Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 3 தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை... பட்டாசு வெடித்து தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்.சென்னை: கடந்த 19ம் தேதி நடைபெற்ற அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இதனை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த 19ம் தேதி அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய இரண்டு தொகுதிகளில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. திருப்பரங்குன்றத்தில் இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த 3 தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதில் 3 தொகுதிகளிலுமே அதிமுக முன்னிலை வகித்து வருகிறது.வாக்கு எண்ணிக்கை நாளான இன்று காலையில் இருந்தே அதிமுகவினர் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அல…

  2. சென்னை: தமிழ்த் திரைப்படங்கள் தயாரிப்பிற்குப் பிறகு சென்னையில் மருத்துவப் பரிசோதனை மையம் தொடங்கவுள்ளது சர்ச்சைக்குரிய பிரிட்டனைச் சேர்ந்த -லைக்கா- மொபைல் நிறுவனம். இந்த மையம் சென்னையின் மத்தியப் பகுதியில் மிகப் பெரிய அளவில் அமையவுள்ளது. இது தொடர்பாக சென்னையில் உள்ள பிரிட்டன் தூதரகத்தின் துணைத் தூதர் பரத் ஜோஷி சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது: பிரிட்டனைச் சேர்ந்த பிரபல -லைகா- மொபைல் நிறுவனம் அண்மையில் வெளியான தமிழ்த் திரைப்படம் ஒன்றில் ரூ. 100 கோடி அளவுக்கு முதலீடு செய்தது. இந்த நிறுவனம் இப்போது மத்தியச் சென்னைப் பகுதியில் மிகப் பெரிய மருத்துவப் பரிசோதனை மையத்தை அமைக்க உள்ளது. தமிழகத்திலுள்ள பிரபல மருத்துவமனைகளுடன் இந்த மருத்துவ ஆய்வகம்…

  3. கடலில் வந்த மிதவை - விசாரணைகளில் கடலோர காவல் படை தமிழகத்தின் வேளாங்கண்ணி அருகே, கடலில் மிதந்து வந்த மிதவை கடத்தல்காரர்களுக்கு சொந்தமானதா என்று கடலோர காவல் படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சரக்கு கப்பல் போக்குவரத்து அதிகம் உள்ள கடல் பகுதிகளில், துறைமுகம் உள்ளே கப்பல் சென்றுவர வழிகாட்டும் விதமாக ‘போயா’ எனும் மிதவையை கடலில் ஆங்காங்கே மிதக்க விடுவது வழக்கம். அத்துடன், தங்கம் மற்றும் போதை பொருட்களை கடல் வழியாக கடத்திச் செல்லும் கடத்தல்காரர்களும், திசையை அறிவதற்காக இதுபோன்ற மிதவைகளை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், தமிழக்திதின் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள புதுப்பள்ளி கடல் பகுதியில் நேற்று (24ம் திகதி) மிதவை ஒன்று மிதந்து வந்துகொண்டிரு…

  4. இலங்கையின் பல குற்ற செயல்களுடன் தொடர்புடைய மூவர் தமிழகத்தில் கைது! இலங்கையில் பல்வேறு குற்றப் பின்னணி உள்ள மூன்று இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் ஊடுருவ முயன்றபோது தனுஷ்கோடிக்கு அருகில் வைத்து இந்திய கடலோர பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு மரைன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நேற்று (28) நள்ளிரவு தனுஷ்கோடி முதல் சர்வதேச கடல் எல்லை வரை உள்ள மணல் திட்டு பகுதிகளில் இந்திய கடலோர பொலிஸார் சோதனையில் ஈடுப்பட்ட வேளையிலே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மூவரையும் சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் 46,000 ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டதுடன் அவர்கள் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்தனரெனவும் விசாரணைய…

  5. சீனா, பாகிஸ்தானின் அத்துமீறல்கள்.. திண்டுக்கல்லில் இந்து மக்கள் கட்சி போராட்டம்.. 15 பேர் கைது .! திண்டுக்கல்: திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் இந்து மக்கள் கட்சி சார்பில் இந்திய எல்லையில் அத்துமீறும் சீனா மற்றும் பாகிஸ்தானை கண்டித்து இரு நாட்டின் பிரதமர்களின் உருவபடங்களை காலணியால் அடித்து போராட்டம் நடத்தப்பட்டது. இந்திய நாட்டின் எல்லை பகுதிகளில் அத்துமீறும் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளை கண்டித்தும், பாஜகவிற்கு முன்பு ஆண்ட காங்கிரஸ் கட்சியின் பிரதமர்கள் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து அகண்ட பாரதம் அமைக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் இந்து மக்கள் கட்சி சார…

