Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சென்னை: 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் வாடும் முஸ்லீம்களை விடுதலை செய்யக்கோரி இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் அப்துல் ரஹிம் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ''நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்திய தேசிய லீக் கட்சி நன்றி தெரிவித்துக் கொள்கிறது. அதுபோல்,கோவை குண்டுவெடிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் வாடும் முஸ்லீம்களையும் விடுதலை செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 24 ஆம் தேதி, விருந்தினர் மாளிகை முன்பு நான் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க உள்ளேன்'' என தெரிவித்தார். http://news.vikatan.com/article.php?modu…

  2. இந்தியாவின் 72ஆவது குடியரசு தின விழா இன்று! இந்தியாவின் 72ஆவது குடியரசு தின விழா மக்கள் அனைவராலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் 72ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தேசியக்கொடி ஏற்றி ஆரம்பித்து வைத்ததுடன் அணிவகுப்பையும் ஏற்றுக்கொண்டார். தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா காமராஜர் சாலை காந்தி சிலை அருகே குடியரசு தின விழா நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் முப்படை வீரர்கள், பொலிஸார் மற்றும் பல்வேறு பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதன்போது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றார். …

  3. ஜெயலலிதா சவப்பெட்டி மாதிரியை வைத்து ஓ.பி.எஸ் அணியினர் நூதன பிரசாரம்! ஆர்.கே.நகரில் வரும் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் களத்தில் இருக்கும் பிரதான வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர். இந்நிலையில், ஓ.பி.எஸ் அணி சார்பில் திறந்த நிலை வாகனம் மூலம் மாஃபா பாண்டியராஜன், மதுசூதனனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அவரது வாகனத்தின் முன்பு, ஜெயலலிதா இறந்த பின்னர் ராஜாஜி ஹாலில் சவப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது போலவே, ஒரு மாதிரி சவப்பெட்டியை பொருத்தி அதில் ஜெயலலிதா பொம்மையை செய்து வைத்து, அவர் நூதன முறையில் பிரசாரம் மேற்கொண்டார். ஏற்கெனவே, ஓ.பி.எஸ் அணியினர் 'ஜெய…

  4. ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணையையொட்டி, நேற்று சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி வீடு அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணை பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைப்புச்செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் திரளான நிர்வாகிகளும் கருணாநிதி இல்லத்தில் குவிந்திருந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் 12.25 மணியளவில் ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி தீர்ப்பு வழங்கியதையடுத்து கருணாநிதி இல்லத்தில் குவிந்திருந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் வெளியேறினர். மதியம் 1.30 மணியளவில் கருணாநிதி இல்லத்தில் இருந்து மு.க.ஸ்டாலின் வெளியே வந்தார். அப்போது அவரிடம், ‘ஜெயலலிதா ஜாமீனில் விடுவிக்கப்பட்டது தொடர்பாக …

  5. பாஜக மூத்த தலைவர்களில் ஒருவராகிய சுப்ரமணிய சுவாமி தனது ருவிட்டர் பக்கத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘’தூக்கி எறியப்படுவதற்குள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நீங்களாக வெளியேறி விடுங்கள்’’ என்று வைகோவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை ஆளும் அரசிலிருந்து மதிமுக கட்சி விலக வேண்டும் என கட்சித் தொண்டர்கள் எற்கனவே கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது http://onlineuthayan.com/News_More.php?id=627623685529883102

  6. சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கம்! SelvamMay 31, 2023 21:17PM ஷேர் செய்ய : நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட அக்கட்சியின் 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார்கள். அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடப்பு அரசியல் நிகழ்வுகள் மற்றும் சமூக பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இந்தநிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அக்கட்சியின் ஐடி விங் பக்கம், இளைஞர் பாசறை மாநில செயலாளர் இடும்பாவனம் கார்த்திக், செய்திப்பிரிவு செயலாளர…

