கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
772 topics in this forum
-
ஆண்டவன் எந்த மதம்-பா.உதயன் ஆண்டவன் எந்த மதம் அறிந்தவர் சொல்லுங்கள் ஆளுக்கு ஒரு மதமாய் ஆண்டவன் படைத்தானா ஆளுக்கு ஒரு சாதி அந்த ஆண்டவன் படைத்தானா அவன் பெரிது இவன் சிறிது அட ஆண்டவன் சொன்னானா உன் மதமா என் மதமா பெரியதடா உலகில் மனிதன் சண்டையடா அட மனிதனின் மனங்கள் மாறல்லையே மனிதம் இங்கு வாழல்லையே நிறங்களில் பெயரில் நிறவாதம் இனங்களின் பெயரில் இனவாதம் மனிதனை மனிதன் கொலை நாளும் அட ஆண்டவன் எந்த நிறம் அறிந்தவர் கண்டவர் சொல்லுங்கள் வெய்யிலும் மழையும் இங்கே வேற்றுமை பார்ப்பதில்லை பெய்யெனப் பெய்யும் மழை நல்லார் உலகிருந்தால் எத்தனை மதங்கள் இருந்தாலும் அவை எழுதிய தத்துவம் ஒன்றெல்லோ எத்தனை கடவுள்கள் இரு…
-
- 3 replies
- 644 views
-
-
என்னவளே! *********** காதலுக்கு கண்ணில்லை என்பார்கள் பலர் நானோ உன் கண்ணுக்குள் தானே முதலில் விழுந்தேன். இதயத்தை பூட்டிவைத்து திரிந்தாய்-ஏனோ என்னிடத்தில் உன் சாவியை தந்து மகிழ்ந்தாய். என்னை காணவில்லை என்று நானே தேடினேன் பின்புதான் அறிந்தேன் உன்னுக்குள் நான் இருந்ததை. திருட்டு எனக்கு பிடிக்காது என்று தெரிந்தும்-கள்ளி எப்படி நீ என்னை திருடி வைத்தாய். காதல் தோல்வியில் தாடி வளத்தார்கள் அன்று தாடி வளர்க்கச்சொல்லியே காதலித்தாயே இன்று. உன் கன்னக் குழிக்குள் விழுந்த பின் என்னால் எழ முடியவில்லையே-நீ என்ன மாயம் ச…
-
- 0 replies
- 1.4k views
-
-
வெடிசுமந்தோரே! -------------------- நீங்கள் தமிழ் ஈழத்தை மடிசுமந்தீர் ஆதலினால் வெடிசுமந்தீர்! நாம் உம்மை எம் மனம் சுமந்தோம்! தமிழ் ஈழத்தை அடைவதற்கு உங்கள் பெயர் சொல்லி உறுதி கொள்வோம்! அன்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
- 0 replies
- 1.1k views
-
-
பக்கத்துல நீயிருந்தும் பாவிமனம் பாக்கல கண்ணுக்குள் நீரிருந்தும் காணாமல் தூங்கல பாசம் வெச்ச நேச மச்சான் பேசாம போவதேன் உள்ளுக்குள் உன் நெனப்பு உறங்காம விழிப்பதேன் உன்னோடு வாழ வழியில்ல உன் நெனப்ப மறக்க முடியல எங்கே நான் செல்ல தெரியல என் நேசம் ஏனோ! புரியல ஒத்தச் சொல் சொன்னாயே உள்ளத்துல ஒசுரா நின்னாயே எங்கே நீ சென்றாயோ? என்னை நீ மறந்தாயோ! நேசம் வெச்ச ஆசை மச்சான் என் நெனப்பு பேசலையா! சுவாசிக்கும் காற்றும் என் மனவலியச் சொல்லலையா? சரவிபி ரோசிசந்திரா
-
- 2 replies
- 813 views
-
-
