Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வேலூரில் அனுமதி மறுப்பு... ஏழு பேர் விடுதலைக்கான பேரணி இடமாற்றம்! வேலூர்: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்காக நாளை (11-ம் தேதி) வேலூரில் இருந்து நடைபெறுவதாக இருந்த பேரணி சென்னையில் நடைபெறும் என அற்புதம்மாள் கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கின்ற நிலையில் அவர்களை விடுதலை செய்யக் கோரி, நாளை (11-ம் தேதி) வேலூர் சிறை முன்பிருந்து தலைமைச் செயலகம் வரை வாகனத்தில் பேரணியாக சென்று முதல்வரை சந்தித்து மனு கொடுக்கப்படும் என அற்புதம்மாள் அறிவித்திருந்தார். இந்த பேரணிக்கு தமிழக அரசும் அனுமதி கொடுத்ததாக செய்திகள் வெளியாகியிர…

  2. தமிழின் மூத்த கவிஞர் ஞானக்கூத்தன் காலமானார் ஞானக்கூத்தன் | கோப்புப் படம். தமிழின் மூத்த கவிஞர் ஞானக்கூத்தன் புதன்கிழமை இரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 77. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருஇந்தளூரில் பிறந்தவர் ஞானக்கூத்தன். அரங்கநாதன் என்ற இயற்பெயரை, திருமந்திரம் நூல் ஏற்படுத்திய தாக்கத்தால் ஞானக்கூத்தன் என்று பெயர் மாற்றிக் கொண்டார். இராமகிருஷ்ணன், சா.கந்தசாமி, ந.கிருக்ஷ்ணமூர்த்தி ஆகியோரோடு இணைந்து ’கசடதபற’ இதழைத் துவக்கினார். ’ழ’, ’கவனம்’ ஆகிய இதழ்களிலும் பணியாற்றியுள்ளார். 'அன்று வேறு கிழமை', 'சூரியனுக்குப் பின் பக்கம்', 'கடற்கரையில் ஒரு ஆலமரம்' போன்றவை ஞானக்கூத்தன் கவிதைத் தொகுப்…

  3. தோழர் தமிழரசன் வீர வணக்கம்

  4. ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனவாத தாக்குதல்களும் அழிப்புகளும் சிறிலங்கா அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட நாளிலிருந்தே இன்று நடைபெறுகின்ற தமிழக மாணவர்களின் எழுச்சி போன்று பல போராட்டங்கள் தமிழகத்தில் நடைபெற்றிருக்கின்றன. இவ்வாறு ஈழத் தமிழர்களின் விடுதலையிலும் அதன் சோகங்களிலும் தூக்கங்களிலும் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக தமிழக மனிதர்கள் பங்கு கொண்டும் பல்வேறு தளங்களிலும் வழிகளிலும் பங்களித்தும் வந்திருக்கின்றார்கள். சிலர் ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக தீக்குளித்து தம் உயிர்களையும் நீத்திருக்கின்றார்கள். இது தவறான பாதையாக இருந்தபோதும், அவர்களது அக்கறையும் அர்ப்பணிப்பு உணர்வும் புறக்கணிக்க கூடியதல்ல. இவ்வாறு பங்களித்தவர்களுக்கும் தொடர்ந்தும் பங்களிப்பவர்களுக்கும் ஈழத் தமிழர்கள்…

  5. ஜெ.வுக்கு மோடி அஞ்சலி.. சசிகலா தலையைத் தொட்டு ஆறுதல்.. மோடியைக் கட்டிப்பிடித்து கதறிய ஓபிஎஸ் சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணிக்கு காலமானார். இதையடுத்து அவரது உடல் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டது. அதன் பிறகு அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஜெயலலிதாவின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொது மக்கள் அஞ்சலி செலுத்த…

