Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைக் களம்

கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. காலச்சக்கரம் சித்திரையில் கொட்டித் தீர்த்த பெருமழையில் சிந்திய விதைகள் வளர்ந்து பெருவிருட்ஷமாகி கோடையில் நல் நிழல் தந்து பச்சை பசேலென்ற வண்ணங்க்காட்டி மலர்தல் காய்த்து கனி தரும் என மக்கள் மனம் குளிர்ந்த வேளை "சட்டென மாறுது வானிலை "என அயலூரில் சுழன்று அடித்த சூறாவளியுடன் எங்கள் மண்ணிலும் மெல்ல குளிர் எட்டிப்பார்க்கிறது ."நேற்று போல் இன்று இல்லை என்றுமே மாற்றம்" தான் இனி மரம் கிளைகள் அனைத்து தாவரங்களும் அணையப் போகும் விளக்கு சுடர் விட்டு ஒளிர்வது போல பல வண்ணம் காட்டி நிற்கும்,மெல்லிய …

  2. திலீபன் அழைத்தது சாவையா இந்த சதத்திற்கும் உதவாத தமிழ் சனத்துக்காகவா..?! மேலிருந்து பார்க்க என்னப்பா இருக்கு திலீபா.. கேடுகெட்டு குட்டிச்சுவராகிக் கொண்டிருக்குது பார் நீ கடந்து போன .. நீ விடுதலை வேண்டி நின்ற சனக் கூட்டம்.. சந்ததிகள் சில தாண்டி.!!

  3. இன்பத்தில் மகிழ்ந்து துன்பத்தில் துவண்டு வாழ்க்கையே முடிந்ததென அலைபாயும் மானிடா, சோகங்கள் மட்டுமே வாழ்க்கையல்ல மகிழ்வான தருணங்களை எண்ணிப்பா பார் கட்டிளம் காளையாய் மண மேடையில் மகிழ்வை அமர்ந்திருந்த தருண ங்கள் உறவுகளின் வாழ்த்துமழையில் பூரித்த தருணங்கள். அன்பு மனையாள் உன் உயிர் சுமந்த சேதி வாய் மலர்ந்த இன்ப அதிர்வு வினாடிகள் கருவாகி உருவாகி ஜனித்து துணி பொதிந்து சிறு மலராக குறு வென்ற பார்வையில் பிஞ்சு விரல்களும் எட்டி உதைக்கும் கால்களையும் கொண்டு பொக்கிஷமாய் உன் கை சேர்ந்த தருணங்கள். "அப்பா "என பதவி கொடுத்த குழந்தைகளை கண்டு குடும்ப பொறுப்போடு மனைவி மக்களை …

  4. புத்தகப்பையுக்குள் போதையா! ************************ புனிதம் நிறைந்த கல்விச்சாலைக்குள் போதை வஸ்துக்கள் புகுந்ததாம்-நாளை புவியையாழும் மாணவச்செல்வங்கள் போரின்றியே உடல்கள் நொருங்குதாம். கல்வியை கல்லறையாக்கின்ற கயவர்கள் காரியம் அங்கு நடக்குதாம்-பாலுக்கு காவலிருப்பதும் பூனைகளா?வென கான்போர் மனமெல்லாம் துடிக்குதாம். போதையைப் புகுத்தி போதனை கெடுக்கும்-அந்த போக்கிரிக்கூட்டத்தை அழிப்போம்-நாளை சாதனை செய்யும் மாணவச் செல்வங்கள்-கழிவில் சறுக்கி விழுவதை தடுப்போம். உண்ண உணவின்றி தவிக்கும் நிலை கண்டும் உணரவில்லையா மாணவ,இளையோரே! எண்ணிப்பாருங்கள் இன் நிலை நீடித்தால் எனியும் சுடுகாடாய் ஈழ…