வன்னிக்கு போய் வாழப் போறேன். படடனத்து வாழ்கை பகடடான வாழ்க்கையென பள்ளியில் படிக்கையில் இங்கிலீசு பாடத்துக்கு இரண்டு டுஷன் விட்டு படிக்க வைத்தார் அப்பா ஓ எல்பரீடசையில பாசான சேதி கேட்டு மூன்று பெணகள் கொண்ட முறைமாமன் தந்திரமாய் அழைக்கையிலே நானும் கொழும்புக்கு மேற்படிப்புக்கு போனேனடி கிரிபாத்தும் பொல் சாம்பலும் தந்து ஊட்டி வளர்த்த தாய் மாமன் வங்கி வேலை கிடைத்தும் வளைத்துப்போடக் கதை விடடார். மூத்த மச்சாளும் மூலைக்குள் நின்று முழு நிலவாய் தெரிகையிலே பாவி மனம் பாசமாய் அலை பாய்ந்தது. காலம் குடியும் குடும்பமுமாக போகையிலே 2022 பிறந்தது . சமைக்க காஸ் இல்லை மோடடார் சைக்கிள் ஓட பெட்ரோல் இல்லை பிரபாகன் …
-
- 9 replies
- 1k views
- 1 follower
-
-
இறுதியில் கிடைத்த உனதன்பு இளைப்பாறிக் கொண்டு இருக்கிறது இதயத்தில்.... சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 1.2k views
-
-
கலைந்த ஆடையை உடுத்திக் கொள்ள மறுக்கிறது அப்பால்... சற்று தாமதமாக வந்தால் பொங்கி வழிகிறது முழு ஆடை... தெரியாதுபோல் சில நேரம் தெரிந்ததே தெரியாமல் போகிறது பலநேரம். .. சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 1.1k views
-
-
பாதைகள் மாறினோம் ஆனால் ஒரு வழியாய் இணைக்கிறது வாழ்க்கை... பயனற்ற யாக்கையை பயன்படுத்தி வீடுபேறு அடைவது பேரறிவின் நிலை மூலம் அறிந்த பின் முக்தி கிடைப்பது முதிர்ச்சி நிலை... சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 869 views
-
-
-
- 3 replies
- 867 views
-
-
நாட்களைக் கணக்கிடும்... --------------------------------- பிணங்களின் மேல் நின்று ரணங்களின் ஊற்றுகளில் நாட்களைக் கணக்கிடும் அதிகார அரசுகள்! அதிகாரப் பசிக்கு இரையாகும் மக்கள் சாவுகளைக் கணக்கிட சக்தியற்று நடைபிணங்களாய் தினறும் அவலம்! உலகப் போட்டியிலே உயிர்கள் கரைந்தழிய ஆயுத உற்பத்தி ஆலைகள் ஓய்வற்று இயங்கி புதிய ஆயுதங்களை விற்றுப் பெருத்தல் ஒருபுறமும் சோதித்துப் பார்த்தல் மறுபுறமாய் மனித உயிர்கள் மடிகின்றன! மனித வளமழிந்த இயற்கை வளச்சுரண்டலில் தமது நலன் தேடும் தேசங்களே கூச்சமென்பதே இல்லையா(?) இக் கொடுமைகளை நிறுத்தும் எண்ணம் உங்கள் மனங்களில் வராதா மனித வாழ்வை மண் மேடாக்கிவிட்டு மனித உரிமையென்று மேசையில் வி…
-
- 5 replies
- 649 views
-
-
உன் புகைப்படத்தை ஓராயிரம் முறை பார்த்து இருப்பேன் ஏனோ நீ இன்னும் பார்க்கவில்லை என் குறுஞ்செய்தியை காத்திருந்தால் காதல் அதிகரிக்கும் என்று நானும் கூட சிலாய்த்துப் பேசியது உண்டு என் தோழியின் காதலுக்கு தூது போன நாட்களில் தலைவலியும் வயிற்றுவலியும் தனக்கு வந்தால் தெரியுமென அப்போது தெரியாமல் போனது ஏனோ! நீ இவ்வளவு இறுக்கமாய் இருக்கிறாய் இம்மியளவும் மாறாமல் உன்னை நினைத்து உண்ணவும் முடியாமல் உறங்கவும் இயலாமல் விழித்துக் கொண்டு இருக்கிறேன் கோட்டானாய் நள்ளிரவில் நீ புரிந்து கொண்டது இவ்வளவு தானா? என நினைத்தால் நெஞ்சம் பஞ்சாய் வெடிக்கிறது என்ன செய்ய நீயும் கொள்கையின் வாரிசு தானே! உன் கொள்கையை காதல் களவாடுமென நினைத்தேன் மாறாக கொள்கை களவாடியது…
