தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10291 topics in this forum
-
சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பில் எனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை, உளவு பார்க்க மட்டுமே என்னை அனுப்பி வைத்தனர் என்று ஜாகீர்உசேன் கூறியுள்ளார். சென்னையில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐ உளவாளியான ஜாகீர் உசேனிடம் காவலில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக ஜாகீர் உசேனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்களை ஜாகீர்உசேன் தெரிவித்துள்ளார். குறிப்பாக சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பில் எனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று கூறியுள்ள ஜாகீர்உசேன், உளவு பார்க்க மட்டுமே என்னை அனுப்பி வைத்தனர் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வாக்குமூலம் ஒன்றையும் அளித்துள்ளார். அதில், இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் தான் என்னை மூளைச் சலவை செய்து இதற…
-
- 1 reply
- 641 views
-
-
உண்மையில் ஜெ-விற்கு வாரிசு உள்ளதா ? | Socio Talk ஜெயலலிதா இறந்த பின்னர் பலர் அவரின் வாரிசுகள் என வெளிவர தொடங்கின. உண்மையில் ஜெயலலிதாவிக்கு வாரிசு உள்ளதா ? மேலும் பல கேள்விகளும் பதிகளும் இந்த வீடியோவில்.
-
- 1 reply
- 537 views
-
-
"கார்ப்பரேட்டுகளுக்கு இடையே நடந்த போட்டியில் நான் பலியாகிவிட்டேன்" - ஆ.ராசா எனது அமைச்சகத்தில் மர்மமான விஷயங்கள் நடப்பதாகவும், அதிகாரிகள் என்னைத் தவறாக வழி நடத்துவதாகவும் அப்போதே காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா எச்சரித்தார் என முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ. ராசா தெரிவித்துள்ளார். 2G Scam Unfolds என்ற புத்தகத்தின் வெளியீட்டை முன்னிட்டு ஆ. ராசா விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் டாம் வடக்கன் இந்த விருந்துக்கு வந்திருந்தார். காங்கிரஸ் தரப்பிலிருந்து வந்திருந்தவரும் இவர் ஒருவரே. முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் முன்னாள் காங்கிரஸ் பிரமுகர் நட்வர் சிங், பாஜக செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு மிட்டல் ஆகி…
-
- 0 replies
- 562 views
-
-
சிபிசிஎல் ஆலையை சுற்றி பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவது ஏன்? கள நிலவரம் பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை திருவொற்றியூர் பகுதியில் வசிக்கும் ஜோசபினின்(45) வாழ்க்கை, கடந்த ஒரு மாதமாக முழுமையாக மாறி விட்டது. ஓடி, ஓடி குடும்பத்திற்கு வேலை செய்த ஜோசபின் தற்போது மூச்சு விடவே சிரமப்படுகிறார். தினமும் வானம் இருட்டினாலே அவருக்கு அச்சம் வந்து விடுகிறது. நள்ளிரவில் தனது 20 வயது மகளின் உதவியின்றி உறங்குவதுகூட அவருக்கு சிரமமாகிவிட்டது. திருவொற்றியூர், மணலி, எண்ணூர் பகுதிகளில் உள்ள ஆலைகளில் இருந்து வெளியேறும் நச்சுக்காற்று காரணமாக, ஜோசபின் போன்ற மூச்ச…
-
- 0 replies
- 202 views
- 1 follower
-
-
‘வா ராசா.. வா ராசா கமலஹாசா’: நடிகர் கமல்ஹாசன் நாளை அரசியல் பயணத்தை தொடங்கவுள்ள நிலையில், யூரியூபில் கமலின் அரசியல் பயணத்தை வரவேற்கும் வகையில், ‘வா ராசா.. வா ராசா கமலஹாசா’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் நாளை தனது அரசியல் பயணத்தை துவக்குகிறார். ராமேசுவரத்தில் இருந்து தனது பயணத்தைத் அவர் தொடங்குகிறார். பின்னர், மாலையில் மதுரையில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அங்கு கட்சியின் கொடியையும், பெயரையும் அவர் அறிமுகப்படுத்தவுள்ளார். முன்னதாக, தான் அரசியல் பயணத்தை துவக்குவதை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன…
-
- 13 replies
- 1.7k views
-
-
