Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைக் களம்

கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. வாழ்வின் கவிதை - வ.ஐ.ச.ஜெயபாலன் - LIFE'S POEM - BY JAYAPALAN - Translated by Chelva Kanaganayakam . (Wilting Laughter) . நீர்க்கரையின் கோரையிடை பாம்பின் கண்கள். புல்பூத்த தட்டானில் மயங்கும் தவளை. துருதுருத்து மோந்தபடி கீரிப்பிள்ளை. பசுமை இனிக்க மான் கிழை வரும் தடத்தில் விரிகிறது மனிதன் கண்ணி. அச்சத்தில் சாகாதவை வாழ்கிறது இக்கணம். என்றும்போல் மருதமரம் செழிக்க ஊட்டியும் வேர் அறுத்தும் நகர்கிறது பாலி ஆறு. . The snake eyes in the river bank the frog entranced by the flying insect; a sniffing mongoose, scurrying; on the deer's green path a human trap spread out; that which is fearless lives; the PALI r…

  2. வாழிய சென்னை - ஜெயபாலன் . மீண்டும் ஊரடங்கு. கொலம்பசுகள் கிராமங்களைத் தேடி கப்பற் பாய்களை விரித்தனர். ஏனையோர் கான்கிரீட் பொந்துகளுள். கொரோனாவையும் காவலரையும் தவிர வீதிகளில் யாருமில்லை என்கிறார்கள். மாலைக் கருக்கலில் நிழற்சாலைகளூடு பெசன்ற்நகரை சுற்றுகிற நான்கூட மொட்டைமாடியில் எட்டுப் போட்டபடி. ஜப்பான் குண்டுவீச்சுப் பீதியில் கூட சென்னை இப்படி முடங்கியதில்லையே. . கீழே தெருவில் வெண் பூஞ்சிரிப்பை இழக்கிற வேம்பு பிஞ்சுகளால் நிறைகிற அழகை பறவைகள் பார்த்துச் செல்கின்றன. சாலை ஓர மரங்களின்மீது குச்சியோடு காகங்கள் பறக்க கிளர்ச்சியடைகிற ஆண் குயில் ”கூடு கட்டி முடியப்போகுது…

    • 8 replies
    • 706 views
  3. நான் எனும் நான் ------------ நான் இன்னும் எனக்கும் நானே சொல்லாத வார்த்தைகள் என்னிடம் உள்ளன அந்த வார்த்தைகளின் அடியில் தேங்கி கிடக்கின்றது பெருங் காடென விரியும் துரோகம் நான் எனக்கு எழுதாத சொற்கள் நிறைய உள்ளன அதன் உச்சரிப்புகளில் மறைந்து கிடக்கின்றன நான் பலரை தூற்ற நினைத்த வசவுகள் நான் பார்க்க விரும்பாத பல பக்கங்கள் உள்ளன அதன் வரிகளில் நிறைந்து கிடக்கின்றன இரக்கமற்ற நினைவுகளும் ஈரம் காய்ந்த என் உணர்வுகளும் நான் கேட்க மறுக்கும் பாடல்கள் உள்ளன தன் வரிகளில் கண்ணீரையும் துரோகங்களையும் காட்டாறு எனப் பாயும் தோல்விகளின் வரிகளையும் சுமந்த படி நான் பார்க்க விரும்பாத ஒரு முகம் எனக்குள்ளது அதன் அத்தன…

  4. என் அன்பு யாழ் இதயங்களுக்கு.. தமிழ்நாட்டின் பிரபல ஓவியர் “மாருதி”அவர்களின் ஓவியம் சிறுவயதிலிருந்தே எனக்குப் பிடிக்கும். அவர்களின் இந்த உயிர்ப்போடிருக்கும் ஓவியநாயகிக்கு! படம் சொல்லும் கவிதை..! ********************** கொஞ்சிடும் கெஞ்சிடும் பொன்னழகே கொவ்வையின் பழந்தந்த மென்னுதடே மிஞ்சிடும் மேனியின் இருகனி ரசமே மிஞ்சாத இனிமையின் கொடியிடையே! கொத்தி இழுக்கின்ற மூக்குத்தி பூவே குறும்புகள் செய்கின்ற கண் இரு விழியே கருமேகச் சுருள் தந்த காதோர முடியே காலோடு கவிபாடும் கொலிசின்ரஒலியே! கரைதொட்டு பின் திரும்பும் கனிவான அலைபோல்-கால் தொடை பட்டு மேல்படரும் கரை போட்ட உடையே! கலகலக்கும்…

