தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
சட்டசபையில் தாக்கப்பட்டதைக் கண்டித்து, திருச்சியில்... ஸ்டாலின், தலைமையில் உண்ணாவிரதம் தொடங்கியது.சென்னை: சட்டசபையில் திமுகவினர் தாக்கப்பட்டது தொடர்பாக இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. திருச்சியில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீது பிப்ரவரி 18ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார். இதனால் சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டது. சட்டசபைக்குள் தர்ணா போராட்டம் நடத்திய ஸ்டாலின் குண்டு கட்டாக தூக்கி வெள…
-
- 1 reply
- 283 views
-
-
அணிவகுக்கும் கருத்து கணிப்புகள்... வந்ததும் தந்ததும் ஒன்றுதானா? மின்னம்பலம் ‘‘இது கருத்து கணிப்பு இல்லை; கருத்து திணிப்பு!’’ எல்லாத் தேர்தல்களின்போதும் வருகிற டயலாக்தான். ஆனால் சொல்கிற நாக்குகள்தான் தேர்தலுக்குத் தேர்தல் வேறாகின்றன. எந்தக் கட்சிக்கு ஆதரவாக வருகிறதோ, அந்தக் கட்சியினருக்கு அது கருத்துக் கணிப்பு; எதிராக வந்தால் அது கருத்துத் திணிப்பு. உண்மையை ஒப்புக்கொண்டு களத்தை எதிர்கொள்கிற பக்குவம், நம் அரசியல் தலைவர்களுக்கு மட்டும் இல்லையென்று சொல்லமுடியாது; அமெரிக்காவில் இருக்கிற அரசியல் தலைவர்களுக்கே அந்தப் பக்குவம் இல்லை. உலகம் முழுக்க அரசியல்வாதிகளுக்கு ஒரே மனசு!. தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையி…
-
- 1 reply
- 491 views
-
-
மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் மர்ம நபர்களின் நடமாட்டம் உள்ளது – கமல்ஹாசன் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள மையங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகமாகி இருப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து தமிழக தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையின் அருகில் வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மடிக்கனணிகள் மற்றும் மர்ம நபர்களின் நடமாட்டமும் அதிகமாகவுள்ளது. இத்தகைய சம்பவங்கள் தேர்தல் விதி மீறல் மட்டுமல்ல. ஜனநாயகத்திற்கு ஆபத்தானவை. மின்னணு வாக்க…
-
- 1 reply
- 463 views
-
-
பன்னீர் அணியினர் சுறுசுறுப்பு ஆர்.கே.நகர் தொகுதியில், சசிகலா அக்காள் மகன் தினகரனை தோற்கடிக்கும் முனைப்பு டன், பன்னீர்செல்வம் அணியினர், ஓட்டுச் சாவடிக்கு, 14 பேர் என, 'பூத் கமிட்டி' அமைத்து, தேர்தல் பணிகளை சுறுசுறுப்பாக துவக்கி உள்ளனர். ஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வானது, சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என, இரண்டாக பிளவுபட்டுள்ளது. இரு அணியினரும், தங்கள் செல்வாக்கை நிரூபிக்க, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், களம் இறங்குகின்றனர். சசிகலா அணி சார்பில், தினகரன்; பன்னீர்செல்வம் அணி சார்பில், முன்னாள் அமைச்சர் மதுசூதனன் போட்டியிடுகின்றனர். இருவரும், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என, தே…
-
- 0 replies
- 352 views
-
-
