Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மாணவிகளை பாலியல் ரீதியாக மிரட்டிய விவகாரத்தில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டு இருப்பது பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பதிவு: டிசம்பர் 21, 2021 12:11 PM சென்னை: கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பெரிய ஓபுளாபுரத்தை அடுத்த ஈச்சங்காடு கிராமத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வாலிபர் ஒருவரின் உடல் புதைக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஆரம்பாக்கம் போலீசார் விரைந்து சென்று உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் அந்த வாலிபர் கொலை செய்து புதைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது பெயர் பிரேம் குமார் என்பதும், 20 வயதான அவர் தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்…

  2. பட மூலாதாரம்,COIMBATORE CITY POLICE படக்குறிப்பு, கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் சுஹாசினி கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ் 9 செப்டெம்பர் 2024 புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர் ''சென்னையைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவியர் சிலர், கோவையில் ஒரு தோழியின் ‘பாசிங் அவுட்’டுக்காக வந்து, ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்துள்ளனர். அதில் ஒரு மாணவி, தான் குளிக்கும்போது, யாரோ படமெடுத்தது போலத் தெரிந்ததாக ஒரு கல்லூரித் தோழியிடம் சொல்லியிருக்கிறார். அவர் ‘போலீஸ் அக்கா’விடம் சொல்கிறேன் என்று என்னிடம் சொன்னார். உடனே நாங்கள் அந்த விடுதிக்குச் செ…

  3. மதுரை: மதுரை திருமங்கலத்தில் கல்லூரி மாணவிகள் இரண்டு பேர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் ஆசிட் வீசிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருமங்கலத்தில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரி ஒன்றில் சின்னப்பூலம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாணவிகள் மீனா, அங்காள ஈஸ்வரி படித்து வருகின்றனர். மீனா பி.ஏ. முதலாமாண்டும், அங்காள ஈஸ்வரி பி.ஏ. இரண்டாமாண்டும் படிக்கின்றனர். இந்நிலையில், இன்று பிற்பகல் 2 மணிக்கு கல்லூரி முடிந்து ஊருக்கு செல்வதற்காக மாணவிகள் இரண்டு பேரும் பேருந்து நிலையம் வந்து கொண்டிருந்தனர். அப்போது, 35 வயது மதிக்கத்தக்க ஒருவர், மாணவி மீனா முகத்தில் ஆசிட் வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அந்த நபர் வீசிய வேகத்தில் அ…

  4. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் தேர்வை தமிழில் எழுதக்கூடாது என்றும், ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்றும் எந்த உத்தரவும் இதுவரை அரசிடம் இருந்து கல்லூரி கல்வி இயக்குனரகத்திற்கு வரவில்லை என்று கல்லூரி கல்வி இயக்குனர் பேராசிரியை டி.செந்தமிழ்ச்செல்வி தெரிவித்தார். தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், நெல்லை மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்த பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. மொத்தம் 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 133 அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளும், 438 சுயநிதி கலை, அறி…

    • 0 replies
    • 501 views
  5. காட்பாடியில் சித்தூர் ரோட்டில் ஆந்திர எல்லை அருகில்Â தி.மு.க அமைச்சர் துரை முருகன் நடத்தி வரும் கிங்ஸ்டன் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இதில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஆந்திராவில் பந்த் நடந்து வருவதால் சித்தூரில் இருந்து மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு வந்து சென்று கொண்டிருந்தனர். சித்தூரை சேர்ந்தவர் ஷர்வான்குமார் கல்லூரி மாணவர். இவர் கடந்த செவ்வாய்கிழமை கல்லூரி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது நடந்த சாலை விபத்தில் ஷர்வான்குமார் படுகாயம் அடைந்தார். அப்போது உடன் இருந்த மாணவர்கள் கல்லூரியை தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் வாகனத்தை கேட்டுள்ளனர். ஆம்புலன்சை அனுப்ப கல்லூரி நிர்வாகம் மறுத்ததாக க…

