தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
கச்சதீவு அருகே, இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு இலக்கானதில் தொண்டி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொண்டி அருகே நம்புதாளை படையாச்சி தெருவை சேர்ந்த மீனவர்கள் ஆறு பேர், கடந்த சில தினங்களுக்கு முன்பு, கச்சதீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ஆறு பேரையும் தாக்கியதோடு அவர்களின் மீன்பிடிவலைகளையும் சேதப்படுத்தி, பிடித்து வைத்திருந்த மீன்களையும் கடலில் வீசினர். இந்த சம்பவத்தில், மீனவர் காந்தியின் கை எலும்பு முறிவு ஏற்பட்டு புதுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மீனவர்கள் கூறுகையில், ``இலங்கை கடற்படை எங்களை தரக்குறைவாக பேசி தாக்குகிறது. கச்சதீவ…
-
- 1 reply
- 454 views
-
-
நரேந்திர மோதி இன்று தமிழ்நாடு, புதுச்சேரியில் பரப்புரை பட மூலாதாரம், @BJP4INDIA TWITTERPAGE சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பரப்புரை மேற்கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இன்று தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி வருகிறார். இன்று காலை விமானம் மூலம் கோயம்புத்தூர் வரும் நரேந்திர மோதி காலை 11 மணிக்கு கேரள மாநிலம் பாலக்காட்டில் பரப்புரை செய்கிறார். கேரளாவில் பாரதிய ஜனதா கட்சி வலுவாக உள்ள இடங்களில் ஒன்றாக பாலக்காடு கருதப்படுகிறது. சமீபத்தில் நடந்த கேரளா உள்ளாட்சித் தேர்தலில் பாலக்காடு நகராட்சியை பாஜக கைப்பற்றியது. அடுத்ததாக பகல் 12.50 மணிக்கு தாராபுரம் வரும் நரேந்திர மோதி, அந்தத் தொகுதியில் ப…
-
- 1 reply
- 522 views
-
-
அ.தி.மு.க.,வில், எதிரும் புதிருமாக உள்ள சசிகலா - பன்னீர் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் இடையே, திடீர் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத்தில், இரு தரப்பினரும் சகஜமாக பேசி, பழைய நட்பை வெளிப்படுத்தினர். சசிகலா நியமனம், இரட்டை இலை சின்னம் போன்ற விவகாரங்களில், தேர்தல் கமிஷன் தீர்ப்பு நெருங்குவதால், சசி தரப்பினர், பன்னீர் அணியினர் மீது பாசம் காட்ட துவங்கி உள்ளனர். இதற்கிடையில், ஓ.பன்னீர்செல்வம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சந்திப்பால், தினகரன் வட்டாரம் கலக்கம் அடைந்துள்ளது. சட்டசபையில், நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. கேள்வி நேரத்தின் போது, தி.மு.க., - எம்.எல்.ஏ., தங்கம் தென்னரசு, 'சிட்டுக் குருவிகளை பாதுகாக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' …
-
- 1 reply
- 364 views
-
-
இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் ; தமிழக முதல்வர் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் எனத் தெரிவித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எவருக்கும் சட்டப்படியான சமத்துவம், சட்டப்படியான பாதுகாப்பை மத்திய அரசு மறுக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். குறித்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை இரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் தமிழக சட்ட சபையில் நேற்றையதினம் நிறைவேற்றப்பட்டது. குறித்த தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டபேரவையில் தாக்கல் செய்து பேசிய போதே அவர் இதனை தெரிவித்தார். மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு கொண்டு வந்த க…
-
- 1 reply
- 533 views
-
-
மகளிரணியினர் குடுமிபிடிச் சண்டை! போர்க்களமானது சத்தியமூர்த்தி பவன் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மகளிரணி நிர்வாகிகள் இடையே கடும் சண்டை ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் பலமாக தாக்கிக்கொண்டதால் அந்த இடமே போர்க்களமானது. சென்னையில் கடந்த 3 ஆம் தேதி நடந்த கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழாவில் காங்கிரஸ் துணைப் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பங்கேற்றார். அடுத்தநாள் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதன் பிறகு அவர் டெல்லி சென்றுவிட்டார். இந்தநிலையில், சத்தியமூர்த்தி பவனில் மகளிரணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். மகளிரணி நி…
