கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
773 topics in this forum
-
கில்லாடி நாடு கெட்டுப் போனாலும் நமக்கென்ன என்றே தன் வீடு மட்டும் வாழ விதிவகுத்த கில்லாடி தொண்ணூறைத் தாண்டி தொண்டு கிழமானாலும் மண்ணாசை மாறாதெம் வாழ்வழிக்கும் கில்லாடி ஈழத்தமிழர்களை இனக்கொலைக்கு ஆளாக்கி வாழத்தன் சொந்தம், வழிவகுத்த கில்லாடி. மந்திரிகளாக்க மகள் மகன்மார் பேரர்களை செந்தமிழ் ஈழத்தைச் சிதைத்திட்ட கில்லாடி …
-
- 2 replies
- 1.1k views
-
-
குட்டிக் கவிதைகள்..! உணவு..! உணவை அறிந்தே உண்ணுவோம் உலகின் உயர்வையே எண்ணுவோம். விவசாயி..! கரையழுது நுரை தள்ளுவது-ஒருபோதும் நடுக் கடலுக்கு தெரிவதில்லை. அன்பு..! அறுக் கமுடியாத இரும்புச் சங்கிலி அறுந்துடைந்தால் ஒட்டமுடியாத கண்ணாடித் துவள்கள். துர்நாற்றம்..! பொறாமைச் செடியில் பூக்கும் இதயம் அன்பை அழிக்கும் மணமே வீசும். அன்புடன் -பசுவூர்க்கோபி-
-
- 6 replies
- 1.4k views
-
-
குப்பையிலிருந்து குப்பை --------------------------------------- நல்ல எழுத்தா........... அதை யார் வாசிப்பார்கள் ஏதாவது கேளிக்கையாக இருந்தால் சொல் என்றோம் முடிவு: இன்றைய எழுத்து எதுவும் நாளை நிற்காது. கலைப் படமா.................. இருக்கிற பிரச்சனை போதாதா ஜனரஞ்சகமா ஏதாவது வந்தால் சொல் என்றோம் முடிவு: வந்தது கங்குவா. அரசியல்வாதியா............ அவர் நல்ல பகிடி ஆளும் பார்க்க நல்லா இருக்கின்றார் அவரே பிரதிநிதி என்றோம் முடிவு: எல்லாமே பகிடி எதுவுமே வெற்றி இல்லை. கருத்துச் சொல்கின்றாயா......... அதெல்லாம் போதும் ஏதாவது சிரிக்க சிரிக்க இருந்தால் சொல் என்றோம் …
-
- 7 replies
- 690 views
-
-
யுத்தமும் அழிவும் அநீதியும் அவலமும் ஆக்கிரமிப்பும் பசியும் பட்டினியுமாக மனிதம் மறைந்துபோன உலகத்தின் மேனி சீழ் பிடித்து ஒழுகிக்கொண்டிருக்கும் போது உண்மைகளையும் சத்தியங்களையும் எழுதுங்கள் உலகத்தின் ஒரு மூலையில் ஒரு ஒரமாக நின்று அழும் குழந்தை எப்படியாவது வாழ்ந்து தான் ஆகவேண்டும் என்ற ஒரு சிறு நம்பிக்கையுடன் .
