Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைக் களம்

கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. மாற்றமொன்றே மாறாதது! ****************************** ஆண்டுகள் பழசு,அனுபவம் பழசு மாண்டவர் பழசு,மன்னர்கள் பழசு இன்றைய நாளே எமக்கு புதிது எனிவரும் நாட்களும் புதிது புதிதே! பத்து ரூபாய்க்கு பவுண் விலை விற்றதும் பனாட்டொடியல் நாங்கள் உண்டதும் வித்துகள் சேர்த்து விவசாயம் செய்ததும் வேறு கிராமங்கள் வண்டிலில் சென்றதும். சூள்கொழுத்தி மீன்கள் பிடித்ததும்-தோணி சுக்கான் பிடித்து கரைகளத் தொட்டதும் நடந்தே நாங்கள் பள்ளிக்கு சென்றதும் நம்முன்னோர் வாழ்வுக் கதைகள் சொல்வதும். இந்தகாலத்து பிள்ளைகள் காதுக்கு இவைகள் எல்லாம் கற்பனைக்கதைகளே! எங்கள் வாழ்வோ இப்போது இல்லை இவர்களின் வாழ்வும் இதுபோல…

  2. புலனங்களில் கடலை போடும் உரையாடல் படிப்புக்கான தகவல் தேட மறந்திடல் பிறர் நசை நிலையை தகுதி பக்கத்தில் 30 நிமிடம் குறும்படமாக காணாமல் தவிர்த்தால் சிலர் உறவுகள் முறிந்திடல் விடலை பருவத்தில் விளையும் உணர்வுகள் வன்மமும் திகைக்கும் மோதல்கள் காமமும் பகைக்கும் பலருடன் பாலியல் உறவுகள் கிளை இல்லாத மரங்களா வலைதளத்தில் வரதா தகத விளம்பரங்களா நற்பண்புகள் வளர்வது நாம் கொண்ட எண்ணங்களாளா தீமைகள் விளைவது உள்ளுணர்வை கட்டமைக்காததளா பாலையின் கானலில் நீரில்லை பாலும் கல்லும் ஒன்றில்லை இலையின் நிறம் பச்சை என்றுமே நீரின் மீது அதற்கில்லை இச்சை அதே போல் என் மனசாட்சியை மதிப்பிடல் செய்திடுங்கள் பரிச்சயம் இல்லாமல் பா…

  3. "மூன்று கவிதைகள் / 15" 'நீல நயனங்களில் நீண்டதொரு கனவு' நீல நயனங்களில் நீண்டதொரு கனவு ஓலம் இடுகிறது மனதை வருத்துகிறது! காலம் கனிந்து கைகூடிய காதல் கோலம் மாறி கூத்து அடிக்கிறது உலக வரையறை காற்றில் பறக்கிறது! கண்ணோடு கண் கலந்த அன்பு மண்ணோடு மண்ணாய் போனது எனோ? விண்ணில் தோன்றிய கதிரவன் மாதிரி வண்ண ஒளி பரப்பிய அவன் பண்பு துறந்து ஏமாற்றியது எதற்கோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................ 'பாரதி' "அடிமை ஒழிக்கும் குரலோன் பாரதி விடிவை நோக்கி வரிகள் முழங்கும்! இடித்து உரைப்பான் காரணம் சொல்வான் அடித்துப் பொய்யை தூர விரட்டுவான்!!" "தமிழின் அரவணைப்பில் வரிகள் மலரும் பூமி எங்கும் பரந்து விரியும…

  4. தம்பரும், சுப்பரும்! **************** தம்பர்.. மக்கள் விரும்பியே மன்னனைத் தெரிந்தும்-பின் மாபெரும் போருக்கேன் வந்தனர். சுப்பர்.. மக்களை மறந்துமே மந்திரி சபைக்குத்தான் மாபெரும் சலுகைகள் செய்ததால். தம்பர்.. சிங்கள மக்களே சீறும் சிங்கமாய் சினம் கொண்டு வீதிக்கேன் வந்தனர். சுப்பர்.. பங்களா கட்டியே வாழும் தலைவர்கள் வறுமைக்குள் மக்களை விட்டதால். தம்பர்.. போரை வெண்றவர் புதுமைகள் செய்தவர் போற்றிய மக்களேன் வெறுத்தனர். சுப்பர்.. போரை சொல்லியே இனத்தை பிரிக்கின்ற பொய்கள் அவர்கட்கு தெரிந்ததால். தம்பர்.. விமானத்தளம், வீதிகள்,விளக்குகள்…

