அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3311 topics in this forum
-
விஐபி ஹெலிகொப்டர் கொள்முதல் ஊழல் – முக்கிய ஆவணங்கள் சிபிஐ வசம்… January 1, 2019 விஐபி ஹெலிகொப்டர் கொள்முதல் ஊழல் வழக்கில் 431 கோடி ரூபா லஞ்சம் வழங்கப்பட்டதற்கான ஆவணங்களை சிபிஐ கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடம் இருந்து 3700 கோடி ரூபாவுக்கு 12 நவீன ஹெலிகொப்டர்கள் வாங்கியதில் இடைத்தரகர்கள் மூலம் இந்தியர்களுக்கு லஞ்சம் கைமாறியதாக எழுந்த குற்றச்சாட்டை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் பிரித்தானியாவினைச் சேர்ந்த இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் என்பவரை அண்மையில் கைது செய்துள்ள சிபிஐ தற்போது காவலில் வைத்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் இடைத்தரகர்கள் கிறி…
-
- 0 replies
- 332 views
-
-
விக்ராந்த் கப்பலின், சோதனை ஓட்டம் நிறைவு! உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள முதல் விமானம் தாங்கி போர் கப்பலான விக்ராந்த் கப்பலின் சோதனை ஓட்டம் நிறைவடைந்துள்ளது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றதாகவும், கப்பலின் செயல் திறன் திருப்தி அளிக்கும் வகையில் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 40 ஆயிரம் டன் எடையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த போர்க்கப்பல் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ள முதலாவது விமானம் தாங்கி கப்பல் விரைவில் கடற்படையில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இதன் சோதனை ஓட்டம் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1233208
-
- 4 replies
- 826 views
-
-
விக்ராந்த் போர் கப்பலில் பிபிசி: பிரமிப்பூட்டும் திறன்கள் - முழு விவரம் ஜுகல் ஆர் புரோஹித் பிபிசி செய்திகள், விமானம் தாங்கி விக்ராந்த் போர்க்கப்பல், கொச்சியில் இருந்து 31 ஆகஸ்ட் 2022 படக்குறிப்பு, விக்ராந்த் கடற்படை கப்பல் "இந்த கப்பலில் நீங்கள் தனியாக இருந்தால், உங்கள் வழியைக் கண்டுபிடிக்க முடியுமா?" - கப்பலுக்குள் இருந்த கடற்படை அதிகாரியிடம் நான் கேட்ட முதல் கேள்வி இதுதான். "இப்போது என்னால் முடியும். ஆனால் அதற்கான வழிகளைக் கற்றுக் கொள்ள எனக்கு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் பிடித்தன" என்று அந்த அதிகாரி புன்னகையுடன் கூறினார். இந்திய கடற்படை சேவைக…
-
- 9 replies
- 1.1k views
- 1 follower
-
-
விசாகப்பட்டிணம் வாயுக்கசிவு: அதிகாலை 3 மணிக்கு அலறிய சைரன்.. கதவை உடைத்து மக்களை வெளியேற்றிய போலீஸ்- முகத்தை ஈரத்துணியால் மறைக்க அறிவுறுத்தல்-2,000 பேர் வெளியேற்றம் விசாகப்பட்டிணம் கோபால்பட்டிணத்தில் உள்ள எல்.ஜி.பாலிமர்ஸ் ரசாயன ஆலையில் ஸ்டைரீன் என்ற ரசாயன வாயு கசிவினால் 3 கிமீ தூரம், 5 கிராமங்கள் பாதிக்கப்பட்டன. இதில் 5 பேர் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது, சுமார் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் மூச்சுவிடச் சிரமம், மற்றும் வாந்தி ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது, சுமார் 1000 பேர் வரை இந்த வாயு தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை 2.30-3 மணியளவில் இந்த வ…
-
- 9 replies
- 855 views
-
-
படக்குறிப்பு, விசாகப்பட்டினம் கடற்கரையில் கடல் உள்வாங்குவதால் வெளிப்படும் பாறைகள் கட்டுரை தகவல் எழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ் பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆகஸ்ட் 28-ம் தேதி விசாகப்பட்டினத்தில் ஆர்.கே கடற்கரைக்குச் சென்று காளிமாதா கோவில் எதிரே அமர்ந்த போது, கடல் உள்வாங்கியது போன்று இருந்தது. அதனால்தான் அதுவரை அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்பட்ட பாறைகள், அன்று அதிகம் தெரிந்தன. கடல் உள்வாங்கியதால் வெளியே அதிகமாக தெரிந்த பாறைகளின் மீது கடற்கரைக்கு வருபவர்கள் செல்ஃபி எடுத்து வருகின்றனர். நல்லபாபு என்ற மீனவர் சிறிய தூண்டில் மூலம் மீன்பிடித்துக் கொண்டிருந்ததை காண முடிந்தது. ஏன் பாறைக…