    • 0 replies
    • 727 views
  6. கல்லெறிந்த அமைச்சர்; 'கற்கால திமுக' என அதிமுக விமர்சனம் 4 மணி நேரங்களுக்கு முன்னர் நாற்காலியைக் கொண்டுவர நேரமானதால், நாற்காலி கொண்டுவருபவரை நோக்கி பால்வளத் துறை அமைச்சர் எஸ்.எம். நாசர் கல்லெறிந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எதிர்க்கட்சியினர் அவரைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். மொழிப் போர் தியாகிகளை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தி.மு.க. கூட்டங்களை நடத்திவருகிறது. இந்த ஆண்டும் அனைத்து மாவட்டங்களிலும் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று நடக்கும் பொதுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவிருக்கிறார். 'இது ஓர் அவசரநிலை' - காங்கிரஸுக்…

  7. கல்வராயன் மலைவாசிகள்: கொடுமையின் உச்சத்தை அனுபவிக்கும் கிராமங்கள் - கள நிலவரம் முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 14 மே 2022 தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை மீது உள்ள பல உள்ளடங்கிய கிராமங்களில் சரியான சாலை வசதிகள் இல்லாத காரணத்தால் பிரதான சாலையை அடைவதற்கு பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் இந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள். களத்திலிருந்து நேரடி ரிப்போர்ட். கல்வராயன் மலையில் உள்ளடங்கி அமைந்திருக்கும் சின்னக் கருவேலம்பாடியிருந்து கீழே இறங்கும் மலைப் பாதை. அந்தக் கரடுமுரடான மலைப்பாதையில் கடுமையான மே மாத வெயிலில் தன் மனைவியுடன் நடந்துவந்து கொண…

  8. கல்வி மட்டுமே நம்மை உயர்த்தும் என்கிறார்கள். சரி. உயர்வு என்றால் என்ன? உயர்ந்த வாழ்க்கைத்தரம், சமூக மரியாதை. இரண்டும் பணத்தினால் கிடைப்பன. எனில் கல்வி நம்மை உயர்த்தும் எனும் போது கல்வியினால் நாம் நிறைய பணத்தைப் பெறலாம் எனக் கூறுகிறார்கள் எனப் புரிந்துகொள்கிறேன். இப்போது நான் கேட்க விரும்பும் கேள்வி எந்த விதமான கல்வி பணத்தை அள்ளிக்கொடுக்கிறது என்பது. எண்பது, தொண்ணூறுகள் வரை அரசு வேலை, அதன் பிறகு தனியாரில் ஐ.டி வேலை, வெளிநாட்டு வாழ்க்கை. இதன் நடுவே சொற்பம் பேருக்கு மருத்துவ, ஐ.ஏ.எஸ் வேலைகள். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது - பணம் அதன் மதிப்பை இழந்துவிட்டது. நான் என் முதல் வேலையில் பெற்ற சம்பளத்திலிருந்து 25 மடங்கு அதிகப் பணத்தை தம் முதல் சம்பளமாக என் மாணவர்கள்…

  9. கல்வீச்சு, மண்டை உடைப்பு, சாலை மறியல் - ஆர்.கே.நகரில் பதற்றம்! ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளன. இப்போதுதான், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இடைத்தேர்தலுக்கே உரித்தான கல்வீச்சு, மண்டை உடைப்பு, சாலை மறியல் போன்றவை அரங்கேறியுள்ளன. ஆர்.கே.நகர் நேதாஜி நகர் ஏரியா-வுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா ஆகியோர் டி.டி.வி.தினகரன் சார்பில் தேர்தல் பொறுப்பாளர்களாக பணியாற்றி வந்தனர். இந்த பகுதியில் தான் ஏப்ரல் 6-ம் தேதியான நேற்று, ஓ.பன்னீர்செல்வமும் டி.டி.வி.தினகரனும் தேர்தல் பிரசாரம் செய்ய வந்தனர். அதனால் இரு அணியை சேர்ந்தவர்களும் தங்களது பலத்தை காட்ட ஆட்களை திரட்டி வைத்து இருந்தனர். ஒரு பிரசார வேனில் ஜெயலலிதா பேச்சுகள் ஒளிப…

  10. கல்வெட்டுல எம்.பி... இப்ப மத்திய அமைச்சர்... ஓபிஎஸ் மகன் ஆதரவாளர்களின் அமர்க்களம்! துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகனும் தேனி எம் பி.யுமான ரவீந்தரநாத்குமாரை மத்திய அமைச்சர் என குறிப்பிட்டு அழைப்பிதழ் அச்சடித்திருப்பது சர்ச்சையாகி உள்ளது. லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னரே தேனி அருகே கோவில் ஒன்றில் வைக்கப்பட்ட கல்வெட்டில் ரவீந்தரநாத்குமார் எம்.பி. குறிப்பிடப்பட்டிருந்தது. இது பெரும் விவாதப் பொருளானது.இதையடுத்து சர்ச்சைக்குரிய கல்வெட்டை அமைத்தவர் கைது செய்யப்பட்டார். தற்போது எம்.பி.யாக வென்றுவிட்ட ரவீந்தரநாத்குமார் மத்திய அமைச்சரவையில் இடம்பெற பகீரத முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவருக்கு இணை அமைச்சர் பதவியாவது கிடைக்கும் என அவரது ஆதரவாளர…

