தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10260 topics in this forum
-
பிகில் திரைப்படத்திற்கு பைனான்ஸ் செய்த மதுரை அன்புச் செழியனுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், நடிகர் விஜயிடம் வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணை மேற் கொண்டுள்ளனர். நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பிகில் திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து விநியோகித்தது. இந்த நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில், காலை 10 மணி முதல் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்கள் மற்றும் உரிமையாளர் கல்பாத்தி அகோரம் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது. பிகில் படத்துக்கு பைனான்ஸ் செய்ததாக கூறப்படும் கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவன உரிமையாளரான …
-
- 12 replies
- 1.9k views
-
-
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து திரைப்படத்திற்கு ‘சர்கார்’ என்று பெயர் வைப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்றால், நியவாழ்வில் சர்காரிலிருந்து ஆட்சி செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாதா என்று, நடிகர் விஜயின் அரசியல் பயணம் குறித்த கருத்துக்களுக்கு தமிழகத்தின் பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வியெழுப்பியுள்ளார். சென்னையில் இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேற்படி கூறியுள்ளார். இதன்போது மேலும் கூறிய அவர், “வாழ்நாளில் மக்கள் குறித்து கவலைப்படாமல், தனது கஜானாவை மட்டுமே நிரப்புவதை கொள்கையாக கொண்ட ஒருவர், அந்த நேரத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் திடீரென அரசியலுக்கு வந்து, அரசியல்வாதிகளை விமர்…
-
- 0 replies
- 589 views
-
-
தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடிகர் விஜய்யின் உறவினருக்கு சொந்தமான தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். தூத்துக்குடி சேவியர் பிரிட்டோ என்பவருக்கு சொந்தமான இன்டேவ் லாஜிஸ்டிக்ஸ் என்ற ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் தூத்துக்குடி கெரக்கோ தெருவில் உள்ளது. இந்த நிறுவனத்தில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இந்நிறுவனத்திற்கு சொந்தமான கன்டெய்னட்டல் கன்டெய்னர் பிரிக்ட் ஸ்டேஷன் மற்றும் சரக்குபெட்டக தளங்களிலும் ஒரேநேரத்தில் 25க்கும் மேற்ப்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய தனியார் ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளரான சேவியர்பிரிட்டோ நடிகர் விஜய்க்கு நெருங…
-
- 1 reply
- 555 views
-
-
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்துப் பேசிய நடிகர் விஜய் "மக்களுக்கு எது தேவையோ அதைத்தான் சட்டமாக்க வேண்டுமே தவிர, சட்டத்தை உருவாக்கிவிட்டு அதற்குள் மக்களை அடைக்கக் கூடாது" என்று கூறினார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் 'மாஸ்டர்'. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்தே சமூக ஊடகங்கள் விஜய் ரசிகர்களின் ஆதிக்கத்தில் இருந்தன. மாஸ்டர் திரைப்படம், விஜய் என ஹேஷ்டேகுகள் டிரெண்டாகி வந்தன. விஜய் திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எப்போதும் இருக்கும். அதே போன்ற எதிர்பார்ப்புக்கு இடையே இசை வெளியீட்டு விழாவில் விஜய் …
-
- 1 reply
