தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
தமிழக காவல்துறையில் ஒரு புரட்சிகர சீர்த்திருத்தம்: இனி குற்ற வழக்குகள் அனைத்தையும் விசாரிக்க தனி அமைப்பு Published : 26 Mar 2019 19:52 IST Updated : 26 Mar 2019 19:52 IST மு.அப்துல் முத்தலீஃப் கோப்புப் படம் காவல்துறையில் பெரும் புரட்சிகரமான மாற்றம் ஒன்று உச்சநீதிமன்ற உத்தரவு மூலம் தமிழகத்துக்கு அமலாக உள்ளது. இனி அனைத்து குற்றவழக்குகளும் அதற்கென்று உருவாக்கப்படும் குற்றப்பிரிவு மட்டுமே விசாரிக்கும் புதியமுறை அமலுக்கு வந்தது. போலீஸில் குற்றப்பிரிவு (CRIME), சட்டம் ஒழுங்கு (L&O), போக்குவரத்து (TRAFFIC) என நேரடியாக பொதுமக்களுடன் தொடர்பில் உள்ள மூன்று பிரிவுகள் உண்டு. தவறவிடாதீர் …
-
- 0 replies
- 876 views
- 1 follower
-
-
தமிழகத்தில் வாக்காளர்களுக்கு எப்படி நடக்கிறது பணப்பட்டுவாடா.. அதிர வைக்கும் உண்மைகள்சென்னை: தேர்தல் காலம் நெருங்கிவிட்டாலே போதும், வாக்காளர்களான நம்மை, ஒரு திருடனை போல நடத்த ஆரம்பித்துவிடும் சில அரசியல் கட்சிகள். ஆம்.. திருட்டுக்குத்தான் நேரம், காலம் பார்த்து கன்னம் வைக்க வேண்டும். பொதுமக்களும் அப்படித்தான் பம்மி, பம்பி, இந்த கட்சிகளிடம் பணத்தை பெற வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் மோசமான கலாச்சாரம் பிற மாநிலங்களை விட தமிழகத்தில் மிக மிக அதிகம். "பணம் கொடுக்காவிட்டால் ஓட்டு போடமாட்டோம்.. அவனுக்கு கொடுத்துருக்கு, எனக்கு தரல.." இப்படியெல்லாம் அறச்சீற்றம் காட்டும் திருவாளர் பொதுஜனமும் பெருகிவிட்டனர். இவர்களையெல்லாம் திருப்திப்படுத்த மார்க்கெட் ரேட்டுக்கு தக்கபடி, பணப…
-
- 2 replies
- 876 views
-
-
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட் எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி, ஓவியம்: பிரேம் டாவின்ஸி 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளு மன்றத் தேர்தலில் நரேந்திர மோடியுடன் வென்று நாடாளுமன்றத்துக்குள் சென்ற 543 பேரில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 39 பேர். மோடி ஆட்சியின் மூன்றாண்டு கொண்டாட்டம் நடந்துகொண்டிருக்கிறது. நம் எம்.பி-க்களும் நாடாளுமன்றத்துக்குள் சென்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. அங்கே, அவர்களின் பெர்ஃபாமென்ஸ் எப்படி, அரையாண்டுப் பரீட்சையில் அவர்கள் வாங்கிய மார்க் என்ன? 2014 ஜூன் 4-ம் தேதிதான் 16-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் ஆரம்பமானது. அன்றுமுதல் இன்றுவரையில் 11 கூட்டத் தொடர்கள் நடைபெற்றிருக்கின்…
-
- 0 replies
- 876 views
-
-
வயதான காலத்தில் ஏராளமான குடும்பப் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் ஒரு முதியவர் பற்றி எதற்கு எழுத வேண்டும் என்று சமீப காலமாக நான் கலைஞர் பற்றி எழுதவில்லை. ஆனால் இந்த செய்தி என்னை எழுத வைத்து விட்டது. அவரது பிறந்த நாளுக்கு போப்பாண்டவர் வாழ்த்து தெரிவித்தார் என்று மீண்டும் மீண்டும் கலைஞர் டி.வி யில் செய்தி வெளியிட்டார்கள். போப்பாண்டவர் என்ன இந்திய நாட்டைச் சேர்ந்தவரா? ஏதோ ஒரு லத்தீன் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். அவருக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்? அவர் எதற்கு வாழ்த்து அனுப்ப வேண்டும். ஒரு வேளை இப்படி இருக்கலாம். சில கோயில்களுக்கு பணத்தை மணி ஆர்டர் அனுப்பினால், ரசீதோடு விபூதி, குங்குமம் அனுப்பி வைப்பார்கள். அது போல பணம் கட்டி வாழ்த்து வரவைத்திருக்கலாம், அல்லது பேரா…
-
- 0 replies
- 876 views
-
-