  6. சட்டப்பேரவையில் தர்ணாவில் ஈடுபட்ட தி.மு.க. உறுப்பினர்கள் இரண்டு நாட்கள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று, தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அரசு அணையை கட்டி நீரை, 160 ஏரிகளுக்கு திருப்புவதாக தி.மு.க குற்றம்சாட்டியது. இந்த குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர் கே.வி.ராமலிங்கம், காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தி.மு.க மீது குற்றச்சாட்டினர். அமைச்சரின் குற்றச்சாட்டை திரும்ப பெற வலியுறுத்தி சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில், அவையின் கண்ணியத்தை கெடுக்கும் வகையி்ல் நடந்து கொண்டதாக கூ…

  7. பட மூலாதாரம்,EDAPPADI PALANISWAMI FB குடும்பங்கள் பார்க்க முடியாத வகையில் உள்ள பிக்பாஸ் தொடரை நடத்தி வரும் கமல்ஹாசனா எங்களை பார்த்து கேள்வி கேட்பது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அரியலூருக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமி, அங்கு ரூ. 36.73 கோடி மதிப்பிலான 33 நிறைவுபெற்ற திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய 14 திட்டப்பணிகளுக்கான அடிக்கல்லையும் நாட்டினார். பிறகு மாவட்டத்தில் நடந்து வரும் கொரோனா வைரஸ் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். "மக்கள் அரசை தேடி வந்த நிலை மாறி, முதலமைச்சரின் மக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் மூலம் அரசே மக்களை தேடி வருகிறது" என்று அந்நிகழ்ச்சியில் பே…

  8. ஒரு பார்ப்பனப் பயங்கரவாதி பாடையிலே போகிறார் Details Category: விஜயகுமாரன் 11 Dec 2016 Hits: 1396 அரசியல் தரகன், பார்ப்பனப் பயங்கரவாதி சோ. ராமசாமி மண்டையைப் போட்டு விட்டார் . ஒரு எண்பது வயது மனிதரை, "துக்ளக்" என்னும் தமிழ் இதழின் ஆசிரியரை, நாடக ஆசிரியரை, திரைப்பட நடிகரை மரியாதையில்லாமல் அவன், இவன் என்று எழுதலாமா என்று சில மரியாதை ராமன்கள் கவலைப்படலாம். தன் வாழ்நாள் முழுவதும் உழைக்கும், ஏழை மக்களிற்கு எதிராக பார்ப்பனிய வெறியைக் கக்கி வந்த இவரிற்கு செருப்பால் அடித்து பாடையிலே ஏற்றுவது தான் சரியான மரியாதை. இவரை நேர்மையானவன் என்றும், நடுநிலையாளன் என்றும், தன் மனதிலே பட்டதை மறைக்காமல் சொல்பவன் என்றும் அர…

  9. போயஸ் கார்டன் வீட்டுக்கு மீண்டும் போலீஸ் குவிப்பு! சசிகலா தங்கியுள்ள, சென்னை, போயஸ் கார்டன் வீட்டுக்கு, மீண்டும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, போயஸ் கார்டன், வேதா இல்லத்தில் வசித்து வந்தார். அங்கு, தற்போது தோழி சசிகலா தங்கி உள்ளார். பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக கருதப்பட்டதால், ஜெ.,வுக்கு, 'இசட் பிளஸ்' பாதுகாப்பு அளிக்கப்பட்டது. மாநில காவல் துறை, முதல்வர் பாதுகாப்பு பிரிவு உட்பட, தினமும், 500 போலீசார்,பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். டிச., 5ல், ஜெ., மரண அறிவிப்பு வெளியானதும், மத்திய அரசு, 'இசட் பிளஸ்' பாதுகாப்பை திரும்ப பெற்றது. ஆனால், மாநில போலீசார், ஜெ., மறைவுக்கு பின்னரும், போயஸ் கார்டனில் தங்கியுள்ள சசிகலா…

  10. எனக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணி – பிரேமலதா விஜயகாந்த் தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணி என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தை இப்போதே அரசியல் கட்சியினர் ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், செய்யூர், செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி பூத் முகவர்கள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணிதான் என்றும், தனித்து போட்டியிடுவது என்பது புதிதானது இல்லை எ…

