Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ''சசிகலா வீடியோ உண்மையானது''- போலீஸ் டி.ஐ.ஜி.ரூபா பெங்களூரு சிறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து உயர்மட்ட குழு விசாரணைக்கு கடந்த 13-ம் தேதி கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர், கடந்த 17-ம் தேதி அம்மாநில தலைமைச் செயலாளர் சுபாஷ் சந்திரகுந்தியாவை சந்தித்துப் பேசினார். பெங்களூரு சிறைக்கு நேற்று மாலையில், விசாரணை அதிகாரி வினய்குமார் சென்றார். வரவேற்பு அறை முதல் அங்கு குறிப்பிட்ட சில இடங்களை அய்வு செய்தார். ஏற்கெனவே சிறைத்துறை டி.ஐ.ஜி-யாக இருந்த ரூபா, சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாகவும், அதற்காக கோடிக்கணக்கில் பணம் கைமாறி இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்…

  2. தே.மு.தி.க. காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்தால் அதை வரவேற்போம் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். எண்ணூர் துறைமுகத்தில் புதிய ரயில் பாதையை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியபோது, மத்திய அரசு மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தே.மு.தி.க. போன்ற மத சார்பற்ற கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்தால் அதை வரவேற்போம். 2014 ஆம் ஆண்டு தேர்தலில் முன்பைவிட அதிக இடங்களை வென்று காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியை பிடிக்கும் என்றார். காங்கிரஸ் தலைமையின் மீது அதிருப்தியில் இருக்கும் ஜி.கே. வாசன், புதிய கட்சி ஒன்றை துவங்கப் போவதாக சில மாதங்களாக வதந்தி உருவாகி வருகிறது…

  3. அ.தி.மு.க ஆட்சி சிறப்பாக அமைய பாடுபட்டவர் சசிகலா: அமைச்சர் செல்லூர் ராஜூ அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய உறுதுணையாக இருந்தவர் சசிகலா என அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பேட்டியளித்துள்ளார். மதுரை: மதுரையில் டெங்கு காய்சலை கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு முகாமை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு விரைந்து பணியாற்றி வருவதாக கூறினார். மேலும், டெங்குவ…

  4. திமுக தலைமையில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி: கருணாநிதி அறிவிப்பு திமுக தலைமையிலான கூட்டணியின் பெயர் ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று அக் கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்தார். திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை தாங்கி கருணாநிதி பேசியது:- திமுக கூட்டணியை இனி, ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று அழைப்போம். எல்லா இடங்களுக்கும் நான் நேரில் சென்று பிரசாரம் செய்வதற்கு இயலாவிட்டாலும், எந்த வழியாக பிரசாரம் செய்ய வேண்டுமோ, அந்த வழியாக இடைவிடாது பிரசாரம் செய்வேன். திமுகவின் கூட்டணி கட்சியினர் பிரசாரம் செய்யும்போது, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறுவது யார், அவர்கள் மதச்சார்பற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களா, இல…

    • 2 replies
    • 557 views
  5. நேதாஜி படையின் சிவகாமி அம்மாள்: 'குண்டுவெடிப்புகளுக்கு நடுவே குழந்தையைக் காப்பாற்றினோம்' ஹேமா ராக்கேஷ் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, நேதாஜியின் பாலசேனா படைப் பிரிவில் இருந்தவர் சிவகாமி அம்மாள் இந்திய சுதந்திரத்திற்காக சிங்கப்பூரில் நேதாஜியின் ராணுவப்படையின் அணிவகுப்பில் பாலசேனா படைக்குத் தலைமை தாங்கி இருக்கிறார் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 90 வயதான சிவகாமி அம்மாள். பிபிசி தமிழுக்காக தன்னுடைய சுதந்திர போராட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். சிவகாமி அம்மாளுக்கு சொந்த ஊர் தர்மபுரி மாவட்டத்திலுள்ள அன்னசாகரம். ஊரில் …

