தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
மாப்பிள்ளை விஜயகாந்த்... மாமியார் பிரேமலதா! - பின்னணி பேரங்கள் “அ.தி.மு.க-வால் அசிங்கப்பட்டது போதும்!” - “தி.மு.க-தான் இறங்கி வரலை!”ப.திருமாவேலன், படங்கள்: சு.குமரேசன், சொ.பாலசுப்ரமணியன் ஓவியம்: ஜி.ராமமூர்த்தி ``இந்த விஜயகாந்த், இந்தத் தடவை தனியாகத்தான் நிற்பான்'' - நிறுத்தி நிதானமாக விஜயகாந்த் சொல்வதற்குள் குழப்பமும் கோக்குமாக்கும் நிறையவே நடந்து முடிந்துவிட்டன. ``காஞ்சிபுரம் வாருங்கள்... யாரோடு கூட்டணி என்பதைச் சொல்லப்போகிறேன்'' என்று அழைத்த விஜயகாந்த், கட்சிக்காரர்கள் காதுக்குள் கட்டெறும்பை விட்டு அனுப்பி வைத்தார். `தனியாகத்தான் நிற்பேன்' என்று அறிவித்த மகளிர் தின பொதுக்கூட்டத்துக்கு, அவர் வருவதாகவே இல்லை... வந்தார்; சொல்வதாகவே இல்ல…
-
- 0 replies
- 520 views
-
-
“தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளாக இந்தியை ஒழித்துவிட்டோம் என்று கூறுகிறார்கள். ஆனால், 60 ஆண்டு காலத் திராவிட இயக்க ஆட்சியில் இந்தியை மட்டுமல்ல தமிழையும் சேர்த்து ஒழித்து இரட்டைக் கொலை செய்திருக்கிறார்கள்” - திருச்செந்தூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இப்படிச் சொன்னார். இதை அதிமுக செய்தித் தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வன் கடுமையாக மறுத்திருக்கிறார். இதுகுறித்து 'இந்து தமிழ்' இணையதளத்திடம் பேசிய வைகைச்செல்வன், “கடந்த 60 ஆண்டுகால திராவிட இயக்க அரசியலில்தான் தமிழ் மொழியானது மிக உன்னதமான உயரத்தைத் தொட்டிருக்கிறது. சீர்திருத்தத் திருமணத்தைச் சட்டபூர்வமாக்கியது, தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது, எழுத்துச் சீர்திருத்த…
-
- 0 replies
- 704 views
-
-
மோடியின் அடுத்த ஆப்பு ரெடி ... டிஸ்கி : ஒணம் ..கூனம்... மகாவீர் ஜெயந்தி .. மயிறு ஜெயந்திகெல்லாம் விடுமுறை அளித்து அழகு பார்த்த தமிழனுக்கு இப்படி ஒரு கண்றாவியா ..? எல்லாம் பேசமா ஊரை காலி பண்ணிட்டு வேற ஊருக்கு கிளம்புங்கப்பா .. பாரத மாதாக்கி ஜே !!
-
- 0 replies
- 463 views
-
-
எதிர்பார்ப்புகளை கிளப்பும் நடராஜன் பொங்கல் விழா.. ஜெ. வெளியேற்றிய பின் இவர் பேசியவை இது தான்! தஞ்சாவூரில் ஆண்டுதோறும் நடராஜன் நடத்தும் பொங்கல் விழா என்பது அரசியல் வட்டாரத்தில் மிகப் பிரபலம். இந்த ஆண்டு தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் பரபரப்புக்கும், எதிர்பார்ப்புக்கும் பஞ்சமே இல்லை. வழக்கமாக நடப்பதுதான் என்றாலும், இதுவரை நடந்தது நடராஜன் நடத்திய பொங்கல் விழா. இப்போது அ.தி.மு.க.வின் தலைமை பொறுப்பை வகிக்கும், விரைவில் தமிழகத்தின் முதல்வர் ஆவார் என சொல்லப்படும் சசிகலாவின் கணவர் நடராஜன் நடத்தும் பொங்கல் விழா என்பதுதான் பரபரப்பும், எதிர்பார்ப்பும் பன்மடங்கு அதிகரிக்கக் காரணம். என்ன பேசப்போகிறார் நடராஜன்? ஒவ்வொரு ஆண்டும் சசிகலாவின் கணவ…
-
- 0 replies
- 469 views
-
-
ஸ்டாலின் மனு மீது நாளை விசாரணை: பட்டியலில் இடம்பெறாததால் ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு ஆதரவாக பேரவைத் தலைவர் ப.தனபால் எடுத்த முடிவு செல்லாது என அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (திங்கள்கிழமை) ஒரு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளவதாகக் கூறிய நீதிபதிகள், நாளையே (அதாவது செவ்வாய்க்கிழமை) அவசர வழக்காக வி…
-
- 0 replies
- 264 views
-
-
தமிழக மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது - இந்திய பிரதமர் மோடி தமிழக மீனவர்களின் பிரச்சினையைத் தீர்க்க தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமிழக சட்டப்பேரவை தேர்தலில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். தாராபுரம், மதுரை ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட நரேந்திர மோடி நேற்று மாலை கன்னியாகுமரியில் அத்தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் அவர்களை ஆதரித்தும், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக -பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும் பிரச்சாரம் செய்தார். இந்தப் பிரச்சார பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி…