கும்பகோணத்தில் காதல் தம்பதியை வெட்டிக் கொன்ற உறவினர்கள் - திருமணமான ஐந்து நாளில் சோகம் 13 ஜூன் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES கும்பகோணம் அருகே சோழபுரத்தில் காதல் திருமணம் முடித்த ஐந்து நாட்களில் இளம் தம்பதி, கொடூரமாக ஓட, ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண்ணின் சகோதரர் மற்றஉம் உறவினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்வேலியை சேர்ந்தவர்கள் சேகர் மற்றும் தேன்மொழி தம்பதி (பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள்). இவர்களுக்கு சக்திவேல், சதீஷ் மற்றும் சரவணன் ஆகிய மூன்று மகன்களும், சரண்யா (23) என்ற மகளும் உள்ளார். தந்தை சேகர், மூத்த மகன் சக்திவேல் ஆகியோர் கொத்தனார் பணி ச…
-
- 10 replies
- 876 views
- 1 follower
-
-
“நீங்கள் காவி, நாங்கள் கருப்பு..உங்களுக்கு அயோத்தி, எங்களுக்கு ஈரோடு, உங்களுக்கு ராமன், எங்களுக்கு ராமசாமி” உங்களுக்கு தஞ்சாவூர் என்றால் பெரிய கோயில் நினைவுக்கு வருவதைப் போல, தஞ்சை மக்களுக்கு விளார் என்றால் நினைவுக்கு வருவது நடராஜன்தான். அவரது சொந்த ஊர் என்பதைத் தவிர விளாருக்கு வேறு வரலாறும் கிடையாது. அந்த விளார் சாலைக்கு ஒரு அடையாளம் தரவும் நடராஜனுக்கு ஒரு நிரந்தர பட்டத்துக்கு ஏற்பாட்டை செய்யவும் நடந்த ஏற்பாட்டுக்கான ஒரு விழா நேற்று 8.11.2013 அன்று நடந்திருக்கிறது. ஒருவேளை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ராஜராஜன் என்றொருவன் பிறக்காதிருந்தால் இன்றைக்கு தஞ்சையின் அடையாளமாக சசிகலாவும் நடராஜனும்தான் இருந்திருப்பார்கள். ராஜராஜன் கொஞ்சம் முந்திக்கொண்டு பிறந்து ஒரு பெரிய கோய…
-
- 4 replies
- 875 views
-
-
ஈழ இனப்படுகொலைக்கு ஒவ்வொரு தமிழனும் நியாயம் கேட்க வேண்டும் - புகழேந்தி தங்கராஜ் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு ஒவ்வொரு தமிழனும் நியாயம் கேட்க வேண்டும், கேட்போம் என்று மூத்த பத்திரிக்கையாளரும், திரைப்பட இயக்குநருமான புகழேந்தி தங்கராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் வெளியிட்ட அறிக்கை, ஈழ மண்ணில் நிகழ்த்திய திட்டமிட்ட இனப்படுகொலை தொடர்பாக, வருகிற மார்ச் மாதம், ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில், சர்வதேசத்தின் எதிர்ப்பைச் சந்திக்க இருக்கிறது இலங்கை. சென்ற ஆண்டு இலங்கை கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படாததை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கண்டித்துள்ள நிலையில், உலக அளவில் இலங்கை தனிமைப்படுத்தப்படும் சூழ்நிலை உருவாகி வரு…
-
- 0 replies
- 875 views
-
-
இலங்கை கிரிக்கெட்; வீரர்கள் இந்தியா பிரிமியர் லீக் போட்டிகளில் பங்கு பற்ற கூடாது இந்திய பிரிமியர் லீக் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்குபற்றுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழகத்தில் ஆர்ப்பதட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் தந்தை பெரியார் திராவிட கழகம் கட்சி ஆகியன இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்;டத்தை மேற்கொள்கின்றன. இலங்கை கிரிக்கெட்; வீரர்கள் இந்தியா பிரிமியர் லீக் போட்டிகளில் பங்கு பற்ற கூடாது தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்த போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்குபற்றுவதானது தமிழ்நாட்டில் உள்ளவர்களை உளவியல் ரீதியாக தாக்கத்திற்கு உள்ளாக்கும் என எனவும் ஆர்ப்பாட்ட காரர்கள் குறிப்பிட்டுள்ளனர். …
-
- 4 replies
- 875 views
-
-
