Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ராஜீவ்காந்தி கொலை வழக்கு: நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க முடிவு தமிழ்நாடு Sinekadhara Published : 23,Dec 2021 01:05 PM ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறையிலுள்ள நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க முடிவு செய்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. Advertisement முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைதான நளினிக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் …

  2. சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை தகவலை முன்னிட்டு மத்திய உளவுத்துறை கொடுத்துள்ள தகவலால் சென்னை விமான நிலையத்துக்கு ‘ரெட் அல்ர்ட்’ கொடுக்கப்பட்டு தீவிர சோதனைக்குப் பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்தியாவின் 73வது சுதந்திர தின விழா வருகின்ற 15ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இக்கோலாகல கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி உள்ளதாக மத்திய உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளன. இதையடுத்து நாடு முழுவதும் மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்துள்ளது. இதனை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் நேற்று காலை 6 மணி முதல் வரும் 31ம் தேதி வரை பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. …

  3. தமிழகத்தில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம்: சில முக்கிய தகவல்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER தமிழகத்தில் "மீண்டும் மஞ்சப்பை - விழிப்புணர்வு இயக்கம்" நிகழ்ச்சியை சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கி வைத்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "மஞ்சள் பைதான் சூழலுக்கு - சுற்றுச்சூழலுக்கு சரியானது - அழகான - நாகரிகமான - பிளாஸ்டிக் பை என்பது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பது என்பதை பரப்புரை செய்தபிறகு இப்போது துணிப்பைகளை கொண்டு செல்லும் பழக்கம் அதிகமாகி வருகிறது. அது மேலும் அதிகமாக வேண்டும் என்பதற்காகத்தான் இந்த விழிப்புணர்வுப் பயணம்," என்றார். …

  4. சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடிகர் கமல்ஹாசன்! Digital News Team 2021-01-22T16:00:19 நடிகர் கமல்ஹாசன் கடந்த 18ஆம் திகதி தனியார் வைத்தியசாலையொன்றில் வலது காலில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந் நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து இன்று வைத்தியசாலையிலிருந்து வெளியே வந்த கமல், தொண்டர்களுக்கு காரில் இருந்தபடியே நன்றி தெரிவித்து விட்டு சென்றார். சில வாரங்கள் ஓய்வுக்குப் பின் தேர்தல் பிரச்சாரத்தின் இரண்டாவது சுற்று பயணத்தை கமல் ஆரம்பிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. Thinakkural.lk

  5. தேர்தல் விதிமுறையை கூறி மகாத்மா காந்தி சிலை மூடல்! மதுரை மாவட்டம் யானைக்கல் பகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் எனக்கூறி மகாத்மா காந்தி சிலை மூடப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சாலையில் ஆங்காங்கே உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள் என கூறி மதுரை யானைக்கல் பகுதியில் உள்ள மகாத்மா காந்தியின் சிலையை தேர்தல் அலுவலர்கள் மூடியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேச தந்தை மகாத்மா காந்தியை இழிவுபடுத்தும் வகையில் இது போன்ற செயல்களில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். …

  6. காரைக்கால் பாமக மாவட்டச் செயலாளர் வெட்டிக் கொலை 8 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, தேவமணி காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் தேவமணி நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் காரைக்காலில் பதற்றமான சூழல் நிலவுகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளராக இருந்தவர் தேவமணி. வயது 53. இவரது வீடு காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் அருகே உள்ளது. வீட்டுக்கு அருகிலேயே திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் பிரதான சாலையில் பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகம் உள்ளது. நேற்றிரவு சுமார் 10 மணியளவில் கட்சி அலுவலகத்திலிருந்து, தேவமணி…

  7. முதலமைச்சரை ராஜினாமா செய்யக் கோராதது ஏன்? - கமல் கேள்வி தமிழக அரசியல் நிலவரம் குறித்து பல்வேறு கருத்துகளை ட்விட்டர் மூலம் நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது தெரிவித்து வருகிறார். தமிழக அரசில் உள்ள ஊழல்கள் குறித்து அமைச்சர்களுக்கு டிஜிட்டல் வடிவில் புகார் அனுப்புங்கள் என்று தமிழக மக்களுக்கு கமல் வேண்டுகோள் வைத்திருந்தார். இதையடுத்து, தமிழக அரசின் இணையதளத்திலிருந்து அமைச்சர்களின் அதிகாரபூர்வ இ-மெயில் முகவரிகள் நீக்கப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும், பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் முட்டைகள் குறித்தும் கமலின் ட்விட்டரில் பதிவிட்டார். இந்தநிலையில், கமலின் மற்றொரு ட்வீட் அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப…

