கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
649 topics in this forum
-
அடிப்படை அனுபவம் ---------------------------------- பல வருடங்களின் முன் மகனுக்கு எட்டு வயதாக இருந்தது. அன்று ஒரு பிள்ளை எட்டு வயதில் எட்டு வித்தைகளையாவது கற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று இந்தச் சூழலில் ஒரு நிர்ப்பந்தம் இருந்தது. எட்டு வயதில் ஒரு அஷ்டாவதானி போல. இன்று சூழலின் நிர்ப்பந்தம் இன்னும் அதிகமாகிவிட்டது. ஒவ்வொரு பிள்ளைகளையும் சதாவதானிகளாக மாற்றாமல் இது ஓயாது போல. எனக்கு இதில் துளியளவும் நம்பிக்கையும் இல்லை, கூட்டத்துடன் சேர்ந்து ஓடுவதற்கான பொறுமையும் அன்று இருந்திருக்கவில்லை. ஊரில் நீச்சலை நானாகவே தான் சிறு வயதில் கற்றுக் கொண்டேன். கடலில் தான். சேர்ந்து போயிருக்கின்றோம், ஆனாலும் அவரவரே நீந்திப் பழகினோம். ஒரு நாள் இரண்டு பாகம் கடலில் கீ…
-
-
- 8 replies
- 920 views
-
-
மரியானா அகழி ------------------------- அவன் அந்த ஒழுங்கையால் ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது போய் வந்து கொண்டிருந்தான். போகும் போது என்னையும் வா என்று வலியவே துணைக்கு கூட்டிக் கொண்டு போனான். அந்த ஒழுங்கையின் முடிவில் ஒரு கோயில் இருந்தது. ஆனால் இருவரும் கோயில் போய் சாமி கும்பிடுகிற ஆட்கள் இல்லை. ஏன் இந்த ஒழுங்கையில் தினமும் வருகின்றோம் என்று பல நாட்கள் நான் நச்சரித்த பின், அவன் உண்மையைச் சொன்னான். அந்த ஒழுங்கையில் இருந்த பெண் பிள்ளை ஒன்றின் பின்னால் அவன் சுத்துகின்றானாம் என்று அவன் சொன்னான். அந்தப் பிள்ளையும் எங்களின் வகுப்பு தான். அந்தப் பிள்ளையின் குடும்பம் 83ம் ஆண்டுக் கலவரத்தில் கொழும்பில் இருந்து இடம்பெயர்ந்து ஊருக்கு வந்தவர்கள். என்னை ஏன் கூட்டி…
-
-
- 12 replies
- 683 views
- 1 follower
-
-
கறுப்புச் சட்டை ------------------------ அறிவித்தலில் இருந்த திகதிகளை கழித்துப் பார்த்தால், அவருக்கு 55 வயதுகள் தான் ஆகியிருந்தது என்று வந்தது. அடப் பாவமே, இப்படி இடைநடுவிலேயே போய்ச் சேர்ந்து விட்டாரே என்ற மெல்லிய கவலை பற்றிப் பிடித்தது. அவரை சில தடவைகள் அங்கே இங்கேயென்று பார்த்திருக்கின்றேன். ஆனால் பழக்கம் எதுவும் இல்லை. ஒரு தடவை கூட அவருடன் உரையாடியதும் இல்லை. நல்ல மனிதன் என்று அவர் உயிருடன் இருக்கும் போதே பலரும் சொல்வார்கள். தோற்றத்தில் இன்னும் ஒரு பத்து வயதுகள் அதிகமாகவே தெரிந்திருந்தார். எப்படி இறந்திருப்பார் என்று அறிவித்தலில் போட மாட்டார்கள், ஆனால் காலமானார் என்று இருந்தது. அகாலமானார் என்று இல்லை, ஆகவே விபத்து என்று எதுவும் இல்லை. காலம…