  7. காப்புரிமை FACEBOOK / J K RITHEESH Image caption ஜே.கே. ரித்தீஷ் நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.கே. ரித்தீஷ் காலமானார். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், போது மாரடைப்பு ஏற்பட்டு, உயிரிழந்தார். ராமநாதபுரம் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக ஜே.கே. ரித்தீஷ் தற்போது பிரச்சாரங்களை மேற்கொண்டுவந்தார். சனிக்கிழமையன்று வீட்டிலிருந்தபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து அவர் உயிரிழந்தார். 1973ல் இலங்கையின் கண்டியில் பிறந்த ரித்த…

  8. திமுக முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி, உட்பட மூவர் வெட்டிப் படுகொலை... ஹால், பெட்ரூம், கிச்சன் என ஒவ்வொரு ரூமிலும் ஒவ்வொரு கொலை விழுந்து, திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரியின் வீடே ரத்த வெள்ளத்தில் கிடந்தது. கொடுக்கல் வாங்கல் பிரச்சனையே உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை செய்யப்பட்டதற்கு பின்னணி காரணம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது சம்பந்தமாக 4 ஆண்கள், 3 பெண்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணையையும் நடத்தி வருகின்றனர். 1996-ம் ஆண்டு சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று மேயரானார் உமா மகேஸ்வரி. மேயராக இருந்தபோது உமா மகேஸ்வரியின் செயல்பாடுகளை எத்தனையோ முறை மனதார பாராட்டியவர் மறைந்த கருணாநிதி. கட்சி இவரது செயல்பாடுகளுக்கு காத்து கிடந்தாலும் குடும்ப சூழல் காரணம…

  9. படக்குறிப்பு, ஊட்டி வெலிங்டன் ராணுவ மையத்தில் கட்டபொம்மன் சிலை கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 16 அக்டோபர் 2023 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் (கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த கட்டுரை மீண்டும் பகிரப்படுகிறது) இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என அழைக்கப்படும் 1857 சிப்பாய் கலகத்திற்கு பல ஆண்டுகள் முன்பாகவே தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டவர்களில் முதன்மையானவர் வீரபாண்டிய கட்டபொம்மன். தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த மாலிக்கபூர், 612 யானைகளையும், 20,000 குதிரைகளையும், 96000 மணங்கு பொன்னும், முத்தும், அணிகலன்களும் அடங்கிய பெ…

  10. தேசிய அளவில் 3-வது அணி அமைப்பது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட மாநிலக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசுவேன் என்று கர்நாடகா முன்னாள் முதல்வரும் கர்நாடக ஜனதா கட்சியின் தலைவருமான எதியூரப்பா தெரிவித்துள்ளார். பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலங்களின் நலனை பாதுகாக்க வேண்டுமானால், வலுவான மாநில கட்சிகள் அவசியம். தேசிய அளவிலும் மாநிலக்கட்சிக்கட்சிகளுக்கு முக்கியத்துவம் கிடைத்தால்மட்டுமே மாநில நலன்களை பாதுகாக்க முடியும். மாநிலக்கட்சிகளை வலுப்படுத்த வேண்டிய வரலாற்று தேவை மலர்ந்து வருகிறது. தேசிய அளவில் 3-ஆவது அணி ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும். தமிழகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், ஒடிசா, மேற்குவங்கம், பஞ்சாப், உத்திரபிரதேசம் உ…

    • 3 replies
    • 993 views
  11. ஜெயலலிதாவிற்கு பிசியோதெரபி நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை உடல்நலக் குறைவால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் திகதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 29வது நாளாக சிகிச்சைப் பெற்று வரும் ஜெயலலிதாவிற்கு அப்பல்லோ மருத்துவர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தவிர, லண்டன் மருத்துவர் ரிச்சர்டு ஜான் பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ்நாய…