கணவரை... வீட்டை விட்டு விரட்டிய தீபா. தெருவுக்கு வந்த குடும்ப பிரச்சனை. குடும்பம் மற்றும் அரசியல் பிரச்சனை காரணமாக தீபா தனது கணவர் மாதவனை வீட்டை விட்டு விரட்டிவிட்டாராம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் மகளான தீபாவை அரசியலுக்கு வருமாறு அதிமுக தொண்டர்கள் பலர் வலியுறுத்தினர். இதையடுத்து சுபயோக சுபதினத்தில் அரசியலுக்கு வந்தார் தீபா. தீபா புதிய அரசியல் கட்சியை துவங்கினார். அதற்கு ஜெ. தீபா பேரவை என்று பெயர் வைக்கப்பட்டது. கட்சியின் செயலாளராக தனது கார் டிரைவர் ராஜாவையும், தலைவராக அவருடைய மனைவி சரண்யாவையும் நியமித்தது தொண்டர்களுக்கும், தீபாவின் கணவர் மாதவனுக்கும் பிடிக்கவில்லை. கட்சியின் முக்கிய பொறுப்பை எதிர்பார்த்து அது கிடைக்காததால…
-
- 1 reply
- 420 views
-
-
‘ஸ்டாலின் vs கனிமொழி!’ - ஜெயிக்கப்போவது யாரு? தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு வருகிற ஜூன் 3-ம் தேதி 94-வது பிறந்தநாள்! உடன்பிறப்புகளுக்குக் கடிதம், அரசியல் அறிக்கை, போராட்டம், பொதுக்கூட்டம்... என இந்திய அரசியலில் ஓய்வின்றி சுழன்றுவந்த கருணாநிதி கடந்த சில மாதங்களாகவே உடல்நலமின்றி முடங்கிப் போயுள்ளார். தொடர்ச்சியான சிகிச்சையின் பலனாக உடல்நலம் தேறிவரும் கருணாநிதியின் இந்த வருடப் பிறந்தநாளை பிரமாண்டமாகக் கொண்டாடும் உற்சாகத்தோடு செயலாற்றி வருகிறார்கள் ஸ்டாலின் உள்ளிட்ட அக்கட்சியின் முன்னணித் தலைவர்கள். ஜூன் 3-ம் தேதி ‘என் உயிரினும் மேலான உடன்பிறப்புக்களே....’ என கரகர காந்தக் குரலில் தன் தலைவன் பேச்சைக் கேட்பதற்காக இப்போதிருந்தே ஏக்கத்தோடு காத்துக்கிடக்…
-
- 0 replies
- 1.3k views
-
-
போயஸ்: ஒரு அதிகாரத் தோட்டத்தின் கதை! வேதா நிலையம், எண்: 81, போயஸ் தோட்டம், சென்னை, 600086. இதுதான், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அதிகாரபூர்வ முகவரி. கடந்த 30 ஆண்டு கால அதிமுகவின் அரசியல் முகவரியும் அதுதான். கடந்த 30 ஆண்டுகாலத் தமிழக அரசியல் சக்கரத்தின் மையப்புள்ளி. சில தருணங்களில் இந்திய அரசியலைத் தீர்மானித்த புள்ளி என்றும் சொல்லலாம். 1967-ல் சென்னையில் மனை வாங்கினார் ஜெயலலிதாவின் தாயும் பிரபல நடிகையுமான சந்தியா. அதனை அவரும் ஜெயலலிதாவும் தங்கள் ரசனைக்கு ஏற்பச் செதுக்கி, பிரம்மாண்ட இல்லமாக்கினர். புதுமனை புகுவிழா நெருங்கும் சமயத்தில், திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார் சந்திய…
-
- 1 reply
- 602 views
-
-
தி.மு.க., பவள விழாவில் அ.தி.மு.க., மும்மூர்த்திகள்! தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினை, அ.தி.மு.க., கூட்டணி, எம்.எல்.ஏ.,க்களான கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகிய மும்மூர்த்திகளும், மூன்று முறை சந்தித்து பேசியுள்ளனர். இந்த மும்மூர்த்திகளும், ஆகஸ்ட்டில் நடக்க உள்ள, 'முரசொலி' நாளிதழ் பவள விழாவில் பங்கேற்று, தி.மு.க., ஆதரவாளர்களாக அணி மாறுவரா என்ற கேள்வி எழுந்துள்ளது. வெற்றி கடந்த, 2016ல் நடந்த, சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், கருணாஸ் தலைமை யிலான முக்குலத்தோர் புலிப்படை கட்சியும், தனியரசு தலைமையிலான கொங்கு இளைஞர் பேரவை கட்சியும், தமிமுன் அன்சாரி த…
-
- 0 replies
- 486 views
-
-
சசிக்கு பணிவிடை செய்த புகாரில் அதிகாரி அனிதா தூக்கியடிப்பு பெங்களூரு:அ.தி.மு.க., சசிகலாவுக்கு உதவிய குற்றச்சாட்டில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரி, அனிதாவும் துாக்கியடிக்கப்பட்டார். சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட, அ.தி.மு.க., சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவரும், பிப்ரவரி, 15ல், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா, பரப்பன அக்ரஹாரா சிறையில் ஆய்வு செய்து அளித்த அறிக்கையில், சிறைத் துறை, டி.ஜி.பி.,யாக இருந்த, சத்யநாரா…