    • 5 replies
    • 3.4k views
  5. புலராத பொழுதென்று எதுகும் இல்லை கடக்காத துயர் என்று யாதும் இல்லை முடியாத பகை என்று ஒன்றும் இல்லை கூவாத குயில் என்று எங்கும் இங்கில்லை ஒரு நாளும் மறையாத ஒளி வேண்டினேன் ஒரு கோடி தவம் இங்கு நான் செய்கிறேன் ஆனந்த யாழோடு சுரம் தேடுறேன் அதனோடு தனியாக இசை மீட்கிறேன் அறமே தான் வாழ்வாக அதைத் தேடினேன் ஒரு போதும் குனியாத நிலை வேண்டினேன் அறிவோடு ஞானங்கள் தினம் தேடினேன் என்றும் யார் என்று எனைத் தேடினேன் கனவு காணாத மனிதரென்று எவருமில்லை காதல் பேசாத மொழி என்று எதுகுமில்லை காலம் சொல்லாத கதை என்று எதுகும் இல்லை கவிதை இல்லாத உலகு என்று இருப்பதில்லை சிற்பி செருக்காத சிலை என்று ஒன்றும் இல்லை சலங்கை ஒலிக்காத சுரம் என்று யாதும் இல்லை …

  6. வையகம் உள்ளவரை வாழ்ந்திடுவாய்! ----------------------------------------------------- நூற்றாண்டைத் தொட்டுவிட்ட கவிதைகளின் பயணத்திலே யாராரோ வந்தாலும் போனாலும் ஊரெங்கும் ஊர்வலமாய் கவிபாடி நின்றாலும் புதுக்கவிதை பாடியெங்கும் புதுமைக் கவியானவனே யுகமெங்கும் புகழ்சூடி வரலாறாய் வாழ்கின்ற புதுமையனே! பெண்ணென்றும் ஆணென்றும் வேற்றுமைகள் இல்லாத உலகொன்றைக் காண்பதற்காய் உன்சொற்கொண்டு போர்தொடுத்து விடுதலையின் முரசறைந்தே உலகின் கூன் அகலும் நிலையைக் காண்பதற்காய் வைரநிகர் வார்த்தைகளால் உரைத்தாய் உய்யும்வகை அசைத்தாய் இவ்வுலகை! பன்முகத் திறன் கொண்டாய் புரட்சிகர மனம் கொண்டாய் அநீதிகளைக் கண்டெழுந்தே அறைகூவல் விடுத்தவனே நின் எழுத்துகளால் அரண…

    • 6 replies
    • 902 views
  7. பொருள் விசையும் போலத்தான் மனிதரும் காதலும்❤❤❤ இரு பொருட்களாகிய ஆணும் பெண்ணும் ஒரு நேர்கோட்டில் சீரான வாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது விசையாகிய காதல் பொருட்களாகிய ஆணையும் பெண்ணையும் அவர்களது சீரான வாழ்க்கை முறையிலிருந்து மாற்ற முயற்சிக்கும் தள்ளும்,இழுக்கும்,வீழ்த்தும் அதுவே காதல்🤣 எந்த ஒரு விசையாகிய காதலுக்கும் சமமான எதிர் விசையாகிய காதல் உண்டானாலே அது வெற்றியளிக்கும் ஆணாகிய பொருளுக்கும் பெண்ணாகிய பொருளுக்கும் சமமான எதிர் விசையாகிய காதல் உருவாகினாலே அது நிலைக்கும் இல்லையெனின் ஆணோ பெண்ணோ ஏதோ ஒரு பொருளை விசை எனும் காதல் ஒருதலைக் காதல் எனும் கவலைக் கிடங்கில் இழுத்து வீழ்த்தும்,தள்ளும்🙄 நிறைகளை மட்டுமே கண்டு…

