தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10260 topics in this forum
-
மாரடைப்பினால் வைத்தயசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த விவேக் காலமானார். சென்னை: மாரடைப்பு ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று காலமானார். அவருக்கு வயது 59. விவேக்கின் மரணம் திரைத்துறையினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரைப்படப்படப்பிற்காக சமீபத்தில் வட இந்திய மாநிலங்களுக்கு சென்று திரும்பியிருந்தார் விவேக். வெள்ளிக்கிழமை காலையில் அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்தார்.Read more at: https://tamil.oneindia.com/news/chennai/actor-vivek-passed-away-sudden-heart-attack-418069.html?story=1
-
- 51 replies
- 4.6k views
- 4 followers
-
-
வரப்போகும், புதிய அரசுக்கு... உதவுவோம் : குஷ்பு தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க.வுக்கும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ள நடிகை குஷ்பு, நல்ல பணிகளைத் தொடர வேண்டும் என்று டுவீட் செய்துள்ளார். நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க.வின் வேட்பாளர் டாக்டர் எழிலனை எதிர்த்து ஆயிரம் விளக்கு தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட நடிகை குஷ்பு தோல்வியடைந்தார். இதன் பின் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர், “ஒவ்வொரு வெற்றியும் தோல்வியோடுதான் ஆரம்பமாகிறது. மக்களின் தீர்ப்பை அடக்கத்துடன் ஏற்றுக் கொள்கிறேன். ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்ற டாக்டர் எழிலன் அவர்களுக்கு எ…
-
- 1 reply
- 534 views
-
-
அனைத்து துறைகளிலும் தமிழ் யூனிகோடு: தலைமை செயலாளர்! மின்னம்பலம் அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் யூனிகோடு முறையைக் கையாள வேண்டும் என தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து அரசு துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் ஃபாண்ட் பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அனைத்து அரசு துறைகளிலும் ஒரே தமிழ் ஃபாண்ட் பயன்படுத்தப்பட்டால் வசதியாக இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “தமிழக இணைய கல்விக்கழகம் மேம்படுத்தியுள்ள தமிழ் யூனிகோடு, அனைத்து வகை தமிழ் குறி அமைவு (TACE16) கொண்ட எழுத்துருக்கள் (Fonts),…
-
- 0 replies
- 423 views
-
-
ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் தினகரன் திடீர் ஆலோசனை... முக்கிய முடிவு எடுக்கப் போவதாக தகவல்! அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து, டி.டி.வி.தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு என்று தொடர் சம்பவங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இன்று தலைமைச் செயலகம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் தமிழக அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு, 'தினகரன் குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, ஆட்சியை நடத்துவோம். கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது. பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தைக்கு வந்தால், அவருடன் பேசத் தயார்.' என்று அமைச்சர்கள் கூற…
-
- 7 replies
- 1.1k views
-
-
வேலூர்: வேலூர் சிறை அதிகாரிகள், நன்னடத்தை சான்று வழங்காததால், நடிகர், சீனிவாசன், டெல்லி திகார் சிறையில் இருந்து, ஜாமினில் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஓங்கோலைச் சேர்ந்த, தொழில் ஓட்டல் அதிபர் ரங்கநாதனிடம், 50 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்ட நடிகர் சீனிவாசன், வாங்கிய கடனை கொடுக்காமல் ஏமாற்றியதால், கடந்த, ஏப்ரல், 26ம் தேதி, வேலூர் சிறையில் அடைத்தனர். இதனையடுத்து ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக, டெல்லியை சேர்ந்த தொழில் அதிபரிடம், ஐந்து கோடி ரூபாய் மோசடி செய்த நடிகர் சீனிவாசனை, டெல்லி போலீசார் கடந்த ஜூன், 4ம் தேதி, அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கு கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைத்தனர். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் பதிவு செய்யப்பட்ட, ஆறு வழ…
