தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10257 topics in this forum
-
சசிகலாவுக்காகக் களமிறங்கிய சல்மான் குர்ஷித்! -திவாகரன் குடும்பத்தின் 'திடீர்' மூவ் ' இரட்டை இலை சின்னம் யாருக்கு?' என்ற கேள்விக்கான பதில், இன்று மாலை தெரிந்துவிடும். ' தேர்தல் ஆணைய விவகாரத்தை நேரடியாக சசிகலாவே கையில் எடுத்துவிட்டார். தினகரன் தரப்பினர் ஆதிக்கம் செலுத்துவதையும் அவர் விரும்பவில்லை. திவாகரன் மகன் ஜெயானந்த் மேற்பார்வையிலேயே அனைத்து விவகாரங்களும் கையாளப்படுகின்றன' என்கின்றனர், அ.தி.மு.க நிர்வாகிகள். ஆர்.கே.நகர் தொகுதிக்கு, வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. அ.தி.மு.க வேட்பாளராக டி.டி.வி.தினகரன் களம் இறங்குகிறார். வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, சசிகலா குடும்பத்துக்குள் முட்டல், மோதல்கள் அதிகரித்து…
-
- 0 replies
- 831 views
-
-
நாம் தமிழர் மேடையில் ஏறி மைக்கை பிடுங்கிய திமுகவினர் - தருமபுரியில் பரபரப்பு ஏ.எம். சுதாகர் பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@NAAMTAMILARORG தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது தந்தையும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியை தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் மேடையில் ஏறி திமுகவினர் ரகளையில் ஈடுபட்டனர். மேலும், மேடையில் இருந்த மைக்கையும் அவர்கள் பிடுங்கி வீசியதாக காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த காணொளியை பிபிசி தமிழ் தன்னிச்சையாக உறுதிப்படுத்தவில்லை. தருமபுரி மாவட்டம், மொரப்பூர் பேருந்து நில…
-
- 8 replies
- 831 views
- 1 follower
-
-
கோகுல்ராஜ் கொலை: யுவராஜை சிக்கவைத்த சம்பவங்கள் எவை? - பட்டியலிடும் சிறப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் 15 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MOHAN ADVOCATE/FACEBOOK சேலம் கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவையின் தலைவர் யுவராஜ் உள்பட பத்து பேரை குற்றவாளிகள் என மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. `வழக்கின் புலன் விசாரணையில் தொய்வு இருந்தாலும் தானாக முன்வந்து யுவராஜ் கொடுத்த பேட்டியே, அவருக்கு எதிராக மாறிப்போனது' என்கிறார், சிறப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன். சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்…
-
- 0 replies
- 830 views
- 1 follower
-
-
விவசாயி முதல் ஸ்டெர்லைட் விவகாரம் வரை ; எடப்பாடி Vs ஸ்டாலின்...யாருடைய வாதம் மக்களிடம் எடுபடுகிறது? த.கதிரவன் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி விவசாயிகள் போராட்டத்தில் ஆரம்பித்து ஸ்டெர்லைட் போராட்டம் வரை ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான வார்த்தைப் போர், தொடர்ந்து சூடு பிடித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் என இருவரது வாதங்களில் யாருடைய வாதம் மக்களிடையே எடுபடுகிறது என்று விவரிக்கிறது கட்டுரை. 'பச்சைப்பொய் சொல்கிறார், உளறுகிறார், நாவடக்கம் தேவை, எத்தர், போலி விவசாயி!' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வார்த்தைகளால் வசை பாடுகிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். பதிலுக்கு பழனிசாமியும் 'வேலை வெட்டி இல்லா…
-
- 0 replies
- 830 views
-
-
நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன? சென்னை: சட்டமன்றத் தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளுமே தீவிரமாகி வருகின்றன. அ.தி.மு.க. தலைமையில் ஓர் அணியும், தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் களம் காண தயாராகி வருகின்றன. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் கூட்டணி கதவை திறந்து வைத்து மற்ற கட்சிகளுக்காக காத்திருக்கிறது. இப்படி கூட்டணி கட்சிகளின் துணையோடு களம் காண்பதற்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்து போட்டியிட திட்டம் வகுத்து செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் நிர்வாகிகளோடு தொடர்ந்து ஆலோசித்து வருகிறார். மக்க…