  8. பிறத்தல் என்பது புண்ணியமானதே வாழ்தல் என்பது பாவமானதே இறத்தல் என்பது தவமானதே பாவத்தில் இருந்து விடுபடும் தவமாய் இறப்பினைப் பார்த்தால் இறப்பும் இங்கு மகிழ்வானதே! துன்பத்தில் துவள்வதும் துளிர்ப்பதற்காகுமே தோல்வியால் வீழ்வதும் எழுவதற்காகுமே துவள்வதும் வீழ்வதும் வாழ்வதற்காகுமே என எண்ணித் துணிந்தால் தோல்வியும் இங்கு அழகானதே! துணை வந்த உறவும் தொலைந்து போனாலும் தோள் கொடுத்த தோழமையும் விட்டு விலகிப் போனாலும் நடந்த நினைவுகளோடு கடந்து செல்ல பழகிக்கொண்டால் தனிமையும் இங்கு துணையானதே! துன்பம் என்று ஒன்றும் இல்லையே இங்கு துவண்டு போக தேவை இல்லையே நிஜம் என்று ஏதும் இல்லையே இங்கு உன் நிழலும் கூட உனக்குச் சொந்தமில்லையே! பா…

  9. Started by தமிழ்நிலா,

    மௌனம் எனும் அறைக்குள் விருப்பு வெறுப்பு எனும் இரண்டு பேரை அடைத்து கர்வம் எனும் பூட்டினால் பூட்டப்பட்டிருக்கின்றது விருப்பும் வெறுப்பும் யார் பெரியவர் எனும் விவாதத்தை தொடங்கி வாக்குவாதமாக்கிக் கொண்டிருந்தனர் மௌனம் எனும் அறைக்குள் பேரிரைச்சல் கேட்கத் தொடங்குகின்றது தனிமை என்னும் நெருப்பு கர்வம் எனும் பூட்டின் சாவியை உருக்கிக் கொண்டு இருக்கின்றது தனிமை எனும் நெருப்பினால் கர்வம் எனும் பூட்டின் சாவி உருகி காணாமல் போனால் ஓர்நாள் மௌனம் எனும் அறை திறக்கப்பட முடியாமல் விருப்பு வெறுப்பு எனும் இருவரின் வாக்குவாதத்தால் கர்வம் எனும் பூட்டு வெடித்துச் சிதறும் விருப்போ வெறுப்போ பெரியவர் வெளியேறுவார்!😆 -தமிழ்நிலா.

  10. Started by uthayakumar,

    மரம்- பிறக்கும் போது தொட்டிலானது வாழும் போது கட்டிலானது இறக்கும் போது பெட்டியானது எரிக்கும் போது நெருப்புமானது மரம் என்று தான் இருந்தேன் மனிதன் பேசாத அன்பும் அறமும் மரங்கள் பேசியது மடியில் ஏந்தி நிழலும் தந்தது மரம் இல்லையேல் மனிதன் இல்லை. பா.உதயன்✍️

  11. Started by தமிழ்நிலா,

    வாய்மையின் பாதை யாவும் தீயினால் ஆன தன்று நோக்கினில் பிழையை வைத்துப் நோக்கிடும் மூடர் கூட்டம் வாய்மையைக் கேலி பேசி நாளுமே வாதம் செய்வார் தூய்மையாய்க் காணி னாங்கே சீர்மையாய் வாய்மை ஒன்றே! காலமும் கடந்த பின்னே காசினி உன்னை வாழ்த்தும் சீலமே கொண்ட கோவாய்ச் சிறப்புற உன்னைப் பாடும் கோலத்தில் வறுமை கண்டும் கொள்கையில் மாறலாகா ஆல மரத்தின் வேர்கள் ஆகுமே வாய்மை இங்கே! பொய்மையே வென்றிடற் போல்ப் போலியாய்த் தோற்றம் காட்டும் வாய்மையோ தோற்றாற் போல் வாலினைச் சுருட்டி நிற்கும் ஆய்ந்திடின் உண்மை ஆங்கே ஆதவன் கதிராய்த் தோன்றும். ஏய்ப்பவர் வென்றார் அல்லர் என்றுமே நின்றார் அல்லர்! ஆட்பலம் பணப் பலத்தால் ஆட்சியின் அதிகாரத்தால் வனைக…