-
- 0 replies
- 268 views
-
-
ஆடி போயி ஆவணி வரட்டும் ஜெயலலிதா காலில் அமைச்சர்கள் விழுந்து வணங்கும் போதெல்லாம் அதனை விமர்சிக்காதவர்கள் யாரும் இல்லை.. ஆனால், அந்த இராணுவ கட்டுப்பாடுதான் அ.தி.மு.க.வை கம்பீரமாக சிதறாமல் வைத்திருந்தது என்பது அவரது மறைவின் பின் அமைச்சர்கள் நடந்து கொள்ளும் முறைமைகளில் தெளிவாக விளங்குகிறது. ஒரு கட்சியிலிருந்து மற்ற கட்சிக்கு மாறுவது போல அ.தி.மு.க.வுக்கு உள்ளேயே எம்.எல்.ஏ.க்கள் அணிமாறுகின்றனர். இதையெல்லாம் தடுத்து கட்சி மீண்டும் நிலையானதாக மாறவேண்டுமெனில் சிறந்த தலைமைத்துவம் ஒன்றின் தேவைப்பாடு தவிர்க்க முடியாததாக உள்ளது. ஜெயலலிதா என்ற ஆளுமையின் மறைவு தமிழகத்துக்கு மட்டும் வெற்றிடத்தை ஏற்பட…
-
- 0 replies
- 634 views
-
-
திருவண்ணாமலை வேளாண் கிராமத்தில் புயலாக வீசும் சிப்காட் தொழிற்பேட்டை யோசனை அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் 2 ஜனவரி 2022, 03:54 GMT படக்குறிப்பு, சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க தங்கள், வீடுகள், நிலங்கள் கையகப்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தி பாலியப்பட்டு கிராமத்தில் போராட்டம் நடத்தும் ஊர் மக்கள். திருவண்ணாமலை அருகே, நெடுஞ்சாலையில் இருந்து விலகி, இரண்டு மலைகளுக்கு இடையே அமைந்துள்ள பாலியப்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு அரசு சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க உள்ளதாகவும், இதற்காக பல நூறு ஏக்கர் வேளாண் நிலங்களும், ஏராளமான வீடுகளும் கையகப்படுத்தப்பட உள்ளதாகவும் கிடைத்த தகவலை அடுத்…
-
- 1 reply
- 784 views
- 1 follower
-
-
திருப்புமுனை நாயகன் வனவாசத்தில் இருந்து திமுக மீண்டு ஆட்சியை கைப்பற்றிய 89 தேர்தல்தான் கே.என்.நேருவை மக்களுக்கு அடையாளம் காட்டியது. அத்தேர்தலில் திமுக ‘இளைஞர்களுக்கு வாய்ப்பு’ என்கிற கோஷத்தை முன்வைத்து, வேட்பாளர்களை தேர்வு செய்தது. நாற்பது வயதுகூட ஆகாத நேரு தேர்தலில் வென்று அமைச்சரும் ஆனார். இன்று திமுகவின் முன்னணித் தலைவர்களாக இருக்கும் பொன்முடி போன்றவர்கள் அப்போது இளைஞர்களாக இருந்து வாய்ப்பு பெற்றவர்கள்தான். வழக்கமாக ஜீப்பில் வந்து வாக்கு கேட்கும் பண்ணையார்களை கண்டு அலுத்துப்போன லால்குடி மக்கள், என்ஃபீல்ட் புல்லட்டில் புயலென வந்த இளைஞரை தேர்வு செய்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆரம்பத்திலிருந்தே நேரு களத்தில் இறங்கி பணியாற்றக்கூடியவர். தொண்டர்களின் உணர்வுகளை துல…
-
- 1 reply
- 823 views
-
-
ராமர் பாலத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் திட்டத்தை எக் காலத்திலும் கொண்டு வரக்கூடாது – அண்ணாமலை ராமர் பாலத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் திட்டத்தை எந்தக் காலத்திலும் கொண்டுவரக் கூடாது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுவே சேது சமுத்திர திட்டத்தில் பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அண்ணாமலை நல்லூரில் நடைபெற்ற கம்பன் கழக விழாவில் பங்கேற்ற பின்னர் அங்கு உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 1983ஆம் ஆண்டிற்கு பிறகு நிறுத்தப்பட்ட இந்தியா – இலங்கை கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.…