-
- 0 replies
- 142 views
-
-
கிழக்கிலும் மேற்கிலும் ----------------------------------- கடந்த சில நாட்களாக அந்த மனிதரை அங்கு கண்டு கொண்டிருக்கின்றேன். இருவரும் ஒரு புன்முறுவலுடன் விலகிப் போய்க் கொண்டிருந்தோம். அவர் எந்த நாட்டவர் என்று சொல்லத் தெரியவில்லை. அவர் ஒரு ஆபிரிக்க அமெரிக்கராக இருப்பதற்கே சாத்தியம் அதிகம் போன்றது அவரது தோற்றம். காலையில் ஓட வருபவர்கள் மிகவும் குறைந்த குளிர்காலம் அது. இருவருக்கும் அந்தக் குளிரில் வெறும் டீ சேட்டும் காற்சட்டையுமாக நிற்கும் மற்றவர் கொஞ்சம் விநோதமானவராகத் தெரிந்திருக்கும். 'இந்தியரா......' என்று அவர் தான் ஆரம்பித்தார் ஒரு நாள். அந்த ஆங்கில உச்சரிப்பு அமெரிக்க உச்சரிப்பு இல்லை. 'இல்லை, ஶ்ரீ லங்கா....' என்று சொல்லி விட்டு, 'நீங்கள் .......…
-
-
- 10 replies
- 716 views
- 1 follower
-
-
புதிதாக வந்தவர்கள் -------------------------------- அந்த வீட்டின் முன்னால் அவ்வளவு ஆட்கள் இதுவரை கூடினதே இல்லை. இருபது வருடங்களுக்கு மேலாக இதே தெருவிலேயே, ஒரே வீட்டிலேயே நான் இருக்கின்றேன். அந்த வீடும், அங்கு இருப்பவர்களும் அதைவிட இன்னும் அதிக காலமாக அங்கே இருக்கின்றார்கள். அங்கு இருப்பவர்கள் இருவரும் வயதான கணவன் மனைவி. நாங்கள் இங்கு குடிவரும் போதே அவர்கள் வயதானவர்களாக இருந்தார்கள். சில வருடங்களில், வருடம் முழுவதும் கூட, அவர்களின் வீட்டிற்கு எவரும் வருவதில்லை. ஆட்கள் வந்த வருடங்களில் கூட ஓரிருவரே இதுவரை வந்து போயிருக்கின்றனர். ஆரம்பத்தில் அவர் என்னுடன் அவ்வளவாகப் பழகவில்லை. பிள்ளைகளும், நானும் ஒருநாள் தெருவில் பந்து விளையாடிக் கொண்டிருந்தோம். ப…
-
-
- 9 replies
- 497 views
- 1 follower
-
-
வேலுப்பிள்ளைமார் ------------------------------- காலையிலேயே வந்து விடுங்கள் என்று அவன் சொல்லியிருந்தான். இரண்டு தடவைகள் தொலைபேசியில் கூப்பிட்டு ஞாபகப்படுத்தினான். காலை 10 மணிக்கு முன்னரே அங்கே நிற்க வேண்டும், அப்புறம் அங்கிருந்து திரும்பி வர பின்னேரம் ஆகி விடும், அன்றைய பொழுது முழுவதும் இப்படியே போய்விடப் போகின்றது என்று தெரிந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை இப்படியாகிப் போவதில் இஷ்டமில்லை தான், ஆனாலும் அவனை மறுக்க முடியவில்லை. நீங்கள் இருவரும் வந்து பாப்பாவை ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என்று சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தான். இவர்கள் நேர ஒழுங்கில் மிக மோசமானவர்கள். உலகில் இந்தளவிற்கு நேரத்தை துஷ்பிரயோகம் செய்யும் வேறு எவரையும் என் அனுபவத்தில் நான் கண்டத…