  5. மனம் ஒரு குரங்கு-பா.உதயன் அன்பும் அழுக்கும் ஆசையும் பாசமும் கோபமும் கொண்ட என் மனக்குரங்கு ஏன் தான் எதுகும் புரியவில்லை எப்பவும் பாய மறுப்பதில்லை மனதுக்குள் கிடக்கும் பாம்பைக் கூட குரங்குக்கு கொல்லத் தெரியவில்லை எத்தனை அழுக்குகள் மனசுக்குள் கிடக்குது குரங்குக்கு இது ஒன்றும் புரியவில்லை சும்மாய் இரு என்று குரங்கை சொன்னால் சும்மாய் இருக்கவும் முடியவில்லை எப்பவும் கத்துது எதிலும் பாயுது அமைதியாய் இருக்க அதுக்கு ஏது பழக்கம் தன்ன அறியாமல் எல்லாம் அறிந்தவன் தான் என்றே துள்ளுது குரங்கு தனக்கே எல்லாம் தெரிந்தது போல் தாவுது குரங்கு எப்பவுமே இன்னும் ஓர் குரங்கு போல் தன்னை நினைக்குது இருப்பதைக் கொண்டு வாழவும் தெரியாம…

  6. "C:\Users\Karu\OneDrive\Desktop\Queen Elisabeth.jpg" அன்னை எலிசபெத் இன்னுயிர் நீத்தனள் அன்னை இரண்டாம் எலிசபத் தன்னைக் கவர்ந்தனன் காலன் ஐக்கிய ராச்சிய அரசியாக ஆண்டுகள் எழுபதைக் கடந்து முக்கிய உலகத் தலைவியாக முடியுடன் வாழ்ந்தவள் அன்னை அநீதிகள் நிறைந்த உலகினில் தன்றன் ஆற்றலால், அன்பினால் பலத்தால் தனிப்பெரும் சிறந்த தலைவியாய் மிளிர்ந்த தாயவள் எலிசபத் அரசி இனியொரு தலைமை இங்கிலாந்திற்கு இப்படியமையுமா அறியோம் இறைவனின் தயவால் இவ்வுலகிருந்த இனியதாய் மறைந்தனள் அந்தோ பொதுநலவாயத் தலைமையை ஏற்று பொறுப்புடன் கடமைகள் ஆற்றி அதிகரித்திட்ட அகதிகட்குதவி ஆற்றிய சேவைகள் பலதாம் …

    • 9 replies
    • 1.1k views
  7. எனது பிரித்தானிய பயணத்தின் போது கண்டது,கேட்டது,மகிழ்ந்தது.என்ற வரிசையில்.. இது முதலாவது கவிதை. இதைஉங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகின்றேன். நன்றிகள். Bed ford வெட் வோர்ட் நகரமும் “கிரேட் நதியும்” ******************************** லண்டன் இருந்து நூறு மைல் கற்களுக்கப்பால் அமைந்துள்ள அழகான நகரமிது. அண்ணளவாக.. இருநூற்றி முப்பது கிலோமீற்றர் நீளம் கொண்ட ரிவர் கிரேட் நதி (The River Great Ouse) புல்வெளிகளையும் காடுகளையும் கட்டிடங்களையும் வீடுகளையும் கரையோர மரங்களையும் இருபக்கமும் அணைத்தபடியே! வளைந்து நெழிந்து …

  8. வாழ்வு! ************* பூப்பதும் உதிர்வதும் பூலோகத்தில்.. அனைத்துக்குமுண்டு உதிர்வதைப் பற்றி ஓரம் கட்டுவோம் பூத்து சிரிப்பதே வாழ்வெனக் கொள்ளுவோம். அன்புடன் -பசுவூர்க்கோபி.