-
- 1 reply
- 590 views
-
-
தலைவர்கள் குறித்து அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் யூடியூபர் சாட்டை துரைமுருகனை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரியில் உள்ள மலைகளை உடைத்து கேரளாவிற்கு கடத்துவதாக நாம் தமிழர் கட்சி நேற்று தக்கலையில் போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட சாட்டை துரைமுருகன் தலைவர்கள் பற்றி அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து தக்கலை காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகரன் அளித்த புகாரின் பேரில், நாங்குனேரியில் துரைமுருகனை காவல்துறையினர் கைதுசெய்து சிறைக்கு கொண்டுசென்றனர். முன்னதாக சாட்டை துரைமுருகன் தனது யூடியூப் சேனலில் தலைவர்கள் மற்றும் பெண்கள் பற்றி அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. சாட்டை துரைமுருகனை 25ஆம் தேதி வரை சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டு…
-
- 1 reply
- 430 views
- 1 follower
-
-
சசிகலாவை வேறு சிறைக்கு மாற்ற முடிவு? - உள்துறை அதிகாரிகள் அறிக்கையால் பரபரப்பு அதிமுக (அம்மா) பொதுச்செயலாளர் சசிகலா | படம்: பிடிஐ. பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக (அம்மா) பொதுச்செயலாளர் சசிகலாவை வேறு சிறைக்கு மாற்றுவது தொடர்பாக கர்நாடக அரசின் உள்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். இது தொடர்பாக முதல்வர் சித்தராமையாவுக்கு அறிக்கை அளிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டதில் இ…
-
- 1 reply
- 400 views
-
-
தமிழ் நாடு வரும் ஈழத் தமிழர்களுக்கு தமிழக அரசு விரைவில் விடிவுகாலம் ஏற்படுத்தி தரும்-முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் March 24, 2022 இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அமெரிக்கு டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு ரூ.284 ஆக வீழ்ச்சியடைந்து இருக்கிறது. அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. அத்தோடு அரசுக்கு எதிரான போராட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்திற்கு மீண்டும் ஈழத்தமிழர்கள் அகதிகளாக செல்லத் தொடங்கியுள்ளனர். மிகவும் ஆபத்தான கடல் வழிப்பயணம் மூலம் அவர்கள் தமிழ்நாட்டிற்கு செல்லத்தொடங்கியுள்ளனர். இவ்வாறு சென்றவர்கள் மண்டப முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நில…
-
- 1 reply
- 354 views
-
-
வரும் பேரவைத் தேர்தலில் திமுகவின் குடும்ப ஆட்சி மீண்டும் வரக்கூடாது என்பதை சிந்தித்து வாக்களிக்க வேண்டும் துக்ளக் ஆசிரியர் சோ கூறினார்.துக்ளக் இதழின் 46-ஆவது ஆண்டு விழா, ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாதெமியில் நேற்று இரவு நடைபெற்றது.விழாவில் சோ.ராமசாமி பேசியது:அதிமுக ஆட்சியில் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதேசமயம் சில நிறைகள் இருக்கின்றன. வெள்ளத்துக்கே ஜெயலலிதாதான் காரணம் என்று சொல்ல முடியாததால், நிவாரண உதவிகள் வழங்குவதில் குறைகள் கூறுகின்றனர். ஆனால், அதிலும் போகப் போக ஒரு வரைமுறை வந்து எல்லா இடங்களிலும் திருப்திகரமான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.குடும்ப ஆட்சி போனதற்கு...:தொழில்துறை வளர்ச்சிக்கு பெரும் பணியை முதல்வர் ஜெயலலிதா ஆற்றி வரு…
-
- 1 reply
- 746 views
-
-
படக்குறிப்பு,ஆந்திராவைச் சேர்ந்த பழங்குடி பெண்ணான அங்கம்மாள் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 29 மே 2025 "என் மகனைக் கொன்றதற்கான தண்டனை அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். நான் பட்ட துன்பத்தை இன்னொரு தாய் படக்கூடாது. என் மகன் எங்கே எனத் தெரியாமல் ரொம்பவே பாதிக்கப்பட்டேன். அந்த வலி இன்னொருவருக்கு வந்துவிடக்கூடாது" எனக் கலங்கியவாறு பேசுகிறார், ஆந்திர மாநிலம், கூடூரைச் சேர்ந்த அங்கம்மாள். மே 19ஆம் தேதியன்று சத்தியவேடு காவல் நிலைத்தில் 9 வயதான தனது மகனை மீட்டுத் தருமாறு அங்கம்மாள் புகார் கொடுத்திருந்தார். அடுத்த 3 நாள்களில் காஞ்சிபுரத்தில் உள்ள பாலாறு படுகையில் அவரது மகன் சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில், சிறுவனை குழந்தைத் தொழிலாளராகப் பணிய…