சசிகலா குடும்பத்தில் மோதல் உச்சகட்டம் சசிகலா குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மோதல் தமிழக அரசியலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அதன்பிறகு கட்சியிலும் அதிரடி மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தியதால் அதிமுக எம்எல்ஏக்களால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டும் சசிகலாவால் முதல்வர் பதவியேற்க முடியாமல் போனது. அதனால் எடப்பாடி கே.பழனிசாமி முதல்வரானார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண…
-
- 0 replies
- 875 views
-
-
இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்…. ரஜினிகாந்த் December 4, 2018 இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டுமென நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்துள்ள 2.0 திரைப்படம் இந்தியா முழுவதும் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்ற நிலையில் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் இந்தியா டுடே சார்பில் எடுக்கப்பட்ட நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் அரசியல், சினிமா, தனி வாழ்க்கை, முக்கிய பிரச்சினைகள் குறித்து மனம் திறந்திருந்த ரஜினிகாந்த் இலங்கைத் தமிழர் விவகாரம் தமிழகத்தில் தொடர்ந்து சர்ச்சைக்குரியதாகவே இருந்துவருகிறது. இலங்க…
-
- 3 replies
- 874 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 28 ஜூன் 2024 கேரள அரசு அம்மாநிலத்தின் ஊர்கள், தெருக்களில் சாதி அடையாளம் கொண்ட பெயர்களை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசு 1978-ஆம் ஆண்டே இதைச் செய்ததாகக் கூறும் நிலையில், இன்னும் பல கிராமங்களில் சாதிப் பெயர்கள் மாற்றப்படாமல் உள்ளன. சமூக நீதிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் தி.மு.க அரசு இந்தப் பெயர்களை மாற்ற என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? ஊர், தெருக்களில் சாதிப் பெயர்கள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய தென்னிந்திய மாநிலங்கள் மட்டுமின்றி, இந்தியா முழுவதிலும் பல மாநிலங்களில் கிராமம், ஊராட்சி மற்றும் தெருக்களில்…
-
- 0 replies
- 874 views
- 1 follower
-
-
ஹைட்ரோ கார்பன் திட்டம் செயற்படுத்தப்பட்டால் மக்கள் போராட்டம் வெடிக்கும் – வைகோ எச்சரிக்கை காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயற்படுத்தப்பட்டால், மக்கள் போராட்டம் வெடிக்கும் என எச்சரிப்பதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழகத்தின் உயிர் ஆதாரமான காவிரி படுகை மாவட்டங்களில் வேளாண்மைத் தொழிலை முற்றிலும் அழித்து ஒழித்துவிட்டு, இலட்சக்கணக்கான மக்களை ஏதிலிகளாக புலம்பெயரச் செய்வதற்கு நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசும், அதற்கு வெண்சாமரம் வீசும் எடப்பாடி பழனிசாமி அரசும் சதித் திட்டத்தைச் செயற்படுத்த முடிவு செய்துள்…
-
- 0 replies
- 873 views
-
-
முருகனை லண்டனுக்கு அனுப்ப இந்திய அரசு மறுப்பு முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து விடுதலையான முருகனை லண்டனுக்கு அனுப்ப முடியாது என சென்னை உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருந்த நளினி, முருகன், சாந்தன் உட்பட ஏழு பேரை விடுதலை செய்து, 2022-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட இலங்கையைச் சோ்ந்த முருகன், சாந்தன் உள்ளிட்டோா் அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டிருக்கின்றனா். லண்டனில் வசிக்கும் மகளுடன் சோ்ந்து வாழ இந்த நிலையில், லண்டனில் வசிக்கும் தன் மகளுடன் சோ்ந்து வாழ விரும்புவதால், கவுச்சீட்டு கேட்டு விண்ணப்பிப்பதற்காக தி…
-
- 1 reply
- 873 views
-
-