  5. Started by ரசோதரன்,

    சிறகு --------- ஒட்டி உலர்ந்த தேகம் ஒன்று எப்பவும் அங்கே பாதையில் கழிவுநீர் ஆறு என்று ஓடும் அந்தக் கரையில் சுருண்டு கிடந்தது அது கையை நீட்டவும் இல்லை கண்களை பார்க்கவும் இல்லை புதிதாக வெளியில் வந்தது போல வெட்கம் அதன் உயிரைக் கொன்று அதன் பசியை மூடி வைத்திருந்தது இது செத்து விடுமோ என்று பழிபாவம் அஞ்சும் யாரோ ஒருவர் அதுக்கு தெரியாமல் அங்கே ஒரு தட்டும் அதில் உண்ணும் பொருளும் வைத்தார் வேறு சிலரும் வைக்க வைக்க எழும்பி இருந்து வானம் பார்க்கத் தொடங்கி பின்னர் நடக்கத் தொடங்கி இப்பொழுது அது உலாத்துகின்றது இன்று காலை அது ஒரு பாட்டும் பாடியது …

  6. கவிதையோடு வாழ்பவனும் கவிதையாக வாழ்பவனுமே கவிஞன் & கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்

  7. நாய் ஒடுக்கி வைத்தாலும் நியாயம் பேசும் வல்லமைகள்... பனிவிழும் தேசத்து பழகுதமிழ் சோதரே! இனி வரும் காலம் எங்கள் இருப்புணர்த்தும் நேரம். ஆண்டுகள் சிலமுன்னர் நாம் எங்கு நிலையிருந்தோம்? மீண்டோம் எனும் நினைப்பா... நேற்றைகளை குடித்துளது? மாண்டு நம் உறவெல்லாம் மண்தின்னப் பார்த்திருந்தும் கூண்டுக்குள் எமைப்பூட்டி குரல் அடங்கி கிடப்பது ஏன்? கண்விசிக்க, மனம் வலிக்க, காலமுகம் கண்டிருந்தும், கங்குல் கரைத்தழிக்கும் காலம் விட்டு நிற்பது ஏன்? கந்தகத்து முட்களிடை சொந்த நிலம் வேகுவதை - உம் செங்குருதிப்பூ விரித்துப் பார்த்திடுக உறவுகளே! அன்னை திருவாசல் அகலத்திறந்து நீ முன்னை குதித்தநிலம் உன் மூத்த தாய் அல்லவா? அவள் வண்ணத் திருமேனி வலியேந்தி நல…

  8. இன்று அன்னை பூபதி பாரதத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து உண்ணவிரதமிருந்து தன் வாழ்வை உகுத்த நினைவு நாள் மாவீரன் திலிபன் உண்ணா நோன்பிருந்து தன வாழ்வை உகுத்து சில மாதங்களுள் அன்னை பூபதியும் காந்தீய அறவழியில் தன் சாத்வீகப் போரைத்தொடர்ந்து ஒரு பயனும் கிட்டாமல் இறந்தார்.அவர்களிருவருக்காகவும் எழுதப்பட்ட கவிதை கீழே. (குறிப்பு- இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ்ப் பிரதேசங்களில் அரசின் உதவியோடு வேற்றினத்தவர்கள் குடியேற்றப்பட்டதைத் தடுக்குமாறு கூறியே உண்ணவிரதம் பிரதானமாகச் செய்யப்பட்டது). திலீபனின் உண்ணா விரதம் தீயிலுடலை எரிக்கவா - கொடுந் தேளெனைக் கொட்டச் சிரிக்கவா காயும் வயிற்றில் மரிக்கவா - என்றன் கண்களைக் குத்திக் கெ…

    • 2 replies
    • 2.1k views
  9. வன்னிக்கு போய் வாழப் போறேன். படடனத்து வாழ்கை பகடடான வாழ்க்கையென பள்ளியில் படிக்கையில் இங்கிலீசு பாடத்துக்கு இரண்டு டுஷன் விட்டு படிக்க வைத்தார் அப்பா ஓ எல்பரீடசையில பாசான சேதி கேட்டு மூன்று பெணகள் கொண்ட முறைமாமன் தந்திரமாய் அழைக்கையிலே நானும் கொழும்புக்கு மேற்படிப்புக்கு போனேனடி கிரிபாத்தும் பொல் சாம்பலும் தந்து ஊட்டி வளர்த்த தாய் மாமன் வங்கி வேலை கிடைத்தும் வளைத்துப்போடக் கதை விடடார். மூத்த மச்சாளும் மூலைக்குள் நின்று முழு நிலவாய் தெரிகையிலே பாவி மனம் பாசமாய் அலை பாய்ந்தது. காலம் குடியும் குடும்பமுமாக போகையிலே 2022 பிறந்தது . சமைக்க காஸ் இல்லை மோடடார் சைக்கிள் ஓட பெட்ரோல் இல்லை பிரபாகன் …