-
- 1 reply
- 513 views
- 1 follower
-
-
விஜய் மல்லையா எந்நேரமும் இந்தியா அழைத்துவரப்படலாம்: சட்டநடவடிக்கைகள் முடிந்தன; தயார்நிலையில் மும்பை ஆர்தர் சிறை விஜய் மல்லையா எந்நேரமும் இந்தியா அழைத்துவரப்படலாம்: சட்டநடவடிக்கைகள் முடிந்தன; தயார்நிலையில் மும்பை ஆர்தர் சிறை விஜய் மல்லையா, பிரதமர் மோடி : கோப்புப்படம் புதுடெல்லி இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று லண்டனில் வாழ்ந்து வரும் தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் அனைத்து சட்ட நடவடிக்கைகளும் முடிந்துவி்ட்டதால் அவர் எந்நேரமும் மும்பை அழைத்துவரப்படலாம் என சிபிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா அழைத்துவரப்படும் விஜய் மல்லையா முதலில் சிபிஐ வசம் உள்ள வழக்கில் ஆஜர்படுத்தப…
-
- 2 replies
- 680 views
-
-
விஜய் மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் 68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி! விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்ட 50 தொழில் அதிபர்கள் திருப்பி செலுத்தாத 68 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக ரிசேர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் காங்கிரஸ் கட்சி முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக தகவலை வெளியிட்டுள்ள ரிசேர்வ் வங்கி, தொழில்நுட்ப ரீதியாகவும், விவேகமான நடவடிக்கையாகவும் மொத்தம் 68 ஆயிரத்து 607 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக பதிலளித்துள்ளது. பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்த…
-
- 11 replies
- 1.5k views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 9,000 கோடி ரூபாய் வாராக்கடன் தொடர்பாக, மதுபான தொழிற்சாலை அதிபர் விஜய் மல்லையாவின் இந்திய பாஸ்போர்ட் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு நாட்டைவிட்டு லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார். அவரை இந்தியாவுக்குக் கொண்டுவர இந்திய அரசு சட்டரீதியான பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. விஜய் மல்லையாவை ஒப்படைப்பது தொடர்பாக லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்…
-
- 6 replies
- 757 views
-
-
விஜய் மல்லையாவை நாடு கடத்த பிரித்தானியா அனுமதி February 5, 2019 இந்தியாவில் வங்கி மோசடி தொடர்பில் குற்றம்சுமத்தப்பட்டுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த பிரித்தானிய உள்துறை செயலர் சஜித் ஜாவித் அனுமதி வழங்கியுள்ளார். அவரை விசாரணைக்கு இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இரண்டு மாதங்களுக்குப் பின்னர் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிங்பிஷர் நிறுவன தொழிலதிபர் மல்லையா, இந்திய வங்கிகளில் 9,000 கோடி ரூபா கடன் பெற்றுக் கொண்டு, அதனை மீளச் செலுத்தாமல், லண்டன் தப்பிச் சென்றுள்ள நிலையில் இந்திய அரசு மற்றும் இந்திய புலனாய்வுத்துறை, அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவருடைய சொத்துக்களை முடக்கியுள்ளன. இந்தநிலையிலேயே இவ்வாறு அவ…
-
- 0 replies
- 402 views
-
-
விஞ்ஞானிகளின் சாதனையில் புகழ் தேடுகின்றார் பிரதமர் மோடி! ”சந்திரயான்-3 திட்டம்‘ வெற்றியடைந்துள்ள நிலையில், விஞ்ஞானிகளின் சாதனையில் பிரதமர் மோடி புகழ் தேடுகின்றார்” என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ” சந்திரயான்-3, நிலவில் தரையிறங்கிய பெருமையும், உற்சாகமும் இன்னும் நீண்ட காலத்துக்கு நம்முடன் இருக்கும். இஸ்ரோ தலைவர் சோம்நாத்தின் தலைமை, உண்மையிலேயே வரலாறு படைத்து விட்டது. அவருக்கும், அவருடைய குழுவினருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அதே சமயத்தில், போலி வேடம் போடும் பிரதமர் மோடி, சில கேள்விகளுக்கு பதில் அளிக்க வ…
-
- 4 replies
- 282 views
-
-
