கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
772 topics in this forum
-
ஒருநாள் சூரியன் பூமிக்கு இறங்கி வந்தான்! திறந்த விளையாட்டு மைதானம், ஆட்களற்று வெறுமையானது. மாணவர்கள் எங்கும் இல்லை! பறவைகள் அற்ற வனாந்தரமாய், தாயில்லாப் பிள்ளை போல், தனிமையில் கிடந்தது பாடசாலை. மரங்கள் நிழல்களைத் தின்று, ஏப்பம் விட்டுக்கொண்டிருந்தன. காகிதப் பறவைகள், காற்றில் சிறகு விரித்துப் பறந்தன. தூசி படிந்த பள்ளி மணி, அடிப்பாரற்று அநாதையாயிருந்தது. துண்டிக்கப்பட்ட இலைகள், காற்றின் அந்தரத்தில் நடம்புரிந்தன. பள்ளிகளைப் போர் சூழ்ந்த பின்னொரு நாளில், வகுப்பறை நாற்காலிகளை, கண்ணீர் பூக்கள் நிறைத்தன. கரும்பல…
-
- 2 replies
- 716 views
-
-
கைக்கூ வடிவில்... நீண்ட இடை வெளிக்குப் பின் "அன்பு இதயங்களை" சந்திப்பதில் மகிழ்வடைகின்றேன்.நன்றி ஐஸ் மழை கொட்டுகிறது நனைந்தவர்கள் எரிந்து சாகிறார்கள். “போதை” ************************************************* ஜாலியாக பஸ்களில் ஏறும் பிரயாணிகள் ஆவியாக்கி இறக்கப்படுகிறார்கள். “விபத்து” *************************************************** பட்ட மரமும் துளிர் விடுகின்றது பார்ப்பதற்கு யாருமில்லை. “முதியவர்கள்” ***************************************************** எரிவோம் என்று தெரிந்தும்நெருப்பை தலையில் கொட்டுகிறார்கள். “வடி” **************************************************** நச்சு மருந்து கடைகளாக மாறிவிட்டன “மரக்கறிச் சந்தை” **********************…
-
-
- 18 replies
- 690 views
-
-
இருள் மூடிய இலங்கை! ***************** இந்துமா கடலின் முத்து இயற்கையின் அழகின் சொத்து ஆட்சியர் உன்னை வித்து-இப்போ அனைவற்கும் பிடித்தது பித்து. கடல் மீது அழகாய் மிதந்தாய்-இப்போ கடன் மீது மிதக்குகின்றாய். உடல்க்கூறு வெட்டி வித்தார்-உன் உயிருக்கே கொள்ளிவைத்தார். பட்டிணியை சொத்தாய் வாங்கி பாரெல்லாம் நீ கையை ஏந்த நிற்கதியாய் விட்டபின்னும் நிற்கல்லையா? அவர்க்கு கதிரையாசை. -பசுவூர்க்கோபி.
