சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
985 topics in this forum
-
பெரியார் திருமூலர் ---- சுப.சோமசுந்தரம் நண்பன் ஒருவன் புலனத்தில் (WhatsApp) செய்திருந்த பதிவில் உள்ள செய்தி பொதுவாக நமக்குத் தெரியாத ஒன்றில்லை. இருப்பினும் நமக்கு நல்லதாய்த் தோன்றுவதை வேறு ஒருவர் சொல்லிக் கேட்கையில் அகமகிழ்வது எல்லோருக்கும் நிகழ்வதே. அம்மகிழ்ச்சியில் அடியேனுக்குத் திருமூலரின் கூற்று நினைவில் வந்தது கூடுதல் சிறப்பு. இதோ அந்த நினைவு : "படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின் நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே". -------- திருமந்திரம், பாடல் 1857. முதற் குறிப்பு :- திருமூலர் காலத்தில் கோயிலில் சிற்பங்களுக்குப் பதில் சுவற்றில் வரைந்த …
-
- 1 reply
- 861 views
- 2 followers
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பாயல் பூயான் பதவி, பிபிசி செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் சாதாரணமாக மக்கள் தங்கள் செல்போனை எடுத்து செய்திகளைப் படிக்கும்போது, அப்படியே சமூக ஊடங்களில் வீடியோக்களை பார்க்கத் தொடங்குகிறார்கள். சில நிமிடங்கள் அல்ல எத்தனை மணிநேரங்களுக்குச் செல்லும் என்பதைக்கூட நாம் உணரமாட்டோம். இந்த வீடியோக்கள் இன்று சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமாக இருக்கும் கண்டெண்ட் கிரியேட்டர்களால் (உள்ளடக்கம் உருவாக்குபவர்கள்) உருவாக்கப்படுகின்றன. இவர்கள் சமூக ஊடகங்களில் ‘இன்ப்ளுயனசர்களாக’ தொழில் செய்து வருகின்றனர். ஆனால் இன்னமும் இது ஒரு உண்மையான வேலையாகப் பார்க்கப்படவில…
-
- 0 replies
- 591 views
- 1 follower
-
-
உபத்திரவ நாய்: மரநாய். காட்டு நாய் பார்த்திருப்பீர்கள். இது மரநாய். Weasels மிக மோசமான ஒரு உபத்திரவ விலங்கு. மிகவும் துணிச்சல் மிக்கது. தன்னிலும் பார்க்க மிகவும் பெரிய விலங்குகளையே உண்டு, இல்லை என்று பண்ணி விடும். சாப்பிட முடியுமோ இல்லையோ, கொல்ல முடியுமோ இல்லையோ, அரியண்டம் கொடுப்பதில் கில்லாடி. கோழிக்கூட்டினுள் புகுந்து, முட்டையினை அலேக்காக தூக்கிக் கொண்டு ஓடுகிறது. பாம்பினை கூட பொறுத்த இடத்தில் பிடித்து, அலற வைக்கிறது. பெரும்பாலும், கழுத்தை குறி வைத்து கவ்விக் கொள்வதால், பாதிக்கப்படும் விலங்குகள், ஒன்றுமே செய்ய முடியாமல், தடுமாறி, அங்கும் இங்கும் ஓடும். உருளும், புரளும். 😯 இந்த வீடியோவில், தாய் பறவை இல்லாத நேரத்தில், ஒரு மரப்பொந்தினுள் புகுந்து…
-
- 60 replies
- 9.2k views
-
-