  6. தென்னக ரயில்வே ரயில் எஞ்சின்களில் ஒன்றில் கூட கழிப்பறை இல்லை: பெண் ஓட்டுநர்கள் அவதி பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 19 ஆகஸ்ட் 2022, 07:55 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் நாடு முழுவதும் ஓடும் ரயில் எஞ்சின்களில் 120 மின்சார ரயில் எஞ்சின்களுக்கு மட்டுமே கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது என ஆர்டிஐ மூலம் தெரிய வந்துள்ளது. தென்னக ரயில்வேயில் ஒரு ரயிலில் கூட எஞ்சினில் கழிப்பறை வசதிகள் செய்யப்படாததால் ரயில் ஓட்டுனர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். சமீப காலமாக ஆண்களுக…

  7. 5ஜி விரைவில் சென்னையில் - உங்கள் மொபைலில் அது வேலை செய்யுமா? 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவில் 5ஜி சேவை விரைவில் அறிமுகமாகவுள்ளது. அக்டோபர் மாதத்திற்குள், நாட்டின் முக்கிய பெரு நகரங்களில் 5ஜி நெட்வொர்க் இணைப்பு கிடைக்கும். சமீபத்தில் 5ஜி சேவைக்கான அலைக்கற்றை ஏலம் விடப்பட்டதில் இருந்து, அந்த சேவையைப் பெறும் எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த நிலையில், ஏர்டெல் நிறுவனம் தனது 5ஜி சேவையை அக்டோபர் மாதத்தில் தொடங்குவதாக தெளிவுபடுத்தியுள்ளது. Vi அதாவது வோடாஃபோன் ஐடியா, மற்ற 5ஜி ஆபரேட்டர்களிடமிருந்து வேறுபட்ட திட்டத்தை அறிவிக்கவிருக்கிறது. 5ஜி சேவை அறிமுகமாக…

  8. தமிழகத்தையே கலக்கிய ஒரு செய்தி என்றால் உதயநிதி - நயன்தாரா காதல் விவகாரம் தான். ஒரு முன்னணி வார இதழ் இவர்களுக்கிடையே ஏற்ப்பட்ட காதலால் தற்கொலை வரை சென்றதாக தெரிவித்திருந்தது. இதைக் கண்ட உதயநிதியின் மனைவி கிருத்திகா மிகவும் கோபமுடன் டுவிட்டரில் தன் கருத்தை தெரிவித்தார். இதில் மீடியாக்கள் மிகவும் கீழ்தரமாக நடந்துகொள்கின்றன, யாரும் என்னிடம் இது உண்மையா என்று கேட்டு, உங்கள் நேரத்தை வீனாடிக்காதீர்கள் .மேலும் இவர்களுடன் வேறு படத்தில் பணிபுரிந்த இயக்குனர்கள் ராஜேஷ், அட்லி போன்றோரும் இதை கடுமையாக மறுத்துள்ளனர். http://virakesari.lk/articles/2014/07/16/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE…

  9. திமுகவுக்கு எதிராக மிகக் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்துவரும் சீமான், ஆ.ராசாவுக்கு ஆதரவாக இப்போதும் கருத்துத் தெரிவித்திருப்பது சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது. ``மனுதர்மத்தைச் சாடியதற்காக, அண்ணன் ஆ.ராசா அவர்களைக் குறிவைத்து, மதவாதிகள் இனியும் தாக்குதல் தொடுத்தால் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்'' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தெரிவித்திருக்கும் கருத்து பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது. ஒருபுறம், `திமுக தலைமையே ஆதரவு தெரிவிக்காத நேரத்தில் எங்கள் அண்ணன் எப்படி துணிச்சலாகப் பேசியுள்ளார்' என நாம் தமிழர் தம்பிகள் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின…

  10. 'வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது' - அண்ணா சொன்னது இன்றும் பொருந்துகிறதா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வரிப்பணத்தில் வரும் நிதியை மத்திய அரசு வட மாநிலங்களுக்கே அதிகம் பயன்படுத்துகிறது என்று ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். படத்தின் காப்புரிமைARUNKUMARSUBASUNDARAM Image captionபெரியாருடன் அண்ணா "மத்திய அரசால் பாரபட்சம் காட்டப்பட…

