Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இந்திய அரசின் பொது கொள்கைக் குழுவான 'நிதி ஆயோக்' (NITI AYOG), சமீபத்தில் நீடித்த நிலைத்த வளர்ச்சியை 2030ஆம் ஆண்டுக்குள் அடையவேண்டும் என்ற இலக்கில் வெற்றிகரமாகச் செயல்படும் நகரங்களைப் பட்டியலிட்டது. அந்தப் பட்டியலில் இந்தியளவில் கேரளா முதலிடத்தையும் தமிழ்நாடு இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. நீடித்த நிலைத்த வளர்ச்சியில் கேரளா, தமிழ்நாட்டைத் தொடர்ந்து இமாச்சல பிரதேசம், ஆந்திர பிரதேசம் ஆகியவை முறையே மூன்று மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்துள்ளன. நீடித்த நிலைத்த வளர்ச்சியில் இந்திய மாநிலங்களும் நகரங்களும் என்ன நிலையில் உள்ளன, கவனம் செலுத்த வேண்டியது எங்கே என்பன போன்றவற்றை உள்ளடக்கி இந்தப் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 75 மதிப்பெண்களோட…

  2. தலைவர் ஆகி நின்ற தத்துவம் நம்மை வழி நடத்தட்டும்!-சீமான் சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 67-வது பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் பிரதான ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தலைவர் ஆகி நின்ற தத்துவம் நம்மை வழி நடத்தட்டும்! தமிழீழம் என்கின்ற மாவீரர்களின் புனிதக்கனவு ஈடேறட்டும்! என்று அவர் தனது நீண்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அறிக்கையின் சாரம்சம்: ‘உலக வரலாறு என்பதே சில தனி மனிதர்களின் வரலாறுதான்’ என்கிறார் இரசியப்புரட்சியாளர் லெனின். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடியான தமிழர் என்கிற தேசிய இனத்தின் வரலாறு என்பது ஒப்பாரும் மிக்காரும் இல்லாது மறத்தின்வழி நின்ற…

  3. சென்னை வெள்ளம்: நிரம்பி வழியும் ஏரிகள் - 12ஆம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்பு - என்ன காரணம்? ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் 8 நவம்பர் 2021, 08:18 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சென்னையில் வழக்கத்துக்கு மாறாக கனமழை பெய்து வருவதால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அங்குள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. வரும் 12ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், `காலநிலை மாறுபாடு காரணமாக ஆறு ஆண்டுகளுக்குள் அதீத கனமழையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வரும் காலங்களில…

  4. நீட் தேர்வு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநரிடம் முக்கிய கோரிக்கை நீட் தேர்வு தொடர்பான சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கோரியுள்ளார். சென்னை- கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தபோதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு கோரியுள்ளார். இந்த நீட் தேர்வு, ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதா என்பதை ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு, பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டு தனது பரிந்துரைகளை தமிழக அரசிற்கு வழங்கியது. அதனடிப்படையில் கடந்த செப்டெம்பரில் தமிழக சட்டப்பேரவையில் ‘தமிழ்நாடு இளநிலை மருத்து…

  5. மண்டபம் முகாமில் உள்ள இலங்கை தமிழர்களால் பிரபாகரனின் 67வது பிறந்தநாள் கொண்டாட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 67 ஆவது பிறந்த நாளையொட்டி மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள மக்கள் நேற்று (26) கேக் வெட்டி கொண்டாடினர். விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாளை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழ் மக்கள் ஆண்டு தோறும் கொண்டாடுவது வழக்கம். அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் பிரபாகரனின் 67வது பிறந்த நாளை மண்டபம் முகாமில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கேக் வெட்டி கொண்டாடினர். மண்டபம் இலங்கை தமிழர் முகாம் வளாகத்தில் தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் என்ற புகைப்படத்தை அச்சிட்டு கேக் வெட்டி குழந்த…

  6. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் 14417 உதவி எண் நிலை என்ன? பாலியல் புகார்கள் கையாளப்படுவது எப்படி? பாம்பன் மு.பிரசாந்த் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பள்ளிக் குழந்தைகள் தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அரசு சார்பில் இயங்கி வரும் புகார் மையத்தில் குழந்தைகளின் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூட ஆளில்லாமல் இருப்பதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அரசு தரப்பு சொல்வதும், செயல்பாட்டாளர்கள் முன்வைக்கும் தீர்வுகள…

