தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10242 topics in this forum
-
கிருபானந்த வாரியாரின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்: வேலூரில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வேலூர் திருமுருக கிருபானந்த வாரியாரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 25-ம் தேதி இனி அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என்று வேலூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் இன்று (பிப்.9) இரவு நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: ‘‘தமிழகத்தில் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி அதிமுகதான். 30 ஆண்டுகள் ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் எப்போது…
-
- 2 replies
- 608 views
-
-
சீனாவுக்கு 3 தீவுகளை தாரைவார்த்த இலங்கை; இந்திய அரசு என்ன செய்யப்போகிறது?: ராமதாஸ் கேள்வி 32 Views இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப்பெறுவது, இலங்கையில் தமிழர்களின் கரங்களை வலுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலமாகத் தான் சீனாவின் அச்சுறுத்தலை முறியடிக்க முடியும், எனவே, அதற்கேற்ற வகையில் இலங்கை சார்ந்த தனது வெளியுறவுக் கொள்கையை இந்தியா மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை வருமாறு: “இலங்கையில் என்ன நடக்கக்கூடாது என்று அஞ்சிக் கொண்டிருந்தோமோ, அது கடைசியாக நடந்தே விட்டது. தமிழ்நாட்டை ஒட்டியுள்ள 3 தீவுகளை சீனாவுக்கு எழுதிக் கொடு…
-
- 0 replies
- 400 views
-
-
தூங்காநகர நினைவுகள் - 1 | மதுரை... நகரமே வரலாறா... வரலாறே நகரமா?! அ.முத்துக்கிருஷ்ணன் தூங்காநகர நினைவுகள் - 1 | மதுரை... நகரமே வரலாறா... வரலாறே நகரமா?! தூங்காநகர நினைவுகள் ஒரு நகரமே வரலாற்றின் சாட்சியமாக விளங்க இயலுமா, ஒரு நகரத்தின் எல்லா மூலை முடுக்கிலும் வரலாறு தஞ்சம் புக இயலுமா என்கிற கேள்விகளுக்கு மதுரையின் ஒவ்வொரு சதுர அடி நிலமும் பதிலளித்தது. வரலாறு நாம் அனைவருமே பத்தாம் வகுப்பு வரை படித்த ஒரு பாடம். பள்ளிப் பருவத்தில் வரலாறு சிலருக்குப் பிடித்த பாடமாகவும் சிலருக்கு மனப்பாடம் செய்து எப்படியாவது ‘பாஸ்’ ஆனால் போதும் என்ற பாடமுமாகவே இருந்திருக்கும். என் பள்ளிப் பருவத்தில் எனக்கு வரலாற்று பாடம் என்றாலே பெரும் ப…
-
- 0 replies
- 768 views
-
-
15 நாட்களில் பயிர் கடன் தள்ளுபடி ரசீது வழங்கப்படும்- எடப்பாடி பழனிசாமி ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கைனூரில் எடப்பாடி பழனிசாமி இன்று தனது 5-வது பிரசார பயணத்தை தொடங்கினார். அப்போது அங்கிருந்த மகளிர் குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்ற காலத்திலிருந்து கிராமப்புறத்தில் இருக்கின்ற மகளிர் முதல் அனைத்து மகளிருக்கும் சொந்தமாக தொழில் துவங்க சுய உதவி குழு உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் மட்டும் 7404 குழுக்கள் உள்ளது. ரூ.288 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.கடன் பெற்ற அனைத்து மகளிர் சுயஉதவி குழு மிக சிறப்பாக செயல்பட்டு வாங்கிய கடனை சரியான முறையிலே உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்துகின்றனர்.சுய உதவி குழ…
-
- 0 replies
- 414 views
-
-
எனக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணி – பிரேமலதா விஜயகாந்த் தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணி என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தை இப்போதே அரசியல் கட்சியினர் ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், செய்யூர், செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி பூத் முகவர்கள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணிதான் என்றும், தனித்து போட்டியிடுவது என்பது புதிதானது இல்லை எ…
-
- 1 reply
- 724 views
-
-
