கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
773 topics in this forum
-
பூச்சிய மாற்றம் --------------------------- வீட்டுக் கதவினூடு வெளியேறியதும் இன்னொரு நாடு வருகின்றது எத்தனை தடவைகள் கதவைத் திறந்து நான் போய் வந்தாலும் அது பழக்கமில்லாத இடமாகவே இருக்கின்றது அதனூடு என் நாட்டிற்கு போய் என்னவர்களுடன் நான் வட்டமாக இருக்கின்றேன் விளையாடுகின்றேன் சிரிக்கின்றேன் சில வேளைகளில் நாங்கள் சேர்ந்து அழுவதும் உண்டு மீண்டும் அதே பாதையில் அந்த நாட்டை கடந்து வீட்டின் கதவை திறந்து உள்ளே வந்ததும் இது தான் என் இடம் என்று மீண்டும் நிமிர்கின்றேன் வீட்டினுள் இருந்து மாற்றம் ஒன்றே மாறாதது மாறுங்கள் மாறுங்கள் என்று எழுதிக் குவிக்கின்றேன் …
-
-
- 9 replies
- 748 views
-
-
பூனைகள் விசித்திரமானவை என் வளவில் உணவுதேடிப் பல பூனைகள் வருகின்றன நான் அவற்றுக்கு எந்த உணவும் கொடுப்பதேயில்லை பாவம் அம்மா பூனைகள் என்கின்றனர் பிள்ளைகள் வீட்டுப் பூனைகளும் சரி துரத்திவிடப்பட்டவைகளும் சரி நிரந்தரமாய் ஓரிடத்தில் உணவு தேடுவதில்லை. பசி எடுக்கும் வேளைகளில் அயலில் உள்ள வீடுகளுக்கெல்லாம் அலைந்து திரிகின்றன பக்கத்துவீட்டில் தாராளமாய் உண்டபின்னும் கூட அடுத்தவீட்டிலும் மியாவ் என்றபடி உணவுக்காய் நிற்கின்றன அவை தம் வீட்டில் மட்டும் உண்ணாமைக்கு என்ன காரணம் இருக்கும் என நான் எண்ணுவதுண்டு. வீட்டு உணவு அவற்றிற்கு உருசிப்பதில்லையோ??? அன்றி போதுமானதாக இருப்பதில்லையோ??? கட்டாக்காலி நாய்களைப்போல்தான் பூனைகளும் இப்போ ப…
-
- 5 replies
- 2.1k views
-
-
பெண்கள் கூடுதல் கருத்துக்களுடன் பாவிக்கும் ஐந்து சொற்கள் [FIVE WORDS WOMEN USE WITH MORE MEANING] "நல்லது [Fine] என்று 'என்னவள்' நயமாக உரைத்தால் நாகரிகமாக அவள் தானே சரி என்று சொல்வதை விளங்கி 'நானும்' விவாதத்தை நிறுத்தி நா அடக்கி மெல்ல நழுவினேன் அங்கிருந்து !" "ஐந்தே நிமிடத்தில் [5 mins] கட்டாயம் வருவேன் என்று கதவை மூடி 'என்னவள்' அலங்காரம் செய்தால் சந்தடி இல்லாமல் 'நானும்' ஒரமாய் இருந்து காப்பி குடித்து டிவியும் பார்த்து ரசித்தேன்!" "ஒன்றும் இல்லை [Nothing] என்று 'என்னவள்' மழுப்பினால், புயலுக்கு முன் …
-
-
- 3 replies
- 488 views
-
-