பாஸ் எடுத்தும் fail “மச்சான் பெருங்கண்டம் சோதினை முடிஞ்சுது நாங்கள் வீட்டை போறம், நீ என்ன மாதிரி ” எண்டு ஒண்டாப் படிக்கிற ஹொஸ்டல் காரங்கள் கேக்க, “நானும் போறதுக்கு அலுவல் பாக்கிறன்” எண்டு போட்டு வெளிக்கிட்டன். 95 இல இடம்பெயர்ந்து போய் திரும்பி வந்தாப் பிறகு வீட்டுக்காரர் எல்லாரும் கொழும்பு போக நான் மட்டும் தனிச்சு நிண்டு , விட்ட கம்பஸ் படிப்பைப் தொடந்தன். இனிச் சோதினை முடிஞ்சு தான் கொழும்புக்குப் போறதெண்ட முடிவோட இருக்க( படிக்க) ரெண்டு வருசம் ஓடீட்டுது. தனிநாடு கேட்டுச் சண்டை பிடிக்கேக்க தராம பிறகு இருந்த இடத்தையும் பிடிச்சிட்டு எல்லாத்தடையும் விதிக்க நாங்களும் தனிய ஒரு நாடாய் வாழ்ந்த காலம் அது. ஆனாலும் எங்களை எந்தத்தடையும் பாதிக்கேல்லை கொழும்புக்குப் போ…
-
- 7 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயத்தில் அசைவ மடை உற்சவம்... நமது முன்னோர்களின் குல தெய்வவழிபாடு திரும்பி வருவதில் மகிழ்ச்சி. அரோகரா🙏 https://www.facebook.com/inuvaiursothys/posts/pfbid0iMcJWrGk5xTTt9sEVzsCyphQhATmZknmcc423mR1YxdECvQqQK7Ug4T2xHbNu9ADl?mibextid=YxdKMJ
-
- 2 replies
- 773 views
-
-
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வெளிமன்னா பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஆசிம். இவர் மாற்றுத்திறனாளியாக பிறந்ததால் 3 ஆம் வகுப்பில் தான் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அதுவரை 4 சுவர் மட்டுமே தனக்கு தெரியும் என்றும், கல்வி கற்க தொடங்கிய பிறகு தனக்கு தன்னம்பிக்கை வளரத்தொடங்கியது என்றும் அவர் கூறியுள்ளார்.
-
- 0 replies
- 653 views
- 1 follower
-
-
ஏற்றுமதி “சேர் அடுத்த patient ஐ வரச்சொல்லவோ எண்டு கேட்டிட்டு , 13 நம்பர் வாங்கோ ” எண்டு கிளினிக்கில நிக்கிற பிள்ளை கூப்பிட ரெண்டு பேர் வந்திச்சினம். என்ன பிரச்சினை ? “ நாரி நோகுது “ எத்தினை நாளா? “ கொஞ்ச நாளா” நாரி மட்டும் தானா இல்லாட்டி வேற எங்கேயும் நோகுதா? “ இல்லை சில நேரம் கழுத்தும் நோகும், போன கிழமை முழங்காலும் நொந்தது” . கால் விறைக்குதா? ஓம் அதோட தலையும் விறைக்குது. சோதிச்சுப்பாத்து ஒண்டும் இல்லை எண்டு சொல்லீட்டு , பதினெட்டு வயசு தானே படிக்கிறீங்களா எண்டு கேக்க, “ இல்லை “ வேலை செய்யிறீங்களா? “ இல்லை “ அப்ப என்ன செய்யிறீங்க “ சும்மா தான் இருக்கிறன் “ ……….. அப்ப குறிக்கி…
-
- 15 replies
- 1.5k views
- 1 follower
-
-
இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சினையை நோக்கும்போது தோன்றுகிறது - ஒரிசா, பீகார் பகுதியிலிருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன் இலங்கைக்குச் சென்றவர்கள் சிங்களவர்களாகி பூர்வ தமிழ்க்குடிகளை சிறுபான்மையினர் ஆக்கிக் கோலோச்சுவதும், கைபர் கணவாய் வழியாக வந்த ஆரியர்கள் இந்திய நிலப்பரப்பைத் தமதாக்கி வர்ணாஸ்ரமம் போன்ற கருமாந்திரங்களை நம்மீது ஏற்றி கீழ்க்காணும் ஒளிப்படத்தில் தோழர் குறிப்பிடும் apartheid ஐ அரங்கேற்றியதும், செவ்விந்தியர்களைக் கொன்று குவித்து அமெரிக்காவை வந்தேறிகள் கைப்பற்றியதும் உண்மையாய்த்தான் இருக்க வேண்டுமென்று. ஆனாலும் பாலஸ்தீன நிலை பதிவு செய்யப்பட்ட, யாரும் மறுக்க முடியாத சமீபத்திய சோக வரலாறு. பாலஸ்தீனர்களிடம் கையேந்தி உள்ளே வந்த கயவன் அவர்கள் தலைக்கே விலை வைப்பது நம் கண் …