-
- 0 replies
- 395 views
-
-
H3N2 வைரஸ் ஆபத்தானதா? தொற்று பரவாமல் குழந்தைகளை காப்பது எப்படி? கட்டுரை தகவல் எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம் பதவி,பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நாடு முழுவதும் அண்மைக்காலமாக வேகமாக பரவி வரும் H3N2 என்ற புதிய வைரஸ் குழந்தைகள், பெரியவர்கள், வயதானவர்கள் என்று அனைத்து தரப்பினரையும் பாதிக்கிறது. இந்த வைரஸ் ஆபத்தானதா? அதுகுறித்த அச்சம் தேவையா? வைரஸ் பாதிப்புக்கு ஆளாகாமல் தற்காத்துக் கொள்வது எப்படி? வைரஸ் தொற்று வந்தால் என்ன செய்ய வேண்டும்? என்பன குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) விரிவான விளக்கம் அளித்துள்ளது. …
-
- 1 reply
- 318 views
- 1 follower
-
-
05 JUL, 2023 | 11:35 AM செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், அகரம் கிராமத்தில், தர்மபுரி அரசு கலைக் கல்லூரி பேராசிரியரும் தொன்மம் வரலாற்று ஆய்வு அறக்கட்டளையின் தலைவரும், தொல்லியல் ஆய்வாளருமான சி.சந்திரசேகர் மற்றும் இந்து மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் ரமேஷ் ஆகியோர் தொடர்ச்சியான கள ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு நடந்த ஆய்வு ஒன்றில் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகிஷாசுர மர்த்தினி நடுகல்லை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் சந்திரசேகர் கூறியதாவது: தமிழகத்தில் அதிக அளவில் கிடைத்துள்ள பலகைகல் சிற்பங்களில் பெரிதும் காணப்படும் உருவம் துர்க்கை அம்மன் ஆகும். இது சங்க காலத்தில் இருந்து, பல்லவர் கால…
-
- 0 replies
- 209 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,IMD 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மதுரையில் வீடு ஒன்று இடிந்து விழுந்திருக்கிறது. ஈரோட்டில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதால் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஈரோட்டிலும், கன்னியாகுமரியிலும் 12 செ.மீ மழை மாநிலம் முழுவதும் பெய்துவரும் மழையின் காரணமாக, கட்டடங்கள் இடிந்து விழுவது, வீடுகளுக்குள் தண்ணீர் புகுவது போன்ற சேதங்கள் ஏற்பட்டுள்ளன. தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கன மழையின் காரணமாக மேல கடையநல…
-
- 0 replies
- 567 views
- 1 follower
-
-
இறந்தால்தான் விருதா? எம்.எஸ்.வி.யை மறந்துபோன மத்திய, மாநில அரசுகள்! ‘மெட்டுத் தேடி தவிக்குது ஒரு பாட்டு! இந்த பாட்டுக்குள்ளே துடிக்குது ஒரு மெட்டு!’ - என்ற பாடல் வரிகளைப் பாடிய மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இன்று உயிரோடு இல்லை. ஆனால், அவருடைய இசை இன்னும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. 87 வயதான எம்.எஸ்.வி, இந்தியத் திரையுலகமே போற்றும், மூத்த இசையமைப்பாளர். ‘தனியாக 500 திரைப்படங்களுக்கு மேலாகவும், டி.கே.ராமமூர்த்தியுடன் இணைந்து 700 திரைப்படங்களுக்கு மேலாகவும் இசையமைத்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருக்கு தன் பாடல்களின் மூலமாக, ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தி தந்த பெருமைக்குரியவர். பல ஆயிரக்கணக்கான பாடல்களை உருவாக்கி, தமிழ் திரையுலகிலும், மற்ற மொழி திரையுலகிலும…