-
-
- 8 replies
- 787 views
-
-
அச்சம் தவிர் ------------------- முன்னரே ஒரு தடவை தொலைபேசியில் கதைத்திருந்தாலும், அவனை நேரே பார்க்கும் போது, குறிப்பாக அவனின் நீண்ட தாடி அது நெஞ்சு வரை விழுந்திருந்தது, என்னவெல்லாமோ நினைக்க வைத்தது. அவனின் பெயரிலே அவன் யார், அவனின் மார்க்கம் என்னவென்று தெளிவாக இருக்கின்றது. ஆனாலும், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு வேலைக்கு வரும் போதும் அப்படியே, அதே தோற்றதுடனேயே வருவார்கள் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. தனியாக வந்து வேலையில் சேர்ந்த அவன் சில மாதங்களின் பின்னர் அவனின் மனைவியை இங்கு வரவழைத்தான். இந்த நாட்டிற்கு உள்ளே வருவதற்கு மிக இலகுவான வழிகளில் ஒன்று இங்கு சட்டரீதியாக வேலை ஒன்றில் இருக்கும் கணவன்மார்களின் மனைவிகளுக்கு உண்டு. அந்த விசாவ…
-
-
- 8 replies
- 805 views
-
-
நீர்க்கடன் --------------- கடற்கரையின் ஓரத்தில் கடலை பார்த்தபடி தீர்த்தமடம் இருக்கின்றது. ஊரில் மற்றும் அயல் ஊரில் இருக்கும் கோவில்கள் என்று எல்லாவற்றிலும் தீர்த்த திருவிழா என்றால் அது சமுத்திர தீர்த்தம் தான். தீர்த்தமடத்தின் கிழக்கே மிக அருகிலேயே அந்தியேட்டி மடம் இருக்கின்றது. பின்னர் ஒரு வீடு, ஒரு சின்ன வெறும் காணி, அதற்கப்பால் சுடலை இருக்கின்றது. தீர்த்தமடத்தின் மேற்கே ஒரு ஆலமரம், அதன் மேற்கே இன்னொரு அரைச்சுவர்கள் மற்றும் கூரையுடன் கூடிய ஒரு கட்டிடம். ஒரு புரோகிதர் அந்த ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி ஒரே கூட்டம். அன்று சித்ரா பௌர்ணமி. அம்மாவை இழந்தவர்கள் தங்களின் அம்மாக்களுக்கு அங்கே நீர்க்கடன் செய்ய வந்திருந்தனர். இதுவரை தங…
-
-
- 7 replies
- 449 views
-
-
நட்சத்திரங்களுக்கு அப்பால் --------------------------------------------- உடனடியாக உங்களுடன் நாங்கள் கதைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்ன போது நேரம் இரவு 10:30 மணி. நேற்றிலிருந்து அங்கேயே நின்று கொண்டிருந்தேன். இந்த இரண்டு நாட்களில் எங்களுடன் வேலை செய்யும் வேறு பலரும் மாறி மாறி எங்களுடன் வந்து நின்றனர். இன்றிரவு மற்றவர்களை வீடுகளுக்கு போகச் சொல்லி விட்டு நானும் நண்பனும் மட்டுமே அங்கே இருந்தோம். இங்கிருக்கும் மிகச் சிறந்த மருத்துவமனைகளில் இது ஒன்று. உலகத்திலேயே மிகச் சிறந்தவற்றில் இது ஒன்று. அதி அவசர மற்றும் இதயம் சம்பந்தான பிரிவுகளிற்கு என்று இருக்கும் கட்டிடத்தின் ஆறாவது தளத்தில் நண்பனின் மனைவி அனுமதிக்கப்பட்டிருந்தார். இரண்டு வாரங்களாக இன்னொரு மரு…