-
- 34 replies
- 3.3k views
- 1 follower
-
-
கறுப்புச் சட்டையானாலும் சிகப்புச் சட்டையானாலும் அணியும்போதே மனதில் ஒரு நியாயமான பெருமையுடன் - ஒரு வகையில் அடக்கமான கர்வத்துடன் (!) - அணிய வேண்டும் எனும் எண்ணம் கொண்டவன் நான். ஏனெனில் மானிட சமூகத்தில் இவ்விரு அணியினர்தாம் கொள்கைச் சான்றோர் என்பது என் ஆணித்தரமான கருத்து. சமீபத்தில் இந்த சட்டை பற்றிய கர்வத்தை தோழர் மதிவதனி அவர்கள் தமது உரையொன்றில் குறிப்பிட்டபோது என் எண்ணம் அது திண்ணமானது (A concept in me became a conviction for me). தந்தை பெரியார் அருகில் நிற்கும் வாய்ப்பு அமையாவிடினும், அவரது கொள்கை வழித்தோன்றலான தலைவர் கி. வீரமணி அவர்கள் அருகில் நிற்கும் பேறு பெற்றேன். இவ்வரிய செவ்வியை ஏற்படுத்தித் தந்த தோழர்கள் மானமிகு இராஜேந்திரன் ஐயா, மானமிகு வேல்முருகன் ஐயா,…
-
- 4 replies
- 986 views
- 1 follower
-
-
மதிலுக்கு மேலால் தொங்கிக் கொண்டிருக்கும் மாங்காய்களை களவாகப் பிடுங்கி கல்லில் உடைத்து உப்பு, தூள் போட்டு சாப்பிட்ட காலம் ஒன்றிருந்தது. மாங்காய் போலவே இளநீர், வாழைக்குலை என்று பட்டியல் நீளலாம். ஆனாலும் எங்களின் அந்தக் களவுகளை பெரும் களவுகளின் பட்டியலில் சேர்க்க முடியாது. காணிக்குள் இருக்கும் மாங்காயைக் குறி வைத்து கல்லு எடுத்து எறியும் போது, “மச்சான் இவன் கல்லு எடுத்து அடிச்சால் இரண்டு மாங்காயவது கட்டாயம் விழும்” என்று நண்பர்கள் சுட்டிக் காட்டும் போது ஒரு ‘கிக்’ ஒன்று தலைக்குள் ஏறி உருவேற்றும். சரியோ பிழையோ இளம் வயதில் அப்படியான சிறு சிறு களவுகள் ஒரு கிளு கிளுப்பை தந்திருந்தது என்பது என்னவோ உண்மை. கடந்த வாரம் யேர்மனியில் வந்திருந்த செய்தி ஒன்றை வாசித்த போது, …
-
- 1 reply
- 846 views
-
-
தள்ளாடும் கால்களுடன் நோய்வாய்ப்பட்டு மெலிந்த சிறுத்த உருவத்தோடு ஆடையின்றி அந்தச் சிறுவன் நின்றிருந்தான். அவனுக்கு இரண்டு அல்லது மூன்று வயதுதான் இருக்கும். தாகம், பசி இரண்டையும் தாங்கிக் கொண்டு, அந்தச் சிறுவன் தன்னைச் சுற்றி நின்று கேலி செய்யும் கூட்டத்திடம் சாப்பிட ஏதாவது தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் கை நீட்டிக் கொண்டிருந்தான். யாருமே எதுவுமே அவனுக்குத் தரவில்லை. ஏனென்றால் அவனை “சூனியக் குழந்தை” என்று அவர்கள் கருதினார்கள். ஒரு கை மட்டும் அவனை நோக்கி நீண்டது. அந்தக் கை அவனுக்கு பிஸ்கெற்றையும் குடிப்பதற்கு தண்ணீர்ப் போத்தலையும் கொடுத்தது. சிறுவனுக்கு அவற்றைத் தந்தது அன்ஜா ரீக்ரென் லோவென்(45) (Anja Riggren Lovén). அவனைப் பார்த்த போது, அடுத்த இரவு வரை அந்தச் சிறுவன் வ…
-
- 0 replies
- 611 views
-
-