  8. முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் தமிழ்நாட்டில் 2022ஆம் ஆண்டில் ஏழு இடங்களில் அகழாய்வும் சங்க கால கொற்கைத் துறைமுகத்தை அடையாளம் காண்பதற்கான முன்கள ஆய்வும் நடைபெறும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளார். "அண்மைக் காலத்தில் கீழடி, அழகன்குளம், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் தமிழகத்தின் தொன்மையைப் புதிய காலக்கணிப்பு மூலம் பல நூற்றாண்டு காலத்திற்கு முன்னோக்கி எடுத்துச் சென்றுள்ளது. கீழடி அகழாய்வு மற்ற அகழாய்வு…

  9. ஆதரவாளர்கள் வழியனுப்பிவைக்க... சிறைக்குப் புறப்பட்டார் சசிகலா! ஐந்து நாள் பரோல் முடிவடைந்த நிலையில், சென்னை தி.நகரிலிருந்து கார் மூலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குப் புறப்பட்டார் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா விதித்த நான்கு ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதத்தை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது. அதே நேரத்தில், ஜெயலலிதா இறந்ததால் அவர் விடுவிக்கப்பட்டார். உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர், கடந்த பிப்ரவரி 15-ம் தேதி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ந…

  10. சாய் பல்லவி வைரல் காணொளி: "மதத்தின் பெயரால் தாக்குதல் நடந்தால் அது பாவம்!" 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SAI PALLAVI படக்குறிப்பு, சாய் பல்லவி, நடிகை சமீபத்தில் நடிகை சாய் பல்லவி காஷ்மீரி பண்டிட்டுகள், கும்பல் படுகொலை பற்றி பேசிய கருத்து சர்ச்சையான நிலையில், தற்போது தமது கருத்துகளுக்கு விளக்கும் தரும் வகையில் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறார். தெலுங்கில் வேணு உடுகுலா இயக்கத்தில் ராணா டகுபதி மற்றும் சாய் பல்லவி நடித்துள்ள திரைப்படம் 'விராட பருவம்'. ஜூன் 17ஆம் தேதி வெளியான இந்த படத்தையொட்டி நடிகை சாய் பல்லவி ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திரு…

  11. ஜெ. சுகவீனத்தால் கவலை... நடிகர் ராமராஜனுக்கு திடீர் நெஞ்சுவலி... மருத்துவமனையில் அனுமதி சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதால் கவலையில் இருந்த நடிகர் ராமராஜனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழின் முன்னணி நாயகர்களுள் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். பின்னர் அவர் அரசியலில் குதித்தார். கடந்த 1998ல் திருச்செந்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட ராமராஜன் எம்.பி., ஆனார். தொடர்ந்து அதிமுகவில் அவர் உறுப்பினராக உள்ளார். இந்த சூழ்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா சென…

  12. 3 தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை... பட்டாசு வெடித்து தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்.சென்னை: கடந்த 19ம் தேதி நடைபெற்ற அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இதனை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த 19ம் தேதி அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய இரண்டு தொகுதிகளில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. திருப்பரங்குன்றத்தில் இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த 3 தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதில் 3 தொகுதிகளிலுமே அதிமுக முன்னிலை வகித்து வருகிறது.வாக்கு எண்ணிக்கை நாளான இன்று காலையில் இருந்தே அதிமுகவினர் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அல…

  13. சென்னை: தமிழ்த் திரைப்படங்கள் தயாரிப்பிற்குப் பிறகு சென்னையில் மருத்துவப் பரிசோதனை மையம் தொடங்கவுள்ளது சர்ச்சைக்குரிய பிரிட்டனைச் சேர்ந்த -லைக்கா- மொபைல் நிறுவனம். இந்த மையம் சென்னையின் மத்தியப் பகுதியில் மிகப் பெரிய அளவில் அமையவுள்ளது. இது தொடர்பாக சென்னையில் உள்ள பிரிட்டன் தூதரகத்தின் துணைத் தூதர் பரத் ஜோஷி சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது: பிரிட்டனைச் சேர்ந்த பிரபல -லைகா- மொபைல் நிறுவனம் அண்மையில் வெளியான தமிழ்த் திரைப்படம் ஒன்றில் ரூ. 100 கோடி அளவுக்கு முதலீடு செய்தது. இந்த நிறுவனம் இப்போது மத்தியச் சென்னைப் பகுதியில் மிகப் பெரிய மருத்துவப் பரிசோதனை மையத்தை அமைக்க உள்ளது. தமிழகத்திலுள்ள பிரபல மருத்துவமனைகளுடன் இந்த மருத்துவ ஆய்வகம்…