  11. களமிறங்கிய ஸ்டாலின், திவாகரன்! சபாநாயகருடன் முதல்வர் அவசர ஆலோசனை ஆளும்கட்சிக்கு எதிராக 19 எம்.எல்.ஏ-க்கள் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றுள்ள நிலையில் சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றார். பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. ஆறு மாதங்களுக்கு முன்பு அ.தி.மு.க-விலிருந்து பிரிந்துசென்ற ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி, சில நாள்களுக்கு முன்பு முதல்வர் பழனிசாமி அணியுடன் இணைந்தது. தினகரனை ஒதுக்கிவைத்துவிட்டு இருஅணிகள் இணைந்ததால் அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். ஆளுநரை சந்தித்து மு…

  12. கொடூர போலீஸ் தாக்குதல்.. அரசு மீது கோபத்தை திருப்பிய தமிழக மக்கள்.. களையிழந்த குடியரசு தினம். சென்னை; குடியரசு தினம் என்றால் மாவட்டந்தோறும் நடக்கும் கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சியை பொதுமக்கள் ஆர்வத்தோடு கண்டு களிப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு போலீசாரின் மீது பொதுமக்களுக்கு அதிருப்தி இருப்பதால் குடியரசு தினம் களையிழந்து காணப்படுகிறது. கடந்த திங்கள் கிழமை சென்னையில் நடைபெற்ற வன்முறையில் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள நடுகுப்பம், அயோத்திய குப்பம் மற்றும் ராயப்பேட்டை பகுதிகளில் வீடு வீடாக புகுந்து போலீசார் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இது போதாதென்று அவர்களே குடிசைகள் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தினார்…

  13. மிஸ்டர் கழுகு: களையெடுக்க காலா ரெடி! கழுகாரிடமிருந்து வாட்ஸ்அப் செய்தி... ‘நேரில் வரமுடியாத அளவுக்கு பிஸி!’ இதைத்தொடர்ந்து பத்தி பத்தியாக வாட்ஸ்அப்பில் செய்திகளை அனுப்பித் தள்ளிவிட்டார். ரஜினி அலுவலகத்தில் நடந்த சர்ச்சைகளைக் கடந்த இதழில் குறிப்பிட்டிருந்தேன். அது இன்னும் பெரிதாக விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதுப்படத்தின் ஷூட்டிங் முடித்து, டார்ஜிலிங்கிலிருந்து சென்னை திரும்பிவிட்ட ‘காலா’ ரஜினி, இனி களையெடுப்பில் இறங்கப் போகிறாராம். சமீபத்தில், மன்றத்தின் முக்கியமான பொறுப்பில் அமர்த்தப்பட்ட ராஜு மகாலிங்கம்கூட டம்மி ஆக்கப்படலாம் என்கிறார்கள். ‘‘ராஜு மகாலிங்கம், தி.மு.க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர…

  14. கள் இறக்கும் போராட்டத்தை சட்டம் அனுமதிக்கிறதா? 15 Jun 2025, 9:17 PM – ரவிக்குமார் ( Section 4 (1) (e) of Tamil Nadu Prohibition Act, 1937 இன் படி யாராவது கள் இறக்கினால் அவருக்கு 3 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கலாம். ) கள்ளுக்கடையைத் திறக்கவேண்டும் என்று சொல்பவர்கள் ஒரு கேள்வியைக் கேட்கிறார்கள். ‘மற்ற மதுவகைகளை அரசாங்கம் அனுமதிக்கிறது. சாராயம் விற்கிறார்கள். அயல்நாட்டு மதுவகைகளைத் தயாரித்து விற்கிறார்கள். அவையெல்லாம் செயற்கையாக இரசாயனப் பொருட்கள் கலந்து தயாரிக்கப்படுகிறது. கள் என்பது இயற்கையாக வடிகிற ஒரு பொருள். அது ஒரு இயற்கை உணவு. அது உடம்புக்கு நல்லது. சாதாரண ஏழைகள் சாப்பிடக் கூடியதாக இருக்கிறது. அதனால் நிறைய பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும். அப்படி இருக்கும்போது …