  7. நீலகிரி: இன்னசென்ட் திவ்யா ஐ.ஏ.எஸ் இடமாற்றம் - அரசியலாக்கப்படுவதன் பின்னணி என்ன? ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெ. இன்னசென்ட் திவ்யா, இடமாற்றம் செய்யப்பட்டாலும் அதுகுறித்த விவாதம் தொடர்ந்தபடியே உள்ளது. `யானைகளின் வழித்தடங்களை மீட்பது தொடர்பாக நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்டார். அவரது இடமாற்றத்தை அரசியலாக்க வேண்டியதில்லை' என்கின்றனர் சூழல் ஆர்வலர்கள். நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவராக கடந்த 2017ஆம் ஆண்டு இன்னசென்ட் திவ்யா நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னதாக முதல்வராக இருந்த ஜெயல…

  8. ஜெயலலிதாவின் `வேதா இல்லம்' யாருக்கு சொந்தம்? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES `மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது' என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான வீடு ஒன்று உள்ளது. இந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு கடந்த அ.தி.மு.க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இதற்காக ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் உள்ள பொருள்களைக் கணக்கிடும் பணிகள் நடந்தன. தொடர்ந்து சட்டம் இயற்றப்பட்டு வேதா இல்லத்தையும் அங்குள்ள அசையும் சொத்துகள…

  9. போலீஸ் எஸ்.ஐ. வெட்டிக் கொலை: ஆடு திருடும் கும்பல் காரணமா? 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, பூமிநாதன் திருச்சி அருகே, ஆடு திருடும் கும்பல் என்று சந்தேகிக்கப்படுவோரை துரத்திச் சென்றபோது சிறப்பு போலீஸ் எஸ்.ஐ. பூமிநாதன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்கிறது போலீஸ். திருச்சி மாவட்டம், நவல்பட்டு சோழமாநகர் பகுதியில் வசித்து வந்தவர் பூமிநாதன். இவருக்கு கவிதா என்ற மனைவியும், குகன் என்ற மகனும் உள்ளனர். பூமிநாதன் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். பூமிநாதன் நேற்று சனிக்கிழமை இரவு ரோந்து பணியில்…

  10. "ஜெய்பீம் படத்தை முழுவதுமாக பார்க்க முடியவில்லை; மனம் வெறுத்துவிட்டது" - பார்வதி அம்மாள் பேட்டி ச. ஆனந்தப்பிரியா பிபிசி தமிழுக்காக 44 நிமிடங்களுக்கு முன்னர் நடிகர் சூர்யாவின் 'ஜெய்பீம்' திரைப்படம் பல கோணங்களிலும் ஆக்கபூர்வமான விவாதங்களையும் அதே சமயம் குறிப்பிட்ட சாதி சார்ந்த நெருக்கடிகளையும் சந்தித்து வருகிறது. படத்தின் கதைநாயகியான நிஜ பார்வதியின் தற்போதைய பொருளாதர நிலையை கருத்தில் கொண்டு உதவ வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பாலகிருஷ்ணன் நடிகர் சூர்யாவுக்கு வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை ஏற்று, பார்வதி அம்மாளுக்கும் அவருக்கு பிறகு அவரது குடும்பத்திற்கும் 10 லட்ச ரூபாய் தொகையை வங்…

  11. ஜெய்பீம் பட சர்ச்சை: புண்பட்டவர்களுக்கு வருத்தம் தெரிவித்த இயக்குநர் ஞானவேல் 21 நவம்பர் 2021, 09:35 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@2D_ENTPVTLTD ஜெய்பீம் படத்தில் வில்லனாக வரும் எஸ்.ஐ. வீட்டில் வன்னியர் சங்கத்தைக் குறிக்கும் அக்கினி கலச காலண்டர் இடம் பெற்றக் காட்சிக்கும், உண்மைக் கதைக்கு மாறாக அந்த எஸ்.ஐ. பெயர் குருமூர்த்தி என்று இருந்ததற்கும் பாமக தரப்பில் எதிர்ப்புக் காட்டப்பட்டுவரும் சூழ்நிலையில், இந்தப் படத்தால் மன வருத்தம் அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் வருத்தம் தெரிவிப்பதாக ஜெய்பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் அறிக்கை வெளியிட்டுள்ளார். டிவிட்டரில் வெ…