  14. கடலில் வந்த மிதவை - விசாரணைகளில் கடலோர காவல் படை தமிழகத்தின் வேளாங்கண்ணி அருகே, கடலில் மிதந்து வந்த மிதவை கடத்தல்காரர்களுக்கு சொந்தமானதா என்று கடலோர காவல் படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சரக்கு கப்பல் போக்குவரத்து அதிகம் உள்ள கடல் பகுதிகளில், துறைமுகம் உள்ளே கப்பல் சென்றுவர வழிகாட்டும் விதமாக ‘போயா’ எனும் மிதவையை கடலில் ஆங்காங்கே மிதக்க விடுவது வழக்கம். அத்துடன், தங்கம் மற்றும் போதை பொருட்களை கடல் வழியாக கடத்திச் செல்லும் கடத்தல்காரர்களும், திசையை அறிவதற்காக இதுபோன்ற மிதவைகளை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், தமிழக்திதின் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள புதுப்பள்ளி கடல் பகுதியில் நேற்று (24ம் திகதி) மிதவை ஒன்று மிதந்து வந்துகொண்டிரு…

  15. இலங்கையின் பல குற்ற செயல்களுடன் தொடர்புடைய மூவர் தமிழகத்தில் கைது! இலங்கையில் பல்வேறு குற்றப் பின்னணி உள்ள மூன்று இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் ஊடுருவ முயன்றபோது தனுஷ்கோடிக்கு அருகில் வைத்து இந்திய கடலோர பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு மரைன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நேற்று (28) நள்ளிரவு தனுஷ்கோடி முதல் சர்வதேச கடல் எல்லை வரை உள்ள மணல் திட்டு பகுதிகளில் இந்திய கடலோர பொலிஸார் சோதனையில் ஈடுப்பட்ட வேளையிலே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மூவரையும் சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் 46,000 ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டதுடன் அவர்கள் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்தனரெனவும் விசாரணைய…

  16. சீனா, பாகிஸ்தானின் அத்துமீறல்கள்.. திண்டுக்கல்லில் இந்து மக்கள் கட்சி போராட்டம்.. 15 பேர் கைது .! திண்டுக்கல்: திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் இந்து மக்கள் கட்சி சார்பில் இந்திய எல்லையில் அத்துமீறும் சீனா மற்றும் பாகிஸ்தானை கண்டித்து இரு நாட்டின் பிரதமர்களின் உருவபடங்களை காலணியால் அடித்து போராட்டம் நடத்தப்பட்டது. இந்திய நாட்டின் எல்லை பகுதிகளில் அத்துமீறும் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளை கண்டித்தும், பாஜகவிற்கு முன்பு ஆண்ட காங்கிரஸ் கட்சியின் பிரதமர்கள் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து அகண்ட பாரதம் அமைக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் இந்து மக்கள் கட்சி சார…

    • 1 reply
    • 597 views
  17. இலங்கை தமிழர் பிரச்னை ஓர் உணர்வுப்பூர்வ பிரச்னை. எனவே தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து இலங்கை ராணுவத்தினருக்கு தமிழ் மண்ணில் எந்த ராணுவப் பயிற்சியையும் இந்திய ராணுவம் அளிக்காது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி உறுதி அளித்தார். தஞ்சையில், புதுக் கோட்டை சாலையில் உள்ள விமானப்படை தளம் ரூ.150 கோடியில் நவீனமயமாக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி டெல்லியில் இருந்து ராணுவ சிறப்பு விமானம் மூலம் தஞ்சை விமானப்படைத் தளத்திற்கு வந்தார். அவரை இந்திய விமானப்படை தலைமை தளபதி என்.ஏ.கே.ப்ரவுனி, தென்னக வான்படை தலைமை கட்டளை அலுவலர் ஏர்மார்ஷல் ஆர்.கே .ஜோலி, எஸ்பி தர்மராஜ், டிஆர்ஓ சுரேஷ்குமார் ஆகியோர…

  18. பெங்களூருவில் இருந்து தமிழக சிறைக்கு மாற்ற திட்டம்: சிறையில் சசிகலாவுடன் வழக்கறிஞர்கள் ஆலோசனை - ஆவணங்களில் கையெழுத்து பெற்றனர் வி.கே.சசிகலா | கோப்புப் படம். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழ‌க்கில் அதிமுக பொதுச் செயலாள‌ர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் நேற்று முன்தினம் மாலை பெங்களூருவில் உள்ள‌ பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பு வழக் கறிஞர்கள் செந்தில், அசோகன், மூர்த்தி ராவ் ஆகியோர் நேற்று காலை பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள‌ சசிகலாவை சந்தித்தனர். அப்போது சொத்துக்குவிப்பு மேல்ம…