- 733 views
-
-
நடிகர் விவேக்கின் மகன் மூளைக்காய்ச்சலால் உயிரிழப்பு நடிகர் விவேக்கின் 13 வயது மகன் பிரசன்னா மூளைக்காய்ச்சலால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகர் விவேக். இவருடைய மனைவி அருள்செல்வி. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். விவேக்கின் மகன் பிரசன்னா குமார் மூளைக்காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மதியம் அவருடைய உயிர் பிரிந்தது. திரையுலகினர் பலரும் விவேக் மகனின் மறைவுக்கு இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள். http://tamil.thehindu.com/tamilnadu/நடிகர்-விவேக்கின்-மகன்-மூளைக்காய்ச்சலால்-உயிரி…
-
- 12 replies
- 3.1k views
-
-
கமல்ஹாசன் கட்சி பாணியில் பெயர். திடீரென இயக்கம் தொடங்கிய விஷால்! மக்கள் நல இயக்கம் என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கியுள்ளார் நடிகர் விஷால். நடிகர் விஷால், அரசியலில் அதிக ஈடுபாடு காட்டிவருபவர். சில மாதங்கள் முன்பு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். விஷால் அரசியல்வாதியாக களம் புகுந்ததால் தேர்தல் களம் பரபரத்தது. ஆனால் வேட்புமனு பரிசீலனையின்போது அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. விஷாலை முன்மொழிந்த 10 பேரில் சிலரது நம்பகத்தன்மை பற்றி எதிர்ப்பு கிளம்பியதால், விசாரணை நடத்தப்பட்டது. அதில், சுமதி, தீபன் இருவர் விஷாலை முன்மொழியவில்லை என திடீரென கூறிவிட்டனர். வேட்புமனுவில் உள்ள கையெழுத்து எங்களது கையெழ…
-
- 1 reply
- 666 views
-
-
நடிகர்களின் அரசியல் பிரவேசமும் எதிர்வினைகளும் ‘நடிகர்கள் நாடாள வரலாமா?’ - புகழ்பெற்ற திரைப்பட நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவிக் கிறபோதும், அதற்கொரு முன்னுரையாக அரசியல் கருத்துகளைக் கூறுகிறபோதும், உறுப்பினர் பதிவு, ரசிகர்களுடன் சந்திப்பு போன்ற சில நடவடிக்கைகளில் இறங்குகிறபோதும் இந்தக் கேள்வி எழுப்பப்படு கிறது. தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கிற பல்வேறு கட்சிகளின் பேச்சாளர்கள், நேரடியாக எந்த நடிகரின் அரசியல் வருகையையும் எதிர்ப்பதில்லை. ஆனால், திரை நட்சத்திரங்களின் வருகையா…
-
- 0 replies
- 475 views
-
-
விளம்பரத்தில் கோக் குடிக்கச் சொன்னதும், திரைப்படத்தில் கோக்கைச் சாடியதும் நடிப்பு என்று விஜய்க்கு நன்றாகத் தெரியும். திரைப்படத்தில் ஒரு காதலுக்காகவோ, மனைவிக்காகவோ உருகுவதும், வாழ்வதும் நடிப்பு என்றும், நிஜத்தில் ஒன்று போனால் இன்னொன்று என்று தன் சொந்த வாழ்க்கையை வெளிப்படையாக வாழும் தெளிவும் கமலுக்கு உண்டு. படத்தில் நூறு பேர் வந்தாலும், ஒற்றை 'பாட்சா'வின் பெயரில் நடு நடுங்க வைத்து, நிஜத்தில் தன் திரைப்படம் வரும் நேரம் தன் அரசியல் கொள்கைகளை மாறி மாறி அமைத்துக்கொள்ளும் தெளிவும் ரஜினிக்குப் புரியும். நடிகர்களோ, நடிகைகளோ அவர்கள் தொழிலில் கவனமாக இருக்கிறார்கள், ரசிகர்கள் நடிப்பை ரசித்து விமர்சித்துப் போகும்வரை எந்தக் குழப்பமும் இல்லை. நடிகர்கள் நடிகைகள் தங்கள் ரசிகர்களைக் கு…
-
- 0 replies
- 436 views
-
-