  10. "அடைமழை" [அந்தாதிக் கவிதை] "அடைமழை தொடர்ந்து ஐப்பசியில் பெய்யுது பெய்த நீரோ வெள்ளமாய் நிற்குது நிற்கும் தண்ணீரில் கழிவுகள் மிதக்குது மிதக்கும் எண்ணங்கள் தேடுது கடுதாசி கடுதாசி கப்பலாக அங்கே ஓடுது ஓடும் மீன்கள் அதைத் துரத்துது துரத்தும் மீனைப் பறவை கொத்துது கொத்தும் பறவை பசியைத் தீர்க்குது தீர்க்கும் பிரச்சனைகள் அப்படியே இருக்குது இருக்கும் வடிகாலும் முடங்கிக் கிடக்குது கிடக்கும் குப்பைகள் ஒட்டத்தை தடுக்குது தடுக்கும் எதையும் உடைக்குது அடைமழை" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  11. "மூன்று கவிதைகள் / 04" 'யாரடி வந்தார் என்னடி சொன்னார் ?' யாரடி வந்தார் என்னடி சொன்னார் அரசடி நிழலில் பேசியது என்னவோ? பாரடி என்னை தனிமரமாய் தவிக்கிறேனே கூறடி பதிலை கூச்சத்தைவிட்டு எனக்கு? ஆறடி நிலமே சொந்தமாகும் உலகிலே ஏனடி உனக்கு இத்தனை ஆசைகள்? தேரடி வீதியில் யாருக்கு காத்திருக்கிறாய் சேரடி சொத்தை காதலை விற்றா? பூங்கொடி என்று பெயர்வைத்தது எனோ அங்காடி நாய்போல் அலைவது எனோ? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ................................................................ 'விதியின் விளையாட்டு' விதியின் விளையாட்டு உறவைப் பிரிக்குது மதியை இழந்து ஏதேதோ பேசுது ! நதியின் ஓட்டத்தில் அகப்பட்ட துரும்பாய் மோதிமோதி நானும் களைத்து விட்டேன் ! ஊடல் இதுவென முதல…

  12. என்னை.... காதலித்துப்பார்.... கவிதையால்... திணறவைக்கிறேன்.... ! என்னை..... ஏங்கவைக்க காதல் செய்....... ஏக்கத்தின் சுகத்தை... அனுபவிக்க துடிக்கிறேன்... ! காதல் செய்தபின்.... தினமும் என்னை.... சந்திக்காதே....... கவிதைகள் என்னை... கோபித்துவிடும்.... !!! @ கவிப்புயல் இனியவன் கவிதையை காதலிக்கிறேன் (01)

  13. பாதைகள் மாறினோம் ஆனால் ஒரு வழியாய் இணைக்கிறது வாழ்க்கை... பயனற்ற யாக்கையை பயன்படுத்தி வீடுபேறு அடைவது பேரறிவின் நிலை மூலம் அறிந்த பின் முக்தி கிடைப்பது முதிர்ச்சி நிலை... சரவிபி ரோசிசந்திரா

  14. ”மோசமான கவிதைகள் எழுதியுள்ளேன்ஆனால் எப்போதும் வாழ்ந்தேன்நல்ல கவிதையாய்” வாழ்வின் கவிதை. - வ.ஐ.ச.ஜெயபாலன். . நீர்க்கரையின் கோரையிடை பாம்பின் கண்கள். புல்பூத்த தட்டானில் மயங்கும் தவளை. துருதுருத்து மோந்தபடி கீரிப்பிள்ளை. பசுமை இனிக்க மான் கிளை வரும் தடத்தில் விரிகிறது மனிதன் கண்ணி. அச்சத்தில் சாகாதவை வாழ்கிறது இக்கணம். என்றும்போல் மருதமரம் செழிக்க ஊட்டியும் வேர் அறுத்தும் நகர்கிறது பாலி ஆறு. . டைட்டானிக் கனவு மனிதா உன் விஞ்ஞான வரைபடத்தில் ஏது மிதக்கும் பனிப்பாறை. எனினும் உன்னால் இயலுமே முழ்கையிலும் வயலின் மீட்டி சாவையும் வாழ்தல். ஞான் அறியும் நஞ்சு பருக விதித்த பின்னும் வாழ்ந்த ஒரு கிரேக்கத்து மனிதன் …

    • 2 replies
    • 1.2k views
  15. "காற்றில் ஆடுது வெள்ளை ரோசா" "காற்றில் ஆடுது வெள்ளை ரோசா காதல் பேசுது பொன் வண்டு கானம் பாடுது சுற்றி வருகுது காமம் கொண்டு தேன் பருகுது!" "இதயம் கவருது சிவப்பு ரோசா இதழ்கள் தொட்டு வண்டு கொஞ்சுது இச்சை கொண்டு துள்ளிக் குதிக்குது இணக்கம் சொல்லி ரோசா அணைக்குது!" "அழகாய் மலருது ஊதா ரோசா அருகே வருகுது கருத்த வண்டு அங்கம் எல்லாம் தொட்டு ரசிக்குது அடக்கமாய் ரோசா விட்டுக் கொடுக்குது!" "கண்ணைக் கவருது ஆரஞ்சு ரோசா கதிரவன் அன்பில் தன்னை மறக்குது கபடன் வண்டு கொஞ்சிக் குலாவுது கள் குடித்து மயங்கிப் படுக்குது!" "உள்ளம் பறிக்குது இளஞ்சிவப்பு ரோசா உரிமை கொண்டாடுது சிவப்பு வண்டு உறிஞ்சி குடித்து முத்தம் இட …