-
- 8 replies
- 864 views
-
-
'ஒரு குற்றத்துக்குத்தான் எத்தனை விசாரணை?!' - வேலூர் சிறை அதிகாரிகள் மீது பாயும் முருகன் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் முருகனைச் சந்திப்பதற்காக, இலங்கையிலிருந்து வந்த அவருடைய தாயாருக்கு நீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது. ' எனக்குச் சிறை நிர்வாகம் தண்டனை வழங்கியிருப்பதால், 'சந்திக்க அனுமதிக்க முடியாது' என்ற காரணத்தைக் கூறியுள்ளனர். என்னுடைய தரப்பு நியாயத்தை விளக்கக்கூட அதிகாரிகள் வாய்ப்பு அளிக்கவில்லை' என வேதனைப்படுகிறார் முருகன். வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முருகனைச் சந்திப்பதற்காக, கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையிலிருந்து தமிழகம் வந்தார் அவருடைய தாய் சோமணி. சிறையில் மனு போட்டுவிட்டு முருகனுக்காகக் காத்திர…
-
- 1 reply
- 563 views
-
-
சென்னை: தமிழ்நாட்டில் மத ரீதியாகவோ அல்லது சாதி ரீதியாகவோ பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சி செய்யும் யாரையும் எனது தலைமையிலான அரசு சும்மா விடாது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்று டெல்லியில் நடந்த தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில முதல்வர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் உரை நிகழ்த்தினார். மாநில முதல்வர்களும் தேசிய ஒருமைப்பாடு குறித்து பேசினர். …
-
- 0 replies
- 479 views
-
-
' கருணாநிதியை ஏன் வாழ்த்தினார் திரௌபதி மர்மு?' - பா.ஜ.கவின் குடியரசுத் தலைவர் தேர்தல் சீக்ரெட் #VikatanExclusive இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. ' பா.ஜ.க வேட்பாளர் யார்? எதிர்க்கட்சிகள் யாரை முன்னிறுத்தப் போகின்றன?' என்ற கேள்விகளும் அரசியல் அரங்கில் எழுந்துள்ளன. ' குடியரசுத் தலைவர் தேர்தலை நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கிறார் பிரதமர் மோடி. பா.ஜ.க நிறுத்தும் வேட்பாளரை ஆதரிக்க வேண்டிய சூழலுக்கு மாநிலக் கட்சிகள் தள்ளப்படலாம்' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய குடியரசுத் தலைவரை தே…
-
- 0 replies
- 588 views
-
-
தமிழகத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்- வாக்கு எண்ணும் நடவடிக்கை ஆரம்பம் தமிழகத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் நடவடிக்கை, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு ஆரம்பமாகியது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா ஊடாக கண்காணிக்கப்படுகிறது. ஒரு வேட்பாளருக்கு ஒரு ஏஜெண்டு என்ற அடிப்படையில் வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், வாக்கு சீட்டுகளில் ஏதேனும் திருத்தம் செய்து விடக்கூடாது என்பதற்காக ஏஜெண்டுகள் பேனா கொண்டு செல்ல அனுமதியில்லை. பதிவான வாக்குகளை குறிப்பதற்காக பென்சில் மட்டுமே கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனைத்தவி…
-
- 0 replies
- 202 views
-
-
சென்னை: ஏற்காடு சட்டசபை இடைத் தேர்தலில் அண்ணா திமுக வேட்பாளரை ஆதரிப்பதாக மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் ஏற்காடு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் சி.பெருமாள் மரணம் அடைந்ததையொட்டி டிசம்பர் 4ந் தேதி அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நடைபெறவுள்ள இந்த இடைத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று அஇஅதிமுகவின் தலைமை கேட்டுள்ளது. மத்திய அரசின் நவீன தாராளமய …