  12. 'நெட்டிசன்'களிடம் வறுபடும் பள்ளிக்கல்வி அமைச்சர் கோவை: 'டிவி' கேமராமேன்களுடன், மாணவியர் பொதுத் தேர்வு எழுதும் அரங்குக்குள் சென்ற, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனை, 'நெட்டிசன்'கள் வறுத்தெடுக்கின்றனர். தமிழகம் முழுக்க, மார்ச் 2ல், பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்கியது. சென்னை, எழும்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ் முதல் தாள் தேர்வு பணிகளை ஆய்வு செய்ய, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், அப்போதைய செயலர் சபிதா ஆகிய இருவரும் சென்றனர். கடும் விமர்சனங்கள் கூடவே, அனைத்து, 'டிவி' கேமராமேன்களும் அழைத்துச்செல்லப்பட்டனர். தேர்வு அ…

  13. திமுக பொதுச்செயலாளர் க அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி திமுக வின் பொதுச்செயலாளரும் கழகத்தின் மூத்த உறுப்பினருமான க அன்பழகன் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீபகாலமாக வயது மூப்புக் காரணமாக சில உடல் நலப்பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார். அதனால் பொது இடங்களுக்கோ அல்லது அரசியல் நிகழ்வுகளுக்கோ வருவதைக் குறைத்துக் கொண்டார். கடைசியாக கலைஞர் சிலைதிறப்பு விழாவில் கல்ந்துகொண்டார். அதன் பின்னான அவரது பிறந்தநாள் விழாவில் கூட அறிவாலயம் வந்து தொண்டர்களை சந்திக்கவில்லை. 96 வயதாகும் அவருக்கு நெஞ்சில் தொற்றுப் பிரச்சனைகள் இருப்பதால் அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இது குறித்து திமுக …

  14. ராமேஸ்வரம் அருகே கடல்பாசி எடுக்கச் சென்ற பெண் கூட்டுப் பாலியல் வல்லுறவு: மக்கள் போராட்டம் 25 மே 2022, 06:32 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, ஊர்மக்கள் போராட்டம் கடற்பாசி சேகரிக்கச் சென்ற மீனவப் பெண்ணை வடமாநில இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, பின் எரித்துக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்படும் சம்பவம் ராமேஸ்வரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், விரைவான நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள வடகாடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வடகாடு கடல் பகுதியில் க…

  15. "100 மடங்கு வேகத்துடன் போராடுவோம்".... நெடுவாசல் மக்களை இதை விட கேவலப்படுத்த முடியாது! சென்னை: எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தற்போதைய போராட்டத்தை விட 100 மடங்கு வேகத்துடன் போராடுவோம் என்று நெடுவாசல் மக்கள் எச்சரித்த நிலையிலும், அதைப் புறம் தள்ளும் வகையில் மத்திய அரசு நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்ட ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திடவுள்ளது. 22 நாட்கள் மிகப் பெரிய வீரியத்துடன் நெடுவாசல் மக்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராடி வந்தனர். ஜல்லிக்கட்டுக்காக வீரத்துடன் போராடியது போலவே விவசாயிகள், கிராமத்தினரின் இந்தப் போராட்டமும் மிகப் பெரிய ஆதரவைப் பெற்று நடந்தது. கடைசியில் பொன். ராதாகிருஷ்ணனை வைத்து அந்தப் போராட்டத்தைக் கலைத்தது மத்திய அரசு. மத…

  16. தமிழ் எழுத்துகளால் வள்ளுவர் படம்: ஓவியரைப் பாராட்டிய முதல்வர் மின்னம்பலம்2021-07-22 தமிழ் எழுத்துகளால் திருவள்ளுவரின் ஓவியத்தை வரைந்த ஓவியர் கணேஷை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். ஒவ்வொரு மதத்துக்கும் தனித்தன்மை வாய்ந்த புத்தகம் இருந்தாலும், எந்த மதத்தையும் சாராமல் அனைவருக்கும் பொதுவான ஒரு நூல் என்றால், அது உலக பொதுமறையான திருக்குறள்தான். அந்த நூலை உலகுக்குத் தந்தவர் திருவள்ளுவர். திமுக தலைமையிலான அரசு எப்போதுமே திருவள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் முன்னுரிமை அளிக்கும். இந்த நிலையில், ஓவியர் கணேஷ் என்பவர் தமிழி எழுத்து, தமிழ் வட்டெழுத்து, தமிழ் எழுத்து என கி.பி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இன்றைய தமிழ் எழுத்துகள் வரையுள்ள 741 எ…