-
- 0 replies
- 830 views
-
-
தமிழகத்தை சேர்ந்த விகாஸ் என்பவர் சோமோட்டோவில் உணவு ஆர்டர் செய்ததில் டெலிவரியின் போது, ஒரு பொருள் மட்டும் விடுப்பட்டுள்ளது. இது குறித்து சோமோட்டோ வாடிக்கையாளர் சேவையை சாட் வழியாக தொடர்பு கொண்டிருக்கிறார் அவர். அதில், விடுபட்ட பொருளுக்கான பணத்தை திருப்பித்தர வேண்டும் என கேட்டிருக்கிறார். அவரிடம் சாட் செய்த வாடிக்கையாளர் சேவை பிரிவு அதிகாரி, உங்கள் வட்டார மொழி தடையாக இருக்கிறது. தேசிய மொழியான இந்தியை, ஓரளவு புரிந்து கொள்ளுகின்ற அளவிற்காவது அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என அவருக்கு அறிவுரை செய்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ந்த விகாஸ், இந்த உரையாடல் தொடர்பான ஸ்கிரீன் ஷாட்டுகளை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அவர் வெளியிட்டிருந்த ட்வீட் விரைவாகவே வைரல் ஆனது…
-
- 0 replies
- 830 views
-
-
சென்னை: திருட்டு டிவிடி விவகாரத்தில் ஈழத் தமிழர்கள் குறித்த இயக்குநர் சேரன் பேச்சுக்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன் பொதுவெளியில் சேரன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார். கன்னா பின்னா திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர், ஈழத் தமிழர்கள் திருட்டு டிவிடியை தயாரிப்பதாகவும் அவர்களுக்காக போராடியது அருவருப்பாக இருக்கிறது எனவும் கூறியிருந்தார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சேரனின் இந்த பேச்சு குறித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறியுள்ளதாவது: ஈழத் தமிழருக்காக போராடுவது என்பது தமிழர் கடமை. நாம் பிறந்த இந்த சமூகத்துக்காகப் போராடுவது என்பது கடமை. ஒருவரை போராட வருமா…
-
- 2 replies
- 830 views
-
-
யார்? கோடநாடு கொள்ளையில் உண்மையான...குற்றவாளிகள் யார்? அவிழாத மர்ம முடிச்சு;அவசரமாக முடித்த போலீஸ் கோடநாடு எஸ்டேட் கொலையில் தொடர்புடைய உண்மையான, 'மாஸ்டர் மைண்ட்'களை, அரசியல் நெருக்கடி காரணமாக தப்பிக்கவிட்டுள்ள போலீசார், கூலிப்படையினரை மட்டும் கணக்கில்காட்டி, வழக்கை மூட முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பங்களா அறைகளில் ஜெ., சொத்து ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதா, என்பது குறித்து, புலனாய்வு ஏஜென்சிகளின் விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, மத்திய உள்துறைக்கு மனு அனுப்பியுள்ளனர் நீலகிரி அ.தி.மு.க.,வினர். 'கடந்த, 23ம் தேதி நள்ளிரவு, நீலகிரி…
-
- 0 replies
- 829 views
-
-
தமிழர்கள் பொறுக்கிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்: சுப்பிரமணியன் சுவாமி வரம்பு மீறிய கருத்து! தமிழர்களின் அடையாளமாக இருக்கும் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதை கண்டித்து தமிழகம் முழுவதும் இளைஞர்கள், விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பொறுக்கிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் தமிழகத்தில் ஆட்சியை கலைத்து மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என கூறியிருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடி வரு…
-
- 2 replies
- 829 views
-
-
மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் தோற்கடிப்போம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறயுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மறைந்த சுபா. முத்துக்குமாரின் நினைவிடத்தில் 2-ம் ஆண்டு நினைவு அஞ்சலி நடைபெற்றது. இதற்கு வருகை தந்த சீமான் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது: கர்நாடகாவில் ஆதரவு “அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதால் வெறுப்படைந்த ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களைய சமாதானப்படுத்தவும், காங்கிரஸ் கட்சிக்கு பலவீனமாக உள்ள கர்நாடகாவில் ஆதரவு திரட்டவேண்டும் என்பதற்காகத்தான் வீரப்பன், ராஜீவ் காந்தி ஆகியோர் கொலை வழக்கில் சேர்க்கப்பட்டோருக…
