Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நீதிமன்றத் தாமதத்தாலும், குழப்பமான நடைமுறைகளாலும் நானும் பாதிக்கப்பட்டேன்’: நாளை ஓய்வுபெறும் உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதி உருக்கம் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி : கோப்புப்படம் புதுடெல்லி நீதிமன்றம் நீதி வழங்குவதில் ஏற்பட்ட தாமத்தாலும், குழப்பமான நடைமுறைகளாலும் நானும் பாதிக்கப்பட்டேன். விபத்தில் இறந்த என் தந்தைக்கு இழப்பீடு பெறுவதில் கடும் சிக்கல் இருந்தது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி உருக்கமாகத் தெரிவித்தார். தமிழகத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி நாளை (19-ம் தேதி) ஓய்வுபெற உள்ளார். அவருக்கு நேற்றுதான் கடைசி வேலை நாள் என்பதால், அவருக்கு அளிக்கப்பட்ட பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். …

  2. ஆம்பூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 103 வயது மூதாட்டி குணமடைந்து வீடு திரும்பினார் ஆம்பூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 103 வயது மூதாட்டி குணமடைந்து இன்று வீடு திரும்பினார். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியவரிக்கம் கிராமத்தைச் சேர்ந்த 103 வயது மூதாட்டி ஒருவர், தன்னுடைய மகள் மற்றும் மகள் வயிற்றுப் பேத்தி ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். 4 தலைமுறைகளைக் கண்ட மூதாட்டிக்கு 13 பிள்ளைகள். இவர்களில் 12 பேர் தற்போது உயிருடன் இல்லை. இவருடைய மகளும், பேத்தியும் கணவரை இழந்தவர்கள். வாழ்வாதாரத்துக்காக ஆம்பூரில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் மூதாட்டியின் பேத்தி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். இந்நிலையில், மூதாட்…

  3. சர்வதேச விருது பெற்ற இஸ்ரோ தலைவர் இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவராக பணியாற்றி வரும் சிவனுக்கு இந்த ஆண்டிற்கான வோன் கார்மான் விருது வழங்கப்பட இருக்கிறது. இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவராக பணியாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த சிவன் அவர்களுக்கு, விண்வெளித் துறையில் உயர்ந்த விருதாக போற்றப்படும் 'வோன் கார்மான்' விருதிற்காக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். 2020 ஆம் ஆண்டிற்கான இந்த விருதினைப் பெறும் மூன்றாவது இந்தியர் ஆவார். இதற்கு முன் இந்த விருதை பேராசிரியர் உடுப்பி இராமச்சந்திர ராவ் அவர்களுக்கு 2005 ஆம் ஆண்டிலும், 2007 ஆம் ஆண்டில் டாக்டர் கிருஷ்ணசுவாமி கஸ்தூரிரங்கன் அவர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது…

  4. இந்து கடவுள்களை அவமதிப்பு வழக்கு பதிவு | வழக்கறிஞர் சரவணன்

  5. சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு: சென்னை மண்டலத்தில் 96.17 % பேர் தேர்ச்சி சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் போக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார். பதிவு: ஜூலை 13, 2020 14:19 PM புதுடெல்லி, மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில் (சி.பி.எஸ்.இ.) 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வில், கொரோனா ஊரடங்கால் சில தேர்வுகள் நடத்த முடியாமல் போனது. அவர்களுக்கு மீண்டும் தேர்வு தேதியை அறிவித்து, தேர்வுகளை நடத்த சி.பி.எஸ்.இ. நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் அதனை ரத்து செய்து, மாணவர்களுக்கு மதிப்பெண் எந்த வகையில் கணக்கிடப்படும் என்று சமீபத்தில் அறிவிப்பை…

  6. அரச அலுவலகங்களுக்கு வாரத்தின் ஆறு நாட்களும் வேலை – தமிழக அரசு by : Dhackshala அரச அலுவலகங்களுக்கு வாரத்தின் ஆறு நாட்களும் வேலை நாட்களாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பல நாட்கள் அரச அலுவலகங்கள் இயங்கவில்லை. மேலும் குறைந்த ஊழியர்களுடனே பல மாவட்டங்களில் அரச அலுவலங்கள் இயங்கி வந்தன. இதனால் அரச அலுவலங்களில் கோப்புகளுக்கான பணிகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், வாரத்தின் ஆறு நாட்களும் அரச அலுவலகங்களுக்கு வேலை நாட்களாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் ஹன்…

