தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10262 topics in this forum
-
பெங்களூரு அத்தியாயங்களுக்குப் பிறகே ஜெயலலிதா உடல்நிலை பாதிப்பு தீவிரமானது! சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட பின்னரே தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமானதாக கூறப்படுகிறது. தமிழகத்தை பொறுத்த வரை முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கடந்த 2014-ம் ஆண்டு வரை அச்சுறுத்தும் அளவுக்கு செய்திகள் வெளியானது இல்லை. வருமானத்துக்கு மீறிய சொத்து சேர்த்த வழக்கில் இரண்டாவது முறையாக தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. அதுபோல், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் தண்டனை விதிக்க…
-
- 0 replies
- 501 views
-
-
இந்திய எல்லையை தாண்டி ஸ்ரீலங்கா கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. காரைக்கால் மாவட்ட மீனவர்களின் கூட்டத்தில் இந்த புதிய கட்டுப்பாடுகள் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், காரைக்கால் மீனவர்கள் இந்திய எல்லைக்குட்பட்ட கடற்பகுதியில் மாத்திரமே மீன்பிடியில் ஈடுபடவேண்டும். இந்திய எல்லையை தாண்டி ஸ்ரீலங்காவிற்குள் செல்லக்கூடாது எனவும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், அத்துமீறி ஸ்ரீலங்கா கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு ஒரு மாதம் தொழிலில் ஈடுபட தடை விதிக்கப்படவுள்ளது. இதேவேளை, ஸ்ரீலங்கா கடற்பகுதிக்கு சென்று மீன்பிடிய…
-
- 1 reply
- 501 views
-
-
25-க்கு 15 என்கிற பார்முலாவில் அதிமுக பாஜக இடையே கூட்டணி உடன்பாடு |
-
- 0 replies
- 501 views
-
-
ஒருசில குறிப்பிட்ட கடைகளில் தயாராகும் பிரியாணியில் கருத்தடை மாத்திரைகள் கலப்படம் செய்வதாகவும் இதனால் ஒரு குறிப்பிட்ட மதத்தினர்களின் மக்கள் தொகையை குறைக்க சதி செய்திருப்பதாகவும் வாட்ஸ்அப்களில் வதந்தி பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்திக்கு என்றுமே பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது இந்த வதந்திகள் உண்மையா பொய்யா என்பதை கூட அறியாமல் பலர் இதனை ஃபார்வேர்டு செய்வதால் சில சமயம் கலவரம் உள்ளிட்ட அசம்பாவிதமும் நடைபெற்று வருகிறது சமீபத்தில் கூட சிஏஏ போராட்டத்தின்போது இயற்கையாக மரணம் அடைந்த ஒருவரை போராட்டத்தின் காரணமாக மரணமடைந்ததாக வாட்ஸ் அப்பில் செய்தி பரவியது. அதேபோல் திமுக எம்பி செந்தில்கு…
-
- 0 replies
- 501 views
-
-
ஜெயலலிதா நினைவிடம் திறப்பு! மின்னம்பலம் ஜெயலலிதா நினைவிடம் பொது மக்கள் பார்வைக்காக இன்று (ஏப்ரல் 9) மீண்டும் திறக்கப்பட்டது. அதிமுகவின் பொதுச் செயலாளராகவும், தமிழகத்தில் 6 முறை முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா, கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மறைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடம் அருகில் அடக்கம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு ரூ.79.75 கோடி மதிப்பில் ஃபீனிக்ஸ் பறவை வடிவில் பிரம்மாண்ட நினைவிடம் அமைக்கப்பட்டுக் கடந்த ஜனவரி 27ஆம் தேதி திறக்கப்பட்டது. அங்கு, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, அவர் செய்த சாதனைகள், மக்களுக்குச் செய்த சேவைகள், வீடியோ மற்றும் ஆடியோ காட்சி பிரிவு, ஜெயலலிதாவின் ஊக்க உரைகள், சிறுகதைகள், படங்கள்…
-
- 0 replies
- 501 views
-
-
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் தேர்வை தமிழில் எழுதக்கூடாது என்றும், ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்றும் எந்த உத்தரவும் இதுவரை அரசிடம் இருந்து கல்லூரி கல்வி இயக்குனரகத்திற்கு வரவில்லை என்று கல்லூரி கல்வி இயக்குனர் பேராசிரியை டி.செந்தமிழ்ச்செல்வி தெரிவித்தார். தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், நெல்லை மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்த பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. மொத்தம் 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 133 அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளும், 438 சுயநிதி கலை, அறி…