-
- 0 replies
- 444 views
-
-
விழுப்புரத்தில் தள்ளு வண்டியில் இறந்துகிடந்த 5 வயது குழந்தை: பட்டினியால் இறந்ததாக தகவல் நடராஜன் சுந்தர் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் துணி சலவை செய்யும் தள்ளுவண்டியில் சடலமாக மீட்கப்பட்ட ஐந்து வயது குழந்தை தண்ணீர் இல்லாமல் பட்டினியால் உயிரிழந்ததாக உடற் கூறாய்வில் தெரியவந்தது. பெற்றோர் மற்றும் உறவினரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மேலத் தெரு அருகே, சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், சிவகுரு என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சாலையோரத்தில் தள்ளுவண்டி மூலமாக சலவை தொழில் …
-
- 21 replies
- 1.7k views
- 1 follower
-
-
மிஸ்டர் கழுகு: “எப்போதும் கவிழ்ப்பேன்!” - ‘மூக்குப்பொடி’ தினகரன் - ‘தேசியக்கொடி’ எடப்பாடி சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகைகளைப் பார்வையிட்டுவிட்டு வந்த கழுகார், ‘‘கோட்டை வேகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது’’ என்று சொன்னபடி அமர்ந்தார். ‘‘கோட்டை உறுதியாக இருக்கிறது. ஆனால், முதல்வர் நாற்காலி ஆட்டம் காண ஆரம்பித்துள்ளதே?’’ என்றோம். ‘‘ஆமாம்! ‘எந்த நேரமும் ஆட்சியைக் கவிழ்ப்பேன்’ என்று சொல்லி வருகிறார் தினகரன். சுதந்திர தினத்தன்று கொடியேற்றுவதற்குமுன், டெல்லி கொடுத்த வேலைகளை வேகமாக முடிக்கவேண்டிய நிர்பந்தம் எடப்பாடிக்கு. இப்போது அந்த வேலைகளைச் செய்வதில் மும்முரமாக இருக்கிறார்.” ‘‘அதுதான் தினகரன்…
-
- 0 replies
- 1.6k views
-
-
தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்கள் பத்திரிகையாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதிலளிக்கையில் இசைப்பிரியாவுக்காக ஏன் மத்திய அரசு துடிக்கவில்லை என பதிலளித்திருந்தார். அமெரிக்காவில் பணியாற்றி வந்த இந்தியத் துணைத் தூதர் �தேவயானி கோப்ரகடே� கைது செய்யப்பட்டது பற்றி தாங்கள் எதுவும் கூறவில்லையே? என பத்திரிகையாளர்கள் கேட்கையில், கருணாநிதி தெரிவிக்கையில், அந்த ஒரு இந்தியப் பெண்ணுக்காக, அலறித் துடிக்கும் இந்திய அரசும், மத்திய அமைச்சர்களும் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவுக்காகவும், பாலச்சந்திரனுக்காகவும் மற்றும் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காகவும் துடிக்க வில்லையே என்ற ஆதங்கம்தான் எனக்கு அதிகமாக ஏற்படுகிறது. தேவயானிக்காக வருந்துவதை நான் தவறு என்று கூறவ…
-
- 3 replies
- 697 views
-
-
'நான் வேறு ரஜினி வேறு...' - கமல் பரபரப்புப் பேட்டி! பிக் பாஸ் நிகழ்ச்சி, ட்விட்டர் கருத்துகள் என்று கமல் பரபரப்பாக இயங்கிவருகிறார். தமிழக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துவரும் அவர், 'மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்' என்று கூறினார். இதனிடையே, கடந்த வாரம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கமலைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ஊழலுக்கு எதிராக இணைந்து செயல்படப்போவதாக அவர் தெரிவித்தார். மேலும், 'தனிக்கட்சி தொடங்குவேன், முதல்வர் ஆக விரும்புகிறேன்' என்றும் கருத்து தெரிவித்து பரபரப்பைக் கிளப்பினார். இந்நிலையில், நியூஸ் 18 ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கமல், "மாநில சுயாட்சிகுறித்து அண்ணா கோரிக்கையை முன்வைத்து, பின…
-
- 2 replies
- 1k views
-
-
நெல்லை கல்குவாரியில் பாறை சரிவு: சிக்கிய நால்வரின் கதி என்ன? மீட்புப் பணிக்கு விரைகிறது என்டிஆர்எஃப் 15 மே 2022, 07:20 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நெல்லை முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் சிக்கிய 6 பேரில் 2 பேர் மீட்பு எஞ்சியவர்களை மீட்கும் பணிக்கு இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. நெல்லை முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் சிக்கிய ஆறு பேரில் இருவர் நேற்றிரவு மீட்பு படையினரால் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த நிலையில் எஞ்சியுள்ள செல்வகுமார், ராஜேந்திரன், செல்வம், முருகன் ஆகியோரை மீட்பதற்கான நடவடிக்கைகள் இன்று முழு வீச்சில் முடுக்கி விடப்பட்ட…