    • 0 replies
    • 390 views
  7. 19 நிமிடம் 30 வினாடிகளில் ஆமைக்கறி, உடும்புக்கறி வருகின்றது😆

  8. மதுரையில் ரூ.10 க்கு உணவு - ஏழைகளின் பசி போக்கி வந்த ராமு தாத்தா காலமானார் மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே சிறிய பெட்டிக்கடை நடத்தி பத்து ரூபாய்க்கு உணவு வழங்கி வந்தவர் திருமங்கலம் வில்லூரை சேர்ந்த ராமு தாத்தா. மதுரை மக்களின் இதயத்திலும், அண்ணா பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் மக்களின் மனதிலும் நிலையான இடம் பிடித்தவர் மதுரை ராமு தாத்தா. அவர் மக்களுக்கு வழங்கிய உணவின் விலை மிக குறைவானது என்பதை விட அவர் மக்கள் இடத்தில் உணவுடன் அன்பையும் சேர்த்து பரிமாறப்பட்டதுதான் அவரது தனிச்சிறப்பு. இந்த அன்பு தான் பல வாடிக்கையாளர்களை ஈர்த்தது. 1957 ஆம் ஆண்டு வடலூரில் உள்ள வள்ளலாரின் சத்திய ஞான சபைக்கு சென்ற மதுரை ராமு தாத்தா, வள்ளலாரை போ…

    • 5 replies
    • 795 views
  9. என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. பதிவு: ஜூலை 01, 2020 10:53 AM நெய்வேலி, கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள சுரங்கங் களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் 2-ம் அனல் மின்நிலையத்தில் 7 அலகுகள் மூலம் 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக…

  10. குஜராத், தமிழ்நாட்டில் அதிக அளவு போலீஸ் காவலில் மரணங்கள் நிகழ்ந்து உள்ளன, ஆனால் இதில் யாருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை. பதிவு: ஜூலை 11, 2020 11:16 AM புதுடெல்லி: தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2018 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி என்கவுன்டர்கள் தொடர்பாக நடத்தபட்ட விசாரணைகளில் ஒரு போலீசாருக்கு ஒரு தண்டனை கூட கிடைக்கவில்லை. பகுப்பாய்வு செய்த தரவுகளின்படி, சிறைச்சாலை மரணங்கள் உட்பட மனித உரிமை மீறல்களுக்கு எந்த போலீசாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. 2018 ஆம் ஆண்டில் மொத்தம் 70 காவல் நிலைய மரணங்கள் பதிவாகியுள்ளன, அவர்களில் பெரும்பாலோர் - 46 பேர் ரிமாண்டில் இல்லை. குஜராத்தில் இதுபோன்ற 14 மரணங்கள் பதிவாகியுள்ளன.இதுபோன்ற 12 மரணங்கள் தமிழகத்திலும் ஆந்திராவில் 11 -ம்…

  11. சேது சமுத்திர திட்டத்தைப் புதுப்பித்தால் பாஜகவுடன் திமுக கூட்டணி? மின்னம்பலம் சேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி ஆர் பாலு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் சார்பில் இன்று ஜூலை 10 ஆம் தேதி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில்... “தமிழக மக்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த சேதுசமுத்திர திட்ட பணிகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டியதின் அவசியம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் இக்கடிதத்தை எழுதுகிறேன். அண்மையில் ஆக்கிரமிப்பு மனோபாவம் கொண்ட நமது அண்டை நாடான சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசுடன் உறுதி…

  12. படத்தின் காப்புரிமை Getty Images கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிளாஸ்மா தெரப்பி மூலம் சிகிச்சை அளிக்க, சென்னையில் இரண்டு கோடி ரூபாயில் பிளாஸ்மா வங்கியை நிறுவும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பிளாஸ்மா தெரபி (ஊநீர் சிகிச்சை) தொடர்பான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) மற்றும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாடு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) ஆகியவற்றிடம் தமிழ்நாடு அரசு அனுமதி பெறப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 'பிளாஸ்மா தெரபி' அல்லது ஊநீர் சிகிச்சை என்பது என்ன? ஒரு நோய்த் தொற்றில் இருந்து மீண்டவர்கள் உடலில் அந்த தொற்றினைப் போராடி அழிக்கும் எதிரணுக்கள் உருவாகியிருக்கும் என…

  13. அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா பாதிப்பு- சென்னை மருத்துவமனையில் அனுமதி.! சென்னை: தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செல்லூர் ராஜு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,26,581 ஆக உள்ளது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,765 ஆக இருக்கிறது. இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவிலேயே கொரோனாவுக்கு எம்.எல்.ஏ. ஒருவர் முதலில் பலியானது தமிழகத்தில்தான். திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன், கொரோனா பாதித்து உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து திமுக, அதிமுக எம்.எல்.ஏக்கள் பலரும் அடுத்தடுத்து கொரோ…