-
- 0 replies
- 501 views
-
-
சசிகலா தமிழக முதல்வர் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா? அதிர்ச்சி முடிவு! #SurveyResults அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து, சமுக வலைதளங்களிலும், மக்கள் மத்தியிலும் பல்வேறு கருத்துகளும், விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன. விரைவில் அவர் முதல்வராக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சசிகலாவை, மக்கள் முதல்வராக ஏற்றுக் கொள்கிறார்களா என நேற்று சர்வே நடத்தினோம். இந்த சர்வேயில் பலரும் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். 'தமிழக முதல்வராக சசிகலா பதவி ஏற்க இருப்பதை... 'என்ற கேள்விக்கு, 97.13 சதவிகிதம் பேர் 'ஏற்றுக்கொள்ளவில்லை' என தெரிவித்து வாக்களித்துள்ளனர். வெறும் 2.03 சதவிகிதம் பேர் ம…
-
- 0 replies
- 501 views
-
-
‘மூன்று நாளில் நல்ல செய்தி!’ - மர்மம் கலைக்கும் டி.டி.வி.தினகரன் #VikatanExclusive ‘மூன்று நாள்களுக்குள் நல்ல முடிவை அறிவிப்பேன்' என்று டி.டி.வி.தினகரன், தன்னுடைய ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தீபா, திவாகரன் என அணிகளின் பட்டியல் நீள்கின்றன. அ.தி.மு.க-வில் உருவான அணிகளால் தொண்டர்களின் நிலைமை மதில்மேல் பூனையாக உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தைரியத்தைப் பார்த்து மன்னார்குடி குடும்ப உறவுகளும் அ.தி.மு.க-வினரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். …
-
- 0 replies
- 500 views
-
-
தமிழக முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் மூன்றாவது முறையாகவும் பதவியேற்று ஆட்சி நடத்திவருகின்றார். கடந்த இரு முறையும் முதலமைச்சராக பதவி ஏற்று பின்னர் அப்பதவியில் இருந்து இறங்கி மீண்டும், முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆட்சிப்பீடம் ஏறினார். இந்நிலையில், கடந்த வருடம் டிசம்பர் 5ம் திகதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். குறிப்பாக, முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடாமல் முதலமைச்சராகி தமிழக வரலாற்றில் அவர் சாதித்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும். இது அவருக்கு அதிஷ்டம் என்றும் கூறுவோர் இருக்கவே செய்கின்றனர். இதற்கிடையில் தான் அவருக்கு இன்னொரு வாய்ப்பும் தேடிவருகின்றது. எதிர்வரும் 26ம் திகதி குட…
-
- 0 replies
- 500 views
-
-
ஏழுவர் விடுதலை: அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 161 இன் கீழ் புதிய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்-விசிக பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைக்கு அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 161 இன் கீழ் புதிய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்யவேண்டுமெனத் தமிழ்நாடு அமைச்சரவைகூடி கடந்த 09.09.2018 அன்று தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. அதற்கு ஒப்புதல் அளிக்காமல் அவர் காலதாமதம் செய்துவந்த நிலையில் அதுகுறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு தாங்களே உத்தரவு பிறப்பிப்போம் எனவும் கூ…
-
- 0 replies
- 500 views
-
-
ராஜீவ் கொலை வழக்கு: 32 ஆண்டு சிறை வாழ்க்கை எப்படி இருந்தது ? - நளினி பேட்டி 30 நிமிடங்களுக்கு முன்னர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட ஆறு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் சிறப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தனது சிறை வாழ்க்கை, சட்டப் போராட்டம், ராஜீவ் காந்தி உள்பட 17 பேர் கொல்லப்பட்டது போன்றவை குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார் நளினி ஸ்ரீகரன். பேட்டியிலிருந்து. கே. 30 ஆண்டுகளுக்கும் …