சென்னை, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 130-வது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் பூந்தமல்லியில் நடந்தது.கூட்டத்தில் கலந்து கொண்டு நடிகை குஷ்பு பேசும் போது தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் என்னை பற்றி மிகவும் மோசமாக விமர்சனம் செய்து இருக்கிறார். காமராஜர் கட்சி நடிகை குஷ்பு பின்னால் போகிறது என்று கூறியுள்ளார். யாரும் என் பின்னால் வரவில்லை. நான்தான் பெருந்தலைவர் காமராஜரின் கட்சிக்கு சென்று இருக் கிறேன். நடிகை-நடிகர் என்றால் மோசமானவர்கள் என்பதுபோல் விமர்சிக் கிறார்கள். பாரதீய ஜனதா ஆளும் மத்திய அரசில் கேபினட் மந்திரியாக இருக்கும் ஸ்மிருதி இரானி நடிகை இல்லையா? மோடி தமிழ்நாட்டுக்கு வந்தபோது ரஜினியை சந்திக்க வில்லையா? அவரை கட்சிக்கு இழுக்க தமிழக பாரத…
-
- 0 replies
- 1.5k views
-
-
நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம் Mani Singh SUpdated: Wednesday, October 8, 2025, 12:20 [IST] டெல்லி: நடிகை பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார். நடிகை குறித்து இனி கருத்து தெரிவிக்க மாட்டேன் என்றும் நடிகை குறித்த கருத்துக்களை திரும்ப பெறுவதாகவும் சீமான் தரப்பு கூறியது. இதேபோல் சீமானுக்கு எதிரான பாலியல் புகாரை திரும்ப பெறுவதாகவும் நடிகை தரப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. Also Read இந்த உத்தரவுக்கு எதிராக சீமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி மீண…
-
-
- 78 replies
- 3.5k views
- 3 followers
-
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன? நடிகை ஒருவரின் புகாரின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான வழக்கில் 12 வார காலத்துக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 27-ம் தேதி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டிய சீமான் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக அவரின் வழக்கறிஞர்கள் காவல்நிலையத்தில் ஆஜராகி விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனக் கடிதம் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து, காவல்துறை, சீமான் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது காவல்துறை. அதை அகற்றிய சீமானின் வீட்டு உதவியாளருக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்ப…
-
-
- 63 replies
- 2.7k views
- 1 follower
-
-
நடிகை விஜயலட்சுமி விவகாரம்: சீமான் மேல்முறையீட்டு மனு மீது செப்.12-ல் உச்சநீதிமன்றம் விசாரணை 10 Sep 2025, 10:46 AM நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் (செப்டம்பர் 12) விசாரணை நடைபெற உள்ளது. தம்மை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பலாத்காரம் செய்தார் சீமான் என்பது 2011-ல் போலீசில் நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார். இதனடிப்படையில் சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை பிப்ரவரி 21-ந் தேதி விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 12 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்த…
-
- 0 replies
- 212 views
-
-
நடிகைகள் தெரிவிக்கும் பாலியல் முறைப்பாடுகளை விசாரிக்க 3 பேர் குழு: October 14, 2018 1 Min Read மீரூ கவனயீர்ப்பின் ஊடாக வெளிவரும் நடிகைகள்மீதான பாலியல் முறைப்பாடுகள் தொடர்பாக விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைக்கவுள்ளதாக நடிகர் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் அறிவித்துள்ளார். அண்மையில் ஹிந்தி நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் முறைப்பாட்டை தெரிவித்தார். சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல்களையுட் பொருட்படுத்தாமல் தனுஸ்ரீ தத்தா தொடர்ந்து பாலியல் முறைப்பாட்டை முன்வைத்தார். இதேவேளை சமூக வலைதளங்களில் ‘மீரூ’ ஹாஷ்டக் தொடங்கப்பட்டது. அதில் பல பெண்கள் தமது ப…