-
- 2 replies
- 459 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 10 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 30 ஏப்ரல் 2024 வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தின் கட்டுமானப் பணிகள் நிதுத்தி வைக்கப்பட்டுள்ளது என - தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. வள்ளலாரின் தத்துவமான பெருவெளி நிலத்துக்குள் எந்த கட்டுமானப் பணிகளும் நடைபெறக் கூடாது என அரசு மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு இந்த வழக்கை விசாரித்தனர். அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி எஸ் ராமன், வள்ளலார் சர்வதேச மையத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப…
-
- 2 replies
- 781 views
- 1 follower
-
-
தமிழ்நாட்டில் உள்ள பொன்னாக்குடி என்னும் ஊரில் தகவல் கொடுப்பவர்களால் 50க்கும் மேற்பட்ட இளைஞர்களின் திருமணம் தடைப்பட்டிருக்குதாம்.........🫣. அந்த இளைஞர்கள் தகவல் கொடுப்பவர்களுக்கு எதிராக அந்த ஊரில் ஒட்டியிருக்கும் போஸ்டர் தான் மேலேயுள்ளது. ஆயிரம் பொய்கள் சொல்லி என்றாலும் ஒரு திருமணத்தை நடத்தி வை என்று சொல்வார்கள்....... இவர்கள் புறம் சொல்லி திருமணத்தை நிற்பாட்டுகின்றார்கள். https://minnambalam.com/archives-trending-news-in-tamil/local-informers-to-prevent-marriages-90s-kids-are-shocked/
-
- 1 reply
- 435 views
- 1 follower
-
-
அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மு.க ஸ்டாலின்: 4,600 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு! அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கும் வகையிலும் , தொழில் முதலீடுகளை மேம்படுத்தும் விதமாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது சான்பிரான்சிஸ்கோவில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் 1,300 கோடி ரூபாய் முதலீட்டில் 4,600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1398059
-
- 0 replies
- 195 views
-
-
'சீமான் துப்பாக்கி படம்' சூட்டிங் போட்டோ-பிரபாகரனை வைத்து சூதாட்டம்- ஈழ போட்டோகிராபர் அமரதாஸ் தாக்கு Mathivanan MaranUpdated: Tuesday, January 28, 2025, 15:20 [IST] சென்னை: ஈழத்தில் பிரபாகரன் தமக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்தார்; வகை வகையான அசைவ உணவுகளை பிரபாகரன் மனைவி மதிவதினி சமைத்துக் கொடுத்தார்; தமது பாதுகாப்புக்கு மெய்ப்பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாட்டு மேடைகளில் பேசிவருவது அத்தனையும் கட்டுக்கதை; திரிபுவாதம்- பிறருக்கு நடந்தவற்றை தனக்கு நடந்ததாக திரித்து பேசி வருகிறார்; அத்துடன் பிரபாகரனை முன்வைத்து அரசியல் சூதாட்டம் நடத்துகிறார் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புகைப்படக் கலை…
-
-
- 30 replies
- 2.5k views
- 2 followers
-
-