சுவாதியின் கொலையில் எந்தவித சாட்சியங்களும் முன்வராத நிலையில் தற்போது சூளைமேடு பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் முக்கிய விடயங்களை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், சுவாதியை கொன்ற கொலையாளிதான் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அதே ரயில் நிலைய பிளாட்பாரத்தில் சுவாதியின் கன்னத்தில் அறைந்தவன் என்று திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார் தமிழ்செல்வன். தனியார் நிறுவனமொன்றில் வேலை பார்க்கும் தமிழ்செல்வன், சுவாதியை கொன்றவனை நேரில் பார்த்ததாகவும் சுவாதியை இதற்கு முன் ரயில் நிலையத்தில் பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், செய்தியாளர்களிடம் பேசிய அவர், வழக்கமாக நான் தினமும் காலை 6.30 மணிக்கு நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்திற்கு வந்துவிடுவேன். அங்கிர…
-
- 0 replies
- 873 views
-
-
ரஜினி மக்கள் மன்றத்தினர் எந்தக் கட்சியிலும் இணையலாம் – அறிவிப்பு ரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் இணைந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம். சுதாகர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் “ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயற்பட விரும்பினால், ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ராஜினாமா செய்து விட்டு அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். அவர்கள் வேறு கட்சிகளில் இணைந்தாலும், அவர்கள் எப்போதும் நம் அன்புத் தலைவரின் ரசிகர்கள்தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் …
-
- 0 replies
- 873 views
-
-
டி23 புலி வேட்டை: "காட்டுக்குள் ஜீவகாருண்யம் பார்க்கலாமா?" - வலுக்கும் கேள்விகள் ஆ விஜயானந்த் பிபிசி தமிழ் 33 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் கும்கி யானைகள், மோப்ப நாய்கள், 150 வனத்துறை ஊழியர்கள் எனக் களமிறங்கியும் பத்து நாள்களாக புலியைப் பிடிக்க முடியாமல் நீலகிரி வனத்துறை திணறி வருகிறது. `புலியை சுடக் கூடாது என்ற எண்ணம் சரியானது. ஆனால், நகரத்தில் இருந்து பேசுகின்ற காட்டுயிர் பாதுகாப்புக்கும் காட்டையொட்டி வாழும் மக்களின் மனநிலைக்கும் இடையே ஏராளமான இடைவெளிகள் உள்ளன' என்கின்றனர் சூழல் ஆர்வலர்கள். என்ன நடக்கிறது…
-
- 1 reply
- 873 views
- 1 follower
-
-
ஆளுனரின் அனுமதிக்குக் காத்திருக்கத் தேவையில்லை என நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் தீர்ப்பு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவளிகள் எனக் குற்றஞ்சுமத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கும் 7 பேரையும் ஆளுனரின் அனுமதிக்குக் காத்திராமல் உடனேயே விடுதலை செய்யும்படி சென்னை உயர்நீதி மன்றம் மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. இக் கொலையில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட நளினி சிறிகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இக் கட்டளையை விடுத்துள்ளனர். ஆளுனரின் அனுமதியில்லாது, இவ்வேழுபேரையும் விடுதலைசெய்யும் ஆணையை, மாநில அரசு பிறப்பிக்கவேண்டும் என்பதே நளினியின் விண்ணப்பமாகும். தலைமை நீதிபதி சஞ்சி…
-
- 2 replies
- 872 views
-
-
அழுக்கேறிய காங்கிரஸ் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்திருக்கும் இச்சூழலில்,அக்கால காங்கிரஸை எதித்து பேரறிஞர் அண்ணா அவர்கள் 1962 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசியது என்ன? எப்படி? என்பதை இங்கே கேளுங்கள். காங்கிரஸ் என்பது இன்றுமட்டுமல்ல,என்றைக்கும் அழுக்கேறியதுதான் என்பதை அண்ணா கூறுகிறார்.