"அம்மா பீச் மரங்களின் நிழலில் நிரந்தரமாகச் சாம்பல் நிறக் கல்லறை ஒன்றில் உறங்கிப் போனது பெரும் துயரமென்றால், சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கல்லறையை உடைத்து அம்மாவின் நினைவுகள் தளும்பிக் கண்ணீராகப் பெருக்கெடுக்க அங்கே நின்றிருப்பது இன்னும் எத்தனை துயரமென்று யோசித்துப் பாருங்கள்..... எங்கள் கிராமத்தைக் கடந்து போகிற புதிய ரயில்பாதை அம்மாவின் கல்லறை வழியாகப் போகிறதென்று அரச சேவகர்கள் எங்களுக்குத் தகவல் சொன்னார்கள். ஆனாலும், வேறு வழியில்லை. அம்மாவின் உறக்கத்தை மீண்டும் ஒருமுறை கலைக்க வேண்டும். குழந்தைகளுக்காக உறக்கமின்றிக் கிடப்பதொன்றும் உலகில் அம்மாக்களுக்குப் புதிதில்லை. இப்போதும் துளி நினைவு கிடைத்து விட்டால் கூடத் தன் …
-
- 1 reply
- 508 views
-
-
“நான் ஒரு சேரி வாழ் பெண் என்றே எல்லோரும் சொல்கிறார்கள். ஆனாலும் நான் எனது வாழ்க்கையை விரும்புகிறேன். இப்பொழுது நான் ஒரு மொடல் ஆக இருக்கிறேன். ஒருநாள் நான் சுப்பர் மொடலாக வருவேன். இன்று நான் மொடலாக இருப்பதால்தான் எனது குடும்பம் மூன்று வேளையும் சாப்பிட என்னால் உதவ முடிகிறது” இப்படிச் சொல்கிறார் மும்பையைச் சேர்ந்த மலேஸா ஹார்வா (15) (Maleesha Kharwa) அமெரிக்காவைச் சேர்ந்த ரொபேர்ட் கொப்மன் (Robert Hoffman) ஒரு இசை அல்பத்தை உருவாக்குவதற்காக 2020இல் இந்தியா வந்திருந்தார். அவர் உருவாக்க இருந்த இசை அல்பத்துக்கு சேரியில் வாழும் ஒரு சிறுமி தேவைப்பட்டாள். மும்பை சேரிக் குடிசை வாழ் சிறுமியைத் தேடிய போது அவரால் கண்டு பிடிக்கப் பட்டவள் தான் மலேஸா. அப்பொழுது அவள் 12 வயதுச் சிறு…
-
- 0 replies
- 641 views
-
-
எம்ஜிஆர் அறிமுகமான சதிலீலாவதி திரைப்படம்தான் கே.ஏ.தங்கவேலுவுக்கும் முதல்படம். “இன்னைக்கு உன்னை ‘சூட்’ பண்ணப் போறோம்” என்று இயக்குனர் டங்கன் கே.ஏ.தங்கவேலுவிடம் சொன்னதும் இவர் பதறிப் பயந்து என்.எஸ்.கிருஸ்ணனிடம் ஓடிப் போய் “அண்ணே, என்னை சுடப் போறாங்களா?” என்று அழுதாராம். “ பைத்தியக்காரா! உன்னைப் படம் பிடிக்கப் போறாங்களடா” என்று என்.எஸ்.கே விளக்கம் சொல்லி அவரைச் சமாதானம் செய்தாராம். இந்தச் சம்பவம் நடந்தது 1936இல். இந்தச் சம்பவத்தை எனக்கு நினைவூட்டியது இந்தச் செய்தி. கால்பந்தாட்ட வீரரான சுப்பர் ஸ்ரார் ஏர்லிங் கார்லாண்ட் (23) இறந்து விட்டதாக நோர்வே பத்திரிகை Verdens Gang சமீபத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டது. இந்தச் செய்தி உடனடியாக, பரவலாக எல்லா இடமும் போய்ச் சேர்ந்து விட…
-
- 1 reply
- 717 views
-
-