  15. கள் போதைப் பொருளா அல்லது உணவுப்பொருளா? குழந்தைகளும் அதை குடிக்கலாமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் கள்ளுக்கடைகளைத் திறக்க வேண்டுமென்ற கோரிக்கை அவ்வப்போது எழுப்பப்பட்டு வரும் நிலையில், தெலங்கானா மாநிலத்தில் கள் குடித்து 12 பேர் வரை அண்மையில் உயிரிழந்துள்ளனர். கள்ளில் கலப்படம் செய்ததே இதற்குக் காரணமென்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதி வழங்க நாம் தமிழர் கட்சியின் சீமான் வலியுறுத்தியது பேசுபொருளானது. சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பனை மரமேறி போராட்டம் நடத்தினார். மறுபுறம் கள் இறக்க புதிய தமிழகம் கிர…

  16. கள்ளை போதைப் பொருள் என நிரூபித்தால், ரூ.10 கோடி பரிசு வழங்குவதாக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு கள் இயக்கம் சவால் விடுத்துள்ளது. தமிழ்நாடு கள் இயக்க அமைப்பின் ஆலோசனைக் கூட்டம், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.மாரப்பன் தலைமையில் கரூரில் நேற்று நடந்தது. தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்ல சாமி முன்னிலை வகித்தார். பின்னர், கள் இயக்க ஒருங்கி ணைப்பாளர் செ.நல்லசாமி செய்தியாளர்களிடம் கூறியது: கேரள அரசு படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த முடிவெடுத்தது. இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வழக்கில், கள்ளுக்கு ஏன் தடை விதிக்கவில்லை என்று உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மதுவிலக்கு மற்றும் மதுக் கொள்கையை ஆய்வ…

  17. யாரோ உங்களிடம் கொடுத்த 1,000 ரூபாய் நோட்டு கள்ள நோட்டாக இருக்குமோ என்ற சந்தேகமா? உற்றுப்பார்த்தும் தடவிப் பார்த்தும் திருப்பிப் பார்த்தும் அது நல்ல நோட்டா, கள்ள நோட்டா என்று கண்டுபிடித்து விடலாம். அருகில் உள்ள 1,000 ரூபாய் நோட்டு படத்தை உற்று நோக்குங்கள். வழிகாட்டும் ஒளி ரூபாய் நோட்டின் முன்பக்கத் தில் இடதுபுறம் உள்ள பூ வேலைப் பாடு ஒளியைப் பாய்ச்சுவதன் மூலம் ஊடுருவிப் பார்க்கக் கூடியது. நோட்டின்மீது வெளிச்சம் படும்படியாக வைத்துக்கொண் டால், நல்ல நோட்டாக இருந்தால் அதில் அந்த ரூபாய் நோட்டுக் கான எண் தெரியும். பூ வேலைப் பாடுக்கு அருகில் உள்ள வெள்ளை வெற்றிடத்தில் மகாத்மா காந்தியின் உருவமும், நோட்டின் எண்ணும் நீரோட்ட வடிவில் தெரியும். வெளிச்சத்துக்கு எதிராக இதை நன்கு பார்க்…

    • 0 replies
    • 1.9k views
  18. கள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி? வரலாறு காணாத அவமானத்துடன் தமிழகத்திலிருந்து டெல்லி திரும்பியிருக்கிறார் நரேந்திர மோடி. ஆயுதக் கண்காட்சியைத் திறந்துவைக்க வந்த மோடிக்கு எதிராகக் கறுப்பு என்ற நிறத்தையே ஆயுதமாக ஏந்தியது தமிழகம். உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத மத்திய அரசின் அலட்சியம், ‘ஸ்கீமா, காவிரி மேலாண்மை வாரியமா?’ என்ற வார்த்தை விளையாட்டு விளையாடிய வஞ்சகம், ஆறுவாரக் கெடு முடிந்தபிறகு உச்சநீதிமன்றத்தை அணுகிய மமதை, கர்நாடகத் தேர்தல் ஆதாயத்துக்காகத் தமிழர்களின் முதுகில் குத்திய துரோகம்... என எல்லாவற்றுக்கும் எதிராக எழுந்த எதிர்ப்புதான் கறுப்பாய் மாறியது. ஒரு பிரதமர் பயங்கரவாதிகளுக்கு பயந்து பாதுகாப்பை நாடலாம். ஆனால், நரேந்திர மோ…