  12. கள்ளக்குறிச்சியில் குறவர் இனத்தவர் மூவர் கைதாகி துன்புறுத்தப்படுவதாக புகார் 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ள ஓம் பிரகாஷின் மனைவி புவனேஸ்வரி கள்ளக்குறிச்சியில் குறவர் சமுதாயத்தை சேர்ந்த மூன்று பேர் வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்கில் கைதுசெய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. 1990களின் துவக்கத்தில் கடலூர் மாவட்டத்தில் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக கைதுசெய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட ஜெய் பீம் திரைப்படம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், ம…

  13. சென்னை ஐ.ஐ.டி: தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பா? - பட்டமளிப்பு விழாவில் என்ன நடந்தது? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சென்னை ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் புறக்கணித்ததாகக் கூறி அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். சென்னை ஐ.ஐ.டியின் 58 ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை அன்று இணையம் மூலம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து உள்பட பலர் பங்கேற்றனர். இதில் 1,900 மாணவர்களுக்கு இணையம் வழியாகவே பட்டங்கள் வழங்கப்பட்டன. அப்போது பேசிய பி.வி.சிந்து, ` பட்டம் பெறுவதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து கற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.…

  14. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பேக்கரியில் திண்பண்டம் திருடியதாக சிறுமி எரித்துக் கொலையா? வளர்ப்புத் தந்தை கைது 3 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சித்தரிக்கும் படம் கன்னியாகுமரி மாவட்டம் காவல்கிணற்றில் திண்பண்டம் திருடியதாக 10 வயது சிறுமி உள்பட மூன்று குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக உயிரிழந்த சிறுமியின் வளர்ப்புத் தந்தை கைது செய்யபட்டுள்ளார். இவர்களில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பாக, அவரது வளர்ப்புத் தந்தை மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம்…

  15. கோவையைப் போல கரூரிலும் ஒரு பிளஸ்டூ மாணவி மரணம்: பாலியல் தொல்லை என்று கூறும் கடிதம் 7 நிமிடங்களுக்கு முன்னர் கரூரில் கடிதம் எழுதிவைத்துவிட்டு பிளஸ் 2 மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் விவகாரம், பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "கடும் விரக்தி காரணமாகவே இப்படியொரு முடிவை மாணவி எடுத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது" என்கின்றனர் காவல்துறையினர். கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 பயின்று வந்த மாணவி ஒருவர், வெள்ளிக்கிழமை வழக்கம்போல பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். பின்னர், மாலை ஆறு மணியளவில் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தற்கொலை செய்துகொண்டதாக வெங்கமேடு கா…

  16. தமிழகத்தில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 4 குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் வீடொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததன் காரணமாக 4 குழந்தைகள் உட்பட மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள பேர்ணாம்பட்டு பகுதியில் இந்த சம்பவம் இன்று காலை நடந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த முறைப்பாட்டின் பேரில் பேர்ணாம்பட்டு பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இச்சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் இந்திய ரூபா நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார். மேல…

  17. போலீஸ் கைது: இந்த விதிகளை பின்பற்றுவது கட்டாயம் தெரியுமா? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் திருட்டு குற்றச்சாட்டில் காவல்துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்கள் நடத்தப்பட்டவிதம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. ஒருவர் கைது செய்யப்படும்போது எப்படி நடத்தப்பட வேண்டும்? கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் தில்லை நகரில் வசிக்கும் குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, அதில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மூன்று பேரும் ஞாய…

  18. ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை : துப்பாக்கி ஏந்திய பொலிஸார் சூர்யாவுக்கு பாதுகாப்பு! நடிகர் சூர்யாவின் வீட்டில் துப்பாக்கி ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு வழங்கி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சூர்யா நடிப்பில் வெளியாகிய ஜெய்பீம் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. இதன்மூலம் நடிகர் சூர்யா மீது தனிப்பட்ட முறையில் விமர்சனங்களும், தாக்குதல்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை தியாகராயநகர் ஆற்காடு தெருவில் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு துப்பாக்கிய ஏந்திய பொலிஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த பொலிஸார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக த…