    • 1 reply
    • 614 views
  6. இலங்கை தமிழர் பிரச்னை ஓர் உணர்வுப்பூர்வ பிரச்னை. எனவே தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து இலங்கை ராணுவத்தினருக்கு தமிழ் மண்ணில் எந்த ராணுவப் பயிற்சியையும் இந்திய ராணுவம் அளிக்காது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி உறுதி அளித்தார். தஞ்சையில், புதுக் கோட்டை சாலையில் உள்ள விமானப்படை தளம் ரூ.150 கோடியில் நவீனமயமாக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி டெல்லியில் இருந்து ராணுவ சிறப்பு விமானம் மூலம் தஞ்சை விமானப்படைத் தளத்திற்கு வந்தார். அவரை இந்திய விமானப்படை தலைமை தளபதி என்.ஏ.கே.ப்ரவுனி, தென்னக வான்படை தலைமை கட்டளை அலுவலர் ஏர்மார்ஷல் ஆர்.கே .ஜோலி, எஸ்பி தர்மராஜ், டிஆர்ஓ சுரேஷ்குமார் ஆகியோர…

  7. பெங்களூருவில் இருந்து தமிழக சிறைக்கு மாற்ற திட்டம்: சிறையில் சசிகலாவுடன் வழக்கறிஞர்கள் ஆலோசனை - ஆவணங்களில் கையெழுத்து பெற்றனர் வி.கே.சசிகலா | கோப்புப் படம். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழ‌க்கில் அதிமுக பொதுச் செயலாள‌ர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் நேற்று முன்தினம் மாலை பெங்களூருவில் உள்ள‌ பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பு வழக் கறிஞர்கள் செந்தில், அசோகன், மூர்த்தி ராவ் ஆகியோர் நேற்று காலை பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள‌ சசிகலாவை சந்தித்தனர். அப்போது சொத்துக்குவிப்பு மேல்ம…

  8. சென்னை: மெட்ராஸ் கஃபே திரைப்படத்தில், ராஜீவ் படுகொலையில் துளி அளவு ஆதாரம் கூட இல்லாத, ஒரு அப்பட்டமான பொய்யைக் காட்சி ஆக்கி, கோடானுகோடித் தமிழர்கள் நெஞ்சார நேசித்து மதிக்கும் தலைவர் பிரபாகரன் அவர்களை, மோசமாகக் களங்கப்படுத்தி, காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன. எனவே இந்த திரைப்படத்தினை தமிழகத்தில் தடை செய்யாவிட்டால் தியேட்டர்களை முற்றுகையிடப்போவதாக வைகோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஈழத்தின் விடுதலைக்காக ஈடு சொல்ல முடியாத வீரச்சமர் புரிந்து, உன்னதமான உயிர்த்தியாகம் செய்த தமிழ் ஈழ விடுதலைப்புலிகளை இழிவுபடுத்தி, அபாண்டமான பழி சுமத்தி, நீதியை நிரந்தரமாகக் குழி தோண்டிப் புதைக்க, சிங்கள அரசு பல முனைகளிலும் தனது அக்கி…

  9. 1st November 2013 சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ள காங்கிரஸ் உயர்மட்ட குழு அனுமதியளித்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தமிழக மக்களின் உணர்வுகளை மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் அனைவரும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்று வேண்டுகோள் வைத்தும், தமிழக சட்டமன்றத்திலே வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றிய பிறகும், பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளலாம் என்ற முடிவை பார்க்கும்போது, 2011–ம் ஆண்டு காமன்வெல்த் மாநாட்டில் அடுத்த மாநாட்டை இலங்கையில் நடத்துவத…