-
- 4 replies
- 500 views
- 1 follower
-
-
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் போலீஸ் தடையை மீறி விடுதலை சிறுத்தை கட்சியினர் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்திய போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று இந்திய அரசிற்கு வேண்டுகோள் விடுத்தும் எரிபொருட்களின் விலையுயர்வினை தீர்மானிக்க கூடிய அதிகாரம் விலையினை நிர்ணயிக்கும் அதிகாரம் எரிபொருள் நிறுவனங்களுக்கு வளங்கப்பட்டிருப்பதை இந்தியஅரசு இரத்து செய்யவேண்டும் எரிபொருள் விலைஉயர்வினை திரும்ப பெறவேண்டும் கச்சதீவினை மீட்கவேண்டும் என்று விடுதலைசிறுத்தைகள் வற்புறுத்துகின்றது சிறீலங்காஅரசிற்கு போர்கப்பல்களை வழங்கும் இந்தியா அரசின் திட்டத்தினை விடுதலை சிறுத்தைகள் கண்டிப்பதாகவும் திருமாவளவன் …
-
- 0 replies
- 500 views
-
-
ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல்... சேது கால்வாய் திட்டம் - 6 வாரத்தில் பதில் தர மத்திய அரசுக்கு உத்தரவு. ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுவது தொடர்பாக 6 வார காலத்தில் பதில் தர மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமர் பாலத்துக்கு சேதம் ஏற்படாத வகையில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.இவ்வழக்கில் ஆஜரான சுப்பிரமணியன் சுவாமி, மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் 10 ஆண்டுகளாக இழுத்தடிக்கிறது என குற்றம்சாட்டினார். ஆனா…
-
- 2 replies
- 500 views
-
-
டுவிட்டரில் திடீரென கிளம்பிய ‘ஒன்றிய உயிரினங்கள்’ -கலகலக்கும் பதிவுகள் சென்னை: திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபின்னர் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைக்கத் தொடங்கியிருப்பது பெரும் விவாதப் பொருளாகி உள்ளது. அதேபோல் தமிழகம் என்று அழைக்கக்கூடாது என்றும், தமிழ்நாடு என்று அழைப்பதே சரியானது என்றும் திமுகவினர் கூறுகின்றனர். இதை பாஜகவினர் விமர்சனம் செய்துவருகின்றனர். அந்த வகையில், அர்ஜூன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சி சார்பில் அண்மையில் வெளியிடப்பட்ட டுவிட்டர் பதிவில், டைனோசர் கூட தமிழில்தான் பேசியிருந்ததாக சொல்லுவார்கள் போல இருக்கிறது என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவைப் பார்த்ததும் நெட்டிசன்கள் சரமாரியாக பதிலட…
-
- 0 replies
- 500 views
-
-
கடந்த சில நாட்களாக ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி ஆகிய பகுதியில் பயங்கர காற்றும், கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. மேலும் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாலும் கடந்த 5 நாட்களாக ராமேசுவரம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்கு டோக்கன் வழங்கப்பட்டது. நேற்று மதியம் 752 விசைப் படகுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். சில மீனவர்கள் கச்சத்தீவு அருகே கடலில் வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் 15 ரோந்து படகுகளில் அங்கு வந்தனர். அங்கு மீன்பிடித்து கொண்டு இருந்த மீனவர்களை பார்த்து எத்தனை முறைதான் சொல்வது இங்கு மீன்பிடிக்க வரக்கூடாது எ…
-
- 1 reply
- 500 views
-
-
வட மாநிலங்களில் தமிழை விருப்பப் பாடமாக கற்பிக்க நடவடிக்கை! - உத்தர்கண்ட் எம்பி வலியுறுத்தல் டெல்லி: திருவள்ளுவர் தினத்தை இந்திய மொழிகள் தினமாக அறிவிக்க வேண்டும், வட மாநிலங்களில் தமிழை விருப்பப் பாடமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தர்கண்ட் எம்பி தருண் விஜய் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் வியாழக்கிழமை முக்கிய பிரச்னைகளை அவையின் கவனத்துக்கு கொண்டு வரும் நேரத்தில், உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் தருண் விஜய் பேச அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் பேசியதாவது: "வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்திய மொழிகள் தனித் தன்மையும், சிறப்பு வாய்ந்தவையுமாகும். அந்த வகையில், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தென் மாநிலங்களில் உள்ள ஏதேனும் ஒரு ம…