`ஜெயலலிதா எம்பாமிங் படிவத்தில் கையொப்பமிட்டது கார்த்திகேயனா?' - சசிகலாவை நெருக்கும் ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன், 130 நாள்களைக் கடந்துவிட்டது. விசாரணை, குறுக்குவிசாரணை எனத் தீவிரமாக இயங்கினாலும், ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மங்கள் இன்னும் விலகவில்லை. `இறுதி நாள்களில் என்ன நடந்தது என்ற முடிவுக்கு கமிஷன் வந்துவிட்டது. சசிகலாவுக்கு எதிரான விஷயங்கள் இதில் ஏராளம் அடங்கியிருக்கின்றன' என்கின்றனர் ஆணைய வட்டாரத்தில். முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்தில் உண்மையைக் கண்டறிவதற்காக, ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. …
-
- 0 replies
- 551 views
-
-
சசிகலா குடும்பத்தில் நிலவும் குழப்பங்கள் 'பளிச்'சென அம்பலமாகி வருகின்றன. தினகரன் - திவாகரன் இடையே வெடித்த குடும்பத்தில் கடும் கசமுசா ஏற்பட்டுள்ளது.இதை, திவாகரன் மகன், ஜெயானந்த், தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஆகியோரின் 'பேஸ்புக்'பதிவுகள் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளன. ஜெ., மறைவுக்கு பின், சசிகலா குடும்பத்திற்குள் அதிகார மோதல் ஏற்பட்டது. சசிகலா சிறைக்கு சென்றதும், மோதல் அதிகரித்தது. சசிகலா அறிவுரைப்படி, அவரது அக்கா மகன் தினகரன், புதிய கட்சியை துவக்கி உள்ளார். சசிகலாவின் தம்பி திவாகரன் கட்சியில் தன் மகனுக்கு முக்கியத்துவம் தரப்படும் என எதிர்பார்த்தார். ஆனால், குடும்பத்தினரை ஒட்டு மொத்தமாக ஓரங்கட்டி தினகரன் தனித்து செயல்பட்டு வருகிறார். இது, த…
-
- 0 replies
- 592 views
-
-
"டிரம்ஸில் பெரிய மேடைகள் ஏறணும்" - ஜெய்சனின் நெகிழ்ச்சி கதை Play video, ""டிரம்ஸில் பெரிய மேடைகள் ஏறணும்" - ஜெய்சனின் நெகிழ்ச்சி கதை", கால அளவு 3,22 03:22 காணொளிக் குறிப்பு, "டிரம்ஸில் பெரிய மேடைகள் ஏறணும்" - ஜெய்சனின் நெகிழ்ச்சி கதை 9 மணி நேரங்களுக்கு முன்னர் கோவை மாவட்டம் சேரிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார் ஜெய்சன். பார்வை மாற்றுதிறன் மாணவரான ஜெய்சன் டிரம்ஸ் கலைஞராக அசத்தி வருகிறார். பள்ளி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெய்சன் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். டிரம்ஸ் கலைஞராக உலக மேடைகள் ஏற வேண்டும் என விரும்புகிற…
-
- 4 replies
- 633 views
- 1 follower
-
-
ராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி முற்றுகைப்போராட்டம் தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டதைக் கண்டித்து இராமநாதபுரம் மாவட்டம நாம் தமிழர் கட்சி சார்பில், இராமநாதபுரம் மாவட்ட அஞ்சல் நிலைய முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ராஜபக்சேவின் உருவ பொம்மை தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. திருச்சி நாம் தமிழர் கட்சி தொடர்வண்டி மறியல் போராட்டம் அப்பாவி மீனவர்கள் மீதான மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி திருச்சி தொடர்வண்டி நிலையத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 30 பேர் கைது செய்யப்பட்டனர். (Facebook)
-
- 12 replies
- 2.5k views
-
-
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல் நலம் பாதிப்பு பகிர்க படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89 தி.மு.க. தலைவர் மு. கருணாநிதிக்கு சிறுநீர்ப் பாதையில் ஏற்பட்டுள்ள நோய்த்தொற்றின் காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு. கருணாநிதி கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து உடல் நலக் குறைவின் காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்துவருகிறார். அவர் மூச்சு விடுவதை எளிதாக்க அவருக்கு ட்ராக்யோஸ்டமி குழாயும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம், ட்ராக்யோ…