கவலை தருகிறது! ********************** பெளவுத்தத்தை வணங்கும்-அன்பு பெரும்பான்மை மக்களே! புத்தர் போதித்ததெல்லாம் அறமும்,அகிம்சையும் தானே. அடாவடித்தனமும்,அரசியலுமா? புத்தரின் புனிதம் கெடுமளவில்-சில காவியுடையணிந்தவர்களை எப்படி அனுமதிக்கீறீர்கள். ஒற்றுமையான நாட்டில் தான் ஒவ்வொரு மனித இனமும் வாழநினைப்பது தப்பா? இலங்கையென்ற அழகிய நாடை கெடுப்பதற்கென்றே- சில அரசியல் வாதிகளும், அரசடி வாதிகளும் தங்களின் சுகபோக வாழ்வுக்காகவே இனங்களை பிரித்து பிணங்களை தின்ன நினைப்பது உங்களுக்கு புரியவில்லையா? மதங்களெல்லாம் மனிதத்துள்ளடங்கும். புத்தபெருமானே இன்று பார்த்தால் இரத்தக் கண்ணீர் வடிப்பார். எந்த அரசாங்கம் வந்தாலும் இவர்களுக்கு அடங்குவதென்றால் ஜனாதிபதி,பிரதமர் என்ற அரசியலமைப்புத்தான் ஏனோ? அற…
-
- 0 replies
- 107 views
-
-
ஜூன் 1, 2024 இன்று உலக பெற்றோர் தினம் போரில் வாழ்ந்த குழந்தைகள் போல் போருள் வாழ்ந்த பெற்றோரும் பரிதாபத்துக்குரியவர்களே குண்டுகள் மழை போலப் பொழியத் தொடங்கின இடியோசை மரண பயத்தைத் தந்தது குழந்தைகளின் பெறுமதியான நாட்கள் பதுங்குகுழிகளில் கழிந்தன இரைதேடும் பருந்திடம் இருந்து குஞ்சுகளைக் காப்பாற்ற பறவைகள் போராடின ஒருநாள் பெற்ற…
-
- 0 replies
- 277 views
-
-
பேசிப்பார் மனம் மகிழும்..! ********************* இரத்தமும் தசையும் மரணமும் பார்த்துப் பார்த்து களைத்துப்போன கண்களும் நல்லது மறைந்து கெட்ட செய்திகளே.. கேட்டுக் கேட்டு கெட்டுப்போன காதுகளும் நல்ல வாசனைகளை நுகரமுடியாமல் நாற்றத்தால் மயங்கிக் கிடக்கும் மூக்குத் துவாரங்களும் அழகிய மொழிகள் மறந்து அருவருப்பு சொற்களால் நிரம்பி வழியும் வாய்களும் அவரவர் உணவை மறந்து யார்யாரோ உணவை உண்டு மரத்துப்போன நாவும் பற்களும் நல்ல பாதைகள் விடுத்து குறுக்குப்பாதைகள் தேடும் நம் கால்களும் கொடுத்து வாழும் தன்மை மறந்து குறுகிப்போன கைகளுமாய் மனம் இறுகி மகிழ்விழந்து மனிதனை மன…
-
- 3 replies
- 763 views
-
-
பேரன் 'இசை'யின் இரண்டாம் பிறந்த நாள்! / It's Grandson's ISAI's second birthday! [13 / 03 / 2025] "பேரனின் இரண்டாம் பிறந்த நாள் பேரொலி முழங்க 'இசை'யுடன் கொண்டாடுவோம்! பேசாமல் ஆடாமல் இருக்க முடியாது பேரறிவுடன் 'இசை' என்றும் வாழட்டும்!" "காலம் ஓடியதை நம்பவே முடியல காற்றாய் வேகமாய் அது பறந்திட்டு? காளன் மாதிரி குட்டையாய் இருந்தாய் கார்த்திகை மீனாய் உயர்ந்து ஒளிர்கிறாய்!" "உடம்பு பிரண்டு எழுந்து உட்கார்ந்து உறுதி கொண்டு விரைந்து தவழ்ந்து உயர்ந்து நின்று பாதத்தால் நடந்து உற்சாகம் கொண்டு வென்று விட்டாய்!" "முழுஆண்டு இரண்டு முடிந்து விட்டது மும்முரமாக கதைகத் தொடங்கி விட்டாய் ! முக்கனி சுவை முழுதாய் கொண்ட முந்திரிகை கேக்கை சுற்றி கூடுவோம்!" "பிறந்த நாள…