  11. சட்டசபையில் அடுத்து என்ன நடக்கும்? பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், இரண்டு விதமான நடவடிக்கைகள் எடுப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிகழ்வு1: சூழ்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சபாநாயகர், வாக்கெடுப்பை வெற்றி என்று தனது அதிகாரத்தை பயன்படுத்தி அறிவிக்க முடிவு செய்திருக்கிறார். அப்படி அறிவித்தால் தி.மு.க., பன்னீர்செல்வம், காங்கிரஸ், எம்.எல்.ஏ.கள் (110) உள்ளிருப்பு போராட்டம் நடத்த காத்திருக்கிறார்கள். இதன் நோக்கம் சட்டசபையை முடக்கி, கவர்னர் ஆட்சி கொண்டு வந்து, இந்த ஆண்டுக்குள் பொதுத்தேர்தல் கொண்டு வருவது. நிகழ்வு 2 : சபையை நடத்தமுடியாமல், சபாநாயகர் மீண்டும் அவையை ஒத்திவைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.…

  12. ``உங்க வீட்டுப் பெண்ணா இருந்திருந்தா இப்படிச் செஞ்சிருப்பீங்களா?" - ஆவேசம் அடைந்த அனிதாவின் அண்ணன்! கு.ஆனந்தராஜ் அனிதாவுடன் மணிரத்னம் ``நீட் தேர்வுக்கு எதிரான அனிதாவின் போராட்டத்தை, என் தங்கைப் பெயரைப் பயன்படுத்தியே கொச்சைப்படுத்தியிருக்கார் அமைச்சர் பாண்டியராஜன்." நீட் தேர்வு விவகாரத்தில் உயிரிழந்த அனிதாவை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அனிதாவின் மரணத்துக்குப் பிறகு, நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகம் முழுக்கக் கொதிப்பலை எழுந்தது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியானது. அதில், அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக அனிதா பேசுவதுபோல இடம்பெற்றிர…

  13. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், தினகரன் அணியினர், நேற்று முன் தினம் இரவு துவங்கி, விடிய விடிய பணத்தை வாரி இறைத்தனர். இது குறித்து, தலைமை தேர்தல் அதிகாரியிடம், அரசியல் கட்சிகள் சரமாரி புகார் தெரிவித்துள்ளதால், இடைத்தேர்தல் ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜெயலலிதா மறைவால், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல், ஏப்., 12ல் நடக்க உள்ளது. தி.மு.க.,வில் மருதுகணேஷ்; அ.தி.மு.க., வின் பன்னீர் அணியில், மதுசூதனன்; சசிகலா அணியில், தினகரன் உட்பட, 62 பேர் போட்டி யிடுகின்றனர். அ.தி.மு.க., இரு அணிகளாக களம் காணும் நிலையில், தினகரனுக்கு, தொகுதியில் பலத்த எதிர்ப்பு உள்ளது. ஆட்சியிலும், கட்சியிலும் ஆதிக்கம் செலுத்த, தேர்தலில், தினகரன் வெற்றி பெற வேண்டிய …

  14. ‘அடித்துக் கொள்ள வேண்டிய நேரமா இது?!’ - வெளியாகிறதா சசிகலா அறிக்கை?! #VikatanExclusive ‘அணிகள் இணைப்பு' என்ற பெயரில், அ.தி.மு.கவில் நடக்கும் பேச்சுவார்த்தைகளை அதிர்ச்சியோடு கவனித்து வருகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். ' ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னால், அ.தி.மு.க மூன்று துண்டுகளாக சிதறிப் போய்விட்டது. தற்போதுள்ள சூழலைக் கவனத்தில் கொண்டு, நாளை அறிக்கை வெளியிட இருக்கிறார் சசிகலா' என்கின்றனர் அ.தி.மு.க தலைமைக் கழக வட்டாரத்தில். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு, அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக பதவியேற்றார் சசிகலா. பன்னீர்செல்வத்திடம் ராஜினாமா கடிதம் வாங்கிய கையோடு, கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராகவும் அவர் தேர்வு செய்…