13 APR, 2025 | 12:30 PM தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரையில் 61 நாட்கள் வருடாந்த மீன்பிடி தடை அமுலுக்கு வருகிறது. அதன்படி செவ்வாய்க்கிழமை (15) நள்ளிரவு முதல் இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி படகுகள் குறித்த இடங்களில் மீன்பிடிக்க இயலாது. இது ஆயிரக் கணக்கான இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி படகுகளை பாதிக்கக்கூடும். 1983 ஆம் ஆண்டின் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்பட்ட இந்த பருவக்கால தடையானது, கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலத்தை பாதுகாப்பாய் மாற்றுவதற்கும் முட்டையிடும் காலத்தில் மீன் வளங்களை பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மீன்பிடித் தடை அமுல் காலத்தில் ராமேஷ்வரத்தில் மட்டும் சுமார் 700 இற்கும் அதிகமான இயந்திரமயமாக்கப்பட்ட படகுக…
-
- 0 replies
- 267 views
- 1 follower
-
-
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதால் தடை விதிப்பதாக மயோனைஸ் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முட்டையின் வெள்ளைக் கருவுடன், வெஜிடபிள் ஆயில், வினிகர் சேர்த்து மயோனைஸ் தயாரிக்கப்படுகிறது. சைவ மற்றும் அசைவ உணவுகளைத் தொட்டு சாப்பிடுவதற்கு இந்த மயோனைஸ் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. சான்ட்விச், ஷவர்மா மற்றும் பர்கர் போன்ற உணவுப் பொருட்களில் மயோனைஸ் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிகம் விரும்பி உட்கொள்ளும் உணவுப் பொருளாக மயோனைஸ் இருந்து வருகிறது இந்நிலையில், மயோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ள தடை உத்தரவில், சா…
-
- 1 reply
- 438 views
- 1 follower
-
-
' விஜயகாந்த் தலைவர் என்றால், பிரபாகரன்?' -வைகோ கூடாரத்தின் அடுத்த விக்கெட் ம.தி.மு.கவின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் வேளச்சேரி மணிமாறன், தன்னுடைய விலகல் கடிதத்தை வைகோவிடம் கொடுத்துவிட்டார். விரைவில், ' அவர் தி.மு.கவில் ஐக்கியமாக இருக்கிறார்' என்ற தகவலால் ம.தி.மு.க வட்டாரமே அதிர்ந்து போய்க் கிடக்கிறது. ' சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியோடு, வைகோ இணைந்ததை நாங்கள் விரும்பவில்லை. இந்தக் கூட்டணி வெல்லும் என்று எந்த நம்பிக்கையில் வைகோ சென்றார்? பிரபாகரனை தலைவர் என்று சொல்லிக் கொண்டவர், விஜயகாந்தை தலைவராக ஏற்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதன்பிறகும் ம.தி.மு.கவில் நீடிப்பதை விரும்பவில்லை' என்கின்றனர் மணிமாறனின் ஆதரவாளர்கள். ஆனால…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக அரசு புதிய சட்டமூலம்! இந்தி திணிப்பை தடை செய்யும் நோக்கில், தமிழக அரசு இன்று சட்டமன்றத்தில் ஒரு சட்டமூலத்தை தாக்கல் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்மொழியப்பட்ட சட்டம் குறித்து விவாதிக்க சட்ட வல்லுநர்களுடன் நேற்று இரவு அவசர கூட்டம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த சட்டமூலம் தமிழ்நாடு முழுவதும் இந்தி விளம்பரப் பலகைகள், திரைப்படங்கள் மற்றும் பாடல்களைத் தடை செய்ய முயல்கிறது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சட்டமூலம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மூத்த திரவிர முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், “அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம். அதை நாங்கள் கடைப்பிடிப்போம், இந்தி …
-
- 0 replies
- 157 views
-