-
- 2 replies
- 872 views
-
-
மிஸ்டர் கழுகு: ‘பிரித்து’ ஆளும் பி.ஜே.பி! ‘‘வாரும்... வாரும்... உமக்காக நம் அலுவலகக் கதவு எப்போதும் திறந்தே இருக்கும்” என கழுகாரை வரவேற்றோம். ‘‘என்ன... அமித் ஷா எஃபெக்டா?” என்று சிரித்த கழுகாரை அமரவைத்து, அவருக்காக வாங்கி வைத்திருந்த குஜராத்தி இனிப்புகளை டேபிளில் பரப்பினோம். எடுத்து ருசித்தவர், ‘‘ரஜினிக்காக பி.ஜே.பி-யின் கதவுகள் திறந்தே இருக்குமென அமித் ஷா சொன்னது, ரஜினி பற்றிய செய்திகள் தேசிய மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தன. விரைவில் ரஜினி - மோடி சந்திப்பு நிகழும். சொல்லப்போனால், கடந்த 21-ம் தேதி பிரதமர் மோடி-ரஜினி சந்திப்பு நடப்பதாக இருந்தது. ஆனால், 21, 22 தேதிகளில் மோடி குஜராத் சுற்றுப்பயணம் சென்று விட்டதால், அந்தச் சந்திப்பு தற்காலிகமாகத் தள்ளிப…
-
- 0 replies
- 872 views
-
-
மனிதம் காக்கச் சீறி எழுந்த மாணவர்கள் எஸ்.கோபாலகிருஷ்ணன் ஈழத்தில் வதைபடும் தமிழர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை மாணவர்கள் கையிலெடுத்துள்ளனர். இதுவரை தனித் தமிழீழ ஆதரவாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் இப்போது ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்தின் கோரிக்கைகளாக உருப்பெற்றுள்ளன. இதன் தாக்கத்தையும் வீரியத்தையும் அலசும் முன் போராட்டத்தின் பின்னணியைப் பார்த்துவிடுவோம். இலங்கையில் விடுதலைப் புலிகளை ஒழிக்கும் முகாந்திரத்தில் தமிழர்களைக் கொன்று எஞ்சியவர்களின் வாழ்வாதாரத்தைச் சூறையாடிய ராஜபட்சே அரசு, 2009 மே மாதத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக அறிவித்தது. அதன் பிறகு போர் முடிந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் போன்ற மா…
-
- 2 replies
- 872 views
-
-
கோவிலுக்குள் நுழைந்த பட்டியல் சாதி இளைஞரை ஆபாசமாக திட்டிய தி.மு.க. நிர்வாகி கைது 30 ஜனவரி 2023, 14:18 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சேலம் மாவட்டத்தில் திருமலைகிரி கோவிலுக்குள் நுழைந்த பட்டியலின இளைஞரை தி.மு.க. நிர்வாகி ஒருவர் ஆபாசமாகப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து அவர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதுடன், போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் மேற்கு வட்டத்தில் இளம்பிள்ளை செல்லும் சாலையில் உள்ளது திருமலைகிரி. இக்கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்தக் கோவிலில் த…
-
- 1 reply
- 872 views
- 1 follower
-
-
கூடங்குளம்: சோதனை ஓட்டத்திற்கே இத்தனை பஞ்சரு’ன்னா..? APR 20 Posted by ஆதன் கூடங்குளம் அணு உலைக்கு தரமற்ற உதிரிபாகங்கள் தரப்பட்டதாக ரஷியாவில் அந்நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளதாக செய்திகள் வந்து உள்ள அதே நேரத்தில் தொடர்ந்து பலமுறை கூடங்குளம் அணு உலை சோதனை ஓட்டத்தில் வால்வுகள் பழுதடைந்து மாற்றப்பட்டு வருவதாக செய்திகள்வருகின்றன. ************** அதிகாரப்பூர்வமான மின் உற்பத்திக்காக இயக்கத்தை தொடங்க வேண்டும் என போலீசை குவித்து மும்முரமாக வேலை செய்தும் இதுவரை கூடங்குளம் உலையிலிருந்து மின்சாரம் வர வைக்க முடியவில்லை. எதிர்ப்புகளை முறியடித்து இதனை இயக்கி காண்பிக்காவிடில் இந்தியா முழுவதும் 30க்கும் மேற்பட்ட அணு உலைகளை கட்ட ஏற்கனவே போட்டு உள்ள திட்டத்திற்கு மே…