-
- 2 replies
- 500 views
-
-
தமிழகத்தின்... எதிர்கட்சி தலைவராக, தெரிவு செய்யப்பட்டார் எடப்பாடி பழனிசாமி! தமிழக சட்டசபையின் எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தெரிவு செய்யப்பட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக அரசு 65 தொகுதிகளில் வெற்றிப்பெற்று சட்டமன்றத்தின் பிரதான எதிர்கட்சி அந்தஸ்த்தைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் எதிர்கட்சி தலைவரை தெரிவு செய்வதில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையில் போட்டி நிலவியது. இதற்கிடையில் புதிய சட்டமன்றம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெ…
-
- 0 replies
- 500 views
-
-
பட மூலாதாரம்,SUPRIYASAHUIAS கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி,பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் "இன்னும் இரண்டு நாட்கள் தாமதமாகியிருந்தால், குட்டியை விட்டு யானைக் கூட்டம் வெகு தூரம் சென்றிருக்கும். கடைசி வரை அந்த குட்டியால் தாயை பார்த்திருக்க முடியாது, தாய்ப்பால் இல்லாமல் குட்டி உயிர் பிழைப்பதும் கடினமாகியிருக்கும். நல்லவேளையாக தாயிடம் சேர்த்து விட்டோம்", என புன்னகையுடன் கூறுகிறார் வனத்துறை ரேஞ்சர் மணிகண்டன். கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ளது, பன்னிமேடு தேயிலை எஸ்டேட். டிசம்பர் 29 அன்று இந்தப் பகுதியில் தாயைப் பிரிந்து, கூட்டத்திலிருந்து விலகிய ஒரு குட்டியானை சுற்றிக் கொண்டிருப்பதாக வனத்து…
-
- 3 replies
- 500 views
- 1 follower
-
-
சட்டீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்களின் பிரச்சார பேரணியை குறிவைத்து மாவோயிஸ்டுகள் நடத்திய கொலைவெறித்தாக்குதலில் 274 பேர் கொல்லப்பட்டனர். காங்கிரஸ் தலைவர்களை மட்டுமே குறிவைத்து இந்த தாக்குதல் நடந்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவோயிஸ்ட் பிரிவு கூறியது. தாக்குதலில் அப்பாவிகள் இறந்ததற்கு வருத்தமும் தெரிவித்துள்ளது. இதையடுத்து மாவோயிஸ்டுகளை ஒடுக்க மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில், அடுத்த தாக்குதலுக்கு தயாராகி வரும் மாவோயிஸ்டுகள், காங்கிரஸ் தலைவர்களை குறி வைத்துள்ளதாகவும், டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் உளவுத்துறை தகவல் எச்சரித்துள்ளது. மாவோயிஸ்டுகள் பட்டியலில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்…
-
- 7 replies
- 500 views
-
-
தேர்தல் ஆணையத்தில் கமல் மனு! மக்கள் நீதி மய்யம் கட்சியைப் பதிவு செய்வதற்காக, இன்று டெல்லியிலுள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்துக்குச் சென்றார் கமல்ஹாசன். கூடிய விரைவில் தங்கள் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்குமென்று, அவர் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த பிப்ரவரி 21ஆம் தேதியன்று மக்கள் நீதி மய்யம் என்ற கட்சிப் பெயரையும் கொடியையும் மதுரையில் தொண்டர்கள் மத்தியில் அறிமுகம் செய்தார் நடிகர் கமல்ஹாசன். கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாக, திமுக தலைவர் மு.கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் நல்லகண்ணு, நடிகர் ரஜினிகாந்த், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்பட பல தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து, புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும…
-
- 0 replies
- 500 views
-
-