-
- 0 replies
- 1.1k views
-
-
குறளோடு கவிபாடு / "குறள் 1175" "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் கண்களும் பேசின காதலையும் தந்தன வண்ண உடலின் கவர்ச்சி ஈர்த்தன ஆண்மை கண்டு அவளும் நெருங்கினாள் கண்ட கோலம் காமம் கொடுத்தன!" "பெண்ணின் அழகில் மயங்கி நின்றவனோ எண்ணம் எல்லாம் அவளே என்றவனோ கண்ணீர் தந்து உறவு மறந்து அண்டம் எங்கோ பிரிந்து போனானே கண்ணனை நினைத்து துயிலும் மறந்தேனே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 1.1k views
-
-
குறள்மொழி இன்பம் / ★யாம்◆ வேண்டும்◆ கௌவை★ / குறள் 1150 "வம்பு பேசும் என் ஊரே வசனம் அறிந்து அளவாய் பேசு வண்டுகள் மொய்க்கும் மலர் நானல்ல வசவி ஆக என்னை நினைக்காதே!" "வட்டம் போட்டு குந்தி இருந்து வஞ்சம் இன்றி கதை பரப்பி வதுகை ஆக என்னை மாற்ற வரிந்து கட்டிய அலருக்கு நன்றி!" "வயல் வெளியில் என்னை சந்திக்க வனப்பு மிக்க என் காதலன் வருவான் என்னை துணை ஆக்க வருந்த வேண்டாம் வாழ்த்துங்கள் அப்பொழுது!" "வளமான வாழ்வு எமக்கு அம…
-
- 0 replies
- 906 views
-
-
குளிக்கும் வேலை ---------------------------- ஏதாவது புதிய யோசனைகள் உங்களுக்கு தோன்றுகின்றதா என்று கேட்டார் மேலாளர் அவர் எழுதியிருந்தவை மட்டுமே தெரிந்தன மீறி ஒரு அணுக் கூட தெரியவில்லை இரண்டு நிமிடங்கள் யோசித்துப் பாருங்கள் என்றார் மௌன அஞ்சலி செலுத்துவது போல மௌனமாக இருந்தோம் நாங்கள் இரண்டு நிமிடங்கள் முடிய இன்று மதியம் என்ன உணவு என்று முடிவெடுத்து இருந்தேன் பரவாயில்லை குளிக்கும் போது கூட புது யோசனைகள் தோன்றும் அவருக்கு அப்படித்தான் தோன்றுகின்றன என்றார் நாளை கூட சொல்லலாம் என்றார் சட்டென்று ஒரு மின்விளக்கு எரிந்தது ஒரு இருபது வருடங்களின் முன் எனக்கும் இப்படித்தான் சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் தோன்றிக் கொண்டிருந்தன பின்னர் எப்பவோ அது நின்று போனது அன்று குளிக்கும் போ…
-
-
- 8 replies
- 494 views
-
-
குளிர்..... ----------------------- கதவுகளின் இடுக்குகளினூடாக கசிந்து வருகின்றது துருவங்களில் பயணித்த குளிரின் சாரல் கிளைகளினூடே தாவி ஏறுகின்ற குளிர் இலைகளின் விளிம்பில் உதிர்ந்து என் அறையெங்கும் வியாபிக்கின்றது வெளியே பூனை ஒன்று குளிரின் அரவம் கேட்டு தன் மீசைகளை ஒடுக்கி கதவுகளினூடே உள் நுழைகின்றது குளிர் எப்போதுமே இளமை காலம் ஒன்றில் கடந்து போன திருவெம்பாவை பாடல்களையும் வைரவர் கோவிலின் அதிகாலைப் பூசைகளையும் அந்தோணியார் கோவிலின் மார்கழி மாத இயேசு பிறப்பையும் நினைவுபடுத்திக் கொள்கின்றது இடையிடையே மார்கழி மழையில் நனைந்த நந்தியாவட்டை பூவின் வாசத்தையும் பவள …