-
- 0 replies
- 315 views
-
-
பொங்கல் 2022 எங்கிருந்தோ தோன்றி எம்மை உயிர்ப்பித்த செங்கதிரே உன்றன் திருவருளைப் போற்றுகிறேன் நீயின்றி நானில்லை நீயே எனை இயக்கும் நேயப் பெருஞ்சக்தி நித்தியமாம் பொற்சோதி தாயாய் இஞ்ஞாலத்தைத் தன்மகவாய் ஏற்று ஓளிப் பாயத்தை எங்கும் பரவவிட்ட பேரருளால் மாய வெளியினிலோர் மண்துகளாம் பூமிதனில் காயமெனும் எமது காற்றடைத்த பையினிலே உள்ளம், உணர்வு, உயிர்ப்பெல்லாம் பெற்றுவிட்டோம் வெள்ளமெனப் பொலியும் நின்னருளைக் கண்டுருகி அன்பால் மகிழ்ந்து ஆரமுதப் பொங்கலிட்டு நின்பால் எம் நன்றியினால் நேர்த்திக் கடன்செலுத்தி உடலால் வயலுழுது உண்ணவும் பாலளிக்கும் விடையையும் ஆவினையும் மேன்மையுறப் போற்றும் நற்றமிழர் பண்பாட்டை நம்முன்னோர…
-
- 5 replies
- 1.5k views
-
-
பொங்கல் வாழ்த்து 2020. இரண்டாயிரத்து இருபதிலே எங்கும் தமிழர் இனமதனை அண்டாதிருக்கப் பெருந்துயரம் அகலத் தீமை இருள் விலக உண்டாயிருக்கத் திருவெல்லாம் ஓடி மறையப் பகையெல்லாம் திண்டோளுயர்த்தி ஞாலமதில் சீரும் சிறப்பும் பெறுவோமா?; தமிழைக் கணனி தனிலேற்றி தரணியறியப் புகழேற்றி அமிழ்தின் இனிய எம்மொழியை அகிலத் துயர்த்தி அறிவியலில்; கமழும் மொழியாயுருவாக்கி கலைகள் நிறைத்துச் செறிவாக்கி திமிரோடிருந்த எம் பெருமை திரும்ப நாங்கள் பெறுவோமா நாடொன்றமைத்துப் படைபலத்தால் நாங்கள் வாழ்ந்த பெருவாழ்வை கேடென்றுலுத்தர் எண்ணியதால் கீழ்மைச் செயல்கள் பலசெய்து வாடப் பலபேர் அகதிகளாய் வதைகள் புரிந்து வன்னியிலே ஆடத் தருமம் நிலை தாழ்ந்த …
-
- 2 replies
- 957 views
-
-
பொங்கல் வாத்துக்கள். HAPPY PONGAL - ஜெயபாலன் * பொங்கல் வாழ்த்துக்கள் (பாடல்) - ஜெயபாலன் * வெண்பனி மீது பொன்மலர் சூடும் செங்கதிரோனை வாழ்த்துகிறோம் கண்பனி சூடி எம் நினைவோடு ஏங்கும் எம் தேசத்தை வாழ்த்துகிறோம் பொங்கல் வாழ்த்துக்கள் தோழர்களே பொங்கல் வாழ்த்துக்கள் தோழியரே பனை நிழல் வீழும் முற்றத்தில் நின்று பாசத்தில் வாடும் நெஞ்சங்களே பனியையும் மீறி பசுமையில் நிமிரும் பைன்மரம் போன்ற சிங்கங்களே பொங்கல் வாழ்த்துக்கள் தோழர்களே பொங்கல் வாழ்த்துக்கள் தோழியரே பூமியில் என்றும் அகதிகள் …
-
- 2 replies
- 648 views
-
-
