவில்லை, அல்லது வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் பெரிதாக காடுகள் மாற்றத்துக்கு உள்ளாகவில்லை…
-
- 1 reply
- 336 views
-
-
உலகப்... பெருங்கடல், தினம் இன்றாகும்! கடல் சூழலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை உலகப் பெருங்கடல் தினத்தினை பிரகடனம் செய்துள்ளது. உலகப் பெருங்கடல் தினத்தினை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாழ்வின் பிழைப்புக்கு நேரடியாக பங்களிக்கும் கடல் சுற்றுச்சூழல் பல்வேறு மனித நடவடிக்கைகளால் மாசுபடுத்தப்படுவது துரதிர்ஷ்டவசமானது. பெருங்கடல்களில் மாசுபாடு சேர்க்கப்பட்டால், அதை சரிசெய்ய எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டவை. இதன் தாக்கம் மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களையும், முழு கடல் சுற்றுச்சூழல் அமைப்பையும் நேரடியாக பாதிக்கும். கொழும்புக்கு வெளியே உள்ள கடற்பரப்பில் கப்பலால்…
-
- 2 replies
- 1.2k views
-
-
இன்று உலக சுற்றுச்சூழல் தினம் – 2021ஆம் ஆண்டின் கருப்பொருளை அறிவித்தது ஐ.நா 12 Views உலக சுற்றுச்சூழல் தினம், 1974ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் 5ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், 2021ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தினத்துக்கான கருப்பொருளாக `சுற்றுச்சூழல் அமைப்பின் மறுசீரமைப்பு’ என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா தெரிவித்த கருத்தில், சுற்றுச்சூழல் அமைப்பின் மறுசீரமைப்பு என்பது, சுற்றுச்சூழல் மோசமடைவதை தடுப்பது, அம்மாதிரியான செயல்களை நிறுத்துவது மற்றும் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய பணியாற்றுவது. எனவே தான் இந்த வருடத்திற்கான கருப்பொருளாக “மறுமுறை யோசிப்பது. மீண்டும் உருவாக்கு…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஆமையின் இறப்புக்கு தீ பிடித்த கப்பலில் காணப்பட்ட இரசாயனங்கள் காரணமா ? ஆராயுமாறு உத்தரவு எம்.எப்.எம்.பஸீர் தெற்கின் உனவட்டுன கடற்கரையில் கரை ஒதுங்கி இருந்த இறந்த ஆமையின் மரணதுக்கு, தீ பரவிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்த இரசாயனங்கள் தான் காரணமா என்பதை உறுதி செய்ய, குறித்த ஆமையின் சடலத்தை, தெஹிவளை - அத்திட்டியவில் அமைந்துள்ள வன ஜீவிகள் வைத்திய அலுவலகத்துக்கு அனுப்பி அறிக்கை பெறுமாறு காலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காலி மேலதிக நீதிவான் பவித்ரா சஞ்ஜீவனீ பத்திரன இதற்கான உத்தரவை ஹிக்கடுவ வனஜீவிகள் அலுவலகத்துக்கு பிறப்பித்துள்ளார். உனவட்டுன கடற்கரைக்கு, குறித்த ஆமையின் சடலம், நேற்று முன் தினம் கரை ஒதுங்கியிருந்தது. இது தொடர்பில் ஹிக்கடுவ வன ஜீவி அதி…
-
- 1 reply
- 805 views
-
-