  17. சென்னை ஏழு தமிழர்களும் இன்னும் வெளியே வரவில்லை. அவர்கள் குற்றமற்றவர்கள் என்று எல்லோரும் பேசிக்கொண்டிருக்கின்ற நேரத்தில், அதை அப்படியே தலைகீழாகப் புரட்டிப்போட சீமான் பேச்சு பயன்படும் என தி.க தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். கடந்த 13-ம் தேதி அன்று விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சீமான், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்துப் பேசினார். "ராஜீவ் காந்தி இந்திய அமைதிப்படை என்கிற அநியாயப் படையை அனுப்பி என் இன மக்களைக் கொன்று குவித்தார். என் இனத்தின் எதிரியான ராஜீவை தமிழர் தாய் மண்ணில் கொன்று குவித்தது வரலாறு. ஒரு காலம் வரும். வரலாறு திருப்பி எழுதப்படும்'' என்று பேசினார். விடுதலைப் புலிகள்தான் ராஜீவ் காந்தியைக் கொ…

  18. ஆணவ படுகொலை: பெற்ற தாயையும், மகனையும் கொடூரமாக கொன்ற தந்தை! monishaApr 15, 2023 18:55PM கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தந்தையே மகனை கொடூரமாக வெட்டி ஆணவக் கொலை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி (45). இவர் குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் இவருடைய மகன் சுபாஷ் (25) திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்தபோது, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த அனுஷா என்பவரை காதலித்துள்ளார். ஆனால், சுபாஷ் மற்றும் அனுஷா இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்…

  19. மக்களவைத் தேர்தலில் மோடி அலையை கடந்தமுறை அதிமுக தடுத்து நிறுத்தியதுபோல் இம்முறை திமுக தடுத்து நிறுத்தியுள்ளது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி அலை இந்தியா முழுவதும் வீசியது. மோடி அலையால் வெல்வோம் என மதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்டோர் மெகா கூட்டணி அமைத்தனர். மறுபுறம் திமுக கூட்டணி தனியாகவும், அதிமுக தனியாகவும் இயங்கியது. அந்தத் தேர்தலில் மோடி அலை இங்கு ஒன்றும் செய்யாது, மோடி அல்ல இந்த லேடி என ஜெயலலிதா கர்ஜித்தார். சொன்னதைச் செய்தும் காட்டினார். இந்தியாவெங்கும் வீசிய மோடி அலை தமிழகத்தில் எழும்பவே இல்லை. அதிமுக 37 தொகுதிகளை வென்றது. பாஜக கூட்டணிக்கு 2 தொகுதிகள் கிடைத்தன. இம்முறையும் அதேபோன்று மெகா கூட்டணி அதைவிட வலுவாக அமைந்தது. அதிமுக, பாமக, தேமுதிக என வலுவான…

    • 3 replies
    • 1.2k views
  20. முத்தையா முரளிதரனின் நிறுவனத்திற்கு காஷ்மீரில் இலவசமாக நிலம் வழங்கப்பட்ட விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முத்தையா முரளிதரன் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தவர். 2010 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர், தற்போது தொழிலில் கவனம் செலுத்தி வருகிறார். முத்தையா முரளிதரன், Ceylon Beverages என்ற குளிர்பான நிறுவனத்தை இலங்கையில் தொடங்கி நடத்தி வருகிறார். குளிர்பான நிறுவனம் இந்த நிறுவனத்தை இந்தியாவில் விரிவுபடுத்தும் வகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தில், ரூ.1,600 கோடி முதலீட்டில் குளிர்பானம் மற்றும் அலுமினியம் கேன் தயாரிப்பு …