  10. மாஜி முதல்வர் சவுதாலா ஜாமீன் ரத்தால் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வுக்கு பாதிப்பா? டெல்லி: தலைப்பை படித்து பார்த்தால், மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்டதைப்போலத்தான் தோன்றும். ஆனால், ஹரியானா முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ள நிகழ்வு, ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவுடனும், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலையுடனும் பெரிதும் பொருந்திப்போகிறது என்பதே உண்மை. பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு செய்ததாக ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு கடந்த 2003ம் ஆண்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த மே மாதம் தனக்கு உடல் நலம் சரியில்லை எனக் கூறி சவுதாலா நீதிமன்றத்தில் ஜாமீன் …

  11. எழுவரின் விடுதலையை தமிழக காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும்: அழகிரி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7பேரை விடுதலை செய்வதற்கு தமிழக காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்குமென கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கே.எஸ்.அழகிரி மேலும் கூறியுள்ளதாவது, “பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் உட்பட ஏராளமானோர் தமிழக சிறைகளில் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜீவ் கொலை கைதிகளை மட்டும் விடுதலை செய்வதற்கு என்ன அவசியம் இருக்கிறது? தண்டனை அனுபவித்து வரும் அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக எந்த முடிவு எடுத்தாலும், அது தவறான முன்னுதாரணமாகி விடும். அது தமி…

  12. 3 நாள் வழங்க தமிழக அரசு எதிர்ப்பு- நளினிக்கு ஒரு நாள் பரோல் வழங்கியது ஐகோர்ட் நளினிக்கு மூன்று நாள் பரோல் வழங்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒரு நாள் மட்டுமே பரோலில் சொல்ல சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் நளினியின் தந்தை சங்கரநாராயணன் அண்மையில் காலமானார். இதைத் தொடர்ந்து தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதி கேட்டுவேலூர் சிறை கண்காணிப்பாளரிடம் நளினி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட வேலூர் சிறை கண்காணிப்பாளர், நளினிக்கு ஒரு நாள் அனுமதி வழங்கினார். இதைத் தொடர்ந்து தந்தையின் இறுதிச் சட…

  13. வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தமிழக காங்கிரஸ் ------------------------------------------------------------------------- தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தமிழக காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், தற்போது 33 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலின்படி எச் வசந்தகுமார் நாங்குநேரி தொகுதியிலும் விஜயதாரிணி விளவங்கோடு தொகுதியிலும் திருநாவுக்கரசரின் மகன் எஸ்.டி. ராமச்சந்திரன் அறந்தாங்கி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். ராயபுரம் தொகுதியில் ஆர். மனோகர், கோயம்புத்தூ…

  14. தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்: கைதும் கண்டனமும்! மின்னம்பலம் 1956ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இதில் தமிழ் மொழி பேசுவோர் இருப்பவர்கள் மெட்ராஸ் மாநிலம் என அழைக்கப்பட்டது. மொழியின் அடிப்படையில் 14 மாநிலங்கள், 6 யூனியன் பிரதேசங்கள் அமைக்கப்பட்டன. தெலுங்கு, கன்னடம், மலையாளிகள் பிரிந்து போன பின்பும் கூட தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்க முடியாத நிலை இருந்து வந்தது. பேரறிஞர் அண்ணா 1967ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். அன்று முதல் தமிழ்நாடு என்ற பெயர் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கிறது. தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு என்…

  15. சொத்து ஆவணங்கள் - தீ வைப்பு - ஆடி கார் மர்மம்! - கொடநாடு அச்சத்தில் சிறுதாவூர் காவலர்கள் கொடநாடு எஸ்டேட்டைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் நடக்கும் மர்மக் காட்சிகளால் அதிர்ந்து போய் இருக்கின்றனர் அ.தி.மு.கவினர். ‘பங்களாவுக்கு ஆடி காரில் பலர் வந்து செல்கிறார்கள். சசிகலா, இளவரசி பெயரில் இருந்த நிலங்களை ரகசியமாக வேறு பெயர்களுக்கு மாற்றி வருகின்றனர். ‘எங்களுக்கு எதாவது நடந்துவிடுமோ?’ என தினம் தினம் அச்சத்தில் வேலை பார்த்து வருகிறோம்’ என்கின்றனர் ஆயுதப்படைக் காவலர்கள். சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களா சர்ச்சையில் அடிபட்டது. ‘வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்கான பணத்தைக் கண்டெய்னரில் எடுத்துச் செ…