மரங்கள் வளர்ப்பதால் மட்டுமே பூமியைக் காப்பாற்றிவிட முடியுமா? - `இல்லை' என்கிறது இந்த ஆய்வு! க.சுபகுணம் Sapling ( Image by WikimediaImages from Pixabay ) உண்மையாகவே இப்படி லட்சக்கணக்கில் மரங்கள் நடுவது காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துமா? மக்கள் பல்லாண்டு காலமாகவே மரம் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். 16-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய கண்டத்தில் வாழ்ந்த நிலவுடைமையாளர்கள், கப்பல் கட்டுவதற்கான மரங்களை வளர்த்தார்கள். அதற்கும் முந்தைய 5-ம் நூற்றாண்டில், ஏட்ரியாடிக் கடலோரத்தில் வாழ்ந்த துறவிகள், தங்களின் உணவு மற்றும் எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக பைன் காடுகளை உருவாக்கினார்கள். மேலும், ஐரோப்பியர்களின் வருகைக்கும் முன்னமே…
-
- 0 replies
- 714 views
-
-
உரிகம் வனச்சரகத்தில் தொடரும் கோடை மழை: பசுமை திரும்பிய காப்புக்காடுகளில் வனவிலங்குகள் குதூகலம் ஓசூர் ஓசூர் வனக்கோட்டம், உரிகம் வனச்சரகத்தில் உள்ள காப்புக்காடுகளில் தொடரும் கோடை மழை காரணமாக வனத்தில் நீர்நிலைகள் நிரம்பி, காடுகளில் பசுமை துளிர் விடுவதால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குதூகலமாக வலம் வரத் தொடங்கியுள்ளன. ஓசூர் வனக்கோட்டத்தின் கடைக்கோடியில் உள்ள உரிகம் வனச்சரகம், காவிரி ஆற்றங்கரையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த உரிகம் வனச்சரகத்தில் தக்கட்டி, பிலிக்கல், கெஸ்த்தூர், மஞ்சுகொண்டப்பள்ளி, மல்லள்ளி, உரிகம் உள்ளிட்ட 6 காப்புக்காடுகள் அமைந்துள்ளன. நடப்பாண்டு கோடைக் காலத்தின் ஆரம்பம் முதலே நிலவிய சுட்டெரிக்கும் கடும் வெயில் காரணமா…
-
- 1 reply
- 354 views
-
-
உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறை உடைந்தது- விஞ்ஞானிகள் எச்சரிக்கை 30 Views அன்டார்டிக்கா கண்டத்தில் உள்ள உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறையானது நேற்று உடைந்ததால் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கடந்த சில வருடங்களாக அன்டார்டிக்காவில் உள்ளபனிப்பாறைகள் உடைந்து வருகின்றன. இது பூமிக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். பனிப்பாறைகள் உடைவதால் கடல்நீர் மட்டம் பல மடங்கு அதிகரித்து, கடலோரப் பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், வேடேல் கடலில் அமைந்திருந்த 4,320 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறையானது நேற்று…
-
- 1 reply
- 461 views
-
-
உலகில் அழிவை நோக்கி செல்லும் குடிபெயரும் பறவைகளின் இருப்பு! மே 8, 2021 –மர்லின் மரிக்கார் உயிர் வாழ்வதற்காக கண்டம் விட்டு கண்டம் நோக்கிச் செல்லும் பறவைகள் மனித நடவடிக்கைகளால் இடைவழியில் கொல்லப்படுகின்ற பரிதாபம்! உலக குடிபெயரும் பறவைகள் தினம் (world migratory birds day) வருடா வருடம் மே மாதம் 08 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. உலகில் வருடம் தோறும் பறவைகளின் குடிபெயர்தல்கள் இடம்பெறுகின்றன. தாம் வாழும் பிரதேசங்களில் எதிர்கொள்ளும் வாழிடச் சிக்கல், கடும் வெப்பம், கடும் குளிர், உணவுப் பற்றாக்குறை என்பவற்றை தவிர்த்துக் கொள்ளவென அவ்வாழிடங்களில் இருந்து, வாழக் கூடிய சூழல் நிறைந்த பிரதேசங்களுக்கு பறவைகள் இடம்பெயர்கின்றன. உகந்த இடத்துக்குச் …
-
- 0 replies
- 490 views
-
-