விடுதலை புலிகள் இயக்கம் மீதான தடை நீட்டிக்கப்பட்டது குறித்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ பங்கேற்றார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பின் இந்தியாவில் விடுதலை புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த மே 14-ம் தேதி அந்த அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.விடுதலை புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் அதிகம் இருப்பதாகவும், அவர்கள் தடை செய்யப்பட்ட அந்த இயக்கத்திற்கு ஆதரவை பெருக்க முயற்சிப்பதாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் அவர்கள் செயல்படலாம் என்ற யூகத்தின் அடி…
-
- 3 replies
- 796 views
-
-
பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமிக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே தொடர்புகள் நீடித்து வருவதாக சந்தேகிக்கத் தூண்டும் வகையில் காணொளிப் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது மலேசிய இந்தியர்கள் மத்தியில் புதிய விவாதப் பொருளாகியுள்ளது. Image caption பினாங்கு ராமசாமி இந்நிலையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய காவல்துறைத் தலைவர் ஹாமிட் பாடோர், விடுதலைப் புலிகள் அமைப்பு உட்பட, எத்தகைய பயங்கரவாத சித்தாந்தங்களாக இருப்பினும், அவற்றைப் பரப்புபவர்கள் காவல்துறை நடவடிக்கையில் இருந்து தப்ப இயலாது என எச்சரிக்கை விடுத்தார். துணை முதல்வர் ராமசாமியும், தமிழீழ ஆதரவாளர்கள் சிலரும் இடம்பெற்றுள்ள அக்…
-
- 0 replies
- 297 views
-
-
விடுதலைப் புலிகளை... புத்துயிர் பெற முயற்சி செய்த, இந்தியர்களின்... சொத்துக்கள் பறிமுதல் விடுதலைப் புலிகளை மீண்டும் புத்துயிர் பெறச்செய்யும் ஒரு பகுதியாக, போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நான்கு இந்தியர்களின் 359 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை இந்திய அமலாக்க பிரிவு பறிமுதல் செய்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 18 ஆம் திகதி இந்திய கடற்பரப்பில் கடலோர காவல்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட இலங்கை படகில் இருந்து 300 கிலோ போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்ட நிலையில் வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஆறு வீடுகள், வாகனங்கள், சுரேஷ் ராஜ் ஏ,…
-
- 4 replies
- 442 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை அண்மையில் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் இந்த தடை தொடர வேண்டுமா? என தீர்மானிப்பதற்காக இந்திய மத்திய அரசு , உயர்நீதிமன்ற நீதிபதி சங்கீதா திங்ரா ஷேகல தலைமையில் தீர்ப்பாயம் ஒன்றினை அமைத்துள்ளது. தி 1991-ம் ஆண்டு முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்ததுடன் இந்த தடை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடை தொடர்வதற்கு போதுமான காரணங்கள் இருக்கிறதா? இல்லையா? என்பது பற்றி தீர்மானிக்க மத்திய உள்துறை அமைச்சகத்தினால் குறித்த …
-
- 2 replies
- 789 views
-
-
விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தது மத்திய அரசு. இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு வெளியிட்டுள்ளது. விடுதலை புலிகள் அமைப்பை தீவிரவாத இயக்கம் என்ற பட்டியலில் கடந்த 2006-ஆம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் சேர்த்தது. இதனால் ஐரோப்பிய நாடுகள் அந்த இயக்கங்களுக்கு தடை விதித்தன. இதை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றிய தலைமை நீதிமன்றத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2017-ஆம் ஆண்டு நீதிமன்றம் வெளியிட்டது.அதில் 2009-ம் ஆண்டுக்குப் பிறகு விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை என்பதால் அந்த அமைப்ப…
-
- 21 replies
- 2.7k views
- 1 follower
-
-