-
- 2 replies
- 482 views
-
-
சிறு ஓட்டையால் கப்பலும் கவிழும்! ************************* போன் அடித்தது.. என்னைக்கேட்டால் இல்லையென்று சொல்லென்றார் அப்பா.. அம்மாவையும் அப்பாவையும் படித்துக்கொண்டிருந்த ஆறு வயது மகன் பார்த்து முளித்தான். மறுநாள்.. அம்மாவின் கைபேசி அலறியது.. நாங்கள் வீட்டில் இல்லை வெளியில் நிற்கிறோம் என்றாள் அம்மா வீட்டில் விளையாடி கொண்டிருந்த பிள்ளை பார்த்து வெருண்டான். பிள்ளையின் வெள்ளை உள்ளத்தில்.. கறுப்பு புள்ளிகள். காலங்கள் உருண்டன அவனின் கைபேசியும் இப்போது பொய்பேசியாகவே மாறிவிட்டது. …
-
- 4 replies
- 1.3k views
-
-
பிரிட்டன் தெருவில் ஒற்றை மரணம்..! ஊடகங்கள் விம்புகின்றன ஊர்கள் அழுகின்றன..!! கொன்றவன் சரணடைய தயாராய் நின்ற போதும்.. சுட்டு வீழ்த்தி வீரம் காட்டி பிடித்து நீதி கேட்கிறது… ஊரையே கொல்ல கொள்கை வகுக்கும் உலகம்..! அடுத்தவன் நிலத்தில் குண்டுகள் கொட்டி பிடித்து அடித்து அழித்து… வளர்த்த பகை தேடி வந்து உயிர் எடுத்தால் அது… பயங்கரவாதம்..! இருந்தும்… மானுட உலகில் கேள்விகள் ஆராய்ச்சிகள் முளைக்கும்..! அதுவே…. மனிதனை இயந்திரம் கொன்றால் “Just war”..! நோபலின் நாயகன் சமாதானப் புறா ஒபாமாவின் தாரக மந்திரம…
-
- 5 replies
- 1k views
-
-
தென்றலாய் வந்தது வசந்தகாலம்! *************************************** பொதிகையிலே பூத்தவளே வசந்தத்தின் வடிவழகே இதமான மயிலிறகே இளம் காற்ரின் உடல் அழகே உலகெல்லாம் நடைபயிலும் உத்தமியே இனியவளே இயற்கையின்.. படைப்பில் நீதான் இளமொட்டுத் தேவதையே. கன்ணுக்குத் தெரியாத இளம் புன்னகை தாரகையே விண் தொட்டு மண் தொட்டு விளையாடும் பெண்ணழகே கடல் தொட்டு கரை தொட்டு காவியங்கள் படைத்தவளே அகிலத்தில் உனைத்தானே அனைத்துயிக்கும் பிடித்ததுவே பஞ்சு போன்ற உன் மேனி பட்டாலே உணர்வு பொங்கும் பிஞ்சான உன் கையை பிடித்திழுக்க எமைத்தூண்டும் வஞ்சமில்ல உன் நெஞ்சால் வருடிவிட்டு போகையிலே நெஞ்சமெல்லாம் இனிக்குமடி நின்மதியோ பெருகுமடி நீ வந்து தொடும் போது பழய நினைவெல்லாம் வருகிறது நிலவொளியில் கடல்கரையில் காதலித்த பொழு…
-
-
- 3 replies
- 441 views
-
-
"மூன்று கவிதைகள் / 11" தீரா அலைகளின் ஓயா ஓசையினால் தீண்டித் தீண்டிச் செல்லும் அலைகளால் குளிர்ந்து நடுங்கி சிலிர்த்து நடக்கிறான் வெள்ளை மணலில் கோட்டை கட்டுகிறான்! நிமிர்ந்து எழும் கடலலை அருகே பிரிய மனமின்றி கடலில் நீந்துகிறாள் சிப்பிகள் சோகிகள் தேடி எடுத்து மாலை ஒன்று செய்து மகிழ்கிறாள்! ........................................... அலை சறுக்கு ஆனந்தம் ஆனந்தமே கடலில் பறக்கும் பறவை அதுவோ மேகத்தின் மேல் மிதப்பது போல பூரிப்பு ஒன்று ஆட்கொள்கிறது தாயே! இன்ப ஊற்று உள்ளத்தில் பாய சக்தி பாய்ந்து ஆன்மாவை நனைக்க உப்புச் சுவை நாவில் கரைய ஆழி சொர்க்கம் இன்பம் இன்பமே! ......................................................... மரக் கம்பம் விடிவெள்ளி நமக்கு விரி …