  19. சென்னை: மெட்ராஸ் கஃபே திரைப்படத்தில், ராஜீவ் படுகொலையில் துளி அளவு ஆதாரம் கூட இல்லாத, ஒரு அப்பட்டமான பொய்யைக் காட்சி ஆக்கி, கோடானுகோடித் தமிழர்கள் நெஞ்சார நேசித்து மதிக்கும் தலைவர் பிரபாகரன் அவர்களை, மோசமாகக் களங்கப்படுத்தி, காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன. எனவே இந்த திரைப்படத்தினை தமிழகத்தில் தடை செய்யாவிட்டால் தியேட்டர்களை முற்றுகையிடப்போவதாக வைகோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஈழத்தின் விடுதலைக்காக ஈடு சொல்ல முடியாத வீரச்சமர் புரிந்து, உன்னதமான உயிர்த்தியாகம் செய்த தமிழ் ஈழ விடுதலைப்புலிகளை இழிவுபடுத்தி, அபாண்டமான பழி சுமத்தி, நீதியை நிரந்தரமாகக் குழி தோண்டிப் புதைக்க, சிங்கள அரசு பல முனைகளிலும் தனது அக்கி…

  20. 1st November 2013 சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ள காங்கிரஸ் உயர்மட்ட குழு அனுமதியளித்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தமிழக மக்களின் உணர்வுகளை மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் அனைவரும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்று வேண்டுகோள் வைத்தும், தமிழக சட்டமன்றத்திலே வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றிய பிறகும், பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளலாம் என்ற முடிவை பார்க்கும்போது, 2011–ம் ஆண்டு காமன்வெல்த் மாநாட்டில் அடுத்த மாநாட்டை இலங்கையில் நடத்துவத…

  21. மாஜி முதல்வர் சவுதாலா ஜாமீன் ரத்தால் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வுக்கு பாதிப்பா? டெல்லி: தலைப்பை படித்து பார்த்தால், மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்டதைப்போலத்தான் தோன்றும். ஆனால், ஹரியானா முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ள நிகழ்வு, ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவுடனும், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலையுடனும் பெரிதும் பொருந்திப்போகிறது என்பதே உண்மை. பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு செய்ததாக ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு கடந்த 2003ம் ஆண்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த மே மாதம் தனக்கு உடல் நலம் சரியில்லை எனக் கூறி சவுதாலா நீதிமன்றத்தில் ஜாமீன் …

  22. எழுவரின் விடுதலையை தமிழக காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும்: அழகிரி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7பேரை விடுதலை செய்வதற்கு தமிழக காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்குமென கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கே.எஸ்.அழகிரி மேலும் கூறியுள்ளதாவது, “பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் உட்பட ஏராளமானோர் தமிழக சிறைகளில் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜீவ் கொலை கைதிகளை மட்டும் விடுதலை செய்வதற்கு என்ன அவசியம் இருக்கிறது? தண்டனை அனுபவித்து வரும் அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக எந்த முடிவு எடுத்தாலும், அது தவறான முன்னுதாரணமாகி விடும். அது தமி…

  23. 3 நாள் வழங்க தமிழக அரசு எதிர்ப்பு- நளினிக்கு ஒரு நாள் பரோல் வழங்கியது ஐகோர்ட் நளினிக்கு மூன்று நாள் பரோல் வழங்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒரு நாள் மட்டுமே பரோலில் சொல்ல சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் நளினியின் தந்தை சங்கரநாராயணன் அண்மையில் காலமானார். இதைத் தொடர்ந்து தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதி கேட்டுவேலூர் சிறை கண்காணிப்பாளரிடம் நளினி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட வேலூர் சிறை கண்காணிப்பாளர், நளினிக்கு ஒரு நாள் அனுமதி வழங்கினார். இதைத் தொடர்ந்து தந்தையின் இறுதிச் சட…

  24. வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தமிழக காங்கிரஸ் ------------------------------------------------------------------------- தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தமிழக காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், தற்போது 33 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலின்படி எச் வசந்தகுமார் நாங்குநேரி தொகுதியிலும் விஜயதாரிணி விளவங்கோடு தொகுதியிலும் திருநாவுக்கரசரின் மகன் எஸ்.டி. ராமச்சந்திரன் அறந்தாங்கி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். ராயபுரம் தொகுதியில் ஆர். மனோகர், கோயம்புத்தூ…

  25. தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்: கைதும் கண்டனமும்! மின்னம்பலம் 1956ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இதில் தமிழ் மொழி பேசுவோர் இருப்பவர்கள் மெட்ராஸ் மாநிலம் என அழைக்கப்பட்டது. மொழியின் அடிப்படையில் 14 மாநிலங்கள், 6 யூனியன் பிரதேசங்கள் அமைக்கப்பட்டன. தெலுங்கு, கன்னடம், மலையாளிகள் பிரிந்து போன பின்பும் கூட தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்க முடியாத நிலை இருந்து வந்தது. பேரறிஞர் அண்ணா 1967ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். அன்று முதல் தமிழ்நாடு என்ற பெயர் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கிறது. தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு என்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.