-
- 1 reply
- 934 views
-
-
நடிகையை தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டுகிறார்கள்! நடிகர், நடிகையை தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கும், அதிமுக நிர்வாகி ஒருவர் கோயில் கட்டுகிறார். அரக்கோணம்- சோளிங்கர் நெடுஞ்சாலையில் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடக்கிறது. தமிழகத்தில் நடிகர், நடிகைகளுக்கு கும்பாபிஷேசம், பாலாபிஷேகம் செய்து வருகின்றனர் அவர்களது ரசிகர்கள். இதற்கு ஒருபடி மேலேபோய், நடிகை குஷ்பு, நடிகர் விஜய் ஆகியோருக்கு ரசிகர்கள் கோயில் கட்டி அசத்தி விட்டனர். இந்தநிலையில், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி, முகவூர் பகுதிகளில் உள்ள அ.தி.மு.க. தொண்டர்கள், மற்றவர்களை மிஞ்சும் வகையில் ஜெயலலிதாவை அம்மன், சரஸ்வதி, கிருஷ்ணர் போன்ற இந்…
-
- 0 replies
- 551 views
-
-
ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது நடுக் கடலில் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. மீனவர்களை தாக்குவதோடு, அவர்களது வலைகள் மற்றும் படகுகளை இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தி வருகின்றனர். 16 நாட்களாக நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 2 நாட்களாகத்தான் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று 580 விசைப்படகுகள் கடலுக்கு செல்ல டோக்கன் பெற்றன. ஆனால் 400 படகுகள் மட்டுமே மீன் பிடிக்க சென்றன. ஒரு படகுக்கு 5 பேர் வீதம் சென்றனர். அவர்கள் நடுக்கடலில் இரவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு இலங்கை கடற்படையினர் வந்துள்ளனர். அவர்கள் ராமேசுவரம் மீனவர்களை மீன்பி…
-
- 0 replies
- 467 views
-
-
நடுக்கடலில் விபத்து – 3 தமிழக மீனவர்கள் பலி -9 பேரைக் காணவில்லை April 15, 2021 கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே விசைப்படகு ஒன்றின் மீது சிங்கப்பூரைச் சேர்ந்த கப்பல் மோதி ஏற்பட்ட விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் 9 பேரைக் காணவில்லை எனத் தொிவிக்கப்பட்டள்ளது கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே வேப்பூர் பகுதியிலிருந்து விசைப்படகில் கன்னியாகுமரி, ராமநாதபுரம் பகுதிகளைச் சேர்ந்த 14 மீனவர்கள் கடந்த 11ஆம் திகதி புறப்பட்டு மீன்பிடிக்கச் சென்றனர். அந்த விசைப்படகு fle;j செவ்வாய்க்கிழமை அதிகாலை கர்நாடக – கேரள எல்லையான மங்களூரில் இருந்து 55 கடல்மைல் தூரத்தில் சென்று கொண்டிருந்தபோது, சிங்கப்பூரைச் சேர்ந்த ஏபிஎல் லீ ஹா…
-
- 0 replies
- 327 views
-
-
நடுக்கத்தையளிக்கும் விடியல்கள் - பேரறிவாளனை எண்ணி ஏங்கும் தாய் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மரண தண்டனை கைதிகளுல் ஒருவர் பேரறிவாளன். இவரை மீட்க அவரது தாய் அற்புதம்மாள் (66) பல்வேறு வகைகளில் போராடி வருகிறார். இந்தநிலையில் தனக்கு ஒவ்வொரு விடியலும் பயம் கலந்த நடுக்கத்தை அளிப்பதாகவும், ஒரு தாய்க்குதான் தனது துயரங்கள் புரியுமெனவும் உருக்கமாக கூறியுள்ளார் அற்புதம்மாள். தீவிரவாத தாக்குதல்களில் ஈடுப்பட்ட அஜ்மல் கசாப் மற்றும் அப்சல் குருவின் தூக்கு தண்டனை இரகசியமாக நிறைவேற்றப்பட்டதை அடுத்து தனக்கு ஏற்கனவே இருந்த பயம் பன்மடங்கு அதிகரித்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். …