விடுதலைப்புலிகளின் தலைவரைச் சந்தித்ததை ருவிற்றர் பக்கத்தில் பதிவிட்ட இந்திய மத்திய அமைச்சர். 1987 ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடனான நினைவுகளை இந்திய சிவில் விமான போக்குவரத்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது ருவிற்றர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். குறித்த பதிவில் 1987 ஆம் ஆண்டில் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் இளம் அதிகாரியாக கடமையாற்றிய நான், இன மோதலை முடிவுக்கு கொண்டு வர இந்தியா மேற்கொண்டு வரும் கடும் முயற்சிகளை எடுத்துக் கூறி, டெல்லிக்கு வந்து அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு பிரபாகரனிடம் வலியுறுத்தினேன் என மேலும் ருவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Hardeep Singh P…
-
- 0 replies
- 437 views
-
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான 5 ஆண்டு தடையை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டபின், விடுதலைப்புலிகள் அமைப்பு மீது மத்திய அரசு தடை விதித்தது. அதன்பின் அந்த தடை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விடுதலைப்புலிகள் மீதான தடையை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மே 14ம் தேதி மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்தது.இதுகுறித்து விளக்கம் அளித்த உள்துறை அமைச்சகம், ‘‘இலங்கை போரில் கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பு வீழ்த்தப்பட்டாலும், ஈழம் கொள்கையை விடுதலைப்புலிகள் அமைப்பு கைவிடவில்லை. இதற்காக தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு நிதிதிரட்டி வருகிறது. இந்…
-
- 3 replies
- 853 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை 3DSCULPTOR அமெரிக்கா, ரஷ்யா, சீனாவைப் போன்றே இஸ்ரோவின் வழியும் தனிவழி. உலகின் சில முன்னணி நாடுகளைப் போலவே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது இஸ்ரோ. அதற்கான சோதனை முயற்சியில் விலங்குகளுக்கு பதிலாக மனித ரோபோக்களை அனுப்பலாம் என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ முடிவு செய்துள்ளது. 'ககன்யான் மிஷன்' திட்டத்தின் கீழ் இந்திய பயணிகளை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் தீவிரமாக இருப்பதாக இந்திய அரசும் இஸ்ரோவும் தெளிவாக கூறியிருக்கின்றன. …
-
- 1 reply
- 509 views
-
-
விண்வெளியில் போர் ஒத்திகை நடத்தும் இந்தியா! விண்வெளியில் போர் ஒத்திகையொன்றினை நடத்துவதற்கு இந்திய இராணுவம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த போர் ஒத்திகையை இந்த மாத இறுதியில் நடத்தவுள்ளதாக இந்திய விண்வெளி பாதுகாப்பு மற்றும் ஆய்வு நிறுவனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விண்வெளிப் போரில் பயன்படுத்தப்படும் உபகரணங்களின் மாதிரிகள் பயன்படுத்தப்பட்டு மெய்நிகர் தொழில்நுட்பத்தை இந்த செயற்பாடுகளில் பயன்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஒரு நாட்டின் செயற்கைக் கோள்களை ஏனைய நாடுகள் தாக்கி அழிப்பது விண்வெளிப் போராகும். அந்தவகையில் மிஷன் சக்தி என்ற பெயரில், செயற்கைக்கோளை எதிரிகள் அழிக்கும் முயற்சியை தடுக்கும் சோதனையை அண்மையில் இந்தியா நடத்…
-
- 3 replies
- 714 views
- 1 follower
-
-
வினாக்களுடன் கடந்து சென்ற மகளிர் தினம் எம். காசிநாதன் / 2020 மார்ச் 09 மகளிர் தினம் 2020; இந்தியாவில் உள்ள மகளிருக்கு, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத மகளிர் தினமாகவே கடந்து போயிருக்கிறது. இந்திய அரசியல் நிர்ணய சபையில், 13 பெண் உறுப்பினர்கள் அங்கம் வகித்து இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்குத் துணை நின்றுள்ளார்கள்; நாட்டின் குடியரசுத் தலைவராக பிரதீபா பட்டீலும் பிரதமராக இந்திரா காந்தியும் பொறுப்பேற்றுப் பணியாற்றி இருக்கிறார்கள். ஆனால், இந்தியாவின் மக்களவையிலும் சட்டமன்றங்களிலும் ‘மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு’ வழங்கும் சட்டமூலம் மட்டும், இன்னும் கரை சேரவில்லை. இந்த முறையாவது சட்டமூலம் நிறைவேற்றப்படுமா என்ற ஏக்கம் நாடுமுழுவதும் பரவ…
-
- 0 replies
- 297 views
-
-