  16. ப.சிதம்பரம் , கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சி.பி.ஐ அதிரடி ரெய்டு! முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரின் மகன் கார்த்தி வீட்டில் சிபிஐ சோதனை நடைபெற்றுவருகிறது. சென்னையில் உள்ள ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் 9 பேர் கொண்ட சி.பி.ஐ குழு அதிரடி ரெய்டு நடத்திவருகிறது. இதேபோல டெல்லியிலும், நொய்டாவிலும் சில குறிப்பிட்ட இடங்களில் சிபிஐ ரெய்டு நடத்திவருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வெளிநாட்டு பண பரிவர்த்தனை மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு இருந்த தொடர்பின் அடிப்படையில் ரெய்டு நடைபெற்று வருவதாக உறுதிபடுத்தப்படாத தகவல் வெளியாகி உள்ளது…

  17. கேரளா மாநிலத்துக்கு சுற்றுலா சென்ற ஆத்தூரைச் சேர்ந்த மாணவிகள் 260 பேர், நான்கு பஸ்சில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். பஸ் தமிழக எல்லையை தொட்டபோது, மாணவி ஒருவர் தனக்கு வயிறு வலிப்பதாக சொல்கிறார். உடனடியாக அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பஸ் நிறுத்தப்படுகிறது. கழிப்பறை சென்ற மாணவி, அரை மணி நேரமாகியும் திரும்பவில்லை. திடீரென கழிப்பறையிலிருந்து அலறல் சத்தம் வர... அதிர்ந்த மாணவிகள் கழிப்பறை நோக்கி ஓடினர். அங்கு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார் மாணவி. அருகில் பச்சிளம் பெண் குழந்தை இறந்து கிடக்க, மாணவிகள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். அந்த மாணவிக்கு திருமணமாகவில்லை என்பதுதான் அதிர்ச்சியின் உச்சம். இந்த மாணவியும், இவரது பக்கத்து ஊரைச் சேர்ந்த வாலிபர் ஒருவரும் காதலித்து வந்…

  18. சென்னை: எம்.எல்.ஏக்களை பிரித்து அதிமுகவை உடைக்கும் திறமை தன்னிடம் இருப்பதாகவும், அது தமிழக பாஜக, காங்கிரஸ் கட்சி தலைவர்களிடம் இல்லை என்றும் கூறியுள்ள பாஜக ராஜ்யசபா எம்.பியான சுப்பிரமணியன் சுவாமி, ஜெயலலிதா இறப்பின் மர்மம் விலகாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். 'தி இந்து' நாளிதழுக்கு சுப்பிரமணியன் சுவாமி அளித்த சிறப்பு பேட்டியில் இத்தகவலை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருப்பதால்தான் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. இது குறித்து ஒரு நல்ல விசாரணை நடத்தப்படும் வரை அது குறித்த பல கேள்விகள் தொடரும் என்று தெரிவித்துள்ள சுவாமி, "சிகிச்சைக்காக 75 நாட்கள் இருந்தபோது, நர்சுகளுடன் அவர் பேசியதாக சொல்லப்பட்டது, உண…

  19. தீபாவிற்கு பெருகும் ஆதரவு ... சசிகலா உறவினர்கள் திக்... திக் தஞ்சாவூர், : - சசிகலாவின் சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டங்களில், தீபாவிற்கு பெருகி வரும் ஆதரவால், சசிகலா உறவினர்களை பீதியடைய செய்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வில் உயர்மட்ட நிர்வாகிகள், பகீரத பிரயத்தனம் செய்து, சசிகலாவை பொதுச் செயலராக அமரச் செய்துவிட்டனர். சசிகலாவை ஏற்காத, அதிருப்தியாளர்கள், சசிகலாவிற்கு ஆதரவாக வைக்கப்படும், 'பிளக்ஸ்' பேனர்கள் மீது, சாணம் வீசி தங்களின் எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வந்தனர். மேலும், இதற்கு மாற்றாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு, ஆதரவுகள் தமிழகம் முழுவதும் தற்போத…