  14. மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி... அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடி..! தமிழக மின்சாரத்துறை மற்றும் ஆயுத்துறை அமைச்சருமான தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் பொதுமக்கள் மத்தியில் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் திணறி வருகிறது. குறிப்பாக சென்னை செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது மற்ற மாவட்டங்களிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை தமிழகத்தில் 1,18,594 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழப்…

  15. தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை - தமிழக அரசு உத்தரவு தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பதிவு: ஜூலை 08, 2020 14:30 PM சென்னை, சாத்தான்குளம் தந்தை-மகன் போலீசார் விசாரணையில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, இதில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தன்று சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியில் இருந்த காவலர்கள், கொரோனா தன்னார்வல பணியாளர்கள் மற்றும் பென்னிக்ஸின் நண்பர்கள் உள்ளிட்டோரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், இந்த சம்பவத்தில், ‘பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ அம…

  16. ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணிகளை விரைவில் நிறைவு செய்யுமாறு உத்தரவு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிட கட்டுமானப் பணிகளை விரைவில் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் கட்டுவதற்காக 50.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணியை கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் திகதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் ஆரம்பித்…

  17. சென்னையில் மீண்டும் பெருவெள்ளம்; மெரினா கடற்கரை காணமால் போகும் ஐஐடி ஆய்வு எச்சரிக்கை சென்னையில் மீண்டும் பெருவெள்ளம் ஏற்படலாம் மெரினா கடற்கரை காணமால்போகும் என ஐஐடி ஆய்வு ஒன்று எச்சரித்து உள்ளது. பதிவு: ஜூலை 07, 2020 14:51 PM சென்னை சீனாவில் உருவானதாக கருதப்படும் கொரோனா வைரஸ் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து தற்போது இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதில் சென்னை அதிக அளவு பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், சென்னை மக்களைப் பொறுத்தவரை, '100 ஆண்டுகளில் இல்லாத' மற்றும் 'பேரழிவு' போன்ற சொற…

  18. திருச்சி அதவத்தூரில் 9 ம் வகுப்பு மாணவி கொல்லப்பட்ட வழக்கு - 11 தனிப்படைகள் அமைப்பு திருச்சி அதவத்தூரில் 9 ம் வகுப்பு மாணவி கொல்லப்பட்ட வழக்கில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பதிவு: ஜூலை 07, 2020 09:35 AM திருச்சி, திருச்சி அதவத்தூரில் 9 ம் வகுப்பு மாணவி கொல்லப்பட்ட வழக்கில் 11 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். மாவட்ட எஸ்.பி. ஜியா உல்ஹக் தலைமையில் 11 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. 10-க்கும் மேற்பட்டவர்களைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வழக்கின் விவரம்: திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அதவத்தூர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. விவசாயி. இவருடைய மகள் கங…

  19. சித்திரவதைத் தடுப்புச் சட்டத்துக்கு முன்னுரை எழுதும் சாத்தான்குளம் மரணங்கள் எம். காசிநாதன் / 2020 ஜூலை 06 தமிழகப் பொலிஸ் துறையின் வரலாற்றில், ‘கரும்புள்ளி’யாக மாறிய சாத்தான்குளம் மரணங்கள், பொலிஸாரின் சித்திரவதைக்கு எதிரான குரலை, இந்திய அளவில் எழுப்பியுள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக அழைத்துச் செல்லப்பட்டு, பொலிஸ் நிலையத்தில் அடித்துத் துவைக்கப்பட்டார்கள். பின்னர், சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு, அங்கிருந்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, உயிரிழந்தார்கள். தமிழகத்தின் தென் மாவட்டங்களை மட்டுமின்றி, மாநிலத்தையே உலுக்கிய இந்த ‘இருவர் மரணம்’ , சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் தீர்ப்புகளுக்குப் பின்னர், …

  20. இம்ப்ரோ சித்த மருந்து விவகாரம்; ஆயுஷ் அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு இம்ப்ரோ சித்த மருந்தில் கொரோனாவை தடுக்கும் திறன் உள்ளதா? என்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஆயுஷ் அமைச்சகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதிவு: ஜூலை 07, 2020 11:07 AM மதுரை, மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் எஸ்.சுப்பிரமணியன், கொரோனா வைரசை கட்டுப்படுத்த 66 மூலிகைகள் உள்ளடங்கிய இம்ப்ரோ என்ற பொடியைத் தயாரித்திருந்தார். பின்னர் இந்தப் பொடியை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் சுப்பிரமணியன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் கண்டுபிடித்துள்ள இம்ப்ரோ மருந்தை ஆய்வு செய்வதற்காக சித்தா, ஆயுர்வேதம்…