  19. கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 19 ஜூன் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்ட 72 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், பாண்டிச்சேரி, விழுப்புரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 13 பேர் உயிரிழந்துவிட்டதாக நேற்றைய தினம் அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் பின்னரும் அடுத்தடுத்து பலர் உயிரிழந்ததாக மருத்துவமனைகளில் இருந்து அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. தொலைதூர மற்றும் உள்புற கிராமங்களில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வந்த நிலையில், மாவ…

  20. கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்: சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றச்சாட்டு; நடந்தது என்ன? நடராஜன் சுந்தர் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்பு படம் சந்தேக மரணம் என்று காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வரும் சூழலில், தன் மகளின் மரணம் குறித்து உரிய விசாரணை செய்யப்படும் வரை உடலை வாங்க மறுத்து கடந்த 4 நாட்களாக பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் போராடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாணவி மரணமடைந்த விவகாரத்தில் நடந்தது என்ன? பின்னணி என்ன? கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத…

  21. பட மூலாதாரம்,@VANNIKURAL படக்குறிப்பு,முழு மதுவிலக்கு கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று மாலை (ஜூன் 24, 2024) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 219 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் 156 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான நாள் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் வட்டாரத்திலும் இவ்விவகாரம் மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியுள்ளது. …

  22. கள்ளக்குறிச்சியில் குறவர் இனத்தவர் மூவர் கைதாகி துன்புறுத்தப்படுவதாக புகார் 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ள ஓம் பிரகாஷின் மனைவி புவனேஸ்வரி கள்ளக்குறிச்சியில் குறவர் சமுதாயத்தை சேர்ந்த மூன்று பேர் வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்கில் கைதுசெய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. 1990களின் துவக்கத்தில் கடலூர் மாவட்டத்தில் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக கைதுசெய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட ஜெய் பீம் திரைப்படம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், ம…

  23. கள்ளக்குறிச்சியில் தேர்தல் அலுவலரை தாக்கினாரா அதிமுக நிர்வாகி? 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, ராஜசேகர், அதிமுக ஒன்றிய செயலாளர் கள்ளக்குறிச்சியில் தேர்தல் அலுவலரை அதிமுக ஒன்றியச் செயலாளர் ராஜசேகர் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படும் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட அதிமுக சார்பில் தாக்கல் செய்த வேட்பு மனுவை நிராகரித்ததாகக் கூறி அந்த தேர்தல் அதிகாரியை ராஜசேகர் கன்னத்தில் அறைந்ததாக கூறும் காணொளி தற்போது தமிழக அரசு ஊழியர்கள் வட்டாரத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தேர்தல் அதிகாரி தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில்…

  24. கள்ளச்சாராய சோதனையின்போது பணம், நகைகளை எடுத்துச் சென்றதாக புகார்: போலீஸ் மீது விசாரணை வேலூர் குருமலை அருகே உள்ள மலை கிராமத்திற்கு கள்ளச்சாராய சோதனைக்கு சென்ற உதவி காவல் ஆய்வாளர் உட்பட 3 காவலர்கள், சோதனையின் போது அங்கிருந்த வீடுகளில் சுமார் 8.5 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 15 சவரன் நகைகளை எடுத்து சென்றதாக கூறப்படும் விவகாரத்தில் சம்மந்தப்பட்ட காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. கொரோனா நோய்த் தொற்றின்‌ இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வந்த காரணத்தினால் தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதியிலிருந்து படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக கடந்த மே மாதம் தமிழ்நாட்டில் ம…

  25. 14 மே 2023 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் நேற்று கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. அந்த கள்ளச்சாராயத்தை அதே கிராமத்தை சேர்ந்த 16 பேர் வாங்கி குடித்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்த அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, கள்ளச்சாராயம் குடித்த 16 பேரும் முண்டியபாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் முதலில் சுரேஷ் என்பவர் வாந்தி மயக்கத்தோடு சுருண்டு விழ, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புதுச்சேரியை அடுத்த காலப்பட்டில் உள்ள பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிறிது நேரம் கழித்து …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.