  15. தமிழ்நாடு - பூந்தமல்லி சிறப்பு முகாமில் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இலங்கை அகதிகள் 3 பேரை பொலிஸார் நேற்று (25) அதிகாலை திடீரென கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பூந்தமல்லி கரையான் சாவடியில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் இலங்கையை சேர்ந்த சந்திரகுமார், கிருஷ்ணமூர்த்தி, மகேஷ்வரன் உள்ளிட்ட 8 பேர் கடந்த ஓராண்டாக அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறப்பு முகாமில் இருந்த செந்தூரான் திறந்தவெளி முகாமிற்கு மாற்றப்பட்டார். இதை தொடர்ந்து அகதிகள் சந்திரகுமார், கிருஷ்ணமூர்த்தி, மகேஷ்வரன் ஆகியோர் தங்களை திறந்த வெளி முகாமிற்கு மாற்ற கோரி கடந்த ஒரு வாரமாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களிடம் வருவாய்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உண்ணாவிரதத்தை…

  16. முதல் அமைச்சர் ஜெயலலிதாவை 20.11.2013 புதன்கிழமை தலைமைச் செயலகத்தில் துக்ளக் வார இதழின் ஆசிரியர் சோ.ராமசாமி சந்தித்துப் பேசினார். அப்போது, தனது மகன் திருமண அழைப்பிழை கொடுத்தார். இந்நிலையில், தி.மு.க. தலைவர் கலைஞரை இன்று(21.11.2013) கோபாலபுரம் இல்லத்தில் சோ நேரில் சந்தித்து மகன் திருமண அழைப்பிழை கொடுத்து திருமணத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டார். நன்றி நக்கீரன் .

  17. அன்று உத்தரப்பிரதேசம்... இன்று தமிழகம்... பி.ஜே.பி. பின்னணியில் என்னவெல்லாம் செய்கிறது? நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் 1951-ல் தொடங்கியதில் இருந்து இதுவரை தமிழகத்திலிருந்து ஒருமுறைகூட பி.ஜே.பி. தனியாக தேர்தலில் நின்று மக்களவைக்கு வெற்றிபெற்றதில்லை. 1998 மற்றும் 1999 காலகட்டத்தில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு முறையும் அது கழகக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருந்தது. இந்த இரு பெரிய திராவிடக் கட்சிகளுடனும் கூட்டணி இல்லாமல் விஜயகாந்த்-ன் தே.மு..தி.க. மற்றும் சிறிய கட்சிகளுடன் இணைந்து பி.ஜே.பி. சந்தித்த 2014 மக்களவைத் தேர்தலில், அக்கட்சி கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது. அந்தத் தொகுதியின் எம்.பி. பொன் …

  18. ஈரோடு : ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் வளாகத்தில் சாயப்பட்டறையின் ரசாயனக் குழாயை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட விஷவாயு தாக்கி துப்புரவுத் தொழிலாளர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் சாயப்பட்டறை நிறுவனம் ஒன்றில் ரசாயன குழாய் அடைப்பை சரி செய்யும் பணியில் இன்று தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரசாயன குழாய் வெடித்தது. இதனால் சுத்தம் செய்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவரை காப்பாற்றச் சென்ற 6 பேரையும் விஷவாயு தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் 7 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து …

  19. ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல்... சேது கால்வாய் திட்டம் - 6 வாரத்தில் பதில் தர மத்திய அரசுக்கு உத்தரவு. ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுவது தொடர்பாக 6 வார காலத்தில் பதில் தர மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமர் பாலத்துக்கு சேதம் ஏற்படாத வகையில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.இவ்வழக்கில் ஆஜரான சுப்பிரமணியன் சுவாமி, மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் 10 ஆண்டுகளாக இழுத்தடிக்கிறது என குற்றம்சாட்டினார். ஆனா…