  11. ராம­ராஜ்ய ரத யாத்­திரை தமி­ழ­கத்­துக்கு அவ­சி­யமா? நல்­ல­தம்பி நெடுஞ்­செ­ழியன் நல்­ல­தம்பி நெடுஞ்­செ­ழியன் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் 'ராம ராஜ்ய ரத யாத்­திரை' தமி­ழ­கத்தில் பல்­வேறு சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. இந்த ரதம் தமி­ழ­கத்­துக்குள் பிர­வே­சிப்­ப­தற்கு எதிர்­க்கட்­சி­களும், சிறு­பான்மை அமைப்­பு­களும், பொது அமைப்­பு­களும் கடும் கண்­ட­னத்தை வெளி­யிட்­ட­துடன் ஆர்ப்­பாட்­டங்­க­ளையும் நடத்­தின. பல்­வேறு மதங்­களைச் சேர்ந்­த­வர்­களும், சிறு­பான்மை மக்­களும் அன்பு, சகோ­த­ரத்­துவம், சமா­தா­னத்­துடன் தமி­ழ­கத்தில் வாழ்ந்து வரு­கின்­றனர். அமைதி பூங்­கா­வாகத் திகழும் தமி­ழ­கத்­துக்கு விஸ்வ ஹிந்து பரி­ஷத்தின் ராம ராஜ்ய …

  12. ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ததில் காங்கிரசுக்கு உடன்பாடு இல்லை- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ததில் காங்கிரசுக்கு உடன்பாடு இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு கிண்டி கத்திப்பாராவில் உள்ள நேருவின் சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , “ராஜீவ் கொலை வழக்கில் கைதானவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள். அவர்கள் நிரபராதிகள் இல்லை. நீதிமன்…

  13. தமிழ்நாட்டில் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தற்காலிக தடை விதிப்பதால் தற்கொலைகள் தடுக்கப்படுமா? கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாட்டில் தற்கொலை மரணங்கள் அதிகரித்துள்ளதால், கடைகளில் எளிதில் கிடைக்கும் ஆறு வகை பூச்சிக்கொல்லி மருந்துகளை மாநில அரசு தற்காலிகமாக தடை செய்துள்ளது. அந்த ஆறு பூச்சிக்கொல்லி மருந்துகளை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்றும் இந்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. சாணி பவுடரை தடை செய்வதற்கான முயற்சியிலும் தமிழக அரசு தீர்க்கமாக இருப…

  14. "புற்றுநோய் தாக்கியதா? என்ன சொல்கிறார்கள் ஸ்டெர்லைட் தொழிலாளர்கள்?" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைVEDANTA Image captionஸ்டெர்லைட் ஆலை. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தொடங்கிய போரட்டம், துப்பாக்கிச் சூடு - கலவரத்தில் முடிந்தது. குறைந்தது 13 பேர் இந்த துப்பாக்கிச்சூட்டில் இறந்துள்ளனர். ஸ்டைர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு…

  15. சென்னை: 'கத்தி' பட விளம்பரங்களில் இருந்து தயாரிப்பாளர் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள நடிகர் விஜய், ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "என்னை நேசிக்கும் அன்பான தமிழக மக்களுக்கும், அன்பு ரசிகர்களுக்கும் வணக்கம். சில நாட்களாக சில தமிழ் அமைப்புகள் 'கத்தி' திரைப்படத்தின் தயாரிப்பாளர் லைக்கா நிறுவனத்தின் பெயரை விளம்பரங்களில் நீக்க கோரிக்கை வைத்திருந்தனர். அவர்களின் வேண்டுகோளை மதித்து படத்தின் விளம்பரங்களில் லைக்கா பெயரை நீக்க தயாரிப்பாளர்கள் ஒத்துக் கொண்டனர். எனவே இந்த பிரச்னை சுமூகமாக முடிந்துவிட்டது. எனவே, எதிர்பார்ப்போடு காத்திருந்த ரசிகர்களும், மக்களும் 'கத்தி' திரைப்படத்தை சந்தோஷமாக கண்டுகளிக்குமாறு…