-
- 0 replies
- 123 views
-
-
TRIBUTE TO KALAIGNARகலைஞர் அஞ்சலி- வ.ஐ.ச.ஜெயபாலன்.எங்கள் போர்கால நெருடல்களை மறந்து. காலமெல்லாம் ஈழத் தமிழருக்கு அரணாய் அவர் நின்றதை நினைந்து அஞ்சலிக்கிறேன், கலைஞரின் புகழ்பூத்த காலத்து இயல் இசை நாடக செம்மொழியாய் தமிழ்கூறும் நல்லுலகமெல்லாம் தமிழ் வளர தமிழகத்தில் அரசு இயற்றிய ஆற்றலை வியந்து கலங்குகிறேன்.குமரியில் காலமெல்லாம் தமிழகத்தை தின்ற கடற்கோளும் தலைபணிய வள்ளுவனை எல்லைக் காவலாய் வைத்த மாண்புகளைப் போற்றி மனது நெகிழ்கிறதேஉன்னை வழியனுப்ப வந்து நீலமலையெங்கும் தேன்சிந்தி அழுகின்ற குறிஞ்சிமலர்களுடன் கண்சிந்தும் கவிஞன் நான். ஏற்கனவே உலகத் தமிழர் மனங்களிலே புதைதுவிட்டான். இனி அவனை எங்கே இடுவதென ஏங்குவதேன்? செம்மொழிப் பூங்கா அவனது நினைவிடமாய் என்றும் இருக்குமே. அண்ணா நூலகத்தைவி…
-
- 12 replies
- 2.2k views
-
-
எச்சரிக்கை ----------- வீட்டில் குடியிருக்கும் எலிகளுக்கு நான் விடுக்கும் கடைசி எச்சரிக்கை இது எச்சரிக்கை நீங்கள் இங்கிருப்பது எனக்குத் தெரியும் அங்கங்கே இருக்கும் கறுப்பு எச்சங்கள் உங்களின் மிச்சங்களே இருட்டில் உருட்டுவதும் பகலில் ஒழிவதுமாக நீங்கள் ஓடித் திரிவதும் தெரியும் தக்காளிச்செடியில் நின்றதாகவும் அம்மணி அழுதார் எலிக்கு ஏனய்யா தக்காளி? ஏக பிரதிநிதியாக இங்கு எல்லாம் உங்களுக்காகவா? முட்டைக்கோதுகள் ரேடியேட்டருக்குள் கிடக்க 'என்ன பாம்பு வளர்க்கிறீர்கள்?' என்று தள்ளி நின்று கேட்டார் மெக்கானிக் பின்னர் மொத்தமாக…
-
-
- 17 replies
- 1.7k views
-
-
"தோழனாய் நீயிருக்கத் துன்பமேது...!" "தோழனாய் நீயிருக்கத் துன்பமேது அன்பே ஆழமான உன்இதயத்தில் நானே இருப்பேனே! அழகான என்னுடலும் உனக்கே தருவேனே அழலாக பாசம் நெஞ்சில் சுடர்விடுகிறதே ஈழம் தந்த வீரனே வாழ்கவாழ்கவே!" "காதலர் தினம் ஆண்டுக்கு ஒன்றல்ல காலம் முழுவதும் அன்பின் நாளே! காமம் ஒருபக்கம் நட்பு மறுபக்கம் காத்திருப்பேன் என்றென்றும் எந்தன் பாதிக்கு கார்த்திகை தீபத்தின் நாயகன் நீயே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 378 views
-
-
நீ சென்ற ஒரு நொடியில் பிறந்து விடுகிறது உனக்கு புது பெயர் ஒரு மணி நேரத்தில் தூக்கி எறியப்படுகிறது உடைமைகள் வாங்கியப் பதக்கங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறது அலமாரியில் உயரிய சான்றிதழ்கள் எடைக்குப் போடப்படுகிறது எட்டு மணி நேரத்தில் ஆயுள் காப்பீடு ஆராயப்படுகிறது உட்பெட்டியில் அசையும் சொத்தின் அட்டவணை அமைதியாய் தயாரிக்கப்படுகிறது அசையா சொத்துக்கள் பிரிக்கப்படுகிறது அன்றிரவே அலைபேசியில் பங்குச்சந்தையில் பரிசீலக்கப்படுகிறது பங்கின் பரிவர்த்தனை நள்ளிரவில் நீ சென்ற அன்றே முடிந்து விடுகிறது உன் நினைவுகள் செல்லாகாசாய்....