-
- 0 replies
- 507 views
-
-
“எம்.எல்.ஏ-க்களை இழுக்க முடியாதா என்று கேட்கிறார்கள்!’’ – ஸ்டாலின் கலகல சட்டமன்றத்தில் தி.மு.க-வின் எம்.எல்.ஏ-க்கள் வெளியேற்றப் பட்டதைக் கண்டித்து, கடந்த 22-ம் தேதி தமிழகம் முழுவதும், தி.மு.க சார்பில் உண்ணா விரதப் போராட்டம் நடைபெற்றது. திருச்சியில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். சென்னையில் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் போராட்டத்தில் குதித்தார்கள். இந்தப் போராட்டத்துக்காக, முதல் நாள் இரவே திருச்சி வந்துவிட்ட ஸ்டாலின், உண்ணாவிரதப் பந்தலுக்கு காலை 8.40 மணிக்கு வந்தார். 9 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது. தி.மு.க மாநிலங்களவை உறுப…
-
- 0 replies
- 1.3k views
-
-
வருமான வரி சோதனையில் அத்துமீறி நுழைந்ததாக தமிழக அமைச்சர்கள் 3 பேர் மீது வழக்குப் பதிவு அமைச்சர்கள் காமராஜ், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் | கோப்புப் படம். வருமான வரி சோதனையில் அத்துமீறி நுழைந்ததாக அமைச்சர்கள் காமராஜ், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீது சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடா அதிகம் நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கிடைத்த தகவலின்பேரில், தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம், அவரது உறவினர்களுக்கு சொந்தமான வணிக நிறுவனங்கள், நண்பர்களின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமானவ…
-
- 0 replies
- 266 views
-
-
சென்னை: கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சார்பில் மதிமுக பொதுச்செயலர் வைகோ உள்ளிட்ட பல்வேறு இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், ஆதரவாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மே 16 இயக்க தலைவர் திருமுருகன் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேசுகையில், கூடங்குளம் அணுமின் நிலையம் …
-
- 0 replies
- 493 views
-
-
தினகரன் கதை! போயஸ் கார்டன் என்ட்ரி முதல் டெல்லி கைது வரை... ‘சமாதிகளின் பூமி’ என்றழைக்கப்படும் டெல்லியில் டி.டி.வி.தினகரனின் அரசியல் வாழ்க்கை அடக்கம் செய்யப்பட்டுவிட்டது. இரட்டை இலையை மீட்கத் துடித்த தினகரன் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளதன் மூலம், அ.தி.மு.க-வில் அவருக்கிருந்த கொஞ்சநஞ்ச ஆதிக்க சக்தி, ஆட்சியில் அவருக்கு இருந்த எச்சசொச்ச செல்வாக்கு, சமீபமாக அவருக்குள் வளர்ந்திருந்த அரசியல் கனவுகள் அனைத்தும் குழி தோண்டிப் புதைக்கப்பட்டுள்ளன. 30 ஆண்டுகளுக்கு முன்பு போயஸ் கார்டனுக்குள் நுழைந்தபோது தொடங்கிய தினகரனின் அரசியல்... டெல்லியில் அவர் கைது செய்யப்பட்டதில் ‘அஸ்தமனம்’ ஆனது வரையிலான கதை... தினகரனின் போயஸ் கார்டன் ‘என்ட்ரி’! …
-
- 0 replies
- 517 views
-
-
அ.தி.மு.கவுக்கு ஏன் உரிமை கொண்டாடுகிறார் தீபா?! - தேர்தல் ஆணையமும் தினகரனின் அச்சமும் #VikatanExclusive மீண்டும் தினகரனைச் சந்திக்கத் தொடங்கியுள்ளனர் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பணிகள் வேகம் எடுத்துள்ள நிலையில், தினகரனின் நடவடிக்கைகளை உற்றுக் கவனிக்கத் தொடங்கியிருக்கிறது டெல்லி. 'சசிகலா எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியிலேயே அ.தி.மு.கவின் மற்ற அணிகள் இணைய இருக்கின்றன. சசிகலா எதிர்ப்பு மட்டும்தான் வலுப்பெறும்' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில். அண்ணா தி.மு.கவின் இரண்டு அணிகளும் இணைய வேண்டும் என்பதற்காகத்தான் ஒதுங்கி இருந்தேன். அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லாததால், மீண்டும் கட்சிப் பணிகளில் ஈடுபட இருக்கிறேன்…