    • 4 replies
    • 947 views
  16. திராவிடக் கட்சிகளின் ஆட்சி தமிழகத்துக்குத் தந்தது என்ன? 1967 பொதுத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் முதன்முறையாக மாநிலக் கட்சியொன்று ஆட்சியைப் பிடித்தது. முதலில் மாணவராகவும், பிறகு மாநில நிர்வாகத்தில் அதிகாரியாக இடம்பெற்றும் அப்போதைய மாற்றங்களை நேரிலேயே பார்த்தவர் எஸ்.நாராயண். “தமிழகத்தில் அரசியல் சித்தாந்தம் அரசின் கொள்கையாகவும், திட்டங்களாகவும் மாற்றப்பட்டதால் மக்கள் பயன்பெற்றார்கள். அப்படிப்பட்ட மாற்றம் இந்தியாவில் வேறு எங்கும் நிகழவில்லை” என்று தன்னுடைய புதிய நூலில் எழுதியிருக்கிறார். ‘தி திரவிடியன் இயர்ஸ்: பாலிடிக்ஸ் அண்ட் வெல்ஃபேர் இன் தமிழ்நாடு’ என்ற அவருடைய நூலிலிருந்து சில பகுதிகள்: அண்ணாவுக்குப் பிறகு… …

  17. கட்டுரை தகவல் எழுதியவர்,சுதாகர் பதவி,பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் உல்லாசப் படகு கவிழ்ந்ததில் 22 பேர் பலியானார்கள். 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். , அதில் 6 பேருக்கு பெரியளவில் பாதிப்பு இல்லை. மற்றவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஓட்டும்புறம், தூவல் தீரம் என்ற இடத்தில் சுற்றுலா பயணிகள் கடலில் உல்லாச பயணம் செய்து வருவது வாடிக்கையானது. அவ்வாறு சுற்றுலா வந்த இடத்தில் ஈரடுக்கு உல்லாசப் படகில் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்கச் சென்ற போது இந்த விபத்து நேரிட்டுள்ளது. விபத்து நேர…

  18. வினாத்தாளை தமிழில் தயாரிக்க முடியாவிட்டால் டிஎன் பி எஸ் சியை மூடுங்கள்... ராமதாஸ் ஆவேசம் ! சென்னை : தமிழில் வினாத்தாள் தயாரிக்க தகுதியான பேராசிரியர்கள் இல்லாததால் இந்த ஆண்டு குரூப்.2 தேர்வுகளில் சிலவற்றை தமிழில் நடத்த முடியாது என டிஎன்பிஎஸ்சி அறிவித்திருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதில் முன்னணி இடம் வகிக்கிறது தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம். அரசுப்பணியில் சேர வேண்டும் என்ற கிராமமக்களின் கனவுகள் ஓரளவேனும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் மூலம் நிறைவேற்றப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு குரூப் 2 தேர்வுகளில் சிலவற்றை தமிழில் எழுத முடியாது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.இதற்க…

  19. 16 SEP, 2023 | 12:11 PM கோவை: தமிழகத்தில் சென்னை, கோவை, தென்காசி மாவட்டங்களில் மொத்தம் 30 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை உக்கடத்தில் நடந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவையில் கடந்த ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி உக்கடத்தில் உள்ள கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலின் முன் கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து முபினின் உறவினர்கள், நண்பர்கள், அவருடன் தொடர்புடையவர்கள் என 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று (செப்.16) காலை 6.30 மண…

  20. கருணாநிதி சிலை திறக்க சென்னை வருகிறார் சோனியா காந்தி : November 29, 2018 1 Min Read அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சென்னை வருகைதரவுள்ளதாக திராவிட முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் காலமான கருணாநிதிக்கு தி.மு.க. தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் உருவ சிலை அமைக்கப்பட உள்ளது. அத்துடன் தி.மு.க. நிறுவனர் அண்ணாவுக்கும் புதிய சிலை அமைக்கப்பட உள்ளது. அண்ணா-கருணாநிதி ஆகியோரின் சிலைகள் திறப்பு விழா எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி நடைபெற உள்ளது. இந்த விழாவை தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் விழாவாக மாற்ற ஏற்பா…