  12. கோடி வருசமாய் காத்த அவள் அழகை கோடிகளில் ஒருத்தியாய் கோலமிகு கோளமவளை விண்ணியல் கணக்கில் நேற்று முளைத்த இருகால் நடை மூளை பெருத்த கூட்டம் குத்திக் குடைந்து குதறி கொட்டி வெட்டி கொழுத்தி சீரழிச்சு அவள் சீர்குலைத்து - இன்று சீமான்களாய் சீமாட்டிகளாய் சீமையில் சபை அமைத்து சிந்திக்கிறார்களாம் சீரமைப்போம் மீண்டும் என்று. அவலம் தந்தவனுக்கு அவலத்தை கொடுக்கும் கொடியவள் அல்ல அவர்களாய் தேடிக் கொண்டதுக்கு அவளாய் என் செய்வாள்..?! பெருத்த மூளைக்குள் பொருமிய அறியாமைக்கு அவளாய் என் செய்வாள்..?! சிந்திக்க முடியாத சிறுமைகளை சீமான்களாய் சீமாட்டிகளாய் வரிந்து நிற்கும்…

  13. எம் நாட்டின் இறையாண்மை போனதெங்கே எம்மவர்கள் பலருழைத்து ஏற்றுவித்த வல்லாண்மை மங்குதிங்கே மதியற்றோர் கொண்ட மடத்தாலே! நம் நாடென்ன நாடிதென நாவுரைக்க கூசுதிங்கே நாடி வரும் நல்லோர் நன்கறிந்து கூடினாலும் நாடிங்கு எழுவதெந்நாள் நாணுதிங்கே நாணமற்றோர் கொண்ட நடப்பாலே! நாம் நாடுகின்ற நாடாள்வார் நாட்டிலெங்கே நாடிய மக்கள் நலமெங்கே நாம் நாடுகின்ற நாடொன்று நாளாகத் தேய்வதிங்கே நாடற்றோர் நாம் கொண்ட சாபத்தாலே! தனித்த தமிழின் பெருமையறிந்த தமிழரங்கே தடையை உடைத்தாலே மனித்த பிறவி பயனறிந்த மனிதநேய தமிழரங்கே மடையை உடைத்தாலே தனித்த நாடொன்று தனியாயங்கே அமைந்திடுமே தன்மானத் தமிழர் கொண்ட தரணியிலே! நாட்டிற்காய் தமையீய்ந்த நாயகர்களின் அறத்தையிங்கே சீரான உணர்வுகளை சீர்மிகுந்த நற்…

  14. மாறி மாறி உருவெடுத்து வருகுதடா கொரோனா- ஊசி அடித்து உவத்திரவ கொரோனாவை துரத்தி விடுவம் என்றால் ஊசியார் கூட அவர் வாழும் காலம் வலுவிழக்க சண்டை போட முடியாமல் கொண்டு போன ஆயுதமும் முடிஞ்சு போக ஒளித்திருந்த கொரோனா ஓடி வந்து திரும்பக் குந்துது அட பாடுபட்டு ஒன்றுக்கு இரண்டு ஊசி போட்டும் தேடித் தேடி வருகுது திரும்பத் திரும்பத் கொரோனா மாறி மாறி உருவெடுத்து வருகுதடா கொரோனா போன கதையைக் காணோம் இன்னும் இனி ஆளுக்கு ஒரு ஊசி என்று அடுத்தடுத்து போட்டு வாழும் வரை இது தானோ ஆருக்குத் தெரியும். பா.உதயன் ✍️