-
- 1 reply
- 335 views
- 1 follower
-
-
ஜெயலலிதாவை பார்க்க 6 மணி நேரம் வெயிலில் தவித்த பெண்கள்: சாக்குப்பை துணிகளை தலையில் அணிந்து சமாளிப்பு அருப்புக்கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரக் கூட்டத்தில் கொளுத்தும் வெயிலில் பெண்கள் 6 மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருந்தனர். குளுக்கோஸ், தண்ணீர் பாட்டில்கள் தாராளமாக வழங்கப்பட்டன. விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை உட்பட 14 தொகுதி களைச் சேர்ந்த அதிமுக மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து அருப்புக் கோட்டையில் நேற்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசினார். விருத்தாச்சலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் 4 பேர் வெயிலுக்கு இறந்ததால் நேற்று அருப்புக்கோட்டை பொதுக்கூட்டத்தில் முன்னெச்சரிக்கையாக நடமாடும்…
-
- 1 reply
- 391 views
-
-
தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் நரிக்குறவர் இனத்தைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவேண்டுமெனக் கோரியுள்ளார். இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதமொன்றில் ஜெயலலிதா, குருவிக்காரர்கள் எனவும் அழைக்கப்படும் அம்மக்களைப் பழங்குடியினராகக் கருதி, அதற்கான பட்டியலில் அவ்வினம் இடம்பெறவேண்டுமென கடந்த ஆண்டு ஜூலையிலேயே மத்திய அரசிடம் கோரியதாக நினைவுகூருகிறார். ஜெயலலிதா வல்லுநர்களின் ஆலோசனையின்பேரில் இந்திய பதிவாளர் நாயகமும் அக்கோரிக்கையினை ஏற்றுக்கொண்டிருக்கிறார், மத்திய அரசின் பழங்குடியினர் துறையும் இது குறித்து அமைச்சரவைக்கு பரிந்துரை செய்திருக்கிறது. இந்நிலையில் பிரதமர் தலையிட்டு, மேலுங்காலந்தாழ்த்தாமல் இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே இதற்கான மசோதாவை நிறைவே…
-
- 1 reply
- 282 views
-
-
பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக தமிழ்நாட்டின் வேதாரண்யம் மீனவர்கள் மீது நடுக்கடலில் யார் என்று தெரியாத சிலர் கடுமையாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஒரு மீனவருக்கு தலையில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் கடற்கொள்ளையர்கள் என்று பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறியுள்ளனர். கரை திரும்பிய மீனவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாகை மாவட்ட பைபர் படகு மீனவர்களின் மீன்பிடி தொழில் கடற் கொள்ளையர்களால் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதால் தங்களது வாழ்வாதாரத்தை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையிலிருந்…
-
- 1 reply
- 466 views
- 1 follower
-
-
இந்திய எல்லையை தாண்டி ஸ்ரீலங்கா கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. காரைக்கால் மாவட்ட மீனவர்களின் கூட்டத்தில் இந்த புதிய கட்டுப்பாடுகள் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், காரைக்கால் மீனவர்கள் இந்திய எல்லைக்குட்பட்ட கடற்பகுதியில் மாத்திரமே மீன்பிடியில் ஈடுபடவேண்டும். இந்திய எல்லையை தாண்டி ஸ்ரீலங்காவிற்குள் செல்லக்கூடாது எனவும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், அத்துமீறி ஸ்ரீலங்கா கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு ஒரு மாதம் தொழிலில் ஈடுபட தடை விதிக்கப்படவுள்ளது. இதேவேளை, ஸ்ரீலங்கா கடற்பகுதிக்கு சென்று மீன்பிடிய…
-
- 1 reply
- 501 views
-
-
சென்னையிலும் வெளியான இனவழிப்பு ஆவணப்படம்! கண்ணீரில் மூழ்கிய அரங்கம் இயக்குனர் கௌதமனின் இயக்கத்தில் இலங்கையில் நடந்த இன அழிப்பு மற்றும் 2009 இன் பின்னர் இரகசியமாக தொடரப்படும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் உருவான ''Pursuit of Justice'' என்கிற ஆவணப்படமானது கடந்த 25ம் திகதி ஐ.நா அவையின் 24வது அரங்கிலும் சென்னையிலும் ஒரே நேரத்தில் திரையிடப்பட்டது. மணிவண்ணன் அவர்களின் தயாரிப்பில் உருவான குறித்த ஆவணப்படமானது, ஐ.நா அவையில் திருமதி. ரஜனி செல்லதுரை அவர்களது முயற்சியால் திரையிடப்பட்டது. தமிழகத்தில் இருந்து ஈழம் சார்ந்த ஒரு ஆவணப்படம் ஐ.நாவில் திரையிடப்படுவது இதுவே முதல் முறை ஆகும். ஐ.நாவில் திரையிடப்பட்ட இந்த ஆவணப்படத்தை நேரி…