  21. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு திருச்சி முகாமில் அடைக்கப்பட்டுள்ள ராபர்ட் பயஸ் உள்ளிட்ட இருவர் தங்களை விடுவிக்கக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இதுதொடர்பாக ராபர்ட் பயஸ் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின் 11.11.2022-ல் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டேன். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாளில்இருந்து கொட்டப்பட்டு இலங்கைஅகதிகள் முகாமில் தங்கியுள்ளேன். இந்த முகாம் சிறையைவிட மோசமானது. அறையை விட்டு வெளியே வரவும், மற்றவர்களுடன் பழகவும் அனுமதிப்பதில்லை. சிறையிலிருந்து விடுதலையான பிறகும் அதே நிலை தொடர்வதால் மன உளைச்சலுக்கு ஆளாக…

  22. தமிழகத்தில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது 2,430 கோடி ரூபாய்! மக்களவைத் தேர்தலோடு 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான மினி சட்டமன்ற இடைத் தேர்தலும் நடப்பதால் மத்திய ஆட்சி, மாநில ஆட்சி இரண்டுக்குமான பரீட்சையாக அமைந்திருக்கிறது இந்தத் தேர்தல். வாக்குக்கு பணம் என்பது வெளிப்படையாக எல்லோராலும் கண்டிக்கப்பட்டாலும், இன்னொரு பக்கம் பெரும்பாலான கட்சிகள் வாக்குக்கு பணம் கொடுப்பதை தேர்தல் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாகவே வைத்திருக்கின்றன. பொதுவாக மக்களவைத் தேர்தல் என்றால் ஒரு தொகுதிக்கு அதிகபட்சம் பத்து லட்சம் வாக்காளர்கள், சட்டமன்றத் தேர்தல் என்றால் அதிகபட்சம் ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது என்பதுதான் தேர்தல் களக் கணக்கு. வரையறுக்கப்பட்ட தேர்தல் செலவு வரம்புகளை …

  23. தயாநிதி அழகிரியின் 40 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கியது அமுலாக்கத்துறை தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரியின் மகன் தயாநிதியின் 40 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை அமுலாக்கத்துறை முடக்கியது. இந்த சொத்து முடக்கம் குறித்து அமுலாக்கத்துறை இன்று (புதன்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பணமோசடி தடுப்பு சட்டம், 2002இன் கீழ் ஒலிம்பஸ் கிரனைட்ஸ் தனியார் நிறுவனத்திற்கு உரிய மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிலம், கட்டடங்கள் மற்றும் வைப்பு தொகைகள் என மொத்தம் ரூ.40.34 கோடி மதிப்பிலான தயாநிதி அழகிரியின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இவற்றில் 25 அசையும் மற்றும் அசையா சொத்துகள் அடங்கும். சட்டவிரோத முறையில் இந்த சொத்துகள்…

  24. கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 8 மணி நேரங்களுக்கு முன்னர் ஜெர்மன் நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த சீகன் பால்குவிற்கு சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படும் என கடந்த வாரம் சட்டப் பேரவையில் தமிழ்நாடு அரசு அறிவித்தது. தரங்கம்பாடி மட்டுமல்லாமல் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் இதை வரவேற்றுள்ளனர். ஜெர்மனியை சேர்ந்த ஒருவருக்கு சிலையும் அரங்கமும் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது ஏன்? பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். கிறிஸ்தவத்தை பரப்ப வந்து தமிழ் அறிஞரான பாதிரியார் மயிலாடுதுறை அருகே தரங்கம்ப…

  25. 48 மணி நேரத்திற்கு தமிழக கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் l டெல்லி: அடுத்த 48 மணி நேரத்தில், தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அதன் இயக்குநர் ராத்தோர் கூறுகையில், "அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலோர தமிழக பகுதிகளில் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது. ஆந்திராவின் நெல்லூர், சித்தூர் உள்ளிட்ட தெற்கு பகுதிகளிலும் கன மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்பிறகு மழை தாக்கம் குறையும். இருப்பினும், மழை முற்றாக நிற்காது. 6 நாட்களாவது மழையின் தாக்கம் தொடரும்". இவ்வாறு அவர் தெரிவித்தார். அடுத்த 48 மணி நேரத்தில், தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. Read more…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.