`2,000 கார்கள்; ஹெலிகாப்டரில் மலர் தூவல்!’ -சசிகலாவை வரவேற்கத் தயாராகும் ஆதரவாளர்கள் லோகேஸ்வரன்.கோ சசிகலா ஒரேநேரத்தில் முதல்வரும் சசிகலாவும் நேருக்கு நேர் வேலூரைக் கடப்பது தேவையில்லாத சங்கடங்களை ஏற்படுத்தும் என்று உளவுத்துறை மூலம் முதல்வரின் கவனத்துக்குத் தெரிவிக்கப்பட்டது. பெங்களூரில் ஓய்வெடுத்துவரும் சசிகலா நாளை மறுநாள் (8-ம் தேதி) வேலூர் மாவட்டம் வழியாகச் சென்னை திரும்புகிறார். 7-ம் தேதியன்றே சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த சூழலில் சசிகலாவின் பயணத் திட்டம் 8-ம் தேதிக்கு திடீரென மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. 8, 9 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் தேர்தல் சுற்றுப்பயணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வேலூர் வரவிருந்தார். எட…
-
- 5 replies
- 1.3k views
-
-
முடிவெடுக்க அதிகாரம் இல்லை என கூற ஆளுநர் இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டது ஏன் – சீமான் கேள்வி எழுவர் விடுதலையில் முடிவெடுக்க தனக்கு அதிகாரமில்லை என கூறுவதற்கு, ஆளுநர் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது ஏன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் செப்பாக்கம், காட்டுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் துறைமுக விரிவாக்கப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அப்பகுதி மீனவர்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், விவசாய கடன்களை ரத்து செய்வது தேர்தலுக்காகவே என விமர்…
-
- 3 replies
- 600 views
-
-
ஆ. விஜயானந்த் பிபிசி தமிழுக்காக சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை முடித்துவிட்டு தமிழ்நாடு திரும்பிய சசிகலா, அடுத்தடுத்து மேற்கொள்ளவிருக்கும் திட்டங்கள் தயாராக இருப்பதாகவும், அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அந்த திட்டங்களில் ஒன்றுதான், தமிழகம் முழுவதும் சசிகலாவின் சுற்றுப்பயணம். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி வி.கே.சசிகலா விடுதலையானார். அதற்கு முன்னதாக கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படவே, பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு கடந்த ஜனவரி 31 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருப்பினும், அவ…
-
- 0 replies
- 827 views
-
-
காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்துக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் சீமான் அறிவிப்பு திருவொற்றியூர்: திருவொற்றியூர், சாத்துமா நகரில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது:- எண்ணூர் காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்கப்பணிகளை கண்டித்து டெல்லியில் நடைபெறும் போராட்டம் போல் எத்தனை மாதங்கள் ஆனாலும் போராட்டம் நடத்துவேன். அனைத்தையும் தனியாருக்கு விற்றுவிட்டு எதையும் காணோம் என்று தேடும்போது இதுதான் கிளீன் இந்தியா திட்டம் என்று கூறுகிறார்கள். ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்வதற்கு எதற்காக எட்டு வழிசாலை? வேகமாக சென்று என்ன செய்ய போகிறீர்கள். இவ்வாறு …
-
- 0 replies
- 557 views
-
-
கறுப்பர் கூட்டம் நாத்திகன், செந்தில்வாசன் மீதான குண்டர் சட்டம் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு செய்திப்பிரிவு கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாகச் சித்தரித்த குற்றச்சாட்டில் கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலைச் சேர்ந்த நாத்திகன் மற்றும் செந்தில்வாசன் ஆகியோர் மீது குண்டர் சட்டம்போடப்பட்டது. இதை எதிர்த்து அவர்கள் தொடர்ந்த வழக்கில் இருவர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம்ரத்து செய்துள்ளது. கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாகச் சித்தரித்த குற்றச்சாட்டில் கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலைச் சேர்ந்த நாத்திகன் என்கிற சுரேந்திரன், செந்தில்வாசன், சோமசுந்தரம், குகன் ஆகியோரை சென்னை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களில் நாத்திகன் மற்றும் செந்தில்வாசன் ஆகியோ…