13 பிப்ரவரி 2024 2019ஆம் ஆண்டு கொலம்பிய நாட்டைச் சேர்ந்த தன் காதலியான ஆன்னியை மணந்த ஹர்பால் சிங், மார்ச் 2021 வரை மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார். டெல்லி எல்லையில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த அவர் மார்ச் 5ஆம் தேதி ஒரு பயங்கரமான விபத்தை சந்தித்தார். இந்த விபத்து அவரது முழு வாழ்க்கையையும் புரட்டி போட்டுவிட்டது. "என்னால் கை, கால்களை அசைக்க முடியாது. என் மனைவி இல்லாவிட்டால் நான் உயிருடன் இருந்திருக்கவே வாய்ப்பில்லை. அவள் அளித்த ஆதரவுக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்." என்கிறார் ஹர்பால் சிங். ஹர்பாலும் ஆன்னியும் 2018இல் பேஸ்புக் வாயிலாக சந்தித்துக் கொண்டனர். 2019இல் அவர்கள் திருமணம் செய்து க…
-
- 0 replies
- 176 views
- 1 follower
-
-
விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் உயிரிழப்பு! தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மகாராஷ்டிராவின் துணை முதல்வருமான அஜித் பவார் (Ajit Pawar) இன்று (28) காலை மும்பையில் இருந்து பாராமதிக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட ஒரு துயரமான விமான விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தில் விமானிகள் மற்றும் பவாரின் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர். காலை 8 மணியளவில் மும்பையில் இருந்து புறப்பட்ட சிறிய விமானம், ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் தரையிறங்கும் முயற்சியின் போது பாராமதி விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானது. உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னதாக நான்கு முக்கியமான பொதுக் கூட்டங்களில் பவார் கலந்து கொள்வதற்காக இந்தப் பயணத்தை மேற்கொண்டதாக தகவல்…
-
- 2 replies
- 212 views
- 1 follower
-
-
விமானி அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தானில் பிடிப்பட்டது இப்படிதான்: நேரில் பார்த்தவர் கூறுவது என்ன? ஷுமைலா ஜாஃப்ரி பிபிசி செய்தியாளார் முகமது ரசாக் சௌத்ரி பிப்ரவரி 27 ஆம் தேதி தன் வீட்டு முற்றத்தில் கட்டிலில் அமர்ந்தபடி தொலைபேசியில் உறவினருடன் பேசிக் கொண்டிருந்தார். பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள சமாஹ்னி மாவட்டத்தில், சிறிய மலையின் மீது உள்ள ஹோர்ரன் நகராட்சியில் ரசாக்கின் வீடு உள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் இந்த இடம் உள்ளது. ``நிலைமை பதற்றமாக இருந்தது. காலையில் இருந்து சில விமானங்கள் மேலே பறந்…
-
- 0 replies
- 595 views
-
-
விமானியைத் தாக்கிய பயணி: டெல்லியில் பரபரப்பு. பனிமூட்டம் காரணமாக விமானம் தாமதமாக புறப்படும் என அறிவித்த விமானியை பயணியொருவர் தாக்கிய சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லி, டெல்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகின்றது. இதன் காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவது மற்றும் தரையிறக்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் இருந்து கோவாவுக்கு புறப்பட இருந்த இண்டிகோ விமானம் பனிமூட்டம் காரணமாக தாமதம் ஆனது. பல மணி நேரம் விமானம் தாமதம் ஆனதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதற்கிடையே, விமானம் தாமதமாக புறப்படும் எ…
-
- 2 replies
- 458 views
-
-
வியாழன் கோளை விட... பெரிய நட்சத்திர கிரகத்தை, கண்டுப்பிடித்த இந்திய விஞ்ஞானிகள்! வியாழன் கோளை விட பெரிய நட்சத்திர கிரகத்தை கண்டுப்பிடித்துள்ளதாக ஆமதாபாத்தில் இருக்கும் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வு கூடி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நவீன ரேடியல் ஆய்வு கருவி மூலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள இந்த கிரகம் 725 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கிரகம் வியாழன் கோளை விட 1.4 மடங்கு பெரிய கோளாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். மேலும் இதன் தரை தளம் மிக அதிக வெப்பம் கொண்டாதாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை இந்த ஆய்வில் அமெரிக்கா, ஐரோப்பிய நாட்டினரும் இருக்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannew…
-
- 0 replies
- 127 views
-