  21. கட்டுப்பாடுகள் தளர்வு சென்னையில் இன்று முதல் டாக்சி, ஆட்டோக்கள் ஓடும் மீன், இறைச்சி கடைகளும் திறக்கப்படுகின்றன சென்னையில் இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால் டாக்சி, ஆட்டோக்கள் ஓடும். மீன், இறைச்சி கடைகளும் திறக்கப்படுகின்றன. பதிவு: ஜூலை 06, 2020 05:30 AM சென்னை, தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தற்போது 6-வது கட்டமாக வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், சென்னைக்கு மட்டும் இன்று (திங்கட்கிழமை) முதல் தனியாக சில தளர்வுகளும், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தனியாக சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் சம்பந்தப்பட்ட 4 மாவட்ட…

  22. மக்கள் நீதி மய்யத்தின் ‘நாமே தீர்வு’ வலைத்தளம்: ஜி.வி.பிரகாஷ் தொடங்கி வைத்தார்; ஒரே நாளில் 54,000க்கும் அதிகமான அழைப்புகள் மக்கள் நீதி மய்யம் கரோனா நிவாரணப் பணிக்காக தொடங்கியுள்ள "நாமே தீர்வு" என்கிற இயக்கத்துக்காக அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக வலைதளத்தை ஜிவி பிரகாஷ் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கரோனா நிவாரணப் பணிக்காக திமுக, 'ஒன்றிணைவோம் வா' எனும் திட்டத்தைத் தொடங்கி செயல்பட்டு வருகிறது. இதேபோன்று மக்கள் நீதிமய்யம் சார்பில் நாமே தீர்வு என்கிற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. நாமே தீர்வு இயக்கத்தின் மூலம் சேவைப் பணியை ஒருங்கிணைக்க உள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன…

  23. தூத்துக்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு தூத்துக்குடியில் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பதிவு: ஜூலை 02, 2020 15:36 PM தூத்துக்குடி, தூத்துக்குடி செக்காரக்குடி பகுதியில் இன்று கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். கழிவுகளை அகற்றிக்கொண்டிருந்தபோது தொட்டிக்குள் இருந்து விஷ வாயு வெளிப்பட்டது. இதனை சுவாசித்த தொழிலாளர்கள் 4 பேர் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்த…

  24. ஜல்லிக்கட்டின் போது காளைகள்‘மரணம்’ விலங்கு நல அமைப்பு தமிழக அரசுக்கு கடிதம் ஜல்லிக்கட்டு ஆய்வு அறிக்கையின் மீதான பதில்களை விரைவாக வழங்குமாறு தமிழக அரசை இந்திய விலங்குகள் நல வாரியம் கேட்டு கொண்டுள்ளது பதிவு: ஜூலை 03, 2020 16:17 PM புதுடெல்லி தமிழக அரசுக்கு அனுப்பி உள்ள ஜூன் 26 தேதியிட்ட ஒரு கடிதத்தில், இந்திய விலங்குகள் நல வாரியம் செயலாளர் டாக்டர் எஸ்.கே. தத்தா கூற இருப்பதாவது: பீட்டா ஒரு ஆய்வு அறிக்கையை அனுப்பியுள்ளது, அதில் போது ஆறு விலங்குகள் இறந்துவிட்டதாக (ஜல்லிக்கட்டு திருவிழாவின் போது) தெரிவிக்கப்பட்டுள்ளது. சில படங்கள் விலங்குகளை நகங்களால் சுரண்டுவதாக காட்டி உள்ளன. அது விலங்குகளுக்கு என்ன கொடுமை நடக்கிறது என்பதைக் காட்டியது. …

  25. புதுக்கோட்டை சிறுமி கொலை: முதல்வர் இரங்கல், குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு புதுக்கோட்டை, அறந்தாங்கியில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர், அவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று விடுத்துள்ள அறிவிப்பு: புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், ஏம்பல் கிராமத்திலிருந்து, 30.6.2020 முதல் காணாமல் போன சிறுமி, காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த நிலையில், 1.7.2020 அன்று மாலை வண்ணாங்குளம் என்ற ஊரணியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.