  9. கட்டுமரம் மூழ்காது.......! ஆழ்கடல்மேல் அலையில் அசைந்தாடுகின்றது கட்டுமரமொன்று அதிலிருந்து வலையெறிகின்றார் மீன்பிடிக்கும் மீனவர் இருவர் அமைதியை அகற்றியே இடிபோலொரு முழக்கம் அடுத்து ஆர்பரித்துக்கொண்டு வந்ததோர் அலை ஆகாயம் தொட்டு அந்தோ பரிதாபம் அந்தமரம் அவர்களையும் புரட்டிவிட்டு அங்கேயே மூழ்கியது அடுத்து வந்த அலைகளும் மறைய அமைதியானது கடல் மீண்டும் அதில் மிதந்தது அந்த மரம் அதை பற்றியபடி மீனவர்கள் முகம் மட்டும் தெரிய முழுஉடலும் கடலுக்குள் அண்ணாந்து வானம் பார்த்த முதியவன் முக்குகன் பகன்றான் கருமுகிலைக் காணவில்லை மழைக்கறிகுறி ஏதும் இங்கில்லை அ…

  10. செஞ்சோலைத் தளிர்களே! ------------------------------ வெள்ளையுடைபூண்டு வென்மனம் சூடிய மாணவர்காள் உங்கள் நினைவுகள் என்றும் எம்மோடு உயிர் உள்ளவரை உள்ளத்துள் உலவிடும் உங்களை அகமேந்துகின்றோம்! தர்மம் வெல்லுமொரு நாளில் உங்கள் முகங்களை எம் தேசம் தரிசிக்கும் உலகெங்கும் அலைகின்ற தமிழினம் ஒருநாள் தலைநிமிரும் வேளைவரும் உங்கள் படுகொலைக்கு பதில்காணும் காலம்வரும்!

    • 3 replies
    • 768 views
  11. சிறு ஓட்டையால் கப்பலும் கவிழும்! ************************* போன் அடித்தது.. என்னைக்கேட்டால் இல்லையென்று சொல்லென்றார் அப்பா.. அம்மாவையும் அப்பாவையும் படித்துக்கொண்டிருந்த ஆறு வயது மகன் பார்த்து முளித்தான். மறுநாள்.. அம்மாவின் கைபேசி அலறியது.. நாங்கள் வீட்டில் இல்லை வெளியில் நிற்கிறோம் என்றாள் அம்மா வீட்டில் விளையாடி கொண்டிருந்த பிள்ளை பார்த்து வெருண்டான். பிள்ளையின் வெள்ளை உள்ளத்தில்.. கறுப்பு புள்ளிகள். காலங்கள் உருண்டன அவனின் கைபேசியும் இப்போது பொய்பேசியாகவே மாறிவிட்டது. …

  12. என்னவளே! *********** காதலுக்கு கண்ணில்லை என்பார்கள் பலர் நானோ உன் கண்ணுக்குள் தானே முதலில் விழுந்தேன். இதயத்தை பூட்டிவைத்து திரிந்தாய்-ஏனோ என்னிடத்தில் உன் சாவியை தந்து மகிழ்ந்தாய். என்னை காணவில்லை என்று நானே தேடினேன் பின்புதான் அறிந்தேன் உன்னுக்குள் நான் இருந்ததை. திருட்டு எனக்கு பிடிக்காது என்று தெரிந்தும்-கள்ளி எப்படி நீ என்னை திருடி வைத்தாய். காதல் தோல்வியில் தாடி வளத்தார்கள் அன்று தாடி வளர்க்கச்சொல்லியே காதலித்தாயே இன்று. உன் கன்னக் குழிக்குள் விழுந்த பின் என்னால் எழ முடியவில்லையே-நீ என்ன மாயம் ச…