யேர்மனி நிடசாக்ஸன் மாநிலத்தின் டெல்மன் கோர்ஸ்ட் நகரத்துப் பூனைக்கு மரத்தில் இருந்து இறங்கத் தெரியவில்லை. அந்தப் பூனைக்கு வயது ஒன்றுதான்.பெயர் சிட் (Sid). கடந்த ஞாயிற்றுக் கிழமை சிட், ஓக் (oak) மரத்தில் விறி விறு என ஏறி விட்டது. 12 மீற்றர் உயரத்துக்கு ஏறிய பூனைக்கு இறங்குவதற்கு பயமாக இருந்ததால் மரத்தில் இருந்து அவலமாகக் கத்திக் கொண்டிருந்தது. சிட்டினுடைய சோகமான முகத்தை தரையில் இருந்து பார்த்த அதன் உரிமையாளர்(27), அதை மரத்தில் இருந்து தரைக்கு பாதுகாப்பாக கொண்டு வருவதற்காக வெறும் காலுடன் மரத்தில் ஏற ஆரம்பித்தார். மாலை 8மணி. கோடை முடிந்து இலையுதிர் காலம் ஆரம்பித்திருக்கும் நேரம். இருள் மெதுவாக பரவத் தொடங்கியது. மரத்தின் மேலே ஏறி, பூனையை தன் கையில் எடுத்துக் கொண…
-
- 4 replies
- 680 views
- 1 follower
-
-
** எனது அனுபவம் அல்ல. வாட்ஸ் அப்பில் வந்த செய்தி யாழ் பலாலி வீதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் நான் பெற்றுக்கொண்ட மனம் வருந்தத்தக்க அனுபவம். கடந்த 12.09.2023 காலை 8.25 மணியளவில் குறிப்பிட்ட வைத்தியசாலைக்கு சென்ற நான் ஒரு முதலுதவி பயிற்றுவிப்பாளர் என்றவகையில் சுய விருப்பின் பெயரில் சிறுநீரகத்தின் செயற்பாட்டை அறிய உதவும் Serum Creatinine எனப்படும் பரிசோதனையை செய்வதற்காக குருதி மாதிரியினை வழங்கியிருந்தேன். அன்றைய தினம் மாலை 5.30 மணியளவில் பரிசோதனையின் முடிவினை பெறச்சென்றிருந்தபோது அங்கு சில நிமிடநேரத்தின் பின் ஒரு பெண் கையில் எனது பரிசோதனை முடிவினை வழங்கிவிட்டு அது தொடர்பாக வைத்தியசாலையின் பணிப்பாளரைச் சந்தித்துவிட்டுச் செல்லும்படி அறிவுறுத்தினார். அத்…
-
- 6 replies
- 732 views
- 1 follower
-
-
சிதிலமுற்ற கூட்டில் ஒரே ஒரு முட்டை இருப்பதைக் கண்டார் உழவர். சுற்றுமுற்றிலும் பார்த்தார். கண்ணுக்கெட்டிய மட்டிலும் பறவைகளைக் காணோம். குஞ்சுகுளுவான்களைக் காணோம். முட்டையைத் தொட்டுப் பார்த்தார். வெதுவெதுப்பாய் இருந்தது. ஆக நாட்பட்ட முட்டையும் அன்று. கையிலெடுத்துக் கொண்டு போய், பண்ணையில் இருக்கும் அடைக்கோழியின் முட்டைகளுள் முட்டையாய் வைத்து விட்டார். அடைக்கோழியும் அடை காத்துவர, குஞ்சுகள் பொரிந்தன. இந்தக் குஞ்சுவும் அவற்றுள் ஒன்றாய் தாய்க்கோழியின் பின்னால் திரிந்து, கொத்தித் தின்னப்பழகியது. நடைபோடப் பழகியது. ஓடிச்செல்லப் பழகியது. ஒருபோதும் வானத்தைப் பார்க்கவில்லை. நினைத்தால் வானத்தை அதனால் தொட்டவிடக் கூடிய கழுகுக்குஞ்சுதான் அது. ஆனால் சக கோழிகளைப் போன்றே வாழ்ந்து கொண்டிருந்…
-
- 0 replies
- 632 views
- 1 follower
-
-
கதறும் மாடுகள், இரத்த வெள்ளத்தில் ஆடுகள். யேர்மனியில் செல்ம் (Selm) நகரத்தில் உள்ள இறைச்சிக் கூடத்தில் சட்ட விரோதமான முறையில் மிருகங்களுக்கு வேதனைகள் தந்து கொல்லப்படுவதாக விலங்கு உரிமை ஆர்வல நிறுவனமான Soko Tierschutz தொடர்ந்த வழக்கு 15.09.2023 விசாரணைக்கு வந்தது. டோர்ட்மூண்டிற்கு அருகிலுள்ள செல்ம் நகரத்தில் உள்ள இறைச்சிக் கூடத்தில் மூன்று ஆண்கள் தங்கள் இஸ்லாமிய முறையில் குறைந்தது 188 விலங்குகளை படுகொலை செய்துள்ளனர். இந்த முறையில் விலங்குகள் கொல்லப்படும் போது அவை மிகுந்த வேதனைகளை அனுபவிக்கின்றன என்பதே வழக்கின் விபரம். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இறைச்சிக் கூடத்தின் உரிமையாளரும்(54) அவரது இரண்டு மகன்களும் ஆவர். மயக்க மருந்து இல்லாமல் விலங்குகளின் கழுத்தை …