-
-
- 4 replies
- 456 views
-
-
சிலந்தி வலை ---------------------- காற்றில் ஈரப்பதன் குறைந்ததும், வருடம் முழுவதும் கடுமையான குளிர் அற்றதுமான ஒரு இடத்தில் நீண்டகாலமாக வசித்து வருகின்றேன். எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் கோடைகாலம், அதன் பின்னர் வரும் மூன்றோ அல்லது நாலு மாதங்கள் கூட குளிர் என்று சொல்லி விடமுடியாதவை. உலர்ந்த காலநிலைக்கென்றே சிலந்திகள் படைக்கப்பட்டிருக்கின்றன போல. உலகில் 40,000 வகை சிலந்திகள் இருக்கின்றன என்று சொல்கின்றனர். அந்த 40,000 வகைகளும் இங்கேயே இருக்கின்றன என்று நினைக்கின்றேன். சிலந்தியின் வலையில் அப்பாவிப் பூச்சிகள் மட்டும் தான் அகப்பட்டு அல்லாடிச் சாகின்றன என்றில்லை. வீட்டுக்கு வருபவர்கள் வீட்டில் எங்கோ ஒரு மேல் மூலையைப் பார்த்து, 'அது என்ன........, சிலந்தி …
-
-
- 6 replies
- 573 views
-
-
மண்சோறு ----------------- ஜெயலலிதா இறந்து விட்டாராம் என்று செய்தி பரவி ஊரே கதவுகளை அடித்து மூடிக் கொண்டிருந்தது. வெளியில் எங்கும் போகாதே என்றும், தான் இப்பொழுது என் வீட்டிற்கு வந்து கொண்டிருப்பதாகவும் மாமி தொலைபேசியில் கூப்பிட்டுச் சொல்லியிருந்தார். மாமியின் வீடு திருச்சியின் மாநகரப் பகுதியில் ஒரு எல்லையில் இருந்தது. நான் தங்கி நிற்கும் வீடு, போன வாரம் வரை அங்கு உயிருடன் இருந்த என் தந்தையின் வீடு அது, நகரின் இன்னொரு எல்லைப் பகுதியில் இருந்தது. மாமி என் தந்தையின் கடைசி தங்கை. ஊர் இருக்கும் இந்தப் பதட்டத்தில், ஏன் இந்தப் பதட்டம் என்றும் எனக்கு விளங்கவில்லை, இவர் ஏன் நகரின் குறுக்காக வருகின்றார் என்றும் எனக்கு தெரியவில்லை. 'உனக்கு என்ன தெரியும்....…
-
-
- 7 replies
- 665 views
-
-
ஒரே ஒரு மன்னிப்பு ------------------------------ அவர் எனக்கு ஒரு ஒன்று விட்ட தாத்தா முறை. மூன்று அல்லது நான்கு தலைமுறைகள் பின்னோக்கி போய்ப் பார்த்தால், ஒரு குடும்பத்தில் இருந்து நாங்கள் இன்று பல கிளைகளாக, பல குடும்பங்களாக வந்தது தெளிவாகவே தெரிந்தது. அவரின் பதிவுப் பெயர் எனக்கும், ஊரில் பலருக்கும் தெரியாது. எல்லோரும் அவரை கூப்பிடும் பெயர் கொஞ்சம் விநோதமானது. ஒரு காலத்தில் நீண்ட தலைமுடி வைத்து, அதை சிலுப்பிக் கொண்டு ஊருக்குள்ளே சுற்றித் திரிந்திருக்கின்றார் போல. அதனால் அப்படியே அந்தப் பட்டப் பெயர் அவருடன் ஒட்டிவிட்டது. ஊரில் அநேகமாக எல்லோருக்கும் பட்டப் பெயர்கள் இருந்தன, பெரும்பாலும் அந்தப் பெயர்களே பாவனைகளிலும் இருந்தன. ஒன்று விட்ட தாத்தாவின் வி…
-
-
- 8 replies
- 785 views
-