-
- 14 replies
- 2.1k views
-
-
with Public ஏப்ரல் 2, உலக சிறுவர் புத்தக தினம் புத்தகங்கள் சிறார்களின் தனி உலகம் புத்தகங்கள் முடிவில்லா வசீகரம் எல்லையற்ற பேரானந்தம் புத்தகங்கள் கிடைத்தற்கரிய பொக்கிஷம் புத்தகங்கள் ஆர்வமுள்ள சிறாருக்கு அளவற்ற மகிழ்ச்சி தரும் புத்தகங்கள் …
-
- 0 replies
- 369 views
-
-
நேற்று(25.06.20) எங்கள் வீட்டில் இருந்து (நெதர்லாந்து) 20 கிலோமீற்றர் தூரத்தில்அமைந்துள்ள கெர்சன்பழமரத்தோட்டம் (நெதர்லாந்து மொழியில் Kers ஆங்கிலத்தில்Cherry) போய் நாங்களே புடுங்கி பழத்துக்கான பணம் கொடுத்து வந்தோம். வரும்போது ஊரின் பழய நினைவுகள் வந்து என்னை வாட்டியது… கெர்சன்பழமே?எனிக்கிடைக்குமா எங்கள் பழம்..! கைப்பான வேம்பதிலும் கனி மஞ்சல் பழம் இனிக்கும் வெய்யில் எரிகையிலும் வேம்பேறிப் பழம் தின்ற.. அக்கால நினைவு வந்து அழுகிறேன் இவ்வேளை. கரும்பனையின் பனம் பழத்தை “காடி”யினில் குளைத் தெடுத்து விரல் இடுக்கில் தேன் வடிய விரும்பி உண்ட.. அக்கால நினைவு வந்து …
-
- 18 replies
- 2.7k views
-
-
உன் இதயத்தில் நான் என்னை கொல்ல காதலை நிறுத்து ...!!! நீ கடந்து வந்த பாதை கவிதையானது காதலில் இணைந்த பெற்றோர் காதலை வெறுக்கிறார்கள் காதல் சிரிகிறது ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;780 +++++++++++++++ நான் .. காதலுக்காக ஏங்குகிறேன் ... நீ காதல் சொல்ல தயங்குகிறாய் ... வயிறு பசியில் அழுகிறது ... கண் கண்ணீருக்காக அழுகிறது .. மனம் காதலுக்காக அழுகிறது ... மன காயப்படும் போது ... யார் ஆறுதல் சொல்வார்கள் .. என்று எங்கும் மனம் போல் .. உன்னை தேடுகிறேன் ...!!! + கஸல் கவிதை ++++++++++++++++ இதயத்தை நானே வெட்கப்படுகிறேன் என்னை தூக்கி எறிந்து உன்னை வைத்திருப்பதற்காக .... உனக்காகவே வாழ்கிறேன் எனக்காக நீ எப்போது வாழ்வாய் ...? கடிகாரத்…
-
- 219 replies
- 26k views
-
-
கைக்கூ வடிவில்... நீண்ட இடை வெளிக்குப் பின் "அன்பு இதயங்களை" சந்திப்பதில் மகிழ்வடைகின்றேன்.நன்றி ஐஸ் மழை கொட்டுகிறது நனைந்தவர்கள் எரிந்து சாகிறார்கள். “போதை” ************************************************* ஜாலியாக பஸ்களில் ஏறும் பிரயாணிகள் ஆவியாக்கி இறக்கப்படுகிறார்கள். “விபத்து” *************************************************** பட்ட மரமும் துளிர் விடுகின்றது பார்ப்பதற்கு யாருமில்லை. “முதியவர்கள்” ***************************************************** எரிவோம் என்று தெரிந்தும்நெருப்பை தலையில் கொட்டுகிறார்கள். “வடி” **************************************************** நச்சு மருந்து கடைகளாக மாறிவிட்டன “மரக்கறிச் சந்தை” **********************…