ஜெயலலிதா மீண்டும் சிறை செல்வார்!' அடித்துச் சொல்கிறார் சுப்ரமணியன் சுவாமி புதுடெல்லி; சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், மே மாதம் 10-ஆம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகி ஜெயலலிதா மீண்டும் சிறை செல்வது உறுதி என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அடுத்த மாதம் 10-ஆம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துவிடும் என்றார். இந்த வழக்கில் ஜெயலலிதா மீண்டும் சிறை செல்வார் என்றும் அப்போது அவர் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் தீவிரவாத அமைப்புகள் அதிகரித்துவிட்டதாகவும், அவற்றை ஒடுக்குவதில் ம…
-
- 1 reply
- 500 views
-
-
சசிகலா அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஆவது சாத்தியமா?! - கொடநாட்டில் அ.தி.மு.க. பொதுக்குழு!? #VikatanExclusive அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கிறார் வி.கே.சசிகலா. 'எம்.ஜி.ஆர் உருவாக்கிய சட்டவிதிகளின்படி பொதுச் செயலாளர் ஆக வேண்டும் என்றால், இப்போதைக்கு அது சாத்தியமில்லை. அ.தி.மு.க நிர்வாகிகள் பொதுக்குழுவைக் கூட்டினால், சட்டரீதியாக போராட்டங்களைத் தொடங்கும் முடிவில் கட்சியின் முன்னாள் சீனியர்கள் உள்ளனர்" என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 'தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தையடுத்து, அ.தி.மு.கவில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தை சின்னம்மாவால் மட்டுமே நிரப்ப முடியும்' என்று கூறி, அ.தி.மு.கவின் சீனியர்கள் செங்கோட்டையன், மதுசூ…
-
- 0 replies
- 500 views
-
-
வெடிக்கக் காத்திருக்கிறதா அதிமுக? அ திமுகவின் தேர்தல் சின்னமான ‘இரட்டை இலை’ பழனிசாமி – பன்னீர்செல்வம் அணிக்குக் கிடைத்ததைத் தொடர்ந்து, அதிமுக தரப்பில் பெரிய அளவில் கொண்டாட்டங்களைப் பார்க்க முடிந்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டது அதிமுக தரப்பினருக்கு மகிழ்ச்சி தந்தது. ஆனால், அதிமுகவின் மகிழ்ச்சி முகத்துக்குப் பின்னே கடும் குழப்பமும் அதிருப்தியும் நிலவுவதுதான் கவனிக்கத்தக்க விஷயம். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதிலும், ஆட்சிமன்றக் குழுவில் இடம்பிடிப்…
-
- 0 replies
- 500 views
-
-
காவல்துறை அராஜகம். இடுப்புக்கு கீழ் செயல்படாத ஈழத் தமிழர் பூந்தமல்லி சிறப்புமுகாமில் அடைப்பு. பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டு சிறப்புமுகாம்களில் இருப்பவர்களை விடுவிக்கவேண்டும் என்று போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் சூழலில். புதிதாக நான்கு பேர் இன்று பூந்தமல்லி சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் சென்னை பல்லாவரம் பொழிச்சலூரில் விடுதலைபுலிகள் என்ற பொய் குற்றச்சாட்டில் உதயதாஸ், சுரேஷ்குமார், கிருஷ்ணமூர்த்தி, மகேஸ்வரன் என்ற 4 ஈழ இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். சட்டப்படி அகதியாக தம்மை சங்கர் நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்துக்கொண்டு அமைதியான முறையில் நான்கு வருடங்களாக தமிழகத்தில் வாழ்க்கை நடத்திவந்த இவர்களை கடந்த டிசம்பர் மாதம் கியூ…
-
- 0 replies
- 500 views
-
-
ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்கத் தயார்: தமிழக அரசு! ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளியான ரவிச்சந்திரன் முறைப்படி விண்ணப்பித்தால் அவருக்கு 10 நாள் பரோல் வழங்கத் தயார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எழுவரை விடுதலை செய்ய தமிழக அரசு ஆளுநர் பன்வாரி லால் புரோகித்துக்கு பரிந்துரை செய்தது. ஆனால், மேற்கண்ட பரிந்துரை இன்னமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆளுநர் கால தாமதம் ஏற்படுத்தாமல் விரைவில் எழுவரை விடுவிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையில் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருள் ஒருவரான ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத்…
-
- 0 replies
- 500 views
-