-
- 2 replies
- 773 views
-
-
உங்கள் உண்மை முகங்களை காட்டுங்கள்-பா.உதயன் உங்கள் போலி முகங்களை எங்களுக்கு காட்டாதீர்கள் உங்கள் உண்மை முகங்களை காட்டுங்கள் உங்கள் போலி கதைகளை சொல்லாதீர்கள் உங்கள் உண்மைக் கதைகளை சொல்லுங்கள் உங்கள் போலி அன்புகளை காட்டாதீர்கள் உங்கள் உண்மை அன்புகளை காட்டுங்கள் உங்கள் போலி சத்தியங்களை செய்யாதீர்கள் உங்கள் உண்மை சத்தியங்களை செய்யுங்கள் உங்கள் போலி கௌரவங்களுக்காகாவும் புகழுக்காகவும் வாழாதீர்கள் உங்கள் அறம் சார்ந்த வாழ்வோடு பயணியுங்கள் பொது நலன்களோடு பயணியுங்கள் உங்கள் சுய தேவைக்காக நலனுக்காக புகழுக்காக எதையும் பயன் படுத்தாதீர்கள் உங்கள் முதுகில் ஊத்தை வைத்துக் கொண்டு அடுத்தவ…
-
- 1 reply
- 456 views
-
-
இழப்பும் நினைப்பும் வணக்கம், தமிழருக்கென ஒரு இறைமையுள்ள அரசு இல்லாத காரணத்தால் தமிழராகிய எமது பாரம்பரியங்கள் அழிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் வருகின்றன. இன்றைய நிலையில் தமிழ் மொழி தனது சுயத்தை இழக்கும் நிலைக்கு உள்ளாக்கப்படுகிறது. அன்னிய மொழி ஆதிக்க வெறி இதற்கு சான்றாக அமைகின்றது. இந்நிலையில் இலங்கைத் தமிழரின் பாரம்பரியப் பிரதேசங்கள் பறிபோய்கொண்டிருக்கின்ற இக் கால கட்டத்தில் தமிழரின் பாரம்பரியப் பிரதேசங்களில் ஒன்றாகிய வன்னிப் பிரதேசத்தைச் சேர்;ந்த ஒரு பகுதியின் பாரம்பரியச் செயற்பாடுகளை இப்பதிவில் கொண்டுவர முயற்சி செய்து, இழப்பும் நினைப்பும் என்ற தலைப்பில் இவற்றைத் தொகுக்க உத்தேசித்துள்ளேன். இரசனைக்காக காதலையும் இணைத்துள்ளேன். நீங்களும் இதற்கான ஆதரவை அளி…
-
- 4 replies
- 1.3k views
-
-
நான் உன்னைத் தொலைத்து நீ தேட நீ என்னைத் தொலைத்து நான் தேட இருவரும் தேடினோம் எங்கெங்கோ இதுவரை கிடைக்கவில்லை நாமெங்கோ உணர்வுக்குள் சென்று உயிருக்குள் நனைந்து உறவாடி மகிழ்ந்த நாமெங்கே என்னை அழைத்து அளாவிப் பேசிய ஆருயிர் அன்பே நீயெங்கே உன்னை அணைத்து உள்ளம் நனைத்த உன்னுயிர் அன்பே நானெங்கே நம்மை இணைத்த நல்மனம் எங்கே நன்றி சொல்வோம் தினம் இங்கே அல்லும் பகலும் உன் நினைவு அழுது துடிக்குதே என் உணர்வு சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 634 views
-
-
"நட்பு" "தேர்ந்தெடுக்கும் நிறம் குணம் காட்டும். தேர்ந்தெடுக்கும் நட்போ உன்னையே காட்டும் தேய்ந்துபோகும் காதலும் நட்பு இன்றேல் தேயாமல் வாழும் நட்பு ஒன்றே !" "இருகண்கள் அழுதால் கைத்துண்டு துடைக்கும் இருதயம் அழுதால் நட்பு துடைக்கும் இன்பமாய் உலகின் அதிபதியாய் இருப்பினும் இருளாகும் நண்பர் ஒருவர் இல்லாவிடில் !" "இளமை காலத்தில் காதல் வரும் இன்பமாக சில வேளை திருமணமாகும் இளையோர் பலருக்கு நட்பு மலரும் இறுக்கமாக பல வேளை நிரந்தரமாகும்!" "உன்முகம் பார்த்து நட்பு பழகுவதல்ல உயர்தகுதி பார்த்து நட்பு பழகுவதல்ல உதடு கொட்டும் பேச்சுக்க…
-
- 0 replies
- 1.7k views
-
-
கறுப்பான கல்லில் சாமியை காண வெறுப்பு கறுப்பான தோழனுக்கு - கறுப்புச் சட்டை. கொரோனாவை விடக் கொடுமை இது.