  15. கடமையிடமும் கண்ணியத்திடமும் இலட்சியத்திடமும் போராட்டத்திடமும் துணிச்சலிடமும் வெற்றியிடமும் நெருங்கி இரு! கடனிடமும் துரோகத்திடமும் ஏமாற்றத்திடமும் பலவீனத்திடமும் பயத்திடமும் குற்றத்திடமும் விலகி இரு! எளிமையிடமும் தூய்மையிடமும் பொறுமையிடமும் விடாமுயற்சியிடமும் அன்பிடமும் அறிவிடமும் நிஜத்திடமும் நல்லொழுக்கதிடமும் நெருங்கி இரு! பொறாமையிடமும் மூட நம்பிக்கையிடமும் அறியாமையிடமும் தீய ஒழுக்கத்திடமும் கோழைத்தனத்திடமும் கஞ்சத்தனத்திடமும் தற்பெருமையிடமும் பேராசையிடமும் விலகி இரு! உரிமையானவர்களிடமும் உரிமைகளை உணர்வுகளை மதிப்பவர்களிடமும் தேவையான உறவுகளிடமும் தேவையான உணர்வுகளிடமும் நெருங்கி இரு! உரிமை இல்லாதவர்களிடமும் உரிமைகள் உணர்வுகளை உதாசீனம் செய்பவர்களிட…

  16. இன்னும் அவர்கள் இசைந்தும் அசைந்தபடியும் தான் இருக்கின்றனர். பெருங்குரலெடுத்து அழமுடியாத அவலம் கொண்டவர்கள் தினமும் மகிழ்வாய்க் கண்மூடித் தூங்கி அறியாதவர்கள் சிலநாட்களேனும் பாரங்களின்றிப் பசியாற முடியாதவர்கள் பசிக்கும் வயிறைப் பானைத் தண்ணீரில் நிரப்பியபடி பிள்ளைகள் வயிற்றை நிரப்பத் துடிப்பவர்கள் கோடை வெயில் கொடுமழை கண்டும் கால்கடுக்கத் தினம் கனவு நெய்பவர்கள் கணவனின் அணைப்பின்றி மனது தகிக்கையில் கண்டவர் பார்வையில் கசங்கித் துடிப்பவர்கள் அடிமுடி தேடியும் அகப்படா அன்பின் அகலமும் நீளமும் ஆழமும் அறியாத எரிதளலின் எச்சமாய் இருப்பவர்கள் இடர்கள் கடந்தும் கடக்காததுவாய் தொடரும் துயரில்…

  17. ஒரு கல்லுக்கும் உண்டு சுதந்திரம் ஒரு மரத்துக்கும் உண்டு ஒரு வார்த்தையிலும் உண்டு சுதந்திரம் பறவையின் இறக்கையிலும் உண்டு சட்டம் சொல்கிறது விதி என்று... அழிந்து போகும் வரை உடல் இருக்கும் போவதும் வருவதும் என நுரைத்து வரும் குமிழிகள் நொடியில் மறைவது போல இருக்கும் சுதந்திரம் அர்த்தமற்றது... மனம் அது மிகை கொள்ளாது ஓர்நாள் நிலைபெற்ற வழியில் வெடித்து வெளியே நடமாடும் கை விலங்கை உடைத்த பின் அது மாறும்... ஒன்று உள்ளே போகும் அல்லது வெளியே வரும் உலகம் புதிதென நம்பும் எல்லாவற்றையும் அறியத் துடிக்கும் மனம் வீசியதில் சிக்கியதில் தொடங்கும் கவனம்... கடந்த காலத்தின் அனுபவம் மனதோடு கலந்து விட்டதால் அது தான் முன்னால் வருகிறது இருப்பதோடு கலக்கிறது தடுமாறுகிறது மனம் ஆனால் …

  18. என் அன்பு யாழ் இதயங்களுக்கு.. எனி வரும் காலம் பற்றி முளித்திருக்கவே வந்த கனவிது. இப்படியும் நடக்கலாம்..! ***************** வேலை ரோபோக்கள் வீடெங்கும் திரியலாம் விரும்பிய சமையலறை காணாமல் போகலாம் மூன்று வேளையுணவும் மாத்திரையாகலாம் முளித்திருக்க கதிர்வீச்சால் உறுப்பும் திருடலாம். சந்திரன் செவ்வாய்க்கு ரொக்கட் பறக்கலாம் சரித்திர தேடல்கள் குழி வெட்டிப்புதைக்கலாம் சுவாசிக்கும் காற்றும் காசுக்கு விற்கலாம்-எம் சுயசரிதை சொல்ல சிப்பொன்றும் வைக்கலாம். பிறப்பு வீதத்தை ஐம்பதால் குறைக்கலாம் பிறந்த பின் வீரத்தை கோழையாய்யாக்கலாம் வயோதிப மரங்களை ஊசியால் சாய்க்கலாம் வயது வரமுன்னே பெரியவர் போலாக…