-
- 0 replies
- 377 views
-
-
வீடுவரை இருந்த ஜெயாவின் உறவுகள் எல்லாம் வீதி வரை வந்து சந்தி சிரிக்க வைத்த காட்சிகள் ஜூன் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சாம்பியன்ஸ் கோப்பைக்கு இந்தியா அரையிறுதிக்குத் தகுதி பெறும் ஆட்டத்தை காண தமிழ்நாடே ஆவலாகக் காத்திருந்தது. ஆனால் அதைவிட விறுவிறுப்பான ஆட்டத்தைத் தமிழகம் கண்டு பரவசமடைந்தது. அதுதான் தீபா – தீபக்– ராஜா – மாதவன் ஆகியோர் இணைந்து போயஸ் தோட்டத்தில் நடத்திய கரகாட்டம். என்ன நடந்தது? மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயதீபா முற்றுகை என்று வந்த செய்தியைப் பல பத்திரிகையாளர்கள் கூட நம்பவில்லை. பேபியம்மாவாவது காலையில் எந்திருச்சு வர்றதாவது என்று…
-
- 0 replies
- 856 views
-
-
இங்கை ஜனாதிபதிக்கு தலையையும் தமிழர்களுக்கு வாலையும் காட்டி விட்டார் பிரதமர் மன்மோகன் சிங்.இவ்வாறு தெரிவிக்கின்றார் திமுக தலைவர் கருணாநிதி இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... கனடா, பிரிட்டன், மொரீஷியஸ், ட்ரினிடாட், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும், உலகத் தமிழர்களும் தெரிவித்த எதிர்ப்புக்குப் பிறகும் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற்றுள்ளது.அந்த மாநாட்டின் ஒரே சிறப்பு ராஜபட்சவுக்கு ஏற்பட்ட நெருக்கடியான நிலையும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுக்குக் கிடைத்த சர்வதேச கவனமும் என்பதை எவருமே மறுக்க முடியாது. உலகெங்கும் வாழும் அனைத்து தமிழர்கள் நெஞ்சங்களிலும் கேமரூன் இடம்பெற்றுவிட்டார்.இந்தப் புகழும், பெருமையும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும்…
-
- 0 replies
- 468 views
-
-
அன்று ஓபிஎஸ் 10 பேருடன் இயங்கியபோது சட்டப்பேரவையை எப்படி கூட்டினார்? - ஆளுநருக்கு ஸ்டாலின் கேள்வி இன்று 22 பேர் தனி அணியாக இயங்கும் போது பிளவு இல்லை சட்டமன்றத்தை கூட்ட முடியாது என்று கூறும் ஆளுநர் அன்று ஓபிஎஸ் 10 எம்.எல்.ஏக்களுடன் இயங்கிய போது ஏன் சட்டப்பேரவையை கூட்டினார் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக அணி ஓபிஎஸ், எடப்பாடி தலைமையில் இயங்கி வந்த நிலையில் இரு அணிகளும் இணைந்தது. இதையடுத்து ஏற்பட்ட பிரச்சனையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 22 பேர் தனி அணியாக இயங்குகின்றனர். இதில் 19 பேர் முதலமைச்சர் எடப்பாடி மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுநரிடம் மனு…
-
- 0 replies
- 421 views
-
-
கேரளா லாட்டரி: பரிசு வென்றும் நிம்மதி இல்லை - ஆட்டோ ஓட்டுநர் 26 செப்டெம்பர் 2022 பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அனூப், பொதுமக்களின் கவனத்திலிருந்து தப்பிக்க வீடு மாற வேண்டியிருக்கும் என்கிறார். இந்திய லாட்டரி ஒன்றில் பரிசு பெற்ற ஆட்டோ ஓட்டுநர், தனக்கு ஜாக்பாட் கிடைத்ததற்காக வருந்துவதாக தெரிவித்துள்ளார். லாட்டரியில் வென்ற தகவல் கேட்டது முதல் தன்னை சுற்றி இருப்பவர்கள் நிதி உதவிக்காக கோரிக்கைகளுடன் வருவதாகவும் எல்லோருக்கும் உதவ முடியாத நிலையில் தாம் இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அனூப்புக்கு செ…
-
- 0 replies
- 523 views
- 1 follower
-
-
சென்னை: தமிழகத்தில் பொது இடங்களில் நுழைய நிலவும் ஆடை கட்டுப்பாட்டை நீக்கும் வகையில் சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா புதிய சட்ட முன் வடிவை தாக்கல் செய்தார். புதிய சட்டம், ஆடை கட்டுப்பாடு விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தித் தரும் என முதல்வர் விளக்கமளித்துள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு வேட்டி அணிந்து சென்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன், மூத்த வக்கீல்கள் காந்தி, சுவாமிநாதன் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வேட்டி அணிந்து சென்ற நீதிபதி மற்றும் வழக்கறிஞர்களுக்கு கிரிக்கெட் கிளப்பில் அனுமதி மறுக்கப்பட்டதற்கு சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், வேட்டி கட்டி நுழைபவர்களை தடு…