அமேசான் நில சீர்திருத்த சட்டமூலம் குறித்து இங்கிலாந்து பிரேஸிலுக்கு எச்சரிக்கை முன்மொழியப்பட்டுள்ள நில சீர்திருத்த சட்டமூலம் தொடர்பில் 40 இங்கிலாந்து உணவு வணிகங்கள் பிரேஸிலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. குழுவின் ஒரு திறந்த கடிதம், பொது நிலத்தின் தனியார் ஆக்கிரமிப்பை சட்டப்பூர்வமாக்கக்கூடிய ஒரு சட்டமூலத்தை நிராகரிக்க பிரேஸிலின் சட்டமன்றத்தை அழைப்பு விடுத்துள்ளது. இந்த சட்டமூலம் அமேசானில் காடழிப்பை துரிதப்படுத்தக்கூடும் என்று கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சட்டவிரோத காடழிப்புகளை முடிவுக்கு கொண்டுவருவதாக பிரேஸில் உறுதியளித்த சில மாதங்களிலேயே இந்த சட்டமூலம் அங்கு பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு செனட்டில் புதன் …
-
- 0 replies
- 418 views
-
-
மறைந்துவரும் ஊளைச் சத்தம் டி.ஆர்.ஏ.அருந்தவச்செல்வன் உவமைக்காகவும் கதைகளிலும் அடிக்கடி பேசப்படும் நரிகளைத் தமிழகத்தில் நேரில் காண்பது அரிதாகிவிட்டது. தற்போது தமிழகத்தின் தென்பகுதியில் சில இடங்களிலும் தர்மபுரியை ஒட்டிய வறண்ட பகுதிகளிலும் அரிதாக நரி கண்ணில் படுகிறது. நாய்ப் பேரினத்தைச் சேர்ந்தவை நரிகள். வட இந்தியாவில் கன்ஹா, பரத்பூர் ஆகிய சரணாலயங்களில் காணப்படும் நரிகளைவிடத் தமிழக நரி சற்றே சிறிதாகக் காணப்படுகின்றன. பள்ளத்தாக்குகள், ஆறுகள், ஏரிகள் போன்ற பகுதிகளைத் தேர்ந்தெடுத்து இவை வாழ்கின்றன. கிராமத்தின் வெளிப் பகுதிகள், வேளாண் பகுதிகள், மலைக் குன்றுகளை ஒட்டிய பகுதிகள், திறந்தவெளிக் காடுகள் போன்ற பகுதிகளில் நரி வாழ்கிறது. …
-
- 3 replies
- 1.3k views
-
-
பனங்கள்ளு இறக்கி, விடலையில், கருப்பட்டி செய்வோமா?
-
- 2 replies
- 746 views
-
-
காபி கொட்டையில் புதிய வகை கண்டுபிடிப்பு: புவி வெப்ப நிலை அதிகரிக்கும்போது உதவி செய்யும் பட மூலாதாரம், CIRAD பருவநிலை மாற்றத்தால், அதிகரிக்கும் வெப்பத்தால் காபிச்செடிகள் அழியக்கூடும் என்று அஞ்சப்படும் நிலையில், அதிக வெப்பத்தைத் தாங்கி நிற்கும் காட்டுவகை காபிச் செடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அராபிகா காபி போன்றே சுவையுள்ள, ஆனால் வெப்பமான சூழலில் வளரக்கூடிய இந்த செடியின் பெயர் ஸ்டெனோபில்லா. மேற்கு ஆபிரிக்காவிலிருந்து வரும் இந்த வகை காபியை நாம் விரைவில் சுவைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். வெப்பநிலை அதிகரிக்கும் போது, நல்ல காபிச்செடி வளர்வது தொடர்ந்து கடினமாகிவிடும். 2050 …
-
- 0 replies
- 613 views
-
-
பாறைக் கழுகின் காதலாட்டம் க. வி. நல்லசிவன் அது ஒரு அக்டோபர் மாத ஞாயிற்றுக்கிழமை. விடுமுறையாதலால் ஏதேனும் ஓர் இடத்திற்கு கானுலா செல்லலாம் என முடிவுசெய்திருந்தோம். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் அல்லது பறவை சரணாலயங்கள் என வழக்கம்போல் செல்லாமல், வறண்ட நிலப்பகுதிகளில் உள்ள சிறிய குன்றுகள், பாறை சூழ்ந்த பகுதிகளைத் தேடிச்செல்ல நினைத்து, கோபிசெட்டிபாளையத்துக்கு அருகே உள்ள பெரிய பாறைகள் சூழ்ந்த, மரங்கள் அடர்ந்த நவமலைக் குன்றினைத் தேர்வுசெய்திருந்தோம். அங்கு ஏற்கெனவே பலமுறை கானுலா சென்றிருந்தாலும் பருவ மழைக்காலத்தில் அந்த இடம் எப்படி இருக்கிறது எனப் பார்க்கும் ஆர்வத்தோடு அதிகாலையில் புறப்பட்டோம். காலைக் கதிரவனின் பொன் நிற ஒளியும், ஊர்ப…