  13. ஆண்டவன் எந்த மதம்-பா.உதயன் ஆண்டவன் எந்த மதம் அறிந்தவர் சொல்லுங்கள் ஆளுக்கு ஒரு மதமாய் ஆண்டவன் படைத்தானா ஆளுக்கு ஒரு சாதி அந்த ஆண்டவன் படைத்தானா அவன் பெரிது இவன் சிறிது அட ஆண்டவன் சொன்னானா உன் மதமா என் மதமா பெரியதடா உலகில் மனிதன் சண்டையடா அட மனிதனின் மனங்கள் மாறல்லையே மனிதம் இங்கு வாழல்லையே நிறங்களில் பெயரில் நிறவாதம் இனங்களின் பெயரில் இனவாதம் மனிதனை மனிதன் கொலை நாளும் அட ஆண்டவன் எந்த நிறம் அறிந்தவர் கண்டவர் சொல்லுங்கள் வெய்யிலும் மழையும் இங்கே வேற்றுமை பார்ப்பதில்லை பெய்யெனப் பெய்யும் மழை நல்லார் உலகிருந்தால் எத்தனை மதங்கள் இருந்தாலும் அவை எழுதிய தத்துவம் ஒன்றெல்லோ எத்தனை கடவுள்கள் இரு…

  14. உறவுகளின் உயிர்ப்பை நுட்பமாய் தீர்மானிக்கிறது தேவை சரவிபி ரோசிசந்திரா

  15. வெடிசுமந்தோரே! -------------------- நீங்கள் தமிழ் ஈழத்தை மடிசுமந்தீர் ஆதலினால் வெடிசுமந்தீர்! நாம் உம்மை எம் மனம் சுமந்தோம்! தமிழ் ஈழத்தை அடைவதற்கு உங்கள் பெயர் சொல்லி உறுதி கொள்வோம்! அன்பார்ந்த நன்றியுடன் நொச்சி

    • 0 replies
    • 1.1k views
  16. வன்னிக்கு போய் வாழப் போறேன். படடனத்து வாழ்கை பகடடான வாழ்க்கையென பள்ளியில் படிக்கையில் இங்கிலீசு பாடத்துக்கு இரண்டு டுஷன் விட்டு படிக்க வைத்தார் அப்பா ஓ எல்பரீடசையில பாசான சேதி கேட்டு மூன்று பெணகள் கொண்ட முறைமாமன் தந்திரமாய் அழைக்கையிலே நானும் கொழும்புக்கு மேற்படிப்புக்கு போனேனடி கிரிபாத்தும் பொல் சாம்பலும் தந்து ஊட்டி வளர்த்த தாய் மாமன் வங்கி வேலை கிடைத்தும் வளைத்துப்போடக் கதை விடடார். மூத்த மச்சாளும் மூலைக்குள் நின்று முழு நிலவாய் தெரிகையிலே பாவி மனம் பாசமாய் அலை பாய்ந்தது. காலம் குடியும் குடும்பமுமாக போகையிலே 2022 பிறந்தது . சமைக்க காஸ் இல்லை மோடடார் சைக்கிள் ஓட பெட்ரோல் இல்லை பிரபாகன் …

  17. இறுதியில் கிடைத்த உனதன்பு இளைப்பாறிக் கொண்டு இருக்கிறது இதயத்தில்.... சரவிபி ரோசிசந்திரா

  18. பக்கத்துல நீயிருந்தும் பாவிமனம் பாக்கல கண்ணுக்குள் நீரிருந்தும் காணாமல் தூங்கல பாசம் வெச்ச நேச மச்சான் பேசாம போவதேன் உள்ளுக்குள் உன் நெனப்பு உறங்காம விழிப்பதேன் உன்னோடு வாழ வழியில்ல உன் நெனப்ப மறக்க முடியல எங்கே நான் செல்ல தெரியல என் நேசம் ஏனோ! புரியல ஒத்தச் சொல் சொன்னாயே உள்ளத்துல ஒசுரா நின்னாயே எங்கே நீ சென்றாயோ? என்னை நீ மறந்தாயோ! நேசம் வெச்ச ஆசை மச்சான் என் நெனப்பு பேசலையா! சுவாசிக்கும் காற்றும் என் மனவலியச் சொல்லலையா? சரவிபி ரோசிசந்திரா