-
- 0 replies
- 576 views
-
-
அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் காரசார விவாதம்: பாஜ கூட்டணிக்கு உள்ளே எதிர்ப்பா? பட மூலாதாரம்,ADMK TWITTER 4 மணி நேரங்களுக்கு முன்னர் இன்று நடந்த அ.இ.அ.தி.மு.கவின் நிர்வாகிகள் கூட்டத்தில் காராசாரமான விவாதங்களும் உள்ளே நடந்துள்ளன. கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்தவும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை வலுவான நிலையில் எதிர்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அ.இ.அ.தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், செய்தித் தொடர்பாளர்கள் ஆகியோரின் கூட்டம் இன்று காலை பத்து மணியளவில் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடப்…
-
- 0 replies
- 315 views
- 1 follower
-
-
'நாளைக்கு நிறைய வேலை இருக்கு!'- மருத்துவர்களை முன்கூட்டியே அலெர்ட் செய்த தூத்துக்குடி போலீஸ்? தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து வெளிவராத சில தகவல்கள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் நடைபெற்ற 100-வது நாள் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அன்று நடந்த கலவரம் மற்றும் தடியடியால் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேசிய அளவில் இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது நடந்து நான்கு நாள்கள் ஆகிய பிறகு நேற்றில் இருந்துதான் தூத்துக்குடியில் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை தி…
-
- 0 replies
- 336 views
-
-
பெங்களூரு: எம்.ஜி.ஆருக்கு தொண்டர்கள் பரிசு பொருட்கள் வழங்கியது போல் ஜெயலலிதாவுக்கு தொண்டர்கள் பரிசு பொருட்கள் வழங்கவில்லையா? என கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு விசாரணை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடந்து வருகிறது. 11வது நாளாக இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, எம்.ஜி.ஆருக்கு தொண்டர்கள் பரிசு பொருட்கள் வழங்கியது போல் ஜெயலலிதாவுக்கு தொண்டர்கள் பரிசு பொருட்கள் வழங்கவில்லையா ? என்றும், எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின் அவரது செல்வாக்கு ஜெயலலிதாவுக்கு கிடைத்ததா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ஜெயலலித…
-
- 0 replies
- 1.2k views
-
-
மதுரை: உறவுகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சம் சொந்தங்களை சேர்த்த கதை கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மதுரை அருகே முதியோர் இல்லத்தைச் சேர்ந்த தாத்தா, பாட்டிகள் சமூக வலைதளத்தில் ரீல்ஸ் மூலம் ஒரு லட்சம் சொந்தங்களை பெற்று அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளனர். இந்த முதியவர்கள் ரீல்ஸ் வீடியோ உருவாக்குவது எப்படி? சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்தது எப்படி? அதற்காக எவ்வாறு தயாராகின்றனர்? முதியோர் இல்ல தாத்தா பாட்டிகளின் ரீல்ஸ் டிரெண்டானது எப்படி? மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்குட…
-
- 0 replies
- 294 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கருவின் பாலின பரிசோதனையை ஆதரிப்பதன் மூலம் இந்திய மருத்துவ கழகத்தின் தலைவர் ஒரு புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளார். (சித்தரிப்புப் படம்) எழுதியவர், சுஷீலா சிங் பதவி, பிபிசி செய்தியாளர் இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) தலைவர் டாக்டர் ஆர்.வி. அசோகன், கரு பாலின பரிசோதனையை சட்டப்பூர்வமாக்குவது குறித்துப் பேசியிருப்பது புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை கோவாவில் நடந்த ஒரு நிகழ்வின்போது டாக்டர் ஆர்.வி. அசோகன், “30 ஆண்டுகள் கடந்துவிட்டன, ஆனால் சட்டத்தால் என்ன பயன் ஏற்பட்டுள்ளது? இதன் மூலம் பாலின விகிதத்தை மாற்ற முடிந்ததா? இந்தச் சட்டம் சில இடங்களில் மட்டுமே தாக்கத்தை ஏற்பட…