-
லவ் பேர்ட்ஸ் -------------------- 'அன்பே வா' படத்தில் எம்ஜிஆர் நடிக்கவே மாட்டார் என்று சொல்லி விட்டாராம். ஒரு அம்மா, தங்கை செண்டிமென்ட், வில்லன்களை புரட்டி எடுத்தல், சில போதனைகள் இல்லாமல் என்னுடைய படம் எப்படி ஓடும் என்று நேரடியாகவே கேட்டார் என்பார்கள். வாத்தியார் நடிகர்களிலே மிகவும் தெளிவானவர். முன்னும் அவர் போல ஒருவர் இருக்கவில்லை, பின்னும் ஒருவரும் வரப் போவதில்லை. 'சரி, உங்களுக்காக நடிக்கிறேன்....... உங்களின் படம் என்றே சொல்லுங்கள்.....' என்று ஏவிஎம்மில் அவர் வைத்திருந்த மதிப்பு காரணமாக நடிக்க ஒத்துக் கொண்டார். படம் பெரிய வெற்றி. வாத்தியாரின் படங்களிலேயே வித்தியாசமான ஒரு படமாக இது என்றும் நிற்கின்றது. சரோஜாதேவி 'லவ் பேர்ட்ஸ்.......லவ் பேர்ட்ஸ்........…
-
-
- 20 replies
- 1.1k views
- 1 follower
-
-
மதி.சுதா மீள்பதிவு- எல்லா இயக்குனர்களிடமும் தாம் ஆசைப்பட்டும் செய்ய முடியாத கதை ஒன்று இருக்கும். அப்படியான ஒரு குறுங்கதை தான் இது. இங்கு இதை படமாக எடுக்க முடியாவிட்டாலும் இந்தியாவில் யாராவது குறும்படமாக எடுத்தாலும் சந்தோசமே.... ஆர்வமுள்ள யாருக்காவது பகிர்ந்து விடுங்கள்.... எந்தளவு வன்மமுள்ள போராளிக்குள்ளும் ஒரு மென் உணர்வு இருக்கும் அதே காதலாக இருந்து விட்டால்.... படியுங்கள்... சில நினைவுகளை மீட்டிப் பார்த்த போது வந்த குறுங்கதை... மன மறைவில் ..... ”சேரா காலமை புலிகளின் குரல் கேட்டனியே” கேசவன் சற்று இழுத்தபடியே சொன்னான். ”இல்ல OPD க்கு வந்திட்டன் இழுக்காமல் சொல்லு” சற்றே தயங்கியவனாக.. ”திருமகள் வீரச்சாவாமடா” அரைவாசியை விழுங்கிக் க…
-
- 2 replies
- 3.6k views
- 1 follower
-
-
Saturday, July 4, 2020 குற்றம் 1 ----------+-++---- அன்று குடும்ப நீதிமன்றிற்கு காலை 10.20 மணிக்கு 74வது இலக்க அறைக்கு அழைக்கப்பட்டிருந்தேன். 24.12.2015 என்மீது நிகழ்த்தபட்ட வன்முறைக்கு எதிராக காவல்துறையினரால் வழக்கு பதியப்பட்ட வழக்கு விசாரணை நாளது. திருமதி.ஆனந்தா அவர்கள் 24.12.2015 அன்று நள்ளிரவு ஈடார் ஓபஸ்ரைன் மலைக்கோட்டை தேவாலயத்திற்கு தனது காதலருடன் போய் வந்திருந்தார். …
-
- 0 replies
- 1.5k views
-
-
கிணற்றடியில் குளித்து கொண்டு நின்றவனுக்கு ,தம்பி குளிக்கும் பொழுது அந்த தேசிக்காய் மரத்துக்கு வாய்க்கால் தண்ணியை வெட்டிவிடு என தந்தை சொன்ன ஞாபகம் வரவே ஒடிப்போய் மண்வெட்டியை கொண்டு வந்து தண்ணியை திருப்பிவிட்டான். காலில் சேறு அதிகமாக படிந்துவிடவே கிணற்று படியில் தேய்த்து கழுவிவிட்டு மீண்டும் குளிக்க தொடங்கினான்.. "நீ உன்னை அறிந்தால் நீ உன்னை " என்ற பாடலை பாடியபடி வாளியை கிணற்றினுள் இறக்கினான் ,தொம் என கீழே விழுந்தது வாளியினுள் தண்ணீர் நிறைந்தவுடன் " உன்னிடம் மயங்குகிறேன்" என்ற அடுத்த பாடலை பாடியபடி இழுக்க தொடங்கினான் ,பக்கத்து வீட்டு வளவில் இருந்த கிணற்றடியிலிருந்து கண்ணா ஆரிடம் மயங்கிறாய் என்ற குரல் கேட்க வெட்கத்தில் "இல்லை அண்ரி சும்மா ரேடியோவில் போகின்றது அதை …
-
-
- 11 replies
- 887 views
-
-
கூண்டினுள் சோகமே வடிவாக அமர்ந்திருந்தன அப்பறவைகள். "லவ் பேர்ட்ஸ்". காதல் பறவைகள். கூண்டைத் திறந்து விரல்களைக் குவித்து, கையை உள்ளே நீட்ட, அதில் தாவி அமர்ந்துகொண்டது காதல் சோடியில் ஒன்று. அலகைத் தாழ்த்தி அவனது கரத்தை மென்மையாகக் கொத்தி, மீண்டும் அவனது முகத்தில் ஏதோ தேடி.... மறுபடியும் கையை உற்றுப் பார்ப்பதுமாக.... அவனது முகத்தில் முகிழ்த்த உணர்ச்சிரேகைகளையும், கரத்தின் ரேகைகளையும் ஒப்பிட்டு, எதிர்காலத்துக்குப் பதில் தேடுகிறதோ? யாரது எதிர்காலம்.... தனதா? எனதா....? எதிர்காலத்திற்கான கேள்விகளை விதைத்துச் சென்ற யாழினியின் தாக்கம்.... அவள் தானே உருவாக்கி, வளர்த்து, தீர்மானித்து, முடிந்த முடிவாய் அவனின் நிம்மதியை முடித்த செயலுக்குப் பரிகாரம் உண்டா என …
-
- 5 replies
- 1.2k views
-
-
நண்பர்கள் இருவர் ஒருவர் ஒரு கட்டிடத்தின் வேலைகள் முழுவதையும் ஒப்பந்த அடிப்படையில் எடுத்து அதற்கமைய வேலைக்கு ஆட்களை அமர்த்தி சொந்த தொழில் செய்பவர். வீடு வாகனம் விரும்பியபடி சுற்றுலா என்று கொஞ்சம் வசதியாக வாழ்பவர்...... இவர் பெயர் அகமெட்.. மற்றவர் வேலையை இழந்து வீட்டு வாடகை கூட செலுத்தாது பலவாறும் கடன் தொல்லையில் உலைபவர் சாப்பாட்டுக்கே கடினமான நிலை...... எந்த நேரமும் வீதிக்கு வரலாம்........ இவர் பெயர் முகமெட்..... அகமெட்டுக்கு தனது நண்பரது நிலை கவலை தருவதால் வேலை கொடுக்க விருப்பம் ஆனால் நட்புக்கெட்டுவிடக்கூடாது என்றும் யோசிப்பவர். அதனால் வேலை என்று இல்லாது தன்னுடன் உதவிக்கென்று கூட்டிச்சென்று அவருடன் சேர்ந்து தானும் உணவருந்தி அதற்க…
-
- 42 replies
- 4.5k views
-
-
தனிமையில் அதுவும் பாரில் இருந்து குடிப்பது என்பது மிகவும் அசவுக்கியமான ஒரு விடயம். கதைக்க ஆளில்லாமல் தண்ணியடிப்பது கண்ணை கட்டி கடலுக்க விட்டது போல, இன்று அந்த நிலை தான் நகுலனுக்கு, ஏனடா இதற்குள் தனியே வந்தம் என்றிருந்தது அவனுக்கு . நாலு பியரை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு போனால் தொலைக்காட்சியில் ஒரு நல்ல சினிமா படத்தையோ அல்லது பிரகாஷ்ராஜ் இன் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியை பார்த்துக்கொண்டு தனது இந்திய சினிமா, பொது அறிவையும் செக் பண்ணிக்கொண்டு இருந்திருக்கலாம். ஒவ்வொரு வெள்ளி பின்னேரமும் வேலை முடிய வேலையிடத்து நண்பர்களுடன் டாப்ஸ் ரெஸ்டோரண்டில் இல் போய் இரண்டு பியர் அடித்துவிட்டுத்தான் வீட்டிற்கு போவது நகுலனின் வழக்கம். வேலை செய்யும் பல்லின நண்பர்களுடன் இந்த பழக்கம் பழகி …