-
- 2 replies
- 515 views
-
-
இலங்கையின் இயற்கைச் சூழலை பாதுகாக்குமாறு ஐ.நாவிடம் கோரிக்கை 21 Views இலங்கையின் இயற்கைச் சூழலை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஐ.நாவிடம் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் இடம்பெறும் காடழிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு ஐக்கிய நாடுகளின் தலைமை அலுவலகம் முன்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் ருவான் விஜேவர்தன உட்பட கட்சியின் உறுப்பினர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர். மேலும் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸுக்கு இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரபூர்வமாக கடிதமொன்றை அனுப்ப…
-
- 1 reply
- 379 views
-
-
கானா கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய 60 க்கும் மேற்பட்ட டொல்பின்கள் ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கானா கடற்கரையில் அண்மைய நாட்களில் 60 க்கும் மேற்பட்ட டெல்பின் மீன்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக அந் நாட்டு சுற்றுச் சூழல் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த டொல்பின்களின் உடலில் எந்த காயமும் ஏற்படவில்லை, கடலில் நிறம் மற்றும் வெப்பம் என்பனவும் சாதாரண நிலையிலேயே உள்ளதாக கானாவின் மீன்வள ஆணையத்தின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ஆர்தர்-டாட்ஸி ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந் நிலையில் டொல்பின்களின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய, அவற்றின் மாதிரிகள் ஆய்வகத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளன. இவற்றின் உயிரிழப்பு காரணமாக டொல்ப…
-
- 1 reply
- 480 views
-
-
மனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைக்கும் நவீன சுற்றுச்சூழல்- அதிர்ச்சியளித்துள்ள ஆராய்ச்சி! மனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைத்து அழிக்கும் செயற்பாட்டை சூழல் மாசுபாடு செய்துவருவதாக சுற்றுச்சூழல் விஞ்ஞானி, மருத்துவர் ஷன்னா ஸ்வான் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். மனித இனப்பெருக்கம் எதிர்கொள்ளும் சவால்களை விவரிக்கும் ‘கவுண்ட் டவுன்’ என்ற தலைப்பிலான அவரது புத்தகத்தில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதன்படி, சூழல் மாசுபடுதல் மற்றும் பிளாஸ்டிக்குகளை உற்பத்திசெய்யப் பயன்படுத்தப்படும் பித்தலேட்டுகள் எனப்படும் இரசாயனங்கள், மனித ஆண்குறி சுருங்குதல், பிறப்புறுப்புகள் சிதைந்து போதல் மற்றும் மனித குழந்தைகள் தவறான பிறப்புறுப்புகளுடன் பிறக்கக் காரண…
-
- 0 replies
- 261 views
-
-