-
- 0 replies
- 605 views
-
-
நடுக்குப்பத்தில் காவல்வெறி! சென்னைப் பல்கலைக்கழக இதழியல் துறை வெளியிட்ட ஆவணப் படம்! அண்மையில் தமிழகத்தில் இடம்பெற்ற பண்பாட்டுப் புரட்சி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன்போது சென்னை மெரீனாக் கடற்கரையிலும் மிகப் பெரியளவில் மக்கள் திரண்டு போராட்டம் இடம்பெற்றது. லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஜல்லிக் கட்டுக்கான தடையை நீக்குமாறு தமது முழக்கத்தை வெளிப்படுத்தினர். வரலாறு காணாத இந்தப் போராட்டத்தால் ஒட்டுமொத்த தமிழகமும் ஸ்தம்பிதமடைந்தது. ஜல்லிகட்டு விடயத்தில் தமிழக அரசு மற்றும் இந்திய அரசு என்பன தமது முடிவுகளை மாற்றிக் கொள்ளும் அளவில் தமிழகமே திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 486 views
-
-
பெங்களூருவில் நடுரோட்டில் பொதுமக்கள் மத்தியில் கணவனை துரத்தி துரத்தி துப்பாக்கியால் சுட்ட மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹம்சா என்ற பெண் தனது கணவர் சாய்ராமுடன் ஓசூரில் இருந்து பெங்களூருவுக்கு காரில் சென்றுள்ளனர். அப்போது திடீரென்று ஹம்சா தனது கணவர் சாய்ராமை காரின் உள்ளே இருந்த போது, தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளார். உயிர் தப்பி, காரின் கதவைத் திறந்து வெளியே குதித்த சாய்ராம், அவ்வழியே சென்ற பேருந்தில் தாவிக்குதித்து ஏறினார். இருப்பினும் காரை எடுத்துக் கொண்டு விடாமல் கணவரை துரத்தி, துரத்தி துப்பாக்கியால் சுட முயற்சித்தார். இதையடுத்து, பேருந்தை நிறுத்திய பயணிகள், அப்பெண்ணிடம் இருந்து கணவரைக் காப்பாற்றி, மருத்துவமனைக்கு அனு…
-
- 0 replies
- 256 views
-
-
நெல்லை பாளையங்கோட்டையில் நடுசாலையில் சண்டையிட்டுக் கொண்ட மாணவர்களை, திருக்குறளின் 1330 குறள்களையும் எழுதச் சொல்லி போலீசார் தண்டனை வழங்கினர். பாளையங்கோட்டையில் உள்ள இரு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், வ.உ.சி. மைதானம் மற்றும் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் அண்மையில் மோதிக் கொண்டனர். பிறந்தநாள் கேக் வெட்டிய போது ஏற்பட்ட சண்டை மற்றும் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதத்தை வைத்து அவர்கள் சண்டையிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. காதல் விவகாரத்தில் ஒரு மாணவனை பலர் சேர்ந்து கொண்டு தாக்கியதை டிக் டாக் வீடியோவாகவும் வெளியிட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இச்சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் மூலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. …
-
- 3 replies
- 754 views
-
-
நடுவுல கொஞ்சம் வைகோவை காணோம் - எங்க போனீங்க ராசா? வைகோ, இந்த நூற்றாண்டில் அதிகமா கலாய்க்கப்பட்ட அரசியல்வாதி இவராத்தான் இருப்பார். எல்லாரும் அரசியல் பண்ணா, அரசியல் இவரை மட்டும் தயவு தாட்சண்யம் இல்லாம வச்சு செய்யும். தமிழ்நாட்டுல, அமெரிக்காவிலே... ஐரோப்பாவிலே... புளூட்டோவிலேன்னு எங்க என்ன பிரச்சனை நடந்தாலும் முதல் ஆளா ஆஜர் ஆகி கருத்து சொல்லுவார் நம்ம வைகோ. சில சமயம் எதும் பிரச்சனையே நடக்கலைன்னா, 'என்னதான் ஆகிவிட்டது நம்ம ஊருக்கு' அப்படின்னு இவராவே எதாவது கருத்து சொல்லி பிரச்சனையை ஆரம்பிப்பார். போன வாரம் ஃபுல்லா தமிழ்நாடே ஜல்லிக்கட்டு பிரச்னைல தீவீரமா இருந்தப்ப இவர் மட்டும் 'செலிப்ரிட்டி வாழ்க்கை நொந்தது... எனக்கு என்ன வந்ததுன்னு' அமைதியா இருந்தார். இவர் ம்யூட்ல …