  16. "சமாதானம்" [அந்தாதிக் கவிதை] "சமாதானம் வேண்டாமென இலங்கையில் போர் போர் தொடுத்து அப்பாவிகளை கொன்றார்கள்! கொன்று குவித்ததை புத்தபிக்கும் மகிழ்ந்தனர் மகிழவு இதுவாவென புத்தர் தலைகுனிந்தான்!" "தலைகுனிந்து உலகமும் கண் மூடியது மூடிய வீட்டுக்குள்ளும் கற்பை சூறையாடினான்! சூறையாடி உண்மையை புதைத்து தலைவனானான் தலைவன் இன்று போதிக்கிறான் சமாதானம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  17. ஊர்த் தாய்க்கு ஒரு கடிதம்! ************************* உயிருக்கு பயந்து ஒழித்தோடிப்போனவர்கள் என்று கேலி செய்கிறார்கள் அம்மா… அன்று நீதானே சொன்னாய் ஓடித்தப்பு பின் ஊர்களைக் காப்பாற்றவேண்டுமென்று. அதனால்.. வெளிநாடொன்றில் தஞ்சம் புகுந்து விட்டோம். எங்களை.. ஏற்றுக்கொள்ள எத்தனை கேள்விகள் எத்தனை விசாரணைகள் எத்தனை இழுத்தடிப்புகள் இப்படியே எத்தனை வருடங்கள் காத்துக்கிடந்தோம். அகதியென்ற பெயருடனும் கையில்.. அன்னத் தட்டுடனும் அவர்களின் முகாங்களில் அலைந்தபோது கூட எங்கள் துன்பங்களை உனக்கு சொல்ல நாம் விரும்பியதேயில்லைத் தாயே…

  18. அழகிய நிலவு சிரிக்கிறது ஆயிரம் பறைவைகள் பறக்கிறது ஆயிரம் பறைவைகள் பறக்கையிலே அழகிய கீதங்கள் இசைக்கிறது காலைச் சூரியன் கண் விழிக்க காற்றினில் ஆடிய கார்த்திகை பூ காலையின் அழகை பூமியில் வரையுது கண்ணைத் திறந்து ஒரு மல்லிகை மொட்டு சோம்பலை முறித்து சிரிக்கிறது காற்றினில் ஆடிய திசைகளில் என் மனம் பாட்டுக்கு மொட்டு ஒலி இசைக்கிறது கண்ணுக்கு தெரியா தூரத்தில் இருந்து என் கனவினை ஒருத்தி பாடுகிறாள் கனவுகள் எழுதிய கவிதையின் நினைவினை காத்திடம் சொல்லி அனுப்புகிறாள் .

    • 0 replies
    • 988 views
  19. "சிந்தை சிதறுதடி" [1] "சிந்தை சிதறுதடி மயானம் அழைக்குதடி உந்தன் காலடி வணங்கத் துடிக்குதடி! நிந்தை பேசா உன்னையும் கெடுத்தானே விந்தை உலகமடா கொடியவன் பூமியடா கந்தைத் துணியுடன் வீசிச் சென்றானே!" "தீந்தை விழியால் என்னை மயக்கியவள் சாந்தை பூசி பெட்டிக்குள் போறாளே! வேந்தையும் ஏழையும் ஒன்றே என்றவள் சுந்தரத் தமிழில் கொஞ்சிக் குலாவியவள் சந்திர ஒளியில் தீபமாய் ஒளிர்கிறாளே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  20. வித்து.... விதைக்கப்பட்டு.. மரமாகிறது..... ! மரத்தின் இலைகள்.... புதைக்கப்பட்டு.... உரமாகிறது.... ! விதைத்தாலும்... புதைத்தாலும்.... பயன் இருக்கிறது.... ! நம் மண்ணில்..... உடலங்கள்... இலட்சக்கணக்கில்..... புதைக்கப்பட்டன.... ஆயிரக்கணக்கில்... விதைக்கப்பட்டன...! புதைத்ததால் நம்.. இனத்தை உலகறிந்தது... ! விதைத்ததால் நாம்... தலைநிமிர்ந்து... வாழ்கிறோம்..... !!! @ கவிப்புயல் இனியவன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.