  19. சென்னை :தமிழக மக்கள், தைப் பொங்கலை சிறப்பாகக் கொண்டாட, அரிசி ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு, 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு சார்பில், ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு, அரிசி கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. எதிர்பார்ப்பு அ.தி.மு.க., ஆட்சியில் பரிசுத் தொகுப்பில், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் இடம் பெற்றிருந்தன. மேலும், 2,500 ரூபாயும் வழங்கப்பட்டது. இதற்காக, 5,604 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின…

  20. சஞ்சீப் பானர்ஜி: "ஆதிக்க கலாசாரத்தை ஒழிக்க முடியாமல் செல்கிறேன்" - ஊழியர்களுக்கு உருக்கமான கடிதம் 30 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் பிரியாவிடையயைும் தவிர்த்து விட்டு சென்னையை விட்டுப் புறப்பட்டுள்ளார். கார் மூலமாக தமது குடும்பத்தினருடன் சென்ற அவர் அவரது பூர்விகமான மேற்கு வங்கத்துக்கு செல்கிறாரா அல்லது தனக்கு இடமாற்றல் வழங்கப்பட்ட மேகாலயா மாநிலத்துக்கு செல்கிறார் என்ற விவரம் தெரியவில்லை. அதே சமயம், அவர்…

  21. வடக்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி சென்னைக்கு அருகில் கரையை நெருங்குமென எதிர்பார்க்கப்படுவதால் நவம்பர் 17, 18 தேதிகளில் கன மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வடக்கு அந்தமான் பகுதியில் தற்போது நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 18ஆம் தேதி தெற்கு ஆந்திரா, வட தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நிலவுக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வுமையத்தின் இயக்குநர் எஸ். பாலச்சந்திரன், "இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் நவம்பர் 17, 18…

  22. கோயில்களில் மோதியின் நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்கு சீமான் கண்டனம் இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பிரதமர் மோதியின் நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். நவம்பர் ஐந்தாம் தேதியன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத்தில் ஆதிசங்கரர் சிலையைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சி தமிழ்நாட்டில் சில கோயில்களில் மின்னணு திரை மூலம் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டது. இதில் பா.ஜ.கவின்மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், இந்த நிகழ்வுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் …

  23. திமிங்கல வாந்தி: ரூ. 2 கோடி மதிப்புள்ள அம்பர்கிரிஸை பதுக்கியதாக நாகை மீனவர்கள் இருவர் கைது 18 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, தமிழக காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள அம்பர் கிரிஸ் நாகை மாவட்டம் வேதாரண்யம் கடல் பகுதியில் கண்டெடுத்த அரிய வகை அம்பர் திமிங்கலத்தின் அம்பர்கிரிஸை வனத்துறையிடம் ஒப்படைக்காமல் வீட்டிலேயே பதுக்கி வைத்த இரண்டு மீனவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேதாரண்யத்தை அடுத்துள்ள வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த பாலகுரு, ஆனந்த் ஆகிய இருவரும் திமிங்கிலத்தின் அம்பர்கிரிஸ் கண்டெடுத்ததாக கூறப்படுகிறது. அதை விதிகளின்படி வனத்துறையினரிடம் ஒப்படைக்கா…

  24. அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தமிழகத்தில் உள்ள அரச பாடசாலைகளில் தமிழ் மொழியில் படித்தவர்கள் உள்ளிட்ட 3 பிரிவினருக்கு அரச வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்தவர்களுக்கும் முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கும் தமிழ்நாடு அரச பாடசாலைகளில் தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கும் முன்னுரிமை என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் ஆளுநர் அறிக்கையிலும், தொடர்ந்து மனிதவள மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கையிலும் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. போரில் உடல் தகுதியை இழந்த…

  25. பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்ததாகக் கூறி கோவையில் போராட்டம்: ஆசிரியர் கைதுக்குப் பிறகும் தொடர்கிறது 55 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, போராட்டம் நடத்தும் மாணவியின் உறவினர்கள் மற்றும் மாணவர்கள். கோவையில் ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி, உடலை வாங்காமல் அவரது பெற்றோரும், மற்றவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 'ஆசிரியர் மீது புகார் அளித்தும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. பள்ளி முதல்வரை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம்' என்கிறார்கள் போராட்டம் நடத்தும் உறவினர்கள். கோவை மாவட்டம், …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.