-
- 0 replies
- 484 views
-
-
: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை முதல்வர் ஜெயலலிதா இன்று திடீரென சந்தித்துப் பேசினார். தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி வைகோ நடைபயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று கோவளத்தில் தொடங்கிய பயணம் இரவு திருப்போரூரில் முடிவடைந்தது. இன்று காலையில் திருப்போரூரில் பயணத்தை தொடங்கிய வைகோ சிறுதாவூர் வழியாக மாமல்லபுரம் சென்று கொண்டிருந்தார். அப்போது முதல்வர் ஜெயலலிதா தனது சிறுதாவூர் பங்களாவிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். நடைபயணத்தில் ஈடுபட்டிருந்த வைகோவை பார்த்த ஜெயலலிதா, உடனடியாக காரை நிறுத்த உத்தரவிட்டார். பின்னர் காரிலிருந்து இறங்கி வைகோவிடம் சென்று பேசினார். அப்போது, மதுவினால் ஏற்படும் தீமைகளைப் பற்றியும், மதுவிலக்கு அமல்படுத்தவேண்டியதன் அவசியம் பற்றியும் முதல…
-
- 3 replies
- 1.4k views
-
-
நடைமுறைக்கு ஒவ்வாத தேர்தல் வாக்குறுதிகளை வழங்கும் பிரதான திராவிட கட்சிகள் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு தொடக்கம் பெண் பிள்ளைகளுக்கான பலவித ஊக்குவிப்புகள் வரை பயனுறுதியுடைய சமூக நலன்புரி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடியாக விளங்கிவந்திருக்கிறது. ஆனால், லோக்சபா தேர்தலுக்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் முன்வைத்திருக்கும் விஞ்ஞாபனங்கள் ஏமாற்றத்தைத் தருபவையாக இருக்கின்றன. இரு கட்சிகளுமே முன்னைய திட்டங்களை திரும்பத்திரும்ப கூறியிருக்கின்ற அதேவேளை, மத்திய அரசின் கீழ் வருகின்ற விடயங்கள் தொடர்பில் பல முக்கியமான வாக்குறுதிகளை வழங்கியிருக்கின்றன.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை…
-
- 1 reply
- 636 views
-
-
நட்பு நாடு என்று கூறிக் கொண்டே இலங்கை நம் முதுகில் குத்துகிறதே: ஸ்டாலின் வேதனை. நட்பு நாடு என்று கூறிக் கொண்டே மீனவர்களின் வாழ்வாதாரத்தின் மீது நாசகரமான தாக்குதல் நடத்தி முதுகில் குத்தும் இலங்கை அரசின் போக்கு மிகவும் கண்டனத்திற்குரியது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களுக்கு தலா ரூ.60 லட்சம் அபராதமும், 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து இலங்கை கல்பிட்டி நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 8 பேரை கடந்த ஆகஸ்டு 18-ந் தேதி இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்த வழக்கில்தான் இப்படியொரு அபாண்டமான தீர்…
-
- 0 replies
- 491 views
-
-
மிஸ்டர் கழுகு: நண்பேன்டா! நாடகம் நடக்குது நாட்டிலே... ‘‘இரண்டு மாதங்களுக்கு முன்பு கனவிலும் நினைக்காத காட்சிகள் எல்லாம் இப்போது சட்டமன்றத்தில் நடக்கின்றன’’ என்ற பீடிகையோடு உள்ளே நுழைந்தார் கழுகார். அவர் ஏற்கெனவே வாட்ஸ்அப்பில் அனுப்பியிருந்த ‘நண்பேன்டா! நாடகம் நடக்குது நாட்டிலே...’ என்ற தலைப்பை வைத்து உருவாக்கப்பட்ட ஜூ.வி அட்டையை எடுத்து நீட்டி, ‘‘இதைத்தான் சொல்கிறீர்களா?” என்றோம். ‘‘ஆம்! ‘ஜெயலலிதா இல்லாத நிலையில் சட்டமன்றத்தில் தி.மு.க அதகளம் செய்துவிடும்; கேள்விகளால் முதல்வரைத் துளைத்தெடுப்பார்கள்’ என்றே பலரும் நினைத்தார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. மெரினாவில் மாணவர்கள் மீது தொடுக்கப்பட்ட போலீஸ் தாக்குதல் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானத்தை ச…
-
- 0 replies
- 767 views
-