-
- 1 reply
- 829 views
-
-
ஆ. விஜயானந்த் பிபிசி தமிழுக்காக சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை முடித்துவிட்டு தமிழ்நாடு திரும்பிய சசிகலா, அடுத்தடுத்து மேற்கொள்ளவிருக்கும் திட்டங்கள் தயாராக இருப்பதாகவும், அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அந்த திட்டங்களில் ஒன்றுதான், தமிழகம் முழுவதும் சசிகலாவின் சுற்றுப்பயணம். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி வி.கே.சசிகலா விடுதலையானார். அதற்கு முன்னதாக கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படவே, பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு கடந்த ஜனவரி 31 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருப்பினும், அவ…
-
- 0 replies
- 829 views
-
-
பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் விடுவிப்பு: வழக்கறிஞர் வில்சன். சென்னை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் இன்று முதல் விடுவிக்கப்படுவதாக திமுக மாநிலங்களவை எம்பியும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான வில்சன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (ஏப். 4) அளித்துள்ள தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. துணை வேந்தர் நியமனம், கைதிகளுக்கான தண்டனை குறைப்பு, டிஎன்பிஎஸ்சி பணி நியமனம் உள்பட எந்த மசோதாவை அனுப்பினாலும் அவற்றுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இர…
-
-
- 17 replies
- 829 views
- 1 follower
-
-
தொலைபேசிகளை பாதுகாத்த கோயிலுக்கு 2 கோடி ரூபாய் வருமானம்! மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு கடந்த 10 மாதங்களில், கையடக்கத் தொலைபேசி பாதுகாப்பு கட்டணம் மூலம் ஒரு கோடியே, 99 இலட்சத்து 10 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி மீனாட்சியம்மன் கோயில் கிழக்கு கோபுர வாசலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 50 கடைகள் எரிந்து நாசமானதுடன் கோயிலில் இருந்த பெருமளவான புறாக்களும் தீயில் கருகின. தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவம் ஆட்சியாள…
-
- 2 replies
- 829 views
-
-
`28 வயதில் எம்.பி; 1,000 பள்ளிகளை திறந்து சாதனை’ - 101 வயதில் மறைந்த டி.எம்.காளியண்ணன் கவுண்டர் துரை.வேம்பையன்நா.ராஜமுருகன் காளியண்ணன் கவுண்டர் ( நா.ராஜமுருகன் ) இந்தப் பதவியை வைத்து ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தில் ஆயிரம் பள்ளிகளை இவர் திறந்தார். 'இங்குள்ள பிள்ளைகள் நாலெழுத்து படிக்கோணும். அதுக்காகதான் ஆயிரம் பள்ளிகள். கடைக்கோடி பிள்ளைக்கும் கல்வி கிடைக்கணும்னா, இன்னும் அதிகம் பள்ளிகளை திறப்பேன்' என்று தெரிவித்தார். 28 வயதில் இந்திய அரசியல் நிர்ணய சபை எனப்படும் திருச்செங்கோடு முதல் பாராளுமன்ற உறுப்பினர், 1,000 பள்ளிகளை திறந்த கல்வியாளர், 36 முறை தேர்தலைச் சந்தித்தவர், ஜமீன்தார் என்றாலும், தனது சொத்துகளை மக்களுக்காக செலவிட்டவர…
-
- 3 replies
- 829 views
-
-
தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வரும் அரசியல் படுகொலைகள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை... பா.ஜ.க.வைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் சிலரும், அவர்களோடு கொள்கை உறவு கொண்ட இந்து சமயக் கட்சியினர் சிலரும் அடுத்த டுத்து கொல்லப்பட்டுள்ளனர். இம்மாத தொடக்கத்தில் அக்கட்சியைச் சேர்ந்த வெள்ளையப்பன் என்பவர் இதேபோன்று கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார். மற்றொரு மாநில நிர்வாகியான காந்தி என்பவர் நடைபயிற்சி செய்துக் கொண்டிருந்தபோது பட்டப்பகலில் நடந்த கொலை முயற்சியில் இருந்து படுகாயத்துடன் தப்பியுள்ளார். தங்கள் கட்சியினர் அடுத்தடுத்து கொல்லப்பட்டதை பட்டியலிட்டுள்ள அக்கட்சியின் பொதுச் செயலர் தமிழ…
-
- 3 replies
- 829 views
-
-