-
- 49 replies
- 8.6k views
-
-
எந்த 7 பேர்?.... எனக்குத் தெரியாதே?... ஷாக் கொடுத்த ரஜினி பதில்! ராஜீவ் காந்தி கொலைக்குற்ற வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை குறித்த கேள்விக்கு எந்த 7 பேர் இது பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன். இப்போ தான் கேக்குறேன் உடனே என்னுடைய நிலைப்பாடு என்னன்னு கேட்டா என கடுப்பாகி நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை பற்றி தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கும் நன்றாகவே தெரியும். அட வரலாறு தெரியலன்னா கூட கடந்த 2 நாட்களாக தினசரி செய்தித்தாள் படிச்சிருந்தாலாவது யார் இந்த 7 பேர் என்ற விஷயம் தெரிந்திருக்கும். முருகன், சாந்தன், பேரறிவாளன், நளி…
-
- 11 replies
- 1.5k views
-
-
2019 மக்களவை தேர்தலில் முதல்கட்டம் நடைபெற இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தனது அறிக்கையை ஏப்ரல் 2ஆம் தேதி வெளியிட்டது. இந்தியாவில் ஏப்ரல் 11ஆம் தேதி முதல்கட்ட தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் நாட்டின் இரண்டு பிரதான கட்சிகள், தங்கள் தேர்தல் அறிக்கைகளில் மக்களுக்கு என்ன வாக்குறுதிகளை அளித்திருக்கிறார்கள் மற்றும் முக்கிய அம்சங்கள் சிலவற்றை பார்க்கலாம். முரண்படும் பாஜக - அதிமுக தேர்தல் அறிக்கைகள் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்று அத…
-
- 0 replies
- 737 views
-
-
சென்னை வந்த பிரதமர் மோடியிடம் அம்மையார் கோரிக்கை பட்டியலை தமிழக மக்களின் சார்பாக அளித்துள்ளார்.. நிறைவேறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.. டிஸ்கி: கச்சத்தீவு எங்களுடையதுதான், சொல்லிப்புட்டோம்..! அடுத்த நூறு வருசத்திலையாவது திரும்ப வாங்கிப்புடவேணும்..!! - டைம்ஸ் ஆஃப் இந்தியா.
-
- 0 replies
- 311 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,A.R. VENKATACHALAPATHY/ FACEBOOK படக்குறிப்பு, "திருநெல்வேலி எழுச்சியும் வ.உ .சி.யும் 1908" என்ற நூலுக்காக ஆ.ரா. வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் தமிழ்நாட்டை சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் ஆ.ரா. வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. "திருநெல்வேலி எழுச்சியும் வ.உ .சி.யும் 1908" என்று தமிழில் 2022-ஆம் ஆண்டு வெளிவந்த அவரது நூலுக்காக, ஆய்வுப் பிரிவின் கீழ் 2024-ஆம் ஆண்டுக்கான விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக இலக்கிய நூல்களுக்கே வழங்கப்படும் சாகித்ய அகாடமி விருது இந்த முறை வரலாற்று நிகழ்வு ஒ…
-
- 0 replies
- 295 views
- 1 follower
-
-
தமிழ்நாடு எப்படி உருவானது? மின்னம்பலம் விவேக் கணநாதன் இந்தியாவில் மொழிவாரி மாநிலங்களின் கோரிக்கைகளின் வரலாறு 19-ம் நூற்றாண்டின் இறுதியிலேயே தொடங்கிவிட்டது. பிரிட்டிஷ் இந்தியாவின் மத்திய மாகாணத்திலிருந்த ஒரிசாவில் 1895ம் ஆண்டு இந்தி திணிக்கப்பட்டபோது, தங்களை தனி மாகாணமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி ஒரிய மக்கள் போராட்டத்தை துவங்கினார்கள். தொடர்ச்சியான போராட்டங்களுக்கு மத்தியில் 1935-ல் ஒரிசா தனி மாகாணமாக ஆனது. இந்தியாவை பல்வேறு மொழி தேசிய இனங்கள் அடங்கிய கூட்டுநாடாக பார்க்கும் அறிவியல் பார்வை 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே வலுவடைந்தது. மொழிவழி தேசிய இனங்களின் அரசியல் உரிமையை அங்கீகரிக்கும் வகையில், தேசிய இயக்கமாக இருந்த காங்கிரஸ் 1921ம் ஆண்ட…
-
- 1 reply
- 2.1k views
-
-
தமிழகத்தின், ராணிப்பேட்டையில் உள்ள பொலிஸ் நிலையத்தின் மீது பெற்றோல் குண்டு வீச்சு! தமிழகத்தின், ராணிப்பேட்டையில் உள்ள சிப்காட் பொலிஸ் நிலையத்தின் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள் இவ்வாறு பொலிஸ் நிலையத்தின் மீது பெற்றோல் குண்டுகளை வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2025/1419446