-
- 0 replies
- 422 views
-
-
பல வெள்ளை ஆடுகள் மத்தியில் ஒரு ஒரு கறுப்பு ஆடு மட்டும் இருக்கும் சிவப்பு நிற ஸ்வெட்டர் அணிந்து, இளவரசி டயானா (1961-1997) பொது வெளியில் 1981 இல் வர, பல புகைப்பட நிபுணர்கள் அவரை தமது கமராக்களில் படம் பிடித்துக் கொண்டார்கள்.. அன்றில் இருந்து அந்தக் கம்பளி ஸ்வெட்டர் பிரபலமாகி விட்டது. அந்த ஸ்வெட்டர் பழுதாகி விட, இளவரசி டயானா உடனடியாகவே புதிதாக இன்னும் ஒன்றை வாங்கிக் கொண்டார். அதில் இருந்து அந்த ஸ்வெட்டரில் அவர் அதிகம் விருப்பம் கொண்டிருந்தார் என்பது தெரிகிறது. இப்பொழுதும் இந்த வடிவமைப்பைக் கொண்ட ஸ்வெட்டரை 200 யூரோக்களுக்கு வாங்கிக் கொள்ளலாம். சிவப்பு நிறம் என்று மட்டும் இல்லை பச்சை, நீலம் என பல வர்ணங்களிலும் இந்த ஸ்வெட்டர் Warm and Wonderful நிறுவனத்திடம் வி…
-
- 1 reply
- 342 views
-
-
ரேச்சல் பெய்லி Rachel Bailey (30) மூன்று பிள்ளைகளின் தாய். அவளது வாழ்க்கையில் அவளுடைய கவனத்தை மிகவும் கவர்ந்த குழந்தை அவளது கணவர் அலெக்சாண்டர் (30). அமெரிக்காவைச் சேர்ந்த ரேச்சல் பெய்லி தனது 30 வயதுக் குழந்தை(கணவனு)க்கு ஒரு நாளைக்கு நான்கு முறை வரை தாய்ப்பால் கொடுக்கிறாள். தம்பதியர் இருவரும் தங்களுக்குப் பிறந்த முதல் குழந்தை ராயுடன் 2016இல் சுற்றுலாவுக்குச் சென்றுள்ளார்கள். ரேச்சல் பெய்லிக்கு அவள் குழந்தைக்குத் தேவையான பாலைவிட அதிகமாகப் பால் சுரப்பதால் அதை வெளியில் எடுக்க மார்பக பம்ப் தேவைப்பட்டிருக்கிறது.. ரேச்சல் பெய்லியோ மார்பக பம்பை கொண்டு செல்ல மறந்து விட்டாள். மார்பகத்தில் பால் தங்கிக் கொண்டதால் அவளுக்கு வலிக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் தொற்று நோய் ஏற…
-
- 1 reply
- 826 views
-
-
இரத்தினபுரி மாவட்ட கஹவத்தை பெருந்தோட்ட வெள்ளந்துர பிரிவில் சற்று முன்; #மனோ_கணேசன் இது தொடர்பில் கஹவத்தை OIC கருணாரத்ன, நீதிமன்ற கட்டளையுடன் நடந்தது என்றார். தற்சமயம் அது அப்படியல்ல, என தகவல் கிடைத்துள்ளது. https://www.facebook.com/mano.ganesan.3/videos/859306238965397
-
- 0 replies
- 362 views
-
-
அதன் தலை றோஸ் வண்ண நிறம். பெயர் லோறி(Lori). லோறி என்று அழைக்கப்படுவது ஒரு கிளி. அந்தக் கிளி இப்பொழுது ஒரே இரவில் பிரபல்யமாகி இருக்கிறது. 09ந்திகதி சனிக்கிழமை, விடியலை நோக்கி பொழுது நகர்ந்து கொண்டிருந்தது. யேர்மனியில், பேர்லினில் உள்ள Gropiusstadt நகரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில்,சிரியன் நாட்டைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் வீட்டில் தீப்பிடித்துக் கொண்டது. தகவல் கிடைத்து தீயணைப்புப்படை விரைந்து வந்து தீயை அணைத்து விட்டாலும், கட்டிடம் முழுவதும் புகை பரவி இருந்தது. படிக்கட்டுகளில் புகை நிறைந்து இருந்ததால் 17 குடும்பங்கள் தீயணைப்புப் பணியாளர்களால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். நடப்பது எதுவும் தெரியாமல் (Karin Radvan) காரின் ராட…