-
- 20 replies
- 2k views
-
-
கொக்கும் கெழுத்திமீனும் பொன்னேரிக் கிராமத்தின் வயல்களின் நடுவே அகன்று விரிந்திருந்தது அந்தப் பொன்னேரி வாவி . பொன்னேரி என்றுமே வழங்கொளிக்கும் கிராமம் . எங்கும் பச்சைப்பசேல் என அந்தக்கிராமத்தைப் பார்க்கவே கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும் . அந்தக் கிராமத்தின் விவாசயத்திற்கு தேவையான நீரை வழங்குவது இந்தப் பொன்னேரி வாவியே . அந்த வாவியில் தவளைகள் , மீன்கள் , ஆமைகள் என்று பல நீர்வாழ் உயினங்களுக்கும் வாழ்ந்து வந்தன . இதனால் எப்பொழுதும் அந்த வாவி கொக்குகளாலும் நாரைகளாலும் நிறைந்து காணப்படும் . பொன்னேரிக் கிராமத்திற்கும் , வாவிக்கும் யார் கண்பட்டதோ தெரியவில்லை , கடந்த நான்கு வருடங்களாக பெய்ய வேண்டிய மழை பொய்த்துவிட்டது . படிப்படியாக பொன்னேரிக் கிராமமும் , வாவியும் வறட்சி…
-
- 22 replies
- 2.3k views
-
-
கொமிட்டி.....சங்க காலம் தொட்டு இன்றுவரை சங்கங்கள் அமைப்பது என்பது எங்களது இரத்தத்தில் ஊறிய ஒன்று.இன்று பலர் தமிழ் வளர்க்க,சமயம் வளர்க்க,விளையாட்டு,விடுதலை இன்னும் பல விடயங்களை வளர்ப்பதற்காக இந்த சங்கங்களை அமைத்து அதற்கு ஒரு நிர்வாக குழுவை உருவாக்கி அதில் தலைவர்,செயலாளர்,காசாளார் பதவிகளை அடிபட்டு பெற்று சமுதாயத்தில் அங்கீகாரம் பெறுகிறார்கள்.ஆனால் சங்கங்களது நோக்கங்களை நிறை வேற்றுவதிலும் பார்க்க தனி நபர்களின் நோக்கங்களும் ஆசைகளும் இந்த சங்கங்கள் மூலம் நிறைவடைகிறது.இது தாயகத்தில் அரசியல் ,ஆயுதப்போராட்டம் போன்றவற்றில் தொடங்கி இன்று புலம் பெயர்ந்த தேசங்கள்வரை செல்கின்றது. சங்கங்களை உருவாக்குவதில் இருக்கும் ஒற்றுமை அதை உடைப்பதிலும் எம்மவருக்கு உண்டு.ஒரு சங்கம் தொட…
-
- 2 replies
- 2.3k views
-
-
எங்களை வரிசையாக நிற்க சொன்னார்கள். சேறு பூசிய எங்கள் உடம்பில் இடுப்பிற்கு கீழே மறைப்பதற்கான உள்ளாடையை தவிர எதுவுமே இல்லை. எந்த திசையை நோக்கி நிற்கிறோம் என்று கூட தெரியாமல் கண்கள் கட்டப்பட்டிருந்தன. வெறும் கால்களால் தடவியதில் நாங்கள் ஒரு சேற்று பகுதி நிறைந்த புற்தரையில் நிற்பதை உணர்ந்தேன். எங்களுக்கான வரிசைக்குப் பின்னே பெண்களை கண்கள் கட்டிய நிலையில் வரிசைப்படுத்தி இருந்தார்கள். அவர்களின் பரிதவிப்பான குரல்களும் அடுத்த நிலை தெரியாத தவிப்பும் அவர்களின் குரல்களில் ஒலித்தது மட்டும் காதுகளில் கேட்டு கொண்டிருந்தது. எங்களை வரிசைபடுத்தியவர்கள் யாரோ ஒருவரின் கட்டளைக்காக காத்திருப்பது மட்டும் புரிந்தது. அது அவர்களின் பொறுப்பாளனாகவோ அல்லது அவர்களின் தலைவனாக கூட இருக்கல…