-
- 3 replies
- 917 views
- 1 follower
-
-
டிசம்பர் 12 தனிக்கட்சி? - வந்துட்டேன்னு சொல்லு! - ரஜினி ரகசியங்கள்! இயக்குநர் இமயம் பாலசந்தரின் இயக்கத்தில் முதல் பட வாய்ப்பு, ஒரு ஹோலிப் பண்டிகை அன்று ‘சிவாஜிராவ்’ ரஜினிகாந்த் ஆகிறார். பாலசந்தரின் இயக்கத்தில் அடுத்தடுத்த படங்கள். இப்படி 70-களில் தொடங்கிய பயணம் 80-களில் பாரதிராஜா, எஸ்.பி.முத்துராமன், பஞ்சு அருணாசலம், ஆர்.தியாகராஜன் என்று கடந்து, 90-களில் சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு ஆகியோருடன் பயணித்து, இரண்டாயிரம்களில் ஷங்கர், பா.இரஞ்சித் என்று தொடர்கிறது. இந்தப் பயணமும் வாழ்வும் இன்னும் அவருக்கே ஆச்சர்யம்தான். இதை அவரின் பேச்சுகளிலிருந்து புரிந்துகொள்ள முடியும். இவர் அறிமுகமான காலத்தில் இருந்த ஹீரோக்களுடன் போட்டிபோடுவதற்கான நிறமோ, முகவெட்…
-
- 0 replies
- 585 views
-
-
தீவிர அரசியலில் ஈடுபடுவேன்: அழகிரி Colors: சென்னை: ''தி.மு.க., தலைவர் கருணாநிதி அழைத்தால், தீவிர அரசியலில் ஈடுபடுவேன்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர், அழகிரி கூறினார்.…
-
- 1 reply
- 387 views
-
-
ஒரு நாள்... ஒன்றரைக் கோடி ரூபாய் லாபம்! - மலைக்கவைக்கும் சேகர் ரெட்டி வாக்குமூலம் Chennai: சேகர் ரெட்டியின் டைரி விவகாரம் வெளியாகியுள்ளது. அதில், தமிழகத்தின் துணை முதலமைச்சர் உட்பட பல அமைச்சர்கள், அரசியல்வாதிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இப்போது, அது தன்னுடைய டைரி அல்ல என்று கூறும் சேகர் ரெட்டி, அமலாக்கத்துறையிடம் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் என்ன? ஒரு பத்திரிகை பேட்டியைப் போன்ற நேர்த்தியோடு அமலாக்கத்துறை கேட்ட கேள்விகளும் அதற்கு சேகர் ரெட்டி அளித்த பதில்களும் இங்கே அப்படியே... ''2014 முதல் 2016 வரை எவ்வளவு தங்கம் வாங்கினீர்கள்? எதற்காக வாங்கினீர்கள்?'' ''2014 ஜனவரி முதல் எஸ்.ஆர் மைனிங் நிறுவனத்திலிருந்து வ…
-
- 1 reply
- 506 views
-
-
சசிகலா உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை சசிகலா உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் 2வது முறையாக வருமானவரித்துறை புதன்கிழமை சோதனை நடத்தியது. படப்பையில் உள்ள மிடாஸ் மற்றும் அதன் அருகில் உள்ள ஸ்ரீசாய் எண்டர்பிரைசஸ், கோவை மயிலேரிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி உள்ளிட்ட 6 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. முன்னதாக, சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித் துறையினர் நவம்பர் 9,10 ஆகிய தேதிகளில் சோதனை நடத்தினர். ஒரே நேரத்தில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 2…
-
- 0 replies
- 221 views
-
-
ரஜினிகாந்த் பயன்படுத்தும் ‘பாபா’ முத்திரைக்கு உரிமை கோரும் மும்பை நிறுவனம் ரஜினிகாந்த் பயன்படுத்தும் ‘பாபா’ முத்திரை தங்களது நிறுவனத்தின் லோகோ போல இருப்பதாக மும்பையை சேர்ந்த நிறுவனம் ஒன்று உரிமை கொண்டாடி வருகிறது. #Rajinikanth #HandSymbol #BABA புதுடெல்லி: அரசியல் கட்சி தொடங்க நடவடிக்கை எடுத்து வரும் ரஜினிகாந்த், பிரத்யேகமான முத்திரை ஒன்றை பயன்படுத்தி வருகிறார். 2 நடுவிரல்கள் மற்றும் கட்டை விரலை மடித்தும், ஆள்காட்டி விரல் மற்றும் சுண்டு விரலை உயர்த்தியும் காண்பிக்கும் அந்த முத்திரையை, தனது ‘பாபா’ படத்திலேயே பயன்படுத்தி இருந்தார். …
-
- 3 replies
- 806 views
-
-