-
-
- 18 replies
- 691 views
-
-
-
- 0 replies
- 961 views
-
-
கொடிய கிருமி.!கொரோனாவா? என்னைவிட யாருமுண்டோ இங்கு மண்ணில் உயர்ந்த ஜாதி நானே மற்றவர் எல்லோரும் கீழ்ஜாதி தானே எண்ணத்திலூறிய வெறியர்கள் ஒருபால் கறுப்பு வெள்ளைத் தோலினை பிரித்து கசக்கி பூவினை எறிவதைப்போலே உலகநாடுகள் சிலவற்றில் அடிமையாய் உழைப்பை உறுஞ்சும் கூட்டமும் ஒருபால் ஏழை எளியோர் வாழ்வைச்சுறண்டியே ஏப்பம் விடுகின்ற முதளாளிக்கூட்டம் பணத்தை சேர்த்தே கோடீஸ்வரனாய் படைத்தவன்போலே நினைப்பவன் ஒருபால் மதங்கள் சொல்லும் அறிவுரை மறந்து மதம் பிடித்து மாக்களாய் அலைந்து-தன் மதம் ஒன்றே உலகில் பெரிதென… பிரபஞ்சம் மறந்து பிதற்றுவோர் ஒருபால் அணுவுலை நிறுவி ஆயுதம் குவித்து …
-
- 0 replies
- 497 views
-
-
ஒரு படைவீரர் இப்படி தன் நிலையைச் சொல்லியிருந்தார். இது அவரின் வார்த்தைகளே........... கொடுங்கோலின் கடைசிப் படைவீரன் ------------------------------------------------------------- என்னுடன் இருந்தவர்கள் என்னவானார்கள் என்று எனக்குத் தெரியாது சிலர் அந்தப் பக்கமாக போனார்கள் சிலர் இந்தப் பக்கமாக போனார்கள் நான் பிரதான தெருவுக்கு போக விரும்பினேன் அங்கிருந்து எந்த ஊருக்கும் போகலாம் பின்னர் என்னை யாருக்கும் தெரியாது அதன் பின் எனக்கு கவலையும் இல்லை ஒரு ஊருக்கு போனேன் பின்னர் இன்னொரு ஊருக்கு போனேன் எங்கும் மக்கள் கூட்டங்களாக கூடியிருந்தனர் அவர்கள் எல்லோரும் ஓடி விட்டனர் என்றனர் அழுத…
-
- 0 replies
- 433 views
-
-
கொண்டாட்டமே வாழ்வு. - ஜெயபாலன் * பருதியோடு எழுகவென பாடி பல்லுயிர்கள் கொண்டாடும் அதிகாலை. பூப்படைகிற முல்லை என் படுக்கை அறையுள் நுழைகிறாளா?. * எல்லோரும் வாழ்வோம் என்றபடி சன்னலைத் திறந்தேன். கரு முகில் அபாயா அணிந்த நம் முழுநிலவின் புன்சிரிப்பில் விடிகிறது வாழ்வு * என் சின்ன வயசு முழுவதும் முக்காடிட்ட சோனக மாமிகள் தந்த அறியப்படாத சிற்றுண்டிகளின் தேன் கமழ்ந்தது. * வளர் இளம் பருவத்தில் அபாயா அணிந்த அன்னை மேரியும் அம்மனும் ஒன்றென நம்பினேன். வாழ்வு பலவண்ன உறவுகளின் வானவில் என்பதை எப்படி மறந்தோம்? * மா முனிவன் ராமானுஜன் அபாயாவுடன் த…
-
- 2 replies
- 675 views
-
-