-
- 1 reply
- 506 views
-
-
ஜெயலலிதா மீண்டும் சிறை செல்வார்!' அடித்துச் சொல்கிறார் சுப்ரமணியன் சுவாமி புதுடெல்லி; சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், மே மாதம் 10-ஆம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகி ஜெயலலிதா மீண்டும் சிறை செல்வது உறுதி என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அடுத்த மாதம் 10-ஆம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துவிடும் என்றார். இந்த வழக்கில் ஜெயலலிதா மீண்டும் சிறை செல்வார் என்றும் அப்போது அவர் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் தீவிரவாத அமைப்புகள் அதிகரித்துவிட்டதாகவும், அவற்றை ஒடுக்குவதில் ம…
-
- 1 reply
- 500 views
-
-
ஈழத் தமிழர்களுக்கு தன்னாட்சி அளிக்க ராஜபக்சே மறுப்பு: இந்தியாவுக்கு அவமதிப்பு இலங்கை இனச்சிக்கலுக்கு தனித் தமிழீழம் தான் ஒரே தீர்வு, எனவே அதை அடைவதற்கு இந்திய அரசு முன்வர வேண்டும் என்று ராமதாஸ் அறிக்கை ஒன்றில் வெளியிட்டுள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இலங்கை திரிகோணமலையில் நடந்த அந்நாட்டின் 65வது விடுதலை நாள் விழாவில் பேசிய அதிபர் மகிந்த இராஜபக்சே, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று திமிராக கூறியிருக்கிறார். மேலும் இலங்கைப் பிரச்னையில் பிற நாடுகள் தலையிடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார். இலங்கைத் தீவில் அனைத்து அதிகாரங்களுடன் வாழ்ந்…
-
- 1 reply
- 911 views
-
-
சென்னையில் ஐ.நா அலுவலகம் முற்றுகை; வைகோ, நெடுமாறன் கைது செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2013 13:19 இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை தவறியதைக் கண்டித்து சென்னையிலுள்ள ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய பழ. நெடுமாறன், வைகோ உட்பட நூற்றுக்கணக்கானோரை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர். இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களைத் தடுக்கக்கோரி சென்னையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின் முன்பாக தீக்குளித்த முருகதாசனின் நினைவுநாள் இன்றாகும். இதையொட்டி இலங்கையில் மனித உரிமை மீறல்களைத் தடுக்கத் தவறிய ஐ.நா. சபையைக் கண்டித்தும் இலங்கையில் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண பொதுவாக்கெடுப்பு ந…
-
- 1 reply
- 655 views
-
-
மத்திய அரசில் இருந்து விலகுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாளவளவன் இன்று அறிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ஈழத் தமிழர் விவகாரத்தை முன்னிறுத்தி, மத்திய அரசில் இருந்து விலகும் முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். ஐ.மு. கூட்டணியில் இருந்து திமுக விலகியதை அடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியும் விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது. http://dinamani.com/latest_news/article1508084.ece
-
- 1 reply
- 711 views
-
-
மைதானத்தை வட்டமிடும் கழுகுகள்... வீராங்கனைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?! #SexualHarassment மு.பிரதீப் கிருஷ்ணா Sexual Harassment PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லைகள் கொடுத்ததைப் அப்பள்ளி மாணவிகள் சில தினங்களுக்கு முன் வெளிப்படுத்தினார்கள். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், சென்னையின் முன்னணி தடகள பயிற்சியாளர் நாகராஜன் இப்போது போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். புத்தகத்தைக் கிழித்தெறிந்த வகுப்பறையின் கதை படித்த தமிழகம், இப்போது கால்களை வாரிவிட்ட மைதானத்தின் கதை படித்துக்கொண்டிருக்கிறது. பள்ளி ஆசிரியரைத் தொடர்ந்து, தங்கள் தடகள பயிற்சியாளரால் பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்கள் இப்போது குரல் கொட…