  20. இராதாகிருஷ்ணன் நகர் இடைத் தேர்தலில் எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக கருதுவது நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்திருக்கிற வாக்குகள். இங்கு அது வெறும் எண்ணிக்கை அல்ல. அந்த எண்ணிக்கையை அடைவதற்கு பயணப்பட்ட திசை தான் முக்கியம். தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக வேறு திசைக்கு பயணிக்கிறது. நாம் தமிழர் கட்சியினரின் பிரச்சாரம் ஒரு திட்டமிட்ட தனித்துவமான பாணியில் இருந்தது. திராவிட அரசியல் பாதை வரலாற்றின் தொடக்க நாட்களை அது நினைவுபடுத்துகிறது. இப்போது அவர்களை தமிழகம் பெரிய அளவில் கண்டுகொள்ளாமல் இருக்கலாம். ஆனால் திரும்பி பார்க்கும் காலம் விரைவில் வரும். தமிழக அரசியல் அதன் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகிறது. தமிழ் தேசிய அரசியலில் இன்னும் சிலர் களமிறங்க வேண்டியிருக்கிறது. அப்போது இந்த பாய்ச்சல் …

    • 22 replies
    • 1.5k views
  21. அலங்காநல்லூர் வாடி வாசல் தயார்.. அடுத்த வாரம் ஜல்லிக்கட்டு.. முதல்வர் தொடங்கி வைக்கிறார்!அடுத்த வாரம் நடக்க இருக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு வருகிறது. சென்ற வருடம் ஜல்லிக்கட்டு நடத்த கோரி தமிழகமே மெரினாவில் திரண்டது. மக்களின் அந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று உலகமே திரும்பி பார்த்தது.இந்த நிலையில் நீதிமன்றம் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு அனுமதி வழங்கியது. எனவே இந்தமுறை பொங்கலுக்கு தமிழகம் முழுக்க பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்க உள்ளது. அதேபோல் வரலாற்று சிறப்புமிக்க மிக்க அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியும் இந்த முறை வழக்கம் போல நடக்க உள்ளது. இதற்கான ஏற்…

  22. சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 21,498 நீர்நிலை ஆக்கிரமிப்புகள்: ஆர்டிஐ பதில் பிரசன்னா வெங்கடேஷ் பிபிசி தமிழுக்காக 14 ஆகஸ்ட் 2022 "குடிசைகளைத் தவிர நீர்நிலைகளில் பெரிய அளவில் ஆக்கிரமிப்பு செய்திருக்கக்கூடிய பெரிய கட்டடங்களை பாரபட்சம் பார்க்காமல் அகற்றுவதற்கு அரசு முன்வருமா?" என்று கேள்வி எழுப்புகிறார் சூழலியல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன். 21,464 நீர்நிலை ஆக்கிரமிப்புகள் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் சுமார் 925 ஏரிகள் உள்ளன. அவற்றில் 21,464 நீர்நிலை ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த அனைத்து ஏரிகளு…

  23. அதிமுக: நரேந்திர மோதியுடன் நெருங்கும் இபிஎஸ் அணி - டெல்லியில் நடந்த ரகசிய சந்திப்பு முழு விவரம் பரணி தரன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, கோப்புப்படம் தமிழ்நாட்டில் எதிர்கட்சி வரிசையில் உள்ள அதிமுகவில் முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையில் நடக்கும் தலைமை போட்டி, இரு தரப்பும் இப்போது மேற்கொண்டுள்ள சட்ட போராட்டங்களால் விறுவிறுப்படைந்திருக்கிறது. இதற்கு மத்தியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இணையாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதியுடன் நெருக்கம் காட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிர முயற்சி எடுத்துள்ளது. …

  24. தமிழ்நாட்டைச் சேர்ந்த... நரிக் குறவர்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க... மத்திய அமைச்சரவை ஒப்புதல்! தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட 4 சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாய மக்களின் சமூக, கல்வி முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என பலரும் தெரிவிக்கின்றனரெ. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை யில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இமாலயப் பிரதேசத்தை சேர்ந்த ஹாட்டீ, சத்தீஸ்கரைச் சேர்ந்த பிரிஜியா, தமிழ்நாட்டை சேர்ந்த நரிக்குறவர்கள் ஆகிய மூன்று சமூகங்களையும் பழங்குடியினர் ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.