கொரணா விளைவு மரணாவஸ்தையில் தவிக்கும் உலக மனித குலத்தை மீட்டிடக் கொடிய கொரணா வைரஸை இல்லாதொழித்துக் கொண்டாடும் நாள் எந்த நாளோ. சுற்றம் கூடி அன்போடிருந்து சுகதுக்கங்களைப் பகிர்ந்து கொண்டு சற்றும் பயமே இல்லாதிருந்து சந்தோஷிக்கும் நாள் எந்நாளோ செல்லும் விருந்தை வாழ்த்தியனுப்பி சேரும் விருந்தை அன்போடழைத்து பொல்லாக் கொரணா இல்லா மகிழ்வில் பொழுதைக் கழிக்கும் நாள் எந்நாளோ? அந்த நாளிவ் அவனிக்(கு) உதிக்குமா? அனைவருமொன்றாய்ச் சேர்ந்திட வருமா? சிந்தையிலெந்தச் சந்தேகங்களும் சேராதுறவுகள் சிரித்திட முடியுமா? உற்றவர் கூடி உகுத்துக் கண்ணீர் ஊரின் புறத்தே தூக்கிச்செ…
-
- 4 replies
- 1.2k views
-
-
கொரன.. கொரன.. கொரனா கொரன..கொரன..கொரனா நீயும் ஒரு காதல் வைரஸ் தானா நீ ஒட்டிக்கொள்ளும் காதலன் நானா.. நுண் உலகின் ரதி நீ தானா.. உன்னை அணைத்துக் கொள்ளும் மன்மதனும் நானா கொரன கொரன கொரனா தும்மல் வந்ததும் வருது உன் காதல் தானா காய்ச்சல் வருவதும் சிக்னல் தானா கூட இருமித் தள்ளுவதும் கீதம் தானா.. கொரன.. கொரன.. கொரனா சுவாசப்பையெனும் பூங்காவில் ஊர்கோலம் தானா வில்லங்கமான உடல்கள் என்றால் ஊடல் தானா மரண ஓலம் பரிசும் தானா உடல் வில்லன்கள் வந்தால் காதல் முறிவு தானா உன் காதலின் சாவில் என் வாழ்வும் தானா. கொரன கொரன கொரனா உன் காதலின் தூது கழுவாத க…
-
- 1 reply
- 1.6k views
-
-
கொரோனா இப்போ கொஞ்சம் குறைஞ்சா போல கொல்லாது என்ற துணிவு வந்தா போல சோசல் மூமென்ட் என்று சும்மா ஒரு கதை விட்டிட்டு திரும்பவும் இப்போ தொடங்கியாச்சு ஆட்டமும் கூட்டமும் நாளும் பொழுதும் நல்லா நடக்குது வொட்க்கா அடி வெள்ளி சனி வந்தால் காணும் விடியவே கரிச்சு பொரிச்சு கடிக்க இரண்டு ரேஸ்ருக்கு என்று காரமாய் இறைச்சி பிரட்டி மனுசி கமலம் கூட கண்டிராம காலை விடிய இரண்டு போத்தல் எடுத்து காட்டாமல் ஒளிச்சு வச்சு விடிய விடிய நடக்குது கூத்து இன்னும் சிலர் தனிய இருந்து அடிச்சுப் போட்டு தண்ணி கொஞ்சம் தலைக்கு ஏற டெலிபோன எடுத்து வச்சு கதை வேற விடுவான்கள் ஆயிரம் புலி சிங்கத்தை அடக…
-
- 2 replies
- 444 views
-
-
கொரோனா என்ற ஓர் கொலைக்காரி-பா.உதயன் கொரோனா என்ற ஓர் கொலைக்காரி எம்மை கொடுமை செய்யப் பிறந்தாளா அடி தடியோடு திரிகின்றாள் அனைவரும் வீட்டுக்குள் பதுங்கின்றார் மேட் இன் சீனா என்கின்றாள் கடை தெரு எல்லாம் கிடக்கின்றாள் காணும் இடம் எல்லாம் விற்கின்றாள் காசு இல்லாமலும் தருகின்றாள் குழந்தை குஞ்சு என்று தெரியாமல் கட்டை கிழடு என்று காணாமல் காலனைப் போலே தினம் வந்து கயிறு வீசித் திரிகின்றாள் கொரோனா என்று ஒரு கொலைக்காறி எம்மை கொல்லத் தான் பிறந்தாளோ யாருக்கும் அடங்கா சண்டியரும் அவளுக்கு பயந்து பதுங்கின்றனர் அடுத்த வீட்டு அமீர் அண்ணை குடும்பம் ஆறு புள்ளை பிஞ்சோட பள்ளிக்கூடம் இல்லாம படுத்தும் தொல்லை தாங்காதாம் கொரோனா …