ஊழிக்காலம் - 9 | அடுத்த நூற்றாண்டின் பெட்ரோலியம் இதுதான்! ஏன் தெரியுமா? நாராயணி சுப்ரமணியன் ஊழிக்காலம் - 9 | அடுத்த நூற்றாண்டின் பெட்ரோலியம் இதுதான்! ஏன் தெரியுமா? தண்ணீர் தினசரி சில நூறு லிட்டர் தண்ணீர் கிடைத்தால் மட்டுமே நமது அன்றாட வேலைகளை ஒழுங்காக முடிக்க முடியும். 2010ல் ஐக்கிய நாடுகள் சபை, "சுத்தமான குடிநீர் என்பது அடிப்படை மனித உரிமை" என்று அறிவித்தது. ஆனால் அந்த அடிப்படை உரிமைக்கே அச்சுறுத்தலாக வந்துவிட்டது காலநிலை மாற்றம். 88 கோடிக்கும் மேற்பட்ட உலக மக்களுக்கு வீட்டிலிருந்து குறைந்தது ஆறு கிலோமீட்டர் பயணித்தால் மட்டுமே நீர் கிடைக்கும். சுத்தமான குடிநீர் கிடைக்காததால் தொற்றுநோயில் இறப…
-
- 0 replies
- 574 views
-
-
இயற்கை விவசாயத்தில் புதுமுறை: மண்ணையே உரமாக, பூச்சிக் கொல்லியாகப் பயன்படுத்தி சாதிக்கும் தெலங்கானா இயற்கை விவசாயி 10 மார்ச் 2021, 02:12 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சிந்தலா வெங்கட் ரெட்டி "நைட்ரஜன், ஃபாஸ்பரஸ், சூப்பர், பொட்டாஷ் - அனைத்தும் மண்ணிலேயே உள்ளன. மழையில் நனைந்தால், மண்ணிலிருந்து வெளிப்படும் இனிய மணம் பயிருக்கு சிறந்த சுவையையும், பழங்களுக்கு இனிப்பையும் தருகிறது" என்று மண் மற்றும் தனது விளைபொருட்களின் பின்னால் உள்ள ரகசியத்தை விளக்குகிறார் வெங்கட் ரெட்டி. "2002 ஆம் ஆண்டில் மண்ணுடன் பரிசோதனை செய்யும் எண்ணம் எனக்கு வந்தது. எனக்கு தெரிந்த ஒருவரின்…
-
- 3 replies
- 915 views
- 1 follower
-
-
நவீன்சிங் கட்கா சுற்றுச்சூழல் செய்தியாளர், பிபிசி இமயமலையில் பனிப்பாறைகள் உருகுவது பனிப்பாறை ஏரிகளின் அளவை ஆபத்தான முறையில் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், அவை கண்காணிக்கப்படாத பிற ஆபத்துகளையும் ஏற்படுத்துகின்றன என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இரு துருவங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றால், இமயமலைப்பகுதியில்தான் உலகிலேயே மிக அதிகமான பனிப்பாறைகள் இருக்கின்றன. புவி வெப்பமடைதலால் மில்லியன் கணக்கான டன் பனி இங்கு உருகியுள்ளது. இதுபோன்ற ஆபத்துகள் குறித்து நாம் எவ்வளவு தூரம் அறியாமையில் இருக்கிறோம் என்பதற்கு உத்தராகண்ட் மாநிலத்தின் சாமோலியில் அண்மையில் ஏற்பட்ட பேரழிவு மிகச் சமீபத்திய எடுத்துக்காட்டு என்று நிபுணர்கள் நம்புகின்றனர். "இத்தகைய…
-
- 0 replies
- 366 views
-
-
2050-ம் ஆண்டுக்குள் உலகளவில் நான்கில் ஒருவருக்கு செவிதிறன் பிரச்சனை ஏற்படும்.! 2050-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் செவி திறன் பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஜெனீவா: உலகளவில் செவி திறன் பிரச்சனையால் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பல்வேறு பாதிப்புகள் காரணமாக காது கேட்கும் திறன் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் ஐந்தில் ஒருவர் செவி திறன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் 2050-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் செவி திறன் பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.…
-
- 1 reply
- 394 views
-
-
முந்நீர் விழவு நம்மாழ்வார் உரை
-
- 0 replies
- 340 views
- 1 follower
-
-