-
- 0 replies
- 979 views
-
-
வாழ்க்கை ஒன்றும் பாடத்திட்டம் அல்ல அப்படியே படித்துப் படியெடுக்க அது ஒரு இனிய கலை கற்க பணம் தேவையில்லை தெளிந்த நல்மனமே தேவை... சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 806 views
-
-
எல்லாவற்றிலும் முழுமை காண விரும்பும் நாம் தான் பாதி வாழ்க்கையை தொலைத்துவிடுகிறோம் முழுமையாய்... சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 986 views
-
-
இந்து சமுத்திரத்தின் முத்து இருக்குதிப்போ பசியாய்-பா.உதயன் சகல இன மக்களும் சமத்துவ உரிமையோடு வாழ விடாமல் இனவாதமே முதலாகக் கொண்டு நாடு, மக்கள், சரியான பொருளாதார பாதை பற்றியோ சிந்திக்காத தனியவே பதவியை மட்டும் இலக்காக கொண்டு லஞ்சமும் ஊழலும் கொண்ட ஆட்சியாளர்களால் இந்த நாடு சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது. எந்த வித தூர நோக்கும் இல்லாமல் அடிப்படை மாற்றங்கள் எதுவும் இன்றி சிந்திக்காமல் இனவாதிகளை பதவிக்கு அமர்த்தி இன்று இந்த நிலைமைக்கு வர இந்த நாட்டு மக்களும் பெளத்தமத பேரினவாத மத துறவிகளும் இந்த நாட்டை அழித்து இன்று பெரும் அரசியல் பொருளாதார பிரச்சினையில் சிக்கித்தவிக்கும் நிலைமைக்கு காரணமாக இருக்கிறார்கள். எல்லா இன மக்களுமே என்ன செய்வதென்று தெரியாமல் நாளும் பொழுதுமாக நடு …
-
- 2 replies
- 565 views
-
-
https://www.facebook.com/photo/?fbid=10160014474376950&set=a.10151018148611950&__cft__[0]=AZWx_ghLUGUfdOGsEGqD0O1RrbmZSPkuwd00JPoBavte-iCSNhoJyTSCQXr1UYWhV-IfMvhGBBK_meknfAjNWTrbLXB-T-Q0GYuAVKZeZ0sps0QZ0BAQIgjnY16eW-KRdPc&__tn__=EH-R இலங்கைத் தலைமையின் இரங்கற் கூக்குரல் ஐயாமாரே ஐயாமாரே மொய்யாய் ஏதும் போட்டுப் போங்கோ பணச்சடங்கு நடத்திறம் பார்த்து ஏதும் செய்யுங்கோ பெரிய இடமென்று பிச்சைக்குப் போனால் கரியை வழிச்சுக் கையில கொடுக்கினம் தானத்தைப் பெற்றுக்கொண்டு இனவாதம் பேசியவை …
-
- 2 replies
- 943 views
-
-
இருள் மூடிய இலங்கை! ***************** இந்துமா கடலின் முத்து இயற்கையின் அழகின் சொத்து ஆட்சியர் உன்னை வித்து-இப்போ அனைவற்கும் பிடித்தது பித்து. கடல் மீது அழகாய் மிதந்தாய்-இப்போ கடன் மீது மிதக்குகின்றாய். உடல்க்கூறு வெட்டி வித்தார்-உன் உயிருக்கே கொள்ளிவைத்தார். பட்டிணியை சொத்தாய் வாங்கி பாரெல்லாம் நீ கையை ஏந்த நிற்கதியாய் விட்டபின்னும் நிற்கல்லையா? அவர்க்கு கதிரையாசை. -பசுவூர்க்கோபி.