-
- 7 replies
- 2.2k views
-
-
இரத்மலான விமான நிலையத்திலிருந்து பாணந்துறைப்பக்கம் நாலாவது தரிப்பிடம் அங்குலான சந்தி. ஆடைதொழிற்சாலைகள் நிறைந்த இடம். அங்கு வேலை செய்யும் இளம் சிங்கள பெண்களுக்கும் குறைவில்லை. நானும் நியாஸும் வெள்ளிகிழமை பின்னேரங்களில் அங்குலான சந்தியில் பிற்ற கொட்டுவ போற 101 பஸ் எடுத்தோம் என்றால், வார விடுமுறையில் வீடு திரும்புகின்ற ஆடை தொழிற்சாலை அழகிகள் தான் எங்கள் பொழுதுபோக்கு. பிகர் மடிக்கிறத்துக்கு என்று எங்களிடம் ஒரு டெக்னிக் இருக்கு. நாங்கள் சீட்டிலே இருந்து கொண்டு நிக்கிற பிகருகளின் காலை சுரண்டுவோம், அவை காலை ஏறி மிதிச்சால் இந்த பிகர் மடியாது. அதேவேளை அவளுகளும் திரும்ப சுரண்டினால் பிகர் மடிஞ்சிட்டு என்று அர்த்தம். இதே மாதிரி நாங்கள் நிண்டு கொண்டு, சீட்டிலே இருக்கிற பி…
-
- 31 replies
- 4.8k views
-
-
கோழியும் ஆமையும் - நிமிடக்கதை பங்குனி வெயில் உச்சியில் அறைந்தது. கடற்கரையை அண்டிய குடிலில் தொங்கிய கடகத்திலிருந்து பாய்ந்த கோழி கொக்கரித்தபடி நின்றது. தரையேறி முட்டைகளைப் பத்திரப்படுத்திவிட்டு அவ்வழியே நடந்து கொண்டிருந்த ஆமை நின்று கோழியைப் பார்த்தது. கோழி '' என்ன பார்க்கிறாய்,, என்று கேட்டது. ஆமையோ ''ஏனிந்தக் கலவரம்! என்றது. கோழி தான் முட்டை போட்ட சோம்பல் முறிக்க என்றது. ஆமையோ சிரித்துவிட்டு விரைந்து கடலோடு கலந்தது. நன்றி
-
- 6 replies
- 2k views
-
-
சிங்கள அரசின் இனவழிப்பின் போது காணாமல் போனவர்களை மீள் கொணர்தல் என்று உறவுகள் நடாத்தும் போராட்டம் தீர்வுகள் கிடைக்காமல் நீண்டு கொண்டே போகிறது. சிறீலங்கா அரசாங்கம் நீதியைப் புறம் தள்ளி தனது அதிகாரத்தை முன்னெடுத்துத் தொடர்ந்தும் போக்குக் காட்டிக் கொண்டே இருக்கிறது. பிள்ளைகளுக்காகப் போராட்டம் நடத்தும் பெற்றோர்களில் பலர் இறந்தும் விட்டார்கள். சமீபத்தில் நான் வாசித்த யேர்மன் நாட்டுச் செய்தி ஒரு தந்தை நடத்திய போராடத்தைப் பற்றியதாக இருந்தது. யேர்மனியச் சட்டம் இப்படி இருக்கிறதா என என்னை ஆச்சரியப்பட வைத்தது. இறுதியாக ஒரு நல்ல முடிவு வரும் என்று நம்பிக்கையுடன் நாற்பது வருடங்களாக மோல்மன் காத்துக் கொண்டிருந்தார். 79 வயதான மோல்மனின் மகள் பிரடெரிக் அவளது 17வது …
-
- 1 reply
- 671 views
-