    • 3 replies
    • 461 views
  21. : மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை முதல்வர் ஜெயலலிதா இன்று திடீரென சந்தித்துப் பேசினார். தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி வைகோ நடைபயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று கோவளத்தில் தொடங்கிய பயணம் இரவு திருப்போரூரில் முடிவடைந்தது. இன்று காலையில் திருப்போரூரில் பயணத்தை தொடங்கிய வைகோ சிறுதாவூர் வழியாக மாமல்லபுரம் சென்று கொண்டிருந்தார். அப்போது முதல்வர் ஜெயலலிதா தனது சிறுதாவூர் பங்களாவிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். நடைபயணத்தில் ஈடுபட்டிருந்த வைகோவை பார்த்த ஜெயலலிதா, உடனடியாக காரை நிறுத்த உத்தரவிட்டார். பின்னர் காரிலிருந்து இறங்கி வைகோவிடம் சென்று பேசினார். அப்போது, மதுவினால் ஏற்படும் தீமைகளைப் பற்றியும், மதுவிலக்கு அமல்படுத்தவேண்டியதன் அவசியம் பற்றியும் முதல…

    • 3 replies
    • 1.4k views
  22. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு! ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அ.தி.மு.க மூன்று அணிகளாக பிரிந்து கிடக்கிறது. அ.தி.மு.க-விலிருந்து பிரிந்துசென்ற ஓ.பன்னீர்செல்வம் அணியை இணைக்கும் முயற்சியில் முதல்வர் பழனிசாமி அணியினர் தீவிரம் காட்டிவருகின்றனர். அதே நேரத்தில் அணியில் இணைவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர், சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்; ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற இரண்டு முக்கிய கோரிக்கைகளை வைத்தனர். இதனிடையே, துணைப் பொதுச்செயலாளர் தினகரனை நியமித்தது செல்லாது என்று முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே நேரத்தில…

  23. தமிழ்நாடு எல்லைக்குள் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்: தீர்வு என்ன ? கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாடு-கேரள எல்லைப் பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதை எதிர்த்து, சமீபத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து ஒரு வழக்கை எடுத்துக்கொண்டது. இந்த வழக்கில், இரண்டு மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள 17 மாவட்டங்களில் கழிவுகள் எப்படி கையாளுப்படுகின்றன என்பது பற்றிய விரிவாவான அறிக்கையை மாவட்ட ஆட்சியர்கள் அளிக்கவேண்டும் என உ…

  24. விடுதலைப்புலிகள் ஒரு ‘விடுதலை இயக்கம்’ என்பதை ஏற்றுக் கொண்ட அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம்- பழ. நெடுமாறன் 35 Views ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் இலங்கை அரசாங்கத்தைக் கண்டித்தும் அமெரிக்க காங்கிரஸில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறித்து உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் எனக் கூறி வந்த அமெரிக்கா, இப்போது அதை விடுதலை இயக்கம் என குறிப்பிட்டிருப்பதையும் பழ. நெடுமாறன் சுட்டிக் காட்டியுள்ளார். இது தொடர்பாக பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கத் தேர்தலுக்குப் பிறகு முதன்மு…

    • 3 replies
    • 890 views
  25. வேலூர்: ஈழத்தமிழர் செந்தூரனுக்கு வேலூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து செங்கல்பட்டு முகாமில் உள்ள தனது குடும்பத்தினரை பார்க்க சென்றார். கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதி வேலூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட ஈழத்தமிழர் செந்தூரன், தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தார். தொடர்ந்து 22 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த செந்தூரனுக்கு கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால், செந்தூரனை சிறைத்துறை அதிகாரிகள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பார்க்க வந்த அவரது மனைவி மங்கையர்க்கரசியை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. அதையடுத்து மங்கையர்கரசி தனது கணவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.