-
- 2 replies
- 482 views
-
-
காதல் உன்னைக் கட்டிக்கொள்ள காமம் என்னை விட்டுச்செல்ல அடங்க வைத்தது வயது அடக்கம் செய்தது மனது வெள்ளத்தில் ஓடும் உள்ளம் பள்ளத்தில் நாடத் துள்ளும் சிற்றின்ப மாயையில் நெஞ்சம் சிலகாலம் மகிழ்வாய்த் துஞ்சும் ஆசையின் வழியோ சிறிது ஆக்கிரமிக்கும் அளவோ பெரிது அறுசுவை உணவு ருசிக்கும் அடிமையானால் அதுவுன்னைப் புசிக்கும் மோனம் உள்ளே செல்ல மோகம் வெளியே செல்லும் இருக்கும் நாட்கள் குறையும் இகவாழ்வு நாளும் கரையும் தேடி அலையாதே என்னை தேடு உனக்குள் உன்னை பார்ப்பவை எல்லாம் அழகு பார்வையை மாற்றிடப் பழகு அறிவின் வடிவே உலகு அன்பே இறையின் அலகு சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 900 views
-
-
மண்ணில் விழுந்த மழையாய் உன்னில் கலந்தேன் ஜீவநதியாய்... சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 728 views
-
-
-
- 2 replies
- 987 views
-
-
தம்பரும், சுப்பரும்! **************** தம்பர்.. மக்கள் விரும்பியே மன்னனைத் தெரிந்தும்-பின் மாபெரும் போருக்கேன் வந்தனர். சுப்பர்.. மக்களை மறந்துமே மந்திரி சபைக்குத்தான் மாபெரும் சலுகைகள் செய்ததால். தம்பர்.. சிங்கள மக்களே சீறும் சிங்கமாய் சினம் கொண்டு வீதிக்கேன் வந்தனர். சுப்பர்.. பங்களா கட்டியே வாழும் தலைவர்கள் வறுமைக்குள் மக்களை விட்டதால். தம்பர்.. போரை வெண்றவர் புதுமைகள் செய்தவர் போற்றிய மக்களேன் வெறுத்தனர். சுப்பர்.. போரை சொல்லியே இனத்தை பிரிக்கின்ற பொய்கள் அவர்கட்கு தெரிந்ததால். தம்பர்.. விமானத்தளம், வீதிகள்,விளக்குகள்…
-
- 1 reply
- 420 views
-
-
எழுதியவை எல்லாம் கவிதையா? என எண்ணிய வேளையில் என்னிடம் பேசியது என் எழுதுகோல் உள்ளத்தில் உறையும் உணர்வை ஊற்றாய் உரைப்பது கவிதையா? நெஞ்சத்தில் நெருடும் நினைவுகளை நிரல்படக் கோர்ப்பது கவிதையா? வலிகளுக்கு அருமருந்தாய் மனதை வருடுவது கவிதையா? வரலாற்றின் பழம்பெரும் உண்மையை அழியாமல் வடிவமைப்பது கவிதையா? இயற்கையின் கொடையை இனிமையாய் இயம்புவது கவிதையா? காதலின் கவிரசத்தைக் காய்ச்சி பருகுவது கவிதையா? எது கவிதை? என்னுள் ஆயிரம் கேள்விகள் உதயம் கவிதை ஆயிரம் எழுதுபவர் பலராம் கவிதையாய் வாழ்பவர் வெகுசிலராம் விதையை விதைத்திடும் கவிதை விடைபெறா உலகின் நடைப்பாதை எது கவிதை? எழுதும…
-
- 14 replies
- 1.7k views
-
-