-
- 1 reply
- 675 views
- 1 follower
-
-
திமுகவின் பிரச்சார பீரங்கியாக மாறுவாரா நமீதா....?? சென்னை: திமுகவில் சேர்ந்து லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணிக்காக தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெங்கும் நடிகை நமீதா பிரசாரம் செய்யப் போகிறார். விரைவில் இதற்காக அவர் திமுகவில் முறைப்படி சேருவார். இதுதான் இப்போது லேட்டஸ்டாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு பரபரப்பான செய்தி. எந்த அளவுக்கு இதில் உண்மை உள்ளது என்று தெரியவில்லை. ஆனால் ரொம்ப சீரியஸாக இது பரவி வருகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலின்போது நடிகர் வடிவேலு படு தீவிரமாக திமுக கூட்டணிக்காக வாக்கு சேகரித்தார். போகிற இடமெல்லாம் தேமுதிக தலைவர் விஜயகாந்த்த்தை மிகக் காட்டமாக அவர் விமர்சித்தார். ஆனால் தற்போது நிலைமை மாறி விட்டது. தேமுதிகவை தனது கூட்டணியில் சேர்க்க …
-
- 1 reply
- 491 views
-
-
லித்தியம் பேட்டரியில் ஜீப்: ஆனந்த் மஹிந்திராவை அசர வைத்த தமிழக இளைஞர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, ஜீப் உருவாக்கிய இளைஞர் விவசாயத்துக்கு உதவும் விதமாக லித்தியம் பேட்டரியில் ஜீப் ஒன்றை வடிவமைத்த இளைஞருக்கு மஹிந்திரா நிறுவனத்தில் பணி வழங்க ஏற்பாடு செய்திருக்கிறார் மஹிந்திரா குழும தலைவர், ஆனந்த் மஹிந்திரா. காரணம், விவசாயத்துக்கு உதவுவது மட்டுமன்றி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையிலும் வடிவமைக்கப்பட்டிருந்தது அந்த ஜீப். சிவகங்கை மாவட்டம் கீழடியை சேர்ந்த விவசாயிகளான அருணகிரி - கவிதா தம்பதியரின் மகன் கௌதம். குடும்ப வறுமைக்கு இடையில், தனியார் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜ…
-
- 1 reply
- 334 views
- 1 follower
-
-
ஸ்டாலினை விளாசும் சசிகலாவின் முதல் அறிக்கை! ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் உண்மைக்கு புறம்பாக பேசுகிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் சசிகலா கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டார். இரண்டாவது முறையாக மீண்டும் சசிகலா இன்று தலைமை அலுவலகத்துக்கு வந்தார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டச் செயலாளர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பாக சசிகலா முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளதோடு, எதிர…
-
- 1 reply
- 623 views
-
-
நாகப்பட்டினம்: கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தவேலு, செல்லத்துரை, அன்பழகன் ஆகியோருக்கு சொந்தமான 3 விசைப்படகுகள் மற்றும் பட்டினச்சேரியைச் சேர்ந்த பொன்னுசாமிக்கு சொந்தமான 1 விசைப்படகு ஆகியவற்றில் 32 மீனவர்கள் கடந்த 15ம் தேதி மாலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் நேற்று முன்தினம் கோடியக்கரை அருகே சர்வதேச கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். எல்லை தாண்டி மீன் பிடித்துக் கொண்டிருப்பதாகக் கூறி அவர்கள் 4 விசைப்படகுகளையும் சுற்றி வளைத்து 32 மீனவர்களையும் கைது செய்து இலங்கைக்கு கொண்…
-
- 1 reply
- 543 views
-
-
கேடு, கேடு தவிர வேறில்லை ***************************** மண மேடைக்கு மப்பில் வந்தார் மாப்பிள்ளை: திருமணத்தை நிறுத்தினார் மணப்பெண். வேனில் ரோந்து சென்றபோது போதையில் மட்டையான போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட். போதையில் துப்பாக்கி தூக்கிய தந்தையிடம் இருந்து தாயை மீட்க முயன்ற மகன் கொலை. மூன்றும் நேற்றைய தினகரன் இதழில் இடம்பெற்ற தலைப்புகள். சாத்தான்குளம், பென்னாகரம், செங்கம் ஆகிய சிற்றூர்களில் நடைபெற்ற சம்பவங்கள் தமிழ்நாட்டின் இன்றைய சமூக நிலவரத்தை பட்டவர்த்தனமாக எடுத்துக் காட்டுகின்றன. 10 பவுன் நகை, 25,000 ரொக்கம் வரதட்சணை வாங்கியவர்கள் மாப்பிள்ளையை அழைத்து வருகிறார்கள். சிறுநீர் கழிக்கப் போவதாக சொல்லி மது அருந்தி தாமதமாக வந்தவர் மேடையில் அமர முடியாமல் அப்படியே சர…
-
- 1 reply
- 521 views
-