கொடநாடு விவகாரத்தில் முன்னாள் மந்திரி,முக்கியப் பிரமுகர்களும் சிக்குகிறார்கள்! முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில், கடந்த ஏப்ரல் 24-ம் தேதி கொலை, கொள்ளை நடந்தது. எஸ்டேட்டில் காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டார், பங்களாவில் கொள்ளையும் போயிருந்தது. கொலை-கொள்ளையில் பலர் சம்பந்தப்பட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கொள்ளையர்கள் தாக்குதலில் காயங்களுடன் உயிர்தப்பிய காவலாளி கிருஷ்ண பகதூர் கொடுத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் சிக்கினர். ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், கனகராஜின் கூட்டாளி சயன், ஹவாலா மோசடி ஆசாமியும் சாமியாருமான மனோஜ் மற்றும் சந்தோஷ், தீபு, சதீஷன், உதயகுமார், ஜிபின் ஜோய், ஜம்சீர் அலி, குட்டி என்ற ஜிஜின், சாமி என்ற …
-
- 2 replies
- 829 views
-
-
கரூரில், ரயில் நிலையத்தின் பெயரை சமஸ்கிருதம் கலந்த தமிழில் மாற்றி எழுதியதால் எழுந்த எதிர்ப்பை அடுத்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் மீண்டும் தமிழில் எழுதியுள்ளது. தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் நடைமேடைகளில் சிமெண்டால் அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகள் இரும்பால் மாற்றப்பட்டு வருகின்றன. அப்படி மாற்றும் பொழுது கரூர் மாவட்டம் மகாதானபுரத்தில் உள்ள ரயில் நிலையத்திலும் கான்கிரீட்டால் அமைக்கப்பட்ட பெயர் பலகைகள் இரும்பால் மாற்றப்பட்டன. அப்போது மகாதானபுரம் என்று இருந்த தமிழ் எழுத்துக்களை மாற்றி மஹாதானபுரம் என சமஸ்கிருத எழுத்துகளை பயன்படுத்தி எழுதியிருந்தனர். இது குறித்து அறிந்த தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், தமிழில் இருந்த ப…
-
- 9 replies
- 828 views
-
-
ஆசிரியர் செல்லாத தீவு: பள்ளிக்கு தினம் படகில் செல்லும் மாணவர்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழக-ஆந்திர எல்லையோரத் தீவுக் கிராமத்தில் வாழும் மாணவர்கள், ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு செல்ல படகில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இந்த கிராமத்தில் அமைந்துள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. தமிழ் நாட்டுக்கும், ஆந்திரப் பிரதேசத…
-
- 0 replies
- 828 views
-
-
மிஸ்டர் கழுகு - ஓ.பி.எஸ்ஸைக் கேள்வி கேட்ட இளைஞன்! ‘‘தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு யார் காரணம் என்று கடந்த இதழில் நீர் குறிப்பிட்டிருந்த விவரங்கள் சமூகவலைத் தளங்களில் வைரலாகப் பரவியது. அதுபோல், எல்லா வாட்ஸ்-அப் குரூப் களிலும் ஃபார்வேர்டு செய்யப்பட்டது. அதைக் கவனித்தீரா?” என அலுவலகம் வந்த கழுகாரிடம் கேட்டோம். “ஆமாம்” என்று தலையசைத்த கழுகார், நேரடியாக விஷயத்துக்கு வந்தார். ‘‘தூத்துக்குடியில் இன்னமும் வெப்பம் தணியவில்லை. ஆட்சியாளர்கள்மீதான கோபம் கூடிக்கொண்டே போகிறது. துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இளைஞர் ஒருவரின் கேள்வியால் அமைச்சர் கடம்பூர் ராஜு அதிர்ந்து விட்டார். தூத்துக்குடியில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூடு, லத்திசார்ஜ் ஆக…
-
- 0 replies
- 828 views
-
-
நேற்று சனிக்கிழமை மாலை 20 க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் சென்னையில் ஒன்று கூடி பாராளுமன்ற தேர்தலில் தமிழர்கள் எவ்வாறு போட்டியிடுவது என்று விவாதித்தனர். திராவிடக் கட்சிகள், இந்திய தேசியக் கட்சிகளுக்கு மாற்றாக தமிழ்த் தேசிய கூட்டணி ஒன்றை உருவாக்கி தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த கூட்டணியில் தற்போது பெரிய கட்சிகள் இணையவில்லை என்றாலும் தமிழ் உணர்வாளர்கள் ஒன்று கூடி தங்கள் பலத்தை நாற்பது தொகுதிகளிலும் காட்டவுள்ளனர் என்பது மற்றும் உறுதி செய்யப்பட்டது. தமிழர் நாடு தமிழர் வசம் வருவதற்கு நூறாண்டு திட்டம் வகுக்கப்பட்டு அதில் முதல் கட்டமாக இந்த முன்னெடுப்பு நடக்க உள்ளது. தமிழர் அரசியல் 70 ஆண்டு காலம் பின்தங்கியுள்ள நிலையில் இனியாவது துணிந்து இன நலம் சார்ந…
-
- 4 replies
- 828 views
-
-