  20. பரோல் கோரி சசிகலா திடீர் மனு தாக்கல்! சொத்துக்குவிப்பு வழக்கில் நான் ஆண்டுகள் சிறைத் தண்டனைபெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருக்கும் சசிகலா, பரோல் கேட்டு மனு தாக்கல்செய்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, பிப்ரவரி மாதம் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மூவரும் பெங்களூரு சிறையில் தண்டனைபெற்றுவருகின்றனர். சசிகலா சிறைக்குச் சென்றதை அடுத்து, டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, இரட்டை இலைச் சின்னத்தைப் பெற, தேர்தல் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றார் என…

  21. திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்போம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். மதுரையில் நேற்று செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது: திமுக- பாஜக இடையே கூட்டணி அமைக்க வாய்ப்புள்ள தாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகின. ஆனால் திமுக பொதுக்குழுவில், சமூகநீதிக்கு எதிராகச் செயல்படும் மோடி அரசை எதிர்ப்போம் என மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக அறிவித்தது வரவேற்கத்தக்கது. இதனால் திமுக- பாஜக கூட்டணி குறித்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. திருப்பரங் குன்றம், திருவாரூர் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் திமுகவுக்கு மதிமுக ஆதரவு அளிக்கும். அண்ணா பிறந்தநாளை யொட்டி வரும் செப்.15-ம் தேதி ஈரோட்டில் மதிமுக மாநாடு நடைபெறுகிறது என்…

  22. தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக பிரதமராக இருந்த வி.பி.சிங்கிடம் ஆயுத உதவி செய்ய வேண்டும் என தாம் கேட்டதாக மதிமுக பொதுச்செயலரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ தெரிவித்துள்ளார் நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து பேசும் போது வாஜ்பாய் முன்பு ஆற்றிய ஒரு உரையை மேற்கோள்காட்டினேன். வங்கதேச தனிநாட்டை உருவாக்கியதற்காக இந்திரா காந்தியை துர்காதேவியாக பார்க்கிறேன் என வாஜ்பாய் பேசியிருந்தார். அதே போல தனி தமிழ் ஈழத்தை உருவாக்கி கொடுத்தால் ஆயிரம் ஆண்டுகளுக்கு உங்களை அன்னை பராசக்தியாக தமிழர்கள் வணங்குவார்கள் என்றேன். அப்போது உணர்ச்சிவசப்பட்ட இந்திரா காந்தி அம்மையார், இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழுகிற தமிழர்கள் அம்மண்ணின் பூர்வகுடிகள் என பிரகடனம் செய்தார். h…

  23. உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்! தேசிய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் 5ஆவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. இதனை முன்னிட்டு மத்திய அரசு டெல்லியில் விருது வழங்கி கௌரவித்துள்ளது. இதற்கான விருதினை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரிடம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஸ்வர்தன் மற்றும் இணை அமைச்சர் அஸ்வின் குமார் சௌபே ஆகியோர் வழங்கி கௌரவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் உடல் உறுப்பு தான சிகிச்சை சிறப்பாக வழங்கும் மருத்துவமனைக்கான விருது சென்னை இராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. மேலும் இந்தியாவிலேயே முதன்முறையாக இறந்தவரின் கைகளை மற்றவருக்கு வெற்றிகரமாக பொருத்தியதற்காக ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவர் ரமாதேவிக்க…

    • 1 reply
    • 1.2k views
  24. முதல்வர் பேசும்போது வெளியேறிய சசிகலா கருத்தரங்கில் பங்கேற்றோர் அதிர்ச்சி கருத்தரங்கில், முதல்வர் பன்னீர்செல்வம் பேசும் போது, அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலா வெளியேறியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 'இந்தியா டுடே' குழுமம் சார்பில், இரண்டு நாள் கருத்தரங்கம், சென்னையில் நேற்று துவங்கியது. கருத்தரங்கை, அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலா துவக்கி வைத்தார்; ஜெயலலிதா உருவ படத்தையும் திறந்து வைத்தார். கருத்தரங்கில், முதல்வர் பன்னீர்செல்வம் பேசும் போதே, அரங்கில் இருந்து சசிகலா வெளியேறினார். மாநில முதல்வர் பேசும் போது, அவர் சார்ந்த கட்சி பொதுச்செயலர் வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.