காலை புலர்ந்தது காலை புலர்ந்தது காலைச் சேவல் கூவிச் சொன்னது கனவுகள் உயிர்த்தது கதிரவன் எழுந்தான் பொழுது புலர்ந்தது பூக்கள் மலர்ந்தது உழவனுக்கு என்றே உலகம் செய்து உன்னையும் என்னையும் உயிரோடாக்கி மண்ணையும் தந்து மகிழ்வித்த ஈசனை எண்ணுக மனமே எண்ணுக காலை புலர்ந்தது காலை புலர்ந்தது எழுக தமிழா எழுக தமிழா இன்றைய காலை உனக்காய் விடிந்தது பொங்குக மனமே பொங்குக வயல் வெளி எங்கும் தீபங்கள் எரிய வானத்து தேவனை விருந்துக்கு அழைத்து வாசல்கள் எங்கும் பூக்கட்டும் வாழ்வு வண்ணமாய் வசந்தம் வீசட்டும் எங்கும் ஆலய மணிகள் கோவிலில் ஒலிக்க அழகிய குயில்கள் கூவி பாடின காலையில் மல்லிகை கோலம் போட்டாள் கதிரவன் வாசலை திறந்து இங்கு வந்தான் …
-
- 2 replies
- 774 views
-
-
கன்னத்தில் முத்தமிட்டு ஈழ அவலத்தை குறைத்திரையில் இட்டு 'மணி' பார்த்த மணியருக்கு கல்கிக் கடலில் மூழ்கி முத்தெடுக்க ஈழத்திட்டின் வன்னிக் கோடியின் அனுராதபுரம் கரைதட்டி இருக்கு. அண்மைக் காலத்தே புலிக் கொடி ஒன்று உயிராயுதமாய் அனுராதபுரம் புகுந்து நிஜக் கதை படைத்த போது தூசி மண்டிக்கிடந்த தமிழகத் திரைக் கண்கள்.. கல்கிக் கிழவனின் கற்பனையில் வந்த பொன்னியின் செல்வனால் வன்னிச் செல்வன் முன் திறந்து கிடக்குது..!! மகிந்தனை வீழ்த்திய மகிமையை பேசுது சோழ வாரிசுகள்... அனுராதபுரமோ தமிழனை வீழ்த்திய மகிந்தவின் கதை பேசி சிங்கள வீரம் காட்டுது. …
-
- 1 reply
- 1.1k views
-
-
போதையை ஒழிக்க போர்க்கொடி தூக்குவோம்! ****************************************************************** எழுபது வருடமாய் ஆட்சியில் இருந்தவர் என்னத்தை எமக்கு கி̀̀̀̀ளித்தார்க̀̀̀̀̀̀̀̀̀ள். இலங்கையை விற்றுமே இனங்களை அழித்துமே இன்னல்கள் தந்துமே கெடுத்தார்கள். உலகத்தின் குழந்தையாய் உன்னத அழகியாய் இயற்கையே படைத்தாள் எம்நாட்டை ஊளலும்,இலஞ்சமும் போதையும்,சண்டையும் ஊரெல்லாம் அலைந்ததே எம் வாழ்க்கை. ஐவகை நிலமும் ஆறுகள் குளமும் அழகிய கடலும் அவள் தந்தாள். பொய்யையும் போரையும் உலகுக்கு காட்டி பொல்லாத செயல்செய்து அவன் உயர்ந்தான். அரசியல் வாதியோ நானில்லை - ஆனால் அனுர ஆட்சியை தினமறிவோம். இளையோரை கொல்லும் பாதாளப் போதையை எல்லோரும் சேர்ந்துமே ஒழித்திடுவோம். ஏற்றங்கள் தாழ்வுகள் கட்சிகள் பேதங்…
-
- 0 replies
- 127 views
-
-