-
- 1 reply
- 478 views
- 1 follower
-
-
ஒரு மாணவனின் வெற்றியில் தாக்கம் செலுத்தும் காரணிகள் தற்போது வெளியான உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளில் குறிப்பிட்ட சில மாணவர்கள் பல்கலைக்கழக வெட்டுப்புள்ளியை பெற்று அனுமதிக்கு எப்போது காலம் வரும் என்று காலத்தினையும், அதன் தொடர்புடைய பல்கலைக்கழகத்தினையும் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கும் அதேவேளை, கல்வியில் தாம் சாதித்து விட்டோம் என்று மிகுந்த சந்தோசத்தில் மூழ்கிருக்கின்ற ஒரு குறிப்பிட்ட பிரிவினர், தாம் கஷ்டப்பட்டு கடுமையாக முயற்சி செய்து தங்களுக்கு பல்கலைக் கழக அனுமதி கிடைத்தும் வெட்டுப்புள்ளிக்குள் உள்ளீர்க்கப்படாமல் தங்களது எதிர்காலம் எப்படிப் போகுமோ என்று மிகுந்த கவலைக்குள் உள்ளாக்கப்பட்டிருக்கும் அதிகமான இன்னொரு பிரிவினர், தாங்கள் எந்த விதமா…
-
- 0 replies
- 653 views
-
-
வரலாறு தெரியாது விளாசுகிறார் அமைச்சர் விதுரர் தெற்கிலங்கையில் சைவக் கோயில்கள் இருக்கின்றன. எனவே வடக்குக் கிழக்கு இலங்கையில் புத்த விகாரைகளை அமைத்தால் என்ன? அறிவை அடகு வைத்த பின்பு வினவுகிறார் மாண்புமிகு அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கர். புத்தர் இலங்கைக்கு வந்த நாளில் முருகனுக்குத் தைப்பூச விழா. இலங்கை மக்கள் அனைவரும் கூடி எடுத்த விழா. மாணிக்கக் கங்கையில் விழா. இலங்கையின் ஆதிகுடிகள் சைவர்களே புத்தரை வரவேற்றார்கள். தைப்பூச நாளில் வரவேற்றார்கள். கதிர்காமத்தில் இருந்து காங்கேயன்துறை வரை நீண்ட, சிலாவத்தில் இருந்து மட்டக்களப்பு வரை அகன்ற, 66,000 சதுர கிலோ…
-
- 0 replies
- 429 views
-
-
“சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு” என்ற சினிமாப் பாடலில், “இடையின் பின்னழகில் இரண்டு குடத்தை கொண்ட புதிய தம்புராவை மீட்டிச் சென்றாய் கலைநிலா மேனியிலே சுளை பலா சுவையைக் கண்டேன் அந்தக் கட்டுடல் மொட்டுடல் உதிராமல் சதிராடி மதிதன்னில் கவி சேர்க்குது” என்ற ரி.ராஜேந்தரின் அழகிய கற்பனை இருக்கும். சமீபத்தில் நான் வாசித்த செய்தி ஒன்று இந்தப் பாடல் வரிகளை நினைவுக்கு கொண்டு வந்ததோடு என்னை இசையோடு அசை போடவும் வைத்தது. ஆர்ஜென்டீனா மொடல் அழகி (Silvina Luna) சில்வின லூன(43)வுக்கு பெரிய பின்னழகுக்கு ஆசை வந்தது. அந்த ஆசைக்கு விலையாக இந்த வருடம் ஆவணி 31ந் திகதி அவர் தனது உயிரைத் தர வேண்டி இருந்தது. Brazilian Butt Luft என்று அழைக்கப்படும…
-
- 2 replies
- 697 views
-