-
- 0 replies
- 160 views
- 1 follower
-
-
தமிழ் மெல்ல சாகடிக்கப்படுகிறதா?: ஒவ்வொரு தேர்வுகளிலும் புறக்கணிப்பு......தாய்மொழிக்கு உரிய அங்கீகாரம் மறுக்கப்படுவது தொடர்கதையாகிறது எங்கும் தமிழ்; எதிலும் தமிழ் என்ற தமிழர்களின் முழக்கம், அதன் தொன்மையை பறைசாற்றிக்கொண்டிருக்கிறது. ஆனால், சமீபகாலமாக தமிழுக்கு ஆபத்து வந்து விட்டது. ஏதோ தெரியாமல் செய்த பிழை என்பதெல்லாம் போய், மத்தியில் உள்ள பாஜ அரசு, ‘பிள்ளையை கிள்ளி தொட்டிலை ஆட்டும்’ கலையை செய்ததெல்லாம் போய், இப்போது பகிரங்கமாகவே தமிழை புறக்கணிக்கும் போக்கை கடைபிடிக்க தயாராகி விட்டது என்று தமிழ் ஆர்வலர்கள் வேதனைப்படுகின்றனர். நீட் தேர்வில் ஆரம்பித்தது தமிழ் புறக்கணிப்பு; போராடி பின்னர் தமிழில் எழுதும் உரிமை மீட்கப்பட்டது. ஆனால், ரயில்வே தேர்வில் ஆரம்பித்து…
-
- 0 replies
- 443 views
-
-
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன், பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மனிதநேயம் கொண்டு அனைத்து பணிகளையும் தாயுள்ளத்தோடு தமிழகத்திற்கு செய்து வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்களின் அன்பான வேண்டுகோள். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 25 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயகுமார், ராபர்ட் பயாஸ் ஆகியோரை மனிதநேய அடிப்படையில் கருணையோடு விடுதலை செய்ய வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள். பேரறிவாளன் உள்ளிட்டோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் 2014 ஆம் ஆண்ட…
-
- 0 replies
- 573 views
-
-
ராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினி வைத்தியசாலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி இன்று காலை திடீரென வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு இருதய சிகிச்சைபிரிவில் பரிசோதனை நபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விடயம் தொடர்பில் சிறைத்துறை மற்றும் மருத்துவ வட்டாரத்தில் வினவியபோது, அவர் நரம்பு மற்றும் இதயம் சம்மந்தமான சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டுள்ளார் என்றும், அவருக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி, சிகிச்சை அளிக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார். திடீரென நளினி மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டமை சிறைத்துறை மற்றும் தமிழ் உணர்வாளர்கள் இடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. http…
-
- 0 replies
- 413 views
-
-
படக்குறிப்பு, காவல் உதவி ஆய்வாளர் மீரா கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 27 ஜூன் 2025 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் "நானா தெருவில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ஒரு பெண் மிரட்டிக் கொண்டிருக்கிறார்." கடந்த 23ஆம் தேதியன்று, பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் மீரா அந்த வழியாக வந்தபோது, அவரிடம் ஒருவர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் வருகையையொட்டி பாதுகாப்புப் பணிக்காக மீரா செல்ல வேண்டியிருந்தது. ஆனால், இளம்பெண்ணைக் காப்பாற்றுவதற்காக அவர் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அடுத்த ஒரு மணிநேரத்தில் தற்கொலை எண்ணத்தில் இருந்த இளம்பெண் மீட்கப்பட்டார். அவரை தற்கொலை முயற்சியை மேற்கொள்ள விடாமல் மனதை மாற்ற…
-
- 0 replies
- 129 views
- 1 follower
-