  19. கலைந்த ஆடையை உடுத்திக் கொள்ள மறுக்கிறது அப்பால்... சற்று தாமதமாக வந்தால் பொங்கி வழிகிறது முழு ஆடை... தெரியாதுபோல் சில நேரம் தெரிந்ததே தெரியாமல் போகிறது பலநேரம். .. சரவிபி ரோசிசந்திரா

  20. பாதைகள் மாறினோம் ஆனால் ஒரு வழியாய் இணைக்கிறது வாழ்க்கை... பயனற்ற யாக்கையை பயன்படுத்தி வீடுபேறு அடைவது பேரறிவின் நிலை மூலம் அறிந்த பின் முக்தி கிடைப்பது முதிர்ச்சி நிலை... சரவிபி ரோசிசந்திரா

  21. உன் புகைப்படத்தை ஓராயிரம் முறை பார்த்து இருப்பேன் ஏனோ நீ இன்னும் பார்க்கவில்லை என் குறுஞ்செய்தியை காத்திருந்தால் காதல் அதிகரிக்கும் என்று நானும் கூட சிலாய்த்துப் பேசியது உண்டு என் தோழியின் காதலுக்கு தூது போன நாட்களில் தலைவலியும் வயிற்றுவலியும் தனக்கு வந்தால் தெரியுமென அப்போது தெரியாமல் போனது ஏனோ! நீ இவ்வளவு இறுக்கமாய் இருக்கிறாய் இம்மியளவும் மாறாமல் உன்னை நினைத்து உண்ணவும் முடியாமல் உறங்கவும் இயலாமல் விழித்துக் கொண்டு இருக்கிறேன் கோட்டானாய் நள்ளிரவில் நீ புரிந்து கொண்டது இவ்வளவு தானா? என நினைத்தால் நெஞ்சம் பஞ்சாய் வெடிக்கிறது என்ன செய்ய நீயும் கொள்கையின் வாரிசு தானே! உன் கொள்கையை காதல் களவாடுமென நினைத்தேன் மாறாக கொள்கை களவாடியது…

  22. நாட்களைக் கணக்கிடும்... --------------------------------- பிணங்களின் மேல் நின்று ரணங்களின் ஊற்றுகளில் நாட்களைக் கணக்கிடும் அதிகார அரசுகள்! அதிகாரப் பசிக்கு இரையாகும் மக்கள் சாவுகளைக் கணக்கிட சக்தியற்று நடைபிணங்களாய் தினறும் அவலம்! உலகப் போட்டியிலே உயிர்கள் கரைந்தழிய ஆயுத உற்பத்தி ஆலைகள் ஓய்வற்று இயங்கி புதிய ஆயுதங்களை விற்றுப் பெருத்தல் ஒருபுறமும் சோதித்துப் பார்த்தல் மறுபுறமாய் மனித உயிர்கள் மடிகின்றன! மனித வளமழிந்த இயற்கை வளச்சுரண்டலில் தமது நலன் தேடும் தேசங்களே கூச்சமென்பதே இல்லையா(?) இக் கொடுமைகளை நிறுத்தும் எண்ணம் உங்கள் மனங்களில் வராதா மனித வாழ்வை மண் மேடாக்கிவிட்டு மனித உரிமையென்று மேசையில் வி…

  23. வாழ்க்கை ஒன்றும் பாடத்திட்டம் அல்ல அப்படியே படித்துப் படியெடுக்க அது ஒரு இனிய கலை கற்க பணம் தேவையில்லை தெளிந்த நல்மனமே தேவை... சரவிபி ரோசிசந்திரா

  24. எல்லாவற்றிலும் முழுமை காண விரும்பும் நாம் தான் பாதி வாழ்க்கையை தொலைத்துவிடுகிறோம் முழுமையாய்... சரவிபி ரோசிசந்திரா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.