அன்னைக்கு ஒரு தினம் தன்னை ஈய்ந்தவளுக்கு தரணியில் உயர்ந்தவளுக்கு ஈடு இணை இல்லா இல்லத்து அரசிக்கு அவளை வாழ்த்த ஒரு தினம்.அன்னையர் தினமாம் இல்லை அன்னையை மறந்தவருக்கான தினம் பரபரப்பான உலகில் அவளை வாழ்த்த ஒரு தினம். இரத்தத்தை பாலாக்கி , நோய் கண்டால் கண்விழித்து தன் பசி மறந்து என் பசி போக்கியவள் தாயாய் தாரமாய் சகோதாரியாய் அன்போடு அறுசுவையும் தந்திடுவாள். குடும்ப நிர்வாகி, அன்பால் அதிகாரம் செய்தவள் இன்பத்திலும் துன்பத்திலும் தோழி,அன்னையாய் நல் ஆசானாய் அகரம் கற்றுத் தந்தவள் ஈன்ற பொழுதிலும் தன் மகவைச் சான்றோன் எனக் கேட்டு மகிழ்ந்தவள். தந்தைக்கு தோளோடு துணை நின்றவள் ஈடு இணை இல்லாதவள் தெய்வமாய் நின்றவள். அழகானவள் ,அன…
-
- 13 replies
- 728 views
- 1 follower
-
-
எங்கே சென்றாய் நீ எங்கே சென்றாய் எங்கே சென்றாய் நீ எங்கே சென்றாய் என்னை நீ தொலைத்து எங்கே சென்றாய் என்னை நீ அழைத்து எங்கே சென்றாய் தினந்தோறும் பணந்தேடி எங்கே சென்றாய் திசைதோறும் புகழ்தேடி எங்கே சென்றாய் உடலுக்குள் உயிர் காணாமல் எங்கே சென்றாய் உடலை தினம் பேணாமல் எங்கே சென்றாய் எங்கே சென்றாய் நீ எங்கே சென்றாய் எங்கே சென்றாய் நீ எங்கே சென்றாய் எதிலும் நான் தெரிகின்றேன் எங்கே சென்றாய் எல்லாம் நான் அறிகின்றேன் எங்கே சென்றாய் பேதமின்றி அள்ளித் தந்தேன் எங்கே சென்றாய் பேரிடரிலும் துணை வந்தேன் எங்கே சென்றாய் மும்மலம் நீ அறியாமல் எங்கே சென்றாய் முற்பிறவி நீ தெரியாமல் எங்கே சென்றாய் எங்கே சென்றாய் நீ …
-
- 0 replies
- 765 views
-
-
நீ சென்ற ஒரு நொடியில் பிறந்து விடுகிறது உனக்கு புது பெயர் ஒரு மணி நேரத்தில் தூக்கி எறியப்படுகிறது உடைமைகள் வாங்கியப் பதக்கங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறது அலமாரியில் உயரிய சான்றிதழ்கள் எடைக்குப் போடப்படுகிறது எட்டு மணி நேரத்தில் ஆயுள் காப்பீடு ஆராயப்படுகிறது உட்பெட்டியில் அசையும் சொத்தின் அட்டவணை அமைதியாய் தயாரிக்கப்படுகிறது அசையா சொத்துக்கள் பிரிக்கப்படுகிறது அன்றிரவே அலைபேசியில் பங்குச்சந்தையில் பரிசீலக்கப்படுகிறது பங்கின் பரிவர்த்தனை நள்ளிரவில் நீ சென்ற அன்றே முடிந்து விடுகிறது உன் நினைவுகள் செல்லாகாசாய்....
-
- 2 replies
- 773 views
-
-
நான் உன்னைத் தொலைத்து நீ தேட நீ என்னைத் தொலைத்து நான் தேட இருவரும் தேடினோம் எங்கெங்கோ இதுவரை கிடைக்கவில்லை நாமெங்கோ உணர்வுக்குள் சென்று உயிருக்குள் நனைந்து உறவாடி மகிழ்ந்த நாமெங்கே என்னை அழைத்து அளாவிப் பேசிய ஆருயிர் அன்பே நீயெங்கே உன்னை அணைத்து உள்ளம் நனைத்த உன்னுயிர் அன்பே நானெங்கே நம்மை இணைத்த நல்மனம் எங்கே நன்றி சொல்வோம் தினம் இங்கே அல்லும் பகலும் உன் நினைவு அழுது துடிக்குதே என் உணர்வு சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 634 views
-