-
- 1 reply
- 429 views
-
-
சென்னை அருகே வாழ்ந்த ஆதி மனிதர்கள்: 3,85,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு சென்னையை அடுத்துள்ள அதிரம்பாக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த கற்கருவிகள், 3,85,000 வருடத்திலிருந்து 3,25,000 வருடங்களுக்குள் இடைக்கற்காலம் அங்கு நிலவியிருக்கலாம் என்று காட்டுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. தெற்காசியாவில் இடைக் கற்காலம் முன்பு கருதப்பட்டதைவிட முன்கூட்டியே நிகழ்ந்திருக்கலாம் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. படக்குறிப்பு, சமீபகாலம் வரை கற்கருவிகளை பயன்படுத்தும் கலாசாரம், 90,000 வருடங்களிலிருந்து 1,40,000 வருடங்களுக்குள் இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், சென்னைய…
-
- 1 reply
- 846 views
-
-
தமிழகத்தின் அமைதியை குலைப்பதற்காக சசிகலா, தினகரன் சதித் திட்டம் தீட்டுவதாகவும் அவர்கள் தமிழகத்தில் கலவரத்தை தூண்டுவதாகவும் கூறி அதிமுக மூத்த அமைச்சர்கள் தமிழக காவல்துறை தலைவரிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால் அமைச்சர்களே சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க ஏதாவது செய்வார்களோ என்ற அச்சம் இருப்பதாக அமமுக பொது செயலாளரும் சசிகலாவின் உறவினருமான டி.டி.வி தினகரன் எதிர்வினை ஆற்றியுள்ளார். '100 பேர் மனித வெடிகுண்டு' கடந்த வாரம் சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை முடித்து சசிகலா வெளியேறினார். அவரது காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது சர்ச்சையாக மாறியது. அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த கூடாது என்றும் தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் சசிகலா, த…
-
- 0 replies
- 396 views
-
-
`ரூ.12,110 கோடி விவசாய கடன் தள்ளுபடி - தமிழக அரசு அறிவிப்பு' - விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்? கு. ராமகிருஷ்ணன் விவசாயம் தமிழக அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம் இதன் பலன் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறார்கள் அவர்கள். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 12,110 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாகவும், இதனால் 16 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் எனவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது விவசாயிகளை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம் இதன் பலன் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறார்கள்…
-
- 1 reply
- 429 views
-
-
திமுக எத்தனை? கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை? மின்னம்பலம் திமுக கூட்டணி இன்றைய நிலவரம் திமுக சார்பில் கடந்த சில வாரங்களாகவே கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள் சந்தித்திருக்கிறார்கள். ”உங்களுக்கு இத்தனை சீட்டுதான், தலைவர் சொல்லச் சொன்னார்” என்று அந்த நபர் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் முன்னே நின்று சொல்லும்போதே அந்தத் தலைவர்களுக்கு அதிர்ச்சி ஆகிவிட்டது. காரணம் அவர் சொன்ன சீட்டுகளின் எண்ணிக்கை அவ்வளவு குறைவாக இருந்தது. உதாரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்தித்த ஸ்டாலினுக்கு நெருக்கமான பிரமுகர், “உங்களுக்கு வரும் தேர்தலில் இரு சீட்டுகள்தான்” என்று சொன்னதையும் அதைக் கேட்டு திருமா அதிர்ந்ததையும் நாம் …
-
- 0 replies
- 419 views
-
-
எழுவர் விடுதலை `அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஏழு பேரையும் விடுதலை செய்தே ஆகவேண்டும். உச்சநீதிமன்றமும் அதனால்தான் அழுத்தம் கொடுக்கிறது' என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் தரப்பில், 7 பேர் விடுதலை விவகாரத்தில் முடிவு எடுக்கும் அதிகாரம் குடியரசு தலைவருக்கே இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த 2018, செப்டம்பர் 9-ம் தேதி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்வதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநருக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், ஆளுநர் அந்த மனு மீது எந்த முடிவும் எடுக்காமல் …