போரோய்ந்த பூமியிலே வேறொன்றும் ஓயவில்லை நாளாந்த வாழ்வினையும் நீங்களும் வாழவில்லை வேரோடிப் போன மண்ணில் வீரர்கள் சாகவில்லை மண்விட்டுப் போனபின்னும் மானத்தைக் காத்திடவே விழுதுகள் தாங்கி உங்கள் வேதனை போக்கிடவே ஊரோய்ந்து போனபின்னும் உங்களைத் தாங்கிடவே உங்களின் பிள்ளைகளாய் நாங்கள் இருக்கிறோம் - உமக்காய் நாங்கள் இருக்கிறோம் சொந்த மண் தானிழந்து சுற்றங்களும் இழந்து சோர்ந்து நீர் தோள் சாய சொந்தச் சுவர் இழந்து ஊரூராய்த் திரியும் எங்கள் உதிரத்து உறவுகளே உங்களின் இருப்புக்காய் உணர்வுகள் தனைத்தாங்கி ஓய்ந்த உம் தலைசாய்த்து ஆறுதல் கொண்டிடவே உங்களின் உறவுகளாய் நாங்கள் இருக்…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஒருநாள் சூரியன் பூமிக்கு இறங்கி வந்தான்! திறந்த விளையாட்டு மைதானம், ஆட்களற்று வெறுமையானது. மாணவர்கள் எங்கும் இல்லை! பறவைகள் அற்ற வனாந்தரமாய், தாயில்லாப் பிள்ளை போல், தனிமையில் கிடந்தது பாடசாலை. மரங்கள் நிழல்களைத் தின்று, ஏப்பம் விட்டுக்கொண்டிருந்தன. காகிதப் பறவைகள், காற்றில் சிறகு விரித்துப் பறந்தன. தூசி படிந்த பள்ளி மணி, அடிப்பாரற்று அநாதையாயிருந்தது. துண்டிக்கப்பட்ட இலைகள், காற்றின் அந்தரத்தில் நடம்புரிந்தன. பள்ளிகளைப் போர் சூழ்ந்த பின்னொரு நாளில், வகுப்பறை நாற்காலிகளை, கண்ணீர் பூக்கள் நிறைத்தன. கரும்பல…
-
- 2 replies
- 717 views
-
-
போலி ஜனநாயகவாதிகள் மத தீவிரவாதமும் ஏகாதிபத்திய நல சுரண்டல்களும் இன படுகொலைகளும் இருக்கும் வரைக்கும் இரத்தக்களரியை எந்த ஒர் தனி அரசாலும் நிறுத்தமுடியாது அணு குண்டோடும் ஆயுத விற்பனையோடும் மனிதர்கள் இருப்பதால் யாருக்கு தான் இருக்கப்போகிறது அன்பும் கருணையும் போலி ஜனநாயகத்தின் பெயரால் வந்து ஒரு பூவை வைத்து விட்டு போங்கள் எங்கள் இரத்தத்தின் நடுவில் . பா .உதயகுமார்
-
- 0 replies
- 930 views
-
-
-
- 6 replies
- 2k views
-
-
என் அன்பு இதயங்களுக்கு..விரைவில் 2வது பாகமும் தொடரும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.நன்றிகள்
-
- 4 replies
- 1.1k views
-
-
மங்கையவளின் மரக்கறிக் கடை..!(காய்கறிக்கடை) ************************* பகுதி-1 முதலில் தக தகவென்ற மேனியை பார்த்ததும் தக்காழியை வாங்கி வைத்தேன். முந்தானையை பார்த்து முனகினேன் முருங்கக்காய் வரத்து குறைவென்றாள். கையை வைதேன் சும்மா சுறண்டாதீர்கள் மென்மையான தோல் உதிரம் வருமென்றாள் எடுத்து பார்த்தேன் பீற்றூட் கிழங்கு. அவளின் விரலை பிடிப்பதுபோல் எண்ணினேன் முளிந்து பார்த்தாள் எனது கையில் இருந்தது வெண்டிக்காய் உடைக் வேண்டாமென உறுமி விட்டு சிரித்தாள். அவளி…
-
- 11 replies
- 1.1k views
-