உலகைக் காக்க விதிகளை மாற்றுங்கள்!: கிரெட்டா துன்பர்க் உரை | கனலி எனக்கு சுமார் எட்டு வயதிருக்கும்போது, காலநிலை மாற்றம் அல்லது புவி வெப்பமாதல் என்று வழங்கப்படுகிற ஒன்றைப் பற்றி முதன்முதலாகக் கேள்விப்பட்டேன். நம்முடைய வாழ்க்கைமுறையின் மூலமாக, மனிதர்களாகிய நாம் தான் அதை உருவாக்கினோம் என்பது வெளிப்படை. விளக்கை அணைத்து ஆற்றலை மிச்சப்படுத்துவதற்கும், காகிதங்களை மறுசுழற்சி செய்து வளங்களை சேமிக்கவும் நான் அறிவுறுத்தப்பட்டேன். பூமியின் காலநிலையை, விலங்கினங்களுள் ஒன்றான மனிதர்கள் மாற்றிவிட முடியும் என்பது விசித்திரம் மிகுந்த ஒன்றாக இருப்பதாக நினைத்துக் கொண்டது ஞாபகம் இருக்கிறது. ஏனென்றால், அது உண்மையிலேயே நிகழ்ந்துகொண்டிருந்தால், அதற்குக் காரணம் நாம் தான் என்…
-
- 0 replies
- 420 views
-
-
எலிசபெத் கோல்பர்ட்: உலகம் ஒருவகையில் உயிரியல் பூங்காவாக மாறிக் கொண்டிருக்கிறது | கனலி அமெரிக்கச் சூழலியல் இதழாளரான எலிசபெத் கோல்பர்ட் (Elizabeth Kolbert) மனிதகுலம் சக உயிரினங்களை எப்படி அழித்தொழிக்கிறது என்றும், அழிவிலிருந்து தான் மீண்டும் கொண்டுவர விரும்பும் ஓர் உயிரினம் பற்றியும் பேசுகிறார். The Sixth Extinction என்ற நூலின் ஆசிரியர் எலிசபெத் கோல்பர்ட்; டைனோசர்களை அழித்தொழித்த பேரழிவை ஒத்த ஒரு பேரழிவு இப்போது நம்மை நெருங்கிக்கொண்டிருப்பதாக இந்நூலில் வாதிடுகிறார். இதற்கு முன்பு ஏற்பட்ட ஐந்து ஊழிப் பேரழிவுகளும் (Mass extinction) இயற்கைச் சூழலால் நிகழ்ந்தவை. ஆனால் இப்போது நிகழ்ந்துகொண்டிருப்பது மனிதனால் உருவாக்கப்பட்டது என்று அவர் நமக்குக் காட்டுகிறார…
-
- 0 replies
- 431 views
-
-
2020 `ஒரு சுட்டெரித்த ஆண்டு` - வெப்பநிலை அதிகரிப்பும், விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும் பட மூலாதாரம்,GETTY IMAGES சர்வதேச வானிலை முகமைகள் 2020ஆம் ஆண்டு ஒரு சுட்டெரித்த ஆண்டாக இருந்தது என்று ஒப்புக் கொண்டன. ஆனால் மிக வெப்பமான இருந்த ஆண்டுகளின் பட்டியலில் 2020 எந்த இடத்தை பிடித்துள்ளது என்பதில் அவை வேறுபடுகின்றன. நாசாவின் தரவுகள், 2020ஆம் ஆண்டு 2016ஆம் ஆண்டைப் போல ஒரு மோசமான கொளுத்தும் ஆண்டாக அமைந்ததாகக் கூறுகிறது. வெப்பநிலை அளவில் இந்த முகமைகள் வேறுபட்டாலும் கடந்த 12 மாதங்கள் ஒரு வெப்பமான தசாப்தத்தின் பகுதி என ஒப்புக் கொள்கின்றன. மேலும் ஐந்து முக்கிய முகமைகள் 2020 ஆம்…
-
- 0 replies
- 810 views
-
-
நிறமிழக்கும் பவளங்கள் : ஒர் எச்சரிக்கை அறிக்கை (கட்டுரை) January 8, 2021 http://www.yaavarum.com/wp-content/uploads/2021/01/BleachedCoral-1-696x418.jpg நாராயணி சுப்ரமணியன் “பவள வாய்ச்சி” என்று கண்ணகியை வர்ணிக்கிறது சிலப்பதிகாரம். மருதாணி இட்ட பெண்ணின் விரல் நகங்களில் ஊடுருவும் அழகிய செந்நிறத்தை, “விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்” என்று பாடுகிறார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். பவளம்/பவளப்பாறை என்ற உடனேயே நம் அனைவருக்கும் நினைவிற்கு வருகிற அந்தச் சிவப்பு வெறும் நிறமல்ல. ஒரு பவள உயிரி நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதற்கான குறியீடு. அந்த நிறத்துக்கும் நலத்துக்கும் ஆபத்துகள் அதிகரித்தபடியே இருக்கின்றன. இதுபற்றி பல தசாப்தங்களாகவே அறிவியலாளர்கள் எச்சரித்துக்…
-
- 0 replies
- 548 views
-