-
- 0 replies
- 259 views
-
-
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் இயங்கிவரும் புதுப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மாணவியை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாக புகார் எழுந்ததையடுத்து, தலைமை ஆசிரியை குமரேஸ்வரி செவ்வாய்கிழமை முதல் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகாரளித்தும் சட்டரீதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கிறார் சிறுமியின் தாய் மகேஸ்வரி. நாங்கள் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். எனது கணவர் ஓர் மாற்றுத்திறனாளி. நான் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறேன். எனது மூத்த மகள் புதுப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். சில நா…
-
- 1 reply
- 1.1k views
-
-
மதுரை தனியார் ஹோட்டலில் கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் பேசியதாவது , ஆண்டுதோறும் ஜூலை 13 ஆம் தேதி தனது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருவதாகவும் , இந்தாண்டு 63 வது பிறந்தநாள் மதுரை ராஜா முத்தையா மண்டபத்தில் கொண்டாடப்படவுள்ளதாக தெரிவித்தார் . இதனை கவிஞர்களின் திருநாள் என வெற்றி தமிழர் பேரவை கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஒரு கவிஞரை தேர்ந்தெடுத்து பரிசளித்து வருவதாகவும் . அதனை தொடர்ந்து இந்தாண்டு ஈழத்து கவிஞர்கள் ஜமீல் , நெளபல் ஆகிய இருவருக்கு விருதும் , தலா 50 ஆயிரம் வீதம் நன்கொடையும் வழங்கப்படவுள்ளதாக கூறினார் . அறக்கட்டளை உருவாக்கி ஏழை மாணவர்கள் தாய்மொழி பயின்று உயர்கல்விக்கு உதவி செய்யும் வகையில் தேனி மற்றும் மதுர…
-
- 0 replies
- 504 views
-
-
விடுதலைப்புலிகளும், தலிபான்களும் ஒன்று என்பது போல பேசிய டைரக்டர் அமீரை கண்டித்து, அவரது வீட்டை முற்றுகையிட முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் தணிக்கை துறையினர் லஞ்சம் வாங்கி கொண்டு படத்திற்கு சான்று அளிப்பதாக ஒரு குண்டை தூக்கி போட்ட டைரக்டர் அமீர், ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்கள் தவறாக சித்தரிக்கப்படவில்லை, தலிபான்கள் தான் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் தமிழ் இனத்திற்கு எப்படி விடுதலை புலிகள் போராடுகின்றனரோ அதேப்போலத்தான் தலிபான்களும் தங்கள் நாட்டுக்காக போராடுகின்றனர் என்று கூறியிருந்தார். மேலும் விஸ்வரூபம் படத்திற்கு மீண்டும் பிரச்னை எழுப்புவது போல பேசியிருந்தார். இந்நிலையில், இந்து மக…
-
- 3 replies
- 716 views
-
-
இந்தியாவின் தமிழக மாநிலத்தில், இலங்கையர் ஒருவர் குடும்ப உறுப்பினர்கள் மூன்று பேரை கொலை செய்து, தாமும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தாய், மனைவி மற்றும் மகளை இவ்வாறு குறித்த இலங்கையர் கொடூராமன முறையில் படுகொலை செய்துள்ளார். மூன்று பெண்களும் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 48 வயதான சீ.சுந்தரேசன் என்பவரே இவ்வாறு மூன்று பேரைக் கொலை செய்து தாமும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 30 ஆண்டுகளுக்கு முன்னர் குறித்த நபர் சென்னைக்கு சென்றிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடன் தொல்லை காரணமாக இவ்வாறு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tab…
-
- 1 reply
- 491 views
-
-