-
- 3 replies
- 778 views
-
-
முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்கோரிய வழக்கு தள்ளுபடி! முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்கோரிய வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது. தமிழ் இலக்கியங்களின் அடிப்படையில், முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து அரசிதழில் வெளியிடக்கோரி ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முருகனுக்கு அழகு, திறமை, அறிவு என பல பெயர்கள் உள்ளதுபோல், தமிழ் கடவுள் என அழைப்பதை எவ்வாறு அரசிதழில் வெளியிட முடியும், என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பல மொழி, மதம், நம்பிக்கையை கொண்ட மக…
-
- 98 replies
- 7k views
-
-
ஏழு பேர் விடுதலையில் தாமதம் ஏன்? பேரவையில் முதல்-அமைச்சர் பழனிசாமி விளக்கம் சென்னை, சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து முதல்-அமைச்சர் பழனிசாமி பேசியதாவது:- ஏழு பேர் விடுதலை விஷயத்தில் உண்மைக்கு மாறான தகவல்களை திமுக பரப்பி வருகிறது. 2018 ஆம் ஆண்டு 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் கருணை மனுவை கருணாநிதி அமைச்சரவை நிராகரித்தது. மூவரின் தண்டனையை குறைக்க மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அரசு தீர்மானம் நிறைவேற்றியது. அதிமுக தீர்மானத்தினை எதிர்த்து அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றத்தி…
-
- 12 replies
- 1.3k views
-
-
ஈழத் தமிழரின் நீதிக்கான போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்: சீமான் 25 Views தற்போது ஈழத்தில் நடைபெற்று வரும் தொடர் போராட்டம் வெற்றி பெறட்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஈழத்தில் சிங்களப் பேரினவாத அரசால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இனஅழிப்புப் போரில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைக் கேட்டு கிளிநொச்சி கந்தசாமி கோயில் முற்றத்தில் நடைபெற்று வரும் பட்டினிப் போராட்டமும், பொத்துவிலிலிந்து தொடங்கியிருக்கும் நடைப்பயணமும் நம்பிக்கையைத் தருகிறது. சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களின் கோர அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் நெஞ்சுரத்தோடு போராட்டத்தை மு…
-
- 1 reply
- 899 views
-
-
http://athavannews.com/wp-content/uploads/2021/02/Accident-1-720x380.jpg காஞ்சிபுரம், கல்குவாரியில்.. பாறைகள் சரிந்து விழுந்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு – 20இற்கும் மேற்பட்டோர் மாயம்! காஞ்சிபுரம் – உத்திரமேரூர் அருகே தனியார் கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்த கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்தோடு, 20க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், பாறைகள் சரிவு காரணமாக மீட்பு பணிகளிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் – உத்திரமேரூர் அடுத்த மதூர் பகுதியில் சென்னையைச் சேர்ந்த முத்து என்பவருக்கு சொந்தமான ஆறுபடை என்ற கல்குவாரி இயங்கி வந்தது. இங்கு இன்று (வியாழக்கிழமை) காலை வழக்கம்போல் 40-க்கும் மேற்…
-
- 0 replies
- 362 views
-
-
தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: அரசு கொடுத்த வலி... அரசியல் பிரவேசம் - சகாயம் ஐ.ஏ.எஸ் சிறப்புப் பேட்டி 4 பிப்ரவரி 2021, 11:48 GMT புதுப்பிக்கப்பட்டது 54 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SAHAYAM FB தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக 7 ஆண்டுகளாகப் பதவி வகித்து வந்த சகாயம் ஐ.ஏ.எஸ், இந்திய ஆட்சிப் பணியில் இருந்து கடந்த ஜனவரி 6ம் தேதி விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார். 2020ஆம் ஆண்டு அக்டோபர் 2 காந்தி பிறந்த நாளன்று விருப்ப ஓய்வு கேட்டு தமிழக அரசிடம் விண்ணப்பித்த சகாயத்தை, நூறு நாள்களுக்குப் பிறகு பணியில் இருந்து விடுவித்துள்ளது, தமிழக அரசு. அரசுப் பணியில் கிடைத்த அனுபவங்கள், ஓய்வுக்குப் பிறகான நடவடிக்கைகள் குறித்…