-
- 6 replies
- 1.2k views
-
-
'அழிவற்ற அன்பின் ஆனந்தம் ஆகாதோ?' பெண் நிலவு உன்னைப் பார்த்து வெண் நிலவும் பொறாமை கொள்ளுதோ கண்ணழகி உன்னைப் பார்த்த நானும் வண்ண ஒளி கந்தனை மறந்தேனோ? அலைகடலென திரண்ட அடியார் கூட்டத்தில் அலைமோதுதே என்மனம் உன் விழிகளில் அறியாத உணர்வுகளின் வரிகள் எல்லாம் அழகாக உன்னுதட்டினில் புதைத்து எனோ? வாழ்க்கை ஓடத்தில் நீயும் நானும் வாடாத மலராய் இருக்க மாட்டோமா வாலிபம் தந்த காதல் மோகம் வாசனை வீசி எம்மை அணைக்காதா? மொழியும் உணர்வும் பின்னிய பந்தம் விழியில் பேசிய அன்புச் சொந்தம் வழியொன்றில் மலர்ந்த காதல் சந்தம் அழிவற்ற அன்பின் ஆனந்தம் ஆகாதோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] 'அழிவற்ற அன்பின் ஆனந்தம் ஆகாதோ?' https://www.facebook.com/groups…
-
- 0 replies
- 154 views
-
-
அப்பு என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்..! சர்க்கரை வியாதியில்லை சருமத்தில் தொந்தல் இல்லை பக்கத்தில் வாதமில்லை பாழ்பட்ட கொழுப்புமில்லை. கண்கள் விழிக்கூர்மை காதுரெண்டும் பழுதில்லை பற்கள் எல்லாம் பத்திரமாய் பயமற்ற நெஞ்சுரமாய் கைத்தடி இல்லாமல் கால் எழுந்து நடைபயிலும் அப்புவென்று சொன்னால் ஆச்சரியப் படுவீர்கள். கிட்டப் போய் ஒருநாள் கேட்டேன் அவர் வயதை தொண்நூறு தாண்டி தொடப் போறேன் நூறென்றார். அந்தக் காலத்து.. அதிசிறந்த உணவென்றார் வரகரிசி சாமையுடன் வாய்க்கினிய தினைச்சோறு குரக்கன் மா றொட்டி-மீன் கூழ் எங்கள் அமிர்தம் பகல் முழுதும் உடல் உளைப்பு பனாட்டொடியல் பழம்கஞ்சி தூதுவளைச் சம்பல் தும்பங்காய்ப் பிரட்டல் கொவ…
-
- 35 replies
- 4.8k views
-
-
எதிர்பார்த்துக் காத்திருக்கும் நீளமானதொரு தொலைவில் ஆழமானதொரு மௌனமும் கோரமானதொரு வெறுமையும் தவிப்பானதொரு தனிமையும் வஞ்சகமானதொரு புன்னகையை வீசிவிட்டு அருகே நின்று வா வா என்று வருந்தி அழைக்கும்! மௌனமும் வெறுமையும் தனிமையும் புதைந்து கொண்டிருக்கும் நம்பிக்கையை தட்டி எழுப்பி நலம் விசாரித்து விட்டு திசை தெரியாமல் போ போ எனத் துரத்தி விட்டு ஹா ஹா என்று கோரச் சிரிப்பு சிரிக்கும்! துடித்துக் கொண்டிருக்கும் மொழிகளுக்கிடையே மறைந்து போகும் மௌனம் மௌனத்துக்கு நடுவே ஒலித்து மறைந்து போகும் கதறல் இவற்றைக் கண்டு உள்ளூர நகைத்துக் கொள்ளும் வெறுமை! எதுவுமே இல்லாமையே வெறுமை எதுவுமே கிடைக்காமையே ஏக்கம் இல்லாமையும் கிடைக்காமையும் வாழ்வின் தாக்கமான தேக்கம்! மௌனங்களுக்கு தாளம் ச…
-
- 4 replies
- 781 views
-
-
இறந்த.... காலநினைவுகளுடன்.. வாழ்வதை காட்டிலும்.... இறப்பது மேல்...... !!!