-
- 2 replies
- 914 views
-
-
தடுப்பூசி வரும் வரை..... தனிமைப்படுத்தலே மருந்து..... ! கட்டிப்பிடிக்காதே..... கால் கை கழுவி உள்ளே வா...... ! குடும்பத்தோடும் தனித்திரு.... கூட்டம் கூடி பேசாதே... ! கிடைப்பதெல்லாம் உண்ணாதே.... கீரை வகைகளை உண்...! இதை விட கொடியநோய்க்கு... கொரோனா ஒரு பயிற்சியாகும்...... !!! +++ கவிப்புயல் இனியவன் மணிபல்லவம் யாழ்ப்பாணம் " கவிதைகள் தொடரும் "
-
- 1 reply
- 843 views
-
-
BEYOND THE CORONA VIRUS கொரோனாவை தாண்டி. - வ.ஐ.ச.ஜெயபாலன் * மலர்கிறது முல்லை கமகமவென சுவர்க்கமாய் உயர்கிறதே என் மாடித்தோட்டம். கிருமியை அஞ்சி ஊரடங்கிய சென்னையின் மரண அமைதி அதிர கருவண்டுகள் இசைக்கிறது ”அஞ்சாதே தோழா” என்னும் பாடல். * அமேசன் காட்டுத் தீயையும் மிஞ்சி உலகை வேட்டையாடுதே கொரோனா . அடாது கொட்டும் வெண்பனியையும் வீழாவாய் கொண்டாடும் ஒஸ்லோ நகரும் முடங்கியதே. கூதிரில் தனித்த என் மனைவிக்கு பூக்களும் இல்லை. எனினும் எனினும் இடுக்கண் வருங்கால் நகைக்கும் புதல்வர்களை விட்டு வந்தேனே.…
-
- 4 replies
- 870 views
-
-
35வருடங்கள் சென்றாலும் மறக்கமுடியாத இந்தநாள்.. 15.05.1985 அன்று நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான்நோக்கி வந்த குமுதினிப் படகின் அன்றைய அரசின் கோரத்தாண்டவத்தினால் நீரினிலே நினைவிழந்த 36 உடன் பிறப்புகளுக்காக நினைவு சுமந்த எனது குரல் வடிவக் கவிதை தந்துள்ளேன். இந்தக்கவிதையை கேட்க click here <--
-
- 4 replies
- 1.3k views
-
-
15.05.2021 36 ஆண்டுகள் போனாலும் குமுதினிப்படுகொலையின் கோரத்தாண்டவத்தை எப்படி எம்மால் மறக்கமுடியும். இதுபற்றிய எனது உணர்வை துக்கத்துடன் பகிர்ந்து கொள்ளுகின்றேன் நன்றிகள்.
-
- 4 replies
- 1.3k views
-
-
கோடுகள் ஒன்பதின் வைகாசி வைகாசியில் அவனொருவன் பெற்றது ஒளி ஒளி அணைந்ததும் அதே வைகாசி - எங்கள் வீடுகளில் இன்னமும் ஏற்றவில்லை – காத்திருக்கின்றோம் நெஞ்சில் தீயுடன் மேல் நொந்து போயிற்றே என்றால் -மீண்டும் எண்பத்து மூன்றாம் மாப் புளிப்பது தோசையின் நலம் நாடி அணைத்த உலை - மீண்டும் கொதிக்க விறகை தள்ளும் நண்பா – நன்றி இன்னமும் ஏற்றவில்லை – காத்திருக்கின்றோம் நெஞ்சில் தீயுடன் இரு கோடுகள் சமன் செய் பாதைகள் பல கோடொன்றை சற்றே நீட்டினால் எல்லோரும் நலமே மறு கோட்டின் நுனியை சற்றே தட்டினாலும் முடிவு ஒன்றே இன்னமும் ஏற்றவில்லை – காத்திருக்கின்றோம்…
-
- 1 reply
- 1.4k views
-