-
- 0 replies
- 836 views
- 1 follower
-
-
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் - இலங்கை அரசுக்குக் கண்டனம் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது உள்ளிட்ட நிகழ்வுகள் ஏற்றுக்கொள்ள முடியாத செயல். இது குறித்து இலங்கை அரசிடம் மிகக் கடுமையான முறையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்று மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துப் உரையாற்றிய மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் குறிப்பிட்டார். மாநிலங்களவையில் நேரமில்லா நேரத்தில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் அதிமுக உறுப்பினர் தம்பிதுரை ஆகியோர் இலங்கை கடற்படையினர் சமீபத்தில் தமிழக மீனவர்கள் 4 பேரை கொலை செய்ததாகக் கூறி அது தொடர்பாக பிரச்சினை எழுப்பினர். திருச்சி சிவா உரையாற்றுகையில், கடந்த மாதம் தமிழகத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் கா…
-
- 0 replies
- 341 views
-
-
தனி தமிழ் ஈழம் அமைந்திட பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – உலக தலைவர்களிடம் வைகோ கோரிக்கை by : Dhackshala http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2019/07/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B.jpg தனி தமிழ் ஈழம் அமைந்திட பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உலக தலைவர்களுக்கு தி.மு.கழகத்தின் சார்பில், பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பாக அவர், நூற்றுக்கும் மேற்பட்ட மின் அஞ்சல் கடிதங்களை அனுப்பி உள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அவுஸ்ரேல…
-
- 3 replies
- 470 views
-
-
தி.மு.க.கூட்டணியில் தொடர்ந்து பயணிக்க முடியும்- ம.தி.மு.க ‘சட்டசபை தேர்தலில் தி.மு.க.கூட்டணியில் தொடர வேண்டும் என்பதில் ம.தி.மு.க. உறுதியாக உள்ளது’ என அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. அதில் அ.தி.மு.க. அரசை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற வேண்டும். கடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திப்பது என்ற முடிவை ம.தி.மு.க. எடுத்தது. அதேநிலை சட்டசபை தேர்தலிலும் தொடர வேண்டும் என்பதில் ம.தி.மு.க. உறுதியாக இருக்கிறது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மேலும் தேர்தல் திகதி தொடர்பாக தேர்தல் ஆணையகத்தின் அறிவிப்பு ஓரிரு …
-
- 0 replies
- 549 views
-
-
ஈழத்தமிழர் படுகொலை குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணைதேவை: தமிழக முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் 73 Views “ஈழத்தமிழர் படுகொலை உள்ளிட்ட போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும்; இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச தடை விதிக்க வேண்டும்; குற்ற ஆதாரங்களை திரட்டி ஆவணப்படுத்த சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தின் நகல்கள…
-
- 2 replies
- 360 views
-
-
நளினியைச் சந்திக்க அனுமதி கோரி சிறைத்துறை நிர்வாகத்திடம் முருகன் மனு 14 Views நளினியைச் சந்தித்துப் பேச அனுமதி வழங்க வேண்டும் எனவும், தனக்கு சிறையில் விதிக்கப்பட்ட தடைகளை இரத்து செய்ய வேண்டும் எனவும் சிறைத்துறை நிர்வாகத்திடம் முருகன் மனு அளித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச் சிறையிலும் கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ளனர். முருகன்-நளினி தம்பதி என்பதால் இருவரும் 15 நாட்களுக்கு ஒரு முறை சந்தித்துப் பேச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்நிலையில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரண…
-
- 0 replies
- 422 views
-