-
- 5 replies
- 871 views
-
-
உலகத் தமிழர்கள் ஒருபோதும் ஒப்பமாட்டார்கள்! - கலைஞர் கடிதம் எழுத்துரு அளவு உடன்பிறப்பே, அய்.நா.மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள வரைவுத் தீர்மானம் நான்கு முறை திருத்தப்பட்டு, பெருமளவுக்கு நீர்த்துப் போகவிட்டதாலும்; திராவிட முன்னேற்றக் கழகம் முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனை செய்யாததாலும்; மத்திய அமைச்சரவையிலிருந்தும் அய்க்கிய முற்போக் குக் கூட்டணியிலிருந்தும் தி.மு.கழகம் உடனடி யாக விலகிக் கொள்வதென முடிவு செய்து அறிவிக்கப் பட்டுள்ளது. தி.மு.கழகம் உரிய நேரத்தில் தக்க முடிவை மேற்கொண்டுள்ள தென உன்போன்ற பல்லாயிரக்கணக்கான உடன்பிறப்புக்களும், பல்வேறு தரப்பினரும் பெருமளவுக்கு வரவேற்றுள்ளனர். 1956ஆம் ஆண்டு சிதம்பரத்தில் அற…
-
- 4 replies
- 871 views
-
-
நெய் திருடிய ரவுடி.. கடையை தாக்கி அட்டகாசம்.. கைது செய்த போலீஸ்.. பாத்ரூமில் வழுக்கி விழுந்து காயம். ஒரு ரவுடி.. போயும் போயும் ஒரு நெய் பாட்டிலை திருடி மாட்டிக் கொண்டுள்ளார்.. விஷயம் வெளியே தெரிந்ததும், அரிவாளை கொண்டு பொதுமக்களை வெட்ட முயன்றபோது, போலீசாரிடம் சிக்கி.. விசாரணையின்போது பாத்ரூமில் வழுக்கி விழுந்து கையையும் உடைத்து கொண்டுள்ளார்! தமிழகத்தின் முக்கிய இடங்களில் சரவணா ஸ்டோர் கடைகள் உள்ளன. அதில் நெல்லை சரவணா செல்வரத்தினம் கடையும் ஒன்று. ஒருநாளைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் கடை இது. அதனால் எப்பவுமே கூட்டநெரிசல் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் சில ரவுடிகள் இங்கு திடீரென அரிவாளுடன் புகுந்து கண்ணாடிகளை உடைத்து அட்டகாசம் செய்துவிட்டனர்.…
-
- 0 replies
- 871 views
-
-
வேலூர்: வேலூர் சிறை அதிகாரிகள், நன்னடத்தை சான்று வழங்காததால், நடிகர், சீனிவாசன், டெல்லி திகார் சிறையில் இருந்து, ஜாமினில் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஓங்கோலைச் சேர்ந்த, தொழில் ஓட்டல் அதிபர் ரங்கநாதனிடம், 50 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்ட நடிகர் சீனிவாசன், வாங்கிய கடனை கொடுக்காமல் ஏமாற்றியதால், கடந்த, ஏப்ரல், 26ம் தேதி, வேலூர் சிறையில் அடைத்தனர். இதனையடுத்து ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக, டெல்லியை சேர்ந்த தொழில் அதிபரிடம், ஐந்து கோடி ரூபாய் மோசடி செய்த நடிகர் சீனிவாசனை, டெல்லி போலீசார் கடந்த ஜூன், 4ம் தேதி, அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கு கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைத்தனர். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் பதிவு செய்யப்பட்ட, ஆறு வழ…
-
- 8 replies
- 871 views
-