இலங்கை ஏர்லைன்ஸ் அலுவலகம் மீது கல்வீச்சு! சென்னை: சென்னையில் உள்ள இலங்கை ஏர்லைன்ஸ் அலுவலகத்தின் மீது அடையாளம் தெரியாத சிலர் இன்று கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் அந்த அலுவலகத்தின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இரு சக்கர வாகனங்களில் வந்த 3 பேர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் அந்த அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருப்பதாகவும், அதை ஆராய்ந்து குற்றவாளிகளை கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பிறகு, இலங்கை ஏர்லைன்ஸ் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு ம…
-
- 1 reply
- 828 views
-
-
சந்திரயான் 2 திட்டத்தை உலகமே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. ஆர்பிட்டரிலிருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கி ஆய்வுசெய்யும் என்பதுதான் திட்டம். ஆனால், எதிர்பாராத விதமாக, சந்திரனை நெருங்கிக்கொண்டிருக்கும்போது, லேண்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்த விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன் படித்த அரசுப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க பெற்றோர் மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர். இஸ்ரோ தலைவராக சிவன் பதவி ஏற்றதிலிருந்து அவர் படித்த பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை ஏறுமுகமாகவே உள்ளது. இந்தப் பள்ளிக்கு எதிரில்தான் இஸ்ரோ தலைவர் சிவனின் வீடும் இருக்கிறது. …
-
- 0 replies
- 827 views
-
-
மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தன்னை அரசியலுக்கு வரவேண்டுமென வலியுறுத்தி நிகழ்வுகளை நடத்தி தன்னை மேலும் மேலும் வேதனைக்குள்ளாக்க வேண்டாம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்வைத்து, புதிய கட்சி ஒன்றைத் துவங்கி அரசியலில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்துவந்த ரஜனிகாந்த், சில நாட்களுக்கு முன்பாக அந்த முடிவிலிருந்து பின்வாங்கினார். தன்னுடைய உடல்நிலையின் காரணமாக தான் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என அறிக்கை ஒன்றின் மூலமாக ரஜினிகாந்த் தெரிவித்தார். இந்த நிலையில், அவரை அரசியலுக்கு வர வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்…
-
- 2 replies
- 827 views
-
-
எம்.எல்.ஏ. பதவியிலிருந்து விலகுவது தொடர்பான தனது முடிவை சட்டசபை சபாநாயகர் தனபாலுக்கு பண்ருட்டியார் அனுப்பி வைத்துள்ளார். அதில், உடல் நிலை சரியில்லாததாலும், வயதானதாலும் எனது எம்.எல்,ஏ., பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். மேலும், தேமுதிக பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். அதேபோல தீவிர அரசியலை விட்டு விலகுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். கடந்த சட்டசபைத் தேர்தலில் ஆலந்தூர் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பண்ருட்டி ராமச்சந்திரன். சட்டசபைத தேமுதிக துணைத் தலைவராகவும், தேமுதிக அவைத் தலைவராகவும் இருந்து வந்தார் பண்ருட்டியார். பண்ருட்டி தொகுதியிலிருந்து 6 முறை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவர். கடைசியாக ஆலந்தூர் தொகுதி…
-
- 5 replies
- 827 views
-
-
மிஸ்டர் கழுகு: பன்னீரின் டெல்லி பன்ச் டயலாக்! எருதுப் புரட்சி! வாடிவாசல் திறக்கும்வரை வீடு வாசல் போகமாட்டோம்’ என்ற வாசகம் பொறித்த பனியனோடு அலுவலகம் வந்து சேர்ந்த கழுகாரிடம், ஜல்லிக்கட்டிலிருந்தே கேள்விகளை ஆரம்பித்தோம். ‘‘மத்திய அரசு நினைத்திருந்தால்... தமிழக எம்.பி-க்கள் போராடி இருந்தால்... ஜல்லிக்கட்டு திருத்தச் சட்டம் கொண்டுவந்திருக்கலாம் என முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு சாட்டையடி கொடுத்திருக்கிறாரே?’’ ‘‘உண்மைதான். அவர் இதற்கு தெளிவான முன்னுதாரணமும் கொடுத்திருந்தார். ‘இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என கடந்த 75-ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு தந்தது. இதனால் அவர் பிரதமராகத் தொடர முடியாத நிலைமை ஏற்பட்டது. …
-
- 0 replies
- 827 views
-