-
- 3 replies
- 861 views
-
-
"வாராயோ வெண்ணிலாவே" "வாராயோ வெண்ணிலாவே சொல்லாயோ காதல் பாராயோ என்னைத் அன்பாய் தழுவாயோ போராட்டம் வேண்டாம் பொறுமையாய் கேட்கிறேன் தாராயோ உன்னை முழுதாக எனக்கு வைராக்கியம் விட்டு அருகில் வருவாயோ?" "சோராத என்மனம் ஏங்கித் துடிக்குது சேராத இதயமே வந்திடு என்னிடம் சீராக சிறப்பாக வாழ்வு தந்து தீராத ஆசைகளை நிறைவு ஏற்றி பாராட்டி உன்னைத் பல்லக்கில் தூக்கவா?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 1 reply
- 378 views
-
-
-
"மறக்கத் தெரிந்த மனமே உனக்கு நினைக்கத் தெரியாதா?" "என்னை மறக்கத் தெரிந்த மனமே உனக்கு நினைக்கத் தெரியாதா பெண்ணே? விண்ணில் மறைந்த வெண்ணிலாப் போல கண்ணில் படாமல் ஒழித்தது எனோ?" "இரக்கம் அற்று பிரிந்து போனவளே உருக்கமாக உன்னைக் நான் கேட்கிறேன்? மயக்கும் நளினத்தால் கொள்ளை அடித்தவளே தயக்கம் இல்லையோ மற்றவன் கைப்பிடிக்க ?" "தேடி வந்தாய் தேனாய் கதைத்தாயே தேவை முடிந்தது தள்ளி விட்டாயே? தேவதையே ஒருதரம் திரும்பி பார்க்காயோ தேய்ந்து இவன் படும்பாட்டை காணாயோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 332 views
-
-
எப்போதாவது உங்களை புனைப்பெயர் சொல்லி இன்னொருவர் அழைத்ததுண்டா எப்போதாவது உங்கள் பெயரை உச்சரித்த நாட்களை விட புனைபெயரை அதிகம் உச்சரித்ததுண்டா அவரவர் வாழ்வில் பட்டப் பெயராகவோ செல்லப் பெயராகவோ ஒரு புனை பெயர் இருந்திருக்கக் கூடும் பிடித்த தலைவர், பிடித்த நபர் பிடித்த நதி,பிடித்த மலை அன்றேல் பிடிக்காமல…
-
-
- 2 replies
- 434 views
-
-
சிவனா.. தமிழ் பேசும் சிவ பூமியில் சீறிய ஒரு வரலாற்று வாசலில் ஹிந்தியத்தின் கொடுக்கதில் கந்தகம் தடவச் சென்ற கதியதில் காற்றோடு கலந்திட்ட உத்தர தாண்டவத்தின் குறியீடோ..?! படம்: பிரபா சிதம்பரநாதன் அக்கா.(யாழில் இருந்து)
-
- 1 reply
- 1.5k views
-