தமிழக ஆளுநருடன் டிஜிபி, காவல் ஆணையர்கள் சந்திப்பின் பின்னணி தகவல்கள் ஆளுநர் மாளிகை | படம்: ம.பிரபு. டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையரை நேரில் வரவழைத்து ஆலோசனை நடத்தியதின் பின்னணி பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானதை தொடர்ந்து முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பொறுப்பேற்றார். அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வானார். அ.தி.மு.க.வின் சட்டமன்றக் கட்சி தலைவராகவும் சசிகலா தேர்வு செய்யப்பட்டார். தமிழக முதல்வராக வசதியாக ஓ.பன்னீர் செல்வம் தனது பதவி விலகல் கடிதத்தை தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். எந்நேரமும் ஆட்சி அமைக்க சசிகலாவை ஆளுநர் அழைக்கலாம் என்ற நிலை இருந…
-
- 0 replies
- 218 views
-
-
வருகிற 27-ந்தேதி டெல்லி மேல்சபை தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு எம்.பி.யை தேர்ந்து எடுக்க 34 எம்.எல்.ஏ.க்கள் தேவை. சட்டசபையில் அ.தி.மு.க. கூட்டணிக்கு 170 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எனவே அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்டுள்ள டாக்டர் மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜூனன், த.ரத்தினவேல், இரா.லட்சுமணண் மற்றும் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்டை சேர்ந்த டி.ராஜா ஆகிய 5 பேரும் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. 6-வது எம்.பி. யார் என்பதில் தான் கேள்வி குறி நீடிக்கிறது. அந்த இடத்தை கைப்பற்ற தி.மு.க. சார்பில் கனிமொழியும், தே.மு.தி.க. சார்பில் இங்கோவனும் நிறுத்தப்பட்டுள்ளனர். சட்டசபையில் தி.மு.க.வுக்கு 23 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். தே.மு.தி.க.வுக்கு 29 எம்.எல்.ஏ.க்கள் இ…
-
- 1 reply
- 538 views
-
-
பெங்களூரு சிறையில் இருந்தபடி கட்சியை சசிகலா நடத்த முடியுமா? - லாலு போல் செயல்பட முடியாது என பிஹார்வாசிகள் கருத்து சசிகலா | கோப்புப் படம்: பிடிஐ லாலு பிரசாத் யாதவ், சிறையில் இருந்தபடி கட்சியை நடத்தியது போல, தற்போது அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவால் செயல்பட முடியாது என பிஹார்வாசிகள் கூறுகின்றனர். ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு, பிஹார் முதல்வராக இருந்தபோது, கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் சிக்கினார். இதில் கடந்த 1997, ஜூலையில் முதல்வர் பதவியை அவர் இழக்க நேரிட்டபோது, தனது மனைவி ராப்ரி தேவியை அப்பதவியில் அமர வைத்தார். ராப்ரி பெயரளவில் முதல்வராக…
-
- 0 replies
- 166 views
-
-
எடப்பாடி பழனிச்சாமி பிரதமருக்கு எழுதிய கடிதம் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளதாக தமிழக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் மீண்டும் நடந்திருப்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். நாகப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து 9 மீனவர்களும், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி தளத்தில் இருந்து 4 மீனவர்களும் நேற்று மீன்பிடிக்கச் சென்ற வேளை அவர்களை…
-
- 0 replies
- 438 views
-
-
தர்மபுரியில் ரயிலில் பாய்ந்து, இளவரசன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு மது அருந்தியதாக ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. காதல் திருமணம் செய்து கொண்டதன் மூலம், தர்மபுரியில் பெரும் கலவரம் உருவாக காரணமாக இருந்த திவ்யா-இளவரசன் ஜோடி இம்மாத தொடக்கத்தில் பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து, ஜூலை 5ம் திகதி, தர்மபுரியில் தண்டவாளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப் பட்டார் இளவரசன். அவரது உடலுக்கு அருகே சில மதுபாட்டில்கள் கிடந்தன. மேலும் அவரது சட்டைப் பாக்கெட்டிலிருந்து எடுக்கப்பட்ட கடித்ததில் இருப்பது அவரது கையெழுத்துத் தான் என்பது உறுதியான நிலையில் அவரது மரணம் தற்கொலை தான் என நிரூபணமானது. இந்நிலையில் தனது மகனுக்கு மது அருந்தும் பழக்கமே இல்லை என சந்தேகம் தெரிவித்தார் இளவரசனின் அப்பா. இது குற…
-
- 0 replies
- 574 views
-