  19. எவரை எவர் ஏமாத்துகின்றனர் வளமை போலவே இந்த முறையும் இந்திய அதிகாரி அதே 13 க் கதையை சொல்லிப் போனார் எத்தனை முறை சொன்னார்கள் என்று எனக்கு ஞாபகம் இல்லை ஆனால் முப்பது வருட கதை இது இத்தனை வருடமாக இந்தியாவை ஏமாத்த இலங்கைக்கு மட்டும் தெரியும் இது சிங்கள இராஜதந்திரம் முப்பது வருடமாய் ஈழத் தமிழனை ஏமாத்த இந்தியாவுக்கும் இலங்கைக்கும் மட்டும் தெரியும் இது இன்னும் ஒரு இராஜதந்திரம் இனி வரும் காலமும் இன்னும் ஒரு பொருளாதார ஓப்பந்தம் எழுத இந்திய அதிகாரிகள் மீண்டும் வருவார்கள் அப்பவும் இன்னும் ஒரு முறை நினைவூட்டுவர் அந்த 13 க் கதையை சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் கதை போலே மீண்டும் வேதாள…

  20. உடைந்து போய் கிடக்கிறது தமிழர் தலைமை- உடைந்து போய் கிடக்கிறது தமிழர் தலைமை ஒட்டவும் முடியாமல் உயர்த்தவும் முடியாமல் கட்சிக்கு ஒரு கொள்கை இல்லை ஆளுக்கு ஒரு கொள்கை அவர் அவரே தனித் தனியே ஆனால் வீட்டுக் கட்சி என்று மட்டும் பெயராம் வீணாய்த் தான் முடிஞ்சுபோச்சு கதையாம் ஈழம் கேட்டு வந்தவர்கள் எல்லாம் தாளம் மாறிப் பாடுறாங்கள் இப்போ உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புலிக் காச்சல் பூனைக் காச்சல் இன்னும் விட்டுப் போகல்ல புதுசு புதுசாய் கதையை மட்டும் அளந்து தள்ளுறான் ஐயா சம்மந்தர் தம்பி சுமந்திரனோடு தனி வழியாம் அடுத்தவரின் சொல்லு ஒன்றும் கேட்பதில்லையாம் ஆங்கிலமும் சட்டமும் அவர்கள் மட்டும் …

  21. கருத்துக்கள உறவுகள் பதியப்பட்டது 36 minutes ag திறமைகள்..! ********** ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒரு திறமையுண்டு-மனிதா உன் திறமை எங்கே? கசக்கினால் இறக்கும் கறையான்கூட அதன் உமிழ்நீரில் மண்குழைத்து அடுக்குமாடி கட்டி அதற்குள் வாழுது புற்றெனும் வீட்டில். ஓரிடத்தில் இருந்தே வலை பரப்பி வீடு கட்டி வந்து விழும் உணவை உண்டு உயிர்வாழும் சிலந்தி. உயரத்தில் இருந்தும் ஒழுகாமல் தேனை அ…

  22. அனந்தியே.... அன்புக்குரிய... அரசியே.... அகிலத்தையும்.... அண்டதையும்.... அதிரவைக்கும்.... அழகியே..... அன்னமே....... அன்பும்... அடக்கமும்.... அங்கங்களாய் .... அமைந்த....... அதீத.... அற்புதமான.... அபூர்வ..... அமுதே..... அன்னையின்..... அனுமதியோடும்... அயலவரின்.... அரவணைப்போடும்... அம்மனின்.... அலங்காரமாய்.... அவையில்.... அமர்ந்திருப்பவளே.... அன்னையானாய்.. அப்பனானேன்.... அருமையான.... அரவிந்தனை.... அவதரித்தாய்... அவனியில்.... அரண்மனை..... அரசரானோம்..... அன்பானவளின் அங்கம்.... அவதியாகி.... அசையாது.... அடங்கிட.... அல்லல்பட்டு... அமைதியானது.... அடிமடியில்.... அவ்வுயிர்..... …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.