ஆயுள் கைதிகள் விடுதலையில் மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை: உச்ச நீதிமன்றத்தில் நளினி மனு! Posted Date : 14:41 (07/07/2014)Last updated : 14:53 (07/07/2014) புதுடெல்லி: ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க மத்திய அரசின் ஒப்புதல் பெற வேண்டிய தேவை இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் நளினி மனுத் தாக்கல் செய்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை பெற்று பிறகு ஆயுள் தண்டனையாக குறைக்கப் பெற்ற நளினி, உச்ச நீதிமன்றத்தி்ல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "எனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை 2000ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. நான் கடந்த 23 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறேன். எனக்க…
-
- 0 replies
- 419 views
-
-
இலங்கை அகதிகளின் 112 முகாம்களின் இணைப்பாளர்கள் ஒன்று கூட கியூ பிரிவு பொலிஸார் அனுமதி மறுப்பு:- 14 செப்டம்பர் 2014 தமிழகத்தில் 112 முகாம்களில் தங்கியுள்ள இலங்கை அகதிகளின் நலன் பேணும் இணைப்பாளர்கள்; ஓரிடத்தில் சந்திப்பதற்கு கியூ பிரிவு பொலிஸார் அனுமதி மறுத்துள்ளதாக அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில் சுமார் 1600 பேர், லெணாவிலக்கில் 1500 பேர் மற்றும் அழியா நிலையில் 800 பேர் என மொத்தம் 3900 பேர் உள்பட தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 112 முகாம்களில் 66491 பேர் வசித்து வருகின்றனர். தமிழத்தில் உள்ள முகாம் மக்களை ஒருங்கிணைத்து ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் இங்குள்ள முகாம் மற்றும் இலங்…
-
- 0 replies
- 400 views
-
-
முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை செய்யப்பட்டதாக போலீஸ் தகவல் - சம்பவ நாளில் என்ன நடந்தது? 2 மணி நேரங்களுக்கு முன்னர் திமுகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மஸ்தான், மாரடைப்பால் காலமானதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவர் கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்தவர் மஸ்தான். கடந்த 21ஆம் தேதி காரில் செங்கல்பட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், அவரது குடும்பத்தினர் மஸ்தானின் ம…
-
- 0 replies
- 376 views
- 1 follower
-
-
"ஆளுநரை விசாரிக்கவே முடியாது என்று சொல்ல முடியாது" - ஆளுநர் வழக்கு தள்ளுபடி குறித்து நீதிபதி சந்துரு கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 5 ஜனவரி 2023, 10:49 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,RN RAVI தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீதான வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. அதில், ஆளுநர்கள் நீதிமன்றங்களுக்குப் பதில் சொல்லக் கட்டுப்பட்டவர்கள் இல்லையென்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்நிலையில், அவர் எந்தவித சட்டவிதிகளுக்கும் உட்பட்டவர் இல்லையா என்ற விவாதமும் தொடங்கியுள்ளது. அதுகுறித்துக் கேட்டபோது அப்படி எது…
-
- 0 replies
- 340 views
- 1 follower
-
-
மிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை! - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை ‘‘அ.தி.மு.க-வின் அதிகார மையமாக ரஜினி... இது எப்படி இருக்கு?’’ என்றபடியே என்ட்ரி ஆனார் கழுகார். ‘‘நம்புகிற மாதிரி இல்லையே?’’ என்றோம். ‘‘எதுவும் நடக்கலாம் என்பதுதான் அரசியல் தியரி’’ எனச் சொல்லிவிட்டு, குறிப்பு நோட்டைப் புரட்ட ஆரம்பித்த கழுகார், ‘‘சென்னையில் பி.ஜே.பி நிர்வாகிகள் மத்தியில் அமித் ஷா ஆற்றிய உரைக்கு அர்த்தம் தேடும் பி.ஜே.பி சீனியர் தலைவர்கள் சிலர், இதைத்தான் சொல்கிறார்கள். ‘தமிழகத்தில் பி.ஜே.பி எங்கே இருக்கிறது என்று கேட்பவர்கள், 2019 மார்ச் மாதத்தில் பி.ஜே.பி-யைப் பற்றித் தெரிந்துகொள்வார்கள். இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு, கூட்டணி …
-
- 3 replies
- 1.3k views
- 1 follower
-