-
-
- 3 replies
- 944 views
-
-
மண்டியிடும் மன்னர்கள் ------------------------------------- இரண்டு சிறு குழந்தைகளுடன் இருவர் நாங்கள் இந்த வீட்டிற்கு அநேக வருடங்களின் முன்னொரு நாள் குடி வந்தோம் பன்னிரண்டு வீடுகள் உள்ள தெருவில் பதினொரு மன்னர்கள் குடி இருந்தனர் சில மன்னர்கள் பேசினர் சிலர் வெறும் புன்னகை மட்டும் சிலர் எங்களைக் காணவேயில்லை அடைமழை நாளென்றில் கடும் காற்றில் என் முன் நின்ற பெரும் மரம் காற்றின் முன் மண்டியிட மறுத்து முறிந்து விழுந்தது மன்னர்கள் ஓடி வந்தனர் அவர்கள் வீடுகளுக்கும் சேதமில்லை என் வீட்டிற்கும் சேத…
-
-
- 7 replies
- 931 views
-
-
வெறுப்பினால் எதையும் வெல்ல முடியாது அன்பினால் மட்டுமே அது முடியும். Hatred does not cease through hatred at any time. Hatred ceases through love. This is an unalterable law.” – Buddha —————————————————————————————————————— மண்ணைத் தின்னும் ஆசையோடு-பா.உதயன் இலங்கையில் இப்போ வட கிழக்கில் பேரினவாதம் என்ற பெரும் பேய் மதம் என்ற பெயரில் மண்ணை தின்று கொண்டிருக்கிறது அமைதியாய் அரச மரத்தடியில் இருந்த புத்தரை அங்கும் இங்குமாய் அந்தப் பேய் அவர் அமைதியை குலைத்து இழுத்துத் திரிகிறது பாவம் புத்தர் என்ன செய்வதென்று தெரியமால் இன்னும் அமைதியாகவே இருக்கிறார் அரச மர நிழலோரமாய் அமைதியையும் அன்பையு…
-
- 1 reply
- 842 views
-
-
மேலும் தனித்துவமான சிந்தனைகளை அறிந்திட தொடருங்கள் தொடர்பு வேண்டாம் ஈழத்தமிழன் இன்ஸ்டாகிராம் இணைப்பு
-
- 1 reply
- 1k views
-
-
மனக்குரங்கு கால் நீட்டி குந்தி இருந்தபடி கட்டளை இடுகிறது என் மனக்குரங்கு அதை கட்டிப்போட்டு சும்மா இரு என்று சொல்ல நான் என்ன புத்தனா புனிதனா ஆசையும் பாசமும் கொண்ட அந்த மனக்குரங்கு தானே அது ஆடி அடங்கும் வரையிலிம் எந்தக்கிளை வேண்டுமானாலும் தாவித் திரியட்டும் ஆசையும் பாசமும் அகன்று அந்த ஞானம் அடைந்தவனை அறியும் வரையிலும் இப்போதைக்கு இது இப்படியே இருந்து தொலையட்டும் .
-
- 3 replies
- 1.7k views
-
-
ஊனம் காண இரக்கமாக நாணம் தோன்ற ஏக்கமாக தானம் செய்ய விருப்பமாக சினம் புரிவது எதிர்ப்புமாக கவனம் சிதற திருப்பமாக நவீனம் தருவது தீமையாக (அ) நன்மையாக யாவும் அதை கையாலும் புலன்களின் அனுமானம் அதுவே வழிவாகுக்கும் வினைகளின் தொடக்கம் விதியையும் மதியால் வெல்லலாம் என்பது சிலரின் செயல் வழக்கம் என்பதுவமாக...
-
- 0 replies
- 733 views
-